தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 36

4.8
(23)

பேராசை – 36

 

 

அவளை அனல் பார்வையுடன் நெருங்கியவன் பார்வை அவளுக்கு காலில் கட்டிட்டு முடித்து விட்டு எழுந்தவனின் மேல் இப்போது படிய, “விக்ரம், என் நியூ ப்ரெண்ட்” என்றாள்.

 

“ஹும்….” என்றவன் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவனோ “அம் விக்ரம் ப்ரோம் இந்தியா” என்றவன்  அவனின் துளைத்து எடுக்கும் பார்வையை எதிர் கொண்டவன் புரிந்து கொண்டவனாக தான் வந்தது முதல் நடந்தவைகளை கூற “அனிவே தேங்க்ஸ்” என்று சொன்னான் காஷ்யபன்.

 

“நோ மென்ஷன்” என்றவன் புன்னகைக்க அதற்கு பதில் புன்னகை கூட சிந்தாமல் ஆழியை பார்த்தவன் “சாப்பிடுறியா?” என்று காஷ்யபன் கேட்க….

 

அவனின் அலட்சியத்தில் சற்றே விக்ரமின் முகம் கறுத்து விட்டது.

 

இருவரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ஆழினிக்கே காஷ்யபனின் இந்த அலட்சியம் ஏதோ போல தான் இருந்தது.

 

அவளோ அவனுக்கு பதில் கூறாமல் “விக்ரம் நீ சாப்பிடுறியா?” என்றவள் தனது பையை துளாவி அவனுக்கு தான் கொண்டு வந்த பிஸ்கெட்டை நீட்ட, அதிர்ந்தவன் உடல் இறுகிப் போய் அவளை உறுத்து விழித்துக் கொண்டு இருந்த காஷ்யபனைப் பார்த்து உடனே சுதாரித்த விக்ரம் “எனக்கு பசிக்கல என்றவன் தொடர்ந்து என்னை தேடுவாங்க சோ அம் லீவிங் டேக் கேயார்” என்று சொன்னவன் முகம் மாறாமல் இருக்க படாத பாடு பட்டு போனான்.

 

“வாட்? போகணுமா என்று அதிர்ந்தவள் சற்று முன்னர் நடந்ததை மறந்து காஷ் நாமளும் அங்க போகலாம் பிறகு அங்க இருந்து அப்படியே கிளம்பலாம்” என்று அவள் சொல்ல….

 

பற்களைக் கடித்து வந்த கோபத்தை முயன்று கட்டுப் படுத்திக் கொண்டவன்  “நாம இங்க சுத்தி பார்க்க வந்தோம்… எங்கேயும் போய் ஸ்டே பண்றதுக்கு இல்லை என்றவன் விக்ரமிடம் திரும்பி  யூ மே லீவ்” என்று முகத்தில் அறைந்தது போல சொல்லி விட…..

 

இப்போது விக்ரமிற்கு கோபம் வந்து விட்டது.

 அதிலும் ஆழினியின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்தவன் தன் கையாலாகாத தனத்தை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டவன் “சாரி மா நாளைக்கு வந்து உன்னை பார்க்குறேன்” என்று சொல்லிவிட்டு காஷ்யபனை ஓர் ஆழ்ந்த பார்வைப் பார்த்துக் விட்டு அவன் வந்த வழியே சென்று விட….

 

“விக்ரம்…” என்ற அவளின் தழுதழுத்த  குரல் காற்றில் தான் கரைந்தது.

 

அவன் சென்று விட்டதை உறுதி செய்து கொண்டவன் மேப்பினை எடுத்து பையிற்குள் வைத்து விட்டு அவளின் காலை ஆராய்ந்துக் கொண்டே  “சாப்பிடு நைட் இங்கேயே ஸ்டே பண்ணலாம்” என்றவன் எழுந்து அதற்கான ஆயத்தங்களை செய்யத் தொடங்கினான்.

