தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 37

4.8
(25)

பேராசை – 37

 

ஆம், கீழே நின்றுக் கொண்டு இருந்தது ஜாகுவார் அல்லவா!

 

அவளுக்குத் தான் தாறு மாறாக கற்பனை போகுமே!

 

இப்போது கீழே விழுந்தால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே புல்லரித்து விட்டது அவளுக்கு…..

 

“ஆழி…. பார்த்தியா?” என்று அவன் கேட்க….

 

அவளின் மௌனத்தில் பயந்து விட்டாள் என புரிந்துக் கொண்டவன் “பேசு டி” என்றான் மெல்லிய குரலில்….

 

“என்னத்தை பேசணும் இப்போ… அதான் பார்த்திட்டேனே” என்றாள் சற்று குரல் உயர்த்தி….

 

“ஹே சத்தம் போடாதே மெதுவா பேசு என்றவன் தொடர்ந்து யூ நோ ஜாகுவார் மரம் ஏறும் சோ உன் வாய்ஸ் அஹ் கேட்டு மேல வந்திட போகுது” என்று அவன் சொல்ல….

 

அவன் அப்படி சொன்ன பின்னரும் அவள் பேசுவாளா என்ன? மௌனமாக விழிகளை மூடிக் கொண்டாள்.

 

அதன் அசைவுகள் ஒவ்வொன்றையும் நுண்ணிப்பாகப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அவனையே அறியாமல் அப்படியே தூங்கிப் போனான்.

 

 

இருவருக்கும் காத்திராமல் விடியலும் புலர, முதலில் விழித்து கொண்டவன் கழுத்தில் கையை வைத்து நெட்டி முறித்து விட்டு திரும்பி பின்னால் பார்க்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

அவளையே பார்த்து இருந்தவன் மனதிலோ பல எண்ணங்கள் வலம் வந்துக் கொண்டு இருந்தன.

 

இன்று அவன் செய்யப் போகும் காரியத்தில் அவனுக்கே ஏதோ போல மனதில் பிசைந்துக் கொண்டே தான் இருந்தது.

 

 

கண்களை மூடி ஆழ்ந்து யோசித்தவன் முன்னே பிரகலாதன் உட்பட அவளுடன் அன்பைப் பொழிந்துக் கொண்டு இருக்கும் காட்சி விரிய பட்டென விழிகளைத் திறந்தவன் விழிகளோ சிவந்து இருந்தன.

 

அன்று அறையில் இருந்துக் கொண்டு அவன்  அவளுக்கு வலிப்பது போல ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது சட்டென தோன்றிய எண்ணத்தை இப்போது நினைத்துப் பார்த்தவனுக்கு “இவளுக்கு இது தேவை தான்… கண்டிப்பா அவளுக்கு என்னோட மோதினால் அதற்கான பின் விளைவுகளை அனுபவிச்சு தான் ஆகணும்னு அவளுக்கு புரியனும்” என்று யோசித்தவன் அறியவில்லை அவனின் செயலால் இதன் பின்பு அவன் தான் அனுபவிக்கப் போகின்றான் என்று…

தலையைக் கோதிக் கொண்டே கீழே எட்டிப் பார்த்து விட்டு மெதுவாக கிளைக்கு நகர்ந்தவன் “ஆழினி” என்று அழைத்து இருந்தான்.

 

“இன்னும் கொஞ்சம் என்று விட்டு புரண்டு படுக்க முயல “இவளை திருத்த முடியாது என்றவன் நெற்றியை நீவிக் கொண்டே நான் கீழே இறங்க போறேன் இப்போ வர்றியா இல்லையா?” என்று கேட்க…

 

விழிகளை திறந்தவளுக்கு அப்போது தான் சுற்றம் உரைத்தது.

“நீங்க கூப்பிட்டாலே பயமா இருக்கு காஷ் மறுபடி ஏதாவது வந்துடுச்சா என்ன?” என்றுக் கேட்டு கொண்டே கீழே எட்டிப் பார்த்தாள்.

 

“அங்க எதுவும் இல்லை நாம தான் இப்போ கீழ இறங்க போறோம்” என்றான்.

 

அவளோ மருண்டு விழிக்க….

 

சற்றும் அலட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து கிளையில் நின்றவனோ அவளிடம் கையை நீட்ட, அவளோ “இவன் நினைச்சா செய்யாமல் விட மாட்டேன்” என உள்ளே கறுவிக் கொண்டே எழுந்து அவன் நிற்கும் கிளையில் கால் வைத்தது மட்டும் தான் அவளின் சிந்தையில் பதிந்தது.

 

 அவன் மரத்தினோடு இறுகக் கட்டி வைத்து இருந்த கயிற்றை பிடித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்திற்குள் அவளோடு கீழே பாய்ந்து இருக்க, அதிர்சியில் கத்த ஆரம்பித்தவளின் மிகுதி வார்த்தைகள் அவனின் இதழ்களுக்குள் அடங்கி விட அவனின் இறுகிய அணைப்பிற்குள் அவள் கோழி குஞ்சு போல ஒன்றிக் கொண்டாள்.

