தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 19

4.8
(21)

பேராசை – 19

 

அவனே சற்றும் எதிர்ப் பார்க்கவே இல்லை.

ஏதேதோ பேச வேண்டும் என்று திட்டம் தீட்டி வைத்து இருந்தவன் அவளின் அருகில் முற்றிலும் சித்தம் தடுமாறி விட்டான் அல்லவா!

இருவருக்குமான முதல் இதழ் முத்தம்.

ஆழ்ந்த இதழ் முத்தம் பதித்து விட்டு விலகியவன் மோகம் ததும்பும் விழிகளால் அவளைப் பார்க்க, அவளும் இந்த எதிர் பாராத இந்த இதழ் முத்தத்தில் அதே மாறாத அதிர்ந்த நிலையில் தன்னிலை உணராமல் விழித்துக் கொண்டு நிற்க, அவளின் காதின் அருகே நெருங்கி “ஆழி பேபி” என ஹஸ்கி குரலில் கூப்பிட… அவனின் உஷ்ண மூச்சுக் காற்று அவளைத் தீண்ட அதில் சுயம் அடைந்து வேகமாக அவனில் இருந்து பதறி விலகி இருந்தாள்.

அவளை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவனை உறுத்து விழித்தவள் தன் இதழை அழுந்தத் துடைத்தவள் “என்ன இது?” காஷ் என விளிக்க வந்தவள் பின்பாதிப் பெயரை இடைவெளி விட்டு கூற….

மெல்லிய புன்னகையுடன் “லிப்லாக்” என்றானே பார்க்கலாம்.

பொறுமைக் காற்றில் பறக்க, “ நான் உங்க கிட்ட இருந்து இதை எதிர்ப் பார்க்கல காஷ்யபன் ஷேத்ரா”

“அப்போ என்ன பேபி எதிர்ப் பார்த்த?” எனக் கண்களைச் சிமிட்ட….

“எதே பேபியா? என அதிர்ந்தவள் என்ன டிராமா பண்றீங்களா?” எனக் கைகளைக் கட்டிக் கொண்டு ஆராய்ச்சியாக அவனைப் பார்க்க….  “வாட்? டிராமாவா? திஸ் இஸ் சீரியஸ் பேபி யூ நோ அம் ரியலி ரியலி மிஸ்ட் யூ”

“நைஸ் ஜோக் நீங்க அதுவும் என்னை மிஸ் பண்றீங்க இதுல வேற பேபியாம் என்றவள் மேலிருந்து கீழாக அவனை ஏளனமாகப் பார்த்தவள் இப்போ உங்களுக்கு என் மூலமா என்ன ஆகணும்?” என அவள் சரியாக அவனைக் கணித்துக் கேட்க….

(இப்போதே, அவனின் அப்பாவின் பிஸ்னஸை உனக்கு அவர் கொடுப்பது பிடிக்கவில்லை என அவன் உண்மையை சொல்லி இருந்தால் நிச்சயமாக விட்டுக் கொடுத்து இருப்பாள் ஆனால் அவனின் வன்மத் தீயில் அதை எங்கனம் கேட்கத் தோன்றும்?)

அவள் கேட்டக் கேள்வியில் திடுக்கிட்டாலும் அவனின் மனதோ, “பிரில்லியன்ட் என்னைப் பற்றி நல்லாவே புரிஞ்சி வச்சி இருக்கா” எனச் சொல்லிக் கொண்டது.

எந்தவொரு உணர்வையும் முகத்தில் காட்டாமல் “ஹே அம் அ பிஸ்னஸ் மேன் உன்மூலமா எனக்கு என்ன ஆகணும்? இட்ஸ் நதிங்” எனக் கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தவன் தலையைக் கோதிக் கொண்டே அவள் விழிகளை உற்று நோக்கிய படி “உன்னைக் கிஸ் பண்ணி இருக்கேன் பேபி அப்போ கூட உனக்கு புரியலையா?”

அவனின் ஆழ்ந்தக் குரலில் சற்றே தடுமாறினாலும் அடுத்த கணமே சுதாரித்தவள் “நோ ஐடியா” எனத் தோள்களை குலுக்கினாள்.

அவனுக்கோ பொறுமைப் போக, ஓ மை கோட் எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவள் அசந்த நேரமென பார்த்து மீண்டும் அவளின் இடையைப் பற்றி இழுத்து அவளின் இதழில் அவனின் இதழ்களை உரசியபடி “ஐ அம் இன் லவ் வித் யூ” என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவளின் இதழ்களை கவ்வி சுவைத்து இருந்தான்.

