தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! 25

4.7
(21)

பேராசை – 25

டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தவளை பார்த்துக் கொண்டே அவளுக்கு எதிர் இருக்கையில் அமரப் போனவன் என்ன நினைத்தானோ அவளின் அருகில் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்து விட அவளுக்கோ மயக்கம் வராத குறை தான்.

 

சிறு வயதில் இருந்தே அவன் தன் அருகில் அமர்ந்து இருந்து உண்டதே இல்லை ஆனால் இன்று அவனோ அனைத்தையும் தலைக் கீழாக அல்லவா நடத்திக் கொண்டு இருக்கின்றான்.

 

அதே ஆச்சரியம் தான் உணவுப் பரிமாறிக் கொண்டு இருந்த இந்து லதா உட்பட வெகு நாட்கள் கழித்து வந்த வாணிக்குமே!

 

வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்த வாணியை பார்த்த லாதவோ, “வாணி என்ன இங்கேயே வெறிச்சி பார்த்திட்டு இருக்க? போ போய் மத்த டிஷ்ஷஸ் எல்லாம் எடுத்துட்டு வா” எனக் கட்டளை இட….

 

“மன்னிச்சிடுங்க மா” என்றவர் சமையலறைக்குள் சென்று விட….

 

“அத்தை… அவங்க ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் வேலைக்கு வந்து இருக்காங்க  அதுக்குள்ள அவங்கள ஏசாதீங்க பாவம்ல” என்றாள்.

 

“சரிம்மா நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் போதுமா? நீ சாப்பிடு ” என்க…

 

அவளும் அருகில் இருப்பவனை கண்டுக் கொள்ளாமல் சாப்பிடத் தொடங்க… அவனோ அவளைக் கடைக் கண்ணில் பார்த்து விட்டு மெதுவாக தனது வலக் காலில் அவளது இடக் காலின் பாதத்தை வருட ஆரம்பித்து விட்டான்.

 

சாப்பிட்டு கொண்டு இருந்தவளுக்கு அவன் செய்யும் குறுகுறுப்பில் சாப்பாடு தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்ட உணர்வு.

அவனை பக்கவாட்டக திரும்பிப் பார்த்தாள் அவனோ, இதற்கும் தனக்கும் எது வித சம்பந்தமும் இல்லை என்பது போல கரும சிரத்தையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

 

அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டவள் அவளது இடக் காலை சற்று உள் இழுத்துக் கொள்ள அப்போதும் அவன் விட்ட பாடு தான் இல்லை.

 

 

 அவளின் முன் அவளது அன்னையும் அத்தையும்  நின்றுக் கொண்டு இருக்க, வாயை திறந்து அவனிடம் எப்படி சொல்வது என்ற எண்ணத்தில் உணவை அலைந்துக் கொண்டு இருந்தாள்.

 

அவளை இப்போது பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவன் “சாப்பிடு டி நான் வேணும்னா ஊட்டி விடவா?” என எவ்வித கூச்சமும் இன்றிக் கேட்டு விட…

 

அவர்கள் முன் நின்று தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்த லதாவோ அவனின் இப் பரிமாணத்தில் வியப்பில் வாயில் கையை வைத்து விட…

 

இந்துவோ, “ ஊட்டி விடலாம் தப்பில்லை” என எடுத்து வேற கொடுக்க…

 

அவளோ அதிர்ச்சியில் அவன் செய்தாலும் செய்து விடுவான் எனப் பயந்தவள் “ஐயோ வேணாம் நானே சாப்பிடுறேன்” என வேகமாக உண்ணத் தொடங்கினாள்.

 

“ஹே… ஹே மெதுவா சாப்பிடு” என்றவன் அவளுக்கு எழுந்து தண்ணீரை எடுத்து வைக்க….

 

“எப்படி டா இப்படி சேஞ்ச் ஆகிட்ட?” என லதா அதே அதிர்ச்சியில் கேட்க…

 

“மாம் நான் சேஞ்ச் ஆகிட்டேன்னு சொல்ற போல  இப்போ என்ன பண்ணிட்டேன்? எப்பவும் போல தானே இருக்கேன்” என அசால்ட்டாக அவன் சொல்ல….

 

“எலியும் பூனையுமா சண்டை போட்டுக்குவீங்களே ரெண்டு பேரும்” எனக் கேட்க…

 

லதாவை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே “உங்க பையன் மேல அவ்ளோ தான் நம்பிக்கையா என்ன? அவன் ஒரு நாள் மாற வாய்ப்பு இருக்காதா?” எனக் கேட்டு விட….

