தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 38

4.6
(24)

பேராசை- 38

அவன் கேட்ட கேள்வியில் அவளது மேனியே கூசிவிட்டதைப் போல உணர்ந்தாள்.

 

“வாட்? கம் அகைன்”

உடைகளை அணிந்துக் கொண்டு எழுந்தவன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு “இதுக்காகத் தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று  சற்று முன் நிகழ்ந்து விட்ட கூடலை வைத்து அவன் கேட்க….

 

அவன் கேட்ட தோரணையில் அவளுக்கு இதயமே வெடித்து விடுவது போல வலித்தது.

விழிகள் கலங்கிப் போக அவனை வெறித்துப் பார்த்தவள் “ நான் என்ன பண்ணேன் இங்க வந்ததுல இருந்து ஹர்ட் பண்ணிட்டே இருக்கீங்க” என்று அவள் கேட்க….

 

“வாட் நானா உன்னை ஹர்ட் பண்றேன்?” என்றவன் நதியினை வெறித்தான்.

 

“வை நாட்? நான் இதுக்காகவா உங்களோட” என்றவள் குரலோ முழுமையாக சொல்ல வந்ததைக் கூட முடிக்க முடியாமல் தழுதழுத்தது விட்டது.

 

“ஸ்டாப் இட் ஆழினி நீ வீட்டுல அழுது டிராமா பண்றதை என்கிட்ட ட்ரை பண்ண வேணாம் இட்ஸ் நோ யூஸ்”

 

அவள் பதில் ஏதும் சொல்லாமல் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

 

அவளின் அமைதியை கண்டு கொள்ளாத அவனோ மேலும் தொடர்ந்து “நீ என்னை லவ் பண்றது எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்று அவன் கேட்டதில் திடுக்கிட்டு விழித்தவள் “புருஷனை லவ் பண்றது தப்பு இல்லை” என்றாள்.

 

“ஓஹோ… அத்தை மாமா கல்யாண நாள் அப்போவே நான் உன் டைரி அஹ் ஃபுல்லா படிச்சிட்டேன் அதையும் தூக்கி எரிக்கலாம்ன்னு இருந்தேன் பட் உன்னை வேற வழியில காயப்படுத்தலாம்னு எரிக்கலை” என்று அவன் வன்மமான தோரணையில் சொல்ல….

 

 

“சோ நான் உங்களை லவ் பண்றது தெரிஞ்சும் அதை எரிகணும்னு உங்களுக்கு தோணி இருக்கு என்றவள் தொடர்ந்து இவளோ நாள் எப்படி ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்க முடிஞ்சது உங்களால?” என்று கேட்க…

 

ஹா… ஹா… ஹா… என தெற்றிப் பற்கள் பளிச்சிட சிரித்தவனை இப்போது அவளால் ரசிக்கவே முடியவில்லை மனதில் இனம் புரியாத வலியில் ஏதோ நடக்கப் போகிறது என்று அவளால் தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது.

 

“நீ உன் 15 வயசுல இருந்து என்னை உருகி உருகி லவ் பண்ணதை படிச்சதும் எனக்கு உன்மேல லவ் வரும்னு நினைச்சியா? என சிரித்துக் கொண்டே கூறியவனின் புன்னகையோ சடுதியில் மறைந்துப் போக நோ வே அவ்ளோ வெறுப்பு டி உன்மேல இப்போ கூட அவ்ளோ வெறுப்பு”  என்றவன் காலைத் தரையில் ஓங்கி உதைத்து இருந்தான்.

 

 

அதில் அதிர்ந்து விழிகளை மூடித் திறந்தவள் “என்மேல இவளோ வன்மம் வர காரணம் என்ன?” என்று நிதானமாக அவள் கேட்க…

 

இப்போது அவளின் கலங்கி இருந்த விழிகளைப் பார்த்தவன் “நடிக்காத டி வெறி ஆகுது” என்று அவன் சொல்லும் போதே கழுத்து நரம்புகள் புடைத்து விழிகள் சிவந்து விட்டு இருந்தன.

 

என்ன முயன்றும் அடக்க முடியாமல் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள் ஒரு பெரு மூச்சுடன் “ எனக்கு தெரியலை… உங்களுக்கு நான் என்ன பண்ணேன்?”

