தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 16

5
(21)

பேராசை – 16

 

ஒரு வழியாக சரியாக காலை 10.30 மணியைப் போல அவ் ஊரில் வசிக்கும் தன் நண்பனிடம் காரை ஒப்படைத்து விட்டு  சிங்கராஜா வனத்தின் நுழைவாயிலை அடைந்து இருந்தனர்.

 

காரில் வந்ததால் மூன்று மணித்தியால பயணம் ஆக இருந்தது.

உலகப் பாரம்பரியம் மிக்க இலங்கையின் தேசிய வனம் ஆகையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  வந்த வண்ணம் இருக்க, நுழைவுக் கட்டணத்தை செலுத்தி விட்டு உள்நுழைவதற்கான நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

வருணுக்கோ இதுவே முதல் வனப் பயணம் அதுவே தேசிய வனமாகப் போக  சிலிர்ப்பாக உணர்ந்தான்.

 

ஆழினிக்குமே பல வனப் பயணங்கள் போய் இருந்தாலும் இன்று தான் முதன் முதலாக சிங்கராஜா வனத்திற்கு வருகின்றாள்.

 

அவளுக்கோ எப்போதுடா அவர்களைப் பார்த்து தாவரத்தை வாங்குவோம் என்ற எண்ணமே குடி கொண்டு இருக்க….

 

இங்கோ வருண் அவளின் எண்ணத்தின் திசை அறியாது சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வந்தான்.

 

ஒரு இஞ்ச் கூட ஆகாயம் தெரியவில்லை…. அந்த அளவுக்கு மரங்கள் அடர்த்தியாக ஒரு கூரை போல ஒன்றோடொன்று  பரவி இருந்தன.

 

இரு பக்கமும் புதர்கள் சூழ்ந்த காடாக இருக்க, அதற்கு இடையிலேயே நடைப் பாதை அமைக்கப்பட்டு இருந்தது.

 

இரு பக்கமும் ஒவ்வொரு தாவரங்கள் மற்றும் மரங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

 

பிரமிப்பாக பார்வையிட்டுக் கொண்டு வந்தவன் அப்போது தான் ஆழினியின்  அமைதியை உணர்ந்தான்.

 

முன்னோக்கி நடந்தவன் சட்டென நின்று ஆழினி வருவதைப் பார்க்க அவளோ, ஏதோ யோசனையில் அவனையும் தாண்டி நடந்து சென்றாள்.

 

“ஓ மை கோட் ஹேய் ஆழினி அப்போ நான் போறேன் நீயே மேனேஜ் பண்ணிக்கோ” என அவன் பின்னால் திரும்பி போக….

 

முன்னாள் சென்றுக் கொண்டு இருந்தவள் சட்டென நடப்புக்கு வந்து “ஐயோ! இவனை மறந்துட்டோமே என நாவை லேசாகக் கடித்தவள்  வருண் நில்லுடா” என்றவள் அவன் பின்னே ஓடியவள் மூச்சு வாங்க அவன் முன் சென்று நின்றாள்.

 

“சாரி டா அவங்களை மீட் பண்ண ரொம்ப தூரம் போகணும் வேற எப்படி சரி அந்த பிளான்ட் அஹ் வாங்கிரனும்ன்னு தான் செம்ம யோசனையில வந்துட்டு இருந்தேன்” என்றாள்.

 

“வாட்? கம் அகைன்”

 

“அந்த பிளான்ட்” என அவள் சொல்ல வர அது இல்ல என பற்களைக் கடித்த வருண் “அதுக்கு முன்னாடி ஏதோ ரொம்ப தூரம்னு சொன்னியே அது என்ன? எனக்கு புரியல” என்றான் அவளை முறைத்துக் கொண்டே….

 

ஹி ஹி என சிரித்தவள் “வா நடந்துட்டே பேசலாம்” என்றாள்.

 

“பரவால்ல இப்போவே சொல்லு” என அவன் பிடித்த பிடியில் நிற்க…

 

அவள் கையில் வைத்து இருந்த அந்த வனத்தின் மேப்பை எடுத்துக் காட்டியவள் “நாம இப்போ இங்க என்டரன்ஸ் அஹ் விட்டு கொஞ்சம் தள்ளி நிக்கிறோம் வருண்…. அவங்க இப்போ இந்த இடத்துல ஸ்டே பண்றாங்க” என அவள் காட்டிய இடத்தைப் பார்த்து அவனுக்கு மயக்கம் வராத குறை தான்.

 

ஆம், அவள் காட்டிய இடம் இவர்கள் இருந்த இடத்தை விட 45 km தொலைவில் இருந்தது.

 

அங்கு செல்ல வேண்டுமென்றால் ஓர் ஆற்றைக் கடந்த பின் சிறிய மலைக் குன்று ஒன்றையும் ஏறி கடந்து செல்ல  வேண்டும்.

