தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 8

4.7
(20)

பேராசை – 8

அறைக்குள் வந்த வருண் அவளை பார்த்தவாறே கதவில் சாய்ந்து நின்று இருந்தான்.

 

அவன் வந்து நிற்பது கூடத் தெரியாமல் கட்டிலில் அமர்ந்து தன்னை சுற்றி பலவித ஆய்வுக் கட்டுரைகளை வைத்துத் தீவிரமாக குறித்துக் கொண்டு இருந்தாள் ஆழினி.

 

நின்று பார்த்தவன் அவள் பார்க்க மாட்டாள் எனத் தெரிந்து அவனே அவள் அருகில் சென்று சற்று குரலை செருமினான்.

 

அதில் திடுக்கிட்டு விழித்தவள் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள்.

 

மென் புன்னகையுடன் நின்றுக் கொண்டு இருந்தவனைப் பார்த்து “வா வருண்” என அவனை அழைக்கத் துடிக்கும் நாவினை கடினப்பட்டு அடக்கியவள் அவனைக் கண்டு கொள்ளாமல் மறுபடியும் குறிப்பு எடுக்கத் தொடங்கி விட்டாள்.

 

“சந்திரமுகி மாதிரி  ரூமுக்குள்ளே இருக்காளே பாவமேனு இன்னும் 15 நாள்ல  ஃபாரஸ்ட்  டிரிப் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்… நான் போறேன்” எனத் திரும்பிச் செல்ல போனவன் முன் வந்து கட்டிலில் இருந்து பாய்ந்து நின்றவள் சமநிலை இன்றி விழப் போக, அவளை விழ விடாமல் பற்றி நிறுத்தி இருந்தான் வருண்.

 

அறையில் இருந்து வெளியில் வந்த காஷ்யபனுக்கு ஆழினியின் அறைக்குள் வருணின் குரல் கேட்கவும் அதைக் கண்டு கொள்ளாமல் கடந்து போக நினைத்தவன் என்ன நினைத்தானோ திறந்து இருந்த கதவின் அருகே சென்றவன் அதிர்ந்தே விட்டான்.

 

ஆம், அவன் கண்டது ஆழினி விழப் போகும் போது வருண் அவளின் இடையை பற்றி பிடித்து நிறுத்திய காட்சி தான்.

அவளும் வருணின் தோளைப் பிடிமானமாக பற்றியவள் “அச்சோ என் பட்டுல… தங்கம்ல என அவனின் மூக்கைப் பிடித்து ஆட்டியவள் நான் கோபம் எல்லாம் இல்லை” என்றாள்.

 

அதைப் பார்த்துக் கொண்டு இருந்த காஷ்யபனுக்கு என்ன என்றே தெரியாத ஓர் உணர்வு… ஏமாற்றமாக உணர்ந்தான்…. உடம்பெல்லாம் தீப் பற்றி எரிவதைப் போல இருக்க அவனின் கண்கள் தானாக சிவந்தது…. அழுகையில் அல்ல அப்பட்டமான கோபத்தில்….

 

அடுத்த கணமே “வருண்” என கத்தி இருந்தான்.

 

பேசிக் கொண்டு இருந்தவர்கள் காஷ்யபன் வந்ததை கவனிக்கவில்லை.

 அவனின் கர்கணையான குரலில் தூக்கிவாரிப்போட திரும்பிய வருண், ஆழினியின் கையை இறுகப் பற்றிக் கொண்டு  “ வாட்? ஷேத்ரா சொல்லு” எனக் வருண் கேட்க….

 

காஷ்யபன் நின்ற தோற்றமே அவனின் அப்பட்டமான கோபத்தை காட்ட அதனைக் கண்டுக் கொண்ட ஆழினி, அவனின் பார்வை தன் கையை துளைப்பதைக் கண்டவள் தன் கையைப் பார்க்க அது வருணின் கையில் அடங்கி இருந்து.

வருணின் கையில் இருக்கும் தன் கையை மெதுவாக பிரித்து எடுத்துக் கொண்டவள் சென்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டு தான் விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.

 

அவள் கையை எடுத்துக் கொண்டதும் தான் அவனின் கோபம் கொஞ்சமே கொஞ்சம் மட்டு பட்டது என்றே சொல்லலாம்.

 

அவனுக்கு ஏன் அவள் மீது இன்னொருவன் உரிமை கொண்டாடும் போது தனக்கு இவ்வளவு கோபம் வருகின்றது? என அவன் ஆழ்ந்து யோசித்து இருந்தாலே அவள் மீது அவனுக்கு கைகள் இருக்கும் தீராத காதலை உணர்ந்து இருப்பானோ என்னவோ!

 

அவன் வந்த வேலை முடிந்தது என்பது போல் திரும்பி செல்லப் போக, வந்ததே கோபம் வருணுக்கு “என்ன ஷேத்ரா என்னை கூப்பிட்டுட்டு என்ன விஷயம்னு சொல்லாமல் போற?” என சற்று நக்கலாகத் தான் கேட்டான் வருண்.