 

“அப்படி சொல்ல வர்லபா… நீ தான் பெருசா பேசிக்க மாட்ட பிஸ்னஸ் பிஸ்னஸ்ன்னு சுத்திட்டு இருந்த இப்போ இப்படி ஆறுதலா நாலு வார்த்தை நீ பேசுறப்போ உலக அதிசயமா இருக்கு” என்று புன்னகைத்துக் கொண்டார்.

 

அவனிடம் அமைதி மட்டுமே இதற்கு பதில் கூறவும் அவனுக்கு தோன்ற வில்லை.

 

நடித்துக் கொண்டு அல்லவா இருக்கின்றான் அவன்.

 

நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்த இந்துவுக்கு பொறுமை போக “போதும் போதும் என் மருமகனை கலாய்ச்சது நீ சாப்பிடுப்பா” என அவனுக்கு மறுபடி பரிமாறப் போக “ஐயோ அத்தை இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது” என்றவன் அருகில் ஒருவழியாக சாப்பிட்டு விட்டு பெரு மூச்சுடன் எழுந்தவளை ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டே இந்துவை பார்த்துக் கண் அசைக்க…

 

அதனைப் புரிந்துக் கொண்ட இந்துவோ “ஆழினிமா இன்னும் கொஞ்சம் சாப்பிடு” என அவளை வழி மறித்து நிற்க….

 

“ஐயோ ஆத்தா போதும் உங்க திடீர் பாசம் உங்களுக்கும் உங்க அருமை மருமகனுக்கும் பெரிய கும்பிடு” என்றவள் அவரைத் தாண்டி சென்று விட்டாள்.

 

“பொறாமை பிடிச்சவ அத்தை” என்றவன் தெற்றிப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டான்.

 

லதாவும் இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து நேரம் செல்ல மாலை போல அவன் தனது கெஸ்ட் ஹவுஸிற்குப் போக தயாராகிக் கீழே வந்த சமயம் ஜீவனுடன் பேசிக் கொண்டு இருந்த பிரகலாதனோ  “காஷ்யபன்” என அழைத்து இருக்க…

 

அவரை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே “சொல்லுங்க அப்பா” என சாதாரணமாக அவன் கேட்க…

 

“கொஞ்சம் பேசணும்பா” என்று விட்டு போனில் தேஜாவிடம் பேசிக் கொண்டு இருந்த ஆழினியை அழைக்க… அவளும் “இதோ வரேன் மாமா” என அழைப்பைத் துண்டித்து விட்டு வந்து இருந்தாள்.

 

அவளும் வந்து எதிர் இருக்கையில் அமர, “நான் நேரடியாகவே விஷயத்துக்கு வரேன் என்றவர் தொடர்ந்து மேரேஜ் பிக்ஸ் பண்ணுன டேட்லயே நடக்கும் அதுக்கு இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு நாளைக்கு நல்ல நாள் சோ ஆழினியை  கூட்டிட்டு போய் ரெண்டு பேரும் கார்ட் செலக்ட் பண்ணிடுங்கபா அது மட்டும் இல்ல அடுத்த நாலு நாள்ல நம்ம பிசினெஸ் சர்க்கில்ல இருக்க எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுத்திடலாம் என்றவர் நினைவு வந்தவராய் பிரஸ்க்கு நீயே சொல்லிடுப்பா” என்க….

 

“ஹும் ஓகே அப்பா” என்றான்.

 

பிரகலாதன் தன்னை அழைத்து பேசுவதில் அவனுக்கும் மனது லேசானது போல உணர்ந்தான்.

 

ஆனால், இங்கு ஒருத்தியோ இரண்டு வாரத்தில் திருமணம் என்றதில் அதிர்ந்து போய் விழித்துக் கொண்டு இருந்தாள்.

 

அதன் பின் பிரகலாதனும் ஜீவாவும் கதைக்கத் தொடங்கி விட….அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்துக் கொண்டவன் அதிர்ந்த நிலையில் தன்னை பார்த்துக் கொண்டு இருந்தவளை ஆழ்ந்து பார்த்தவன் இதழைக் குவித்து முத்தம் இடுவது போல ஒற்றைக் கண் அடிக்க…. “ஆத்தி இவன் கைல சிக்கினால் நம்ம மேட்டர் ஓவர் ஆகிரும் என மனதில் நினைத்துக் கொண்டவள் அவனைக் கண்டு கொள்ளாமல் மெதுவாக எழுந்து அறையை நோக்கி செல்லத் தொடங்கினாள்.

 

நாவினால் கன்னத்தை முட்டி புன்னகைத்துக் கொண்டவன் தனது கெஸ்ட் ஹவுஸ் போக வெளியேறி இருந்தான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அப்படியே நாட்கள் நகர ஆரம்பித்த தருணம் அது.

