காதலே -09
பந்தா இல்லாது தாயும் தந்தையும் போல் இல்லாது ,கதிர் நன்றாகத் தான் பேசினான்.அலைபேசியில் சிறிது நேரம் உரையாடியவன் அழைப்பைத் துண்டித்து விட்டு அவளிடம் வந்தாவன் அவனுடைய அலைபேசி இலக்கத்தை கொடுத்து அவளது இலக்கத்தை பெற்றுக் கொண்டான்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் சென்று விட்டனர் வந்த உறவினர்களும் கலைந்து விட்டனர். கனியும் ஹாஸ்டலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். “மலர் மாப்பிள்ளை என்ன பேசினார்? எல்லாம் ஓகே தானே” ஒரு தாயாய் வாணி கேட்க “ஓகே இல்லனா போல என்ன செய்ய போறீங்க” என்றாள் வெடுக்கென்று தனது பையுடன் வெளியே வர ஹாலின் மேகநாதன் அமர்ந்திருந்தார். ” கிளம்பிட்டியா மா? காலையில போலாமே” எனக் கேட்க “இல்லப்பா தர்ஷன் சென்னை தான் போறான் அவன் கூட போய்க்கிறேன்” என்றாள். இருவரும் தாய், தந்தை நான் சொல்லிக் கொண்டு விடைபெற்று சென்னை கிளம்பினர்.
இன்றுடன் சென்னைக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது கனிக்கும் வழமை போல் நாட்கள் செல்ல இரவுகளின் நிதிஸுன் குரலில் பாடல்களை கேட்டுத் தான் தூங்கவே ஆரம்பிப்பாள். இரு வாரமாக அவளும் எந்த பாடலையும் அவளது யூடியூப் தளத்தில் பதிவு செய்யவில்லை. இருவாரமும் கதிர் அழைத்துப் பேசுவான் அப்போது மட்டும் தடுமாறி போவாள்.
“ஹேய் யார்பா அது இப்போலாம் லஞ்ச் டைம்ல போனோட திரிர” என மோனிகா கேட்க,கனியோ பியான்ஷி என்றாள் “கங்கிராஜுலேசன் சொல்லவே இல்ல கள்ளி” என அவள் கன்னத்தை கிள்ளினாள் மோனி.
அந்த வார இறுதியில் “ராம் வீடியோ ஒன்னும் வரலடா , நானும் செக் பண்ணன்டா, ஒவ்வொரு நேரம் அவ யூஸ் பண்ற டிவைஸ் வேற வேற லொகேஷன் காட்டுது” என்றான் நிதிஸுக்கோ மனமே விட்டுப் போகும் நிலை
இங்கு மாமியும்,மருமகளும் இணைந்து நிதிஸுக்கு தரகர் மூலம் பெண் தேடத் தொடங்கி விட்டனர்.அவரும் சில பெண்களின் புகைப்படமும், தகவலையும் கொடுத்துள்ளார்.அவர்களும் நிதிஸுக்கு பொருத்தமாகக் தேடிக் கொண்டிருந்தனர்.
“மலர் ,ம்ம் சொல்லுங்க, இன்னைக்கு ஈவினிங் காஃபி வித் கதிர்” என அவன் கேட்க, மலருக்கோ ,சங்கடம் அவள் மௌனமாகவே இருக்க ” தாங்ஸ்” நான் வாரனு சொல்லவே இல்லையே” “உன் ஹாஸ்டலுக்கு பக்கத்துலான் காஃபி ஷாப் ஆபிஸ் முடிய வந்துடு” என அவள் பேச இடமே கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்தான்.
“ஹேய் கனி என்ன யோசனை ஒன்னுமில்லை வெட்டிங்னு சொன்ன உன் ஃபேஸ்ல வழமைய விட டல்லா இருக்கு” என்றாள் மோனி.
” மோனி காஃபி ஷாப் கூப்பிட்டார்பா போக ஒரு மாதிரி இருக்கு,”என கனி சொல்ல, மோனிக்காவோ சிரித்தபடி ,கதிர் உன் கூட பேசிப் பழக நினைக்கார் இதில என்ன இருக்குபா,நீயும் பேசிப் பழகுபா”என்றாள்.
ராமும்,நிதிஸூம் ஸ்டூடியோவில் தான் இருந்தனர்.” எக்ஸ்கியூஸ் மீ சார் டப்பிங் வேல எல்லாமே முடிச்சி நீங்க ஒருக்கா பார்த்தீங்கனா நாம ரிலீஸ் பண்ணிடலாம் என்றான் கௌதம்.
