தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 33

4.9
(21)

 பேராசை – 33

“பேபி தேவையான எக்கியுப்மென்ஸ் எல்லாம் கவனமா வச்சுக்கோ” என்றவாறு தனது பையினை தோளில் மாட்டிக் கொண்டவனைப் பார்த்து “உங்களுக்கே உதறுதுல அப்புறம் ஏன் காஷ் இங்க வந்தோம் பேசாமல் ஹனிமூன் செலிப்ரேட் பண்ணுனமா இடத்தை காலி பண்ணுனமான்னு இருந்து இருக்கலாம்ல” என்றாள்.

வந்த கோபத்தை முயன்று அடக்கியவன் “எனக்கு ஒன்னும்  பயம் இல்லை என்றவன் நெற்றியை நீவிக் கொண்டே ஹியர் லிஸின் ஆழி இருபத்து இரண்டு ஹவர்ஸ் டிராவல் பண்ணி இவ்ளோ தூரம் வந்தாச்சு சோ  இனி தேவையில்லாமல் பேசி டைம் வேஸ்ட் பண்ணாத அண்ட் கவனக்குறைவா இருக்காத நம்மல சுத்தி என்ன நடக்குதுன்னு சுத்தி பார்த்திட்டு வா” என்றவன் அவளுக்கு நிறைய விடயங்களை கூறிக் கொண்டே தான் அவளோடு காட்டிற்குள்  நுழைந்து இருந்தான்.

 

உலகின் மிகப்பெரிய காடான அமேசான் சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா உட்பட சுமார் ஒன்பது நாடுகளில் அமேசான் காடு படர்ந்து விரிந்து காணப்படுகிறது.

 

சாதாரணமாக 10,825 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடுகளுக்குள் சென்று வழி தவறி விட்டாலே தப்பிக்க முடியாது  5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு என்றால் சொல்லவும் வேண்டுமா?

 

எண்ணிப் பார்க்கவே நடுங்கியது அதனாலேயே ஆழினி பயந்தாள்.

 

அடர்ந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்க, உள்ளே சற்று இருளாகவே இருந்தது.

“மேப் எங்க?” என்று அவள் கேட்க…

“பேக் உள்ள வச்சு இருக்கேன்” என்றவனின் பார்வை அவர்கள் நடந்து செல்லும் ஈரலிப்பான பாதையையும் சுற்றிலும் படர்ந்து அடர்ந்து இருந்த மரங்கங்களிலும் ஆராய்ச்சியாகப் படிந்தது.

 

அவளோ, “பேக் உள்ள வச்சிட்டு சாம்பிராணி போடுறதுக்கா?” என்று அவனைத் திட்டியவள் அவன் கையைப் பற்றிப் பிடித்து நிறுத்தி விட்டு அவனின் பையிற்குள் கையினை விட்டு துளாவி மேப்பினை வெளியில் எடுத்தாள்.

 

“இடியட் அதை ஏன் டி இப்போ வெளில எடுத்த? காணாமல் போச்சுன்னா என்ன பண்றது?” என்று சீறினான்.

 

“என்னை ஏன் திட்டுறீங்க நீங்க சரியில்லை நான் கோபம்” என்று இதழ்களைப் பிதுக்கி அழுகைக்கு தயாராக…. “ப்ச்ச… சரி பேபி நீயே சொல்லு காணாமல் போனால் என்ன பண்றது?” என்று அவன் திருப்பிக் கேட்க…

“நான் தொலைக்க மாட்டேன்” என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே…

 

இதழைக் குவித்து ஒரு பெரு மூச்சை விட்டவன்  “ஓகே அப்போ கிளம்பு” என்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அவனின் ஒற்றைக் கையை பிடித்துக் கொண்டு மறு கையில் இருக்கும் மேப்பினை பார்த்தவளுக்கு அடியும் புரியவில்லை நுனியும் புரியவில்லை.

 

அவளின் மனமோ, “இதை தான் ஒன்னுமே தெரியாமல் நாலு வருஷமா ரிசர்ச் பண்ணியா?” என்று வேறு கேட்டது.

 

இருந்தும் அதையெல்லாம் காட்டிக் கொண்டாள் அவள் ஆழினி இல்லையே! குரலை செருமிக் கொண்டே “பேசிகலி  நான் இந்த மொத்த காட்டையே கரைச்சு குடிச்சு  இருக்கேன் சோ எல்லாமே எனக்கு அத்துபடி தான் என்றவள் உங்க அறிவு எங்க இருக்குன்னு நான் டெஸ்ட் பண்ண விரும்புகிறேன்” என்றவள் கேட்ட கேள்வியில் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை மேலிருந்து கீழாக நக்கலாக பார்த்தவனை பார்த்து அவளுக்கு தான் நிலத்திற்குள் புதைந்து விடலாமா என்று தோன்றி இருந்தது.

 

“பேபி இப்படி எல்லாம்  பேசாத ஐ கான்ட் கன்ட்ரோல் சத்தமா சிரிச்சிடுவேன் அது நம்ம ரெண்டு பேருக்கும் ஆபத்து தான்” என்றவன் முன்னோக்கி அவளை இறுக பிடித்துக் கொண்டே சற்று வேகமாக நடந்தான்.

