தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 40

4.7
(26)

பேராசை – 40

 

ஈகுவேடாரில் இருந்து இலங்கை வந்து சேர கிட்டத்தட்ட இருபத்து மூன்று மணித்தியாலங்களைப் பிடித்து இருந்தது. விமானம் தரை இறங்கியதும் எப்போதுடா செக்கிங்கை முடித்து விட்டு வெளியில் போகலாம் என்று இருந்தது அவனுக்கு….

 

ஒருவழியாக வெளியில் வந்தவன் அங்கு போடப் பட்டு  இருந்த இருக்கையில் தொப்பென தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனுக்கு ஆழினிக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவனின் சிந்தை முழுதும் ஓடிக் கொண்டிருந்தது.

 

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தனோ ஒரு முடிவை எடுத்தவனாய் மீண்டும் உள்ளே வந்தவன் ஈகுவேடாரிற்கு செல்லும் அடுத்த விமானம் எத்தனை மணிக்கு என்று கேட்டு தெரிந்துக் கொண்டவனுக்கு மயக்கம் வராத குறை தான்.

 

ஆம், சற்று முன்னர் அவன் வந்த விமானம் தரை இறங்கிய போது தான் ஒரு விமானம் இங்கு இருந்து புறப்பட்டு இருந்தது. மேலும் அடுத்த விமானம் கிளம்பும் நேரம் இரவு 7 மணிக்கு என்று சொல்ல அப்படியே நின்று இருந்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“ஷிட்” என்று தலையைக் கோதிக் கொண்டே கை முஷ்டியை மடக்கி அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்தி இருந்தான்.

 

மாபிளினால் அமைக்கப்பட்ட சுவர் என்பதால் அவனது கையில் சதை கிழிந்து ரத்தம் கசிய ஆரம்பித்து விட அதையெல்லாம் அவன் கண்டு கொள்ளும் நிலையில் இருக்க வில்லை அங்கு இருந்தவர்களோ அவனை விசித்திரமாக பார்த்து விட்டு சென்றனர்.

 

தளர்ந்த நடையுடன் வெளியில் வந்தவனை “காஷ்யபன்” என்று அவன் பின்னால் இருந்து ஒரு குரல் அழைக்க, அக் குரலிலேயே மேலும் அவன் நிலைக்குலைந்தே விட்டான்.

 

அப்படியே விழிகளை இறுக மூடி நின்று இருந்தவன் முன் வந்து நின்ற இந்துவோ “அதுக்குள்ள வந்தாச்சா இப்போ தான் வருணும் தேஜாவும் உங்க ரெண்டு பேருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு பிளைட்ல கிளம்பினாங்க என்றவர் தொடர்ந்து எங்கப்பா ஆழினியை காணும்” என்று கேட்டுக் கொண்டே அவரின் பார்வை அவனின் கைகளில் படிய, பதறி கையில் வைத்து இருந்த ஹன்கர்சிப்பை அவனின் கையில் கட்டி விட்டார்.

 

அவனோ இந்துவின் கேள்வியில் உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் கொண்டு இருந்தான்.

 

இந்துவின் முகத்தைப் பார்க்கவே குற்ற உணர்வாக இருந்தது.

 

ஒரு பெரு மூச்சுடன் வாயை அவன் திறக்கும் முன்னரே… பிரகலாதன், லதா , ஜீவன் மற்றும் ஜெயகுமார் அங்கு வந்து சேர சரியாக இருந்தது.

 

எல்லோருக்கும் ஆச்சரியம் அவன் திடீர் என வந்தது.

அவனின் முகத்தை கூர்ந்து கவனித்த பிரகலாதனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற சுற்றிலும் பார்வையை சுழற்றிய பிரகலாதன் “ ஆழினி எங்க?” என்று கேட்க…

 

“அண்ணா அவ இங்க தான் இருப்பா பார்க்கலாம் அவன் கைல காயம் என்னனு சொல்றான் இல்லை கேளுங்க” என்று இந்து சொல்ல….

