தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 7

4.9
(16)

பேராசை – 7

 

அவளின் அறைக்கு இந்து மற்றும் லதாவின் உதவியோடு மாடியேறி மேலே சென்றவளுக்கு அங்கு கண்ட காட்சியில் கண்கள் கலங்கியே விட்டன.

 

அவளின் அறையின் பக்கத்திலேயே ஃபில்டர் வைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டு இருந்தது.

 

அவளுக்கு புரிந்தது…. தன் மீது இவ்வளவு அன்பு  வைத்து இருக்கும் இவர்களை கஷ்டபடுத்தி விட்டோமே என தன்னை நினைத்தே அவளுக்கு குற்ற உணர்வாகிப் போனது.

 

இனிமேல் இவர்கள் தன்னால் கஷ்டப்படும் அளவிற்கு ஒருபோதும் நடந்துக் கொள்ள கூடாது என ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து இருந்தாள் ஆழினி.

 

அறையின் அருகே மெதுவாக இருவரின் துணையோடு வந்தவள் “இதை செஞ்சது யார் அம்மா? என கேட்க…

 

“உன் மாமா  தான் டி உனக்காக பண்ணி வச்சு இருக்கார்” என்றார் இந்து அவரும் குரல் தளு தளுக்க….

 

“நான் மாமாவை பார்க்கணும் அம்மா” என்றாள் ஆழினி.

 

“அவரும் அண்ணாவும் ஆபீஸ் போயிட்டாங்க மா நீ கால் பண்ணி பேசு” என்றார் லதா.

 

“சரி அத்தை” என்றவளின் பார்வை காஷ்யபனின் அறையின் மேல் ஒரு கணம் பதிந்து மீண்டது.

 

அவள் பார்வை செல்லும் திசையைக் கண்ட லதா, “அவன் US போய்ட்டான் மா… அவனுக்கு உனக்கு நடந்ததை அடுத்த நாள் சொல்ல கால் பண்ணுனா அன்ஸ்வர் இல்லை… அப்போ தான் அவன் முதல் நாள் பங்ஷன்ல வச்சு சொன்னான் US போகனும்னு சொன்னது ஞாபகம் வந்துச்சு” என்றார் லதா கூடுதல் தகவலாக….

 

“ஓஹோ  இல்லாட்டி மட்டும் வந்து கிழிச்சு இருப்பான் என மனதுக்குள் நினைத்தவள் சரி அத்தை” என வலுக்கட்டாயமாக வெளியில் சிரித்து வைத்தவள் மெதுவாக கட்டிலில் அமர்ந்தாள்.

 

அவளை கட்டிலில் தலையணையை சரித்து படுக்க வைத்தவர்கள் அவளின் தலையை வருடி விட்டு, “கொஞ்சம் ரெஸ்ட் எடு ஆழினி  உனக்கு ப்ரேக்  பாஸ்ட் செஞ்சி எடுத்திட்டு வரோம்” என சொன்ன இருவரும் கீழே சென்று விட்டனர்.

 

கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தவளுக்கு மனதில் பலவித யோசனைகள்.

 

“இப்படி அவசரப் பட்டு விழுந்து தேவையா? இப்போ என கண்களை மூடித் திறந்தவள் ஓர் ஆழ்ந்த பெருமூச்சை விட்ட படி இப்போ ஃபாரஸ்ட் டிரிப் கூட போக முடியாது வேற…. இவன் பண்ணி வச்ச வேலைக்கு என பல்லைக் கடித்தவள்… அமேசான் காட்டைப் பற்றி திருப்பி எல்லா  டீடெயில்ஸ் உம் எடுக்கணுமே” என எண்ணங்கள் வலம் வந்துக் கொண்டு இருந்தன.

 

திரும்பவும் ஆரம்பத்தில் இருந்தா? என நினைத்தவளுக்கு சலிப்புத் தட்டியது.

 

 

அப்படியே யோசித்துக் கொண்டு இருந்தவள் தூங்கிப் போனாள்.

 

காலை 10 . 30 மணி போல  அவள் அறைக்கு வந்த இந்து, “ஆழினி…. ஆழினி என தட்டி எழுப்பி விட்டார்.

 

மெதுவாக  இமைகளைப் பிரித்து கண்களைத் திறந்தாள்.

 

மெதுவாக எழுந்து அமர்ந்தவள் உணவுத் தட்டை வாங்க எத்தனிக்க, ஆழினி நானே உனக்கு ஊட்டி விடுறேன் என்றவர் உணவை பிசைந்து அவளுக்கு ஊட்டி விட்டார்.

 

வெகு நாட்களின் பின் இந்துவின் கையால் உணவை வாங்கிக் கொண்டவள் “அம்மா” என்றாள்.

 

அவளுக்கு ஊட்டிக் கொண்டே “என்ன  மா?” என்றார் இந்து.

