தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 18

4.7
(27)

பேராசை – 18

“என்மேல  கோபமா ஆழினி? கொஞ்சம் ஓவராவே உன்னைக் கலாய்ச்சுட்டேன்ல சாரி டி” என்றான்.

 

“நான் கோபம் எல்லாம் இல்ல வருண் அந்த யானை கிட்ட மாட்டி இருந்தால் என்ன ஆகி இருக்கும்ன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன் ஒருவேளை நீ மட்டும் இல்லையோ என் சோலி முடிஞ்சி இருக்கும்”

 

“ஓகே லீவ் இட் இப்போ எனக்கு பசிக்குது…  பிஸ்கட் பெக்கெட் வச்சேன் அதை எடுத்திட்டு வந்தியா டி”

 

“ஆமா உயிர் போற அவசரத்துல நான் அதையா எடுத்துட்டு இருப்பேன் ” என்றாள் பற்களை கடித்தபடி….

 

“அது சரி தான் , என்கிட்ட ஒரு பெக்கெட் தான் இருக்கு உனக்கு இல்லை சோ நான் சாப்பிடப் போறேன்” என்றவன் பிஸ்கட் ஐ ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடத் தொடங்கி விட…

 

“எனக்கும் தாயேன்டா”

 

அவனுக்கும் அவளைப் பார்த்து பாவமாக இருக்க அவனது பிஸ்கட் பெக்கட்டை அவளின் இருப்பிடம் நோக்கி வீசினான்.

 

அதுவோ அவள் முகத்தில் வந்து விழ, “ஆஆ வருண்” என்றாள்.

 

“என்னடி? அதான் தந்துட்டேன்ல” என்றான்.

 

“சொல்லிட்டு வீசுறது என்றவள் பாக்கட்டைப் பிரித்து பார்க்க, அதிலோ மீதம் 5 பிஸ்கட்டுகள் மாத்திரம் இருக்க அதிலிருந்து இரண்டை எடுத்துக் கொண்டவள் “வருண் எனக்கு போதும் நீ எடுத்துக்கோ” என அவனிற்கு பிஸ்கட் பெக்கட்டை வீசினாள்.

 

அவள் வெற்றுப் பாக்கெட்டை தான் அனுப்புகிறாள் என அவன் கண்டு கொள்ளாமல் இருக்க, பெக்கட்டோ அவனின் முகத்திலேயே வந்து விழுந்து இருந்தது.

 

“ஆழினி விளையாடாமல் சாப்பிடு” என அவன் மறுபடியும் அதை வீச ஆயத்தமாக “ஐயோ எனக்கு பசிக்கல வருண் நீயே சாப்பிடு என்றவள் தொடர்ந்து நீ கேட்ட தானே நான்  எப்படி ஃபாரஸ்ட் கைட் ஆஹ் நான் எப்படி மேனேஜ் பண்ணேன்னு அதுக்கு இப்போ பதில் சொல்லவா?”

அடக்கப்பட்ட சிரிப்புடன் “உன்னை ரொம்ப பெருசா எல்லாம் கற்பனை பண்ணி வச்சு இருக்கேன் ஆழினி ஏதும் மொக்கையா சொல்லி உன் இமேஜை டேமேஜ் பண்ணிக்காத” என்க…  

 

“நான் இது வரையும் சூஸ் பண்ணி போனது எல்லாம் காட்டுகுள்ள சின்ன ரிசார்ட் இல்லனா உள்ள மக்கள் வாழும் காட்டுக்கு தான் ஃபோரினர்ஸ்க்கு கைட் ஆஹ் போயிருக்கேன் வருண்” என்று விட்டு அவனைப் பார்க்க அவனோ இந்த பதிலை எதிர்ப் பார்க்கவில்லை போலும் அப்படியே வாயில் கையை வைத்து இருந்தான்.

 

“வருண் இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணாத டா எனக்கு கோவம் வரும்” என்க.

 “அடப்பாவி உன்னை போய் பெரிய சாகசப் பெண்மணி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வச்சு இருந்தேனே என்னை சொல்லனும் என்றவன் அப்போ காட்டுக்குள்ள நோகாமல் உலவிட்டு இருந்து இருக்க அதுவும் அந்த  வெள்ளெலிங்களோட” என்றவன் சிரிக்க ஆரம்பித்து விட…..

