தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 35

4.9
(21)

பேராசை – 35

யாரோ தன்னை பின்னால் இருந்து வாயை மூடி இழுக்க, அவளின் கைகளில் இருந்த தடி நழுவி விழும் சமயம் அதை தன் காலால் லாவகமாக கீழே விழாமல் தடுத்து இருந்தான் அவன்.

 

ஒருவேளை அந்த தடியானது கீழே விழுந்தால் அதன் சத்தத்தில் அந்த பாம்பு தங்களின் புறம் கவனம் செலுத்தக் கூடும் அல்லவா!

 

இருவருக்கும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை தான்.

 

அவளும் திமிறி விடுபட எண்ணவில்லை.

 

அவன் மீது தான் மொத்தமாக நின்ற நிலையிலேயே சரிந்து இருந்தாள்.

 

 

கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அதே நிலையில் அசையாமல் நின்றவர்கள் பாம்பு சென்றதும் தான் இருவருக்கும் ஒருங்கே பெரு மூச்சு வெளிப்பட்டது.

 

அவளுக்கு நன்றாக உணர முடிந்தது இது நிச்சயமாக காஷ்யபன் இல்லை தம்மை போல இங்கு  வந்த  யாரோ ஒருவன் என்று.

 

தன் மேல் சாய்ந்து இருந்தவளின் நிலையை உணர்ந்து அவளின் வாயில் இருந்த தன் கையை அகற்றிக் கொண்டவன் தன் காலில் தாங்கிப் பிடித்து இருந்த தடியை கையினால் லாவகமாக பிடித்தவன் அவளின் ஒற்றைக் கையில் கொடுத்து விட்டு மறு கையை பற்றி நேராக அவளை நிறுத்தி இருந்தான்.

 

 

அப்போது தான் இருவரும் நேராக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அவன் விக்ரம்.

 திடகாத்திரமான உடலும் திரண்ட புஜங்களுமாக ஆறடி உயரத்தில் சாதாரண உடையில் ஆண் அழகனாக தான் இருந்தான்.

 

அவனைப் பார்த்த கணமே அவளுக்கு அவனும் தமிழ் தெரிந்தவன் என்று மனதில் அடித்துக் கூற, “தேங்க்ஸ்” என்று அவள் சொல்லவும் அவன் “சாரி” என்று சொல்லவும் சரியாக இருந்தது.

 

“ஏன் சாரி கேக்குறீங்க?” என்றாள் பக்கவாட்டு கல்லில் சாய்ந்து அமர்ந்த படியே….

 

ஆச்சரியமாக புருவங்களை மேல் உயர்த்தியவன் “எப்படி நான் தமிழ் ஸ்லங்ன்னு கண்டு பிடிச்சிங்க?”

 

“பார்த்தாலே தெரியுதே என்று சொன்னவள் நிறுத்தாமல் நல்லவேளை சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்திட்டீங்க ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் ஆசுவாசமாக….

 

 

“நோ மென்ஷன்” என்று மென் புன்னகையுடன் சொன்னவன் என்னாச்சு கால்ல?” என்று கேட்க….

 

“அதை பத்தி நான் அப்புறம் சொல்றேன் உங்களை பற்றி சொல்லுங்க” என்றாள்.

 

ஏனோ அவன் அங்கு இருக்கும் போது பாதுகாப்பாக உணர்ந்தாள் சற்று முன்னர் இருந்த கலக்கம் அவளிடம் தானாகவே நீங்கி இருந்தது.

 

அவளுக்கு அருகில் வந்து சாய்ந்து நின்றவனிடத்தில் பலத்த மௌனம்.

 

அவனின் முகமோ சாந்தமாக இருக்க, விழிகள் எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தன.

 

“இட்ஸ் ஓகே சொல்லனும்னு இல்லை நோ பிராப்ளம் என்றவள் கதையை மாற்றும் பொருட்டு இந்த பக்கம் நீங்க எப்போ எப்படி வந்தீங்க?” என்று கேட்க…

 

அவனோ அதற்கு பதில் கூறாமல் “நொட் லைக் தட் என்றவன் தொடர்ந்து நீ கேள்வி பட்டு இருப்பனு நினைக்கிறேன் ரீசன்ட் ஆஹ் இந்த ஃபாரஸ்ட்ல நடந்த பிளைட் கிராஷ்” என்று அவன் கேள்வியாக நிறுத்த….

 

“எஸ் ஒஃப்கோர்ஸ்” என்றவளுக்கு ஏதோ புரிவதைப் போல் இருந்தது.

 

“அதுல கிட்டத்தட்ட எல்லாரும் இறந்திட்டாங்க அதுல…” என்று குரல் நடுங்க கூறியவன் உடல் நடுங்க ஆரம்பிக்க அவன் கையை பற்றியவள் “போதும் சொல்ல வேண்டாம்” என்றாள்.