 

லதா பதறி முன்னால் வந்து “என்னடா ஆச்சு?” என்று அவனின் கையை ஆராய…

 

அவனின் அமைதியில் மீண்டும் அதே கேள்வி இப்போது ஜீவனிடம் இருந்து வந்து இருந்தது. ஆம், அவரும் “ஆழினி எங்க மாப்பிளை?” என்று கேட்க…

அவனுக்கோ பொறுமை போய்விட்டது போலும் “எப்ப பாரு ஆழினி…ஆழினி  தான் ஏன்பா என் கை அடிபட்டு இருக்கே உங்களுக்கு கேக்கணும்ன்னு தோணலையா?” என்று அவன் குரல் உயர்த்திப் பேச அடுத்த கணமே அவனின் கன்னத்தை லதாவின் கரம் படிந்தது.

 

தன் கன்னத்தை வருடிக் கொண்டே அதிர்ச்சியில் விழிகளை விரித்தவன் “மாம்” என்று அவன் அழைக்க, லதாவோ “இந்து உன் பொண்ணு எங்கனு கேளு” என்று அதிர்ந்து போய் விழித்துக் கொண்டு இருந்த இந்துவை அவர் உலுக்கி எடுக்க….

 

“காஷ்யபன் என் பொண்ணு” என்று கலங்கிய விழிகளுடன் கேட்க…

 

அவனோ ஆக்ரோஷமாக இவ்வளவு நாளாக தன்னுள் அடக்கி வைத்த அனைத்தையும் பொது இடம் என்றும் பாராமல் அனைத்தையும் கூற, அவனின் இந்த கொடூர செயலில் அனைவரும் வாயடைத்து போயினர்.

 

“அப்போ ஆழியை காட்டுல…” என்று சொன்ன இந்துவுக்கு இதயம் வேகமாக துடிக்க கண நேரத்தில் அவருக்கு மாரடைப்பு வந்து இருந்தது.

 

அங்கு இருந்தவர்கள் அவர்களை சூழ்ந்து விட்டார்கள்.

“இந்து” என்று ஜீவா ஒரு புறம் பதற மறு புறம் லதாவும் மயங்கி சரிய இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்துக் கொண்ட ஜெயகுமார் உடனடியாக செயல் பட்டு அவசர ஊர்தியை அழைத்து துரிதமாக செயற்பட்டார்.

 

இத்தனைக்கும் பிரகலாதன் அசையவே இல்லை. நின்ற நிலையிலேயே காஷ்யபனை வெறித்துக் கொண்டு இருந்தார்.

அதிர்ந்து போய் நின்று இருந்த காஷ்யபன் “மாம்” என்றபடி நகர்ந்து லதாவின் அருகே சென்ற போது அவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்ட பிரகலாதன் அவனை அவர்கள் அருகில் விட வில்லை.

 

அவனுக்கு அவரின் பிடியை தளர்த்தி விட்டு போகலாம் ஆனால் அவனோ “அப்பா பிளீஸ் லீவ் மீ” என்று சொல்ல…

 

பிரகலாதனோ அவனுக்கு பதில் சொல்லாமல் “ஜீவன் ஹாஸ்பிடல்ல எல்லாம் கூடவே இருந்து பார்த்துக்கோ” என்றவரின் குரல் தழுதழுக்க “பிரகா நீயும்” என்று ஜீவன் அழைக்க… “இல்லை ஜெயக்குமார் கூட போ நான் பிறகு வரேன்” என அழுத்தமாக சொன்னவர் காஷ்யபனை தர தரவென இழுத்துக் கொண்டு சென்று காரின் கதவை திறந்து வேகமாக அவனை உள்ளே தள்ளி கதவை லாக் செய்து விட்டு மறுபுறம் வந்தமர்ந்து வேகமாக வண்டியை செலுத்தத் தொடங்கினார் பிரகலாதன்.

 

“அப்பா ஸ்லோ டவுன்” என்று அவன் கத்தியது காற்றில் தான் கரைந்தது.

