காதலே-11
தனது அறைக்கு வந்த கனி மேலும் ஒருவாரம் விடுமுறை வேண்டி விண்ணப்பித்தாள்.அதன் பின் தனது சேனலை திறந்து பார்த்தவள், அப்படியே சில வீடியோக்களையும் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
ராமிற்கும் கனியிடமிருந்து மின்னஞ்சல் வர அதைப் பார்த்தவன் ஒரு பெரு மூச்சுடன் அவளுக்கான விடுமுறையை ஏற்றுக் கொண்டான்.
ஸ்டூடியோவிலோ நிதிஸ் முற்றிலும் மாறிப் போனான்.வித்தியாவை அறவோடு தவிர்த்தாஅ சமீபமான அவனது பாடல்கள் அனைத்தும் சோகமான,காதல் பாடல்களாகவே இருந்த.
” பாடகன் நிதிஸ் சரனுக்கு காதல் தோல்வியா?” என கிசு கிசு கூட சமூக வலைத் தளங்களில் பரவியது. நிதிஸும் புதிய படத்திற்கான பாடலை சிறப்பாக பாடி முடிய படத் தயாரிப்பாளருகோ மகிழ்ச்சியில் அவனைத்து விடுவித்தவர் தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.
நிதிஸும் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.ப்ரதாப்பிற்கு வேலைகளை இரு மகன்களும் பார்த்துக் கொள்வதால் சற்று ஓய்வு கிடைதத்து. வீட்டினுள் நுழைந்த நிதிஸை எதிர் கொண்ட ப்ராத்” நிதிஸ் கேம் லான்ச் சக்சஸ் பார்ட்டி கேன்சல் ஆகிருக்கு என்றான்.” ம்ம் ராம் சொன்னான் அடுத்த வியாழக்கிழமை தானே அரேஜ் பண்ணிருக்குனு” சொன்னான் என்றவன் தன் அறைக்குள் நுழைந்து கொணடவன், மீண்டும் கீழிறங்கி வர ” தேவிப் பாட்டியும்,கல்யாணியும், சாப்பிட அமர்ந்தனர்.”ராம் இன்னும் வரலையா?? ” எனும் அபோது ராமும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தமர்ந்தான்.
சிறிது நேரத்தில் உணவினையை பரிமாறி உன்டனர்.”கண்ணா நிதிஸ், அவன் பாட்டியை நிமிர்ந்து பார்க்க, “தரகர்ட பொண்ணு பார்க்க சொன்னம், அவரும் பாரத்திருக்கார் அழகா,இருக்கா இப்ப தான் காலேஜ் முடிச்சிருக்கா எங்களுக்கு பிடிச்சிருக்கு நீயும் பார்த்து சொல்லு” என்றார். அவரை அழுத்தமாய் நிதிஸ் பார்க்க ‘அடேய் ராம் உங்கண்ணணுக்கு வெட்டகத்த பாரு” என அவன் அவன் கண்ணத்தைக் கிள்ள, அவனோ “ஜயோ பாட்டி” என்றான். கல்யாணியோ நிதிஸ் உனக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேச்ச ஆரம்பிக்கலாம் என்றார்.
ஒரு பெரு மூச்சுடன் கண்ணை மூடித் திறந்தவன் ராம்மை பார்த்து விட்டு “ஓகேமா மா பார்க்கலாம்” என்றான்.மகன் திருமணத்திற்கு சம்மதித்ததில் அகம் மகிழ்ந்த இருவரும் உடனே வேலையில் இறங்கினர்.
மறு நாள் காலை “வீட்டிற்கு வந்த தரகர் கனிமலர் பற்றி சொல்ல, தேவிப்பாட்டிக்கும், கல்யாணிக்கும் கவலையே வேற யாரும் பார்க்கலாமா” என்றவர்.வேறு சில பெண்களின் தகவலைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
இப்படியே நாட்கள் செல்ல கனிமலரும் எழுந்து நடமாடத் தொடங்கினாள்.கை,கால்,காயங்கள் முற்றிலும் குணமடைந்திருந்தது.குரல் மட்டும் இன்னும் வரவில்லை,தொண்டை வலிக்கான மருந்து மாத்திரம் எடுத்துக்கொண்டு வந்தாள்.”இதற்கிடையில் சைகை மொழியும் ஓரளவு வீட்டில் இருந்தவாறே யூடிப்பில் கற்றுக் கொண்டான்.
