தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 20

5
(13)

பேராசை – 20

 

காலையில் விழித்தவளுக்கு அவளின் இதழ்களில் உருவான எரிச்சலே நேற்று நடந்தவை அனைத்தும் உண்மை தான் என ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்துப் போக, ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவள் தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு லதாவிடம் இருந்து காஃபியை வாங்கிக் கொண்டவள் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

அவளுள் பலவித யோசனைகள்.

அவனின் நேற்றைய நடவடிக்கையானது அவளுக்கு உவப்பானதாக இருக்க வில்லை.

இன்று அவன் எப்படி நடந்துக் கொள்ளப் போகின்றான் என்ற ஓர் உதறலுடன் சேர்ந்து ஏதோ கொஞ்சம் ஆர்வமாகவும் தான் அவனின் வருகைக்காக காத்து இருந்தாள்.

எப்பொழுதும் போல் அல்லாமல் நேரத்தைக் கடத்தவென்றே மெது மெதுவாக காஃபியை சிப் சிப்பாக அருந்திக் கொண்டு இருந்தாள்.

அவளை ஓர் ஆராய்ச்சியுடனேயே பார்த்த இந்துவோ, “என்ன ஆழினி இது எவ்ளோ நேரம் சீக்கிரம் வந்து சாப்பிடு… ஆபீஸ் போகனும்ல? எனக் கேள்வியாக கேட்க…

 படிகளில் அவளையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டு வந்தவனில் இருந்து பார்வையை திருப்பி இந்துவைப் பார்த்தவளோ, “குடிசிட்டேன் அம்மா இந்தாங்க பிடிங்க எனக் காஃபி கப்பை அவர் கையில் திணித்தவள்… ஆமா ஆபீஸ் போகணும்” என்று கூறி விட்டு நேரே சென்றது என்னவோ சாப்பாட்டு மேசை அருகே தான்.

அவன் எப்போதும் அமரும் இடத்துக்கு நேர் எதிரே சென்று அமர்ந்துக் கொள்ள அதனைத் தொடர்ந்து அவனும் அவளின் எதிரே வந்து அமர்ந்துக் கொண்டான்.

அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தவள் அவன் விழிகளில்  எதனையோத் தேடி தோற்று தான் போனாள்.

அவனோ, எந்த வித கவலையும் இன்றி ஒரு பெண்ணிடம் காதலை சொல்லி இருக்கின்றோமே என்ற எண்ணம் இல்லாமல் தோசையை சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

“போன ஜென்மத்துல வில்லனா இருந்து இருப்பான் போல காஷ்மோரா” என உள்ளுக்குள் கருவியவள் அவன் மேல் இருக்கும் கோபத்தை தோசையில் காட்டினாள்.

பாவம் அந்த தோசைக்கு வாய் இருந்தாள் அழுது இருக்கும்.

அவள் செய்துக் கொண்டு இருப்பதை பார்த்த இந்துவோ, ” என்னடி பண்ற இன்னும் நீ ஒரு தோசைக் கூட வாய்ல வைக்கல சாப்பிடு என குரல் உயர்த்திப் பேச….

அவரை சலிப்பாக  பார்த்தவள் “ஹூம்” என்றாளே தவிர வாயைத் திறந்து ஏதும் பேசவில்லை.

அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்தவனுக்கு தான் தெரியும் நேற்றைய இரவு முழுவதும் தூங்காமல் உணர்வுகளை கட்டுப்படுத்த படாதபாடு பட்டுப் போனான் என…

ஒரு தோசையுடனேயே எழுந்துக் கொண்டவள் அவனை ஏதாவது பண்ண வேண்டுமே எனக் கருவிக் கொண்டாள்.

அவனின் பீஏ ராமிடம் காலில் பேசிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தவன் விழிகள் அப்போது தான் அவளின் ஆடையில் படிந்தது.

ஆபீஸியலாக இறுக்கிப் பிடித்த கருநிற பேண்ட்டும் அணிந்து வெள்ளை நிற ஷர்ட்டினை இன் செய்து அதன் மேலே கருநிற பெண்கள் அணியும் கோர்ட் அணிந்து இருந்தாள்.

இதுவரையிலும் அவளை இப்படி உடையில் கண்டதே இல்லை அவன்.

அழகாகவும் ஆளுமையாகவும் இருந்தாள்.

அவளிடம் அப்படி ஒரு மிடுக்கான தோற்றம் இப்போது அவனின் பார்வை அவளை உச்சு முதல் பாதம் வரை படிந்து மீண்டது… இவை அனைத்துமே அவன் அலைபேசியில் பேசிக் கொண்டே தனது லேசர் விழிகளில் உள்வாங்கி இருந்தான்.