 

அவனையும் மீறி அவன் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவன் “என் அம்மாவும் அப்பாவும் என் கண் முன்னாடியே இறந்திட்டாங்க…. என் உடம்பு எல்லாம் அவ்ளோ காயம் நான் செத்துடுவேன்னு நினைச்சேன் பட் அந்த கடவுள் என்னைக் காப்பாத்திட்டு அம்மாவையும் அப்பாவையும் எடுத்திட்டார்” என்றான் எங்கோ வெறித்துக் கொண்டே….

 

“வாட்?” என்று அதிர்ந்தவளுக்கு உண்மையிலேயே அவன் இப்போது உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லை….

 சொல்லப் போனால் அவன் கைகளிலும் முகத்திலும் கூட ஏதேனும் காயம் ஏற்பட்டதற்கான எந்த தடயமும்  இருக்கவில்லை.

 

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவள் “பட் போலீஸ் எல்லா டெட் போடீஸ் அஹ்யும் கலெக்ட் பண்ணிட்டதா நியூஸ்ல வந்துச்சே…” என்றாள்.

 

அதற்கு மெலிதாக சிரித்தவன் “என்ன நான் ஆவியோனு நினைச்சு பயப்படுறியா?” என்று கேட்டு விட…

 

“இல்லையே” என்று சமாளிக்க முயன்றவளின் உடல் நடுக்கத்தை கண்டவன் மேலும் அவளை சோதிக்க விரும்பாது “ரிலக்ஸ் மா என்றவன் இந்த ஃபாரஸ்ட்ல சில பூர்வக் குடிகள் வாழ்றாங்க என்றவன் தொடர்ந்து அந்த வழியா அவங்க வர்றப்போ எனக்கு இன்னும் உயிர் இருக்குன்னு தெரிஞ்சிட்டு அவங்களால முடிஞ்ச ஃபர்ஸ்ட் எய்ட்ஸ் எல்லாம் பண்ணி என்னை மீட்டு எடுத்து இருக்காங்க என்றவன் அவங்க கூட  தான் நானும் தங்கி இருக்கேன்” என்றான்.

 

ஆச்சரியமாக விழி விரித்தவள் “அப்போ உங்க ஊருக்கு போற ஐடியா இல்லையா?” என்று கேட்க…

 

விரக்தியாக சிரித்தவன் “எனக்குனு இருந்தவங்க தான் யாரும் இப்போ இல்லையே சோ நான் என் உயிரை காப்பாத்தி எடுத்தவங்க கூடவே இருந்துட்டேன் என்றவன் தொடர்ந்து குரல் தழுதழுக்க என் அம்மா அப்பா இங்கேயே இருக்கதா உணர்றேன் மா அதுவா கூட இருக்கலாம்” என்றான்.

 

“ரிலேடிவ்ஸ்?”

 

“யாரும் இல்லை”

 

இருவரிடமும் மௌனம் தான்.

 

உடனே சுதாரித்துக் கொண்டவள் சற்று குரலை செருமிக் கொண்டே “இவ்ளோ சொன்னீங்களே உங்க நேம் என்ன?” என்று கேட்டு அந்த சூழ்நிலையை சகஜமாக்க முயன்றாள்.

 

“விக்ரம்… ப்ரோம் இந்தியா” என்றவன் நிறுத்தி இப்போது அவளைக் கேள்வியாக நோக்க, அதில் லேசாக இதழைக் கடித்துக் கொண்டவள் “ஆழினி பிரோம் ஶ்ரீ லங்கா என்றவள் தொடக்கம் அவளைப் பற்றி சொல்லத் தொடங்கியவள் இன்று அவளின் விபத்து வரை சொல்லி முடித்து விட்டு அவனைப் பார்க்க, அவனோ அவளையே தான் பார்த்துக் கொண்டு  இருந்தான்.

 

ஏனோ அவனுக்கு அவள் திருமணம் ஆனவள் என்று மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

தன்னுள் தோன்றிய எண்ணத்தில் அதிர்ந்தவன் முயன்று வெளியில் எதும் காட்டிக் கொள்ளாமல் “வழி தெரியும் தானே” என்று அவன் கேட்க…

 

“ஹீ இஸ் வெரி ஷார்ப் கண்டிப்பா வந்துடுவார்” என்றாள் மெல்லிய புன்னகையுடன் சற்று முன்னர் இருந்த கலக்கம் மறைந்து …

 

அவனுக்குள் ஏதோ உடையும் உணர்வு எழுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 “விக்ரம் வாட் இஸ் திஸ் அவ இனி உன்னோட ப்ரெண்ட் இப்படி நினைக்காதே” என்று சொல்லிக் கொண்டவன் முயன்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.

