தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 15

5
(20)

பேராசை – 15

காரை மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டு இருந்த வருணோ, “நான் மட்டும் சரியான நேரத்துக்கு உன் வீட்டுக்கு வரலனா! நீ தொக்கா மாட்டி இருப்ப ஆழினி”

 

“ஹும்… ஓவர் ஆஹ் பண்ணாத பட் இருந்தாலும் நீ சொல்றதும் சரிதான் சிங்கராஜா ஃபாரஸ்ட்ன்னு தெரிஞ்சி இருந்தால் என் சோலி முடிஞ்சி இருக்கும் வருண் அது மட்டும் இல்ல நம்ம வீட்டு காஷ்மோராவுக்கு சிங்கராஜா ஃபாரஸ்ட் மேட்டர் தெரியாமல் பாதுகாக்குறது தான் எனக்கு பெரிய டாஸ்க்” என்றாள் ஒரு பெருமூச்சுடன்…

 

சத்தமாக சிரித்த வருணும். “போயும் போயும் உனக்கு பொய் சொல்ல வேற ஃபாரஸ்ட் கிடைக்கலையா டி? இராவணா எல்லய சொல்லி இருக்க” என்க….

 

“என் வாய்ல வந்ததை சொல்லிட்டேன் வருண் அது மட்டுமா நான் தான் இராவணன் பேன் ஆச்சே அதான் ஒரு ‘ப்லோ flow’ ராவணா எல்லனு சொல்லிட்டேன்”

 

மெலிதாக சிரித்தவன் சற்று குரலை செருமிக் கொண்டே “அப்புறம் தேஜ் எக்ஸாம் எல்லாம் எப்படி போகுது?”

 

பக்கவாட்டாகத் திரும்பி வருணை மேலிருந்து கீழ் நக்கல் பார்வை பார்த்த ஆழினியோ, “ அதை ஏன் சார் என்கிட்ட கேக்குறீங்க? நேரா உங்க தேஜ்கிட்டயே கேட்கலாமே!” என்க…

 

“அது முடிஞ்சால் ஏன் நான் உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கப் போறேன்?”

 

“சரி சரி ரொம்ப கெஞ்சாத சொல்றேன்”

 

“அடிங்… இப்போ நான் டிரைவ் பண்ணிட்டு இருக்கேன் இல்ல…!” என்றவன் ஆழினியை முறைக்க….

 

“என்னடா முறைச்சிட்டு இருக்க அப்போ நான் சொல்ல மாட்டேனே போ” என அவள் வெளியில் பார்க்க தொடங்கி விட்டாள்.

 

“ஓ மை கோட் மனுஷன் ஃபீலிங்ஸ் தெரியாமல் விளையாடாத டி அன்னைக்கு பங்ஷன் முடிஞ்சி வீட்டுக்கு போனதுல இருந்து  என் மைண்ட் ஃபுல்லா தேஜ் யோசனை தான் டி என்றான்” ஒரு வித பரிதவிப்புடன்….

 

“ஓஹோ…. பிரண்ட் அஹ் அறைஞ்சிட்டோமேனு ஒரு கில்டி இல்லாமல் உங்களுக்கு தேஜ் நினைவு அதுவும் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் போல” என ஆழினி ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

 

“உன்னை அறைஞ்சது நல்லதுக்கு தான் தனியா போக கூடாதுனு…. போடி நீ எனக்கு ஒன்னும் சொல்ல தேவையே இல்லை” என்றவன் ஒற்றைக் கையால் தலையைக் கோதிக் கொண்டவன் ஒரு அழுத்தத்துடனேயே ஸ்டியரிங்கை பிடித்து இருந்தான்.

 

“சும்மா காமெடி பண்ணினேன் பிழைச்சு போ” என்றவள் நேற்று தேஜா அவள் வீட்டிற்கு வந்தது தொடக்கம் அனைத்தையும் அவனுக்கு கூறி இருந்தாள்.

 

“அப்போ என் ஆளுக்கும் உன்னை ஃபாரஸ்ட் அனுப்ப விருப்பம் இல்லை போல ல” என்றான் சிரித்துக் கொண்டே….

 

“ஆமா… எல்லாம் ஒரே குட்டையில் ஊறுன மட்டைகள் தானே அப்படி தானே இருப்பீங்க! என்றவள் மார்னிங் ஏர்லி ஆஹ் எழும்பினது இப்போ தூக்கம் வருது வருண் சோ நான் கொஞ்சம் தூங்குறேன் சிட்டி அஹ் தாண்டினதும் என்னை எழுப்பி விடு நான் டிரைவ் பண்றேன்” என்றவள் கண்களை அசதியில் மூடிக் கொண்டாள்.

