தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 3

5
(21)

பேராசை – 3

 

காலை 11.00 மணியைப் போல தாஜ் சமுத்ரா ஹோட்டலை அடைந்தனர்.

 

செல்வந்தக் குடும்பத்தில் நடக்கும் ஒரு விழா என்றால் அங்கு ஆடம்பரத்திற்கு பஞ்சம் ஏது!?

 

ஆம், அவ்வளவு அழகாகவும் பிரம்மாண்டமாகவும் மிக நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

 

இவர்கள் முன்னரே ஏற்பாடு செய்ய சொல்லி இருந்த திருமண நாள் கொண்டாட்ட விழா நடக்க இருக்கும் அந்த ஹோட்டலின் இவெண்ட் நடக்கும் பரந்த ஹாலில் கிட்டத்தட்ட 300 பேர் வரை கலந்து கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

 

12 மணி அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, குடும்பத்தினரைத் தவிர இன்னும் அங்கு யாரும் வருகை தந்து இருக்கவில்லை.

 

ஆழினியோ, தன் நண்பிகளை 12 மணிக்கு முன்னரே வருமாறு அழைப்பு விடுத்து இருக்க, இன்னுமே அவர்கள் வரவில்லையென அப்போது தான் வாட்ஸ்அப் ஐ திறந்து பார்த்தாள்… அவள் நால்வரை அழைத்து இருக்க அதில் மூவர் இன்று வர முடியாதென கூறி இருந்தனர்.

 

தன் உயிர் தோழி தேஜாவுக்கு கால் பண்ணினாள்.

முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்ற தேஜா, “என்டரன்ஸ் கிட்ட கொஞ்சம் வரியா?” என்றாள்.

 

“வெயிட் பண்ணு வரேன்” என்றவள் இந்துவிடம் கூறிவிட்டு நுழைவாயிலை நோக்கி விரைந்தாள்.

 

அங்கு சென்ற ஆழினியோ, “அதான் உள்ள வந்துட்டியே ஹாலுக்கு உன்னை கூட்டிட்டு போக அங்க இருந்து நான் வரணுமா?” என்றாள் ஆழினி.

 

“நான் ஒழுங்கா தான் தைரியமா வர இருந்தேன் திடீர்னு உன் காஷ் ஞாபகம் வந்துறிச்சு சோ அப்படியே ஸ்டக் ஆகி நின்னுட்டேன்” என்றாள் தேஜா.

 

“வாட்? என் காஷ் ஆஹ்? சும்மா இரு டி என் வாயை கிண்டாமல்… அவன் எல்லாம் ஒராள்னு ஏன் பயந்து சாகுற?” என்றாள் ஆழினி.

 

“நான் ஒத்துகிறேன் நாங்க சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி தான் பட் அதுக்குன்னு நாங்க உன் வீட்டுக்கு அன்னைக்கு வந்தப்போ… எங்களை கண்ணாலே எரிக்கிற மாதிரி ஏளனமா பார்த்தார் டி” என்றாள் தேஜா.

 

அவனை நினைத்து கோபத்தில் முகம் சிவந்த ஆழினி “அதென்ன மிடில் கிளாஸ் அப்பர் கிளாஸ்னு எல்லாரும் ஒன்னு தான் எனச் சொன்னவள் நீ இந்த விஷயத்தை என்கிட்ட அப்போவே சொல்லி இருந்தால் அவன்கிட்ட நல்லா கொஞ்சம் பச்சை பச்சையா கேட்டு இருப்பேன்” என்றாள்.

 

“ ஐயோ! வேண்டாம் ஆழினி இதுக்கு தான் நாங்க இதை பற்றி உன்கிட்ட சொல்லல எங்களால பிரச்சனை வேண்டாம்னு… இப்போ சொன்னது கூட நான் இங்க நிக்கிறதுக்கு வேற ரீசன் சொன்னால் நீ நிச்சயம் நம்ப மாட்டனு தான் சொன்னேன்…. தயவு செஞ்சி இதை வச்சு சண்டை போட்டுறாத” என்றாள் தேஜா கெஞ்சலாக…..

 

“ஓகே தேஜா” என்ற ஆழினி அவளோடு கதைத்துக் கொண்டே இருவரும் ஹாலை அடைந்து இருந்தனர்.

 

இந்துவும் லதாவும் தேஜாவை இன்முகமாகவே வரவேற்றனர்.

 

ஆழினியுடன் உள்ளே சென்ற தேஜா, “வாவ் செம்ம கிராண்ட் ஆஹ் இருக்கு டி” என்றாள் கண்கள் மின்ன….

 

அதை ஆமோதித்த ஆழினி வா நாம போய் வேலையை பார்ப்போம்” என தேஜாவை இழுத்துக் கொண்டு மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்த ஓர் அழகான குடில் போல அமைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு கூட்டிச் சென்றாள்.

