தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 12

4.8
(17)

பேராசை – 12

அதனைத் தொடர்ந்து இரவு நேரமும் வர, அவள் முன்னரே அந்த வெளிநாட்டு பிரஜையிடம் எங்கு வர வேண்டுமென குறுஞ் செய்தி அனுப்பி இருக்க, இன்னும் அதற்கான பதில் வரவில்லையே என அலைபேசியை வெறித்துக் கொண்டு இருந்தாள்.

 

சரியாக 9 மணிக்கு வருணும் அவளுக்கு அழைப்பை எடுத்து விட, அவன் கதைக்கும் முன்பே “இன்னுமே ரிப்ளை வரல வருண்” என்றாள் சோர்வாக…

 

“வாட்? இன்னும் இல்லையா? என்றவன் தொடர்ந்து ஃபாரஸ்ட் ஆபீஸ்ல அப்ரூவல் வாங்கனுமே” ஆழினி என்க…

 

“நோ நீட் வருண், ஆல்ரெடி அப்ரூவல் வாங்கியாச்சு அண்ட் நான் டுவிஸ்ட் கைட் (tourist guide) ஆஹ் அவங்களுக்கு போறேன்” 

 

“வாவ் குட் ஜாப் என்றவன் அவனின் பிசினெஸ் விஷயமாக கதைக்கத் தொடங்கி விட நீண்ட நேரத்திற்கு பிறகு  அவனுடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போதே அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான அடையாளமாக ஒரு கணம் அதிர்ந்தது.

 

“வன் மினிட் வெயிட் வருண் ஃபோன் வைப்ரேட் ஆகுது” என்றவள் அலைபேசியைப் பார்த்தாள்.

அதில் வந்து இருந்த குருஞ் செய்தியை  பார்த்தவளுக்கு கண்கள் பெரிதாக விரிய “வருண்” என்று அழைத்து இருந்தாள் குரல் நடுங்க….

 

“ஹேய் ஆழினி ஏன் பேனிக் ஆகுற? ரிலாக்ஸ்சா  என்ன மெசேஜ் வந்து இருக்குனு சொல்லு டி” எங்க…

 

அவளிடம் மௌனம்.

 

“என்னடி? ஏதாவது பேசு”

 

“சிங்கராஜா ஃபாரஸ்ட்னு சென்ட் பண்ணி இருக்காங்க வருண்… நான் ஏதோ சின்ன ஃபாரஸ்ட்ன்னு நினைச்சேன்” என்றாள் ஒரு வித நடுக்கத்துடன்….

 

அந்த காட்டின் பெயரைக் கேட்டதும் அவனுக்கும் உள்ளுக்குள் ஓர் அதிர்வு தோன்றினாலும் அதை காட்டிக் கொள்ளாமல் பேசத் தொடங்கினான்.

“ஓஹோ மேடம் இதுக்குத் தான் தனியா ப்ரெண்ட்ஸ் கூட கூட்டு சேர்ந்து போகப் பார்த்தீங்களோ?” என்றான் நக்கல் தொணியில்…

 

“ஐயோ! இல்லடா அது நாங்க வேற ஃபாரஸ்ட் டிஸ்கஸ் பண்ணி போக இருந்தோம்” என்றாள்.

 

“அப்போ ஃபோரீனர்கிட்ட இருந்து அந்த பிளான்ட் அஹ் எப்படி வாங்கி இருப்ப?”

 

“நான் அவங்களை ஹோட்டல்ல மீட் பண்ணிட்டு அங்க இருந்து அந்த பிளான்ட் அஹ் வாங்கிட்டு அப்படியே ஃபாரஸ்ட் போக தான் பிளான்… ஏன்னா அந்த பிளான்ட் அஹ் வளர்க்க விட்டமின்ஸ் இருக்க மண் வேணும் வருண் அதைத் தேடி தான் ஃபாரஸ்ட் போக இருந்தேன் பட் அதுக்குள்ள தான் நான் லூசு மாதிரி மாடில இருந்து விழுந்திட்டேனே!” என்றாள் பாவமாக….

