எபிலாக்
பத்து மாதத்திற்கு பிறகு.
“அடியேய் வரவர நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்குற என்ன பார்த்தா உனக்கு பாவமா தெரியலையா” என்றவாறு தன்னை கடந்து போகும் மனைவியின் முந்தானையைப் பிடித்து இழுத்தான் கதிரவன்.
அவளோ அவன் இழுத்த இழுப்பில் அவன் மடியில் வந்து விழுந்தவளோ,
தன்னுடைய ஐந்து மாத மேடிட்ட வயிற்றை ஒரு கையால் தாங்கியவாறு மற்றொரு கையை அவனுடைய மார்பில் பதித்தவள்,
“ என்ன தீரா நீங்க காலையிலேயே இப்படி பண்ணலாமா இன்னிக்கி ஜல்லிக்கட்டு நடக்குது.
நம்ம வீராவுக்கு கால் சரியாகி அவன் கலந்துக்க போறான் போட்டியில நான் அதை பார்க்குறதுக்கு எவ்வளவு ஆசையா ரெடியாயிட்டு இருக்கேன் ஆனா நீங்க இப்படி காலையிலேயே சேட்டை பண்ணிட்டு இருக்கீங்க சின்ன புள்ள மாதிரி” என்று அவனுடைய மீசை முடியை லேசாக இழுத்து விட்டாள் அறிவழகி.
அவளுடைய பூரித்த முகத்தை பார்த்து ரசித்தவனோ தன்னுடைய இரு கைகளாலும் அவளுடைய கன்னத்தை தாங்கியவன்,
அவளுடைய நெற்றி, கண்கள், மூக்கு, கண்ணம், நாடி, கழித்து என ஒவ்வொரு இடமாக முத்தமிட்டவன் இறுதியில் அவளுடைய இதழில் ஆழ்ந்த முத்தத்தை பதித்தான்.
“ என்னடி பொண்டாட்டி புருஷன்காரனை பார்க்கிறத விட்டுட்டு ஜல்லிக்கட்டு பார்க்க போறேன்னு ரெடியாயிட்டு இருக்க”
“ அடடா என் தீராவ தான் நான் தினமும் நல்லா கவனிச்சிக்கிறேனே” என்று அவள் சொல்ல அவனோ,
“ அது என்னமோ தெரியலடி நீ என்னை எவ்வளவு தான் நல்லா கவனிச்சுக்கிட்டாலும் எப்பவும் நீ என்னை கொஞ்சிக்கிட்டே இருக்கணும் போல தோணுது. ஏன் அப்படி தோணுது ஒருவேளை நான் பொண்டாட்டி தாசனா மாறிட்டேனா” என்று அவன் நாடியில் விரலை வைத்து அழகாக கேட்க.
அந்த அழகில் சொக்கிபோனவளோ,
“ ஐயோ என் பட்டு குட்டி இப்படி எல்லாம் செய்யாதீங்க தீரா அப்புறம் என் கண்ணே பட்டுடும்” என்று அவள் கொஞ்ச அவனோ அவளுடைய மேடிட்ட வயிற்றை தடவியவன்,
“ சரி இப்போ என்ன இப்படி கொஞ்சுரியே நம்ம பிள்ளை வந்ததுக்கப்புறம் என்ன இப்படி கொஞ்சுவியா இல்ல நம்ம பிள்ளையை தான் கொஞ்சுவியா” என்று அவன் ஏக்கமாக கேட்க.
அவனுடைய தலையை கோதிவிட்டவள் தன்னுடைய கைகளில் அவனுடைய கன்னத்தை தாங்கி பிடித்தவள் அவனுடைய நெற்றியில் இதழ் பதித்து,
“ இங்க பாருங்க தீரா நமக்கு எத்தனை பிள்ளை பிறந்தாலும் எனக்கு நீங்கதான் முதல் குழந்தை உங்களுக்கு அப்புறம் தான் அவங்க அதனால நீங்க கவலையே பட வேண்டாம் எப்பவும் முன்னுரிமை உங்களுக்கு தான்” என்றவள் அவனுடைய கன்னத்தில் முத்தத்தை பதித்துவிட்டு,
“ சரி வாங்க நேரம் ஆயிட்டு நம்ம வீரா விளையாடுறதா பார்க்கணும் வாங்க போகலாம்” என்றாள்.
அவனும் சரி என்றவன் அவளுடன் வீராவின் விளையாட்டை பார்க்க கிளம்பினான்.
**
இங்கே வேந்தன் வீட்டில் வீராவை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தி அவனை வண்டியில் ஏற்றிவிட்டு மொத்த குடும்பமும் அங்கு ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு செல்ல வேந்தனின் அறையில் அவனுடைய மனைவியோ தங்களுடைய மகளுக்கு பாலூட்டிவிட்டு பிளவுஸ் கொக்கி போட்டுக் கொண்டிருக்க, உள்ளே வந்த வேந்தனோ அவளை ரசித்துவிட்ட தன்னுடைய மகள் தூங்கிக் கொண்டிருக்க அதுக்கும் ஒரு முத்தம் வைத்தவன் தன்னுடைய மனைவியிடம்,
“ என்ன மேடம் ஊரே அங்க ஜல்லிக்கட்டு மைதானத்துல காத்துகிட்டு கிடக்கு ஆனா மேடம் இன்னும் ரெடியாகாம இருக்க.. இல்லையே இந்நேரம் நீ ஆளுக்கு முதல்ல ரெடி ஆகி இருக்கனுமே ஏன்னா உன் வீரா போட்டியில் கலந்துக்க போறான்” என்று குறும்போடு அவள் அருகில் அமர்ந்தவன் விரித்துவிட்டிருந்த அவளுடைய கூந்தலை காதுக்குப்பின் ஒதுக்கி விட்டான்.