 

அவரோ நேராக வீட்டிற்கு வண்டியை செலுத்த, அவரின் வேகத்தில் விமான நிலையத்தில் இருந்து பதினைந்து நிமிடங்களில் வீட்டை அடைந்து இருந்தது.

 

காரில் இருந்து இறங்கியவர் தான் ஒருவனை கூட்டி வந்துள்ளோம் என கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் நுழைந்தவர் வேக வேகமாக தனது அறைக்குள் சென்று விட அவரை வேகமாக பின் தொடர்ந்து வந்தவன் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஹாலில் தன்னந்தனியாக நின்று இருந்தான்.

 

பத்து நிமிடங்களின் பின் சில பத்திரங்களோடும் பரிசுப் பொதி போல சுற்றப் பட்ட பெட்டியுடனும் வெளியில் வந்தவர் ஆக்ரோஷமாக அவன் முகத்தில் அனைத்தையும் விட்டு எறிந்தவர் அவனின் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்து விட்டு  “கெட் அவுட் பிரோம் மை ஹவுஸ் என்று சீறிவிட்டு தொடர்ந்து ஹாஸ்பிடல் செல்ல வெளியில் செல்லப் போனவர் மறுபடி அவனைத் திரும்பிப் பார்த்து நாங்க திரும்பி இங்க வரும் போது நீ இந்த வீட்டுல இருக்கக் கூடாது” என்று விட்டு திரும்பியும் பாராமல் சென்று விட்டார்.

 

சுற்றிலும் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்த வேலையாட்கள் அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் வாணியின் குரலில் தான் கலைந்து சென்றனர்.

 

விழிகள் கலங்கிப் போய் தலை முடிக் கலைந்து தொய்ந்து போய் நின்றவன் அருகில் வந்த வாணியோ, “தம்பி” என்றழைக்க….

 

“நான் தனியா இருக்கணும்னு நினைக்கிறேன் பிளீஸ் யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்” என்றவன் கீழே சிதறிக் கிடந்த பத்திரங்களையும் வித்தியாசமாக இருந்த பெட்டியையும் எடுத்துக் கொண்டு விரைவாக தன் அறைக்குள் சென்றான்.

 

உள்ளே வந்தவன் முதலில் பிரித்துப் பார்த்தது வித்தியாசமாக இருந்த பெட்டியை தான்.

 

பார்த்த மாத்திரத்தில் அதை இன்னும் யாரும் பிரித்துப் பார்க்கவில்லை என்று புரிந்தும் கொண்டான்.

 

அதனுள் ஒரு டயரி இருந்தது.

 

அதை எடுத்துப் பார்த்தவனுக்கு முன் அட்டையிலேயே “ஃபார் மை ஹஸ்பண்ட்” என வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

 

பிரகலாதன் அறைந்த போது வராத கண்ணீர் அவளின் எழுத்துக்களைப் பார்த்ததும் அவனே அறியாமல் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

அதைத் திறந்து பார்க்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது.

 

விழிகளை இறுக மூடித் திறந்து முதலாவது பக்கத்தை புரட்டினான் அதில் “எங்களுக்கு இன்னைக்கு கல்யாணம் ஆகிறிச்சு” என்று எழுதி இருந்தவளின் எழுத்துக்கள் அருகே சில கண்ணீர் தடங்களும் காய்ந்துப் போய் இருந்தன. அதனை வருடிப் பார்த்தவன் இதழ்களோ “ஆழி” என்று உச்சரித்தன.

 

என் எத்தனை வருஷ தவம் தெரியுமா? உங்க கூட வாழனும்னு அது இப்போ நிறைவேறி இருக்கு என்று எழுதி இருந்தவளின் ஒவ்வொரு பக்கத்தையும் திருப்ப திருப்ப அவளின் காதலின் ஆழமும் அவனுடன் சந்தோஷமாக இருந்த பொழுதுகளை கூறி இருந்தவள் சண்டை வந்த போது அவனின் வார்த்தைகளில் காயப்பட்டு இருப்பாள் போலும் மிகவும் உருக்கமாக எழுதியும் இருந்தாள்.