 

“ என் அப்பா முதல் எல்லாரும் உன்கூட அட்டாச்ட் ஆஹ் இருக்காங்க…. ஏன் நான் ஒருத்தன் அந்த வீட்ல இருக்கது தெரியலையா? எப்ப பார்த்தாலும் ஆழினி ஆழினி  ஆழினினு அந்த பெயரைக் கேட்டாலே எரிச்சல் எனக்குள்ளே” என்று அவன் பற்களைக் கடித்துக் கொண்டே கூற….

 

“உங்க உரிமையை நீங்க எடுக்காமல் என்மேல தப்பு எப்படி நீங்க சொல்ல முடியும் காஷ்?” என்ற  கூர்மையான வார்த்தைகளை அவனைப் பார்த்து கேட்க….

 

“கால் மீ காஷ்யபன்” என்று அவன் சீற….. எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “சாரி மிஸ்டர் காஷ்யபன் ஷேத்ரா” என்றாள்.

 

“என்ன சொன்ன என் உரிமையை நான் எடுக்குறதா? நைஸ் ஜோக் என் அப்பாகிட்ட சந்தோஷமா கதைச்சு எத்தனை வருஷம்னு உனக்கு தெரியுமா? என்றவன் தொடர்ந்து நான் போய் அப்பான்னு கூப்பிட்டாலே  உன்னைப் பற்றி பேசிப் பேசியே அதில் நான் சொல்ல வர்றதை அவர் கேட்க மாட்டார்” என்று சொல்ல…

 

“நீங்க பார்க்கிற கண்ணோட்டம் தப்பு”

 

அவளை அவன் உறுத்து விழிக்க, “ என்மேல கோபத்தை வளர்த்து தேவை இல்லாமல் நீங்களே அவங்க கிட்ட இருந்து விலகி போனதுக்கு நான் எப்படி காரணம் ஆக முடியும்?” என்று ஆதங்கமாக  அவள் கேட்க…

 

அவனையே அதுவும் அவனிடமே அவள் பிழை கூறுவதை பார்த்துக் கண்மண் தெரியாத ஆத்திரம் கிளர்ந்து எழ “பிட்ச்” என்ற வார்த்தையை அவளைப்  பார்த்துக் கூறி இருந்தான்.

 

விழிகள் விரிய அவனை அதிர்ந்து பார்த்தவள் “இப்போ வரையும் நான் உங்களை காதலிச்சிட்டு இருக்கேன் அதை உயிரோட புதைச்சிட வேண்டாம்” என உடைந்த குரலில் அவள் சொல்ல…

 

“காதலா? ரப்பிஷ் என்று சீறியவன் எது டி காதல் என் பிசிக் அஹ் வர்ணிச்சி எழுதி இருந்தியே அது காதலா? இல்லை 16 வயசுலயே என்கூட வாழணும்னு எழுதி வச்சி இருந்தது காதலா?” என்று அவளின் காதலை முடிந்த அளவு எவ்வளவு கீழ் தரமாக பேச வேண்டுமோ அந்த அளவுக்கு அவனும்  வார்த்தைகள் விட்டு இருக்க……

 

அவனின் ஒவ்வொரு வார்த்தைகளின் வீரியத்திலும் அவனின் மீது அவள் கொண்ட காதலோ துகள் துகளாக உடைத்துக் கொண்டு இருந்ததை பாவம் அவன் அறியவில்லை.

 

“ஸ்டாப் இட்” என்று அந்த இடமே அதிரக் கத்தியவள் தன் இரு காதுகளையும் கைகளால் பொத்தியபடி நிலத்தில் தொப் என வீழ்ந்து கதறி அழுதாள்.

 

அவளின் அழுகைக் கூட சற்றும் அவனை  அசைக்க வில்லை அந்த அளவு அவளின் மீதான வன்மம் அவனின் புத்தியை மழுங்கச் செய்து இருந்தது.

 

தேமித் தேமி அழுது கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவள் “அப்போ என்னை எதுக்காக மேரேஜ் பண்ணிகணும்?” என்று அவன் விழிகளை ஏதோ ஓர் எதிர்ப் பார்ப்புடனேயே கூர்மையாக பார்த்துக் கொண்டே கேட்டு இருந்தாள் அவள்.

