தேனிலும் இனியது காதலே -10

4.3
(3)

 

காதலே- 10

“ரொம்ப நன்றிமா” என வாணி தழுதழுத்த குரலில் சொல்ல சொல்ல  பரவால ஆன்டி ,நான் கிளம்புறேன்.லேட்டாகுது என்றாள் மோனிகா.”தர்சன் அக்காவ விட்டுடு வா  பார்த்து மெதுவாப் போ ” என்றார் வேணி.மோனிகாவும் தர்சனுடன் தனது வீட்டிற்கு புறப்பட்டாள்.

“கதிரும் கவலையுடனேயே அவளது அறையையே பார்த்திருந்தான். சிறிது நேரத்தில் கனி இருந்த அறையில் இருந்து வெளியே வந்த தாதி ,பேசன்ட் கண்முழிச்சிட்டாங்க என்றாள்.

மூவரும் உள்ளே செல்ல ” அம்மா என்றாள் கனி  காற்றுத் தான் வந்தது.ஸ்ரெயின் பண்ணிக்காதமா ரெஸ்ட் எடு என்றார் வாணி.மேகநாதனோ  “யாரு? என்ன நடந்த? ” எனக் கேட்க, அவள பேசுறாள்  தான் ஆனால் அவள் குரல் யார்  காதையும் சென்றடையவில்லை.

மூவரும் அவளையே அதிர்ச்சியாய் நோக்க,”அவளுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் தான்  வழிந்தது.ஏதோ சொல்கிறாள் தான்   ஆனால் அவள் வாயசைவு ஒவ்வொன்றிற்கும் வெறும் காற்றுத் தான் வந்தது.

டாக்டரை அழைத்து வந்த  தாதி வெளிய வெயிட் பண்ணனுங்க, என்றார்.டாக்டரும் கனியை செக் பண்ணியவர் அவள் அதிகமாக அழவே  இன்ஜெக்ஷன் போட அவளும் தூங்கிப் போனாள்.

வெளியே வந்த டாக்டரை சூழ்ந்த மேகநாதனும் வாணியும் “என்னாச்சு சார்” என பரிதவிப்புடன் கேட்க, அவங்களுக்கு குரல் போய்ட்டு  என்றார். “ஐயோ என்னங்க சொல்ற டாக்டர்” என வாணி கணவனை உலுக்க அருகில் கேட்டுக் கொண்டிருந்த கதிர் அலைபேசியில்ன் பேசியபடி அங்கிருந்து அகன்றான்.

சாரி மிஸ்டர் அவங்க கொஞ்சம் ஸ்டேபிளாகட்டும் ஸ்கேன் பண்ணி பார்ப்போம் ரொம்ப எமோஷனலா வீக்கா இருக்காங்க,  இப்போ தான் தையல் எல்லாம் போட்டு இருக்கு, அவங்களுக்கு கொஞ்சம் சப்போர்ட்டிவ் அன்பா பேசி இருங்க  என்றவர் அங்கிருந்து அகன்றார். வாணி மகளுடன் ஆஸ்பிட்டலில் இருக்க மேகநாதன் உணவு வாங்க சென்றார் இடையில் சுதர்ஷன் வர வாணியும் நடந்ததைச் சொல்லி அழுதார்.

வீட்டுக்கு வந்த மோனிகாக்கும்  கனியின் நினைவு தான் மயக்கம் விழிப்புமாக அன்றைய நாள் கனிக்கு சென்றது. அடுத்த நாள் கண்விழித்த கணிக்கோ நேற்றைய விபத்துத் தான்  கண்ணில் நின்றது. தாயோ ஒருபுறம் கண்ணீரில் கரையே அதை பார்த்து பார்த்து கனியும்  கண்ணீர்  கரைந்தாள்.

ஒரு வாரம் ஹாஸ்பிடல் வாசம் தான் கனிக்கு சாப்பாடு ஊட்டுவதில் இருந்து அனைத்தும் வாணி தான் சிறு குழந்தையை போல் கைக்குள் வைத்து தன் பெண்ணை பார்த்துக்கொண்டார்.