 

அவள் சொன்ன தோரணையில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டவன் “லீவ் இட் ஆழினி ஆனால் எனக்கு ஒரு டவுட்” என்றான் வருண்.

 

“என்ன டவுட்?”

 

“நாம ஃபாரஸ்ட் போகாமல், அவங்க ஃபாரஸ்ட் போய் வந்ததும் அந்த பிளான்ட் அஹ் அவங்களை மீட் பண்ணி வாங்கிக்களாமே” எனக் கேட்க….

 

“அவங்க அந்த காட்டுல 1 மந்த் இருக்க போறாங்க வருண் நான் ஜஸ்ட் டூ டேய்ஸ் க்கு தான் கைட் ஆஹ் இருப்பேன்…  அப்புறம், அவங்களுக்கு  வேற ஆள் கைட் ஆஹ் வருவாங்க” என்றாள் விபரமாக…

 

“ அனிவே நானும் என் லைஃப்ல முதல் தடவை ஒரு பெரிய ஃபாரஸ்ட் அதுவும் வேர்ல்ட் ஹெரிடேஜ் (World Heritage site) உள்ளேயே போகப் போறோம் சோ லெட்ஸ் எஞ்சாய் ஆழினி” என்றான் வருண்.

“ஓகே வருண் குட் நைட்” என்றவள் அலைபேசியை துண்டித்து விட்டு கட்டிலில் தொப்பென விழுந்து கண்களை மூடிக் கொண்டாள்.

ஆம், அவர்கள் செல்ல இருப்பது இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமான சிங்கராஜா வனத்திற்கே ஆகும். இது இலங்கையின் சப்ரகமுவ, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமைத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடையே மிகப் பிரபலமான தளங்களில் ஒன்றாகும்.

 

அடுத்த நாள் காலையும் புலர என்றும் இல்லாத வழக்கம் போல ஜீவாவோ, ஆழினி கண் விழிக்கும் வரை அவள் அருகிலேயே காத்துக் கொண்டு இருந்தவர் அவள் மெது மெதுவாக அசைந்து கண் விழிக்க, “ அவளின் அறைக் கதவை ஒரு கணம் பார்த்தவர் நான் உன் அம்மாகிட்ட நைட் உன் டிரிப் பற்றி கதைச்சிட்டேன்… அவளை ஒரு மாதிரி சம்மதிக்க வச்சுட்டேன் இனி நீ தான் அவளை இம்ப்ரெஸ் பண்ணணும்” என்றார்.

 

“கூல் அப்பா குட் மார்னிங் என்றவள் கண்களை கசக்கிக் கொண்டே எழுந்து அமர்ந்தவள் என்னப்பா அம்மாவுக்கு நீங்க இவ்வளவு பயமா?” என சிரித்துக் கொண்டு கேட்கும் போதே…. கதவைத் திறந்துக் கொண்டு இந்து உள்ளே வந்தார்.

 

உள்ளே வந்தவர் ஜீவாவுக்கு காஃபியை நீட்ட, குரலை செருமிக் கொண்டே காஃபியை வாங்கிக் கொண்டார்.

 

“குட் மார்னிங் அம்மா என்றவள் தனக்கான காஃபியை எடுத்துக் கொண்டே, “அப்பா இங்க இருக்கார்னு உங்களுக்கு எப்படி மா தெரியும்?” என கேட்க…..

 

கடிகாரத்தைப் பார்த்த இந்துவோ, “மார்னிங் 6.00 க்கு எழும்பி அண்ணா கூட ஜாக்கிங் போகாமல் உன் ரூமுக்கு அதுவும் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு பதுங்கி பதுங்கி வந்தார் ஆழினி… அதான் நானும் காஃபி போட்டுட்டு இங்கேயே வந்துட்டேன்” என்க….