 

“ கடைசியா நீங்க என் பர்த்டேக்கு கேக் ஊட்டி விட்டீங்க அதுக்கு பிறகு இப்போ தான் சாப்பாடு ஊட்டுறீங்க… அப்போ நான் டெய்லி இந்த மாதிரி விழுந்து எந்திறிச்சா என்னை விழுந்து விழுந்து கவனிப்பீங்க போலயே” என அவள் விளையாட்டாக ஆழினி சொல்ல….

 

ஒரு கணம் சாப்பாட்டை பிசைந்து கொண்டு இருந்த அவரின் கை நின்று பின் பின் பிசைந்து கொண்டே,  “உனக்கு இனி ஏதும் ஆச்சுனா நான் உயிரோட இருக்க மாட்டேன்” ஆழினி என்றார்.

 

“அம்மா என்ன இது பேச்சு…நான் விளையாட்டுக்கு சொன்னேன் அம்மா” என்றாள்.

 

“விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத ஆழினி” என்றார் கண் கலங்க….

 

“சரி அம்மா… இனி இப்படி பேச மாட்டேன் ஓகேவா?” என்றாள் அவரின் கண்ணீரை துடைத்து விட்டாள்.

 

“சரிமா”… என்றவர் அவளுக்கு ஊட்டி முடித்து விட்டு  வாஷ்ரூம் செல்ல உதவியவர் அவளை கட்டிலில் அமர வைத்து விட்டு செல்லப் போக…

 

“அம்மா நானும் கீழ வரேன்” என்றவள் இந்துவின் கையை பிடித்துக் கொண்டே மெதுவாக இறங்கி வந்தாள்.

 

ஆழினியை சோஃபாவில் அமர வைத்து விட்டு அவர் சமையலறைக்குள் புகுந்து கொள்ள…. அவளுக்காக காஃபி போட்டு எடுத்துக் கொண்டு லதா வந்தார்.

 

“ஐயோ! என்ன அத்தை இது இப்போ தான் சாப்பிட்டேன் அதுக்குள்ள காஃபி ஆஹ்? என வயிற்றை தடவிக் காட்டியவள் வேணாம் அத்தை” என்றாள் கண்களைச் சுருக்கி படி…

 

“கொஞ்சம் தான் குடி ஆழினி” என சொல்ல….

 

“சரி அத்தை தாங்க அப்போ” என்று காஃபி கப்பை வாங்கிக் கொண்டாள்.

 

அவள் வாயருகே காஃபி கப்பை கொண்டு செல்லும் போதே அங்கு வந்த இந்து, “ஆழினி இந்த மாத்திரையை குடி” எனக் கொடுக்க, அவளின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.

 

“கசக்கும் வேண்டாம் அம்மா,  நான் வேணும்னா நைட் குடிக்கவா ?” என அவள் சொன்னது தான் தாமதம், “24 வயசாகுது இன்னும் உனக்கு இந்த நாலு மாத்திரையைப் போட நாங்க பாடு பட வேண்டியதா இருக்கு” என்ற இந்து அவள் சுதாரிக்கும் முன் அவள் வாயைத் திறந்து மாத்திரைகளை வாய்குள்ளே போட்டு நீரை புகட்டி இருந்தார்.

 

அவர் கொடுத்த வேகத்தில் அவளும் விழுங்கி இருக்க, அப்படியே நீரை புகட்டி இருந்தார்.

 

பின்னே, அவருக்கு தான் தெரியுமே! காய்ச்சல் வந்தாலே அவளுக்கு மாத்திரைகளைக் கொடுக்க பின்னாலேயே இரண்டு பேர் திரிய வேண்டும்…. இல்லை என்றால் தெரியாமல் குடிப்பது போல மழுப்பி விட்டு மாத்திரைகளை வெளியில் வீசி விடுவாளே…

 

“அவ்வளவு தான் என்ற இந்து இப்போ காஃபியைக் குடி” என்று சென்று விட்டார்.

 

பக்கத்தில் நின்ற லதாவைப் பார்த்து உதட்டைப் பிதுக்கியவள் “கசக்குது அத்தை” எனச் சொல்ல…

 

அவள் அருகே அமர்ந்து அவள் தலையை வருடிக் கொண்டே, “அதுனால தானே உனக்கு காஃபி போட்டு எடுத்திட்டு வந்தேன் மா குடி ஆழினி கசக்காது” என்றார் லதா.

 

அவள் காஃபியை குடிக்க ஆரம்பித்து விட… அவளின் அருகில் இருந்து எழுந்த லதா, “ நான் போய் சமைக்கிறேன் மா ஏதும் வேணும்னா கூப்பிடு ஆழினி  என்றார்.

 

“ஏன் அத்தை வாணி அக்கா வரலையா?” என அவள் கேட்க….

 

“வாணிக்கு உடம்பு சரியில்லை ஆழினி நான் தான் உனக்கு சரியா போனதும் வான்னு அனுப்பி வச்சுட்டேன்” என்றார் லதா.

