தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 22

5
(21)

பேராசை – 22

அறைக்குள் வந்தவளுக்கு என்ன தோன்றியதோ அவனுக்குப் பிடித்த வெண் நிறத்திலேயே டீ ஷர்ட்டும் நீல நிற டெனிம் அணிந்துக் கொண்டவள் தன்னை சிரத்தை எடுத்து அலங்கரித்துக் கொண்டு ஒரு துள்ளலுடன் படிகளில் கீழிறங்கி ஹாலுக்குள் வந்தவள் அவனை தேடி சுற்றிலும் விழிகளை சுழல விட அவனோ சோஃபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழை படித்துக் கொண்டு இருந்தான்.

மெல்லிய புன்னகையுடன் அவனை நோக்கி சென்றவள் “போகலாமா?” எனக் கேட்க…

நாளிதழில் இருந்து விழிகளை அகற்றியவன் அவளைப் பார்த்து சற்றே தடுமாறித் தான் போனான்.

சாதாரணமாகவே பேரழகியாக இருப்பவள் இன்று அதுவும் அவனுக்குப் பிடித்த வெண் நிற உடையில் அவ்வளவு அழகாக இருந்தாள்.

உதட்டைக் குவித்து ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவன் அவளின் விழிகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே “ செம்ம அழகா இருக்க ஆழி பேபி” என்று மோகம் ததும்ப சொன்னவன் அவளிடம் தன் ஒற்றைக் கையை நீட்டி இருந்தான்.

ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனின் கையில் தன் வலக் கையை வைத்தாள்.

இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு வெளியில் செல்வதைப் பார்த்த குடும்ப உறுப்பினர்களுக்கு மயக்கம் வராத குறை தான்.

இந்துவோ, “நான் சொன்னேன்ல ரெண்டு ரெண்டு பேரும் ஒருநாள் அவங்க சண்டையை நிறுத்துவாங்கனு பார்த்தியா லதா என் எண்ணம் பழிச்சிறிச்சு” என்றவாறு ஜீவனைப் பார்த்து ஓர் அர்த்தம் பொதிந்த பார்வையை வீச …. தன் மனைவியின் எண்ணம் எதுவென்று தெரியாதா என்ன? அவரும் இந்துவைப் பார்த்து விழிகளை மூடித் திறந்தார்.

மெல்லிய புன்னகையுடன் லதாவும் “இதே போல எப்பவும் சண்டை போட்டுக்காமல் இருந்தாலே நல்லது தான்” என அவர் சொல்லி முடிக்கும் போதே குரலை செருமிய பிரகலாதனோ “நான் எல்லார்கிட்டயும் ஒரு விஷயமா பேசணும்” என்றவர் ஜீவனைப் பார்க்க, அவரோ “ஜெயகுமாரும் வருணும் கதச்சாங்க” என ஆரம்பித்து வைக்க…..

இருவருக்குமே தயக்கம் தான்.

இடைப்பட்ட நாட்களில் வருணும் ஜெயகுமாரும் பிரகலாதனிடமும் ஜீவாவிடமும் வருணின் ஆழினி மீதான எண்ணத்தை சொல்லி இருக்க, இருவரின் ஆழமான நட்பில் அகம் மகிழ்ந்த இருவரும் அன்று ஆழினி கூறியதைக் கூறி இருந்தனர்.

 ஆழினியின் திருமணம் என இருவரும் சேர்ந்து ஆர்ப்பாட்டமாக தயாராகிக் கொண்டு அதற்கான ஏற்பாடுகள் பலவற்றை செய்துள்ள நிலையில் தங்கள் துணையிடம் எப்படி இந்த திருமணம் நடக்காது என  சொல்வது என்ற தடுமாற்றம்.

அதனாலேயே இரு நாட்கள் கழித்து சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தவர்களை பிசினெஸ் விடயங்கள் உள் இழுத்துக் கொள்ள, இன்று இதனை சொல்லி விட வேண்டும் என்று முடிவை எடுத்து இருந்தார் பிரகலாதன்.

பொறுமை இழந்த லதாவோ, “அட என்னனு சொல்லுங்க” என்க…

“ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் சோ இந்த மேரேஜ் நடக்காது மா” என்றவரை லதா அதிர்ந்து பார்த்தார் என்றால் இந்துவுக்கோ அப்படி ஒரு மகிழ்ச்சி.

“நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க…ப்ரெண்ட்ஸ் ஆஹ் இருந்தால் என்னங்க? வருண் நல்ல பையன் அவனைப் போல வேற பையன் நாம தவம் செய்தாலும் நம்ம ஆழினிக்கு கிடைக்க மாட்டான்”

“அது சரி தான் மா பட் சம்பந்தபட்ட ரெண்டு பேருக்கும் இந்த மேரேஜ்ல இஷ்டம் இல்லையே என்றவர் தொடர்ந்து இந்துவிடம் பார்வையை திருப்பி நம்ம ஆழினிக்கு ஒரு நல்ல பையனா பார்க்க வேண்டியது என் பொறுப்பு இந்து” என அவரின் கைகளை பிடித்துக் கொண்டார்.

இந்து வாயை திறக்கும் முன் பிரகலாதன் அருகில் வந்த ஜீவனோ, “பிராகா என் பொண்ணுக்கு உன் பையன் காஷ்யபனை தர மாட்டியா” எனக் கேட்க….

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிரகலாதனும் லதாவும் அதிர்ந்து விழிக்க…. “தன் கையை பிடித்து இருந்த பிரகலாதனின் கையை இறுகப் பற்றிக் கொண்ட இந்து “என்ன அண்ணா என் பொண்ணை பிடிக்கலையா?” எனக் கேட்க….

திகைப்பில் இருந்து மீண்டவர் “என்ன பேச்சு இது?  இவ்வளவு நாள் நான் இப்படி ஒரு கோணத்துல யோசிச்சு பார்க்கல மா என்றவர் சற்று யோசித்த படியே லதாவின் முகத்தில் இருக்கும் பூரிப்பை பார்த்து விட்டு அவன் ஃபேமிலி கூட அட்டாச்ட் ஆகாமல் சுத்துறான் நம்ம ஆழினியை நல்லா பார்த்துப்பானா?” என்றார் குரல் தளுதளுக்க…

“இப்போ பார்த்தீங்க தானே அவன் அவளை கூட்டிட்டு வெளில போறான் இதுக்கு மேல வேற என்ன வேணும்? அவன் இப்போ பழைய மாதிரி இல்லை நல்லாவே பேசுறான்… ஆழினி கூட முன்ன போல சண்டையும் போடுறது இல்லை” என்றார் அவசரமாக லதா.

அதற்கு ஆமோதிப்பாக இந்துவும் தலை அசைக்க, பிரகலாதனின் குழப்பமான முகத்தை பார்த்த ஜீவன் “பிராகா நம்ம பையனை நாம நம்பாமல் வேற யார் நம்புறது என் பொண்ணை அவன் நல்லா பார்துப்பான் “

பிரகலாதனுக்கு என்னவென்றே தெரியாத ஒருவித நெருடல் இருந்துக் கொண்டு தான் இருந்தது.

தன் அன்புத் தங்கையின் முகத்தைப் பார்த்துக் கொண்டே “நமக்கு ஓகே பட் கட்டிக்கப் போறவங்க சம்மதத்தையும் அவங்க வந்ததும் கேட்டுகலாம்” என்று அவர் சொன்னது தான் தாமதம் செய்து வைத்து இருந்த லட்டை மின்னல் வேகத்தில் எடுத்து வந்து பிரகலாதனின் வாயில் திணித்து இருந்தார் லதா.

அதை விழுங்க முடியாமல் தவித்த பிரகலாதனை பார்த்து இந்து உட்பட அனைவரும் சிரிக்க…..

இங்கோ, ஆழினி காஷ்யபனிடம் தெருவின் ஓரமாக இருக்கும் ஐஸ் கிரீம் கடையில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அவனே எதிலும் நேர்த்தி பார்ப்பவன் “வேணாம் ஆழி நான் உனக்கு ரெஸ்டுரன்ட்ல பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் வாங்கி தரேன் இது வேணாம் பேபி”

“முடியாது எனக்கு அந்த ஐஸ் கிரீம் தான் வேணும்” என பிடிவாதம் பிடிக்க…

முயன்று தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டவன் வரவழைத்த புன்னகையுடன் “ ஆழி பிளீஸ் மா அது ஹெல்தியா இருக்காது நான் காஸ்லியா ஹெல்தியா வாங்கி தரேன்” என்றவன் காரை ரெஸ்டுரன்ட் ஒன்றின் அருகில் நிறுத்தி இருந்தான்.