 

அவர் சொன்ன தோரணையில் ஆழினிக்கும் சிரிப்பு வந்த விட…. ஜீவாவுக்கு குடித்த காஃபி தொண்டைக் குழியில் சிக்கி விட்ட உணர்வு.

 

அதில் அவர் திரு திருவென முழிக்க அவரைப் பார்த்து சிரிப்பது இப்போது இந்துவின் முறையாகிப் போனது.

 

“என்னங்க நீங்க அப்படியா நம்ம பொண்ணு விருப்பத்தை நான் ஒத்துக்காமல் இருக்க போறேன்?… அதான் இந்த முறை அவள் தனியா போகலையே நம்ம வருண் கூட தானே போறா… போயிட்டு வரட்டும் நமக்கு இருக்கது ஒரு பொண்ணு அவ சந்தோஷம் தான் நம்ம சந்தோஷம்” என்றார்.

 

இது தானே அவளுக்கும் வேண்டும் இப்போது அவளுக்கு இந்துவின் சம்மதம் கிடைத்து விட இந்த உலகையே வென்ற உணர்வு வந்தது.

 

சந்தோஷத்தில் எழுந்து “ஐ லவ் யூ சோ மச்” என்று இருவரையும் இறுக அணைத்து இருந்தாள்.

 

அவளின் இறுகிய அணைப்பில் மூச்சு திணறியவர்கள் “ ஆழினி விடுடி மூச்சு எடுக்க முடியல” என இந்து சொல்ல…

 

“ஐயோ சாரி மா” என்றவள் இருவருக்கும் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தாள்.

 

அதனைத் தொடர்ந்து நேரம் செல்ல காலை உணவை சாப்பிட்டு விட்டு  பிரகலாதனுடன் பேசிக் கொண்டு இருந்தவள் கண்களை பின்னால் இருந்து ஒருவர் மூடிக் கொள்ள….

 

அவளின் கண்களை மூடிய கைகளை வருடியவள் ஒரு மெல்லிய புன்னகையுடன் “தேஜ்” என்றாள்.

 

அவள் தேஜ் என்றதும் அதிர்ந்து கையை எடுத்த தேஜாவோ, “என்ன இது புதுசா தேஜானு கூப்பிடு ஓகேவா” என்றாள்.

 

“இல்லடி ஷார்ட் ஆஹ்” என ஆழினி இழுவையாக சொல்ல… 

 

“தேஜாவும் ஷார்ட் தான்” என்றவள் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு இவர்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த பிரகலாதனிடம் பேசத் தொடங்கி விட்டாள்.

 

ஒரு பெரு மூச்சுடன் அவள் அருகில் அமர்ந்த ஆழினி, “ஓகே ஓகே கோவப்படாத நீ எனக்கு தேஜா தான் ஓகேவா?” என்றாள்.

 

“ம்ம்… இப்படியே இருக்காமல் வீட்டுக்கு வந்த கெஸ்ட்க்கு காஃபி போட்டு எடுத்திட்டு வா” என்றவள் கதைக்கத் தொடங்கி விட….

 

“என் தலை எழுத்து” என நெற்றியில் விரலால் கோடு இழுத்தவள் சமையலைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

காஃபியைப் போட்டு எடுத்துக் கொண்டு வந்தவள் தேஜா வெளியில் நிற்பதை பார்த்து விட்டு, அவள் அருகே சென்ற ஆழினி தேஜாவிடம் காஃபியை நீட்ட, அவளும் காஃபியை வாங்கிக் கொண்டவள் ஆழினி மேல் இருக்கும் நம்பிக்கையில் காஃபியை குடித்தவள் அப்படியே வெளியில் துப்பி இருந்தாள்.

 

இருவருக்கும் ஈ ஆடவில்லை.

 

ஆம், தேஜா காஃபியை துப்பியது ஷாத்சாத் நம்ம காஷ்யபன் மேல் தான்.