அவனில் இருந்து திமிறி விலகப் போனவளை மேலும் தன்னுள் இறுக அணைத்துக் கொண்டவன் அவனின் தேவை முடிந்த பின்னரே விடுவித்தான்.

“ஹவ் டேர் யூ காஷ்யபன்” என அவனின் ஷர்ட்டின் காலரைப் பிடித்து சீற….

அவள் விழிகளையும் தன் ஷர்ட்டினைப் பிடித்து இருந்த அவளின் கைகளில் அவனின் பார்வை படிந்து மீள…. அவளின் கைகளோ தானாக அவனின் ஷட்ர்டினை விட்டு தளர்ந்தன.

“வெல் காஷ்யபன் இத்தோட இதை மறந்துடலாம்… இட்ஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்” என்றவள் அவனின் பின்னால் இருக்கும் தன் போனை எட்டி எடுத்துக் கொண்டவள் செல்லப் போக….

அவள் ஜஸ்ட் ஆக்சிடென்ட் என்று சொன்னதும் அவ்வளவு கோபம் அவனுள் பற்களைக் கடித்து தன்னை சமன் செய்தான்.

அவன் தான் விடாகொண்டான் ஆயிற்றே இலகுவாக அவளை விட்டு விடுவானா என்ன?!

 

அவள் முன்னே சென்று அவளை இடை மறித்து நின்றவனை பார்த்து இழுத்து ‘உப்ப்ப்’ என்ற ஒரு பெருமூச்சுடன் “இப்போ என்ன தான் வேணும்?” என சலிப்பாகக் கேட்க…. 

“ஒன்லி யூ”

“வாட்? இது என்ன புதுசா லவ் மண்ணுனு டிராமா எல்லாம் பண்றீங்க?”

“நான் சொல்றதை ஜஸ்ட் ஒரு 5 மினிட்ஸ் கேளு” என்றான் ஆழ்ந்த குரலில்…..

எப்படியும் அவன் விடப் போவதில்லை என அறிந்தவள் “கோ அஹெட்” என்க….

“35th வெட்டிங் அணிவர்சரி அப்போ உன் டாகுமெண்ட்ஸ் எல்லாம் எரிச்சதுக்கு எம் ரியலி சாரி” மேலும் தொடர்வதற்குள் “இப்போ அது எதுக்கு?” என வந்த கோபத்தை அடக்கியபடி அவள் கேட்க…. “ஐ நோ இட்ஸ் ஹர்டிங் யூ பட் சாரி உன்மேல எனக்கு அப்போ இருந்த பீலிங்ஸ் புரியல டி அதான் நான் அப்படி என்றவன் தொடர்ந்து நீ வீட்ல இல்லாத இந்த ரெண்டு நாளா உன்னை நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? என்றவன் தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்ட படி யூ நோ ஜஸ்ட் இந்த டூ டேஸ் தான் உன்மேல எனக்கு இருக்க காதலை உணர வச்சது ஆழி” என்க…

அவனுக்கே ஆச்சரியம் தான் சாதாரணமாக யாரிடமும் இவ்வளவு நீளமாக பேசியதில்லை.

அவன் அகராதியிலேயே இன்று தான் இவ்வளவு நீளமாக பேசுகின்றான்.

என்ன முடிந்தும் சிரிப்பைக் கட்டு படுத்த முடியாதவளோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தே விட்டாள்.

அவளை வெறித்துப் பார்த்தவனுக்கோ, ஆமாடி நடிக்கிறேன்… இப்போ என்ன? என்று விட்டு அவளுக்கு இழுத்து அறைந்தால் என்ன என்றே தோன்றியது. 

பற்களைக் கடித்து வந்த ஆத்திரத்தை முயன்றுக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் “ஓகே வெல் அப்போ எப்படி வருணை மேரேஜ் பண்றனு நானும் பார்க்குறேன்” என எப்படி சொன்னால் அவள் வழிக்கு வருவாள் என அறிந்து அவன் கூற….

அவன் நினைத்தது போல அவளின் சிரிப்பு தானாக ஸ்விட்ச் போட்டதைப் போல நின்று விட அவனை முறைத்துக் கொண்டே “வாட்? கம் அகெயின்”

“எஸ் உனக்கும் வருணுக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணப் போறதா பேசி இருக்காங்க” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே “வீ ஆர் பிரண்ட்ஸ்” என்றிருந்தாள்.

“ஐ நோ தட்” என்றான்.

அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க சொல்லி இருக்கலாமே நாங்க பிரண்ட்ஸ்னு” 

“நம்ம ரெண்டு பேருக்கும் ஆகாது நான் எப்படி போய் இதை சொல்றது?” 

“ஓ மை கோட்” எனத் தலையைப் பிடித்துக் கொண்டு பக்கச் சுவற்றில் சாய்ந்து நின்றுக் கொண்டாள்.

“இந்த மேரேஜ் புரோபோசல் மட்டும் நடந்து இருக்கலனா நான் இப்போ உனக்கு என் லவ்வை சொல்லி இருக்க மாட்டேன் ஆழி” என வன்மமாக புன்னகைத்துக் கொண்டே கூற…

அவனின் விழிகளில் தெரிந்த பளபளப்பு இரையைப் பிடிக்கும் சிங்கத்தின் விழிகளின் பளபளப்பை ஒத்து இருந்தது.

தலையை பிடித்த படி கண்ணீர் வழிய நிலத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் அவனின் முக வேறுபாட்டை பார்த்து இருந்தால் அவனின் சுயரூபம் இப்போதே தெரிந்து இருக்குமோ என்னவோ!

“நாங்க பிரண்ட்ஸ் எங்களை எப்படி இவங்களால” என சொல்ல வந்தவளுக்கு மேலே பேச முடியாமல் குரல் தளுதளுக்க ஆரம்பித்து விட…. அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவன் “ லுக் அட் மீ இதுவும் நல்லது தான் எனக்கு என் காதலை உணரவும், சொல்லவும் ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு நாளைக்கு மார்னிங் வீட்ல பேசலாம் சோ டோண்ட் வொர்ரி” என அவளின் கண்ணீரை துடைத்து விட்டான். 

“ ‘ஹும்’….என்றவள் விழிகள் விரிய அவனைப் பார்த்தவள் “நான் இந்த மேரேஜை நிறுத்துறது இருக்கட்டும் பட் உங்க உளறல் எல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது மிஸ்டர் அதெல்லாம் நம்புற ஆள் நான் இல்லை என்றவள் குட் நைட் என்று விட்டு படிகளில் கால் வைக்கப் போக….

அவள் கைகளைப் பிடித்து இழுத்து பக்க சுவற்றில் சாற்றியவன் அவள் விழிகளைப் பார்த்துக் கொண்டே “ஐ லவ் யூ” என்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து சொல்ல…

அவன் விழிகளில் தெரிந்த தீவிரத்தில் என்ன நினைத்தாளோ “ஓகே வெல் காஷ்யபன் நீங்க என்னை லவ் பண்றதாவே இருக்கட்டும் பட் உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லையே” என்க….

ஒரு நொடியும் தாமதிக்காமல் “அதுக்கு நான் என்ன பண்ணனும்?” என்ற கேள்வி அவனிடம் இருந்து வந்து இருந்தது.

அவனை பார்த்து ஆச்சரியமாக ஒன்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியவள் “ நான் உங்களுக்கு வைக்கப் போற டெஸ்ட்ல பாஸ் பண்ணுங்க நம்புறேன்” என்றாள்.

“அவ்ளோ தானா!? என ஆச்சரியத்தில் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி எந்த சப்ஜெக்ட்? ஐ வில் டூ இட் பக்காவா பாஸ் ஆகிருவேன்” என்றவன்  ஒற்றைக் கையை  பாக்கெட்டில் விட்ட படி இறுமாப்பாகச் சொல்ல…

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவள் “இனிமேல் உங்களை காஷ்னு தான் கூப்பிடுவேன் ஓகேவா?”

அவளது முதல் கேள்வியே அவனுக்கு ஏகத்துக்கும் ஏறியது.

தன்னை முயன்று சமன் செய்தவன் வலுக்கட்டாயமாக புன்னகைத்த படி “ஐ அம் ஆல் யுவர்ஸ் நீ என்னை எப்படி வேணாலும் கூப்பிடலாம்”

வியப்பில் விழி விரித்தவள் “உங்களுக்கு பிடிக்காத ஐ மீன் கோபப்படுத்துற விஷயம் எல்லாம் பண்ணுவேன் ஓகேவா?” என ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவள் கேட்க….

இப்போது அவனுக்கு புரிந்து விட்டது அவள் சொன்ன டெஸ்ட் எதுவென்று! இழுத்து பெரு மூச்சை விட்டவன் தலையைக் கோதிக் கொண்டே “என்ன வேணாலும் பண்ணு எனக்கு கோபம் வராது பிகாஸ் ஐம் இன் லவ் வித் யூ” என்றான் அழுத்தம் திருத்தமாக….

“ஆர் யூ ஸுவர்?”

“ஒக்கோர்ஸ் ஆழி பேபி” என தெற்றிப் பற்கள் தெரிய வசீகரமாக புன்னகைத்தான்.

“அப்போ டுமோரோ ஆரம்பிச்சிடலாம்” என்றாள்.

“ஐம் ரெடி” என்றான் அதே வசீகர புன்னகையுடன்….

“ஒருவேளை நான் பண்றதெல்லம் மீறி உங்களுக்கு கோபம் வந்து உங்க சுயரூபம் வெளிச்சம் ஆகிறிச்சுனா அப்புறம் என்னை டிஸ்டப் பண்ணாதீங்க…. உங்களை ஒருபோதும் நம்பவும் மாட்டேன் அக்செப்ட் பண்ணிகவும் மாட்டேன்” என்றாள் உறுதியாக….

அவனின் புன்னகை மறைந்து இப்போது கோபம் எட்டிப் பார்க்க “என்னடி என்னைப் பார்த்தா உனக்கு நடிக்கிற போலவா இருக்கு?” 

“எப்படி நம்ப சொல்றீங்க? என்னை கொலைப் பண்ண கழுத்தை பிடிச்ச ஆள் நீங்க… சொல்லப் போனால் பழி வெறில சுத்திட்டு இருந்தீங்க…. இப்போ வந்து என்னை லவ் பண்றேன்னு பீலா விட்டால்! ஒரு 10 வயசு குழந்தை கூட நம்பாது”

“பழசை விட்டுடலாம் ஆழி அதுக்காக நான் எவ்ளோ வேணாலும் சாரி கேக்குறேன் என்றவன் நெற்றியை ஒற்றைக் கையால் நீவிக் கொண்டே, ரைட் நீ நம்பாத பட் என் லவ் ட்ரு தான்ன்னு உனக்கே ஒருநாள் புரியும் சோ நாளைக்கு பார்க்கலாம் எனக்கு என்ன டெஸ்ட் வைக்கப் போறனு யோசிச்சு வை என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து விலகியவன் குட் நைட் பேபி” என்று விட்டு சென்று விட……

ஒரு கணம் புரியாமல் விழித்தவள் “இவன் வேற நச்சு நச்சுன்னு கிஸ் ஆஹ் பண்றான்? இவனை நம்புறதா? வேணாமா? என குழப்பமாக வானத்தை வெறித்துக் கொண்டே நினைத்தவள் பார்த்துக்கலாம் நான் பண்ற கொடுமையில அவனே ‘ஆமா நான் நடிச்சிட்டு தான் இருக்கேன்னு’ ஒத்துக்குவான்” என விரக்தியாக புன்னகைத்தவள் அவளின் அறைக்குச் சென்று விட்டாள்.

( அவள் ஒன்றை சிந்திக்க மறந்து விட்டாள் அவன் ஒன்றை நினைத்து விட்டால் அதை நிச்சயமாக நடத்தாமல் விட மாட்டான் என…)

அதே சமயம் அறைக்குள் வந்தவனுக்கு அவளின் இதழ் தீண்டியதில் இருந்து உணர்வுகள் கிளர்ந்து எழ ஆரம்பித்து இருந்தது.

தலையை உலுக்கிக் கொண்டவன் “ஷேத்ரா பீ கன்ட்ரோல்” எனத் தனக்குள் தானே சொல்லிக் கொண்டவனுக்கு ஏன்டா அவளின் இதழைத் தீண்டினோம் என்ற எண்ணம் தான்.

தானாக அவனின் கைகள் அவனின் இதழை வருடிக் கொண்டவனுக்கு மெல்லிய புன்னகையும் இதழில் தோன்றி மறைந்தது.

தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே இருந்தவன் “ என்னை உன்னால ஜெய்க்கவே முடியாது ஆழி கூடிய சீக்கிரம் என்னை நம்பி நீயே என்னை உன்ன மேரேஜ் பண்ணிக்க சொல்லுவ பேபி” எனச் சொல்லிக் கொண்டான்.

கட்டிலில் படுத்து இருந்த ஆழினிக்கு அவனின் எச்சில் தன் இதழில் இன்னும் ஒட்டிக் கொண்டு இருப்பது போலவே ஒரு பிரமை தான்.

கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு தூக்கம் தூரப் போனது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

error: Content is protected !!