முதலில் இறங்கிக் கொண்டவன் அவளின் புறம் வந்து கதைவைத் திறந்து அவளின் மூச்சுக் காற்று படும் தூரம் நெருங்கி ஷீட் பெல்ட்டை விடுவித்தவன் அவளின் இதழ்களை தன் இதழ்களால் உரசியவன் “ஆழி பேபி” என தாபமாக அழைத்தான்.

 அவள் பேச வந்த வார்த்தையை இதழ்களால் சிறை செய்து இருந்தான்.

அவளும் உணர்வுகள் கொண்ட பெண் அல்லவா இவ்வளவு நாளும் அவன் அவளைத் தீண்டும் போது சிறு எதிர்ப்பை காட்டிய அவள்… இன்றோ, அவனின் இதழ் அணைப்பில் அவளையே அறியாமல் அவனின் சிகைக்குள் தன் கையை நுழைத்து அவளும் அவனுக்கு ஈடாக இதழ் முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

அவனுக்கோ இது பேரதிர்ச்சி.

இருந்தும் அதனை காட்டிக் கொள்ளாமல் மூச்சுக்கு தவிக்கும் அவளை பார்த்து அவளின் இதழை விடுவித்தான்.

இருவரும் மூச்சு வாங்க பிரிந்து இருந்தனர்.

அவளுக்கோ இவ்வளவு நாளும் இல்லாமல் இன்று வெட்கம் பிடுங்கித் தின்றது.

ஆம், அவள் முழுதாக அவனை நம்பி இருந்தாள்.

அவனின் அவளின் மீதான காதல், அரவணைப்பு அனைத்தையும் நம்பி இருந்தாள்.

அவனின் சிகைக்குள் இருந்து தன் கையை வேகமாக இழுத்துக் கொண்டவள் அவனைப் பார்க்காமல் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்.

அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன் துடித்துக் கொண்டு இருக்கும் அவளின் இதழை தன் விரல்களால் வருடிய படியே “ஐ லவ் யூ ஆழி” என்ற ஒவ்வொரு வார்த்தையையும் மென்மையாக அவளின் விழிகளைப் பார்த்துக் கொண்டே சொன்னவன் அவளின் இடக் கையைப் பற்றி நீல நிறக் கல் பதித்த பிளாட்டினம் மோதிரம் ஒன்றினை அணிவித்து இருந்தான்.

இதனை சற்றும் எதிர்பாராத அவள் அவனை வியந்து பார்க்க…. “ நீ இப்படியே என்னை பார்த்திட்டு இருந்தால் அப்புறம் நடக்கப் போறதுக்கு நான் பொறுப்பு இல்ல என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி சொன்னவன் வறியா ஐஸ் கிரீம் சாப்பிடலாம்” எனத்  தன் வலக் கையை அவள் விழிகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே நீட்டி இருந்தான்.

“காஷ்”

அவன் அவளின் “காஷ்” என்ற அழைப்புக்கு பழகி விட்டதால் என்னவோ அவன் சாதாரணமாகவே இருந்தான்.

“வாட்? பேபி”

“என்னை அப்போ உண்மையா லவ் பண்றீங்களா?” என அவன் மோதிரம் அணிவித்த  தனது விரலைப் பார்த்துக் கொண்டே அவள் கேட்க…

அவளின் கேள்வியில் கோபம் கழன்றாலும் இழுத்து பெரு மூச்சை விட்டவன் “இப்போ என்னடி உன்னை நான் அந்த ரோட் சைட் ஐஸ் கிரீம் ஷாப்க்கு கூட்டிட்டு போகணும் அவ்ளோ தானே” என்றவன் மறு புறம் வந்து ஏறியவன் காரைக் கிளப்பி இருந்தான்.

அவள் சொன்ன கடையின் முன்னே காரை நிறுத்தியவனுக்கு வெளியில் இறங்கவே அவமானமாக உணர்ந்தான்.

எல்லாவற்றிலும் ஆடம்பரத்தை எதிர்ப் பார்ப்பவன் இன்று பிசினெசிற்காக அவனது அனைத்து கட்டுக்களையும் தகர்ப்பது போல நடித்து ஆக வேண்டிய கட்டாயம் அவனிடம்….

அவனுக்கு யார் சொல்வது அவளின் மீதான அவனின் காதல் தான் காரணம் என அவனைப் பார்த்த விதியோ சிரித்துக் கொண்டது.

