சீதளம் -52
மண்டபத்திலிருந்து வெளியேறிய கபிலனுக்கோ எப்படியாவது அறிவழகியை பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரம் மேலோங்கி இருந்தது.
தன்னுடைய கையில் சிக்கினால் அவளை நார் நாராக தன்னுடைய ஸ்டைலில் கிழிக்க வேண்டும் என்று கழுகு போல் காத்துக் கொண்டிருந்தவனுக்கு பூங்கொடியின் திருமணத்தில் அவள் வந்திருக்க அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட கபிலனோ, சென்பகபாண்டியன் மூலமாக காயை நகர்த்த ஆரம்பித்தான்.
அவருடன் ஒரு பிசினஸ் டீலை முடிவு செய்தவனோ அவருடைய வீட்டிற்கு இன்று வருகை தந்தான். சங்கரபாண்டியனுக்கும் இவனுடன் இருக்கும் இந்த பிசினஸ் டீல் எப்படியாவது நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவரோ அவனை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டார்.
இதுதான் தனக்கு வாய்த்த வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டவன், அறிவழகியை சென்பகபாண்டியனிடம் பேரம் பேச ஆரம்பித்தான்.
அவருக்கோ அது ஒரு விஷயமே இல்லை.
அறிவழகி செல்வரத்தினத்தின் மகள்.
தன்னுடைய மகளாக இருந்திருந்தால் கூட அவருடைய சுயநலத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்.
அப்படி இருக்கும் பொழுது அறிவழகி செல்வரத்தினத்தின் மகள் தானே. அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் தன்னுடைய பிசினஸ் டீலிங் சரியாக நடக்கும் என்று நினைத்த சென்பகபாண்டியனோ அறிவழகியை அவனுக்கு விற்க முடிவெடுத்தார்.
அறிவழகியோ அவனைப் பார்த்ததும் மாடிப்படியில் அப்படியே நிற்க, சென்பகபாண்டியன் அவளை அங்கு அழைத்தார்.
‘ அய்யய்யோ இவன் எதுக்கு இங்க வந்து இருக்கான். இவன் என்ன பண்ண போறானோ தெரியலையே இப்போ இவரு வேற இவன் முன்னாடி நம்மள கூப்பிடுறாரு கடவுளே நீதான் எப்படியாவது காப்பாத்தணும்’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவள், மெதுவாக அவர்கள் முன் வந்து நின்றாள்.
அவள் அங்கு வந்து நிற்கவும் கபிலனின் விழிகளோ அவளை தலை முதல் கால் வரை பார்வையால் தழுவின.
அதில் உடல் கூச புடவை முந்தானை கொண்டு தன்னை முழுவதும் மூடிக்கொண்டு நின்றவள்,
“ சொல்லுங்க மாமா எதுக்கு கூப்பிட்டீங்க” என்று சென்பகபாண்டியனிடம் கேட்க.
அவரோ,
“ நீ என்ன பண்ற இந்த சார் கூட போயிட்டு வா இன்னைக்கு ஒரு நாள். அவர் என்னென்ன கேட்கிறாரோ அதை அவர் மனசு நோகாம நடந்துக்கோ” என்று அவர் பட்டென்று கூறிவிட,
அதைக் கேட்டவளுக்கோ ஒரு நிமிடம் தூக்கிவாரிப் போட்டது.
“மாமா என்ன பேசுறிங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா” என்று அவள் அதிர்ச்சியாக கேட்க.
“ என்னம்மா குரல் உயருது நான் என்ன சொல்றேனோ அதை நீ கேட்டுத்தான் ஆகணும் ஒழுங்கா நான் சொன்ன மாதிரி இவர் கூட போயிட்டு வந்துட்டன்னா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.
அதைக் கேட்டதும் தன்னுடைய கைகளால் காதை பொத்திக்கொண்ட அவருடைய மனைவி சீத்தாவோ,
“ என்னங்க என்ன காரியம் பண்றீங்க அவ நம்ம மருமக” என்று சொல்ல.
“ வாய மூடிகிட்டு ஒழுங்கா உள்ள போ” என்றார் சென்பகபாண்டியன்.
இவருடைய இந்த பேச்சை சகிக்க முடியாமல் அந்த புள்ள பூச்சிக்கும் கொஞ்சம் தைரியம் வந்தது போல அறிவழகிக்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“ என்னங்க பேசுறீங்க அவ நம்ம மகனோட பொண்டாட்டி.
இப்படி எவனோ ஒருத்தன் கூட போக சொல்றீங்க அசிங்கமா இல்ல உங்களுக்கு”
“ என்னடி என்னையவே எதுத்து பேசுறியா நீ” என்ற சென்பகபாண்டியனோ, அவருடைய கன்னத்தில் பளார் என்று ஒரு அடியை இறக்கினார்.
அதோடு வாயை மூடி நின்று கொண்டார் சீத்தா.