 

அந்த அழகில் வியந்து ‘ஆஆ’ என வாயை பிளந்த தேஜா “ இந்த ஹோட்டல்குள்ள இப்படி ஒரு அழகான பிளேஸ் இருக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல டி” என்றாள்.

 

“நானும் தான் தேஜா, சும்மா சுத்தி பார்த்திட்டு இருந்தேன்… அப்போ தான் இந்த இடத்தைக் கண்டு பிடிச்சேன்” என்றாள் ஆழினி.

 

குடிலின் அருகில் சிறிய குளம் அமைக்கப்பட்டு அதில் இருந்து நீர் மேல் நோக்கி பாவ, பூ மழை போல பொழிந்து அதே குளத்தினுள் வீழ்வதை ரசித்தவர்கள் அந்த இடத்தில் நின்று பல புகைப்படங்களை பல்வேறு போஸ்களில் எடுத்துத் தள்ளினர்.

 

மேலும், அங்கேயே சற்றுத் தள்ளி ஆசனம் ஒன்று அலங்கரிக்கப்பட்டு இருக்க அதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? அதிலும் அமர்ந்து வித விதமாக புகைப்படங்களை எடுத்தும் கொண்டனர்.

 

அந்த தொலைபேசிக்கு வாய் இருந்து இருந்தால், கதறியே அழுது இருக்கும் ஏனெனில்…அந்த அளவுக்கு இருவரும் சேர்ந்து அலப்பறை செய்து இருந்தனர்.

 

எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டு இருந்த ஆழினிக்கு, ‘காஷ்மோரா’ என்ற பெயரில் இருந்து கால் வர வேண்டுமென்றே முதல் அழைப்பை ஏற்காமல் இருந்தவள்…. அந்த அழைப்பு நின்று பின் அடுத்து அழைப்பை ஏற்று, எதுவுமே பேசாமல் வேண்டுமென்றே தேஜாவுடன் எடுத்த புகைப்படங்களைக் காட்டி அது பற்றி கதைத்துக் கொண்டு இருந்தாள்.

 

காஷ்யபனோ, ஐந்து தடவைக்கு மேல் ஹலோ ஹலோ என்றவன் பொறுமை காற்றில் பறக்க அந்த அழைப்பைத் துண்டித்து விட்டு…  “இவெண்ட் இஸ் கோயிங் டு ஸ்டார்ட்” என ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டவன் அவனின் தொழில் துறை பிரமுகர்களோடு கதைக்க ஆரம்பித்து விட்டான்.

 

இங்கு, அவனின் குறுஞ்செய்தியை பார்த்த ஆழினிக்கு விரக்தியாக இதழ் வளைந்தது.

 

அதனை பார்த்துக் கொண்டு இருந்த தேஜா, “உன்னை எவ்ளோ அக்கறையா கூப்பிடுறார்… நீ ஏன் சும்மா சண்டை போடுற?” எனக் கேட்டாள் தேஜா.

 

“என்ன அக்கறையா? அதுவும் என்மேலயா? ஹா ஹா ஹா என வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த ஆழினி, உனக்கு அவனை பற்றி ஒன்னும் தெரியாது டி… அக்கறை காட்டுறதுனா கிலோ என்ன விலைனு? கேட்பான் என்றவள் தொடர்ந்து என் அப்பா இல்லனா மாமா என்னைக் காணலைனு இவனை எனக்கு கால் பண்ணி கூப்பிட சொல்லி இருப்பாங்க… அதான் இப்போ பூனை பதுங்குது” என்றாள்.

 

(இப்போது இவனை சரியாக கணித்தவள் எதிர் காலத்தில் கணிக்க முடியாமல் ஏமாறப் போவது தான் விதியின் செயலோ…)

 

“அடப்பாவி…. என வாயில் கையை வைத்த தேஜா, எதுக்கும் கவனமா இருந்துக்கோ நீ சிலாகிக்கிறதைப் பார்த்தால் எனக்கே கொஞ்சம் ஜெர்க் ஆகுது” என்றாள்.

 

“இவ்வளவு நாள் சமாளிச்சுட்டேன்… இனியும் முடியாதா என்ன?” என்றாள் ஆழினி.

 

“அப்போ ஓகே டி… சரி வா ஹால்க்கு போவோம்” என தேஜா சொல்ல, இருவரும் அங்கு சென்றனர்.

 

மேடையில் தம்பதிகளாக அமர்ந்து இருக்கும் தனது பெற்றோரைப் பார்த்த ஆழினி முகம் கொள்ளா சந்தோஷத்துடன் தனது அலைபேசியில் அக் காட்சியை  புகைப்படமாக சேமித்துக் கொண்டாள்.

