தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 1

4.4
(39)

பேராசை – 1

அவ் அழகான இயற்கை வளம் கொஞ்சும் இலங்கை திருநாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தக் குடும்பங்களில் பெரும் ஆதிக்கமும் அதிகாரமும் கொண்டது பிரகலாதன் குடும்பம்.

 

“PL எண்டர்பிரைசஸ்” என்றால் இலங்கையில் தெரியாத ஆளே இல்லை எனலாம்.

அவர்களின் கம்பனியின் கிளைகள் நாடு முழுவதும் விரவிக் கிடந்தன.

 

அவரின் காதல் மனைவி லதா. இந்நாள் வரை அக் காதலும் அன்பும் ஒரு துளி கூட குறையாமல் மனைவியை தாங்குபவர்.

 

பிரகலாதன் வீட்டில் எவ்வளவு அன்பானவரோ அதற்கு நேர் மாறாக தொழிலில் ஓர் அரிமாவாக உலா வருபவர்….அவரின் தொழில்களில் பிரகலாதனின் உயிர் நண்பன் ஜீவனும் ஒரு பங்குதாரர் ஆவார்…. அதற்கு சான்றாக தன் அன்புத் தங்கையை தன் உயிர் நண்பனுக்கே திருமணம் செய்து வைத்தது மட்டுமல்லாது நால்வரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

 

அந்த மாளிகை போன்ற வீடே அல்லோலக் கல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது.

 

ஆம், பிரகலாதனின்  அன்புத் தங்கை இந்துவினதும் பிரகலாதனின் உயிர்த் தோழனுமாகிய ஜீவனினதும் 35வது திருமண நாள் கொண்டாட்டம் கோலாகலமாக இன்னும் சற்று நேரத்தில், இலங்கையின் தலை நகரமான கொழும்பிலேயே பிரசித்தி பெற்ற தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற உள்ளது.

 

எல்லோரும் இங்கு தடல் புடலாக ஆயத்தமாகிக் கொண்டிருக்க…. நம் கதையின் நாயகியோ நம் கதையின் நாயகனின் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவனின் கைகளில் மருதாணி போட்டுக் கொண்டு இருந்தாள்.

 

அவனோ, அவனுக்கு நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தான்.

 

ஒரு வழியாக அவனின் இரு கைகளிலும் மருதாணியை போட்டு விட்டு மெதுவாக சத்தம் எழுப்பாமல் எழுந்து அவனின் முகத்தை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவள் மனதிலோ, “ இல்ல வேண்டாம்…பங்ஷன் இருக்கு நிறைய விஐபிஸ் எல்லாம் வருவாங்க இவனுக்கு கைல போட்டதுக்கே என்ன செய்ய போறான்னு தெரியல… இதுல உன் மைண்ட் அவன் முகத்துல டிசைன் போட்டால் என்னனு? வேற யோசிக்குது இப்போ மட்டும் அவன் என்னைப் பார்த்தால் மர்கயா தான்” என நினைத்தவள் வந்த வழியே சத்தம் எழுப்பாமல் சென்று விட்டாள்.

 

ஆம், அவள் ஆழினி நாச்சியார். ஜீவன் மற்றும் இந்துவின் அன்புப் புதல்வியும், பிரகலாதனின் செல்ல மருமகளும் ஆவாள்.

 

ஐந்தரை அடி உயரம் இருப்பாள் அதற்கு பொருத்தமான உடல்வாகு, செதுக்கி வைத்தாற் போன்ற உடலமைப்பு மற்றும் அடர்த்தியான நீளக் கூந்தல் உடையவள் அவள் பேரழகியே!

 

உயர்தரத்தில் சிறந்த சித்தி பெற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறை பிரிவை தேர்ந்து எடுத்து படித்தவள் 4 ஆண்டுகள் தன் படிப்பை முடித்து முடித்து விட்டு, இப்போது ஒரு மாதத்திற்கு முன் தான் வீட்டிற்கு வந்து இருந்தாள்.

 

அவள் ஒரு இசை பிரியை உண்மையை சொல்லப் போனால் அவள் நாடோடி வாழ்க்கையை விரும்புபவள்….. வீட்டில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரகலாதன் அவளை ஆதரிக்க, இனி வேறு என்ன வேண்டும்? தான் விரும்பிய டூரிசம் மேனேஜ்மென்டை அவள் எந்த வித தடைகளும் இன்றி படித்தாள்.

 

பாவம், அவளின் இந்த ஆசையே ஒரு நாள் அவளுக்கு விபரீதமாக முடியப் போவதை அறியவில்லை.

 

தன் அறைக்குள் வந்தவள் தான் எடுத்து வைத்து இருந்த அடர் நீல நிற லகேங்காவை எடுத்து வருடியவள் அதனை ஹெங்கரில் போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

அப்போ ஹீரோ?

அவன் காஷ்யபன் ஷேத்ரா.

தனிமைப் பிரியன், இயற்கை பிரியன், ஆழி பிரியன்.