அறிவழகிக்கோ அவர் சொன்ன இந்த வார்த்தைகள் அவளுடைய செவியில் நாராசமாய் விழுந்தது.
அருவருப்பில் முகத்தை சுழித்தவள்,
“ என்ன நீங்க பண்ற கொடுமைகளை எல்லாம் சகிச்சுகிட்டு போறதுனால என்ன சொன்னாலும் செய்வேன்னு நினைச்சீங்களா இப்படி பேசுறதுக்கு உங்களுக்கு கேவலமா இல்லை”
என்று கேட்டவளை,
“என்னடி சொன்ன” என்று அவளுடைய தலைமுடியை கொத்தாக பிடித்தவர் பார்வையோ அவள் மேனியில் ஊர்வலம் போனது.
அந்தப் பார்வையின் வீச்சை தாங்க முடியாதவள் கூனிக் குறுகினாள்.
“ உன்ன ஒரு நாள் மட்டும் இவர் கூட போக சொன்னதுக்கு முடியாதுன்னா அடம் பிடிக்கிற.
அதுக்கான தண்டனை இன்னைக்கி என் கூடயும் நீ இருந்தாகணும்” என்று சென்பகபாண்டியன் சொல்ல அவளுக்கோ அதைக் கேட்டதும் அந்த இடத்திலேயே தான் மரித்து விட மாட்டோமா என்று இருந்தது.
“ ச்சி கையை எடு நீ எல்லாம் ஒரு மனுஷன் பெத்த பிள்ளையோட பொண்டாட்டின்னு கூட பார்க்காம இப்படி அசிங்கமா நடந்துக்கிற. இதெல்லாம் அவருக்கு தெரிஞ்சது உன்னை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவாரு” என்று அறிவழகி கோபத்தில் கற்ஜிக்க.
அதைக் கேட்டு சிரித்த சென்பகபாண்டியனோ,
“ யாரு அவன் என்னை வெட்டி போடுவானா அது உன் கனவுல வேணா நடக்கும்.
இப்படி அப்பா உன் பொண்டாட்டி மேல ஆசைப்படுறேன்டான்னு சொன்னா அவனே என் பெட்ரூம்ல கொண்டு வந்து உன்னை விட்டுட்டு போவான்” என்று அவர் எகத்தாளமாக கூற.
“ இன்னொரு தடவை அவரை பத்தி இப்படி பேசின உன்னை என் கையாலேயே கொன்னு போட்டுடுவேன்டா” என்றவள் சென்பகபாண்டியனின் கையை தட்டி விட்டு அவருடைய கன்னத்தில் பளார் என்று ஒன்று வைத்தாள்.
சென்பகபாண்டியனுக்கோ கபிலனின் முன்னால் அவள் அடிக்க அவருக்கோ அது மிகுந்த அவமானமாக இருந்தது.
“ எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலயே கைய வைப்ப நீ. உன்ன நார் நாரா கிழிச்சி உயிரோட விடமாட்டேன் டி” என்றவர் அவளை தரதரவென்று இழுத்துப் போக,
இங்கு நடப்பதை சகிக்க முடியாமல் அவரை தடுக்க வந்த சீத்தாவோ இனி தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்தவர் கணவரின் முன்னே வந்து,
“ என்னங்க பாவத்திலேயே பெரிய பாவம் செய்றீங்க இப்படி பண்ணாதீங்க அந்த பொண்ண விட்டுடுங்க” சென்று அவரை தடுக்க,
“ ஒரு தடவை சொன்ன உனக்கு புரியாது இல்ல” என்று சொல்லியவர் அவரை பிடித்து ஒரு தள்ளு தள்ள,
அவர் தள்ளிய வேகத்தில் சுவற்றில் மண்டை இடிக்கபட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
“ அத்த அத்தை அத்தை” என்று சீத்தாவிடம் போக முனைந்த அறிவழகியை போகவிடாமல் சென்பகபாண்டியனும் கபிலனும் அவளை காரில் இழுத்து போட்டுக் கொண்டு புறப்பட்டனர்.
அரை மயக்கத்தில் நடந்ததை தன் மகனிடம் சீத்தா சொல்ல அதை கேட்ட கதிரவனக்கு உடலெல்லாம் தீயாய் எரிந்தன.
அவன் கோபம்… நாணயத்தை உருக்கும் எரிமலை போல இருந்தது.
அவன் பார்வை… சாய்ந்த மரங்களைக் கிழிக்கின்ற புயலாக மாறின.
அவர்கள் இருவரையும் வெட்டி போடும் ஆத்திரம் வந்தது அவனுக்கு.
தன் அன்னை இருக்கும் கோலத்தையும் நினைத்தவனோ உடனே தன்னுடைய நண்பன் ரகுவந்தனக்கு அழைப்பு எடுத்து சீக்கிரம் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.