 

மதியம் 2 போல பஃபே முறையில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

 

கொழும்பின் மிகப் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ஜெயகுமாரின் கார் அந்த ஹோட்டலின் வளாகத்தினுள் நுழைந்தது.

 

அவரை வரவேற்க சென்ற காஷ்யபன், “வெல்கம் டு பார்ட்டி சார்” என ஆளுமையான குரலில் சொன்னவன் கையை குலுக்கி பார்ட்டி ஹாலை நோக்கி கையை காட்டினான்.

அவரும் இன்முகமாக உள் செல்ல, ஜெயகுமாரைத் தொடர்ந்து அவரின் மகன் வருணும் காஷ்யபனை லேசாக அணைத்து விட்டு உள்ளே சென்றான்.

 

அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு காஷ்யபனின் இந்த கனிவான முகம் புதிது…. வீட்டில் எல்லோருடனும் சகஜமாக அவன் பழகினாலும் பெரிதாக ஒட்டுதல் இருந்தது இல்லை.

 

(அவளுக்கு யார் சொல்வது? பணம் பணம் என அதற்கு முதலிடமும் பிஸினஸில் நம்பர் வன் ஆக வர வேண்டும் என நினைப்பவனிடத்தில் அன்பு எங்கு இருந்து வரும்?)

 

ஜெயகுமாரோ, ஜீவாவுக்கு இந்துவுக்கு மேடை ஏறி வாழ்த்தி விட்டு பரிசுப் பொதி ஒன்றையும் கொடுத்து விட்டு பிரகலாதனுடன் உரையாட ஆரம்பித்து விட்டார்.

 

வருணோ, காஷ்யபனுடன் கதைத்துக் கொண்டே பிரகலாதனிடம் வந்தவன்… “ஹாய் அங்கிள் நைஸ் டு மீட் யூ” என்றான் உற்சாகமாக……

 

ஜெயகுமாரிடம் பேசிக் கொண்டு இருந்தவர் வருணை பார்த்ததும் அவரின் புருவங்கள் வியப்பில் மேல் உயர்ந்தன….அடுத்த கணமே “நைஸ் டு மீட் யூ டூ வருண் இவ்வளவு சீக்கிரம் வளர்ந்துட்ட சின்ன வயசுல உன்னை பார்த்தது” என்றவர் அவனை அணைத்து விடுவித்தார்.

 

“என்ன அங்கிள்? என் அப்பாவை பார்த்த பிறகும் நான் இவ்வளோ வளர்ந்துட்டேன்னு கேள்வியை கேக்குறீங்களே!” என அடக்கப்பட்ட சிரிப்புடன் வருண் கூறினான்.

 

“டேய்”… என அவனின் தோளில் தட்டிய ஜெயகுமார் அவன் பக்கத்தில் பிரகலாதனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த காஷ்யபன் ஷேத்ராவைப் பார்த்து “ஷேத்ரா” என அவர் கூப்பிட…..

 

அதில், தன்னை மீட்டுக் கொண்டவன் “சார்” என்றான் அதே ஆளுமையான குரலில்….

 

“ஷேத்ரா… நானும் பிரகலாதனும் பிசினஸ் ப்ரெண்ட்ஸ் தான் சோ கால் மி அங்கிள்” என்றார்.

 

அதற்கு தன் தெற்றிப் பல் தெரிய சிரித்தவன் “ஒஃப்கோர்ஸ் அங்கிள்” என்றான்.

 

யாரையும் ஒரு தலை அசைப்புடன் கடந்து விடுபவன் இன்று இதழ் பிரித்து சிரிகின்றான் என அவனின் இந்த சிரிப்பு பிரகலாதனுக்கே ஆச்சரியம் தான்.

 

(அவன் ஒரு சந்தர்ப்பவாதி என பாவம் அவருக்கு புரியவில்லை…புரியும் கணம் அவனை முற்றிலுமாக வெறுக்க போகிறார் என அவரைப் பார்த்த விதி நொந்து கொண்டது.)

 

அதனைத் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தவர்கள் சாப்பிட சென்றனர்.

 

காஷ்யபனுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தவனின் பார்வை அவனுக்கு நேர் எதிரே மற்றுமொரு டேபிலில் அமர்ந்து கன்னக்குழி தெரிய சிரித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த தேஜாவின் மேல் படிந்தது.

 

சாப்பிட்டு கொண்டு இருந்தவன் “வாவ் கோர்ஜியஸ்” என்றான்.

 

வருணின் பார்வை சென்ற திசையைப் பார்த்து அதிர்ந்தே விட்டான்.

 

ஆம், வருண் சிலாகித்தது என்னவோ தேஜாவைப் பார்த்து தான் ஆனால், நம் காஷின் பார்வை படிந்தது என்னவோ ஆழினியின் மேல் தான்……

 

“வாட்? அவள் அழகா உனக்கு?” என ஆழினியை நினைத்து  வருணிடம் கேட்டு இருக்க…..