 

(ஹலோ ஹலோ இருங்க, நீங்க நினைக்கிற போல நம்ம ஆழினி பிரியன் இல்லங்க அவர் கடல் பிரியன்.

அவங்க ரெண்டு பேருக்கும் எப்போதும் எட்டாம் பொருத்தம் தான்.)

 

அவுஸ்திரேலியாவில் தன் பிசினஸ் மேனேஜ்மென்ட் பட்டப் படிப்பை முடித்து விட்டு தனக்கென ஓர் அடையாளத்தை கொழும்பில் உருவாக்கி உள்ளான்.

 

பிரகலாதன் மற்றும் லதாவுக்கு ஆழினி எப்படியோ அப்படி தான் ஜீவா மற்றும் இந்துவுக்கு செல்லப்பிள்ளை அவன்.

 

அவனின் திறமை மீதுள்ள அபரிவிதமான நம்பிக்கையில் பிரகலாதனும் அவனுக்கு இன்வெஸ்ட்மென்ட் செய்ய அவனின் முயற்சியில் பாரிய வளர்ச்சியை காட்டி இப்போது பிரகலாதனுக்கு இணையான ஒரு வர்த்தகனாக வளர்ந்துள்ளான்.  

 

PL எண்டர்பிரைசசிற்கு இணையாக காஷ்யபனின் “KS எண்டர்பிரைசஸ்” கம்பனியின் வளர்ச்சி ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே அளப்பரியதாக இருந்தது.

 

அவன் தனிமை மற்றும் கடல் பிரியனாகையால் தனக்கென ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை கோல் பேஸ் கடற்கரை ஓரத்தில் தனக்கு பிடித்த வகையில் நிர்மாணித்து உள்ளான்.

 

வார இறுதியில் அவனின் வாசம் அங்கே தான்.

 

கட்டுக்கோப்பான உடலும், அகன்ற மார்பும், திண்ணிய புஜங்களும், நெற்றியில் அலை அலையாக புரளும் கேசமும், தேற்றிப் பல் சிரிப்பிலும் தலையைக் கோதி அவன் கையில் எப்போதும் போட்டு இருக்கும் ஐம்பொன் காப்பை கீழே இறக்கும் அவனின் மேனரிசத்தை பார்த்து மயங்காத பெண்களே இல்லை. அனைவரையும் தன் ஒற்றை பார்வையில் எட்ட நிறுத்தி விடும் கம்பீரமான ஆண்மையின் சகல இலட்சனங்களும் பொருந்திய ஆறடி ஆண்மகன் அவன்.

 

அவனின் கூடவே பிறந்த திமிரும் ஈகோவும் அவனோடே சுற்றிக் கொண்டு இருக்க, அழகு இருந்து என்ன பயன்?

 

அலாரம் ஆறு மணி என தன் இருப்பைக் காட்ட, தன் கட்டுக் கோப்பான உடலை நெளித்து கண்களை திறவாமலே எழுந்து அமர்ந்தவன் தன் ஒற்றைக் கையால் கழுத்தில் நெட்டி முறித்தவன் இரு புறமும் தலையை அசைத்தவனது அந்த தோற்றமே கிரேக்க சிற்பம் போல் இருந்தது.

 

பிரகலாதன் மற்றும் லதாவின் காதலுக்கு பரிசாக கிடைத்த அவர்களின் செல்வப் புதல்வன் அவன்.

 

கழுத்தில் ஏதோ குளிர்ச்சியான உணர்வை தர…. பட்டென கண்களை திறந்தவன் கையை கழுத்தில் இருந்து எடுத்து பார்த்து அதிர்ந்தவன் கட்டிலில் இருந்து எழுந்து நேரே சென்றது என்னவோ ஆளுயரக் கண்ணாடியின் முன்னே தான்.

 

கண்ணாடியை பார்த்து அதிர்ந்தவன் “நாச்சி” என ஹை டெசிபளில் அந்த வீடே அதிரும் வண்ணம் கத்தி இருந்தான்.

 

குளியலறையில் இருந்த அவளுக்கோ “நாச்சி” என்ற அவனின் அழைப்பு விளங்க “இவனை… எனப் பற்களைக் கடித்தவள் இருடா உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்” என மனதில் கறுவிக் கொண்டாள்.

 

ஆம், அவனுக்கு அவள் “நாச்சி” என்றாள் அவளுக்கு அவன் “காஷ்”.

 

இப்படி இருவரும் எதிரும் புதிருமாக இருக்க அடிப்படைக் காரணமே இந்த பெயர் தான்.

 

அவளுக்கு “நாச்சி” என்று கூப்பிடுவது பிடிக்காது என்று தெரிந்து அவன் கூப்பிட, அவனுக்கு “காஷ்” என அழைத்தால் பிடிக்காது என்று தெரிந்து  அவனை அவள் “காஷ்” எனக் கூப்பிட அதுவே இருவருக்கும் முரணாகிப் போனது.

 

கோபத்தில் கண்கள் சிவந்து கழுத்து நரம்புகள் புடைக்க இருந்தவனது தோற்றம் ஓர் அரக்கன் போலவே இருந்தது.