 

“பிளீஸ் இப்படி எல்லாம் என்னை பங்கம் பண்ணாத வருண் உன்கூட வந்து தான் நான் கட்டுகுள்ள எப்படி சர்வைவல் பண்றதுனு  கத்துகிறேன்” என்க.

 

“அடிங்க… நானே கத்துக்குட்டி டி எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் ஃபாரஸ்ட் டிரிப்”

 

“அப்போ US ல எல்லாம் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து நீ கேம்ப் போகலையா?” என்க.

 

“யாரை பார்த்து என்ன கேள்வி கேக்குற? என்றவன் அம் பிஸ்னஸ் மேன் டி அங்க போய் என் பிஸ்னஸ் வேலையை பார்க்காமல் ஊரெல்லாம் சுத்தி பார்க்கவா டைம் இருக்கு? ஏதோ கிரகம் இப்போ உன்னோட மாட்டிட்டு இருக்கேன்” என்க.

 

 

“சரி உன் புராணத்தை நிறுத்து காது வலிக்குது என்றவள் அதே தான் எனக்கும் ஃபர்ஸ்ட் டைம் இவ்ளோ பெரிய ஃபாரஸ்ட் அதுவும் இந்த ஃபாரஸ்ட் பெயரை மெசேஜ்ல பார்த்து நான் ஜெர்க் ஆகுதே இதுக்கு தான் இப்போ புரியுதா?” என அவள் கண்களை சிமிட்ட….

 

 

“நான் உன்னை அடிக்க முடியாத தூரத்துல இருக்கேன் இல்லனா செத்த டி என்றவன் பாரேன் ஒருநாள் இல்லனா ஒருநாள் நீ ஃபாரஸ்ட் ல மாட்டி அழப் போற அதுவும் சும்மா காடு இல்ல என புருவத்தை ஏற்றி இறக்கி யோசித்தவன் அஹான்  ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு வேற ஒன்னும் இல்ல அமேசான் காட்டுல தான் உனக்கு வாழ்வு” என அவன் சொல்ல…

 

 

(அவன் எந்த நேரத்தில் சொன்னானோ ! அதுவே பிற்காலத்தில் பலிக்கப் போவதை இருவரும் அறியவில்லை.)

 

“ஆமா இவர் பெரிய மகா ரிஷி சொன்னதும் பலிக்கப் போகுது போடா என்றவள் பேசாமல் தூங்கு நான் மார்னிங் எழுப்பி விடுறேன்” என்றவள் படுத்து கண்களை மூடிக் கொண்டாள்.

 

யாருக்கும் காத்திராமல் விடியல் பொழுதும் புளர, வருணை எழுப்புகின்றேன் எனச் சொன்னவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

சரியாக காலை 5 மணி போல எழும்பியவன் சுற்றும் முற்றும் பார்த்தான் எந்த வித விலங்குகளின் நடமாட்டமும் இல்லை என உறுதி செய்துக் கொண்டவன் மெதுவாக கீழ் இறங்கி தன் காலைக் கடன்களை முடித்து விட்டு வந்தவன் “ஐயோ! ஆழினி என்னைக் காப்பாத்து டி” என  கத்தினான்.

 

அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தவள் “வருண்…. வருண்  என பதறிக் கொண்டு அழைத்தவள் கீழே பார்க்க, அவனை எங்கும் காணவில்லை.

 

அதிர்ந்தவளின் இதயத்தின் ஓசை பன் மடங்காகியது.

 

தானாக கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுக்க “ நீ இல்லாமல் நான் இங்க இருந்து போக மாட்டேன் வருண்” என்றவள் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெதுவாக மூங்கிலின் இடைவெளிகளில் காலை வைத்து இறங்கி கீழே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்… விடிந்தும் விடியாத அந்த பொழுதும் கூட சற்று இருளாக தான் இருந்தது… அவனைத் தேடியே ஆக வேண்டும் என்ற நோக்கில் கீழே இறங்கியவளுக்கு அடுத்து அவனை இந்த இருளில் எங்கே தேடுவது? அவனுக்கு ஏதும் என்ன ஆகி இருக்குமோ? என நினைத்தவளுக்கு தானாக பயம் பிடித்துக் கொண்டது.