 

அனைத்தையும் வாசித்து விட்டு கடைசி பக்கம் பார்த்தவன் விழிகள் பெரிதாக விரிந்தன.

 

இதயமோ தாறுமாறாக துடித்தது.

 

ஆம், அவளை அவன் திருமணம் செய்து கொண்டதன் காரணம் அவளுக்கு முன்னரே தெரிந்து இருந்தது.

 

“அப்போ ஏன்டி என்னை ஒரு வார்த்தை கூட திட்டலை… அவ்ளோ நான் உன்னை ஏசியும்” என வாய் விட்டு சொன்னவன் அடுத்த பக்கத்தைப் பார்த்தான் அதில் அவளை பற்றி அவனுக்கு தெரியாத மறு பக்கம் இருந்தது.

‘லினா’ என்று அவளின் கையெழுத்துடன் அவள் ஆரம்பித்த “மெஜெஸ்டிக் ஹெவன்” என்ற ரிசார்டின் பெயர் முதல் கொண்டு அதில் கிடைக்கும் லாபங்கள் முதல் பங்குகள் முதற்கொண்டு எழுதி இருந்தவள் அதன் முடிவில் இதுக்கு எம்டி மட்டும் தான் நான் பட் இதுக்கான மொத்த அக்சஸ் மாமகிட்ட தான் இருக்கு இதை தான் எனக்கு தரேன்னு வருண் அப்பாகிட்ட சொல்லி இருந்தார் என்று எழுதி இருந்தவள் இரு பக்கங்களை விட்டு இன்னும் மாமா மாமாகிட்ட தான் இருக்கு அது அவர் கிட்டயே இருக்கட்டும் அதை மட்டும் கேட்டுட வேண்டாம் பிளீஸ்” என்று எழுதி இருந்தவள் தொடர்ந்து  நீங்க இதை படிக்கும் போது நான் உங்க கூட இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் பிகாஸ்  நீங்க என்னை…. என்று முற்றுப் புள்ளிகளுடன் நிறைவு பெற்று இருந்தது அந்த டயரி.

 

அனைத்தையும் வாசித்து விட்டு எழுந்தவனுக்கு என்ன மாறி உணர்கிறான் என்றே அவனுக்குத் தெரியவில்லை.

 

அவன் அருகில் இருந்த பத்திரங்களை வெறித்தவனுக்கு அவை எவைப் பற்றியதென பார்க்காமலேயே புரிந்துக் கொண்டான்.

 

விழிகளில் இருந்து நில்லாமல் கண்ணீர் வழிந்தது.

 

அவனை நினைத்தே அவனுக்கு ஆத்திரம் வந்தது.

வந்த ஆத்திரத்தில் அனைத்துப் பத்திரங்களையும் விட்டு எறிந்தான்.

அதனுள் இருந்து ஆழினியின் புகைப்படம் ஒன்று பறந்து சென்று அவன் புத்தகங்கள் அடுக்கி வைத்து இருந்த மேசையின் கீழ் பறந்து சென்று விழுந்து விட, வேகமாக அதன் அருகே நெருங்கி மேசையை நகர்த்தி விட்டு குனிந்து புகைப் படத்தை எடுத்தவன் எதேச்சையாக சுவரை பார்த்தவனுக்கு இதயமே நின்று விட்ட உணர்வு தான்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 40”

  1. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ஆனால் ரசிக்க முடியவில்லை ஆழினி இல்லாமல் 😱😱😱😱😱😱😱😱😱
    எப்பொழுதுமே இருக்கும் வரையில் அதனுடைய வலிமை தெரியாது நாங்க ஆழினிக்காக மட்டுமே கவலைப்படுவோம் காஷ்யபன் நல்லா அனுபவி

    1. Avatar photo

      ஆழி நாளைக்கு வருவா 🥰🥰 அவன் நல்லா anubavippan இனி கவலைப் பட வேண்டாம் dear நீங்க இனி ரசிக்கலாம் 😍😍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!