“அப்பா வேலைக்கு போகட்டா, ஒரு மாதம் லீவ் எடுத்துடன்” என அலைபேசியில் கூகுல் ஸ்பீச்சில் டைப் பண்ண அதுவோ பெண் குரலில் பேசியது” எப்படி பேசும் மகள் மேகநாதனோ மனதுக்குள் உடைந்தே போனார். “இல்லமா வீட்டுலே இரு” என்று சொல்ல “மீண்டும் ஏம்பா பேச முடியாம இருக்குறதாலையா? போக வேனாம்னு சொல்றிங்க” என அலைபேசியில் பெண் குரல் ஒலித்தது அவளோ கண்கலங்கியபடி நின்றாள்.
மகளிர் மனதை புரிந்து கொண்டாலும் ஒரு தந்தையாய் கவலை கொண்டார் வாணியும்” இல்லமா தனியா எப்படி மேனேஜ் பண்ணிப்ப” என கவலையாய் கேட்க. கோல்டு மெடல்லிஸ்ட், கல்லூரியில் பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது அழைப்பிதழ் கூட வந்துவிட்டது. அவளின் திறமையை முடக்குவதா? பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் ஆசிரியர் தன் பிள்ளையைத் தடுப்பதா என எண்ணியவர்.
“சரிமா திங்கட்கிழமை போகலாம் ஆனா உன்னால மெசேஜ் பண்ண முடியாத பட்சம் திரும்பி வந்துடனும்” உன்ன வீட்டில வச்சிருந்து உன் திறமையை மழுங்க வைக்க நான் விரும்பல என்றார். “தாங்ஸ்பா” என்றாள் கண்ணீருடன் அவள் சொன்னது உதட்டசைவில் தாயும், தந்தையும் புரிந்து கொண்டனர். உற்சாகத்துடன் தனதறைக்கு ஓடியள் பொருட்களை அடுக்க தொடங்கினாள்.
மோனிகாவிற்கு தான் ஜாயின் பண்ணுவதாக மெசேஜ் பண்ணினாள்” வெல்கம் பேக் கனி” என அவளும் பதில் அனுப்பியிருந்தாள்.
பாட்டி வைத்த போட்டோவை சில நாட்கள் கழித்து தான் பார்த்தான் நிதிஸ் அழகாக கண்ணக்குழி சிரிப்பில் அப் புகைப்படத்தில் இருந்தாள் கனி.
” அம்மா பொண்ணோட போட்டோவை பார்த்தேன், ஓகே என்றான் நிதிஸ் கல்யாணியோ “என்ன போட்டோ ??பாட்டி தான் த்ரி டேஸ் முன்னே வச்சிருந்தாங்க” என்றவன் தாயிடம் பாட்டி வைத்த போட்டோவை காட்ட” இந்தப் பொண்ணா,?”ஏன் என்னாச்சுமா?” இவளாள பேச முடியாதுடா! “என்ன?” ஆமான்டா , அழகா இருக்கா இருக்கால,”ம்ம்” ” ஆக்சிடென்ட் லதான் இப்படி ஆச்சு” என்றார் கவலையாக.
” பாட்டி ஜோசியர்ட போயிருக்காங்க வரட்டு” என்றார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டியும் சோர்வுடன் சிறிது நேரத்தில் வர அனைவருக்கும் பழச்சாற்றைக் கொடுத்தார் கல்யாணி.