 

ஆழினியின் மைண்ட் வாய்ஸ் “போச்சு  சாத்தானை கிளப்பி விட்டுட்டா” என கவுண்டர் கொடுக்க அவளின் மேனி என்னவோ வெளிப்படையாகவே தான் நடுங்கிக் கொண்டு இருந்தது.

 

தேஜாவோ, மீதமாக கப்பினுள் இருக்கும் காஃபியை பயத்திலேயே மட மடவென குடித்து விட்டு “ஸ்…ஸ் சாரி அண்ணா” எனத் தட்டு தடுமாறி சொன்னவள் அங்கிருந்து திரும்பியும் பார்க்காமல் ஓடி இருந்தாள்.

 

ஆத்தி… என உள்ளுக்குள் பதறிய ஆழினி தன்னை இவ்வளவு நேரமாக கர்ண கொடூரமாக முறைத்துக் கொண்டு நின்றவனிடம் “அவ நீங்க வர்றது தெரியாமல் துப்பிட்டா சாரி” என்றவள் கவனமாக காஷ் என அவனை அழைப்பதைத் தவிர்த்து இருந்தாள்.

 

அவனோ எதுவுமே சொல்லாமல் ஆழினியின் கையை இறுக்கமாக பற்றியவன்  அவளை தர தரவென இழுத்துச் சென்று நீச்சல் தடாகத்தின் அருகில் வந்து அவளின் கையை விட்டான்.

 

அவளுக்கோ, அவன் பற்றி இருந்த இடம் எரிய, கையைப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.

 

அழுந்த பிடித்ததில் அவளின் வெண் நிறத்திற்கு அந்த இடமே சிவந்து தடித்து இருந்தது.

 

அவனோ, அவளின் முகத்திற்கு நேரே சொடக்கிட்டு அழைக்க, அவள் அவனை கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

 

“க்ளீன் மை ஷூஸ்” என்றானே பார்க்கலாம்.

 

“வாட்? நானா என அதிர்ந்தவள் நோவே என்னால முடியாது” என்றாள்.

 

பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டுக் கொண்டு நின்றவன்  “ஓகே வெல் ஆழினி அப்போ நான் உன் ப்ரெண்ட் தேஜாகிட்ட சொல்லி க்ளீன் பண்ணுறேன்” என சொல்லி விட்டு திரும்பியவன் கால்கள் அருகே சட்டென அமர்ந்தவள் அவனின் ஷூவில் படிந்து இருக்கும் காஃபி கரையை தண்ணீரை தொட்டு துடைக்க ஆரம்பித்து விட்டாள்.

 

அவள் துடைப்பத்தை பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியவன் “உன் ப்ரெண்ட்டுக்காக என்னவேணாலும் செய்வ போல” என்றான் ஓர் குரூர புன்னகையுடன்….

 

அவனை விலுக்கென ஏறிட்டு பார்த்தவள் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அடுத்த ஷூவை துடைக்கப் போக, அவனுக்கு தான் அவன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் அவமதித்தால் கோபம் வந்து விடுமே…. பற்களை கடித்தவன் அடுத்த காலை தூக்கி அவளின் மடியில் வைத்து இருந்தான்.

 

அவன் காலை தூக்கி மடியில் வைத்த வேகத்தில் சமநிலை இன்றி நீச்சல் தடாகத்தில் விழுந்து விட்டாள்.

 

விழுந்த வேகத்தில் அடி ஆழம் வரை சென்றவள் மேலே வந்து அவனை கோபத்தில் உருத்து விழிக்க, அவனோ சாவகாசமாக டிரைவர் கந்தனுக்கு கால் பண்ணியவன் அவனது அறையில் இருக்கும் வேறொரு ஷூவை கொண்டு வருமாறு கட்டளை இட்டு இருந்தான்.