 

அவ்வளவு தூரம் நடப்பது இயலாத காரியமே…

 

இயலாமையும் கோபமும் ஒருங்கே தோன்ற “என்னடி சொல்லி கூட்டிட்டு வந்த கைட் ஆஹ் போறேன் அது இதுன்னு சொல்லிட்டு இப்போ நீ எனக்கு கைட் வேலை பார்க்குற? என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அப்போ நீ பார்க்க வந்த அந்த பாரினேர்ஸ் இந்த கூட்டத்துல இல்லையா?” என அங்கு இருந்த சில சுற்றுலா பயணிகளை சுட்டிக் காட்டி அவன் கேட்க…

 

உதட்டை பிதுங்கி இல்லை என இரு புறமும் தலையை ஆட்டினாள்.

 

“அப்போ உனக்கு மெசேஜ்ல அவங்க சொல்லி தான் இருக்காங்க ரைட்? ஏன் எனக்கு சொல்லல ஆழினி?”

 

“நான் உனக்கு சொல்லவே இல்லையே வருண் உள்ள நுழைந்ததும் அவங்களை பார்த்து வாங்கிட்டு வந்துருவோம்னு! அவங்க இருக்க இடத்தைப் பற்றி எனக்கு நல்லா தெரியும் அதான் நான் கைட் பண்றேன்னு சொன்னேன் ஜஸ்ட் ஃபார் வன் டே அதை தவிர்த்து நானும் இங்க ஒரு டிராவெலர் தான்…இப்போ உனக்கு என்ன பிராப்ளம் வருண்? நீ அவ்ளோ தூரம் வர மாட்டியோன்னு தான் நான் சொல்லல… இட்ஸ் ஓகே ஐ வில் மேனேஜ் நீ போகலாம்” என்றவள் முன்னோக்கி செல்லத் தொடங்கினாள்.

 

“ராட்சசி உனக்கு எல்லாம் அவன் தான் டி சரி”  என காஷ்யபனை முதல் முறை தெய்வமாக கருதினான்.

 

பாதி தூரம் போனவளை தன் வேகமாக பின் தொடர்ந்து வந்தவன் “நீ ரெண்டு நாள்னு சொல்லயிலேயே நான் யோசிச்சி இருக்கணும் டி என பெரு மூச்சை விட்டவன் கேமராவை தா ஓவர் சீன் போடாமல்” என்றவன் அவள் கழுத்தில் இருந்து அவனே எடுத்துக் கொண்டான்.

 

வெளியில் அவள்  முறைத்துக் கொண்டு வந்தாலும் மனதோ “அப்படி வா வழிக்கு” என கவுண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தது.

 

வருடம் முழுவதும் மழை பெய்துக் கொண்டு இருப்பதால் என்னவோ நடை பாதை முழுவதும் ஈரலிப்பாகவே இருக்க  ஆனால் வெப்பநிலை மட்டும் 28°C யில் தான் இருந்தது.

 

“என்ன கருமம் டி இது வெயில் பெருசா இங்க இல்ல பட் அவ்ளோ வியர்க்குது” என்றான்  டி ஷர்ட்டை இழுத்து விட்ட படி…

 

“வருஷம் ஃபுல்லா மழை பெய்யும் வருண் மே பீ நைட் வரலாம் அண்ட் மேல பாரேன் ஸ்கை கூட நமக்கு தெளிவா ஒரு இஞ்ச் கூட தெரியல பிகாஸ் மரங்கள் மறைச்சு இருக்கு அதுனால தான் உள்ள பெருசா வெயில் இல்லை  சூடா இருக்கு”  என விளக்கிக் கூறினாள்.

 

“ஹும்” எனக் கேட்டுக் கொண்டு வந்தவன் அனைத்தையும் கேமராவில் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தான்.

 

மணியும் 11.30 ஐக் கடந்து விட இங்கு வருணுக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது.

 

“ஆழினி”  என கூப்பிட்டான் சற்று மெல்லிய குரலில் ..

 

“சொல்லு வருண்”

 

“பசிக்குது டி”

 

“வாட்? வர்ற வழில  9 மணிக்கு தானே ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டோம் இப்பவும் பசிக்குதா உனக்கு?” என அவள் கேட்க…

 

“காலைல ஜிம் ல எல்லாம் வொர்க் அவுட் பண்ணேன் டி அதான் மார்னிங் கொஞ்சமா சாப்பிட்டேன் அதான் இப்போ பசிக்குது” என்றான் பாவமாக…..

 

“சரி வா என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் போகும் வழியில் சற்று ஓரமாக அடர்ந்த பெரிய மரத்தின்  கீழ்பகுதி குழிவாக இருக்க, அதைக் பார்த்தவளின் கண்கள் மின்ன வா வருண் அங்க போகலாம்”  என்றவள் அவனோடு அந்த மரத்தை நோக்கிச் சென்றாள்.