“அடிக்கிற வெயிலுக்கு இப்பதான் நல்லா இருக்கு” என்றபடி ஒரு மிடறு பழச் சாற்றை அருந்தினார் தேவிப்பாட்டி “என்னாச்சு அத்தை”…” ஜாதகம் பொருந்தல” என்றார் தரகர் கொடுத்த தகவலில் இருந்து ஒரு பெண்ணை இருவருக்கும் பிடித்து போக ஜாதகம் பார்க்க சென்றவர் இப்போது தான் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
ராம் தான் பாட்டியை அழைத்துச் சென்றான் “பாட்டி இந்த பொண்ணு ஓகே” என்றான். கனியின் புகைப்படத்தை காட்டி நிதிஸ் அதனை பார்த்து ராம் நிதிஸை அழ்ந்து பார்க்க அவன் பார்வையில் எதுவுமே புரியவில்லை “இந்த பொண்ணால பேச முடியாதுபா” என்றார் தேவிப் பாட்டி “ஏம்பாட்டி அத குறையா நினைக்கீங்களா?” “சேச்சே அப்படி இல்லப்பா”
“எல்லா வகையிலும் உனக்கு பொருத்தமா இருக்கணும்னு தான்” என்றார் இழுவையாக “ராமோ பேச்சு வராதா? இவ நம்ம ஆபீஸ்ல தான், வொர்க் பண்றா, ஸ்மார்ட் கேர்ள்” என்றான் ராம். அப்போ தரகர்ட பேசுறேன் என்றவர் இப்போதே தரகருக்கு அழைத்தவர் “ஹலோ எப்படி இருக்கீங்க?…. நல்லது நம்ம முதலாவதாக பார்த்த மேகநாதன் பொண்ணு வீட்டிலே பேசுங்க எங்க எல்லாருக்கும் சம்மதம்” என்றார். அது தான் அவர்கள்.
அடுத்த நாளே தரகர் மேகநாதனின் வீட்டில் நின்றார். “சார் வாங்க,”,,,,,” என்ன முடிவெடுத்து இருக்கீங்க” எங்க பிரச்சினை தெரியும் தானே” “எல்லாம் நான் மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டேன் என்றவர் தொடர்ந்து பொண்ண ரொம்ப புடிச்சு போச்சு அதான்” என்றார். “அவங்க ஃபேமிலியில் எல்லாருமே சிங்கர்ஸ் என் பொண்ணுக்கு இது நிரந்தரமான பிரச்சனை இல்லதான் இருந்தாலும் ஒரு சொல் வந்திடக் கூடாது அவ தாங்க மாட்டா” என்றார்.
“அப்படியெல்லாம் அவங்க இல்ல சார் உங்களுக்கு ஓகேன்னா நாளைக்கு அவங்க பொண்ணு பார்க்க ரெடி” என்றார். “என் பொண்ணு கிட்டயும் பேசிட்டு சொல்றேன்” என்றதும் தரகர் சென்றதும், ஏங்க ரொம்ப அவசரப்படுற போல இருக்கு, எனக்கு தான் தோணுது எதுக்கும் விசாரிச்சு பாப்போம்” என்றார் மேகநாதன்.
அடுத்த நாள் நிதிஸ் தம்பி பற்றி விசாரிச்ச வர நல்ல விதமா தான் இருக்கு, ஃபேமஸான பாடகர் நல்ல இடம் தான் ” மலர்ட ஒரு வார்த்தை கேட்போம்க” என்றார் வாணி முதல் கதிரின் பேச்சு வரும் போது அவள் கவலைப்பட்ஞது தெரியும் தானே…..
ஆமா கட்டாய்ம அவக்கு புடிச்சா மேற்கொண்டு பேசுவோம் என்றார். ஒரு அடி விழுந்ததால மேகநாதன் எவ்வளவு திருத்தம்.இந்த அவரது மாற்றம் அக் குடும்பத்திற்கு தேவைப்பட்டவொன்று.
அன்று அலுவலகத்திற்கு வந்திருந்தால் கனி அவள் பிரிவுக்குரியவர்கள் நலம் விசாரிக்க, சிலருக்கு தான் அவளால் பேச முடியாது என்பதே தெரியும் பலருக்கு தெரியாததால் அவளும் ஒரு புன்னகையுடன் கடந்தாள்.