 

 

அடுத்த நிமிடமே வருணின் “ஓ மை கோட்” என்றவன் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான்.

 

நல்லவேளை ஆழினி ஷீட் பெல்ட் அணிந்து இருந்தால்….

 

திடுக்கிட்டு விழித்தவள் “என்னாச்சு?” என பதறிய படி அவள் வினவ.

அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு தான் பீபி எகிறியது.

 

ஆம், ஆழினியைக் காப்பாற்ற தான் அவனின் தந்தை ஜெயகுமார் வீட்டுக்கு வருகின்றார் என பொய் சொல்லி இருந்தான்.

 

“எனக்குனு எங்க இருந்து வர்றீங்கடா என வாய்விட்டு புலம்பியவள் டைம் அஹ் வேஸ்ட் பண்ணாமல் அங்கிள்க்கு கால் பண்ணி எங்க வீட்டுக்கு போக சொல்லி என்னத்தை சரி கதைச்சு சமாளிக்க சொல்லு வருண்”

 

“கூல் நாம வீட்டுல இருந்து கிளம்பி ஜஸ்ட் ஒன் ஹவர் ஆச்சு…. டோண்ட் வோரி அப்பாவுக்கு கால் பண்றேன்” என்றவன் ஜெயகுமாருக்கு அழைத்தான்.

 

தேநீரை அருந்திக் கொண்டு இருந்தவர் வருணின் அழைப்பு வரவும் “ ஆழினி வீட்ல இருந்து கிளம்பிடியா? வருண் என அவன் பேசுவதற்குள் அவர் பேசி விட….

 

“எஸ் டேட்” என்றவன் நடந்த விடயத்தைக் கூற…

 

“இட்ஸ் ஓகே டா நான் பார்த்துக்கிறேன் எஞ்சாய் த டிரிப்” என்றவர் ஆழினியிடம் அலைபேசியை கொடுக்கச் சொல்ல….

 

நகத்தைப் பதற்றத்தில் கடித்துக் கொண்டு இருந்தவளிடம் அலைபேசியை நீட்டி “அப்பா உன்கிட்ட பேசணுமாம்” என கொடுக்க…

“ஹலோ அங்கிள் என்றாள் அவளின் குரலில் இருந்த பதற்றத்தைக் கண்டு கொண்டவர் டோண்ட் வோரி ஆழினி நான் உன் வீட்டுக்கு போய் நார்மல் ஆஹ் பேசுறேன்” என்க.

 

“சாரி அங்கிள் என்னால உங்களுக்கு தான் கஷ்டம்” என்றவளை “ அப்படி சொல்லாத மா எனக்கு நீயும் மகள் போல தான்… உன் ஹார்ட் வொர்க் கண்டிப்பா சக்சஸ் ஆகும் ஆழினிமா ஆல் த பெஸ்ட் அண்ட் இனிமேல் இப்படி பேசக் கூடாது என்றார்” அவளை செல்லமாகக் கடிந்து….

 

“தேங்க்ஸ் அங்கிள் என்றவள் நிச்சயமா சக்சஸ் ஆகும் என்றாள்” ஒரு வித தீவிரத்துடன்…

 

அதன் பின் வருணுடன் கதைத்து விட்டு “வருண், ஆழினி உன் பொறுப்பு சோ கவனமா அவளை பார்த்துக்கோ” என்றவர் ஆயிரம் பத்திரங்கள் கூறி விட்டு தான் அழைப்பைத் துண்டித்தார்.

 

இருவரும் ஒரு பெரு மூச்சுடன் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

 

தனது மீட்டிங்கை முடித்து விட்டு இருக்கையில் இருந்து எழுந்த காஷ்யபன் தனது ஒற்றைக் கையால் கழுத்தை பிடித்து இரு பக்கமும் நெட்டி முறித்தான்.

 

அதன் பின் அவனும் தனது கம்பெனிக்கு போக விரைவாக ஆயத்தமானவன் சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு அவன் ஹாலுக்கு வர… அங்கு ஜெயகுமாரிடம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பிரகலாதன் மற்றும் ஜீவாவைப் ஒரு புருவ முடிச்சுடன் பார்த்துக் கொண்டே அவர்கள் அருகில் நெருங்கி “குட் மார்னிங் அங்கிள்” என்றான்.

 

“ குட் மார்னிங் ஷேத்ரா, சிட் ஹியர் என அவரின் பக்கத்து இருக்கையை காட்ட….

 

“பிசினெஸ் எப்படி போகுது காஷ்யபன்?” என ஜெயகுமார் கேட்க…

 

 

அவனும் மெலிதாக சிரித்துக் கொண்டே… “இட்ஸ் கோயிங் ஸ்மூத் அங்கிள்” என்றவன் தனது புது ப்ராஜக்ட் பற்றி பேசத் தொடங்கி இருந்தான்.