மேகநாதன் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் தங்கி விட்டார் விபத்து  என்றதும் போலீஸ் ஹாஸ்பிடலுக்கு வர கேஸ் என்று போய் மகளின் வாழ்க்கை சிக்கலாக எண்ணாது, “சார் ஆக்சிடென்ட் தான் ஆனா   யாருன்னு தெரியல என் பொண்ணு இப்போ உயிரோடு இருக்கிறதே போதும்” என்று சொல்லி விட்டார் மேகநாதன்.

எந்நேரமும் யாராவது ஒருவர்  கனிக்கு துணையாக இருந்தனர். தெரிந்தவர்கள், அலுவலக நண்பர்கள் என அனைவரும் வந்து ஹாஸ்பிடலில் பார்த்துச் சென்றனர். ஹாஸ்பிடல் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அன்று மீட்டிங்கிற்கு ராம், தேவ் பிரதாப்,நிதிஸ் என  அனைவரும் வந்திருந்தனர். அலுவலகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய திருட்டான ஹேக்கிங் பற்றி தான் பேச இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் பேசிய கௌதம் “குட் மார்னிங்  எவ்ரிவன் சமீபமா நடந்த ஹேக்கிங் பற்றி எல்லாருக்கும் தெரியும் போட்டி கம்பெனியா இருந்தாலும் அந்த அளவுக்கு  நம்ம சிஸ்டம்    பாதுகாப்பு இல்லாம   இருந்திருக்கு. நம்ம டேட்டாஸ், புதுசா  லான்ச் பண்ணியிருந்த கேம்ஸ், ஆப்ஸ், இப்படி எவ்வளவோ விஷயங்கள் அதுல, இப்போ எல்லாம் கிளியர் பண்ணி செக்யூரிட்டி சிஸ்டம் ஸ்ட்ரோங்காக்கப்பட்டிருக்கு, ஃபர்ஸ்ட் இதுக்கு ஃபுல் சப்போர்ட் தந்த நம்ம டீம் அனைவருக்கும் தேங்க்ஸ். அண்ட் அதுல ரொம்ப முக்கியமான ஆள் தான் மிஸ் கனிமலர் அவங்க தான்  ஹேக்கிங் நிறுத்த ஹெல்ப் பண்ணாங்க என்ற நொடி அனைவரும் கைதட்ட ராமின் பார்வை கனியை தேடி மோனிகாவில் பதிய “சார் கனிமலருக்கு ஆக்சிடென்ட் என்றாள்.” ஓ சாரி” என்றதொடு தனது பேச்சை முடித்துக் கொண்டான் கௌதம்.

தேவ் பிரதாப்பும் சிறிது நேரம் பேசியவர் கடைசியாக “நாம லான்ச் பண்ண கேம் இப்போ மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்று இருக்கு, இது நமக்கு கிடைச்ச பெரிய வெற்றி சோ இத   முன்னிட்டு இவினிங் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கு” என்று சொல்ல அனைவரும் கரகோசித்தனர் அதன் பின் மீட்டிங்  நிறைவடைந்ததும் அனைவரும் கலைந்தனர் “மிஸ் மோனிகா கெபின் வாங்க என்ற ராம், தனக்கான அலுவலக அறைக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் கதவை தட்டியபடி “எஸ்கியூஸ்மீ சார்” என மோனிகா உள் நுழைய நிதிஸும் அங்கு தான் இருந்தான் நிதிஸை ஆச்சரியமாக பார்த்தவள் ராமிற்கு முன் நிற்க   “உட்காருங்க”  என்றான் ராம்.

“கனிமலருக்கு  என்னாச்சு?” எப்போ நடந்தது என அவனும் நேரடியாக விஷயத்தைக் கேட்க “ஒரு வாரம் இருக்கும் சார் பஸ்க்கு வெயிட் பண்ணும் போது தான் கார் இடிச்சிடு நிற்காமப்  போச்சு”என்று அன்று அலுவலகத்திற்கு முன்பு நடந்ததை சொன்னாள் அவள்.