 

“பங்ஷனுக்கு அப்புறம் நம்ம மீட் பண்ணிக்கவே இல்லையே அதான் திடீர்னு காணவும் எக்ஸைட் ஆகிட்டேன்” என்றான்.

 

காஷ்யபனுக்கே அவனின் பதிலை நினைத்து உள்ளுக்குள் அபத்தமாக தோன்றினாலும் வெளியில் மெலிதாக சிரித்து வைத்தான்.

 

எழுதிக் கொண்டு இருந்த ஆழினிக்கு அவனின் பதிலில் வியப்பு தான்.

 

அவன் தான் யாரையும் செட்டை செய்ய மாட்டானே இப்போது வருணை கண்டவன் எக்ஸைட் ஆகி விட்டேன் என்று கூறினால் வியக்காமல் இருக்க முடியுமா?

 

பெரிதாக அலட்டிக் கொள்ளாத வருணும், “ ஓகே பட் சாரி நான் கொஞ்சம் ஆழினிகிட்ட பேசணும் பேசிட்டு வரேன்” என்று மென் புன்னகையுடன் சொன்னவன் ஆழினியின் புறம் திரும்பி பேச ஆரம்பித்து விட…. இங்கு காஷ்யபனுக்கோ, அவனின் அலட்சியத்தில் கோபம் கிளர்ந்து எழ அதற்கு மேல் அங்கு அவனால் நிற்க முடியவில்லை தன்னை அவமதித்து விட்டதாக உணர்ந்தான்.

வேகமாக அவனின்  அறைக்குள் நுழைந்து கொண்டான் காஷ்யபன்.

 

ஆழினியோ, “என்ன வருண் நீ! காஷ்மோரா பேயை தூண்டி விட்டுட்டியே” என தலையை பிடித்துக் கொண்டாள்.

 

“வாட்? காஷ்மோரா பேயா?” என அதிர்ந்தவன் அடுத்த கணமே வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான். அவனின் சிரிப்பில் ஆழினிக்கும் சிரிப்பு வந்து விட அவளும் அவனின் சிரிப்பில் இணைந்துக் கொண்டாள்.

 

அவ் இருவரின் சிரிப்புச் சத்தம் ஹாலில் அமர்ந்து இருந்த அனைவருக்கும் கேட்க, அவர்கள் முகத்திலும் புன்னகைத் தோன்றியது.

 

இங்கு, எல்லோரும் புன்னகையில் இருக்க, அங்கு  ஜிம் அறையில் கருப்பு நிற ஆர்ம் கட்  மற்றும் ஷார்ட்ஸ் சகிதம் முறுக்கேறிய புஜங்கள் புடைத்துக் கிளம்பி இருக்க, தன் முகத்தில் இருந்து வழியும் வியர்வையைக் கூட துடைக்காமல் தன் கோபம் போகும் மட்டும் கடுமையாக உடற்பயிற்சி செய்துக் கொண்டு இருந்தான் காஷ்யபன்.

 

இப்போது அவனின் கோபம் முழுவதும் ஆழினி மீது திரும்பியது.

 

என்ன பெண் அவள் அறையில் ஒரு ஆணுடன் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கின்றாள் என அவன் நினைக்கும் போதே அவனுக்கு  அவள் மேல் கட்டுக்குள் அடங்காமல் கோபம் கிளர்ந்து எழுவதை தடுக்க முடியவே இல்லை.

 

தன் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரைப் பருகிக் கொண்டு ஓர் இடத்தில் அமர்ந்தவனுக்கு அவள் ஆவேசமாக விருதுகளைப் போட்டு உடைத்த காட்சி நினைவுக்கு வர, பட்டென கண்களைத் திறக்க அவை  ரத்தமென சிவந்து  இருந்தன.

 

“என் அவாட்ஸ் அஹ் உடைச்சிட்டல மிஸ் ஆழினி நாச்சியார் என இகழ்ச்சியாக இதழை வளைத்தவன் இதுக்காகவே உன்னை நான் பழி வாங்காமல் விடவே மாட்டேன் டி” என அவன் கண்களில் பழி வெறி மின்ன வாய் விட்டு சொல்லிக் கொண்டான்.

 

அவனின் அந்த பாரதூரமான செயலினால் தான் அவனை அவள் முழுவதுமாக  வெறுத்து ஒதுக்கப் போகின்றாள் என அவனுக்கு தெரிந்து இருந்தால் அத் தவறை எதிர் காலத்தில் செய்யாமல் இருந்து இருப்பானோ என்னவோ! விதியின் சதியை யாரால் மாற்ற முடியும்?

 

“ஆழினி இப்போ உனக்கு பெயின் இல்லையா? இப்போ உன்னால நல்லா நடக்க முடியுது தானே?” எனக் கேட்டான் வருண்.

