சீதளம் -48
சட்டென அவனுடைய உயரத்திற்கு ஏக்கியவள் அவனுடைய தடித்த அகரங்களில் தன்னுடைய மென் இதழ்களால் அழுத்தமாக பொறுத்தினாள்.
அவனோ தன்னுடைய விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டான்.
நினைவுகளின் நரம்பில் இசைக்கப்படும் முதல் ராகம்.
பூமியின் எல்லையிலிருந்து ஆசையின் உச்சிக்கு செல்லும் மென்மையான பயணம்.அந்த முத்தம்,
வெறும் உதட்டின் மீதான ஒன்றல்ல அது காலத்தின் மேல் பதிக்கப்படும் ஒரு முதல் கையெழுத்து.
அவன் விரல்கள் அவளுடைய தோளில் மெல்ல விழ, அவளது கண்கள் நழுவி மூடிக்கொண்டன.
அவளுடைய தோளில் இருந்த அவனுடைய கையோ சற்றே கீழே இறங்கி அவளுடைய வெற்றிடையை வருடியவாறு தன் உடலோடு இறுக்க பிடிக்க, அவளோ அந்த பிடியின் வேகத்தில் ஹக் என்று சத்தத்தோடு அவனுடன் ஒன்றினாள்.
அந்த சத்தத்தில் நொடியில் தடுமாறிய கதிரவனோ சட்டென விழித்துக் கொண்டான்.
அவர்கள் இருவரும் இருக்கும் நிலையை உணர்ந்தவனுக்கோ அந்த நொடியை எப்படி கையாள்வது என்று புரியவில்லை.
இவ்வளவு நேரமும் அவனுடைய முத்தத்திலும் தொடுகையிலும் கிரங்கிப் போய் பலம் இழந்து நின்று கொண்டிருந்தவளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தவன் அவளை ஏறெடுத்தும் பார்த்தான் இல்லை.
ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
அறிவழகியோ அவன் அங்கிருந்து ஓடுவதை கண்டவளுக்கு சிரிப்பு வந்தாலும் சற்று நேரத்திற்கு முன்னர் தாங்கள் இருவரும் இருந்த நிலையை நினைத்து பார்த்தவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.
தன்னுடைய காதலனுடனான முதல் நெருக்கம், முதல் இதழ் முத்தம், அவனுடைய முதல் தொடுகை என அவன் கைகள் பட்ட தன்னுடைய மேனியை தடவி பார்த்தவளுக்கோ மயிர்கால்கள் கூச்செறிந்தன.
“இன்னைக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டீங்க மறுபடியும் உங்கள தப்பிக்க விட மாட்டேன் ஐ லவ் யூ தீரா ஐ லவ் யூ சோ மச்”
இங்கு வேந்தனுடைய வீட்டிலோ மேகா வேந்தனை அழைத்துக் கொண்டு வீராவுக்கான ட்ரீட்மெண்டில் இறங்கினாள்.
அவள் தற்போது கர்ப்பமாக இருப்பதால் இந்த பணியில் ஈடுபட முடியாது என்பதை அறிந்து கொண்டு வேந்தனை வைத்து அனைத்தும் செயல்படுத்தினாள்.
அவனுக்கோ அவளுடன் சிறிது நேரம் கூட இருக்க விருப்பமில்லை.
ஆனால் வீராவை குணப்படுத்த முடியும் என்பதால் அவனை பொறுத்த வரைக்கும் அவளை ஒரு டாக்டராக மட்டுமே பார்த்துக் கொண்டு அவள் சொல்லும் வேலைகளை ஒன்று விடாமல் செய்து கொண்டிருப்பான்.
ஆனால் பாவம் மேகா தான் அவனுடைய பார்வை தன் மேல் படாதா என்று ஏங்கிப் போவாள்.
தான் அப்படி என்ன தவறு செய்து விட்டோம். அவனுடைய தங்கை வேறு ஒருவனை விரும்பினாள்.
தான் தடுத்திருந்தால் மட்டும் அவள் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டிருப்பாளா என்ன.
என்ன கடைசி நிமிடத்தில் தான் அவளுக்கு சின்ன உதவி செய்தோம் அதற்காகவா இந்த ஏலியன் என் மீது இவ்வளவு கோபத்தோடு இருக்கிறான். என்று அவ்வப்பொழுது நினைத்து வறுந்திக் கொள்வாள்.
ஆனால் அவனிடம் வாயைத் தான் திறக்க மாட்டாள்.
இப்படியே நாட்கள் நகர வீரா ஓரளவுக்கு அவனுடைய கால்கள் சரியாக ஆரம்பித்து இருந்தன.