அவன் அவனவள் மீதான காதலை உணரும் நாளும் வெகு தொலைவில் இல்லை ஆனால் அவன் உணரும் நாள் அவளோ முற்றிலுமாக அவனை வெறுக்கப் போகிறாள் என அவன் அறியவில்லை.

கண்களை மூடித் திறந்து ஒரு முடிவோடு காரில் இருந்து இறங்கியவனுக்கு அங்கு நிற்கவே ஏதோ போல் இருக்க, முயன்று வரவழைத்த புன்னகையுடன் அவளை அவன் பார்க்க… அவளும் காரில் இருந்து இறங்கி இருந்தாள்.

அவளுக்காக ஐஸ் கிரீம் வாங்கச் சென்றவனை பார்த்து “ Faluda mixed vanilla” பிலேவர் என்க… அவள்  விழிகளைப் பார்த்தவன் “ஐ நோ” என்று விட்டு அவளுக்கான ஐஸ் கிரீம் ஐ வாங்கிக் கொண்டு அவளிடம் வந்து இருந்தான்.

அவளோ அவனையும் பொருட் படுத்தாமல் கண்கள் மின்ன அவனிடம் இருந்து ஐஸ் கிரீமை வாங்கிக் கொண்டவள் சாப்பிடத் தொடங்கி இருந்தாள்.

காரில் சாய்ந்து அவள் சாப்பிடுவதை வியப்பாக பார்த்தவனுக்கு அவனையே அறியாமல் இதழ்க் கடையோர புன்னகையும்  தோன்றி மறைந்தது.

இதையே ஒரு மாதத்திற்கு முன் “ஒரு பெண்ணோடு வீதியில் உள்ள ஐஸ் கிரீம் கடையில் நிற்க போகிறாய்” என யாரும் சொல்லி இருந்தால் அவனை பார்த்து ஏளனமாக சிரித்து இருப்பானோ என்னவோ!

இக் கணம் அவனின் பிசினெஸ் சாம்ராஜ்யத்தில் அவனின் பெயர் மற்றும் தகுதியை மறந்து இருந்தான் அதுவே உண்மை.

அவளுக்காக வெளியிலேயே காரில் சாய்ந்து நின்றுக் கொண்டு அவளையே இமைக்காது பார்த்து இருந்தான்.

தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்று அந்த வழியினூடாக வந்த ராமின் கண்கள் அதிர்ந்து விரிய, அவனுக்கு ஹார்ட் அட்டாக் வராதது ஒன்று தான் குறை.

அவனால் நம்பவே முடியவில்லை.

இன்று தான் அவன் அவனின் சிரித்த முகத்தையே காண்கிறான் அதுவும் நடு வீதியில் கடை ஓரத்தில்……ஒரு பெண்ணுடன்…..

காஷ்யபன் அவனைக் காணவில்லை.

பைக்கை நிறுத்திய ராமோ, தன் கண்களை கசக்கி விட்டு பார்க்க…. ஆம், காஷ்யபன் ஷேத்ராவே தான் அது என அவனுக்கு உச்சியில் ஆணி அடித்தது போல புரிந்து விட்டது.

ராமின் மனைவியோ, “என்னங்க ஏன் இங்க நிக்கிறீங்க?” என ராமை உலுக்க…..

“என் பாஸ் டி அவர் இப்படி எல்லாம் கடைக்கு வர மாட்டார் அதான் ஷாக் ஆகிட்டேன்” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்து இருந்தான்.

“நீங்க அவரோட பேசலயா?”

“ஏன்டி உனக்கு நான் நல்லா இருக்கது பிடிக்கலையா?” என கண்ணாடியூடு அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டு இருந்தான் ராம்.

அவன் சொன்ன அவளோ தோரணையில் சிரித்து விட்டாள்.

இங்கு அது ஏதும் அறியாமல் அவளை பார்த்துக் கொண்டு இருந்தவன் அருகே ஐஸ் கிரீமை நன்றாக சாப்பிட்டு விட்டு அவன் அருகில் வந்தவள் அவன் முகத்தின் முன் சொடக்கிட்டு அழைக்க…

அப்போது தான் அவனே சிந்தை தெளிந்து “ஓ மை கோட் என தலையைக் கோதிக் கொண்டே ஆழி சாப்பிட்டியா?” எனக் கேட்க…

“ஹூம்…போகலாமா?”

“ஓகே” என்றவன் அவளோடு அவனின் கெஸ்ட் ஹவுஸ் நோக்கிப் புறப்பட்டான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 22”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!