” ராம் வாரியா?” “சோர்” என அங்கு ஒரு தியேட்டரினுள் நுழைந்த ராமும் ,நிதிஸும் அமர்ந்தனர்,தீ லயன் கிங்” ஆங்கிலச் சிறுவர் திரைப்படம் தமிழில் திரையில் ஓடியது.இரு மணித்தியாலம் அங்கு கழித்த இருவரும் படத்தை விமர்சித்தபடி வெளியே வந்தனர்.
” கௌதம் சில இடத்தில சத்தம் குறைவா வருது ஸ்டார்ட்ல வர வெல்கம் சாங்க, என்ட்லயும் போடுங்க என மாற்றத்தைச் சொன்னவன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ணுவோம் என்றான்.
இருவரும் பேசியபடி ஸ்டூடியோவை விட்டு வெளியேறினர்.”நிதிஸ் ரிதம் மியூசிக் குரூப்ல கேட்டதா? ” ” ம்ம் பேசினன்டா அவங்களுக்கும் தெரியலயாம் வெட்டிங்குக்கு வந்தவங்களும் பாடிருக்காங்க சாங்க சொல்லிக் கேட்டன் ….யார்னு கேட்டாங்க, ஸ்டூடியோனு சொன்னன் அப்போ தான் விசயத்தையே சொன்னான்” என பேசியபடி வந்த இருவரும் காரில் ஏறினர்.
“ஆஃபீஸ்க்கா” ” ம்ம்” என்ற ராம் காரில் பிளேயரை ஆன் பண்ண அதிலும் “மன்மதனே நீ கலைஞன் தான், மன்மதனே நீ கவிஞன் நான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலனா என்னும் பாடல் ஒலித்தது” ‘இங்கேயும் அதே குரல் தானா’ என ராம் சொல்ல புன்னகையுடன் கரை ஓட்டினான் நிதிஸ்.
” டேய் ப்ரோ உண்மையிலே அவ உன் ரசிகை இல்லை, நீ தான் அவ ரசிகை “என்றான் சிரித்தபடி. சாஃப்ட் டெக் வரவே இருவரும் காரை பார்க் செய்துவிட்டு காரில் இருந்து இறங்கி அலுவலகத்தினுள் நுழைந்தனர்.
அனைவரும் தங்களது வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் இருவரையும் ஒருங்கே அலுவலத்தில் கண்ட ஊழியர்கள் அவர்களுக்கு மாலை வணக்கத்தை தெரிவித்தனர் அச் சந்தர்ப்பத்தில் தான் நம் நாயகி தனது டீமுடன் அடுத்த ப்ரொஜெக்ட்டிக்கான மீட்டிங்கில் ஈடுபட்டிருந்தாள்.
நேரமும் செல்ல ஒவ்வொருத்தராக தங்களது பிங்கரை வைத்து விட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினர். மோனிகாவும் கனியும் வெளியேறும் வேளை ராமும், நிதீஸு மற்றொரு தளத்திற்கு செல்லவென வெளியே வர வெளியேறிச் செல்லும் பெண்களின் பின்புறம் தான் தெரிந்தது.
வெளியேறிய கனியும் மோனிகாவும் பஸ்ஸில் புறப்பட்டனர். கனி காஃபி ஷாப்ல இறங்கிக் கொண்டாள். அவள் உள்ளே நுழைந்து ஒரு இருக்கையில் அமர்ந்ததும் சிறிது நேரத்தில் கதிர் அங்கு வந்தான்.” ஹாய்” என அவள் முன் அமர்ந்தவன் “எப்படி இருக்க ?” “நல்லா இருக்கேன்” “நீங்க”…… “ஐ அம் குட்” செர்வண்டும் வர இரு காஃபிகளை ஆர்டர் செய்தவன். செர்வண்ட் நகர்ந்ததும். “வேலை எல்லாம் எப்படி போகுது” அவ்ளோ “குட்” என்றாள் அவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை பொதுவான விடயங்களை பற்றி கதிர் பேச அவளும் கொஞ்சம் இறுக்கம் தவிர்த்து பேச தொடங்கினாள் காஃபியும் வர இருவரும் அருந்தினர்.
