தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 5

5
(22)

பேராசை – 5

 

தன் முன்னால் பாதி எரிந்தும் எரியாமல் கிடக்கும் காகிதங்களை வெறித்துக் கொண்டு இருந்தாள்.

 

ஆம், அது அவள்  அமேசான் காடு பற்றி ஆய்வு செய்து வைத்து இருந்த அறிக்கையே அது.

பல அனுபவம் பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அமேசான் காட்டிற்கு சென்று வந்த சிலரிடம் கேட்டு அறிந்த திடுக்கிடும் விடயங்கள் பற்றி அவள் தெள்ளத் தெளிவாக கடந்த 4 ஆண்டுகளாக சேகரித்து வைத்தவையே  அவை.

 

தான் நான்கு வருடமாக இரா பகல் கூட பாராமல் கஷ்டபட்டு சேகரித்து வைத்ததை இப்படி செய்து வைத்து இருக்கின்றானே! இவன் என ஆத்திரம் கிளம்ப கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் ஒரு முடிவை எடுத்தவலாய் கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் சென்றவள் காஷ்யபனின் அறைக் கதவைத் தட்டினாள்.

 

இருளை வெறித்துக் கொண்டு பால்கனியில் நின்றவனுக்கு, இன்று பிரகலாதன் வருணுடன் நன்றாக சிரித்து பேசியதை நினைத்துப் பார்த்தவனுக்கு தான் எதையோ இழந்துவிட்ட உணர்வு வந்தது.

இதில் அவன் காலையில் இவளின் அறையில் போய் செய்து வைத்த வேலை சுத்தமாக அவன் நினைவில் இல்லை… ஏன் அவளை பற்றி கொஞ்சமும் அவன் நினைக்கவே  இல்லை.

 

இப்போது கதவு தட்டப்படும் ஓசையில் சுயம் அடைந்தவன்….  சென்று கதவைத் திறந்தான்.

 

 

ஆழினி நிற்பதைப் பார்த்து அதிர்ந்து நின்றவன் தோற்றமே அவளை அவன் சுத்தமாக இன் நேரத்தில் எதிர்ப் பார்க்கவில்லை என அவன் விழி விரித்து நிற்கும் அதிர்ந்த தோரணையே கட்டியம் கூறியது.

 

அவனைப் பார்த்து இகழ்ச்சியாக புன்னகைத்தவள் அவன் சுதாரிக்கும் முன்னரே அவனை தள்ளி விட்டு அவன் அறைக்குள் நுழைந்து அவன் ஷெல்பில் சேகரித்து வைத்து இருக்கும் அவனின் தொழிலில் கால் பதித்தது தொடக்கம் இப்போது வரை வாங்கி குவித்து வைத்திருக்கும் கண்ணாடியினால் ஆன  விருதுகளை அப்படியே அள்ளி எடுத்தவள்  கீழே போட்டு நொறுக்கி இருந்தாள்.

 

இது அவ்வளவும் கண் இமைக்கும் நொடியில் நடந்து முடிந்து இருந்தது.

 

கழுத்து நரம்புகள் புடைக்க கண்கள் இரத்தம் என சிவப்பேறி தன் கை முஷ்டியை இறுக்கியவன் அவளை நெருங்கி அவளின் கழுத்தை ஒற்றைக் கையால் பிடித்து சுவரில் சாய்த்து மேலே தூக்கி இருந்தான்.

 

மூச்சுக்குப் போராடியவள் காலை காற்றில் உதைத்துக் கொண்டே அவன் கைகளை எடுக்கப் போராடினாள்…. ஒரு கட்டத்தில் தன் உயிர் போவது உறுதி எனத் தெரிந்த கணம் தன் முயற்சியைக் கை விட்டவள் அவனைப் பார்த்து அத் தருணத்திலும் புன்னகைத்தாள்.

 

அவளின் புன்னகையில் வெறி இன்னும் ஏற, அவள்  கழுத்தில் இருந்து தன் கைகளை எடுத்து இருந்தான்.

 

இன்னும் ஒரு நொடி அவன் தாமதித்து இருந்தாலும் அவளின் உயிர் நிச்சயம் பிரிந்து இருக்கும்….

 

அவன் உயர்த்தி பிடித்து இருந்தவன் அப்படியே கையை விட்டு இருக்க, அப்படியே கீழே விழுந்தவளுக்கு  நெற்றி, கை மற்றும் கால்களில் பலத்த அடி தான்.