 

ஐந்து வேவ்வேறு பாதைகள்  ஒரு புறம் என்றால், ஆற்றின் இரு மருங்கிலும் காடுகள் மண்டிக் கிடக்க எங்கே செல்வது என புரியாமல் கண்ணீர் வழிய தலையைப் பிடித்துக் கொண்டு கீழே தொப் என முழங்காலிட்டு அமர்ந்தவள் தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று “வருண்” என்று பெருங் குரலெடுத்து கத்தி இருந்தாள்.

 

அவளின் குரலே அவளுக்கு எதிர் ஒலித்ததே தவிர வருணின் பதிலைக் காணவில்லை.

வருண் அங்கு இருப்பதாக அவளுக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் போக, “வருண்…. என்றவாறு குறல் தளுதளுக்க அழத் தொடங்கியவளின் முன் ஒருவர் வந்து நிற்க….

 

அந்த பாதணிகளை வைத்தே அது வருண் என்று உணர்ந்து கொண்டவள் மின்னல் வேகத்தில் எழுந்து அவனை அணைத்து இருந்தாள்.

அவனது முகத்தை ஆராய்ந்தவள் அவனுக்கு ஏதும் ஆகவில்லை என்று உறுதி செய்து கொண்டவள் “என்னை எழுப்பி இருக்கலாம் தானே என்னாச்சி? எங்க போன வருண்?” என அவனைப் பேசவே விடாமல் சரமாரியாக கேள்விகளை அவள் அடக்கிக் கொண்டுப் போக….

“பிளீஸ் ஸ்டாப் ஆழினி” எனக் கத்தி இருந்தான் வருண்.

அவளோ , புரியாமல் விழிக்க….

அவளைப் பார்த்து, “இப்போ ஏன் டென்ஷன் ஆகுற? பீ ரிலக்ஸ் என்றவன் குரலை சற்று செருமிக் கொண்டே நான் எங்கேயும் போகல” என்றவனை ஏறிட்டுக் கேள்வியாக அவள் நோக்க,

“உன்னை எழுப்பி விட வேற வழி இல்லாமல் தான் இவ்ளோ நேரம் அந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி இருந்தேன் ஜஸ்ட் விளையாட்டுக்கு தான் பண்ணேன் பட் இப்படி எனக்காக அழுவனு நான் கொஞ்சமும் எதிர்ப் பார்க்கவே இல்லடி அண்ட் வன்மோர்திங் நீ ரொம்பவே அழுதியா அதான் என்னால அங்கேயே நிற்க முடியல வந்துட்டேன்”

அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள் “சோ நடிச்சு இருக்க ரைட்?”  எனக் கேட்க…

“ஜஸ்ட் ஃபன் மா” என்றான்.

“ஓஹோ பன் ஆஹ்?” என ஏளனமாக சிரித்தவள் தனது உடைகளை எடுத்துக் கொண்டு முன் நோக்கி செல்லத் தொடங்கினாள்.

“ஓ மை கோட் எங்கடி போற இரு நானும் வரேன்” என்றவனின் வார்த்தைக் காற்றில் தான் கரைந்தது.

அவசரமாக தன் உடைப் பையை எடுத்தவன் அவள் பின்னே ஓடத் தொடங்கினான்.

அவளிடம் அப்படி ஒரு வேகம்.

அவன் உயிரை வைத்து தன்னுடன் விளையாடி இருக்கும் ஆத்திரம் அவளுக்கு….

அவன் பின்னாலேயே வருகின்றான் எனத் தெரிந்தும் அவனை பார்க்கக் கூட அவளுக்கு பிடிக்க வில்லை அவ்வளவு ஆத்திரம்.

“இப்போ நீ கத்துன கத்தல்லயே பாதி அணிமல்ஸ் கிளம்பி இருக்கும் வேற! இந்த வேகத்துல போற? பார்த்துப் போடி! என்றபடியே வேக எட்டுக்களுடன் அவளோடு சேர்ந்து நடந்தான்.

அது எதனையும் பொருட் படுத்தாமல் அவள் நடந்து செல்ல…. “சாரி மா நான் பண்ணது தப்பு தான் ஓகேவா” என்க….

அதற்கும் அவளிடம் மௌனம் மட்டுமே….