 

“யூ க்னோ உன்னோட ரப்பிஷ் காதலை வச்சு உன்னை வலிக்கப் பண்ண  வேற ஒருத்திய மேரேஜ் பண்ணலாம்னு இருந்தேன் என்ற அவனின் ஒற்றை வார்த்தையில் அவளின் உயிர்ப்பு மொத்தமாக தொலைந்து இருந்தது.  அதை அறியாத அவனோ மேலும் தொடர்ந்து பட் உனக்கு என்னோட அப்பா அவரோட பிஸ்னஸ் அஹ் கொடுக்கிறதா டாகுமெண்ட்ஸ் ரெடி பண்றார் ஐ காண்ட் டோலரேட் தட் அனிமோர் எனக்கு கூட கொடுக்காமல் உனக்கு என்னதுக்கு கொடுக்கணும்? சோ அதான் உன்னை மேரேஜ் பண்ணிக்க வேண்டியதா போச்சு என்றவன் பட் பரவால்ல முதல் நீ என்னை நம்பலைனாலும் பிறகு என்னை நம்பி  என்றவன் நல்லாவே எஞ்சாய் பண்ணேன்” என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லி விட….

 

ஏன் இன்னும் தான் உயிரோடு இருக்கின்றோம் என்றே அவள் எண்ணும் விரக்தி நிலைக்கு சென்று விட்டாள்.

 

அவளின் அழுது வீங்கிய முகத்தைப் பார்த்தவன் அவளின் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்து அவளின் தாடையைப் பற்றியவன் அவளின் இதழ்களை வருடியபடி “பீல் குட் கம்பனி கொடுத்த” என்றவன் அவளின் இதழை நோக்கி குனிந்த சமயம் அவளோ அவனின் மார்பில் கையை வைத்து தள்ளி இருந்தாள்.

 

அவளின் எதிர்வினையை சற்றும் எதிர்பாராத அவனோ காலை அழுத்தமாக நிலத்தில் ஊன்றி தன்னை சமன் செய்து கொண்டவனுக்கு ஆத்திரம் தலைக்கு ஏற இவ்வளவு நாளாக அவளே அறியாமல் அவன் அவளுக்கு செய்த ஒரு விடயத்தை சற்றும் சிறு குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவளிடம் கூறி இருந்தான்.

 

அதிலேயே அவள் மொத்தமாக அவனை வெறுத்தே விட்டாள்.

 

ஆம், குழந்தை உருவாகாமல் இருக்க அவளை அறியாமலேயே அவள் தினம் எடுத்துக் கொள்ளும் மாத்திரையில் அவன் மாற்றி வைத்து இருந்தான்.

 

அவனிடம் அவள் வெளிக்காட்டாமல் இருந்தாலும் இன்னுமே தனக்கு குழந்தை உருவாகவில்லையே என்று உள்ளுக்குள் வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தவளுக்கு இது பேரிடியாக இருந்தது.

 

அவனோடு இவ்வளவு நாளும் இழைந்த தன்னை நினைத்தே அருவருப்பான இருந்தது அவளுக்கு…..

 

கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள் “ஏன் இப்படி பண்ணிங்க?” என்று கேட்டு இருக்க, “சிம்பிளா சொன்னால் என் குழந்தை உன் வயிற்றில் வளரக் கூடாதுன்னு நினைச்சேன்” என்று சொல்ல….

 

இந்த பதிலை அவள் எதிர் பார்த்தது போலவே அவன் சொல்லி இருக்க அதற்கு விரக்தியாக சிரித்தவள் “அப்போ பிடிக்காத என்கூட என்னதுக்கு?” என்று அவள் முழுதாக முடிக்கும் முன்னரே அவனே “அதான் சொன்னேன்ல எஞ்சாய் பண்ண தான்னு” என்று சொல்ல….

 

கண்களை மூடித் திறந்து ஓர் நீண்ட பெரு மூச்சுடன் தரையில் இருந்து எழுந்தவள் “ ஓகே ஜஸ்ட் லீவ் இட்…. நான் ஶ்ரீ லங்கா போனதும் உங்களுக்கு டிவோர்ஸ் தரேன் நாம பிரிஞ்சிடலாம் என்றவள் தொடர்ந்து அவளின் உடை அடங்கிய பையினை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பலாம்” என்று அவள் அவனைத் தாண்டி முன்னால் நடந்து சென்றாள்.

 

அவனின் நோக்கமே வேறு அல்லவா!

 

“எங்க போற வெயிட் இதையும் தெரிஞ்சிட்டு போ” என்று அவன் சொல்ல….

 

அவனைத் திரும்பி பார்த்தவள் என்ன என்ற தோரணையில் கேள்வியாக நோக்க….