 

5 நிமிடத்தில் அவரும் அவன் இருக்கும் இடத்தில் கொண்டு வந்து தர அதனை போட்டுக் கொண்டவன் தனது கரை படிந்த ஷூவை அங்கேயே போட்டு விட்டு “அவளை பார்த்து இரிடேட்டிங் இடியட் என சீறியவன் தனது காரில் ஏறி சென்று விட்டான்.

 

அவளுக்கோ அழுகை தொண்டை வரை வந்து விட்டு இருக்க கடினப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

 

மெதுவாக நீச்சல் தடாகத்தின் அருகே இருக்கும் கதிரையில் அமர்ந்தவளுக்கு, பலவித எண்ணங்கள் வளம் வந்துக் கொண்டு இருந்தன. 

 

வெளியில் ஆழினியை தேடிக் கொண்டு இருந்த தேஜாவிடம் அவசரமாக வந்த கந்தனோ, “ஆழினிமா அங்க இருக்காங்க அம்மா என நீச்சல் தடாகம் இருக்கும் இடத்தினை நோக்கி கையைக் காட்டியவர் போய் பாருங்க” என்றார்.

ஆம், கந்தனுக்கு தான் தெரியுமே வேலைக்கு சேர்ந்த நாள் முதல் காஷ்யபன் மற்றும் ஆழினிக்கு இடையில் நிகழும் யுத்தம்.

 

கந்தனுக்கும் இங்கு ஏதோ சரி இல்லையென பட தேஜாவிடம் கூறி இருந்தார்.

அவளும் அவரின் பதற்றத்தில் “சரி அங்கள் நான் போய் பார்க்குறேன் என்றவள் அவசர அவசரமாக ஓடி வந்து பார்க்க… ஆழினியோ முற்றிலுமாக நனைந்து அமர்ந்து இருக்க அவள் அருகில் காஃபி காரை படிந்த காஷ்யபனின் ஷூவும் இருந்தது… ஓரளவு அங்கு என்ன நடந்து இருக்கும் என ஊகித்துக் கொண்ட தேஜா மெதுவாக அவளின் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

அதில், சுய உணர்வுக்கு வந்தவள் “சாரி தேஜா என்றவள் எழும்பி வா உள்ள போகலாம்” என்றவள் முன்னே செல்ல…

அவளும் ஆழினியுடன் நடந்துக் கொண்டே, “என்னாச்சு ஆழினி? சாரி டி நான் உன்னை விட்டுட்டு போயிருக்க கூடாது அவரை பார்த்ததும் நடுங்கிறிச்சி அதான் உன்னை மறந்து ஓடிட்டேன்” என்றாள் கவலையாக…

 

“இட்ஸ் ஓகே டி அது நான் போட்ட காஃபி தானே அதான்” என்றவள் நடந்ததைக் கூற…

 

“ஆத்தி என மார்பில் கையை வைத்துக் கொண்டவள் நல்லவேளை நான் ஷர்ட்ல மட்டும் காஃபியை துப்பி இருந்தால் என்ன பண்ணி இருப்பாரோ? என்னால யோசிக்கவே முடியல” எனச் சொல்ல

 

அவள் சொன்ன தோரணையில் சிரித்த ஆழினியோ, “நான் ‘swimming pool’ ல விழுந்தேனே! ஒருவேளை எனக்கு ஸ்விமிங் தெரியலனா? என விரக்தியாக இதழ் வளைத்து புன்னகைத்தாள்.

 

“ஓ மை கோட் என வாய் விட்டு சொன்ன தேஜா நீ சொல்றது உண்மை தான்  இனிமேல் ரொம்பவே கவனமா இருந்துக்கோ” என்றாள்.

 

“ஓகே தேஜா” என்ற ஆழினி யாருமறியாமல் சுற்றும் முற்றும் பார்த்தவாறே அறைக்குள் நுழைந்துக் கொள்ள அதனைத் தொடர்ந்து தேஜாவும் அவளுடன் அறைக்குள் நுழைந்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 12”

Comments are closed.

error: Content is protected !!