ரகுவந்தனோ சொன்னது போலவே ஐந்து நிமிடத்திற்குள் வீட்டிற்கு வர, அவனுடைய பொறுப்பில் தன்னுடைய அன்னையை விட்டவன் மேலோட்டமாக அவனிடம் சிலதை கூறிவிட்டு தன்னுடைய மனைவியைத் தேடி கிளம்பினான் புயலாக.
தன்னுடைய அப்பா எங்கு சென்று இருப்பார் என்று பொறுமையாக யோசித்துப் பார்த்தவன் தங்களுக்கு இருக்கும் அனைத்து இடங்களிலும் தேடிப் பார்க்க தொடங்கினான்.
ஒவ்வொரு இடமாக தேடிப் பார்க்கும் பொழுது அவனுடைய இதயமோ வேகவேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
அறிவழகியின் நிலை தற்போது என்னவாக இருக்கும்…?
தான் சென்று அவளை பார்க்கும் வரையிலும் அவளுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று இருக்கும் அத்தனை கடவுளிடமும் வேண்டுதல் வைத்தான் கதிரவன்.
தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அவளைத் தேடிக் கொண்டே போனவன் ஒரு வளைவில் எதிரே வந்த வாகனத்தை பார்க்காமல் இடித்து விட எதிர்பக்கம் வந்த பைக்கும் இவன் வந்த பைக்கும் ஒன்றோடு ஒன்று மோதி இருவரும் கீழே விழுந்தார்கள்.
விழுந்த வேகத்தில் கதிரவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் சட்டென எழுந்து பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப பார்க்க அவன் மோதி விழுந்த வேந்தனோ,
“ டேய் அறிவு கெட்டவனே பார்த்து வரமாட்ட இப்படியா வண்டியை வந்து விடுவ” என்று திட்டியவாறே தன்னை இடித்தவனை ஏறிட்டு பார்க்க,
அங்கு கதிரோ வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானான்.
சட்டென அவனை நெருங்கியவன் அவனுடைய சட்டை காலரை பிடித்து,
“ ஏன்டா எதுக்க வர்ற ஆள கூட பார்க்காம வண்டியை இடிச்சிட்டு நீ பாட்டுக்கு எதுவும் சொல்லாம போற உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்” என்று அவனிடம் சண்டைக்கு போனான் வேந்தன்.
தற்சமயம் அவனுடன் சண்டையிடும் நிலைமையில் கதிர் இருக்கிறானா இல்லையே.
“ இங்கே பாரு வேந்தா இப்போ உன் கூட சண்டை போடுற நிலைமையில நான் இல்ல தயவு செஞ்சு என்னோட நிலைமையை புரிஞ்சிக்கோ நான் அவசரமா இங்கிருந்து போய் ஆகணும் உன்னை இடிச்சதுக்கு என்ன மன்னிச்சிடு நான் அறிவை காப்பாத்தியே ஆகணும் அவளை தேடித்தான் போயிட்டு இருக்கேன்” என்று பதற்றமாக கூறினான் கதிர்.
அதைக் கேட்டதும் வேந்தனின் புருவங்களோ சுருங்கின.
தன்னிடம் ஏதும் இவன் விளையாடுகிறானா என்று யோசித்த வேந்தனோ,
“ என்னடா புதுசா எதுவும் டிராமா பண்றியா என்கிட்ட இப்படி எல்லாம் பேசினா உன்ன விட்டுடுவேன்னு நினைச்சியா” என்று அவன் கேட்க.
“ அய்யோ வேந்தா நிஜமாதான் சொல்றேன் என் அப்பா என் அப்பான்னு சொல்றதுக்கு கூட எனக்கு அசிங்கமா இருக்கு. அந்த பரதேசி எவனோ ஒருத்தன் கூட சேர்ந்துக்கிட்டு என் அறிவை நாசமாக்க போறான் அவளை எப்படியாவது நான் காப்பாத்தியாகனும் தயவு செஞ்சு என்னை விடு” என்றவன் தன் அன்னை கூறியதை அவனிடம் கூறினான்.
அதைக் கேட்ட வேந்தனுக்கோ வெறி ஏறியது.
“ அந்த பரதேசி நாயி இப்ப எங்கடா இருப்பான்” என்றவன் பற்களை நரநரவென்று கடித்தவாறே கேட்க.
“ நான் எங்களுக்கு சொந்தமான எல்லா இடத்திலும் பாத்துட்டேன். இப்ப கடைசியா எங்க அப்பா மட்டுமே அடிக்கடி போற ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அங்க தான் போய்கிட்டு இருக்கேன்” என்றான் கதிரவன்.
“ சரி வா நானும் வரேன் உன் அப்பனோட சாவு இன்னைக்கு என் கையால தான் நடக்கப் போகுது” என்ற வேந்தனோ கதிருடைய வண்டியில் அவனுக்கு பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சென்பகபாண்டியனின் கெஸ்ட் ஹவுஸை நோக்கி புறப்பட்டார்கள் சீறும் சிறுத்தையாகவும் சினம் கொண்ட சிங்கமாக கதிரவனும் வேந்தனும்.