அவள் சொன்னதை நிமிர்ந்து காது கொடுத்து கேட்ட நிதீஸுன் முகம் மறுபடியே மாறியது. ராமிற்க்கு அவ்வாறே,”இப்போ எப்படி?” என மறுபடி கேட்க “பரவால்ல சார் இப்போ பெட்டர் கொஞ்சம் டேஸ்ல பெட் ரெஸ்ட் எடுத்தா சரியாகும் “என்றாள். “ம்ம்” என்றான் ராம். அவளும் வெளியேறிச் செல்ல ராம் நிதிஸைப் பார்க்க நிதிஸும் ராமைத் தான் பார்த்தான்

அன்று விடுமுறை என்பதால் மேகநாதன், சுதர்சன் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர்.  கனியின் வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது கதிரும் கதிரின் தாய் , தந்தை வந்திருந்தனர் வாணியும் வந்தவர்களை வரவேற்றவர் “வாங்க சம்மந்தி” என அழைக்க “அதான் வந்துடோமே”  என்றார் குதர்க்கமாக வந்தவர்களை   உபசரித்தவர் கணவனை அழைத்தார்.

‘ கனிய பத்தி நலம் விசாரிக்க வந்துள்ளனர்’ என எண்ணியிருக்க அவரோ “இந்த கல்யாண பேச்ச இத்தோட நிறுத்திக்குவோம்” என்றார். மேகநாதன் கதிரின் தந்தையை பார்க்க அவரோ எதுவும் பேசவில்லை “கல்யாணத்துக்கு முதலே ஆக்சிடென்ட் அதுல குரல் வேற போயிடுச்சு, இப்படி இருக்கிற பொண்ண எப்படி என் பையனுக்கு கட்டிக் கொடுக்கிறது ,நாலு இடத்துக்கு போற பிள்ளை எப்படி உங்க பொண்ண   அறிமுகப்படுத்துவான்” என அவர் பேச்சு நாகரீகமற்றதாக  இருந்தது ,”அம்மா” என்றான் கதிர் “நீ சும்மா இருடா உனக்கென்ன தெரியும்” என்றார் அவர். மேகநாதன் வாய்  வரை வந்த வார்த்தையை விழுங்கி கொண்டு “ஓகே அப்ப நீங்க கிளம்பலாம்” என வாசலைக் காட்டினார்.  தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு.

கதிரின் தந்தை எழுந்து கொள்ள, கதிரும் எதுவும் பேசாதே எழுந்து வெளியே சென்று விட்டான். அவனுக்கு கனியை பிடித்திருந்தாலும், தாயின் பேச்சை மீறி எதுவும் செய்ய முடியவில்லை அவரும் அவனை அப்படியே வளர்த்திருந்தார். போகும் போது அடங்காத கதரின் தாய் “இந்த ஊமச்சி வேண்டாம், அம்மா நல்ல பொண்ணா உனக்கு கட்டி வைக்கிறன் என பேசிக்கொண்டு செல்வது வாணிக்கும் கேட்டது உள்ளே இருந்த கனிக்கும் கேட்டது. அவள் கண்களோ கண்ணீரை சொரிய, வாணியும் வாயை மூடி அழத் தொடங்கினார்.

மேகநாதன் தனக்குள் இறுகிப்போனார் தான் தேடிய சம்மந்தம், ‘நல்ல காலம் மகளுக்கு இப்படி ஒரு மாமியார் அமையவில்லை.’ எனும் எண்ணம் தான் அப்பொழுது அவருக்கு வந்தது. அன்று மனைவியையும்  மகளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வந்தார் மேகநாதன்.

கனியின் தையலை பிரித்து காயத்தை ஆராய்ந்த டாக்டர் மருந்தும் கட்டி விட்டார் .அதனைத் தொடர்ந்து அவள் தொண்டையை ஸ்கேன் செய்து பார்த்தபோது எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. அவளை முற்றும் முழுதாக பரிசோதித்த டாக்டர் அவளின் ரிப்போர்ட்டுடன் அவர்களின் முன் அமர்ந்தார்.மேகநாதனும்  வாணியும்  கனியும் என்ன சொல்வார் என்ற பயத்தில் இருக்க, கைகளை சனிட்டேசறால் துடைத்த டாக்டர் சிரித்தபடி “அவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல” என மூவரின் வயிற்றில் பாலை வார்த்தார்.