“உன்னை ஹனிமூன் கூட்டிட்டு சும்மா ஜாலிக்கு ஃபாரஸ்ட் வந்தேன்னு நினைச்சியா என்றவன் புன்னகைத்துக் கொண்டே என்னோட நியூ பெர்ஃப்யூம் புராஜக்ட் க்கு இங்க தான் எனக்கு தேவையான பிளவர் இருக்கு அதுக்காக தான் மோஸ்லி இங்க வந்தேன்” என்று சொல்ல….

 

அதற்கு அவளோ எந்த வித பதிலும் சொல்லாமல்   முன்னால் நடந்து செல்ல….

 

அவனின் உடைகள் அடங்கிய பையினை எடுத்துக் கொண்டு அவள் முன்னால் வழி மறித்து நின்றவன் “நீ போறதுனா தனியா போகலாம் என் கூட வரத் தேவை இல்லை” என்று சொல்ல…

 

அதில் அதிர்ந்தவளின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது.

 

“டோன்ட் பிளே வித் மீ காஷ் என்று சொல்ல வந்தவள் அவனின் அழுத்தமான பார்வையில் காஷ்யபன் என்றவள் தனது கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு அங்க போய் உங்களுக்கு இஷ்டப்பட்ட வாழ்க்கையை அமைச்சு சந்தோஷமா இருங்க அதுக்கு நான் உங்களை டிவோர்ஸ் பண்ணிட்டு அந்த வீட்டை காலி பண்ணிட்டு என் அம்மா அப்பா கூட யார்கிட்டயும் சொல்லாமல் கிளம்பிடுவேன் சோ பிளீஸ்” என்று அவள் சொல்ல…

 

“எனக்கு நீ சொல்லத் தேவையில்லை என் லைஃப் என்னோட இஷ்டம் என்றவள் ஓஹோ மேடம் வீட்டை காலி பண்ண போறீங்களா? வெல் இது நல்ல ஐடியா தான் பட் அத்தையை மிஸ் பண்ணுவேனே என்று நெற்றியை நீவிக் கொண்டே ஏன் நீ மட்டும் தொலைஞ்சு போனால் என்ன?” என்று கேட்டு விட…

 

“என்னைக் கூட்டிட்டு போங்க உங்க விருப்பம் போல எல்லாம் பண்ணலாம்” என்று நிதானமாக அவள் சொல்ல…

 

“முடியாது” என்று அவன் சொல்ல….

 நம் பலவீனம் தானே எதிரியின் பலம் என்று பாவம் அக்கணம் மறந்து இருந்தாள் அவள்.

“எனக்கு இங்க இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் பயமா இருக்கு எந்த தொல்லையும் உங்களுக்கு நான் கொடுக்க மாட்டேன் இங்க இருந்து என்னை தயவு செஞ்சி கூட்டிட்டு போய்டுங்க” என்று காலில் விழாத குறையாக அவள் கெஞ்ச….

 

ஏளனமாக சிரித்தவன் “உன்னை இங்க விட்டுட்டு போறது தான்டி என் பிளானே” என்று சொல்ல…

 

அவளுக்கோ மேனியில் ஒரு வித அதிர்வு சடுதியில் உச்சி முதல் பாதம் வரை வியர்த்து வழிய ஆரம்பித்து இருந்தது.

 

அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே “இந்த பணிஷ்மென்ட் எதுக்கு தெரியுமா? என்றவன் தொடர்ந்து என் ஷீல்ட் எல்லாம் உடைச்சியே அதுக்காக தான்… ரெண்டு நாள் இங்கேயே இரு வேணும்னா என் அத்தைக்காக அப்புறம் வந்து உன்னைக் கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல….

 

தனது விதியை நினைத்து நொந்துக் கொண்டவளுக்கு மேனியோ நடுங்க ஆரம்பித்து விட கிஞ்சித்தும் அதைக் கணக்கில் கொள்ளாமல் தனது சுயத்தை இழந்தவளோ அவனின் காலைப் பிடித்தே விட்டாள்.

 

அதிர்ந்து ஓரடி பின்னால் சென்றவன் மனதோ பிசைய ஆரம்பிக்க விழிகளை மூடித் திறந்தவன் “சாரி ஐ காண்ட் ஹெல்ப் யூ” என்றவன் அவளை திரும்பியும் பார்க்காமல் நடக்க ஆரம்பித்து இருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

8 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 38”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!