இப்பொழுது அவனால் கொஞ்சம் கொஞ்சமாக அசைக்க முடியும் முடியும்.
அவனுடைய கால் அசைவதை பார்த்த அவனுடைய குடும்பமோ நிம்மதி அடைந்தனர்.
இனி அவனால் நடக்கவே முடியாது என்று நினைத்து இருந்தவர்களுக்கோ இப்பொழுது அவன் கால் அசைவதை க் கண்டதும் அவ்வளவு ஆனந்தம்.
பூங்கொடியின் திருமண நாளும் வந்தது.
ராமின் குடும்பம் ஒரு வாரத்திற்கு முன்பே அவர்கள் ஊருக்கு வந்து தங்கி திருமண ஏற்பாடை இரு குடும்பமும் ஒன்றிணைந்து செய்து கொண்டிருந்தனர்.
பூங்கொடியின் தந்தை செல்வரத்தினத்திடம் தன்னுடைய பெண்ணிற்கு தங்கள் தான் தாலி எடுத்து கொடுக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அந்த தாலியை தாங்களே தங்கள் சார்பாக செய்து கொண்டு வருகிறோம் என்றார்கள்.
அதற்கு ராமின் குடும்பமும் மருத்து கூரவில்லை.
மணமேடையில் ராமும் பூங்கொடியும் மணமக்களாக சர்வ லட்சணங்களோடு அமர்ந்து ஐயர் கூறும் மந்திரத்தை கூறிக் கொண்டிருக்க செல்வரத்தினத்தின் மொத்த குடும்பமும் வருகை தந்து முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
தாலி எடுத்துக் கொடுக்க முகூர்த்த நேரம் வர அப்பொழுது பூங்கொடியின் தந்தை செல்வரத்தினத்தின் அருகில் வந்தவர்,
“ ஐயா முகூர்த்த நேரம் வந்துட்டு வாங்க உங்க கையால தாலி எடுத்து குடுங்க” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பணிவாக கூறினார்.
அதை ஆமோதித்த செல்வரத்தினம் எழுந்து ஐயர் கையில் வைத்திருந்த தாலியை தன்னுடைய கையில் வாங்கப் போனார்.
அப்பொழுது,
“நிறுத்துங்க”
என்ற ஒரு குரல் வாசல் பக்கம் இருந்து வந்தது.
அனைவருடைய பார்வையும் மண்டப வாயிலை நோக்க அங்கு சென்பகபாண்டியனோ தன்னுடைய குடும்பத்தோடு வந்திருந்தார்.
உள்ளே வந்தவரோ,
“ என்ன சின்னசாமி உன் பொண்ணுக்கு தாலி எடுத்துக் கொடுக்க ஊர்ல வேற யாருமே இல்லையா இந்த ஆளுகிட்ட கொடுக்க சொல்ற” என்றவாறு உள்ளே வந்தார் சென்பகபாண்டியன்.
சின்னச்சாமியோ,
“ ஐயா எனக்கு தெரியும்ங்க நான் என்ன செய்கிறேன்னு நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.
அவரு எவ்வளவு பெரிய மனுஷன் இந்த ஊர்ல உள்ளவங்களுக்கு எவ்வளவோ நல்லது பண்ணி இருக்காரு அவர் கையாள தாலி எடுத்து கொடுத்தா என் பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றார் அவர்.
“ அட என்னப்பா நீ அதெல்லாம் அப்போ. எப்போ அவன் பொண்ணு கல்யாணத்தப்ப ஓடிப்போய் அவன ஊரு முன்னாடியே அசிங்கப்படுத்தினாளோ அப்பவே அவனுக்கு இருந்த மரியாதை எல்லாம் போயிருச்சு. அவன் பொண்ணையே ஒழுங்கா வளர்க்க தெரியாதவன் தாலி எடுத்துக் கொடுத்தா உன் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்க போகுது” என்று வார்த்தையை விட்டார் சங்கரபாண்டியன்.
அதைக்கேட்டு வேந்தன் வெகுண்டு எழ செல்வரத்தினமோ தன்னுடைய பார்வையால் அவனை அடக்கினார். நல்ல காரியம் ஒன்று நடக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைத்தார் அவர்.
ஆனால் சென்பகபாண்டியனோ அங்கு பிரச்சனை பண்ணவே வந்திருப்பது போல அவருடைய செயல்பாடுகள் இருந்தன.
