தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 28

4.8
(23)

பேராசை – 28

 

கோயில் சென்று தங்கள் வேண்டுதல்களை முடித்துக் கொண்டவர்கள் காரில் ஏறும் தருணம் அவளோ, “நானும் உங்க ஆபீஸ் வரவா?”

 

அதில் அதிர்ந்தவன் தன் விருப்பம் இன்மையை சிறிதும் முகத்தில் காட்டாமல் “வை நாட் தாராளமா வரலாம்” என்றான்.

 

அவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே உள்ளே அமர்ந்தவள் “நீங்க முதல்ல இருந்து டல் ஆஹ் இருக்கீங்களே என்னாச்சு?” என அவள் கேட்க….

 

“இவள் வேற என மனதில் நினைத்துக் கொண்டவன்  மீட்டிங் டென்ஷன் அதான் பேபி”

“நீங்க அதுக்காக டென்ஷன் ஆகுற ஆள் எல்லாம் இல்லையே” என அவள் பாயின்ட் ஆக பேசி விட அவனுக்கு தான் ஐயோடா என்றாகி விட்டது.

 

“நதிங் ஆழி… மெஜெஸ்டிக் ஹெவன் ரிசார்டுக்கு நான் பெர்ஃப்யூம் புரோடக்ட் லோன்ச் பண்ண போறேன் அதான் கொஞ்சம் டென்ஷன்” என அவனுக்கு இல்லாத டென்ஷன் ஐ சொல்ல….

 

“ஓஹோ… என்றவள் அதுக்கு தான் இன்னும் டைம் இருக்கே…. பொறுமையா பண்ணலாமே சோ இதுல டென்ஷன் ஆக ஒன்னும் இல்லை காஷ் பீ கூல்” என்றாள்.

 

“கிளைண்ட்ஸ் கிட்ட நான் என்னோட புரோடக்ட்ல  என்ன இங்கிரீடியன்ட்ஸ் சேர்க்கப் போறேன்னு  டிஷிஷனை சொல்லனும் ஆழி அவங்க அப்ரூவ் பண்ணணும் அண்ட் அந்த ரிசார்ட் எம்டி (MD) லினாவுக்கு பதிலா அவ பீஏ (PA) கதிர் வர்றானாம் அவன் முதல்ல அப்ரூவ் பண்ணனும்” என்றான்.

 

“இதுக்கு எல்லாம் டென்ஷன் ஆகுனா எப்படி? உங்க புரோட்டெக்ட் அஹ் கிளைண்ட்ஸ் கிட்ட அட்ரேக்டிவ்வா எக்ஸ்பிலைன் பண்ணுங்க நிச்சயமா சக்சஸ் ஆகும்” என்றாள் புன்னகையுடன்…

 

அவனே பிஸ்னஸை கரைத்து குடித்தவன் அவனுக்கு இப்படி கூறுபவளுக்கு வெளிப்படையாக தொண்டை வரை வந்த வார்த்தைகளை கூற வந்து விழுங்கிக் கொண்டவன்  “ஐ வில் டிரை மை பெஸ்ட் அண்ட் தேங்க்ஸ் ஆழி” என்றான்.

 

அவளோ, மென் புன்னகையுடன் “நான் உங்க ஆபீஸ் வர்ல காஷ் என்னை அந்த ஷாப்ல இறக்கி விடுங்க எனக்கு என் எக்ஸ்பெரிமென்ட் சம்பந்தமா சில திங்ஸ் வாங்கணும்” என்று சொல்ல….

 

முதலில் அவள் வரவை விரும்பாதவனோ இப்போது அவள் வரவில்லை என்றதும் மனதில் அவனை அறியாமலே ஓர் ஏமாற்றம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

இழுத்து பெரு மூச்சை விட்டவன் “ ஹூம் ஓகே ஆழி” என்றவன் அவளை இழுத்து இறுக அணைத்து அவளின் இதழில் இதழ் பதித்தவன் தனக்கு வேண்டியவை அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் விட்டான்.

 

அப்படியே நாட்கள் நகர இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமித்து நாட்களை கடத்தினர்.

 

அப்படியே அவள் அவளின் ஆராய்ச்சியிலும் அவன் தனது பிஸ்னெஸிலும் கவனம் செலுத்தினர்.

 

அவளின் மீதான தாபம் மிதம் மிஞ்சி இருக்க அவளை ஒரு கணமும்  விட்டுப் பிரியவே இல்லை அவன்.

 

இந்த இடைப்பட்ட நாட்களில் அவளுக்கு அவனின் மீதான காதல் அதிகரித்ததே அன்றி குறையவே இல்லை.

