தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 27

5
(20)

பேராசை – 27

 

சூரியன் தன் பொற்கரங்களை பூமியில் பரப்ப வழமைப் போல காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்பவனுக்கு என்றும் போல விழிப்பு வர, மெதுவாக இமைகளைத் திறந்தவன் மார்பில் ஏதோ குறுகுறுப்புத் தோன்ற அப்போது தான் குனிந்து தன்னை பார்த்தான்.

 

தன் வெற்று மார்பில் தலையை வைத்து ஆழ்ந்து உறங்குபவளை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் பார்வை அவளின் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமத்தில் நிலைத்து பின் இதழ்களில் தேங்கி நின்று பின் பார்வை கீழிறங்க அதில் நேற்று இரவு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வர உணர்வுகளோ கிளர்ந்து பேயாட்டம் போட ஆரம்பித்து விட்டன.

 

நேற்று அவளை ஆட்கொண்ட போது வலியில் சுருங்கிய முகத்தை பார்த்து அவனுக்கே பாவமாக போக, ஒரு தடவையோடு அவளை அணைத்துக் கொண்டு உறங்கி இருந்தான்.

 

இன்று காலை அவர்கள் இருந்த நிலையில் அவனுக்கோ உணர்வுகள் கட்டவிழ தொடங்கி இருந்தன.

 

எதிலும் பெர்பெக்ட் ஆக இருப்பவன் அதிகாலையில் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் மறந்து அவனவளின் மேல் பித்தாகிப் போனான்.

 

இருவர் மேலும் பாதியாக படர்ந்து இருந்த போர்வையை இழுத்து முழுவதுமாக  போர்த்திக் கொண்டவன் போர்வையினுள் செய்த சில்மிஷங்களில் அவளின் தூக்கமோ கலைந்து வெகு தூரமாகப் போனது.

 

“ஐயோ காஷ் விடுங்க” என்று சிணுங்கியவளின் வார்த்தைகள் அவனின் இதழ்களுக்குள் புதைய அடுத்து நடந்தவை அனைத்துக்கும் இருவருமே பொறுப்பாகினர்.

 

காலை 8 மணி ஆகியும் காஷ்யபனைக் காணவில்லை என பார்த்துக் கொண்டு இருந்த இந்துவின் தோளைத் தட்டிய லதா “அவன் இப்போ வர மாட்டான் இந்து” என ஒரு நமட்டுச் சிரிப்புடன் சொல்ல….

 

இந்துவுக்கும் புரிந்து போக, “கோயில் போகணும்ல லதா அதான்…  ஆழினியும் கூச்சப்படுவானு நானும் நைட் அவளுக்கு புத்திமதி எதுவும் சொல்லாமல் விட்டுட்டேன்… அவள் மாப்பிளை கிட்ட எப்படி நடந்துகுவானு ஒரே படபடப்பா இருக்கு” என்றார்.

 

இந்துவை மெல்லிய புன்னகையுடன் பார்த்த லதா, “அவ சின்ன பொண்ணு இல்ல இந்து… அவளுக்கு தான் நான் பெத்த மகனை ஹென்டில் பண்ண முடியும் என மேலும் தொடர்ந்தவர் சந்தோஷமா இருக்கட்டும் வர்ற டைம்க்கு வரட்டும்”

 

மெல்லிய புன்னகையுடன் இந்துவும் காஃபியை போடத் தொடங்கி விட…

 

அறையிளோ, தன் மேலான அவனின் தேடலில் வெட்கத்தில் செங்காந்தள் மலராக மேனி முழுவதும் சிவந்து அவனையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

“ஆழி என்ன பேபி என்னை இப்படி சைட் அடிக்கிற”

 

“என் புருஷனை நான் சைட் அடிக்க கூடாதா என்ன?” என அவள் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க…

 

அவனோ தெற்றிப் பற்கள் தெரிய புன்னகைத்தவன்  “ஐம் யுவர்ஸ் ஆழி நீ சைட் அடிக்க மட்டும் இல்ல இன்னும் நிறைவே என்மேல உனக்கு உரிமை இருக்கு” என்றவன் கண் அடிக்க….

 

சும்மாவே வெட்கத்தில் கிடந்தவள் பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள்.

 

அவனின் தேடல்கள் முடிவில்லாமல் தொடர “ஐயோ டைம் ஆச்சு காஷ் வீட்ல நம்மல தேடுவாங்க” எனச் சொன்னவளுக்கு வீட்டில் அனைவரையும் எப்படி எதிர் கொள்வது என்ற எண்ணம் எழ தன்மேல் இருந்தவனை விலக்கி விட்டு போர்வையை தன் மேல் போர்திக் கொண்டு எழப் போனவள் கையைப் பற்றி பிடித்தவன் “உனக்கு மட்டுமா? எனக்கும் தான் லேட் ஆச்சு டி அண்ட் நமக்கு மேரேஜ் ஆயிடுச்சுன்னு அவங்களுக்கு தெரியும் தானே” என்க….

 

அவனை முறைக்க முடியாமல் தோற்றுப் போனவள் “ நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என அவன் கையில் இருந்து தன் கையை உருவிக் கொண்டாள்.

 

தலையைக் கோதிக் கொண்டவன் அவளே சற்றும் எதிர் பார்க்காதவாறு அவளை போர்வையோடு ஏந்திக் கொண்டு வாஷ்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டான்.

 

நேரமும் 11 மணியைத் தொட குளித்து விட்டு வெண்ணிற டவல் இடையில் தவழ வெட்கப் புன்னகையுடன் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் புகுந்துக் கொண்டாள்.

 

அவனும் உஷ்ணப் பெரு மூச்சுடன் தயார் ஆனவன் அடர் நீல நிற ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டு ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றவனை பார்த்துக் கொண்டே அதே அடர் நீல நிற புடவையில் அன்று மலர்ந்த தாமரைப் போல் வந்தவளைப் பார்த்து “ யூ ஆர் லூகிங் சோ பிரிட்டி இன் சாரி” என்றான் அவளை இழுத்து அணைத்த படி…

 

அவனின் அணைப்பில் இருந்துக் கொண்டே அவனின் கையில் நருக்கென கிள்ளினாள்.

 

“அவுச் என கத்தியவன் ஏன் டி கிள்ளுற” எனத் தன் கையை தேய்த்துக் கொண்டே அவன் கேட்க….

 

 

“சேம் பின்ச்.. நாம ஒரே கலர்ல டிரஸ் பண்ணி இருக்கோம்” என அவள் கண்களைச் சிமிட்ட…

 

அவனோ “அதுக்கு நீ இனி இப்படி கிள்ள தேவை இல்ல” என்றவன் அவளை மேலும் இறுக அணைத்து அவளின் இதழை வன்மையாக தீண்டி விட்டு விலக….

 

அவனை முறைத்துக் கொண்டு தடித்து இருந்த அவளின் இதழை வருடியவளைப் பார்த்து  “இனிமேல் இப்படி பண்ணுனா நானும் புரிஞ்சிப்பேன்” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்…

 

“ஓஹோ அப்படியா சார்” என்றவள் அவனின் இதழ்களை அவள் மிக மிக வன்மையாக தீண்டி விட்டு அவள் விலக….

 

 

“ஆபீஸ் போகணும் ஆழி” என்றவன் பக்கவாட்டு கண்ணாடியில் தன் இதழை ஆராய தொடங்கியவனை “பொண்டாட்டி கடிச்சி வச்சிட்டான்னு சொல்லுங்க அதான் நமக்கு மேரேஜ் ஆகிடுச்சே” என அவனின் டயலொக்கையே திருப்பி அவனிடம் சொல்ல….

 

அவளின் இப் பரிமாணத்தில்  விழுங்கும் பார்வை பார்த்தவன் அவளின் இடையை அணைத்து பிடித்த படி “வா போகலாம்” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

“நீங்க போங்க நான் வரேன் என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் எல்லாமே பெர்பெக்ட் ஆஹ் தான்டி இருக்கு வா என்றவன் அவளின் இடையை தாண்டிய கூந்தலிலைப் பார்த்து விட்டு அவனாகவே டிராயெரில் உள்ள கிளட்ச் கிளிப் ஐ எடுத்து அவளின் முடியை சரி செய்து அதில் கிளட்ச் கிளிப்பை போட்டு விட்டான்.

 

தன்னையே விழி விரிய பார்த்துக் கொண்டு இருந்தவளை “உனக்கு மேக்கப் தேவையே இல்லை இப்படியே வா போகலாம்” என்றவன் அவளின் இடையை அணைத்தபடியே அவளோடு வெளியேறி இருந்தான்.

 

11.30 மணியைத் தாண்டி இருக்க, மென் புன்னகையுடன் இருவரும் கீழே இறங்கி வரும் காட்சியை பார்த்துக் கொண்டு இருந்த இந்து மற்றும் லதாவுக்கு ஒருங்கே திருத்தி புன்னகை தோன்றியது.

 

ஆழினிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.

 

யாரையும் பார்க்க முடியவில்லை.

 தலையைக் குனிந்துக் கொண்டே சென்று டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்டாள்.

 

அவனுக்கோ அப்படி ஏதும் ஒன்றும் இல்லை போலும் சாதாரணமாகவே இருந்தான்.

 

அவளின் தயக்கத்தை புரிந்த லதா மற்றும் இந்து அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் காலை உணவை எடுத்து வைத்துக் கொண்டே குரலை லதா செரும, இந்துவோ “ரெண்டு பேரும் இன்னைக்கு கோவில் போயிட்டு வாங்களேன் ” எனப் பேச்சைத் தொடங்கி வைக்க….

 

“அத்தை எனக்கு இன்னைக்கு மீட்டிங் இருக்கு” என அவன் சாதாரணமாக சொல்லி விட்டு ஆழினியைப் பார்க்க….

 

 

அவளோ, தன் உணவிலேயே கவனமாக இருந்தாள்.