“போடி போ எவ்ளோ தூரம் பேசாமல் போவ உன் பிஸ்கட் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு” என்றவன் முன் சென்றவள் தன் நடையை நிறுத்து அவனை பார்த்து  முறைத்து விட்டு மறுபடி நடக்கத் தொடங்கினாள்.

இங்கு எதிரும் புதிருமாக அடித்துக் கொண்டு செல்ல…

காஷ்யபனோ ஜிம்மில் பயிற்சி செய்துக் கொண்டு இருந்தான்.

 

அவனுள்ளே பல திட்டங்கள்.

 

அதை செயல்படுத்த முதலில் அவள் வர வேண்டுமே! என்ற எண்ணம் தான்.

 

அவனுக்கு நன்றாகத் தெரியும் வருணுடனான திருமண ஏற்பாடு அவளுக்குத் தெரிந்தால் சர்வ நிச்சயமாக நிறுத்தி விடுவாள் என, இப்போது அவனின் எண்ணம் ஒன்று தான்.

 

அவளை எப்படி காதலிப்பது?

அதைவிட அவனின் முதல் சந்தேகம் என்னவென்றால், தன்னை அவள் நம்புவாளா? என்பது தான் அவனின் முதல் கேள்வியாக இருந்தது.

 

 டிரேட் மில்லில் இருந்து இறங்கியவன் தன் முன் இருந்த தண்ணீர் பாட்டிலை வெறித்துக் கொண்டே “ ஐ வில் நெவர் லாஸ் இன் த கேம் ஆழி பேபி எனச் சொல்லிக் கொண்டவன் அவ்ளோ சீக்கிரம் என் அப்பா பிஸ்னெஸ உனக்கு கொடுக்க விட்டுருவேனா? நெவர்… இட்ஸ் ஒன்லி மைன்” என வன்மமாகப் புன்னகைத்துக் கொண்டவன் அறியவில்லை  அவன் வாழ்க்கைப் பாடத்தில் முற்றிலுமாக தோற்றுவிடப் போகின்றான் என்பதை….

 

(“கர்மா இஸ் அ பூமராங்” எனச் சும்மாவா சொன்னார்கள் அது அவனின் வாழ்க்கையிலும் நடக்கும் பார்க்கத் தானே போகிறோம் டியர்ஸ்)

 

இருவரும் வேகமாக அதி காலையிலேயே கிளம்பியதால் என்னவோ, அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்தையும் அடைந்து இருந்தனர்.

 

கிட்டத்தட்ட ஒரு  மலையையே கடந்து  2 மணித்தியாலங்களில் வந்து இருக்க, அந்த இடம் காடும் அல்லாது வெட்டவெளியாக இருந்தது.

 

அங்கு ஒரு குடில் போல அமைத்து இருக்க, அதில் தான் அந்த வெளிநாட்டு பிரஜைகள் தங்கி இருக்கக் கூடும் என ஊகித்த ஆழினியோ, வருணையும் கண்டுக் கொள்ளாமல் விறுவிறுவென குடிலை நோக்கி  சென்றாள்.

 

“ரைட்டு இனி நம்மல கண்டுக்க மாட்டா” என நினைத்தவன் ஒரு பெரு மூச்சுடன் அவளைத் தொடர்ந்தான்.

 

அவன் குடில் உள்ளே நுழைந்த அக் கணம் அங்கு இருப்பவர்களைப் பார்த்து ஆச்சரியத்தில் அவன் ஒற்றை புருவம் உயர்ந்தது.

 

ஆம், அங்கு இருந்தவர்கள் இரு வயோதிப தம்பதிகள்.

 

அவன் நினைத்தது ஏதோ நடுத்தர வயதை உடையவர்களைத் தான் சந்திக்கப் போகின்றோம் என ஆனால் அங்கு அவன் இந்த வயோதிப தம்பதிகளை எதிர்ப் பார்க்கவே இல்லை இவ்வளவு தூரம் இந்த காட்டைக் கடந்து எப்படி சமாளித்து வந்தார்கள் அதுவும் ஒரு நாளில் அவனுக்கே முடியாமல் இருக்க இவர்கள் இத்தனை நாட்களாக இருக்கின்றார்களே! என்ற ஆச்சரியம் தான் அவனுக்கு….