கனியின் முகம் தெளியாததை கண்ட டாக்டர் அதிர்ச்சியில் சத்தமா கத்திரிக்காங்க அந்த அதிர்ச்சியில் தான் குரல் போயிருக்கு, அந்த பயம் சரியாயினாலே பழையபடி பேசுவாங்க,”…..” தொண்டையில் வலி இருக்காம்மா ?” அவளும் “ஆம்” என்ன தலையாட்ட அதுக்கு மெடிசன் தரன் அது ரெகுலரா எடுத்துக்க “ஓகே ஆகிடும்” என அவர்களுக்கு மருந்து கொடுத்து  அனுப்பிய டாக்டர் அடுத்த பேஷண்டுக்காக காத்திருந்தார்.

மாலை நேரம் போல் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்  மேகநாதன் குடும்பத்தினர். பக்கத்து வீட்டு பாட்டி “என்னடியம்மா இப்படி ஆச்சு, அதுவும் கல்யாணம் பேசின நேரத்துல”என்றார் .கண் கலங்க கனியும் தனதறைக்குள்  நுழைந்து கொண்டாள்.

“கனி வா சாப்பிட” எனும் தாயின் குரலில் வெளியே வர உணவை தட்டுகளில் வைத்தார்.சுதர்ஷன் உணவு தட்டுடன் டிவியின் முன் அமர்ந்து கிரிக்கெட்டை பார்க்க, தனது உணவு தட்டுடன் வந்த கனியும் சிறிது நேரம் கிரிக்கெட்டை பார்த்தவள் எட்டி ரிமோட்டை எடுத்து ஒவ்வொரு சேனலாக மாற்ற தர்ஷனோ “கிரிக்கெட்டை வையண்டி” என்றான். அவ்ளோ பதில் சொல்ல வராது சைகையில் ஏதோ சொல்ல,அப்போது தான்  தர்சனுக்கு அவளின் சிரமம் புரிந்தது. அதன் பின் ஒரு அவள் சேனலை வைக்க, அதிலோ இசை நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது.

சுவரில் தொங்கிய காலண்டரை பார்த்தவள், இருபதாம்   தகதி நிதிஸுன் அடுத்த மிகப்பெரிய மியூசிக் கன்சென்ட் ,புகழ்பெற்ற பல பாடகர்கள் அதில் கலந்து கொள்ள உள்ளதால் அதனை நேரடி ஒளிபரப்புச் செய்தனர்.

கரகோசத்திற்கு மத்தியில் அறிவிப்பாளர் நிகழ்வை ஆரம்பித்தார் முதலாவது பாடலாக எமது அனைவரின் மனதை வென்ற பாடகி சிந்து என்று அழைக்க அவளும் அழகாக மேடைக்கு வந்து தனது இனிய குரலால் அனைவரையும் கவர்ந்தாள்.அதனைத் தொடர்ந்து “இதோ அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இசை புயலும், பாடல் ஆசிரியருமான நிதிஸ்  சரண்” என அறிவிக்க ரசிகர்களின் கரகோசத்திற்கு மத்தியில் கையில் மைக்கை பிடித்துப் பாடினான்.

அவனையே கவனித்திருந்து கனியோ ‘என்ன முகமெல்லாம்  ரொம்ப டல்லா இருக்கு’ என அவன் உடல் மொழியையே கவனித்திருக்க நிதிசஸும் பாடி முடிய மேடையை விட்டு இறங்கி சென்றான்.

கனியும் சாப்பிட்டு முடித்திருக்க கைகளை கழுவிக் கொண்டு மீண்டும் டிவியின் முன் அமர்ந்தாள். காலிலும் கையிலும் கட்டுக்கள் போடப்பட்டிருந்தது மூன்று நாட்களின் பின் அதையும் அகற்றினால் சரி. முகத்தில் ஆங்காங்கு சிராய்ப்பு காயங்கள்.

சுதர்சனையும்,கனியையும் டைனிங் டேபிளில் இருந்து பார்த்தனர் மேகநாதனும் வாணியும் “அந்த கதிரோட அம்மா பேசினது மனசே ஆறலங்க” என்றார் வாணி.