 

அவளோடு தரையில் சரிந்தவன் அவளைத் தன்னில் இருந்து பிரித்து எடுத்து மென்மையாக “ஆர் யூ ஓகே?” என்று கேட்க….

 

அவளுக்கோ மேனியில் ஒருவித நடுக்கம்.

 

 மேலிருந்து கீழ் குதித்ததில் இன்னுமே அவள் உயிரோடு இருக்கின்றாள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.

 

“நாம உயிரோட தான் இருக்கோமா? என்று விழி விரித்தவள் அவனுக்கு ஏதும் அடி பட்டு விட்டதா? என்று ஆராயத் தொடங்க “அம் ஓகே” என்றவன் அவளை மெதுவாக பக்கத்தில் சரித்து விட்டு எழுந்து அமர்ந்தவனுக்கு எண்ணங்களோ இலக்கின்றி பயணித்தன.

 

அவனின் முகம் தெளிவின்றி எங்கோ வெறிக்க “என்னாச்சு? என்று கேட்டுக் கொண்டே அவனின் கைகளில் தன் கைகளை வைத்தாள்.

 

அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவன் “ஐ நீட் யூ ரைட் நவ்” என்றானே பார்க்கலாம்.

 

அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

 

“வாட்? நாம எங்க இருக்கோம்னு மறந்துடுச்சா?” என்று அவள் அதிர்வோடு கேட்க….

 

“ஐ க்னோ பட் ஐ நீட் யூ” என்றவன் அவளின் இதழைக் கவ்வி சுவைக்க ஆரம்பிக்க…. அவனை வலுக்கட்டாயமாக தன்னில் இருந்து பிரித்து எடுத்தவள் “இங்க எப்படி” என்றாள் பதற்றமாக….

 

 

“ஓ மை கோட் என்கூட வா” என்றவன் எழுந்துக் கொள்ள அவளும் ஒருவாறு எழுந்து நின்றாள்.

 

“உன் கால் கியூர் ஆகிடுச்சு” என்க…

 

சற்று அசைத்து பார்த்தவள் நடந்து பார்க்க, அவளால் தடி இல்லாமல் நடக்க  முடிந்தது.

 

 மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்து “ஆம்” என்று தலை அசைத்தவள் “விக்ரம்கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்” என்று சொல்ல….

 

அவனுக்கோ உடல் இறுகி விட “அஹான் அப்போ என்னால கியூர் ஆகலை ரைட்?”

 

“நான் அப்படி சொல்லல காஷ் நீங்க இல்லனா நான் செத்து இருப்பேன் விக்ரம் மட்டும் இல்ல நான் கியூர் ஆக நீங்களும் தான் ரீசன்” என்றாள்.

 

“ஜஸ்ட் லீவ் இட் இப்போ என்கூட ஒரு இடத்துக்கு வா என்றவன் தொடர்ந்து உன் பேக் எல்லாம் எடுத்திட்டு வா” என்றவன் அவனது பையையும் மாட்டிக் கொள்ளா….

 

“கிளம்புறோமா? எங்க இதுக்கு பிறகு போனால் நாம எப்போ ரிடர்ன் ஆகுறது?” என்று அவள் கேட்க….

சலிப்பாக அவளைப் பார்த்தவன் “ கொஞ்சம் பேசாமல் வா போகலாம் என்றவன்” முன்னே செல்ல….

 

“என்ன மாறி மாறி பேசிட்டு இருக்கார்” என்று யோசித்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள்.

 

இருபது நிமிட பயணத்தின் முடிவில் அவன் அவளை அழைத்து வந்த இடத்தினை பார்த்து விழிகளை அகல விரித்தவள் இதழ்களோ “அமேசிங்” என்று இருந்தன.

 

“ஃப்ரெஷ் ஆகிட்டு வா”

 

“இந்த இடத்தை எப்படி கண்டு பிடிச்சீங்க வரும் போது நீங்க மேப் பார்க்கவே இல்லையே” என்றாள் சந்தேகமாக….

 

“நான் சும்மா ஒன்னும் இங்க தெரியாமல் வர்ல ஆழி கூகிள்ல சேர்ச் பண்ணிட்டு தான் வரேன்” என்று சொல்ல….

 

“இதுக்கு தான் உங்க மாதிரி ஒரு அறிவாளியை கூட வச்சிக்கணும் என்றவள் தண்ணீரில் கால் வைக்கும் முன்பே ஞாபகம் வந்தவளாய் இங்க பிரானா பிஷ் இல்லையே” என்று கேட்க…..

 

அவனோ இல்லை என்னும் ரீதியில் தலை அசைக்க, அவளும் ஒரு பெரு மூச்சுடன் ஆற்றில் காலை வைத்து நடந்து சென்று நீந்த ஆரம்பித்து விட்டாள்.