 

பின்னே, அவனே ஆறடி உயரம் இதில் சுவற்றில் சாய்த்து அவளை மேல் உயர்த்தியது அதற்கும் மேல் என்றால்!!….

 

(அவனின் அறை மாத்திரம் சவுண்ட் ப்ரூப் அறையாக இருந்ததினால் அவனுக்கு வசதியாகப் போனது)

 

வலியில் உயிர் போக கத்தியவளுக்கு தொண்டை வரை வந்த இருமல் கூட நின்று போனது… ஏன் எ…எ…என்னை அப்படியே கொ…கொலை பண்ணி இருக்கலாமே?…  என வலியில் முகம் சுருங்க திக்கித் திக்கி கேட்டாள்.

 

அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்…. “உன்னை கொல்ல தான்டி நினைச்சேன் பட் அப்போ கூட சிரிச்ச பார்த்தியா அப்படியே எனக்கு வெறி ஏறிச்சு என கர்ஜித்தவன் அவள் இன்னும் தன்னைப் பார்த்து பயப்படாமல் நேரே  விழிகளை பார்த்து இருக்க, இந்த திமிர் பார்வை தான் என அவளின் கண்களை சுட்டிக் கட்டியவன் இதான் என்னை ஏதாச்சும் பண்ணத் தூண்டுது” என்றவன் தன் கையை சுவற்றில் ஓங்கிக் குத்தி இருந்தான்.

 

அதில் நடுங்கியவள் கண்களை மூடித் திறந்தாள்.

 

“இதெல்லாம் என் எத்தனை வருஷ உழைப்புனு உனக்கு தெரியுமா? என அவளை கூர்ந்து நோக்கியவன் அதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? நீ உழைச்சு பாரு அதுல வர சுகமே வேற என கண்களை மூடித் திறந்தவன் இப்போ இதெல்லாம் ஒரு நிமிஷத்துல இல்லாமல் பண்ணிட்டியே என அவளின் கன்னத்தில் பளார் என அறைந்து இருந்தான்.

 

அறைந்த அவனுக்கு கைகள் எரிந்து இருக்கும் போலும் கையை உதரிக் கொண்டு எழுந்தவன் தன் ஐம்பொன் காப்பை கீழே இறக்கி விட்ட படி, “நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள இதெல்லாம் கிளீன் பண்ணிட்டு நீ போகலாம்” என்றவன் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

 

தன் கன்னத்தை பிடித்துக் கொண்டே போகும் அவன் முதுகை வெறித்தவள் தன் நெற்றியில் இருந்து கன்னத்தில் வழியும் ரத்தத்தை  துடைத்துக் கொண்டு சுவரை பற்றி மெதுவாக எழுந்தாள்…. அவளால் நிற்க கூட முடியவில்லை…கண்களில் இருந்து வழியும் கண்ணீரை பொருட்படுத்தாமல் மெதுவாக எல்லாவற்றையும் கூட்டி துடைத்தவள்…. சுவரில் இருந்த தன் இரத்தக் கரையை பார்த்தவள் ஒரு பெரு மூச்சுடன் அருகில் இருந்த அவனின் புத்தகம் அடுக்கி வைத்திருக்கும் ஷெல்ப்பை ரத்த திட்டு தெரியாமல் நகர்த்தி வைத்தாள்.

 

மெதுவாக கதவின் அருகே வந்தவள் அவன் வரும் கழுத்தை வருடியபடி காத்து இருந்தாள்.

 

சிறிது நேரத்தில் குளியலறையில் இருந்து இடையில் வெண்ணிற டவலுடன் வந்தவனை கூர்ந்து பார்த்தவள் “காஷ்” என்றாள்.

 

அப்போது தான் அவளையே அவன் பார்த்தான்.

 

அவளை இரத்தம் வழியும் கோலத்தில் பார்க்க அவனுக்கே மனதில் ஏதோ பிசைந்தது.

 

“இவளுக்கு எல்லாம் பரிதாபம் காட்டக் கூடாது என தனக்குள் நினைத்தவன் அவளை முறைத்தவன் இன்னும் நீ போகலையா?” என கர்ஜிக்க…..