“அதற்கு மேகநாதனோ நான் தான் அவசரப்பட்டுதன் போல அவ விருப்பமில்லாம நமக்காக தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கா ” என்றார் அவர் அதற்கு வாணியோ “ஓ…….நீங்க சம்மதமானு கேட்டீங்களா முதல்ல இல்லையே” என்றார் தன் பங்குக்கு ஆதங்கமாக மேகநாதனிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே அவளுக்கு எல்லாமே  பெஸ்ட்டா கொடுத்தன்

நல்ல இடம், நல்ல பையன் எல்லாமே விசாரிச்சன் அவங்க அம்மா விஷம்னு தெரியாம போச்சு”  என இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

மியூசிக் ப்ரோக்ராம் முடியத்தான் அக்காவும் தம்பியும் எழுந்தனர். கனியை கைதாங்கலாக தர்ஷன் அவள் அறையில் விட்டவன் தானும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

” மலர் மாத்திரையெல்லாம் போட்டியா?” என உள்ளே நுழைந்த வாணி “இல்ல” என அவள் தலையாட்ட “என்ன புள்ளமா” என  அவரே  மாத்திரைகளை எடுத்துக் கொடுக்க அவளும் மாத்திரைகளை விளங்கிக் கொண்டாள். மகளின் தலையை தடவிய அவர் தூங்குமா என போர்வையையும் போர்த்தி விட்டாரும் சிறிது நேரத்தில் அவளருகில்  தூங்கிப் போனார்.

‘நிதிஸ்ர முகம் ஏன் இவ்வளவு டல்லா இருக்கு? ‘என யோசித்தபடியே  கனியும் தூங்கிப் போனாள். மறுநாள் காலையில்  வாணி எழுப்பவே கண்ணை கசக்கி கொண்டு எழுந்த வந்தாள் கனி.”பிரஷ் பண்ணிட்டு வாம்மா”என்றவர் சமையல் அறையினுள் நுழைந்து கொண்டார். கனியும் பிரஷ் பண்ணிக் கொண்டு வெளியே வர மேகநாதன் பாடசாலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். வெளியே வந்த மகளிடம் “வரேமா என்றவர் தனது பையுகடன் பைக்கில் கிளம்பினார்.

சுதர்சனும் காலேஜ் கிளம்பி விட்டான் சமையலுக்கு தாய்க்கு உதவ நீ இருமா நான் பாத்துக்கிறேன் என்றவர் அவளை ஒரு வேலையும் செய்ய விடவில்லை.

மதியம் போல் மேகநாதன் பாடசாலை விட்டு வந்தார். மூவரும் ஒன்றாகவே அமர்ந்து மதிய உணவை உண்ணும் போது வெளியே “சார் “என அழைக்கும் சத்தம் கேட்டது “நீங்க சாப்பிடுங்க நான் யாருன்னு பார்க்கிறன்” என வாணி வெளியே செல்ல…

வெளியே தரகர் நின்றிருந்தார் “சார் இல்லையா?” என கேட்க “இப்பதான் ஸ்கூல் இருந்து வந்தார் வாங்க” என அவரை அழைத்து ஹாலில் அமர வைத்தார்.உணவினை முடித்துக் கொண்டு கனி தனதறைக்கு செல்ல,மேகநாதன்   ஹாலுக்கு வந்தவர் தரகரை புருவம் சுருக்கி பார்த்தார் “வணக்கம் சார் உங்க பொண்ணுக்கு நல்ல வரணும்னு வந்திருக்கு, அவங்களுக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சி போச்சு அதான் உடனே சொல்லலாம்னு வந்தன்” என்றார்.

மேகநாதனும் பெருமூச்சுடன் கனியின் ஆக்சிடென்ட் பற்றி சொன்றவர் “சுந்தரத்தோட பையனத் தான் முதல்ல கேட்டிருந்தது ஆனால் இப்போது சரி வரல” என்றார்.

“சரி சார் நான் ஒரு வார கழிய வரேன்”. பொண்ணு கேட்டவங்க யாரு?” என மேகநாதன் கேட்க “நம்ம சத்தியதேவி அம்மா தான் பழைய பாடகி அவங்க பேரனுக்கு தான் கேட்டாங்க” அவங்க கேட்டப்போ நானும் வந்தன் கதிர பேசிருக்கேன்னு சொன்னாங்க அப்புறம் அது ஒத்து வரலன்னு கேள்விப்பட்டு தான் மறுபடி வந்தேன் எதுக்கும் ஒரு வாரம் கழிய வாரன் மலருக்கு பெரிய பிரச்சினை ஒன்னும் இல்லே, அவளுக்கு குணமாகட்டும் யோசிச்சு சொல்லுங்க சார்”  என அவர் புறப்பட்டுச் சென்றார்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!