அவளோ,
“ ஏன் சொல்ல மாட்டீங்க இங்க பாருங்க உங்க பொண்ணு சரியான அடம் இவ்வளவு நேரம் என்னை என்ன பாடுப்படுத்தினா தெரியுமா. நானும் என் வீரா அங்க களத்தில இறங்குறத பார்க்குறதுக்கு அவ்வளவு ஆசையா ரெடி ஆகலாம்னு போய் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள இந்த குட்டி மேடம் அழ ஆரம்பிச்சிட்டாங்க.
வேக வேகமா குளிச்சிட்டு வந்து இவள பசியாத்தி ரெடி பண்ணி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு.
ஆனா சாரு நீங்க இப்பதான் வர்றீங்க கொஞ்சம் சீக்கிரம் வந்து இருந்தா நானும் கிளம்பி இருப்பேன் இல்ல” என்று சினுங்கலாக கூறினாள் மேகா.
“ அச்சச்சோ என்னோட பட்டுக்குட்டி இவ்வளவு சேட்ட பண்ணாங்களா” என்று தூங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையின் பிஞ்சு விரல்களை வருட அதுவோ தன்னுடைய தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்து தூக்கத்திலேயே தன்னுடைய குட்டி இதழ்களை லேசாக விரித்து புன்னகைத்தது.
அதை பார்த்த வேந்தனுக்கோ அவ்வளவு ஆனந்தம்.
பின்பு தன்னுடைய மனைவியை பார்த்தவன்,
“ சரி அதான் நான் வந்துட்டேன்ல்ல நம்ம பாப்பா வேற நல்ல தூங்குறா நீ இப்போ ரெடி ஆகு அப்படியே நம்ம பாப்பா முழிச்சுக்கிட்டாலும் நான் பார்த்துக்குறேன்” என்று அவன் சொல்ல அவளோ,
“ ஒன்னும் தேவையில்லை நீங்க வெளிய போங்க எனக்கு ரெடியாக தெரியும் வந்துட்டாரு ஆள பாருங்க அப்படி எல்லாம் உங்ககிட்ட சிக்க மாட்டா இந்த மேகா” என்றவள் அவனுடைய கையைப் பிடித்து அறையை விட்டு வெளியேற்ற நினைத்தாள்.
அவனோ அவளுடைய இடையை வளைத்து தன்னுடைய மடியில் போட்டுக் கொண்டவன்,
“ என்ன சொன்ன சிக்க மாட்டியா அதுவும் இந்த வேந்தன் கிட்ட இப்ப பார்த்தியா உன்னை எப்படி கவுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்டி என் பொண்டாட்டி” என்றவன் அவளுடைய இதழை விரல் கொண்டு வருடியவன் தன்னுடைய இதழால் அவளுடைய இதழ்களில் கவி எழுதினான்.
அவனுடைய இந்த மென்மையான முத்தத்தில் அவன் பக்கம் சாய்ந்தவளோ முழுவதுமாக மெய்மறந்து போனாள்.
பின்பு அவனே அவளிடம் இருந்து பிரிந்தவன்,
“ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ சொன்னாங்களே அப்படி எல்லாம் உங்களை சிக்க வைக்க முடியாதுன்னு. இப்படி ஒத்த முத்தத்திலேயே டோட்டலா கவுந்துட்டியேடி உனக்கு எல்லாம் பஞ்ச் டயலாக் செட் ஆகாது போய் சீக்கிரம் கிளம்பிட்டு வா நான் வெயிட் பண்றேன். ஜல்லிக்கட்டு ஆரம்பமாக போகுது. சீக்கிரம் போலாம் உன் வீரா உனக்காக காத்துகிட்டு இருப்பான்” என்றான் வேந்தன்.
“ பிராடு ஏலியன் இப்படியே பேசி என்னை மயக்கிரு” என்றவள் குடுகுடுவென்று ஓடி சிறிது நேரத்தில் அழகான சிகப்பு நிற பட்டுப்புடவை கட்டி அதற்கு ஏற்றார் போல் அளவான ஒப்பனையோடு கிளம்பியவள் தன் கணவனோடு ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு வந்தாள்.
மொத்த ஊருமே அங்கு தான் இருந்தது. மேகா அங்கு போனதும் வீராவின் நெற்றியில் குங்கும திலகமிட்டு அவனை போட்டிக்கு அனுப்பி வைத்தாள்.
சிறிது நேரத்தில் அங்கு போட்டி தொடங்கப்பட வரிசையாக மாடுகள் வந்த வண்ணம் இருக்க.
சில மாடுகள் பிடிபடவும் சில மாடுகள் பிடி படாமலும் போட்டி கலகலப்பாகவே சென்று கொண்டிருந்தது.
அந்த நேரம் நம் வீராவும் களத்தில் இறங்கினான்.
அவன் உள்ளே இறங்கவும் அவனுக்கே உண்டான ரசிகர்கள் பட்டாளம் ஆர்ப்பரிக்க சிங்கமென களத்தில் இறங்கியவன் யாருடைய கைகளுக்கும் அகப்படாமல் வெற்றிவாகை சூடினான் வீரா.
அங்கே போட்டியில் வீரா வெற்றி வாகை சூடி இருக்க, இங்கே தங்களுடைய காதல் வாழ்க்கையில் வேந்தனும் கதிரவனும் வெற்றி வாகையை இனிதாக சூடிக்கொண்டனர்.
நன்றி.
என்றும் அன்புடன்
ஆதி.