 

இருவரும் சென்று செலக்ட் செய்து கார்ட்டும் வந்து இருக்க அதுவோ அனைவருக்கும் பிடித்தும் விட்டு இருந்தது.

 

இதனிடையில் வருண் மற்றும் தேஜா ஆழினியை வீட்டில் வந்து சந்தித்து விட்டு போகும் அந்த இடைப்பட்ட நாட்களில் தேஜாவிடம் தனது காதலையும் வருண் கூறி இருந்தான்.

 

அவளும் பெரிதாக அவனை வேண்டாம் என மறுக்க எந்த காரணமும் இல்லை அதனையும் தாண்டி அவளுக்கு வருணைப் பார்த்த நாள் தொட்டே அவன் மேல் ஓர் ஈர்ப்பு இருந்துக் கொண்டு தான் இருந்தது அவளும் சம்மதம் சொல்லி இருக்க இருவரும் ஆழினியைப் பார்க்க வருவது போல வெளியில் காதல் பறவைகளாக சுற்றித் திரிந்தனர்.

 

திருமணத்திற்கு நான்கு நாட்கள் மீதம் இருக்க, ஆழினிக்காக அவனே தெரிவு செய்த பத்திற்கும் மேற்பட்ட புடவைகள் அவளது அறையில்  குவிந்துக் கிடந்தன.

 

அவளுக்கு பிடித்த அடர் பச்சை நிறத்தில் இரண்டு புடவைகள் இருக்க… அதில் ஒருப் புடவை அவளைக் கவர, அதை எடுத்து தன் மேல் வைத்துப் பார்க்கும் போது அதில் இருந்து ஒரு கடிதம் வீழ்ந்தது.

 

புடவையைக் கட்டிலில் போட்டு விட்டு அந்த கடிதத்தை எடுத்து பிரித்தவள் அதில் எழுதி இருந்ததை பார்த்து ஒரு புறம் அதிர்ச்சி என்றால் அவளின் கன்னங்களோ தானாகச் சிவந்து கொண்டன.

 

ஆம், “டூ மை  ஆழி பேபி” என கடிதத்தை ஆரம்பித்தவன் அடுத்து எழுதி இருந்தவை அனைத்துமே அந்தரங்கங்ளே ஆகும்.

 

இது வரையிலும் இறுக அணைத்து இதழ் முத்தங்கள் மாத்திரமே தந்து அத்து மீறாமல் இருந்தவனின் இத்தகைய பரிமாணம் அவளைத் தானாக வெட்கம் கொள்ள வைத்து இருந்தது.

 

கடிதத்தை மடித்து தன் பீரோவில் வைத்து பூட்டியவள் அந்த புடவையை தன் மேல் மறுபடியும் போட்டு கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தை பார்த்தவளுக்கு அவனே தன் பின்னால் நின்று “செம்ம அழகா இருக்க பேபி” எனக் காதில் கிசுகிசுப்பது போலவே இருக்க அவளுக்கோ மேனியில் ஒருவித சிலிர்ப்பும் புது மணப் பெண்ணுக்குரிய வெட்கமும் எதிர்ப் பார்ப்புமே ஒருங்கே தோன்றியது.

 

இதற்கிடையில் அவளின் ஆராய்ச்சியையும் தொடங்கி இருந்தாள்… அவனும் தன் பிஸ்னஸில் தன்னை புகுத்தி இருக்க நாட்கள் நகர திருமண நாளின் முதல் நாள் அன்று சொந்த பந்தங்களும் வந்து சேர்ந்து இருந்தனர்.

 

ஆழினிக்கு மெகந்தி பங்ஷன் நடந்துக் கொண்டிருந்தது.

 

அவளுக்கு மெகந்தி போட்டுக் கொண்டு இருந்தது என்னவோ தேஜா தான்.

“ஹே… ஆழினி எனக்கு ஒரு டவுட்” என்றாள் தேஜா.

 

“சொல்லு டி”

“உன் ஆள் பெயரைக் காஷ்னு எழுதுறதா? இல்லனா காஷ்மோரானு எழுதுறதான்னு யோசிச்சிட்டு இருக்கேன் டி” என்க…

 

இப்போது அவளை வெளிப்படையாக  முறைத்த ஆழினி, “இப்போ உனக்கு இது ரொம்ப முக்கியம் போடிங் என்றவள் தொடர்ந்து நானே டென்ஷன்ல இருக்கேன் டி”

 

“என்னடி நல்லா தானே போயிட்டு இருக்கு தெளிஞ்சி இருந்தியே இப்போ என்னாச்சி? என்றவாறு மெகந்தியை போடத் தொடங்கி இருந்தாள் தேஜா.

 

“மனசுக்கு ஏதோ போல பயமா இருக்கு டி … எப்படினு சொல்ல தெரியல” என்றாள் பாவமாக….

 

“கூல் டி எல்லாரும் கல்யாணத்துக்கு முதல் நாள் சொல்ற டயலொக் தான் நீ இப்படி பேச  ரீசன் என்னடி அண்ணா கூட சண்டையா?”

 

“சண்டை எல்லாம் இல்ல… காஷ் என்மேல காட்டுற லவ் அஹ் நினைச்சு தான் எனக்கு நெருடலா இருக்கு சொல்லப் போனால் பயமா இருக்கு டி” என்றாள்.

 

தொழில் முறை நண்பர்களோடு கதைத்துக் கொண்டு இருந்தாலும் அவனின் கவனம் முழுவதும் அவனவளின் மீது தான் இருந்தது.

 

அவளின் கலக்கமான முகத்தைப் பார்த்தவன்  “எக்ஸ்கியுஸ் மீ” என்று விட்டு அவன் அவளை நோக்கி செல்ல அவனின் தொழில் முறை நண்பர்களின் “ஓஹோ என்றவாறு கம் ஒன் ஷேத்ரா” எனக் கூச்சல் போட அவனுக்கு தான் வெட்கமாகிப் போனது பின்னால் திரும்பி அவர்களைப் பார்த்தவன் ஒற்றைக் கையில் ஐ விரலையும் சுருக்கி வாயை மூடு என்ற தொணியில் அவன் சைகை செய்து விட்டு ஆழினியை நோக்கி விரைந்தான்.

 

அவர்களா நிறுத்துவார்கள்? அவனை விடாது அவர்களது கூச்சலே பின் தொடர்ந்தது.

 

அவன் அருகில் வரவும் தேஜா அவளுக்கு மெகந்தி போட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

 

காஷ்யபனை ஒரு பார்வை பார்த்து விட்டு தேஜா அவனுக்கு வழி விட்டு எழுந்து நிற்க, அவனின் பார்வை முழுவதும் ஆழினியைத் தான் வருடியது.

 

அவனின் விழி வீச்சைத் தாழ முடியாத அவளோ விழிகளைத் தாழ்த்திக் கொள்ள… அவனுக்கோ சுற்றம் மறந்து போனது.

 

அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தே விட்டான்.

 

சுற்றம் சூழ அனைவரும் கூச்சலிட அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தே விட்டாள்.

 

இப்போது எல்லோர் முன்பும் முத்தம் கொடுத்து விடுவான் என்ற பயத்தில்  “எழும்புங்க எல்லாரும் பார்க்குறாங்க காஷ்” என்றாள் மெல்லிய குரலில்…

 

அவளின் வலக் கையில் “காஷ்” எனத் தன் பெயர் எழுதி இருப்பதை பார்த்து விட்டு தேஜாவை அவன் நிமிர்ந்து பார்க்க…

 

“ஐயோ நான் இல்ல” என்றவள் வருணின் பின்னே ஒளிந்துக் கொண்டாள்.

அவளின் செய்கையில் மென் புன்னகையும் வந்து விட… அவனை இப்போது அதிசயமாக பார்த்தது என்னவோ தேஜாவும் வருணும் தான்.

 

அவன் தான் தேவைக்கு கூட சிரிக்க மாட்டேனே!

 இப்போது அல்லவா நேரிலேயே அவனின் காதல் லீலைகளைப் பார்க்கின்றார்கள் அதனால் தான் அந்த வியப்பு.

 

“நான் எழனும்னா நீ கொஞ்சம் ரூப்டாப்க்கு வர்றியா?” என ஒற்றைக் கண் அடிக்க….

அவளுக்கு அவன் எதற்கு கூப்பிடுகின்றான் என புரிந்து போக அவளையும் மீறி அவளின் கன்னங்கள் தானாக சிவந்து விட்டன.

“எல்லாரும் இருக்காங்க நீங்க போங்க நான் கொஞ்சத்துல வரேன்” என்றாள் சுற்றிலும் அவர்களையே பார்த்துக் கொண்டு இருப்பவர்களை பார்த்து….

 

“நோ வே என் கூட வா இல்லனா உன்னை தூக்கிட்டுப் போய்ருவேன் எப்படி வசதி?” என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க….

 

“நானே வரேன் என்றவள் எழப் போக நீண்ட நேரம் அவள் அமர்ந்து இருந்ததால் என்னவோ எழுந்து நின்ற பின்னும் அவள் சற்று சமநிலை இன்றி விழப் போகும் சமயம் அவளே ஏன் யாருமே எதிர் பார்க்கவில்லை.

 

ஆம், அவளைத் தன் கைகளில் ஏந்தி இருந்தான்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! 25”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!