 

“அவளை பார்த்து அசிங்கம்னு யாரும் சொன்னால் அவனுக்கு கண்ணு இல்லைன்னு அர்த்தம் ஷேத்ரா” என்றான் வருண்.

 

காஷ்யபனின் உள்ளக் கொதிப்பு ஏன்? எனச் சற்று ஆழ்ந்து யோசித்து இருந்தால் புரிந்து இருக்குமோ என்னவோ….!!

 

உணவை முடித்துக் கொண்டு ஒவ்வொருவராக செல்லத் தொடங்க…. மேடைக்கு அருகில் ஆழினியுடன் பேசிக் கொண்டு இருந்த தேஜாவைப் பார்த்துக் கொண்டே அவர்கள் அருகில் நெருங்கி இருந்தான் வருண்.

 

அருகில் வந்தவனைப் பார்த்த ஆழினி, “ஓஹ் சாருக்கு இப்போ தான் இந்த பக்கம் வழி தெரியுதோ” என நக்கலாக கேட்க…..

 

“ஏன் மேடம் வந்து பேசி இருக்கது” என்றான் வருண்.

 

“நீங்க எல்லாம் இனி பெரிய ஆளு, ப்ச… நான் எங்க? என இதழைப் பிதுக்கியவள் நீங்க எங்க?” என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி இருந்தாள் ஆழினி.

 

“நீ இன்னும் மாறவே இல்லை டி சோ இன்னும் காஷ் கூட சண்டை போட்டுட்டு இருக்க போல? என அவள் தலையில் தட்டிக் கேட்க…..

 

“ஆஆ… என்றவள் தலையை தேய்த்துக் கொண்டே நீ தப்பா சொல்லிட்ட வருண் அவன் தான் என் கூட வம்பு இழுக்குறது” என்றாள்.

 

ஆம், வருண் மற்றும் ஆழினி பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்த நண்பர்கள்.

 

இதில் அவளின் துரதிஷ்டம் என்னவென்றால், வருண் அவளின் நண்பன் என காஷ்யபனுக்கு தெரியாதது தான்….

அவனைப் பொருத்தமட்டில் அவள் திமிர் பிடித்தவள் மட்டுமே…!

அவர்களின் உரையாடலை தூரத்தில் இருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் காஷ்யபன்.

 

வருணின் பார்வை தேஜாவை தொட்டு தொட்டு மீள்வதைப் பார்த்த ஆழினியோ, தானாகவே “இது என் பெஸ்ட் ப்ரெண்ட் தேஜா… ஷீ இஸ் அ மெடிகல் ஸ்டூடண்ட்” என அவனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள்.

 

அதற்காகவே காத்துக் கொண்டு இருந்தவன் போல, “ஹாய் தேஜா ஐ அம் வருண்” என்று கையை நீட்டினான்.

 

மெல்லிய புன்னகையுடனேயே, “ஹாய்” என்றாள் கைகளை கூப்பி…

 

யார் என தெரியாத ஆணுக்கு அவள் கை குலுக்காமல் நாசுக்காக கைகளை கூப்பியது அவனுக்கு பிடித்து இருந்தது.

 

நீட்டிய கையை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன்… “பார்த்தியா இப்படி பட்ட ஒரு அடக்கமான ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு அராத்து ப்ரெண்ட்… எல்லாம் அந்த கடவுளை சொல்லனும்” என்றான் வருண்.

 

“வருண்” என சிணுங்கியவள் அவன் தலையில் கொட்டு வைத்தாள்.

 

“ராட்சசி வலிக்குது டி என தலையை தேய்த்து கொண்டவன் எஸ்டர்டே தான் UK ல இருந்து வந்தேன் உன் இன்விட்டேஷன் ஐப் பார்த்து வராமல் விட்டால் என்னை கொலை பண்ணிருவியே அதான் வந்துட்டேன்… என்கூட வா உனக்காக நீ கேட்டது எல்லாம் வாங்கிட்டு வந்தேன் உனக்கு கொடுக்கணும்னு” என்றான்.

 

அதில் கண்கள் மின்ன தன் உயிர் தோழியையும் விட்டு, விட்டு ஆளுக்கு முதல் வெளியில் ஓடினாள்.

 

அவளின் கண்களில் ஒரு நொடி வந்துப் போன உணர்வைக் கண்ட காஷ்யபன் தன்னையும் தாண்டி அதுவும் தான் நிற்பது கூடத் தெரியாமல் எங்கே ஓடுகின்றாள் என ஒரு யோசனையோடே அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

 

உங்கள் லைக்ஸ் and கமென்ட் தான் என்னை அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் டியர்ஸ் 🥰

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

6 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 3”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!