 

ஆழினியுடன் கதைத்ததில்  அவளின் நண்பன் என்று தெரிந்துக் கொண்டவர்கள் “வெல்கம் வருண் நைஸ் டு மீட்  யூ” என்று அந்த பெரியவர் எழும்பி அவனுக்கு கையை நீட்ட, அவனும் மெல்லிய புன்னகையுடன் “நைஸ் டு மீட் யூ டூ மிஸ்டர்…?” என அவன் கேள்வியாக நிறுத்த “ஜேம்ஸ்” என்றிருந்தார் அந்த பெரியவர்.

 

“அனிவேஸ் நைஸ் டு மீட் யூ ஜேம்ஸ்” என அவருடன் கையை குலுக்கிக் கொண்டான்.

 

“திஸ்  இஸ் மை ஒய்ஃப் கிளாரா” என்ற ஜேம்ஸ் வருணுக்கு தன் மனைவியை அறிமுகப் படுத்தி வைத்தார்.

 

அப்படியே நால்வரும் பேசிக் கொண்டு போக காலை 9 மணியைக் கடந்து இருந்தது.

 

இருவருக்கும் அவர்களே காலை உணவைத் தயார் செய்து கொடுக்க, அங்கேயே உண்டு விட்டு அந்த இடத்தைப் பற்றி தனக்கு தெரிந்த அனைத்தும் ஆழினி அவர்களுக்கு சுற்றிவர கூட்டிச் சென்று விளக்கப் படுத்திக் கொண்டு இருந்தாள்.

 

என்னதான் வருண் அவளை கிண்டல் செய்தாலும் அவளின் அவர்களுடனான ஆளுமையான தொடர்பாடலில்  மெச்சுதலாக அவனின் புருவம் தானாக உயர்ந்தது.

 

வெட்டவெளி என்பதால் வெயில் சற்று அதிகமாகவே இருக்க, “ஆழினி நான் அந்த மரத்துக்கு கீழ வெயிட் பண்றேன் உன் வொர்க் அஹ் முடிச்சிட்டு வா” என்றவன் அந்த மரத்தை நோக்கி நடந்தான்.

 

மரத்தின் அருகே வந்து கீழே அமர்ந்தவன், போனை எடுத்து பார்த்தான் “ஷீட் கவரேஜே இல்லையே” என சொல்லிக் கொண்டவனுக்கு போர் அடிக்கத் தொடங்க,  மரத்தில் சாய்த்து அமர்ந்தவனுக்கு அப்போது தான் கேமராவை தன்னுடன் கொண்டு வந்தது நினைவுக்கு வர நேற்று எடுத்த அனைத்து புகைப் படங்களையும் பார்வையிட தொடங்கி இருந்தான்.

 

அவனின் கண்களோ இறுதியாக கண்ட புகைப் படத்தில் குத்திட்டு நிற்க, அவனின் இதழ்களோ தானாக “தேஜ்” என்றது.

 

ஆம், நேற்று முன் தினம் அவள் ஆழினியின் வீட்டுக்கு வந்த போது கேமராவில் புகைப்படம் எடுக்க தெரியாமல் திணறியவள்  கேமராவை லேசாக தலையில் தட்டிக் கொண்ட போது அவளை அறியாமலேயே கேமரா அவளின் நெற்றியைப் புகைப்படம் எடுத்து இருந்தது.

 

அவளை அணுஅணுவாக ரசித்தவனுக்கு அவளின் நெற்றியில் உள்ள சிறிய மச்சமே அவளைக் காட்டிக் கொடுத்து இருந்தது.

 

அப் புகைப் படத்தை தனது அலைபேசிக்கு அனுப்பிக் கொண்டவன் அப் புகைப்படத்தைப் பார்த்தவாறே தூங்கிப் போனான்.

மதியம் 12.30 போல அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வருணைத் தேடினாள்… அப்போது தான் அவன்  காலையில் அவளிடம் சொல்லி விட்டு சென்றது நினைவுக்கு வர, அவனைத் தேடி அந்த மரத்தின் அருகில் வந்தாள்.

அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, “காலைல இவன் என்னை பதற வச்சதக்கு ஓங்கி ஒன்னு தலையில் கொட்டினால் என்ன? என்று ஒரு கணம் யோசித்தவள் ச்சீ பாவம் பிழைச்சு போகட்டும் என மனதில் நினைத்தவள் வருண் என்று அவனை தட்டி எழுப்பி விட்டவள் இங்கேயே செட்டில் ஆகப் போறியா? இப்படி தூங்கிட்டு இருக்க? இப்போ கிளம்பினால் தான் சார் மீட் நைட்ல சரி நாம வீட்டுக்கு போய் சேரலாம்” என்க…

சோம்பல் முறித்து எழுந்தவன் “உனக்கு டையர்ட் இல்லையா கொஞ்சம் ரெஸ்ட் எடு மெதுவா போகலாம்” எங்க…

“எதே மெதுவா போவோமா? அதெல்லாம் சரி பட்டு வராது எனக்கு டயர்ட் எல்லாம் இல்லை நீ நடையைக் கட்டு” என அவனை கையோடு அழைத்துக் கொண்டு குடிலுக்கு வந்து இருந்தாள்.

அங்கு, இருந்த ஜேம்ஸ் மற்றும் அவர் மனைவி கிளாராவிடம் கூறிக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள்.

அறைக்குள் சென்ற ஜேம்ஸ் “ஆழினி திஸ் இஸ் யூவர் ட்ரீம் பிளான்ட்” என்றவர் அவள் கையில் கார்டன்சில்லோ தாவரத்தின் சிறு தண்டினை கொடுத்து இருக்க, அதைக் கைகள் நடுங்க வாங்கிக் கொண்டவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

இதற்காகத் தானே அவ்வளவு போராட்டங்களும்….

“தேங்க்ஸ் அ லாட் ஜேம்ஸ்” என ஜேம்ஸ் ஐ அணைத்து விடுவித்தவள் அவரது மனைவியிடமும் கூறி விட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

“ப்பாஹ் சந்தோசக் கலை தாண்டவம் ஆகுதே! இனிமேல் இதை வச்சு என்னடி பண்ண போற?” என அவன் கேட்க…

“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல மாட்டேன் வெயிட் அண்ட் வாட்ச் பட் இதை நான் வளர்க்கப் போறேன் டா பட் வளருமா? இல்லையா? அதான் இப்போ பக்கு பக்குன்னு இருக்கு நான் செய்யப்போற அந்த புராஜக்ட்க்கு நிறையவே தேவைப்படும்” என்றாள்.

“அதெல்லாம் வளரும் டோண்ட் வொர்ரி” என்றான் வருண்.

“இது அமேசான் ஃபாரஸ்ட் ல மட்டும் தான் இருக்கு இங்க வளருமா இல்லையான்னு என் மேக்ஸிமம் எஃபெக்ட் அஹ் போட்டு டிரை பண்ணி பார்க்கப் போறேன் வருண்” என்றாள்.

நெற்றியை நீவிக் கொண்டவன் “உனக்கு வேற பிளான்ட் கிடைக்கலையா டி எவ்வளவோ இருக்கு இதைப் போய் தேடி பிடிச்சு இருக்கியே” என்றான் சலிப்பாக….

அவனை ஓர் ஆழ்ந்துப் பார்வை பார்த்தாலே தவிர வேறு எதுவும் அவள் பதில் கூற வில்லை.

“ஒன்னு மட்டும் சொல்லுவேன் வருண் நான் நிச்சயமா என் புராஜக்ட்ல சக்சஸ் ஆகுவேன்” என்றாள்.

“ஓகே ஆல் த பெஸ்ட் என்ன ஹெல்ப் வேணாலும் பண்றேன் பட் மறுபடி மட்டும் என்னைக் காட்டுக்கு வர சொல்லிறாத தாயே!” என்றவன் தலைக்கு கும்பிடு போட….

மெலிதாக சிரித்தவள் “நோ வொர்ரிஸ் வருண்” என்றாள்.

 

இருவரும் சிரித்துப் பேசி உரையாடிக் கொண்டே அவர்கள் வந்த வழியை விடுத்து வேறொரு பாதையூடாக  நுழைவாயிலை வந்து அடையவே  மாலை 4 மணியைத் தொட்டு இருந்தது.