 

“ஆமா வருண் ஏன் இப்போ நல்லா நடக்குற என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்குற எனப் பென்சிலைத் தாடையில் தட்டி யோசித்தவளுக்கு ஏதோ புரிய வருண் என்னால ஒழுங்கா நடக்க எழாதுன்னு நினைச்சிட்டு தானே ஃபாரஸ்ட் டிரிப் கூட்டி போறேன்னு சொன்ன?”  எனக் கேட்க….

 

“லூசா டி உனக்கு நான் உண்மையைத் தான் சொன்னேன்… உன்னால நடக்க முடியலனா கூட உன்னை வீல் செயர்ல வச்சு சரி தள்ளிட்டு போயிருப்பேன்” என்றான் வருண்.

 

“வராத கண்ணீரை துடைத்துக் கொண்டவள் உன்னை போல ஒரு நண்பன் கிடைக்க நான் எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்கேனோ” என ஆழினி கூற…..

 

“எல்லாம் விதி என்ன தான் பண்ண? உன்கூட சேர்ந்து என்னை  குப்பைக் கொட்ட அந்த கடவுள் பண்ணி வச்ச சதி” என தலையில் அடித்துக் கொண்டான்.

 

“என் அருமை உனக்கு புரியல வருண்” என்றாள் ஆழினி.

 

அப்படியே இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டு இருக்க, இந்து வருணுக்கு காஃபி எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தார்.

 

“தேங்க்ஸ் ஆன்டி” என்றான் வருண்.

 

“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் பா” என்க, ஆழினிக்கு காஃபி இல்லையா ஆன்டி? என வருண் கேட்க….

 

“நீ வர்றதுக்குள்ள நாலு கப் காஃபி குடிச்சிட்டாள்” என இந்து சொல்ல…

 

“அடப்பாவி” என வாயில் கையை வைத்துக் கொண்டான் வருண்.

 

இந்துவும் சிறிது நேரம் கதைத்துக் கொண்டு இருந்து விட்டு கீழே செல்லப் போக… “ஆன்டி இருங்க நானும் வரேன்” என்ற வருண் ஆழினிக்கு சொல்லி விட்டு கீழே இருவரும் ஹாலுக்கு சென்றனர்.

 

காஷ்யபனும் சோஃபாவில் அமர்ந்து இருக்க, அவன் அருகில் சென்று அமர்ந்த வருண் பிசினெஸ் ஐப் பற்றி கதைக்கத் தொடங்கி விட்டான்.

 

தன் குறிப்புகளை எடுத்து இந்த முறை கவனமாக லாக்கரில் வைத்துப் பூட்டியவள் ஒரு பெரு மூச்சுடன் வருணைப் பார்க்க கீழே சென்றாள்.

 

சோஃபாவில் வருணின் அருகில் அமர்ந்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் காஷ்யபனின் கவனம் அவள் மேல் படிந்து இருப்பதை அறியாத பேதை அவளோ, வருணின் காலை தன் காலால் வருட, இங்கு காஷ்யபனுடன் கதைத்துக் கொண்டு இருந்தவனுக்கு தண்ணீர் குடிக்காமலே புரை ஏறியது.

 

“ எக்ஸ்கியுஸ் மீ ஷேத்ரா என்றவன் இப்போது ஆழினி புறம் திரும்பி பற்களை கடித்த படி என்னடி?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

 

காஷ்யபனுக்கு, அவள் வந்து அமர்ந்ததில் இருந்து வருணின் காலை உரசியது வரை அவன் பார்வையில் தப்பாமல் விழுந்தது.

 

வெளியில் சாதாரணமாக அவன் இருந்தாலும் அவனுள் கோபம் கழன்றுக் கொண்டு இருந்தது தான் நிஜம்.

 

“ வருண் பிளீஸ் டா ஃபாரஸ்ட் டிரிப் போக பர்மிஷன் வாங்கி தாடா” எனக் கெஞ்சினாள்.

 

“பொறுமையா இரு டி இப்போ உனக்கு காயம் சரி ஆகல… இப்போ டிரிப் பற்றி கேட்டால் நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்க சோ இன்னும் 15 நாள் போகட்டும் பர்மிஷன் வாங்கி தரேன்” என்றான்.

 

வருண் மெல்லிய குரலில் பேசினாலும், வருணின் அருகில் அமர்ந்து இருந்ததால் அச்சு பிசகாமல் அவ்வளவும் காஷ்யபன் காதிலும் விழ, அவர்களுக்கு முன்னாள் அமர்ந்து இருந்த பிரகலாதனுக்கு ஜீவாவுக்கும் விளங்குமாறு வேண்டுமென்றே “ஆழினி உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என காஷ்யபன் கேட்க….

 

வருணுடன் மெல்லிய குரலில் விவாதித்துக் கொண்டு இருந்த ஆழினிக்கும் சரி வருணுக்கும் சரி அதிர்ச்சியில் கண்கள் ஒருங்கே விரிந்தன.

 

உங்கள் லைக்ஸ் and கமென்ட் தான் என்னை அடுத்த அத்தியாயம் எழுத ஊக்குவிக்கும் டியர்ஸ் 🥰

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!