” நாளைக்கு மூவி போலாமா? சாட்டர்டே லீவு தானே உனக்கு” என கதிர் கேட்க அவன் கேட்டதில் அவளுக்கு புறையேற தலையைத் தட்டியவள் “நாளைக்கு காஃப் டே தான் ” “அப்போ லன்ச் முடிய போலாம்” என்றான் .அவளுக்கும் சேர்த்து அவனே யோசிக்கின்றான் “சோர்ரில பார்க்கலாம்” என்றாள் கனி. இருவரும் காஃபி ஷாப்பில் இருந்து வெளியேறினர்.
ஹாஸ்டலுக்கு பக்கத்தில் தான் காஃபி ஷாப் பத்து நிமிடத்தில் ஹாஸ்டலை அடைந்தவள். சிறு குளியலை போட்டுக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். மனதில் ஒரு வெறுமை. “ஹலோ நிதிஸ் சார்,….என்ன திடீர்னு சார்னு சொல்றேன் பாக்குறீங்களா? என்ன சார் செய்றது, உங்க குரலுக்கு ரசிகையா இருக்கன், உங்க எழுத்துக்கள்ள ஒரு பிடித்தம், உங்களுக்கும் ரசிக்கியா இருந்தேன். ஒரு ரசிகை என்பது தாண்டி என்னுள் ஒரு பிடித்தம் அது எப்படி காதலானது தெர்ல, என் காதல் உண்மை, இந்த கனவுல இருந்து வெளியே வந்து எதிர்காலத்துக்கு உண்மையா இருக்கணும்னு நினைக்க இனி வீடியோஸ் எதுவும் வராது என இறுதியாக அழும் குரலில் பேசியவள் “இருப்பது ஓர் உயிரே அது உருகிய கரைகிறதே” எனும் பாடலில் சில வரிகளை பாடியவள் என்றும் உன் ரசிகையாக நான் ஹனி ப்ளூம் என முடித்திருந்தாள் . அதை கைகள் நடுங்க எடிட் செய்தவள் தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தாள். அவள் அதனை பதிவேற்றிய சில நிமிடத்தில் பல லட்சம் பேர் பார்வையிட்டனர்.
அலுவலகத்திலிருந்து ராமு நித்திஸும் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தனர் வீட்டினில் நுழைந்தவர்களை “சாப்பிட வாங்கப்பா” என அழைத்தார் கல்யாணி தத்தமது அறையின் உள் நுழைந்தனர் ராம் பிரஷ் ஆகி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான் பிரதாப்பும் வந்தமர்ந்தார்.” பாட்டி எங்கம்மா ” சாப்பிட்டு நேரத்தோட தூங்கிட்டாங்க,” “இவன் எங்க காணல நீங்க சாப்பிடுங்க நான் பார்த்துடு வாரன்” கணவனுக்கும் இளைய மகனுக்கும் உணவைப் பரிமாரியவர் மூத்த மகனைக் கான அவனது அறைக்குச் சென்றார்.
“நிதிஸ் சாப்பிட வா” எற அழைக்க எந்தச் சத்தமும் உள்ளிருந்து வரவில்லை,கதவைத் தட்ட ” வாரேன்மா” என உள்ளிருந்து குரல் கொடுத்தவன்.சிறிது நேரத்தில் கீழிறங்கி வந்தான்.கல்யாணியும் அவனுக்கு உணவைப் பரிமார எதுவும் பேசாது உணவை உண்டான்.
“நிதிஸ் அடுத்த மியூசிக் கன்சென்ட் எப்போ”? என தந்தை கேட்க, “நெக்ஸ்ட் மந்த் தான்ம்பா” “ஓகே லாஸ்ட்டா நடந்த கிளைன்ட் மீட்டிங்ல உன்னோட பிரசன்டேஷன் நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க” என்றார் .”ம்ம்” என்றதோடு சரி அவனையே பார்த்திருந்த ராமோ ‘வரக்குள்ள நல்ல தானே இருந்தான் இப்போ என்னாச்சி’யோசித்தபடியே உணவை உண்டான்.
ராமோ அறைக்கு வந்தவன். தரங்கிணியோடு பேசித் தொடங்கினான்.” மேலோட்டமாக “ஹனி வாய்ஸ்” பற்றி தரங்கினியிடம் சொன்னான் ஆனால் நிதிஸ் பற்றி சொல்லவில்லை தரங்கினியோடு சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தவன் ‘எப்படி ஹனி வாய்ஸ் ஐ கண்டுபிடிக்கலாம்’ என ஜோசித்தவன் ‘லொகேஷன் டிரஸ் பண்ணலாமா என பாக்கணும் எண்ணியவன்’ தனது அலைபேசியில் ‘தேனிலும் இனியது காதலே’ எனும் யூடியூப் சேனலை பார்க்க அதில் இறுதியாக பதிவிட்ட வீடியோவை பார்த்தவன்.