 

ஒரு மரத்தில் சிசிடிவி கேமராவை பொருத்தி விட்டு திரும்பியவனுக்கு அவ்வளவு கோபம் “ என்னடி சாப்பிடலயா?” என்றான் சீறலாக….

 

“நீங்க அப்படி பேசி இருக்கக் கூடாது” என்றாள் வேறு எங்கோ பார்த்துக் கொண்டே…

 

முதலில் அவள் என்ன சொல்கின்றாள் எனப் புரியாமல் விழித்தவன் பின் புரிய “அவனைப் பார்த்து ஒரு நாள் ஆகலை அதுக்குள்ள அவனுக்காக என்னை எதிர்த்து பேசுற ரைட்?”

“நான் என்ன உங்களை சொன்னேன் விக்ரம் ஸ்டே பண்ணி இருக்க இடத்துக்கு போனால் நமக்கு தான்  சேஃப்” என்றாள்.

 

ஒரு பெரு மூச்சுடன் “ஆழி எனக்கு உன்கூட தர்க்கம் பண்ண கொஞ்சமும் இஷ்டம் இல்லை என்றவன் எனக்கு பசிக்குது சோ நான் சாப்பிடப் போறேன்”

 

“என்னை சந்தேகப் படுறீங்களா காஷ்?” என அவனை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே அவள் கேட்க…

 

“வாட் ரப்பிஷ் ஆர் யூ டாகிங்?”

 

விரக்தியாக புன்னகைத்தவள் “நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்ப் பார்க்கல காஷ்” என்றாள்.

 

“நான் சந்தேகப்படலை நமக்குள்ள ஒரு தேர்ட் பெர்சன் வேணாம்னு தான் அவனை போக சொன்னேன்” என்க…

 

 

“நீங்க சொல்லாமலே அவன் கிளம்பி இருப்பான் பட் நீங்க முகத்துல அறையாத குறையா பேசி அனுப்பிட்டீங்க” என்று சொல்ல….

 

“இவளை” என்று மனதில் கறுவிக் கொண்டவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.

 

தலையை கோதி தன்னை சமன் செய்து கொண்டவன் “நைட் ஆகப் போகுது ஆழி இதை பத்தி நாம பிறகு டிஸ்கஸ் பண்ணலாம்” என்றவன் அவளுக்கு சிப்ஸ் ஐ உடைத்துக் கொடுக்க, அவளோ அதை வாங்கிக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

வலுக்கட்டாயமாக அவளின் தாடையைப் பற்றித் திருப்பியவன் சிப்ஸ் ஐ அள்ளி வாயில் திணித்து விட கோபத்தில் அவனை முறைத்துக் கொண்டே இருந்த பசியில் விழுங்கி விட்டாள்.

 

மேலும் அவன் திணிக்க முயல “நானே சாப்பிடுறேன்” என்றவள் அவனின் கையில் இருந்த பாக்கெட்டை பிடுங்கிக் கொண்டாள்.

 

இதழைக் குவித்து ஊதிக் கொண்டே எழுந்தவன் கழுத்தில் கையை வைத்து நெட்டி முறித்து விட்டு பக்கவாட்டு கல்லில் சாய்ந்து நின்றுக் கொண்டே அவனும் சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

 

சிறிது நேரத்தில் சாப்பிட்டு விட்டு முயன்று எழப் போனவளை “பேபி வெயிட் என்று அவளுக்கு உதவியவனை ஆராய்ச்சியாக பார்த்தவள் என்ன திடீர் கரிசனம்?” என்று கேட்க….

 

“ஏன் டி சண்டை பிடிச்சிட்டு இருக்க?” என்றவனின் கரங்களோ அவளின் இடையை வருட…

 

“இங்க வந்ததுல இருந்து என்னைத் திட்டிட்டே தான் இருக்கீங்க” என்றாள் இதழைப் பிதுக்கி….