 

அங்கிருந்து பிரதான சாலைக்கு வந்தவன் தனது நண்பனுக்கு அழைப்பை எடுத்து தனது காரைக் கொண்டு வருமாறு சொல்ல, அவனின் நண்பன் அங்கு வந்து சேர 5 மணி ஆகியது.

 

காரில் ஏறி அமர்ந்தவள் பக்கவாட்டாகத் திரும்பி “வருண் ஏதாச்சும் ஷார்ட் வே இருந்தால் அதுல போவோமா? இன்னும் 3 ஹவர்ஸ் டிராவெல்லிங் அஹ் நினைச்சாலே கண்ணைக் கட்டுது”

 

“ஓஹோ மேடம்க்கு காட்டுக்குள்ள இருக்க வரையும் கண்ணைக் கட்டாமல் இப்போ தான் ஜஸ்ட் 3 ஹவர்ஸ் கண்ணைக் கட்டுதோ? என நக்கலாக அவளைப் பார்த்து சொன்னவன் முதல்ல போனை ஒன் பண்ணி பேசு” என்றான்.

 

“ஆமால… இதை எப்படி மறந்தேன் என்றவள் அப்போது தான் அணைத்து வைத்து இருந்த அலைபேசியை எடுத்து உயிர்பித்தவள் அதில் வீட்டில் இருந்து வந்த 23 தவறிய அழைப்புக்களைப் பார்த்து விட்டு அடக் கடவுளே! நான் கவரேஜ் இருக்காதுனு சொல்லியும் எடுத்து வச்சி இருக்காங்க பாரேன்”என தலையில் தட்டிக் கொண்டவள் வாட்ஸ்அப் சென்று பிரகலாதனுக்கு வீடியோ கால் எடுத்தாள்.

 

முதல் அழைப்பிலேயே அவளின் அழைப்பை ஏற்றவர் “ ஆர் யூ ஓகே ஆழினி மா?” என்ற கேள்வியே முதலில் கேட்டார்.

 

“அம் பெர்பெக்ட்லி ஆல் ரைட் அண்ட் நான் போன வேலை நல்லபடியா முடிஞ்சிறிச்சு மாமா என்றவள் தொடர்ந்து எங்க என் அருமை அப்பா அவ்ளோ மிஸ்டு கால்ஸ் இருந்துச்சு….இப்போ நான் பேசுறேன் ஆளைக் காணுமே” என மெல்லிய புன்னகையுடன் கேட்டாள்.

 

“காஷ்யவன் கூட ஆபீஸ் போயிருக்கான் மா” என்றார்.

 

“ஓஹோ… எங்க நம்மக் குடும்ப தலைவிகளை காணும்?”

 

அவர் அதற்கு பதில் கூறும் முன்னரே மாடியில் இருந்து இறங்கி வந்த இந்து அவள் வீடியோ காலில் பேசிக் கொண்டு இருப்பது தென்பட…. “ ஆழினி” என்ற படியே பிரகலாதன் அருகே விரைந்து இருந்தார்.

 

“அம்மா… வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்.”

 

“கவனமா வா மா எங்க வருண்?” எனக் கேட்க….

அலைபேசியை அவன் புறம் திருப்பிக் காட்ட, “என்ன வருண் ஏதாச்சும் சேட்டை செஞ்சாளா?”

 

இந்து அப்படி கேட்டதும் அவனுக்கு அவள் காட்டில் செய்த அழிச்சாட்டியம் நினைவுக்கு வந்து விட பக்கென  சிரித்து விட்டான்.

 

 

அவனை முறைத்த ஆழினி, “அவன் சும்மா சிரிக்கிறான் மா” என அவள் புறம் கேமராவை திருப்பி பேச…

 

“இல்ல வருண்கிட்ட  போனை கொடு”

 

“வருண் டிரைவ் பண்றான் மா”

 

“என்னடி அது மரியாதை இல்லாமல்… வருண் கூட ஒழுங்கா மரியாதையா பேசு”

 

“கடவுளே அம்மாமா!  இப்போ என்ன அவன்கிட்ட கொடுக்கணுமா? இருங்க” என்றவள் அவன் புறம் கேமராவை திருப்ப….

 

“ஐயோ ஆன்டி அவள் ஒன்னும் பண்ணல ஆன்டி” என சிரித்துக் கொண்டே சொல்ல…. “சரி வருண் கவனமா வாங்க ரெண்டு பேரும் “ என்றவர் அழைப்பைத் துண்டித்து  விட்டார்.