 

“ஹேய் ஹேய் லூசு சரியா பார்க்காம போய் கீழ இருக்கப் போகாத என்றவன் புதரில் கிடந்த தடி ஒன்றை எடுத்து நன்றாக அந்த இடங்களில் தட்டி பார்த்து விட்டு அங்கு எந்த வித ஆபத்துக்களும் இல்லை என உறுதி செய்து கொண்டவன் இப்போ போய் இரு” என்றவன் அங்கேயே கைகளைக் கழுவி விட்டு சாப்பிட ஆயத்தம் ஆகினர்.

 

அதனைத் தொடர்ந்து சாப்பிட்டு விட்டு எழுந்தவர்களோ  மறுபடியும் தங்களின் பயணத்தை தொடர்ந்தனர்.

 

இங்கோ, தீர்க்கமான முடிவை எடுத்ததால் என்னவோ காஷ்யபனின் மனம் சற்று  ஆசுவாசமாக உணர்ந்தான்.

 

(அவன் முடிவெடுத்து என்ன பயன் நம்ம ஹீரோயின் என்ன முடிவு பண்ணுவாங்கனு பொறுத்து இருந்து பார்ப்போம்.)

 

 

நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க மாலை 5  மணி போல அவன் வீட்டுக்கு வரும் போது ஹாலில் குடும்ப ஜோதிடரை வைத்து எப்போது நிச்சயம் வைத்துக் கொள்ளலாம்? என கலந்து ஆலோசித்துக் கொண்டு இருந்தனர்.

 

உள்ளே வந்தவன் இதை பார்த்ததும் தானாக கோபம் தலைக்கு ஏறியது.

அதனை அறியாத லதாவோ, அவன் கையைப் பற்றிக் கொண்டு சென்று சோஃபாவில் அமர வைத்து அவனையும் அந்த கல்யாணப் பேச்சில் இணைத்துக் கொள்ள….

 

இறுகிய முகத்துடன் அமர்ந்தவனுக்கு, நெருப்பில் நிற்பது போல் ஓர் உணர்வு.

 

 

ஒரு புறம் ஜெயகுமார் வேறு வீடியோ கோலில் நடப்பதை பார்த்துக் கொண்டு இருக்க, அவரைப் பார்த்து கடினப்பட்டு தான் முக பாவத்தை மாற்றிக் கொண்டவன் வலுக்கட்டாயமாக புன்னகைத்த படியே பக்கவாட்டாகத் திரும்பி “அம்மா நான் ஃப்ரெஷ் ஆகணும் டையர்ட் ஆஹ் இருக்கு” என்றவன் எழுந்து விறு விறு வென அவனின் அறைக்குச் சென்று விட்டான்.

 

இந்துவுக்கு அவனின் செயலில் ஒரு மாதிரி ஆகி விட…. லதா தான் அவரை தேற்றி  “அவனை பற்றி தான் தெரியுமே போகப் போக சரி ஆகிரும் இந்து” என்றார்.

 

அவரும் நல்ல நாள் ஒன்றைக் குறித்து  விட்டு 8 ஆம் திகதி நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளாமல் என்று கூறி  இருந்தார்.

 

எல்லோரும் அவ் வீட்டின் இளவரசியின் திருமணம் என்றால் சும்மாவா இருப்பார்கள் நாளும் குறித்து விட அதற்கு இன்னும் 2 வாரங்களே மீதம் இருந்தன.

 

அனைவரும் அடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு இருக்க…

 

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்த காஷ்யபனுக்கு எவ்வாறு இந்த திருமணத்தை நிறுத்துவது என்றே தெரியவில்லை.

 

காலையில் அவன் முடிவு எடுத்த போது இருந்த தெளிவு இப்போது அவனிடம் ஒரு துளியும் இல்லை.

 

“வாட் த ஃப…” என வாய் விட்டு கூறியவனோ தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டான்.

 

கம்பனியில் இருந்து வீட்டுக்கு வந்தால்  சிறிது நேரம் கூட அவன் அதே உடையை மாற்றாமல் இப்படி இருக்கவே  மாட்டான் ஆனால் இன்றோ அனைத்தும் தலைக் கீழாக நடந்துக் கொண்டு அல்லவா இருக்கின்றது.

 

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ, சட்டென மூளையில் மின்னல் வெட்ட மெலிதாக புன்னகைத்த படி எழுந்தவன் இதழ்களோ “ Aazhi be  ready to face my extreme Love on you” என சொல்லிக் கொண்டது.

 

என்ன? ஆழியா?

ஆம், அவனையே அறியாமல் அவனின் ஆழ் மனதில் இருந்து அவளை ஆழி என கூறி இருந்தான்.

 

நம் நாயகி அவன்  நடத்தப் போகும் காதல் நாடகத்தில் வீழ்வாளா?

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!