 

அவளோ அவன் வேறு சிந்தனையில் இருப்பது தெரியாமல் வள வள வென பேசத் தொடங்கி விட்டாள்.

 

அவனோ தனது அவளின் மீதான ஈர்ப்பை ஆரம்பத்திலேயே தனக்குள் வளர விடாமல் புதைக்கும் முயற்சியில் இருந்தான்.

 

வெகு நேரமாக பேசிக் கொண்டு இருந்தவள் இப்போது அவனைப் பார்த்து “ இந்தியால நீ என்ன பிசினெஸ்  பண்ண  விக்ரம்?” என்று கேட்க….

 

அதில் சுயம் அடைந்தவன் “அப்பாவோட டெக்ஸ்டைல் பிஸ்னஸ் அஹ் தான் பார்த்திட்டு இருந்தேன் என்றவன் தொடர்ந்து யூ.எஸ் புரோஜெக்ட் ஒன்னுக்கு ஃபேமிலி கூட போறப்போ தான்” என்றவன் என்ன முயன்றும் முடியாமல் அவன் குரல் உடைந்தே விட்டது.

 

“விக்ரம் உன்ன போல என்று நிறுத்தியவள் மரியாதை இல்லமா இப்படி கூப்பிடலாம்ல?” என்று கேட்க… அவனோ, “யுவர் விஷ் நானும் உன்னோட ஸ்டார்ட்ல இருந்து  அப்படி தான் பேசுறேன்” என்றான்.

 

“அட ஆமால ஹும் ஓகே நான் சொன்னது போல எனக்கு வருண் மாதிரி தான் நீயும் விக்ரம்… வில் பீ அ குட் ப்ரெண்ட்ஸ்” என்று தனது வலக் கையை அவனிடம் நீட்ட….

 

ஒரு நீண்ட பெரு மூச்சுடன் அவளுக்கு தன் வலக் கையை நீட்ட அவளும்  கைகளை  குலுக்கிக் கொண்டு இந்த காட்டைப் பற்றி பேசிக் கொண்டு போக…

 

அவனும் அவன் இங்கு வந்ததில் இருந்து அப் பூர்வக் குடிகள் அவனுக்கு போதித்தவை முதல் எப்படி இங்கு வாழ்வது?, செல்லும் பாதைகள், ஆபத்தில் இருந்து எப்படி தன்னை தற்காத்துக் கொள்ளவது என அவள் கேட்காத பல விடயங்களைப் பற்றியும் கூற ஆரம்பித்து விட்டான்.

 

அவனுடன் நின்ற நிலையிலேயே கல்லில் சாய்ந்துக் கதை அளந்துக் கொண்டு இருந்ததில் கால் வலிக்க ஆரம்பித்து விட, “விக்ரம் என்னை கொஞ்சம் கீழ இருக்க வழி பண்ணு” என்றாள் முகம் சுருங்க….

 

 

“ஓஹ் மை கோட் மறந்தே போச்சு பெரிய காயமா? என்று கேட்டுக் கொண்டே அவளை கீழே அமர வழி செய்தவன் வெயிட் ஃபார் அ மினிட்” என்றவாறு அவசரமாக ஓடிச் சென்று பச்சிலைகளை பறித்து வந்து கல்லின் உதவியோடு அரைத்து எடுத்தவன் அவள் காலில் இருக்கும் கட்டை அவளுக்கு வலிக்காமல் மென்மையாக கழட்டி விட்டவன் விழிகள் பெரிதாக விரிய அவனையே அறியாமல் தானாக ஒரு சொட்டு கண்ணீரும் அவன் விழிகளில் இருந்து வழிந்து இருந்தது.

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் “இதுக்கு எல்லாம் ஏன் கண் கலங்குற விக்ரம்?” என்று அவள் சாதாரணமாக கேட்க…

 

அப்போது தான் அவனே உணர்ந்தான் தன் விழிகளில் இருந்து கண்ணீர் வழிவதை…

 

“அம்மா அப்பா நினைவு வந்துடுச்சு” என்றான் மலுப்பகலாக…..

 

“எனக்கு புரியுது பட் இதையே நீ  நினைச்சிட்டு இருக்க வேணாமே யூ ஜஸ்ட் மூவ் ஒன் என்றவள் உனக்காக எப்பவும் நான் இருப்பேன்” என்றாள்.

 

அவனோ அவளை அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க,  “என்னாச்சு? ஏன் என்னைப் பார்த்திட்டு இருக்க?” என்று கேட்க….

 

“நதிங்” என்றவன் அவளின் காயத்திற்கு பச்சிலைகளை வைத்து விட அவளும்  அவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் ஆசுவாசமாக களைப்பில் விழிகளை மூடிக் கொண்ட அடுத்த கணம் “ஆழினி” என்ற கர்ஜனையான குரலில் சட்டென உடல் தூக்கி வாரிப் போட விழித்து இருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!