 

அவனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அவளை முழுவதுமாக நம்ப வைத்து இருந்தான் அவன்.

 

 குழந்தைகள் மீதான அவளின் ஆசையை தெரிந்துக் கொண்டவன் அன்றைய இரவில் அவளின் காதருகே நெருங்கி “ஆழி எனக்கு உன்னைப் போல பேபி வேணுமே” என்றவன் அவளை அணைத்து தன்மேல் போட்டுக் கொள்ள…

 

முகம் சிவக்க வெட்கப் புன்னகையுடன் கண்களைச் சிமிட்டியவள் “ தரேன் என்றவள் தொடர்ந்து பட் என்னோட ஆராய்ச்சியோட ரிசல்ட் நாளைக்கு தெரிய வந்துடும் சோ நாளைக்கே என்றவள் அவனின் விழி வீச்சை தாழ முடியாது அவன் மார்பில் தலையை புதைத்துக் கொண்டாள்.

 

அவளை அணைத்துக் கொண்டவன் “ நாளைக்கு நானும் உனக்கு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்” .

 

சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தவள் “என்னது இப்போவே சொல்லுங்களேன் பிளீஸ்” என்றாள் கெஞ்சலாக….

 

“நோ வே பேபி நாளைக்கே சொல்றேன் இப்போ தூங்கு”  என்றவன் அவளின் நெற்றியில் மென் முத்தம் பதித்தான்.

 இதழ்களை பிதுக்கியவள் “நாளைக்கே பார்த்துக்கிறேன்” என்றவள் அவனின் மீதே தூங்கிப் போனாள்.

 

அடுத்த நாளும் விடிந்தது முதலில் எழுந்தவன் பார்த்தது அவள்  இல்லாத வெறுமையான இடத்தை தான்.

இதுவே முதல் முறை அவனுக்கு முன்பாக அவள் எழும்பி இருப்பது.

 

அவளை அணைத்து இதழ் தீண்டுபவனுக்கு அவள் இல்லாத வெறுமை ஏதோ செய்ய விறு விறுவென எழுந்து தன் உடையை எடுத்து போட்டுக் கொண்டவன் அறை முழுவதும் அவளை தேடினான்.

 

அறையில் அவள் இருக்கும் தடமே இல்லை.

 

தன் காலைக் கடன்களை முடிக்காமல் ஹாலுக்குள் செல்லாதவன் அவனவளைத் தேடி முதல் முறையாக “ஆழி….ஆழி” என அழைத்துக் கொண்டே ஒவ்வொரு அறையாக திறந்து தேடினான்.

 

 

அவனை ஆராய்ச்சியாக பார்த்த லதா “ சாரிபா உனக்கு காஃபி எடுத்திட்டு வர தான் இருந்தேன்” என மேலும் ஏதோ சொல்ல வந்தவரை இடைமறித்து “ஆழி எங்க மாம்?” எனக் கேட்டு இருக்க, “அதை தான் சொல்ல வந்தேன் என்றவர் இப்போ தான் அவ லேப்க்கு போறேன்னு சொல்லிட்டு போனாப்பா” என்றார்.

 

இழுத்து பெரு மூச்சை விட்டவன் தன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் “ஹும் ஓகே என்றவன் அவனே சமையலறைக்குள் என்றும் இல்லாத வழக்கம் போல காஃபியை எடுத்துக் கொண்டு வர நம்ப முடியாத அதிர்ச்சியில் நின்று இருந்தார் லதா.

 

“மாம் நான் மேல ரூமுக்கு போறேன்”  என்றவன் படிகளில் மேலேறி சென்றான்.

 

அதே அதிர்ச்சியில் பதில் ஏதும் சொல்லாது இந்துவை தேடிக் கொண்டு அவர் சென்று விட….

 

இங்கு அறைக்குள் வந்தவன் மேசையில் காஃபியை வைத்து விட்டு அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைப்பை எடுத்தான்.

 

இரண்டு தடவைகள் எடுத்தும் முழுதாக அழைப்புகள் சென்று நின்று விட்ட போதும் அவளிடம் இருந்து பதில் இல்லாது போக, இவ்வளவு நாளும் அவளிடம் அவளது லேப் எங்கே உள்ளது? எனத் தான் கேட்டுக் கொள்ளாத மடத் தனத்தை நினைத்து நொந்தவன் அப்படியே நெற்றியை நீவிய படி கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்.

 

“ஷிட்” என  முணுமுணுத்துக் கொண்டவனுக்கு அவள் தன் அருகில் இல்லாத  ஒவ்வொரு மணித் துளிகளைக் கடக்கவே முடியாமல் அப்படியே அமர்ந்து இருந்தான்.