அன்றய நாள் அவளுக்கு வேலையும் குறைவாகவே இருக்க நேரத்துக்கு அனைத்தையும் முடித்தவள் மோனிகாவுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறினாள் அலுவலகத்தில் இருந்து வெளியே வர சுதர்சன் அவளுக்காக காத்திருந்தான் “சுதர்ஷன் நக்கான் போடா என்றாள் மோனிகா கனியிடம், கனியும் தம்பியுடன் அலுவலகத்தில் இருந்து ஹாஸ்டலுக்கு வந்தவள் அவனிடம் தலையாட்டி விடை பெற்று உள்ளேன் நுழைந்து கொண்டாள்.
தாயுடன் வாட்ஸப்பில் மெசேஜ் செய்தவள் தலைக்கு குளித்து வந்து ஈரக் கூந்தலை துடைத்துக் கொண்டிருக்கும் போது நிதஸுன் குரல் மெல்ல இசைத்தது அவனது இசையில் அலைபேசி எடுக்க சகானா தான் நிலைத்திருந்தாள், அவள் அழைப்பை துண்டித்தவள் “ப்ளீஸ் மெசேஜ் மீ” என குறிஞ்செய்தி அனுப்ப அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
” ஹேய் ஹனி”
” ஹவ் ஆர் யூ”
” ஐ அம் ஓகே”
” குட்” என்று பதில் அனுப்பியவள் அதற்கு சகானாவோ அவளது திருமணத்தில் கனி பாடிய பாடல் வீடியோவையும் அதற்கு அவர்களது நண்பர்கள் ஆடிய வீடியோவையும் அனுப்பினாள். “செமப்பா பிரண்ட்ஸோட நல்ல என்ஜாய் பண்ணம், என்றாள் சகானா . தோழியுடன் சிறிது நேரம் வாய்சாப்பில் சாட்டிங் செய்தவள், இரவுணவை தயாரித்து உண்டு விட்டு நிதிஸுன் பாடலைக் கேட்டவாரே தூங்கிப் போனாள்
அப்படியே இரண்டு மூன்று நாட்கள் சென்று இருக்கும் ” ரிமோட் வேரக் எனப்படும் வொர்க் ப்ரம் வெர்க்கிற்கு விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது,கனியும் அதற்கு விண்ணப்பித்தவள் தந்தைக்கு மறுபடியும் அது பற்றி குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தாள்.”குட்மா கிடைச்சா வீட்ல இருந்து வேலை பார்க்கலாம்” என அவரும் பதில் அனுப்பி இருந்தார்.
அவளது விண்ணப்பம் மறுநாள்ளே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அன்று மாலை கேம் லோன்ஜ் சக்சஸ் பார்ட்டிக்கு தயாராகவே அலுவலகத்தில் இருந்து சற்று முன்னதாகவே அலுவலக ஊழியர்கள் அனைவரும் கிளம்பினர். தற்போது தான் காலேஜ் முடித்தவர்களுக்கு அது எல்லாம் புதிது மோனிகாவை தேடி வந்தவள் சைகையில் ஏதோ கேட்க அதை புரிந்த மோனிகாவும் “சேலை இல்லனா லாங் பிராக் போட்டுக்க” என்றாள்.
மோனிகாவுடன் கிளம்பி ஹாஸ்டலுக்கு வந்தவள் குளித்து தயாராகி ஒரு மெல்லிய நீல நிற கவுனை அணிந்தாள் லிப்ஸ்டிக்கை மட்டும் போட்டடுக் கொண்டவள் வேரு எந்த ஒப்பனையும் இல்லாது தயாராகியயள் வார்டணிடம் தனது அலைபேசியில் டைப் செய்து விடயத்தை சொன்னாள்.வார்டனுக்கோ கனியை அவள் காலேஜ் படிக்கும் காலம் இருந்து தெரியும் என்பதால் , அவளை ஆதுரமாம் பார்த்தவள் “ஏதும்னாலும் ஹால்ஸ பண்ணுடா” என்றார்.அவளும் சம்மதமாக தலையாட்டி அங்கிருந்து அகன்றாள்.
அவளுக்கோ மற்றவர்களின் அனுதாபப் பார்ப்பை பிடிக்கவில்லை என்ன செய்வது இச் சமூகத்தில் அனைத்தையும் கடந்து தானே வர வேண்டும்.