 

இதனை எல்லாம் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார் பிரகலாதன் .

 

அவரின் மனதிலோ சொல்ல முடியாத வேதனைகள்… தன் மகன் பெரிதாக வீட்டில் யாருடனும் பேசுவது இல்லை… இந்துவுடன் மட்டுமே சிறிது ஒட்டுதலாக இருப்பான்… பாசமாக பேசத் தேவை இல்லை இருந்தாலும் அவனின் பிஸ்னஸ் விடயத்தைக் கூட தன்னிடம் பகிர மாட்டானா? என ஏக்கம் அவருள் விரவிக் கிடந்தது.

 

நண்பனின் ஏக்கம் ஜீவாவுக்கு புரியாதா என்ன? பிரகலாதனின் யோசனையான முகத்தைப் பார்த்துக் கொண்டே அவரின் கையை பற்றிக் கொண்டார்.

 

பிரகலாதனுக்கு யார் சொல்வது? அவரின் ஆழினி மேலான ஈடில்லாத அன்பு தான் அவனை வீட்டினருடன் விலக்கி வைத்து இருக்கிறதென….

 

“ஓகே அங்கிள்” என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து வாங்க சாப்பிடலாம் என அழைக்க…

 

பிரகலாதனுக்கு மனதில் முனுக்கென்ற ஓர் வழி ஊடுருவியது.

இவ்வளவு நாள் தன்னை “சாப்பிட்டீங்காளா அப்பா?” என ஒரு வார்த்தை கேட்டு இருப்பானா?

 

தன்னை தானே சுதாரித்து கொண்டவர் “எஸ் ஜெயக்குமார் வாங்க சாப்பிடுங்க” என வற்புறுத்த….

 

“ஓகே” என்றவர் அனைவருடனும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொள்ள…. இந்து மற்றும் லதா அவர்களுக்கு பரிமாறினார்.

 

சாப்பிட்டு கொண்டு இருந்த பிரகலாதனும் “அப்புறம் வருணுக்கும் வயசாகுது பொண்ணு பார்க்கலையா?” ஜெயகுமார் என அவர் பேச்சைத் தொடங்க….

 

“அவன் அதுக்கு பிடி குடுக்குறானே இல்லையே அவனும் பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடிட்டு இருக்கான் இன்னைக்கு தான் ஏதோ ஆழினி கூட கிளம்பி இருக்கான் ” என்க

 

அவசரமாக சாப்பிட்டு விட்டு கம்பெனிக்கு செல்ல இருக்கையை விட்டு எழத் தயாரானவன் “வருண் ஆழினியுடன் கிளம்பி விட்டான்” என்றதிலேயே ஆணி அடித்தது போல இருக்கையில் இருந்து எழாமல் அமர்ந்து இருந்தான்.

 

பசி இல்லை என்றாலும் வேண்டுமென்றே “அவள் எங்கு போயிருக்கின்றாள் என தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்னொரு தோசையை எடுத்து மெதுவாக சாப்பிட ஆரம்பித்தான்.

 

அவனின் நடவடிக்கையை யாருமே பேசிக் கொண்டு இருந்ததில் கவனிக்கவில்லை.

 

அவர்கள் வேறு பேச்சுக்கு தாவி இருக்க இங்கு நிலைக் கொள்ளவே முடியாது அவனே “வருண் எங்க போயிருக்கான் அங்கள் என்கிட்ட சொல்லவே இல்லையே” என அவன் மெலிதாக சிரித்துக் கொண்டே கேட்க…

 

அவனைப் பற்றி அறியாத ஜெயகுமார், “இராவணா எல்ல ஃபாரஸ்ட் டிரிப்” என்க…

 

அதைக் கேட்டவன் தானாகவே அடுத்த கேள்வியை தொடுத்து இருந்தான் “ யார் எல்லாம் போயிருக்காங்க? எத்தனை நாள் ஸ்டே அங்கள்?”

 

“டூ டேய்ஸ் என்றவர் அவங்க ரெண்டு பேர் மட்டும் தான்” என்றார்.

 

உள்ளுக்குள் ஏதோ அவனை உழுக்குவது போலிருக்க, அவனின் இடக் கை ஐவிரலையும் கோபத்தில் தானாக மடக்கி இருந்தான்.

 

அவனை “ஷேத்ரா” என இரு தடவைகள் ஜெயகுமார் அழைக்க, அதில் உணர்வுக்கு வந்தவன் “சாரி அங்கள் நீங்க சாப்பிடுங்க எனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகிறிச்சு” என எழுந்துக் கொண்டான்.

 

இந்து மற்றும் லதாவுக்கு அவனின் ஆழினியை பற்றிய கேள்வி? எல்லாம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

 

அவன் வருணை வைத்து வினவி இருந்தாலும் அவனின் மறைமுகமான அவனின் ஆழினி எங்கே? என தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த கேள்வி பிரகலாதன் மற்றும் ஜீவாவுக்கு விளங்கவில்லை என்றாலும் லதா மற்றும் இந்துவுக்கு விளங்கி இருந்தது.

 

கைகளை கழுவிக் கொண்டு வந்தவன் காதில் விழுந்த அடுத்த செய்தி அவனின் இரத்த அழுத்தத்தை இன்னுமே சூடேற வைத்தது.

 

 

ஆம், பிரகலாதன் வருணுக்கும் ஆழினிக்கும் திருமணப் பேச்சு நடந்து கொண்டு இருந்து.

 

ஜெயகுமாரோ, ஆழினியை மகள் போல நினைத்து இருக்க, இப்போது அவர்கள் அப்படி கேட்கவும் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

 

அவரும் யோசிக்காமல் “பரிபூரண சம்மதம்” என்று வாக்கும் கொடுத்து இருந்தார்.

 

இங்கோ, இரு வீட்டாரும் ஆழினி மற்றும் வருணின் தனிப்பட்ட விருப்பை கேட்டு முடிவெடுக்க தவறி இருந்தனர்.

 

கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்ப அடக்கப்பட்ட சினத்துடன் விறு விறு வென வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான் காஷ்யபன்.

 

காஷ்யபனுக்கோ, என்னவென்றே தெரியாத கோபம் அது எப்படி இருவரும் நண்பர்கள் தானே இரு நண்பர்களை திருமணம் செய்ய கேட்பது? என்று தான்.

 

இங்கு அவன் இருவரையும் பற்றி அவனே இணைத்து வைத்து வருணிடம் கதைத்ததை இலகுவாக மறந்து இருந்தான்.

 

ஒரு வித சீற்றத்துடனேயே கம்பனிக்குள் நுழைந்தவன் எதிரில் யார் வந்து இருந்தாலும் கடித்தே குதறி இருப்பான் அவனுக்கே ஏன் இவ்வளவு கோபம் என்றே தெரியவில்லை.

 

தனது பிரத்தியேக கேபினிற்குள் புயலைப் போல வந்தவன் கழுத்தில் இருந்த டையைக் கழற்றி வீசி விட்டு தன் ஷர்ட்டின் முதல் இரு பட்டகளை திறந்து விட்ட படி அவனின் சுழல் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டவன் ஆழ்ந்து யோசித்த படி மேசையில் இருக்கும் பேப்பர் வெயிட்டை சுழற்றத் தொடங்கி இருந்தான்.

 

பேப்பர் வெயிட்டை சுழற்றிக் கொண்டே “அவ்ளோ சீக்கிரம் உன்னை என்கிட்ட இருந்து தப்பிக்க விட்டுருவேனா? மிசிஸ் ஆழினி காஷ்யபன் ஷேத்ரா” என வன்மமாகப் புன்னகைத்துக் கொண்டான்.

 

(என்ன? மிஸிஸ் ஆழினி காஷ்யபன் ஷேத்ராவா?)

 

ஆம், அவளை அவனே திருமணம் செய்ய முடிவு எடுத்து இருந்தான்.

 

காதலாக இல்லை.

 

ஒரு வித வன்மம் அவனுள், பிரகலாதனும் அவரது பிசினஸின் ஒரு பங்கை அவளின் பெயரில் எழுதி வைப்பதாகவும் ஜெயகுமாருக்கு சொல்லி இருக்க… அதை கேட்டு மேலும் கொதித்து போனவன் மகன் நான்னிருக்கும் போது அவளுக்கு எப்படி அவரின் பிசினெஸ் ஐக் கொடுக்கலாம்? அதுவும் தனக்கு வேண்டும் விட்டுக் கொடுக்க முடியவே முடியாது என யோசித்தவனுக்கு அவளை அவனே திருமணம் செய்ய முடிவு எடுத்து இருந்தான்.

 

ஒரு புறம் அவளின் மீதான அவனின் மோகமும் காரணம்.

 

இன்னொரு புறம் அவனின் தன்மானம் அவன் வீட்டில் வேற்று ஆளாக உணரக்

காரணமே அவள் தானே என்ற கோபம் வேறு….

 

(கண்மண் தெரியாத கோபமும் பழிவெறியும் அவனின் அவனவள் மீதான தீராக் காதலை உணர விடாமல் மறைத்து இருந்தது.)

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!