 

அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் இதழ்கள் வன்மமாக புன்னகைக்க…. நீந்திக் கொண்டு இருந்தவள் திடீரென அவனைப் பார்த்து “நீங்களும் வாங்க” என்று கையசைத்து அழைக்க…

 

சற்றே தடுமாறிப் போனவனுமே அவளுடன் சேர்ந்து நீந்த ஆரம்பித்தான்.

 

ஒரு கட்டத்தில் “போதும் வா” என்று அவன் அழைக்க…

 

“இன்னும் கொஞ்சம்” என்று விழிகளைச் சுருக்கி அவள் கேட்க…

 

அப்படியே அவள் கொஞ்சம் கொஞ்சம் என்று சொல்லி ஒரு மணித்தியாலத்தை தண்ணீரிலே கடத்தி விட….

 

“தண்ணிகுள்ள இவ்வளவு நேரம் இருக்கது  ஹெல்த்துக்கு சரி இல்லை மேல வா என்றவன் அவளைப் படாத பாடு பட்டு கரைக்கு கூட்டி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவனுக்கு…

 

“நான் ப்ரேக் பாஸ்ட் ரெடி பண்றேன்… நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா என்றவன் அவள் முன்னே எந்த வித கூச்சமும் இன்று உடையை மாற்ற ஆரம்பித்து விட “ச்சீ” என்றவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

 

“என்னடி என்னை பார்த்ததே இல்லாத மாதிரி ஓவர் ஆஹ் பண்ற”

 

“என்ன பேச்சு “ என்றவள் வெட்கத்தில் முகத்தை அவன் புறம் திருப்பவே இல்லை.

 

உடையை மாற்றிக் கொண்டு அவள் முன்னால் வந்தவன் பார்வை அவளின் முகத்தில் இருந்து வழிந்துக் கொண்டிருந்த நீர் துளிகள் ஊடாக பயணிக்க, அவளோ நீரில் நனைந்து இருந்தமையால் உடையோ  மேனியோடு ஒட்டிக் கொண்டு இருக்க அவளின் அங்க வனப்புகள் அப்பட்டமாக அவனின் விழிகளுக்கு விருந்தாகின.

 

அவனின் பார்வையில் வெட்கியவள் தன்னை மறைத்துக் கொள்ள வழி அறியாமல் அவனை அணைத்துக் கொள்ள, சும்மாவே அவளை விழிகளாலே மோகமாக ரசித்தவன் இப்போது அவள் அணைத்துக் கொண்டால் சொல்லவும் வேண்டுமா உணர்வுகள் கிளர்ந்து எழ அவளின் காதின் அருகே குனிந்தவன் “ ஐ நீட் யூ” என்று சொல்ல…

 

அவளும் உணர்வுகள் உள்ள பெண் அல்லவா! அவனின் மேனி தந்த கதகதப்பில் அவனை இறுக அணைத்துக் கொண்டவள் எம்பி அவனின் இதழ்களில் முத்தமிட்டு தன் சம்மதததைக் கூற….

 

சற்றும் தாமதிக்காமல் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு மறைவாக இருந்த அடர்ந்த மரத்தின் அருகே வந்தவன் சுற்றிலும் ஆராய்ந்த பின் அவளை நிலத்தில் கிடத்தி அவள் மேல் படர்ந்தவன் அவளின் துடித்துக் கொண்டு இருந்த செம்பவள இதழ்களில் அழுத்தமாக மிக ஆழமாக முத்தமிட்டான்.

 

என்றும் இல்லாத ஆழமான முத்தம் அது.

 

அவளின் உயிர் வரை ஊடுருவியது.

 

அவள் முத்தமிட்டு முத்தமிட்டு உடைகளை தளர்த்தியவன் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவளின் விழிகளை பார்க்க அவளோ அவனை காதலாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

அவளின் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளை ஆட்கொள்ள ஆரம்பிக்க அவளும் அவனுள் ஒன்றிப் போனாள்.

 

அவளை என்றும் இல்லாமல் மீண்டும் மீண்டும் நாடினான்.

 

 

அவளும் அவனுக்காக தன்னையே கொடுத்து அவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருக்க, ஒரு கட்டத்தில் அவளின் இதழ்களில் அழுந்த முத்தம் பதித்து விட்டு தன் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு எழுந்தவன் அவளின் புறம் திரும்பாமலேயே அவளுக்கு உடைகளை எடுத்துக் கொடுக்க அவனின் திடீர் செய்கையில் புரியாமல் விழித்தவள் “ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று அவள் கேட்க….

 

“நதிங் ஆழினி டிரஸ் அஹ் போடு” என்று சற்று அவன் அழுத்தம் கூட்டி சொல்ல…

 

அவன் குரலில் மேனி நடுங்க “பயமா இருக்கு அதட்டாமல் மெதுவா சொல்லலாமே” என்றவள் அவன் நீட்டிய உடையை வாங்கி அணிந்துக் கொள்ள, அது வரை என்ன சொல்லி அவளை காயப் படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தவன் சற்றும் தாமதிக்காமல் அவளைப் பார்த்து  அந்தக் கேள்வியை கேட்டு இருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 37”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!