 

“இன்னைக்கே என்ன அவசரம் கண்ணா நாளைக்கு ஆபீஸ் போகலாமே” என்றார் லதா.

 

“ஐ காண்ட் மாம் கிளைண்ட்ஸ் வர்றாங்க… என் புரோடக்ட் சம்பந்தமா மீட்டிங்ல டிஸ்கஷன் சோ கட்டாயம் நான் போயே ஆகணும் என்றவன் அப்படியே எழுந்து கொள்ள…..

 

பழைய வேதாளம் வந்துறிச்சு போல என மனதில் நினைத்துக் கொண்டவர் அதற்கு மேல் வாயை திறக்க வில்லை.

 

இந்துவும் ஒரு பெரு மூச்சுடன் அவனையே பார்த்திருக்க, ஆழினியை திரும்பி பார்த்துவிட்டு “சரி அவளை கூட்டிட்டு போறேன்…. போற வழில கோவில் போயிட்டு ஆழியை கார்ல அனுப்பி விடுறேன்” என்றான்.

 

இதுவே போதும் எனப் புன்னகைத்த இந்து “சரிப்பா” என்றார்.

 

“ஓஹோ.. சார் என்னை அவர் ஆபீஸ்க்கு கூட கூட்டிட்டு போக மாட்டாரோ? என்னை அப்படியே அனுப்பி விட்டுருவாரோ!” என மனதில் நினைத்துக் கொண்டவள் அவனின் பின்னே சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

 

புறப்பட தயாராக நின்ற காஷ்யபன் முதல் முறையாக அவன் கேட்ட கேள்வியில் முதலில் மகிழ்ந்தது ஆழினி தான்.

 

ஆம், யாரையும் கண்டு கொள்ளாமல் விலகி இருப்பவன் இன்று “ அப்பா எங்க மாம்?” எனக் கேட்டு இருந்தான்.

 

“அண்ணாவும் அவரும் ஆபீஸ் வரை போயிருக்காங்க பா” என்றார் முகம் விகர்சிக்க…

 

“ஹான்” என்றவன்  இருவருக்கும் தலை அசைத்து விட்டு ஆழினியுடன் கோயிலை நோக்கி புறப்பட்டு இருந்தான்.

 

மகனின் மாற்றத்தில் மகிழ்ச்சியில் லதாவுக்கு கண்ணில் இருந்து கண்ணீரும் வந்து விட்டு இருந்தன.

 

“ப்ச்ச….லதா என்ன இது ரெண்டு பேரும் கோயில் போறப்போ கண்ணை கசக்கிட்டு இருக்க… நான் தான் சொன்னேன்ல எவ்ளோ நாளைக்கு அவன் அவனுக்குள்ளே இறுக்கிப் போய் இருப்பான் சொன்னேன் தானே அவன் நம்ம கூட நல்லா பேசுவான்னு” என்றவர் அவர் கண்களை துடைத்து விட்டார்.

 

லதாவுக்கோ வார்த்தைகள் வர மறுத்தன.

 

எவ்வளவு அக்கறையான வார்த்தைகள்.

தேவைக்கு அதிகமாக பேசாதவன் இன்று பிரகலாதனை கேட்டு இருக்கின்றான் என நினைத்தவர் விறு விறுவென சென்று அலைபேசியை எடுத்து பிரகலாதனுக்கு அழைத்தார்.

 

கரை ஓட்டிக் கொண்டு இருந்தவனை கடைக் கண்ணால் பார்த்தவள்  “என்ன இந்த மாற்றமோ…” என பாட ஆரம்பித்தவளை ஆராய்ச்சியாக பார்த்தவன் “என்ன மாற்றம்?” என அவளையே திருப்பி கேட்டு இருந்தான்.

 

“மாமா கூட நீங்க  தேவைக்கு அதிகமாக பேசுனது இல்லை அப்படி இருக்க நீங்க இன்னைக்கு மாமாவை கேட்டு இருக்கீங்களே அதான் ஷாக் ஆகிட்டேன்” என்றாள்.

 

அதில் அவனின் உடல் தானாக இறுகியது.

 

அவளால் அல்லவா அவன் எல்லோரிடமும் தள்ளி நிற்கின்றான்.

அவள் மேல் அக்கறை பாசம் பொழிவதால்  அவன் தனித்து விட்டதாக உணர்ந்தவன் உடல் விரைக்க அவளிடம் இப்போதே இதனால் தான் என உரக்க கத்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது.

 

அவனின் அமைதியில் “காஷ்” என அவள் கூப்பிட…

 

ஸ்டியரிங்கை இறுகப் பற்றி தன்னை சமன் படுத்தியவன் “எப்போதும் போல தான் இருக்கேன் ஆழி என்றவன் கதையை மாற்றும் பொருட்டு எந்த கோவில் போகணும்?” எனக் கேட்க…

 

“கதிரேசன் கோவில் போவோம்”

 

“ஓகே ஆழி” என்றவன் முயன்று வரவழைத்த புன்னகையுடன் கோயிலை நோக்கி காரை செலுத்தத் தொடங்கினான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!