 

இவன் கத்திய கத்தலில் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலையாட்களின் கைகள் ஒரு கணம் நின்று பின் அவர்களின் வேலைகளில் ஈடுபடத் தொடங்கி இருந்தனர்.

 

இவ் வீட்டில் இது மாதிரியான செயல்கள் தினமும் நடக்கும் போலும், சமையலறையை மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்த லதா மற்றும் இந்துவுக்கு தத்தமது பிள்ளைகளை நினைத்து கவலையே! தினமும் இப்படி அடித்துக் கொள்கின்றார்களே அதுவும் இந்த நல்ல நாளிலும் கூடவா? என இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டவர்களுக்கு ஒருங்கே சலிப்பும் தோன்றியது.

 

நல்லவேளை பிரகலாதனும் ஜீவாவும் வாக்கிங் செல்வதனால், அதிகாலையில் நடக்கும் இவர்களின் கூத்து லதா, இந்து மற்றும் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

 

வெண்ணிற டவலுடன் குளியலறையில் இருந்து  வெளியில் வந்தவள் எதை பற்றியும் யோசிக்காமல் தயாராக ஆரம்பித்து விட்டாள்.

 

இங்கு வாஷிங் பேஷனில் தன் கழுத்து பகுதியை நன்றாக தேய் தேய் என தேய்த்துக் கொண்டு இருந்தான் காஷ்யபன். 

 

ஆம், அவன் கையில் வைத்த மருதாணியை அவன் பார்க்காமல் அவன் கழுத்தில் கையை வைத்து நெட்டி முறித்த போது அவனின் ஐவிரல் தடம் கழுத்தில் பழுப்பு நிறத்தில் பதிந்து இருக்க, அவனுக்கோ அவ்வளவு ஆத்திரம்… அவள் மட்டும் இப்போது கையில் கிடைத்தால் அவளின் தலையை பற்றி கண்ணாடியில் அடிக்கும் அளவு ஆத்திரம் கிளம்பி இருந்தது.

 

பின்ன கோபம் வராதா? இன்றைய விழாவில் பல தொழில்முறை பிரமுகர்கள் மத்தியில் கையிலும் கழுத்திலும் மருதாணி அச்சோடு எப்படி அவர்களை எதிர் கொள்வது என நினைக்கும் போதே பீபி எகிறியது.

 

நல்லவேளை காலையில் வைத்த காரணத்தினால் நிறம் சற்று மங்கினாற் போல இருந்தது. இதற்கே இப்படி என்றாள் அவள் இரவே வைத்து இருந்தால் என்ன ரணகளம் ஆகி இருக்குமோ அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

 

சாதாரண பெயரில் ஆரம்பித்த இவர்களின் சண்டை இப்போது போட்டியிலும் பொறாமையிலும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

 

பிரகலாதன் ஆழினி மேல் அதிக அன்பை பொழிவது இவனுக்கு பிடிக்காமல் போக அதற்கு தகுந்தாற் போல அவளும் தன் மாமாவுக்கு செல்லம் கொஞ்சுவாள்.

 

காஷ்யபன் மட்டும் அதற்கு சலைத்தவன் இல்லையே, தன் அத்தையான இந்துவுக்கு ஆண்பிள்ளை இல்லாத காரணத்தால் அவன் மீது அவர் பாசத்தைப் பொழிய, அது அவனுக்கு சாதகமாகிப் போனது…. பின்னர் போகப் போக அவனுக்கும் உண்மையிலேயே இந்துவின் அரவணைப்பில் இயல்பாகவே பாசம் சுரக்க அவனை இனி கேட்கவும் வேண்டுமா? அத்தையுடன் அவன் ஒன்றிப் போக…. ஒவ்வொன்றிலும் இருவருக்கும் போட்டியும் பொறாமையுமாகிப் போனது.

 

இவர்கள் அடித்துக் கொள்வதனால் குடும்பத்தினருக்கு சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கியது தான் நிஜம்.

 

பிரகலாதன் மற்றும் ஜீவனுக்கு  அரசல் புரசலாக இவர்களின் சண்டையை கேள்வி பட்ட போதிலும் சரி ஆகி விடுவார்கள் எனக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர்.

 

உண்மையச் சொல்ல போனால் அவர்கள் வீட்டில் இருக்கும் நேரங்களில் இவர்கள் முடிந்தளவு ஏட்டிக்கு போட்டியாக ஏதும் செய்து சண்டை வருவதை தவிர்த்தனர் என்றே கூறலாம்.

 

(இப்போதே இவர்கள் இருவரையும் கண்டித்து வைக்காமல் எதிர் காலத்தில் நடக்க இருக்கும் மாபெரும் தவறுக்கு வழிவகுத்து விட்டனர். விதியின் செயலை யாரால் மாற்ற முடியும்??)

 

உங்கள் லைக்ஸ் and கமென்ட் தான் என்னை அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் டியர்ஸ் 🥰

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

8 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 1”

  1. Nice starting,👏congrats👏,keep on going 👍👍👍wish you all best to become a famous writer ❤❤❤🥰🥰🥰😍😍😍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!