 

அப்போது என பார்த்து அறைக் கதவைத் திறந்துக் கொண்டு சட்டென உள்ளே வந்தாள் ஆழி.

 

அவன் அவளை கண்ட அடுத்த கணமே எழுந்து சென்று அவளை அணைத்து “ என்கிட்ட சொல்லிட்டு போறது இல்லையா ஆழி?அட்லீஸ்ட் நான் உன்கூட வந்து இருப்பேன்ல” என்றவன் அப்போது தான் அவள் அவனை இன்னும்  அணைக்காததும் அவளின் மௌனமும் உணர்ந்து அவள் முகத்தைத் தாங்கி அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலக்க விட்டவன் “என்னாச்சு பேபி?” என்றான் ஆழ்ந்தக் குரலில்.

 

அவளோ, குரல் தளுதளுக்க “என் எக்பெரிமென்ட் ஃப்ளாப் ஆகிறிச்சு” உடைந்து அழுதே விட்டாள்.

 

மாறாக இதற்கு அவன் சந்தோஷப் பட்டு இருக்க வேண்டும்.

 

அவள் அழுவதைக் காண முடியாத அவனோ “இதுக்கு ஏன் அழுற என்றவன் அவள் கண்களை துடைத்து விட்டு என்னாச்சு நான் டிரை பண்ணி பார்க்கட்டுமா?” எனக் கேட்டு இருந்தான்.

 

“நான் வருண் கூட அவ்ளோ தூரம் ஃபாரஸ்ட் போய் வந்தது எல்லாம் வேஸ்ட் ஆகிறிச்சு காஷ்”

 

அவனுக்கு தான் ஒன்றுமே தெரியாத எதற்காக அங்கு போனால் என…

 

புரியாமல் விழித்தவன்  “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

 

“கார்டன்சில்லோ பிளான்ட்” என்றாள் வெறுமையாக…

 

“சோ வாட் ஆழி?”

 

அவளும் அந்த தாவரம் தொடர்பான விபரங்கள் மற்றும் சிங்கராஜா வனத்தில் ஜேம்ஸிடம் அத் தாவரத்தை வாங்கிக் கொண்டது தொடக்கம் அனைத்தையும் கூறியவள் “போன வீக் தான் கொஞ்சமா துளிர் விட்டு இருந்துச்சு இப்போ என்ன ஆச்சோ அந்த பிளான்ட் வாடி போச்சு இனி என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல காஷ் மைண்ட் ஃபுல்லா பிளாங்க் ஆஹ் இருக்கு” என்றாள் அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே….

 

அவனோ நிதானமாக “ சோ அந்த பிளான்ட் அமேசான் ஃபாரஸ்ட்ல மட்டும் தான் இருக்கு ரைட்? எனக் கேள்வியாக நிறுத்த…

 

அவளும் மூக்கை உறிஞ்சிக் கொண்டே “ஆம்” என தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

 

“அல்ரைட் நைட் உனக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சு இருக்கேன்னு சொன்னேன்ல அது என்னன்னு பார்க்க வேணாமா?”

 

“நானே டென்ஷன்ல இருக்கேன் நீங்க சம்பந்தமே இல்லாமல் பேசுறீங்க” என அவனை முறைக்க…. அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் “சம்பந்தம் இருக்கு என்றவன் அவள் கண்களை மூடிய படி மேசையின் அருகே நடத்திக் கூட்டி வந்து இருந்தான்.

 

அவளது விழிகளில் இருந்து கைகளைக் எடுத்துக் கொண்டவன் மேசையில் இருந்த ஒரு டிராவல் டிக்கெட்டை எடுத்து அவளிடம் நீட்டி இருந்தான்.

 

புரியாமல் விழித்தவள் அதை வாங்கிப் பார்த்தவள் அதிர்ந்து விழிகள் விரிய உண்மையிலேயே அவளுக்கு ஹார்ட் அட்டாக் வருவது போல தன் இருந்தது.

 

ஆம், பிரேசிலுக்கு ஹனிமூன் சூட் புக் பண்ணியது மட்டும் இல்லாமல் அமேசான் காட்டின் உள் பிரவேசிக்க வேறு அனுமதி வாங்கி வைத்து இருந்தான்.

 

அவளுக்கு இதயம் எம்பி குதித்து வெளியில் வந்து துடிப்பதைப் போல இருந்தது.

 

“பேபி என்ன இப்படி ஷாக் ஆகிட்ட? அங்க போய் உனக்கு தேவையான பிளான்ட் அஹ் எடுத்திட்டு வர்லாம்” என்று அவன் சொல்ல….