“ இங்க பாரு சின்னசாமி உனக்கு உன் பொண்ணோட வாழ்க்கைய பத்தி கவலை இருக்கோ இல்லையோ ஆனா எனக்கு இருக்கு. உன் பொண்ணு கழுத்துல ஏற வேண்டிய தாலி இவன் எடுத்துக் கொடுத்து ஏறக்கூடாது அதோ என் மருமக வரா பாரு அவ கையால எடுத்து கொடுத்தா உன் பொண்ணு வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்” என்று மண்டபத்தின் வாயில் பக்கம் கை காட்டினார் சென்பகபாண்டியன்.
அனைவருடைய பார்வையும் யார் அது என்று பார்க்க அங்கு கதிரவனோடு தலையைக் குனிந்தவாறு வந்து கொண்டிருந்தாள் அறிவழகி.
அவளை அங்கு பார்த்த செல்வரத்தினத்தின் குடும்பத்திற்கோ மிகப் பெரும் அதிர்ச்சி.
தங்களுடைய மகள் இவர்கள் வீட்டில் மருமகளா.
அப்படி என்றால் தன்னுடைய பெண் காதலிப்பது இவனையா என்று அதிர்ந்து பார்த்தனர்.
“ அட என்னமா அங்கேயே நின்னுட்ட வா உள்ள வந்து உன் கையால தாலி எடுத்துக் கொடு முகூர்த்த நேரம் நெருங்குதுல்ல” என்று சென்பகபாண்டியன் வாயெல்லாம் பல்லை காட்டியவாறு தன்னுடைய மருமகளை அழைக்க, கதிரவனோ அவள் கை பிடித்து அங்கு அழைத்து வந்தான்.
அவளோ சற்றும் தன்னுடைய முகத்தை உயர்த்தி அங்கு இருப்பவர்களை பார்த்தால் இல்லை.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களை பார்ப்பது.
தான் செய்தது ஒன்றும் அவ்வளவு சிறிய தவறு இல்லையே.
தன்னுடைய மொத்த குடும்பத்தையும் அன்று அவமானப்படுத்திவிட்டு அல்லவா சென்றாள் தன்னுடைய காதலுக்காக.
இப்பொழுது அவர்களைப் பார்க்க முடியாமல் தவித்தாள் அறிவழகி.
அவள் அருகில் வந்ததும் சென்பகபாண்டியன் அவளுடைய கையைப் பிடித்து ஐயரின் அருகே அவளை அழைத்துக் கொண்டு சென்றவர்,
“ அம்மாடி உன் கையால வாங்கி தாலியைக் கொடு” என்று சொல்ல அவளோ அதற்கு எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் நின்று கொண்டிருந்தாள்.
சின்னசாமியோ,
“ ஐயா நீங்க என்ன பண்றீங்க என் பொண்ணுக்கு செல்வரத்தின அய்யா தான் தாலி எடுத்துக் கொடுக்கணும். என் பொண்ணுக்கு யாரு தாலி எடுத்து கொடுக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும் நீங்க யாரு கூட வந்து தகராறு பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்றார் அவர்.
“ இங்க பாரு இங்கே இருக்கிறது என் மருமகளா இருந்தாலும் என் மருமகளா வர்றதுக்கு முன்னாடி இதோ நீ சொல்றியே ஊர் பெரிய மனுஷன் செல்வரத்தினம் அப்படின்னு அவரோட பொண்ணு தானே. அதனால இப்போ என் மருமகளே தாலி எடுத்துக் கொடுக்கட்டும் நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று சொன்னவர் அறிவழகியிடம்,
“ என்னமா பார்த்துகிட்டு இருக்க தாலிய கைல வாங்கு” என்று பல்லை கடிக்க அவளோ தன்னுடைய இரு கைகளையும் இறுக்கமாக பொத்திக் கொண்டவள், “முடியாது” என்று ஒற்றை வார்த்தையை கூறினாள்.
அதைக் கேட்ட சென்பகபாண்டியனுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
ஏற்கனவே அவமானப்பட்ட செல்வரத்தினத்தை மறுபடியும் அவன் பெண்ணை கொண்டு இந்த சபையின் முன்னாள் அவமானப்படுத்தலாம் என்று நினைத்து வந்த தன்னுடைய எண்ணத்தை இவள் நடத்த விட மாட்டாள் போலவே என்று நினைத்தவருக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
“ இப்போ நீ இந்த தாலிய வாங்க போறியா இல்லையா” என்று அவர் மீண்டும் கேட்க.
“ என்னால முடியாது என்னால முடியவே முடியாது என்னை மன்னிச்சிடுங்க மாமா” என்றவள் அவருடைய கையை உதறிவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டாள்.