 

“ம்க்கும்…” என சொல்லிக் கொண்டவள் கையில் இருந்த மேப்பிலேயே பார்வையை பதித்துக் கொண்டு நடந்தாள்.

“ஆழி கீழ பார்த்து வா” என்று சொல்லிக் கொண்டே நடந்தவன்  இனிமேல் இங்க டவர் கிடைக்காது சோ வீட்டுக்கும் கால் பண்ண முடியாது முதல் பேசும் போது என்ன சொல்லி சமாளிச்ச?” என்று கேட்க….

 

“ஐயோ மானமே போச்சு என்றவள் அங்க என்னைத் தேடி வருண் தேஜ் கூட வந்து இருக்கான் போல அவன் தான் கால் பண்ணி கொடுத்து லவுட் ஸ்பீக்கர்ல போட்டு விட்டு இருக்கான் இது தெரியாமல் நானும் வாய்ல வந்ததை சொல்லி விட அங்க குடும்பமே இருந்து இருக்கும் போல எல்லாரும் சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு  என்றவள் தலையில் அடித்துக் கொண்டே  வீட்டுக்கு வா உன்னை வச்சுக்கிறேன்னு சொல்லிட்டு அம்மாகிட்ட போனை கொடுதிட்டான் தேஜ் கூட என்னோட பேசலை நான் என்ன பண்ணட்டும்” என்றாள் சோகமாக….

“ ஐ திங்க் நீ அவன் கல்யாணத்துக்கு வர மாட்டனு கோபம் இருக்காது ஐ திங்க் நீ பிரேசில் போறதை பத்தி அவன்கிட்ட சொல்லலை தானே அதுவா இருக்கலாம் என்றவன் தொடர்ந்து நாம ஜஸ்ட் ஹனிமூன் போறோம்ன்னு சரி சொல்லி இருக்கலாம்” என்றான்.

 

“அதை சொல்லி இருந்தால் கண்டிப்பா ஃபாரஸ்ட் போறதையும் உளறிக் கொட்டி இருப்பேன் அதான் சொல்லலை” என்றாள் பெரு மூச்சுடன்….

 

“அது சரி என்றவன் அவங்க எல்லாம் சிரிக்கிற அளவுக்கு அப்படி என்னத்தை சொன்ன?” என்று கேட்க…

“அதெல்லாம்  சொல்ல முடியாது” என்றாள் வெட்கத்தோடு….

 

அவளின் குரலில் இருந்த வேறுபாட்டில் அவளை திரும்பிப் பார்த்தவன்  “சொல்லேன்?” என்றான்.

 

அவளும் குரலை செருமிக் கொண்டே  “அது என்னனா?இப்படி கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ண கூடாது பிகாஸ்  சின்ன சிறுசுங்க கொஞ்சம் ஜாலியா இருப்போம் கோப்ரேட் அம்மா அப்போ தானே உங்களுக்கு நான் பேரப்பிள்ளைகளை அடுத்தடுத்து ரிலீஸ் பண்ண முடியும்ன்னு சொன்னேன்” என்றாள்.

 

“ஓ மை கோட் ஆழி என் மானத்தையும் சேர்த்து வாங்கி இருக்க டி” என்று சொன்னவன் இதழ்களில் வெட்கப் புன்னகைத் தோன்றியது.

 

“நான் விளையாட்டுக்கு சொல்லலை உண்மையை தான் சொன்னேன்” என்க…

 

“அதுக்கென்ன ரிலீஸ் பண்ணிட்டா போச்சு” என்றவன் தெற்றிப் பற்கள் தெரிய புன்னகைத்துக் கொண்டான்.

 

அவனின் புன்னகையை ரசனையாக பார்த்தவளுக்கும் இதழ்களில் மெல்லிய வெட்கப் புன்னகை.

 

“காஷ்”

 

“வாட்?” என்றவன் விழிகள் என்னவோ சுற்றுப் புறத்தையே அலசிக் கொண்டு இருந்தன.

“வருண் கூட ஃபாரஸ்ட் போனேனே எந்த ஃபாரஸ்ட்ன்னு தெரியுமா?” என அவள் கேட்க….

 

“ராவணா எல்ல” என்றான் அவன்.

 

“ நீங்களும் அதை நம்பிட்டிங்களா?” என்று ஹி ஹி ஹி என சிரித்தாள்.

 

அவனின் நடையோ ஒரு வினாடி தடைப்பட்டு பின் தொடர்ந்தது.

 

“தென் வெயார்?” என்ற அவனின் குரலில் இருக்கும் பேதத்தை அறியாத அவளோ சிங்கராஜா வனத்தையும் அங்கு சென்றதில் இருந்து வரும் வரை நடந்த அனைத்தையும் கூறியவள் “காஷ் எனக்கு மரம் எல்லாம் ஏற தெரியாது அப்போ ஏதோ வேகத்துல ஏறிட்டேன்” என மீண்டும் சிரித்துக் கொண்டாள்.

 

அவளை பழி வாங்க வேண்டும்… வலிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு ஏனோ அவள் நூலிழையில் தப்பியது மனதில் பரவிய ஒரு நொடிக்கும் குறைவான நடுக்கத்தை குறைத்து இருந்தது.

 

இருந்தும் அவனோ முகம் இறுக சட்டென நின்று விட

சட்டென நின்று விட்டவனை பார்த்தவள் “என்னாச்சு?” என்று அவள் கேட்க….

 

“இங்க பார் ஆழி அதுவே ஆபத்தான காடு தான் பட் சின்ன காடு… இது அப்படி இல்லைன்னு உனக்கே நல்லா தெரியும் சோ நான் சொல்ற போல கேட்டுட்டு பேசாமல் இரு அண்ட் நாம நைட் கீழ எல்லாம் தாங்க முடியாது அங்க யானை வந்துச்சு இங்க நீ சொன்ன போல ஜாகுவார்ல இருந்து விஷ பாம்பு வரை வரும் சோ பிளீஸ் கோப்ரேட்” என்றவனின் அழுத்தமான குரலில் அவள் தலை தானாகவே மேலும் கீழுமாக அசைந்தது.

 

“ஹும் தட்ஸ் குட் என்றவன் கீழ பார்த்து வா” என்றவன் முன்னேறி நடக்க…

 

போகும் அவனின் முதுகுக்கு பின்னால் பழிப்பு காட்டியவள் “ரெமோ மாதிரி இருந்தான் இப்போ அந்நியன் மாதிரி பிஹேவ் பண்றான் காஷ்மோரா” என்று நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்க்குள் முணுமுணுத்துத் திட்டிக் கொண்டாள்.

 

அவள் நின்றபடியே யோசித்துக் கொண்டு நின்று இருக்க, திடீரென கேட்ட சருகுகளுக்குள்ளான சத்தத்தில் அதிர்ந்து பின் பயந்தவள் அவனைப் பார்க்க… அப்போது தான் அவன் தன்னை விட்டு முன்னேறி நடந்து வெகு தூரம் சென்று விட்டானெனவே தெரிந்தது.

 

அவனை சத்தம் போட்டு கூப்பிடவும் பயமாக இருந்தது.

 

மெதுவாக நகர்ந்தவள் மனதில் “வன் டூ த்ரீ” என சொல்லிக் கொண்டவள் மின்னல் வேகத்தில்  அவனை நோக்கி ஓடத் தொடங்கி இருந்தாள்.

 

பதற்றத்தில் அவள் பாதையை பார்க்கத் தவறி இருந்தாள்.

 

தன் பின்னால் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அதிர்ந்து “ஆழி” என கூப்பிட்டுக் கொண்டு பின்னே திரும்பியவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

 

ஆம், அவள் தூரத்தில் இருந்து அவனை நோக்கி ஓடி வந்துக் கொண்டு இருந்தாள்.

 

அடர்ந்த காடு என்பதால் சூரிய ஒளி உள்ளே ஊடுருவாமல் இருந்தது மட்டும் இல்லாது  மழை பெய்ததற்கு சான்றாக  மண்ணும் ஈரலிப்பாகவே இருந்தது.

 

அவனையே அறியாமல் வியர்த்து வழிந்தது.

 

அவனும் அவளை நோக்கி குரல் எழுப்பவில்லை.

 

அவளை நோக்கி வேகமாக நடந்தான் “ஓடி வராதே” என சைகை வேறு செய்தான் ஆனால் அவள் அவளோ, இருந்த பதற்றத்தில் அதனை எல்லாம்  கண்டு கொள்ளும் நிலையிலேயே  இல்லை.

 

அவள் வேகமாக ஓடி வந்துக் கொண்டு இருக்கும் இடத்தை பார்த்தவன் இதயம் படுவேகமாக துடித்தது “ஆழி ஸ்லோ டவுன்” என்று  அவன் குரல் எழுப்பியது காற்றில் தான் கரைந்தது.

 

அப்போது தான் அந்த சம்பவம்  நடந்தேறியது.

 

ஆம், அவள் ஓடி வந்துக் கொண்டு இருந்த பகுதி பள்ளமாக இருந்தது.

ஈரலிப்பாக இருந்ததால் அதில் வழுக்கிக்  விழுந்தவள் அப்படியே மண்ணோடு கீழே பள்ளத்தை நோக்கி உருளத் தொடங்கினாள்.

 

“ஆழி” என்று கத்தியவன் இதயம் வெளியில் எம்பிக் குதித்து விடுவது போல வலித்தது.

 

அவள் உருண்டு சென்ற பள்ளத்தின்  அருகில் வந்தவன் சற்றும் தாமதிக்காமல் அருகில் இருக்கும் சிறிய மரக் கிளையை உடைத்தவன் கீழ் நோக்கி மரக் குற்றியை மண்ணில் அழுந்த பதிந்து பதிந்து மின்னல் வேகத்தில் கீழ் இறங்கினான்.

 

கீழே இறங்கி சம தரைக்கு வந்தவன்  விழிகள் அதிர்ச்சியில் பெரிதாக விரிய அந்த இடத்தையே குத்திட்டு வெறித்தன.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!