 

“ஓ மை கோட்  உங்களுக்கு என்ன விளையாட்டா போச்சா காஷ்? முன் அனுபவம் இல்லாமல் அங்க போய் மாட்டிக்க முடியாது அதுக்கும் மேல வழி தவறி போனால் அனகோண்டா நம்மல கைமா பண்ணிடும்” என ஏதோ தன் முன் காட்சிகள் தோன்றுவது போல அவள் விவரித்துச் சொல்ல…

 

“ஹே ஆழி ஸ்டாப் ஸ்டாப் என்றவன் நீ நல்லா அனகோண்டா மூவி பார்த்து நல்லாவே கெட்டு போயிட்ட… நான் இருக்கேன்ல டோண்ட் வொர்ரி பேபி” என்றான் அவளின் நெற்றியை முட்டி….

 

(விதியோ, நீயே ஒரு டேஞ்சர் டா அவளை விட்டுடு என அவனின் வார்த்தைகளைக் கேட்டு கொதித்து விட்டது)

 

அவளுக்கோ இன்னுமே அங்கு செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

 

நினைக்கவே மேனி நடுங்கியது.

 

“அடுத்த வீக் நம்ம வருண் தேஜ் மேரேஜ் என் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் அவங்க மேரேஜ்க்கு போகாமல் எப்படி?” என அவள் காரணங்களை அடுக்கிக் கொண்டே போக… “தென் என்கூட வர்றது உனக்கு பிடிக்கல ரைட்? என அவனின் தடித்த குரலில் மிரண்டு விழித்தவளைப் பார்த்து தன்னையே நொந்துக் கொண்டவன் ஹனிமூன் டி” என்றான் சற்று தாழ்ந்த குரலில் அவளில்  விழிகளை படியவிட்டு…

 

“ வேற இடம் கிடைக்கலையா?”

“இங்க தான் நான் போகல அதை உன்கூட போய் பார்க்க ஆசைப் பட்டேன்” என அவன் வாயில் வந்ததைக் கூற….

 

“பிரேசில் போறது ஓகே பட் ஏன் அமேசான் ஃபாரஸ்ட்க்கு? என்றவளின் குரல் நலிந்தே வந்தது.

 

“பிரேசில் போய் அங்க போகலனா எப்படி டி ஒரு அட்வேஞ்சர் வேணாமா?” என்றவனை உறுத்து விழித்தவள் “ அங்க கால் வைக்கிற இடம் எல்லாம் அட்வேஞ்சர் தான் நினைக்கவே பதருது நாம அங்க போய் உயிரோட வருவோமா?”

 

“ஷட் அப் ஆழி என்மேல உனக்கு அவ்ளோ தான் நம்பிக்கையா நான் உன்னை பார்த்துப்பேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக….

 

சொன்ன அவனே அவ் வார்த்தையை பொய்யாக்க போகின்றான் என அவனே அறியவில்லை!

 

“நான் எரிச்ச உன்னோட அமேசான் ஃபாரஸ்ட் பேப்பர்ஸ் அஹ் ஃபுல்லா ரீட் பண்ணிட்டு தான் எரிச்சு விட்டேன் அதை ரீட் பண்ணி முடிக்கும் போதே எனக்கு அங்க போகணும்னு எண்ணம் வந்துறிச்சு அது மட்டும் இல்ல நீ ஒன்னை மறந்திட்ட ஃபாரஸ்ட்ல சில பூர்வக் குடிகள் இருக்கதாவும் எழுதி வச்சு இருந்த சோ என்ன பயம் அவங்களே அங்க வாழுறப்போ?” எனக் கேள்வியாக நிறுத்த….

அவனை வெறித்துப் பார்த்தவள் “சோ அவ்வளவும் ரீட் பண்ணிட்டு எரிச்சி இருக்கீங்களா இருந்தால் என்மேல எந்த அளவுக்கு கோபம் இருக்கணும் என்றவளுக்கு அவன் அந்த ஆய்வுக் கட்டுரைகளை எரித்து விட்டதற்காக கூட இப்போது அவ்வளவு கோபம் வர வில்லை தன்மேல் எவ்வளவு வெறுப்பு இருந்தால்? என நினைத்தவள் விழிகளில் இருந்து தானாகவே கண்ணீர் பெருக்கெடுக்க தொடங்கியது.

 

“பேபிமா சாரி டி” என்றவன் அவள் முகத்தை திருப்ப, அவளோ அவன் கைகளை தட்டி விட்டு அறையினை விட்டு வெளியேறி இருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 28”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!