 

பிடிமானமாக கதவில் சாய்ந்து நின்றவள் “என்ன சொன்னீங்க? ‘ஹா..’ என நினைவு வந்தவளாய் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க ரைட்? என கேள்வியாக கேட்டவள்…. நானும் தானே 4 வருஷமா கஷ்டபட்டு சேர்த்து வச்சு இருந்ததை இப்படி இரக்கமே இல்லாமல் கொஞ்சமும் யோசிக்காமல் எரிச்சு இருக்கீங்க? என்றவள் நான் ஒன்னும் வீட்டுல தண்டதுக்கு இல்லை என்றாள் குரல் தளுத்தளுக்க…..

 

அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருப்பதை அவன் அறியவில்லை.

 

“ஹியர் லுக் ஆழினி, உனக்கே தெரியும் டுடே எவ்வளவு பிசினெஸ் பார்ட்னர்ஸ் வந்தாங்கனு அவங்க முன்னாடி சீப் ஆஹ் மருதாணி போட்ட கையோட என்னை நிற்க சொல்றியா? என்றவன் தொடர்ந்து இவ்வளோ நாள் நீ பண்ணுனதுக்கு சேர்த்து வச்சு உன்னை ஏதாச்சும் பண்ண நினைச்சேன் சோ நான் வேற என்ன சரி பண்ண தான்  உன் ரூம்க்குள்ள போனேன்… யுவர் பேட் லக் உன் ரிசர்ச் என் கண்ணுல பட்டுறிச்சு” என தோள்களை குலுக்கினான் சர்வ சாதாரணமாக….

 

“ஏன் அதை எனக்கு தெரியாமல் ஒழிச்சு கூட வச்சு இருக்கலாமே? ஏன் எரிக்கணும்?” எனக் கேட்டாள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே….

 

“அதான் சொல்றேனே! உனக்கு ஏதாச்சும் பெருசா பண்ண நினைச்சேன்” என்றான்.

 

விரக்தியாக சிரித்தவள் மெதுவாக கதவினைப் பற்றி எழுந்து நின்றவள் அவனை திரும்பி ஓர் ஊடுருவும் பார்வை பார்த்தவள் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தவள் அவளின் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

உள்ளே வந்து கண்ணாடியில் தன்னை வெறித்துப் பார்த்தவளுக்கு மனதில் சொல்ல முடியாத ரணம் ரணம் ரணம் மட்டுமே ….

 

அது அவளுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

 

கன்னகள் வீங்கி நெற்றியில் இரத்தம் வழிய கழுத்துப் பகுதியில் சிவந்து கைகள் மற்றும் கால்களில் கீறல்களோடு இருபவளைப் பார்த்தால் ஒரு மிருகத்திற்கு கூட இரக்கம் வந்து இருக்கும் போலும்….

 

தன்னையே ஆராய்ந்தாள் “நிச்சயம் தன் காயங்களைப் பார்த்து காலையில் என்ன நடந்தது என கேட்டு பெரிய பிரளயமே வெடிக்கும்” என கணித்தவள் ஒரு முடிவை எடுத்தவளாய் தன் உடைகளை களைந்தவல் சாதாரண உடைக்கு மாறினாள்.

 

இரத்தம் வந்து கொண்டு தான் இருந்தது அதனை துடைக்காமல் விட அது அவள் உடையிலும் படிந்தது.

 

தன் லெஹெங்காவை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றவள் அதில் இருக்கும் ரத்தத் திட்டுக்களை நன்றாக கழுவியவள் டிரையரில் போட்டு விட்டு வந்தவளின் அலைபேசி அலறியது.

 

திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

ஆம், வருண் தான் இத்தோடு நான்காவது முறையாக அவளுக்கு அழைப்பினை எடுத்துக் கொண்டு இருக்கின்றான்.

 

அதனை சைலண்ட் இல் போட்டவள் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு காலியாக இருக்கும் தண்ணீர் போத்தலை எடுத்துக் கொண்டு மெதுவாக வெளியில் வந்தாள்.

 

வீடே நிசப்தமாக இருந்தது.

 

படிகளின் அருகே வந்தவள் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டவளின் மனம் நினைத்தது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

 

கண்களை மெதுவாக திறந்தவள் தண்ணீர் போத்தலை மிக இறுக்கமான பிடித்தவாறே படிகளில் இருந்து கீழே குதித்து இருந்தாள் ஆழினி.

 

உங்கள் லைக்ஸ் and கமென்ட் தான் என்னை அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் டியர்ஸ் 🥰

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

6 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 5”

    1. Avatar photo

      Patharathinga அப்புறம் நிறைய அய்யய்யோ சொல்ல வேண்டியது இருக்கும் 🤭❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!