 

“சாரி பேபி மேப் இம்போர்டன்ட் தானே மிஸ் பண்ணுனா கோபம் வராதா அதுவும் எங்க வந்து மிஸ் பண்ணி இருக்க அதான் என்றவன் ஞாபகம் வந்தவனாய் “எல்லாம் ஓகே கோல்டன் லேன்ஸ்ஹெட் எந்த பக்கம் போச்சு? ஷிட் ஜஸ்ட் மிஸ் ஆழி நான் இருந்து இருக்கலாம் ஃபோட்டோ சரி எடுத்து இருப்பேன்” என்றான் நெற்றியை நீவிக் கொண்டே…

 

“சாரி உங்க காமெடிக்கு எனக்கு சிரிப்பு வரலை?” என்று அவள் தோள்களை குலுக்கிக் கொள்ள…

 

“ஹே ஆழி அம் சீரியஸ்” என்று அவன் சாதாரணமாக சொல்ல…..

 

அதிர்ந்து விழி விரித்தவள் “நீங்க ஃபோட்டோ எடுக்க முதல் அது நாம ரெண்டு பேரையும் போட்டு தள்ளி இருக்கும்”

 

“அதுக்கு எல்லாம் டெக்னிக் இருக்கு பேபி என்றவன்  வேணும்னா நாளைக்கு என்கூட வர்றியா அனகோண்டா” என்று அவன் சொல்லும் போதே அவன் வாயை தன் ஒற்றைக் கையால் மூடியவள் “போதும் உங்க பேச்சு என்றவள் தன்னை சமன் செய்து கொண்டு நின்றவள் நைட் எங்க தூங்க போறோம்?” என்று அவள் கேட்க….

 

அவள் தாடையை பற்றி மேலே பார்க்கச் செய்தவன் “மரத்துல தான் வேற எங்க என்றவன் தொடர்ந்து நான்  ரெடி பண்றேன் சோ கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று விட்டு அவன் விலகிக் கொள்ள…

 

“என் காலை இப்படி வச்சிட்டு எப்படி ஏற?” என்று முகத்தை சுருக்க…

 

“நான் எதுக்கு இருக்கேன் வெயிட் அண்ட் வாட்ச்” என்றவள் மின்னல் வேகத்தில் இருவருக்கும் தனி தனியே படுக்கையை அமைத்தான்.

 

நேரம் செல்ல செல்ல இருள ஆரம்பித்த தருணம் அவனோ தனது உடலை இடமும் வலமாக அசைத்து கொண்டே கையில் பெரிய கயிற்றுடன் வந்தவன் அவளின் முன்னால் வந்து நின்றுக்  கொண்டு முன் புறம் திரும்பி “என்  தோளை பிடிச்சிட்டு  ஏறு என்று சொல்ல”…

 

“ ஐயோ என்னால முடியாது” என்று அவள் சொல்ல…

 

நீண்ட பெரு மூச்சுடன் இதழைக் குவித்து ஊதியவன்  பொறுமையாக “நைட் ஆக போகுது விளையாடாமல் நான் சொல்றதை பண்ணு பேபி”

சுற்றும் முற்றும் பார்த்தாள் கண்களுக்கு ஒன்றும் புலப் படவில்லை அவ்வளவு இருளாக இருந்தது இத்தனைக்கும் 5.30 மணியாகவே இருந்தது.

 

தன் கால் இருக்கும் நிலையில் ஆபத்து வந்தால் நிச்சயம் ஓடி தப்பிக்கவே முடியாது என்று உணர்ந்துக் கொண்டவள் இரு கைகளையும் அவனின் தோள்பட்டையில் வைத்து ஏறி தனது இருக் கால்களையும் அவனது இடையோடு கட்டிக் கொள்ள கயிற்றினால் இருவரையும் சேர்த்து இறுக கட்டி முடிச்சிட்டவன் “நான் இப்போ மரம் ஏற போறேன் என்னை நல்லா பிடிச்சிக்கோ” என்றவன் மரம் ஏற ஆயத்தமாக….

 

அவளையும் சேர்த்துக் கொண்டு ஏறுவதும் சற்று அவனுக்கு சிரமமாகவே இருந்தது.