 

தனது காரை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டு இருந்த காஷ்யபனின் எண்ணம் முழுவதும் ஆழினி மட்டுமே நிறைந்து இருந்தாள்.

இன்று அவள் வந்து விடுவாள் அவளிடம் கோபம் கொள்ளாமல் நல்லபடியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தற்போதைய அவனின் முதல் சவாலாக இருந்தது.

 

தலையை ஒற்றைக் கையால் கோதிக் கொண்டவன் “யூ வில் ஷேத்ரா” என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் இதழ்கள் தானாகப் புன்னகைத்தன.

 

அதனைத் தொடர்ந்து நேரம் செல்ல சரியாக இரவு 8.30 மணிப் போல ஆழினியை அவள் வீட்டில் இறக்கி வருண் அப்போதே கிளம்பி விட…. உள்ளே நுழைந்தவளை எல்லோரும் சூழ்ந்துக் கொண்டு கேள்விகளால் துளைத்து எடுத்து விட “ எனக்கு செம்ம டயர்ட் ஆஹ் இருக்கு… வர்ற வழில நானும் வருணும் சாப்பிட்டோம் சோ எனக்கு டின்னர் வேணாம் குட் நைட் மா” என இந்துவை பார்த்துச் சொன்னவள் மற்றவர்களைப் பார்த்து தலையசைத்து விட்டு தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

 

“சரி அவளோட மார்னிங் பேசிக்குவோம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்ற பிரகலாதனும் சென்று விட்டார்.

 

அவள் வந்து விட்டாள் என வீட்டின் மேல் தளத்தில் (roof top) இல் இருந்து அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தவனுக்கு நன்றாகவே தெரியும் அவள் இரவில் இங்கே வந்து பாடல்களை  கொண்டு கேட்பது அதனால் மெல்லிய புன்னகையுடனேயே ஒற்றைக் கையை பாக்கெட்டில் விட்டுக் கொண்டு ரூப் டாப்பில்  பால்கனி அமைத்து இருக்கும் பால்கனியின் சுவற்றில் சாய்ந்து நின்று இருக்க….அவன் எதிர் பார்த்தது போல 20 நிமிடங்களின் பின்னர் தனது ஹெட் செட் சகிதம் போனை மேலே போட்டு பிடித்துக் கொண்டே “ உன் கைவிரல் என் கைவிரல் என்  கேட்கின்றதே யாரோ இவன் யாரோ இவன்” எனப் பாடிக் கொண்டே வந்தவள் அங்கு காஷ்யபன் நிற்பதை பார்த்து அதிர்ந்தே விட்டாள்.

 

ஆம், இவள் வரும் நேரம் தெரிந்து அவன் இந்நேரம் இங்கு இருப்பதே இல்லை இப்போது இவன் இங்கு நிற்கின்றானே! என்ற அதிர்வு தான் அது.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “வில்லங்கம் தானா வந்து அட்டென்டன்ஸ் போடுது சிக்கிறாத ஆழினி எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவள் அவனைப் பாராமலேயே பால்கனி திட்டில் போனை வைத்து விட்டு கண்களை மூடி ஆழ்ந்து காற்றை சுவாசித்தவளை அதிரடியாகத் தன்னை நோக்கி அவளின் இடையைப் பற்றி கண் இமைக்கும் நேரத்தில் இழுத்து இருந்தான்.

 

அதிர்ந்து விழிகள் விரிய அவனைப் பார்த்தவளுக்கு அவனின் பிடியில் இருந்து விலகும் எண்ணம் தோன்ற வில்லை போலும்.

தன்னையே அதிர்ந்து பார்த்துக் கொண்டு சிற்பம் போல் ஒரே நிலையில் இருப்பவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கண் அடித்தவன் அவளின் இரு கன்னங்களையும் பற்றிக் கீழ் இதழை வன்மையாக, ஆழமாகக் கவ்வி இருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 18”

    1. Avatar photo

      Awe… Thank you sooooo much🥰🥰🥰 Keep supporting dear….🫂🫂🫂🥰🥰🥰 Am really happy for that your compliments to my stories 🫂🫂🫂😘😘😘😘🥰🥰🥰

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!