 

“சரி அத்தை நீங்க போங்க நான் என் ரூமுக்கு போகனும்னா கூப்பிடுறேன்” என்றவள் காஃபியைக் குடிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

அப்போது தான் தனது டிராலியை இழுத்துக் கொண்டு ஒற்றைக் கையில் கார் சாவியை சுழற்றிக் கொண்டு உள்ளே வந்த காஷ்யபன் கண்டது தலையிலும் காலிலும் பெரிய கட்டுடன் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு இருந்தவளைத் தான்.

 

டிராலியை இழுத்துக் கொண்டு வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே நின்று விட…

 

லதாவின் “வா காஷ்யபன், உனக்கு நாங்க எவ்வளவு கால் தான் பண்றது? நீ எடுக்கவே இல்லையே என தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டு போனவரை “என்னாச்சி?” என அவள் மீது இருந்து தன் பார்வையை இம்மியும் அகற்றாமல் அவன் கேட்க….

 

அவனின் கேள்வியில் “அதைத் தான் சொல்ல வரேன் டா” என்ற லதா இரண்டு நாட்களுக்கு முன் ஆழினி படியில் இருந்து விழுந்தது தொடக்கம் அனைத்தையும் கூறி இருந்தார்.

 

பங்ஷன் நடந்த அன்னைக்கு நைட் ஆஹ்? என அதிர்ந்தவன் அப்போ ஏன் எனக்கு சொல்லல நைட்? என்றவன் அட்லீஸ்ட் கதவை தட்டி இருக்கலாமே என அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டு இருந்தான்.

 

“இருந்த டென்ஷன்ல உனக்கு சொல்லவே தோணலை டா… அதான் அப்பா உனக்கு மார்னிங் கால் பண்ணினார் நீ தான் எடுக்கலையே” என்றார் கவலையாக லதா.

 

“நான் மார்னிங் 4.30க்கு கிளம்பிட்டேன்… வீடு எல்லாம் க்ளீன் ஆஹ் தான் இருந்துச்சு என்றான்” காஷ்யபன்.

 

“வாணி எல்லாம் க்ளீன் பண்ணி இருப்பாள்” என்றார் லதா.

 

அவளையே இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் இந்த நிலைக்கு அவள் தான் காரணம் என அவளின்  முக உணர்வுகளைப் பார்த்தே கண்டு பிடித்து விட்டான்.

 

அவனே வில்லாதி வில்லன் இதைக் கூடவா அவனால் கண்டு பிடிக்க முடியாது?

 

அவள் பயந்ததும் அதற்கு தானே! அவன் வரும் போதே தலையைக் குனிந்து கொண்டவள் கண்ணும் கருத்துமாக காஃபியைக் குடிக்க ஆரம்பித்து விட, இங்கு அவனின் ஒவ்வொரு கேள்விக் கணைகளிலும் எங்கே கண்டு பிடித்து விடுவானோ? என்ற அவளின் பதற்றமே அவளைக் காட்டிக் கொடுத்து இருந்தது.

 

“சரிப்பா… போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்” என்றவர் சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

 

அவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே நகர்ந்து இருந்தான்.

 

அவன் சென்று கதவை அடைக்கும் சத்தம் கேட்கும் வரை காதைத் தீட்டி வைத்துக் கொண்டு இருந்தவளுக்கு கதவு பூட்டும் ஒலி கேட்கவும் தான் மூச்சே வந்தது.

 

 

அதனை தொடர்ந்து நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க இரவு நேரமும் வந்தது.

 

அவள் காஷ்யபன் இருக்கும் பக்கம் கூட போக வில்லை ஏன் அவனைப் பார்க்க கூட இல்லை.

 

அறைக்குள்ளேயே இருந்தாள்.

 

அவனுக்கே ஆச்சரியம் தான் ஏதாவது செய்து வைப்பவள் குறைந்தது முகத்தை சுழித்து பழிப்புக் காட்டுபவள் அமைதியாக இருக்கின்றாள் என…. அவள் இப்போது சுகயீனமாக இருப்பதனால் தான் அமைதியாக இருக்கின்றாள் என்று  அவனே நினைத்தும் கொண்டான்.

 

அப்படியே பதினைந்து நாட்கள் சென்று இருக்கும்… வருண் ஆழினியைப் பார்க்க வீட்டுக்கு வந்து இருந்தான்.

 

அன்று ஹாஸ்பிடலில் ஆழினியிடம் கோபித்துக் கொண்டு போனவன் தான் அதற்கு பிறகு இன்று தான் அவளைப் பார்க்க வருகின்றான்.

 

அன்று குடும்பமே வீட்டில் தான் இருந்தது.

 

எல்லோரிடமும் கதைத்து விட்டு ஆழினி எங்கே? எனக் கேட்டுக் கொண்டு அவளின் அறைக்கு சென்றான்.

 

செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்த பிரகலாதன் ஜீவாவிடம் கண்ணைக் காட்ட ஜீவாவும் பிரகலாதனின் கையை பற்றிக் கொண்டு கண்களை மூடித் திறந்தார்.

 

 உங்கள் லைக்ஸ் and கமென்ட் தான் என்னை அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் டியர்ஸ் 🥰

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!