“ஐயோ இந்த பொண்ணுக்கு என்னதான் ஆச்சு இப்படி பண்ணிருக்கு என தலையில் அடித்தவன் தமையனை காண அவன் அறைக்குச் சென்று நிதிஸை அழைக்க அவன் அறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை, அறைக் கதவில் கை வைக்க தாளிடப்படாத அறை கதவு திறந்து கொண்டது அறையிலும் நுழைய பால்கனி தரையில் படுத்து கிடந்தான் நிதிஸ்.
” இங்க என்னடா பண்ற” என ராம் கேட்க, ராமை ஒரு பார்வை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை “சரி எழுந்திரு எல்லாம் ஓகே ஆகும் வா” என அவனே நிதிஸை அழைக்க நிதிஸோ விரக்தியைச் சிரித்துக்கொண்டான் மறுநாள் வேலை இருப்பதாக கதிரிடம் சொன்ன கனி மூவி செல்லவில்லை அப்படியே ஊருக்கு சென்று விட்டாள்.
“கல்யாணத்துக்கு முன்ன லீவுக்கு எழுதிக் கொடுடி கடைசி நேரத்துல டைம் இல்லாம போயிடும்”என்றார் வாணி. சனி, ஞாயிறு வீட்டில் கழித்து விட்டு திங்கட்கிழமை தங்கள் அலுவலகம் வந்தாள்.
“குட் மார்னிங் மோனி”, “குட் மார்னிங் கனி , என்ன ஆச்சு ஆபிஸ் ஒரே பரபரப்பா இருக்கு” என கனி கேட்க,”நம்ம சிஸ்டத்தை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க மூணு கோடி டிமாண்ட் பண்ணி இருக்காங்க” என்றாள் மோனி ” ஐயோ என, வாயில் கை வைத்த கனி அலுவலகத்தில் டெக்னிக்கல் இன்ஜினியர்ஸ், சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ் இருக்கும் அரையை நோக்கி சென்றாள் தனது ஐடி காட்டை காட்டி விட்டு உள்ளே நுழைய அங்கு ஒரு குழுவே தீவிரமாகவே வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ராம் அவளைப் பார்த்தானே ஒளிய எதுவும் பேசவில்லை, அங்கிருந்த ஒரு ஊழியரிடம் “எப்போ நடந்தது என கேட்க அவனோ “நேத்து நைட் தான் நடந்திருக்கு” என்றான். “சேல் ஐ ரை இட்?” எனக் கேட்க அங்கு இருந்த ஒருவன் எழுந்து தனது கம்ப்யூட்டரை கொடுத்துவிட்டு தலையை இருபக்கமும் ஆட்டி நெட்டி முறித்தான் இரவில் இருந்து போராடுகின்றனர்
ஹேக் பண்ணவனை அணுகவே முடியவில்லை எவ்வளவு தடை விதித்தும் எதிர்த் தரப்பும் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு நிகராகவே போராட போராட்டம் விடிந்தும் தொடர்ந்தது.
கம்ப்யூட்டரில் அமர்ந்தவரின் விரல்கள் கீபோர்டு லாவகமாக அசைய, தொடர்ந்து கோடிங்கை செய்தவள் “எஸ் எஸ்” என்றபடி பக்கத்தில் இருந்தவரிடம் “இந்த லொகேஷன ரேஸ் பண்ணுங்க என்றாள்” அடுத்தடுத்து தொடர்ந்து இவர்களும் கனி கொடுத்த லொகேஷனை வைத்து டிரஸ் பண்ணி அவனது அட்ரஸை கண்டுபிடித்தனர் அவனது ஐ பி அட்ரஸ் நிலை இல்லாது இருந்தது இறுதியில் ஒரே ஐபி அட்ரஸ் ரெண்டு மூன்று முறை வரவே அதை கெஸ் பண்ணியே லோக்கேஷனை அருகில் இருநத்வரிடம் கொடுத்தாள். அதனைத் தொடர்ந்து எதிர்த்தரப்பிற்கு வார்னிங் கொடுத்து மாறி அவர்களது சிஸ்டத்தை முடக்கினர். தலைமை டெக்னீசியனோ “வெல்டன் கேர்ள் என கனியை பாராட்டியவர் ராமிடம் வந்தவர் “இன்டெலிஜென் கேர்ள்” “லொகேஷன் கண்டுபிடிக்கலனா அவனை கண்டுபிடிக்க முடியாம போயிருக்கும்” என்றார்.