பார்த்த மாத்திரத்திலேயே அவள் ஆபீஸ் புறப்படுகின்றாள் எனப் புரிந்துக் கொண்டான்.

அவள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தவனுக்கு அவள் என்ன பேச வருகின்றாள் எனத் தெளிவாக உணர்ந்தான்.

அவனும் அலைபேசியை அனைத்து விட்டு எழுந்து “மாம் ஐ அம் லீவிங்” என்று விட்டு வெளியேறினான்.

 

“இது சரி இல்லையே! சார் பெருசா டயலொக் எல்லாம் பேசினாரே! போங்க சார் போங்க இதோ வரேன்” என்றவள் இந்துவுக்கும் லதாவுக்கும் ஓர் அவசர முத்தமொன்றைக் கொடுத்தவள் வேக எட்டுக்களுடன் அவனைப் பின் தொடர்ந்தவள் முன்னால் போகும் அவனை “காஷ்” என்ற அவளின் அழைப்பே அவனை உடல் இறுக வைத்து இருந்தது.

பற்களைக் கடித்துக் தன்னை சமன் செய்தவன்  வரவழைத்த புன்னகையுடன் பின்னால் திரும்பி அவளைப் பார்க்க…

அவனின் புன்னகையில் ஓடி வந்தவள் ஒரு கணம் நின்றே விட்டாள்.

காலையில் அவன் கண்டுக் கொள்ளாமல் இருந்ததற்கும் இப்போது அவன் அவளைப் பார்த்து புன்னகைப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்களை கூறி விடலாம்.

அவனை நெருங்கி “நான் தான் சொன்னேன்ல நீங்க டிராமா பண்றீங்கனு என்றவள் தொடர்ந்து லவ் பண்ற யாராச்சும் அதுவும் லவ் பண்ற பொண்ணே எதிர்ல இருக்கப்போ கண்டுக்காம இருந்தீங்க அண்ட் ஒன்மோர்திங் இப்போ நான் காஷ்ன்னு உங்களை கூப்பிட்டேன் உங்களுக்கு கோபம் வந்துச்சு தானே உண்மையை சொல்லுங்க” என்றாள் அவன் விழிகளை நோக்கி…..

தெற்றிப் பற்கள் தெரிய வசீகரமாக சிரித்துவிட்டு தலையைக் கோதிக் கொண்டவன் தன்னை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தவளின் விழிகளை நோக்கிய படி “இஸ் இட்? என ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவன் பேசுறதா? நோ வே ஷுவரா உன்னை அத்தை முன்னாடியே வச்சி லிப்லாக் பண்ணி இருப்பேன் பேபி என்றவன் அதிர்ந்து விழிகள் விரிய நின்றவளை மேலும் நெருங்கி அவள் இதழ்களை வருடிய படி இந்த லிப்ஸ் என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிறிச்சு ஆழி பேபி” என்றிருந்தான் ஆழ்ந்தக் குரலில்….

“கா…கா…காஷ்” என்றாள் திக்கி திணறி….

இரவில் அவனின் நெருக்கம் , பேச்சுகள் எல்லாம் ஏதோ நடிப்பு என்று நினைத்து இருந்தவள் இப்போதும் அவன் அதே போல் பேசுகின்றானே! நம்பலாமா? வேண்டாமா? என குழப்பம் சூழ்ந்து விட்டு இருந்தது.

தன்னை முடிந்த அளவு ஒருநிலை படுத்திக் கொண்டு இருந்தவனுக்கு இப்போதைய அவளின் “காஷ்” என்ற அழைப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விட்டு விட்டான்.

“வந்ததுல இருந்து பேசிட்டு இருந்த? இப்போ என்ன பேபி எதுவும் பேசுற இல்லை”  எனக் கேட்க…

“நதிங் காஷ் என இழுவையாக வேண்டுமென்றே சொன்னவள் உங்களுக்கு டெஸ்ட் வைக்கணும்ல அதான் க்ளியர் பண்ணிக்கிட்டேன் சோ இப்போ ஸ்டார்ட் பண்ணலாமா?” என ஒற்றைப் புருவத்தை ஏற்றி அவள் வினவ…

“வை நொட் ஐம் ரெடி” எனத் தோள்களை உலுக்க….

“அஹான்…” என்றவள் அவனின் பின்னால் நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கும் அவனின் மிகப் பிடித்தமான கருப்பு நிற ‘Audi A5’ ரக காரையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவள் அவனிடம் ஒன்றும் பேசாமல் காரை நோக்கி நடந்தாள்.

அவளுக்கோ அவளையும் அறியாமல் தானாக இதழ்கள் புன்னகைத்துக் கொண்டன.

அவனோ “ஓ மை கோட் என்ன பண்ண போறாளோ? சரியான டெவில்” என மனதில் சொல்லிக் கொண்டவன் விழிகள் அதிர்ந்து விரிந்தன.

ஆம், அவனின் ‘key fob’ ஐ அவன் அவளின் இதழ்களை வருடிக் கொண்டு இருக்கும் போதே அவனின் பாக்கெட்டில் இருந்து எடுத்து இருந்தாள்.

அவளுக்கு தான் தெரியுமே! அவனின் காரை அவனைத் தவிர வேறு யாரையும் உபயோகப் படுத்த விட மாட்டான் என்று….

பிரகலாதன் கூட அவனின் காரை நெருங்கியது இல்லை.

இப்போது அவனுக்கு தாறுமாறாக வந்தக் கோபத்தை “ஷிட்” என தரையை காலால் உதைத்து விட்டு வேக வேகமாக காரின் அருகே வந்து “ஐ வில் டிரைவ்” என்றான் பற்களைக் கடித்து…

டிரைவர் ஷீட்டில் அமர்ந்தவள் காரை ஸ்டார்ட் செய்து இருக்க, “இட்ஸ் ஓகே நானே” என அவள் முடிக்கும் முன்னரே  பொறுமை போயே விட்டது அவனுக்கு “வில் யூ பிளீஸ் கெட் அவுட் ஆப் மை கார்” என சீறினான்.

அவனின் சுயரூபம் இதுவல்லவா! ஓர் ஏளனப் புன்னகையுடன் காரை விட்டு இறங்கியவளை இறுக அணைத்தவன் “நான் டிரைவ் பண்றேன் டி உன்னை ஏன் ட்ரெஸ் பண்ணிக்கிற?” என்றவனை மயங்கி விழாத குறையாக வாயில் கையை வைத்துக் கொண்டு அப்படியே வியந்து போய் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அவன் கோபப் பட்டது உண்மை அல்லவா! அவனது விழிகளில் அப்படி ஒரு அனல்… அது அவனின் பொருளை அவள் தொட்டு விட்டாள் என்று தான் எனத் தெள்ளத் தெளிவாக அவள் உணர்ந்த போதிலும் இப்போது அவனின் கோபம் எதுவென்று அவன் சொன்ன காரணம் அவளுக்கே பேரதிர்ச்சி தான்.

“என்னமா நடிக்கிறான் ஐயோ கடவுளே! என மனதில் அலறியவள் நான் என் கார்ல போறேன்” என்றவள் திரும்பி நடக்க முயல…..

இழுத்து பெரு மூச்சை விட்டவன் அடுத்த கணமே அவளை அலேக்காக தன் கைகளில் ஏந்தி முன் கதவைத் திறந்து உள்ளே அமர வைத்து விட்டு அவள் திமிறலை பொருட் படுத்தாமல் ஷீட் பெல்ட்டை போட்டு விட்டு டோர் லாக் செய்தவன் மறுபுறம் வந்து ஏறி காரை உயர் வேகத்தில் கிளப்பி இருந்தான்.

“காஷ் பிளீஸ் மெதுவா போங்க” என்று இத்தோடு 7 முறைக்கும் மேலாக கத்தியவளை அவன் பொருட் படுத்தாமல் வேகமாக செல்ல….

“பாஹ் அப்போ ஆக்டிங் தான்ல” என அவள் சொல்ல….

 

காரோ, கிறீச்சிட்டு நின்றது.

அவளை உறுத்து விழித்தவன் “என்னடி என்னை நினைச்சிட்டு இருக்க? இதே தான் சொல்லிட்டு இருக்க என சீறியவன் சற்று குரலைத் தாழ்த்தி அதான் என்னை டெஸ்ட் பண்றல முடிஞ்ச அளவு டெஸ்ட் பண்ணு இப்போ பேசாம வா அம் த சாம்பியன் ஆப் கார் ரேஸிங் இன் ஆஸ்திரேலியா என இறுமாப்பாக சொன்னவன் கண்களை மூடித் திறந்து தலையைக் கோதிக் கொண்டே நம்பு டி என்னை, உன்னை சாக விட மாட்டேன் “ என்றான் ஆழ்ந்த குரலில்…

இப்படி சொன்னவன் தான் அவளை உயிரோடு வார்த்தைகளில் கொல்லப் போகின்றான் என அவள் அறியவில்லை.

அதன் பிறகு, அவளோ மௌனமாக இருந்துக் கொண்டாள்.

அதன் பின் இருவருக்கும் இடையில் எந்த பேச்சு வார்த்தைகளும் இல்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 20”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!