 

ஒரு கட்டத்தில் மேலே ஏறி வந்தவன் “ நான் இப்போ நாட் அஹ் கழட்ட போறேன் என்னை பிடிச்சிக்கோ என்றவன் கற்றை அவிழ்த்து கிளையில் கட்டி விட்டவன்  ஆழி அப்படியே பக்கத்துல இருக்க கிளையை பிடிச்சு அங்க நான் கட்டி வச்சு இருக்க நெட்ல படுத்துக்கோ” என்றவன் இறுக்கமாக மரத்தை பற்றிக் கொண்டு இருக்க, “என்னது என்னால எப்படி அதுல போக முடியும் இதுவே தலையை சுத்துது” என்றவள் மேலிருந்து கீழ் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

 

ஆம், கிட்டத்தட்ட நாற்பத்து ஐந்து மீட்டர் உயரத்தில் தான் அனைத்தையும் அமைத்து இருந்தான்.

 

“கா..காஷ் கீழ விழுந்துருவேன் எப்படி நான் அங்க” என்று அவள் குரல் நடுங்க பேச…..

 

“ஓ மை கோட் என்னடி இப்போ ? இரிடேட்  பண்ணாத…. என்னால ரொம்ப நேரம் இப்படியே இருக்க முடியாது ஹரி அப்” என்று அவன் சொல்ல….

“ஓஹோ  இரிடேட்  பண்றேனா?” என்று அவள் ஆரம்பிக்க….

 

“ஆழி” என்று அவன் ஏதோ சொல்ல வர… “ நோ நீட் எக்ஸ்பிளனேக்ஷன்” என்றவள் மெதுவாக அந்த கிளையை பிடித்து ஏறியவள் நகர்ந்து சென்று அவளுக்காக அவன் அமைத்த படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

 

 அவள் கிளையை பிடித்து போகும் போது அவள் விழுந்து விடுவாளோ என்ற உதறல் எழுந்ததை அவனால்  தவிர்க்க முடியவில்லை.

 

அதன் பின்னர் இருவரும் அமைதியாக படுத்துக் கொள்ள, சுற்றிலும் நிசப்தம் மட்டுமே ஆட்கொண்டு இருந்தது.

 

 

அவளுக்கோ ஏன் தான் இங்கு வந்தோம் என்றாகி விட்டது.

 

காலையில் இருந்து அவன் தன்னிடம் நடந்து கொண்டதை அசைப் போட்டுக் கொண்டு இருந்தவளுக்கு அவன் விக்ரமிடம் அலட்சியமாக நடந்துக் கொண்டது ஏனோ பிடிக்கவே இல்லை.

 

விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.

 

மனதில் என்னவென்றே தெரியாத ஓர் உணர்வு.

 

எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தவளை மிக மிக மெல்லிய குரலில் “ஆழி” என்று காஷ்யபன் கூப்பிட….

 

“ஹும்” என்றாள் உடைந்த குரலில்.

“உன் போன்ல சிசிடிவி கனெக்ட் பண்ணி இருக்கேன் எடுத்து பாரு” என்று ஹஸ்கி குரலில் அவன் சொல்ல….

 

அவளோ “ஐ காண்ட்” என்று சொல்லும் போதே அவளின் குரல் நலிந்தே ஒலித்தது.

 

“ப்ச்… ஏன் டி அழுற? இப்பவே இப்படினா இன்னும் எவ்ளோ இருக்கு” என்று இரட்டை அர்த்தத்தில் வன்மமாக அவன்  சொல்ல….

“இப்போ என்ன போனை பார்க்கணும் அவ்ளோ தானே ஓகே வெயிட்” என்றவள் பாக்கெட்டில் இருந்த தனது அலைபேசியை எடுத்து ஒன் செய்து பார்த்தவளுக்கு பயத்தில்  உச்சி முதல் பாதம் வரை வியர்த்து விட்டது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!