“தேங்க்ஸ் மிஸ்”…
” ஐ அம் கனி மலர் சார்” என்றாள். ஹெக் செய்து டிமாண்ட் பண்ணியவன் மலேசிய நாட்டை சேர்ந்தவன் போட்டிக் கம்பெனி கொடுத்த பணத்தை வைத்து இப்படி விளையாடி தன் கையால் தன் கண்ணையே குத்திக் கொண்டான்.
மலேசிய போலீஸை அணுகிய ராம் விடயத்தை முடித்திருந்தான் அவன் இவர்களுடன் போராடும் போதே மலேசிய போலீஸ் அவன் கதவைத் தட்ட தொடங்கினர்.
அனைவரும் மாறி மாறி பாராட்ட கூச்சத்தில்ல் நெளிந்த கனி “ப்ளீஸ் சார் நான் சீட்டுக்கு போறேன்” என்றாள் ராமும் சிரித்தபடி “ஓகே கோ” என்றான் தந்தைக்கு அழைத்து விடயத்தை சொன்னவன். அவர்களது சிஸ்டத்தின் பாதுகாப்பை மேலும் பலப் படுத்திக் கொண்டான்.
இவ்வாறு சில நாட்கள் சென்றிருக்கும் அலுவலகத்தை விட்டு வெளியே மோனிகாவும் கனியும் வந்தனர். பஸ் ஸ்டாப்பை நோக்கிச்செல்லும் போது மோனிக்கு அழைப்பு வர அவள் அலைபேசியுடன் சற்று தள்ளி நடந்தாள் அப்போது கனியின் அலறல் தான் கேட்டது மோனி சத்தத்தில் மறுபக்கம் திரும்ப கனி ரெத்த வெள்ளத்தில் கிடந்தாள். அடித்த காரும் நிற்காமல் சென்றது.
காரொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கார் கனியை தட்டி விட்டு நில்லாமல் சென்றது. மோனிகாவும் கனியிடம் விரைய போனவர் வந்தவர் என அனைவரும் அங்கு கூடினர்.ரெத்த வெள்ளத்தில் கிடந்த கனியை கண்ட மோனிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கு நின்றவர்களின் உதவியோடு ஆட்டோவில் அவளை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் சென்றாள் மோனிகா. அவளை அட்மிட் செய்தவள் கனியின் பையில் இருந்த அவளின் ஃபோனை எடுத்தவளுக்கோ யாருக்கு அழைப்பதென்றே தெரியவில்லை . அம்மா எனத் தேட வாணியின் நம்பரும் கிடைத்தது அதில் வாணிக்கு அழைத்து “ஹலோ அம்மா” நான் கனிட ஃப்ரெண்ட் அவள் பதற்றமாக பேசவே வாணிக்கும் “அவளுக்கு என்ன ஆச்சு” என்றார் அவளை விட பதட்டமாக, தன்னை ஓரளவு திடப்படுத்தியவள் “சின்ன ஆக்சிடென்ட் ஒன்று ஆண்ட்டி” என விடயத்தை சொன்னாள்.
சிறிது நேரத்தில் சுதர்சன் ஹாஸ்பிடலுக்கு வந்தான். “என்னாச்சுக்கா” என மோனிகாவிடம் கேட்க அவளும் நடந்ததை சொன்னாள், கதிரும் சிறிது நேரத்தில் வந்தான். அவனிடமும் அதே கதையைத்தான் சொன்னாள் மோனிகா ,”அக்கா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க லேட் ஆகுது “என்றான் தர்ஷன். “இல்லடா டாக்டர் வந்ததும் போறேன்” “சரிக்கா” டாக்டரும் வெளியே வர வாணியும், மேகநாதனும் அடித்துப் பிடித்து அரை மணி நேரத்தில் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தனர்.
“இப்போ எப்படி டாக்டர்” என அனைவரும் அவரின் பதிலுக்காக காத்திருக்க “இப்ப கொஞ்சம் அதிகமா பிளட் லாஸ் ஆகியிருக்கு காயத்துக்கு தையல் போட்டு இருக்கோம், பயத்துல போட்ட மயக்கம் தான் வலிக்கு இன்ஜெக்ஷன் போட்டு இருக்கு கண் முழிச்சதும் பாருங்க” என அவர் வெளியேறத் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது.