காதலே-13
மறுநாள் காலை தாய் தந்தையிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல இருவரும் மகிந்தே போயினர் மேகநாதன் தரகரிற்கு அழைத்துச் சொல்ல தரகர் தேவைப்பாட்டியிடம் பேசிவிட்டு மேகநாதனுக்கு அழைத்த்தவர் நாளை காலை அவர்கள் வருவதாக சொன்னார்.
மேகநாதனும் வாணியிடம் விடயத்தைச் பகிர்ந்தார் இப்படியே அடுத்த நாளும் செல்ல அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒன்பது முப்பது மணி அளவில் தேவ் பிரதாப் தன் குடும்ப சகிதம் மேகநாதன் வீட்டுக்கு வந்தார்.காரில் இருந்து அனைவரும் இறங்கி நடந்து சென்றனர் கேட்டில் இருந்து சில அடி தூரம் வீட்டுக்கு நடந்து செல்ல வேண்டும் இரு மருங்கலும் இது சீராக வெட்டி பராமரிக்கப்பட்ட செடிகள் ஒருபுறம் வளர்ந்தோங்கிய மரங்கள் மறுபுறம் ரோஜா, அந்தூரியம், கற்றாழை என செடிகள் நட்டு அழகாக பராமரிக்கப்பட்டு இருந்தது. பெரிய வீடு தான் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.அச் சூழலே மனதிற்கு இதத்தை தந்தது.
சுற்றி பார்வையிட்டு வர மேகநாதன் வாணியும் அவர்களை வரவேற்றனர். வாணியின் நெருங்கி உறவினர் இருவர் தவிர வேறு யாரும் இல்லை எல்லாம் கதிரால் தான் சில சொந்தங்கள் பொறாமையில் பேச, சிலர் மனதை நோகடிக்கவென வேண்டும் என்றே, கதிரை பற்றி பேசுவதால் வாணி தன் நெருங்கிய இரு சகோதரிகளை மட்டுமே அழைத்திருந்தார்.
அதில் ஒருவரின் மகள் தான் கனி தயாராக உதவி செய்தாள் அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து அமர வைத்தனர். சுக நல விசாரிப்பின் பின் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. “என்ன வாணி பொண்ண காட்டாம சாப்பாட மட்டுமே காட்ரீங்க,என தேவியம்மா கேட்க, “தர்சா அக்காவ வர சொல்லுடா என வாணி சொல்ல தர்சனும் அங்கிருந்து அகன்றான்.
“மாப்பிள்ளை தம்பி வரலையா?” “ஆபீஸ்ல ஏதோ வேலைனு போனானுங்க வந்துருவாங்க” அவர்கள் பேசும் போதே ஒன்றன்பின் ஒன்றாக இரு கார்கள் வந்து வீட்டின் முன் நின்றது நிதிஸ் கம்பீரமாக காரில் இருந்து இறங்கி உள்ள நிலையே நுழைய ராமும் அவன் பின் நுழைந்தான்.
கனியின் அக்கா முறையான பெண் ஒருத்தி தான் கனியை அழைத்து வர அவளும் பதுமை என நடந்து வந்தாள். நிதிஸ் வந்தவளை பார்த்தான்.அவன் மனதில் வலி மட்டும் எஞ்சி இருந்தது தன்னிலை இழக்கச் செய்த குறலை அடியோடு வெறுத்தான்.
கல்யாணி தனக்கும் தேவியம்மாவிற்கும் இடையில் அவளை அமர வைத்தவர் “ரொம்ப அழகா இருக்க என” தேவியம்மா அவளுக்கு நெட்டி முறிக்க கூச்சத்தில் தலைக்கு குனிந்து கொண்டாள்.
ராம் நிதிஸைப் பார்க்க நிதிஸும் வலுக்கட்டாயமாக புன்னகைத்துக் கொண்டான். “எங்களுக்கு பொண்ணப் ரொம்ப புடிச்சிருக்கு” “பொண்ணுக்கு என தேவி அம்மா கேட்க அவள் தாயைப் பார்க்க அவர்களும் பிடிச்சிருக்கு என்றனர்.
அதன் பின் திருமண பேச்சை ஆரம்பித்தனர். “கனி ஜூஸ் எடுத்துக் கொடு” என்றார் வாணி, கனியும் சமையலறையில் நுழைந்து கொண்டாள் நிதிஸை கண்டதில் ஏற்பட்ட படபடப்பு குறைய தண்ணீரை பருகி தன்னை சமநிலைப்படுத்தியவள் ஃபேஷன் ஃப்ரூட் பழத்தினால் தயாரித்த ஜூசை எடுத்து வந்து அனைவருக்கும் வழங்கினாள். நிதிஸுடம் ட்ரேயை நீட்ட அவனும் அவளைப் பார்த்தபடியே ஒரு கிளாஸ் எடுக்க ட்ரேய் நீட்டிய அவள் கரங்களோ தடதடவென நடுங்க தொடங்கியது. அவளின் படபடப்பு அவனுக்கு சிரிப்பை தரவே ஜூசை எடுத்துக் கொண்டான். அவளும் சுதர்சனுடன் சற்று தள்ளி நின்று கொண்டாள்.
” ஜூஸ் சூப்பரா இருக்கு” என தேவ் சொல்ல அதனை ஒரு மிடரு அருந்திய நிதிஸும் அதன் சுவையில் அவள் புறம் பார்வையை திருப்ப அவள் தலையை குனிந்து கொண்டாள். “தோட்டத்தில பறிச்சது தான்” என்றார் வாணி.
தேவ் பிரதாப்போ “ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு முதல் ஒரு பியூனரில் வீட்டுக்கு இந்த பகுதிக்கு வந்திருக்கேன், இந்த வீடு போலான ஞாபகம் இருக்கு அவர் கூட ஹார்ட் அடாக்ல தான் இறந்தார்” என யோசனையாகச் சொல்ல.. மேகநாதனோ “எங்கப்பத்தான் அவர்” என்றார்.
அப்போ “நாதன்” “டேய் நாதன் என்ன தெரியலையா?? “தேவா,ஆமான்டா ” இருவரும். பால்ய சினேகிதர்கள். பிளஸ் 2 படிக்கும் போது ப்ரதாப் தனது தந்தையுடன். இந்த ஊரில் தான் நான்கு, ஐந்து வருடங்கள் இருந்தார்.
“அம்மா இவன் தான் நாதன் என்றவர். பால்ய சினேகிதர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்களின் மகிழ்ச்சி பற்றி சொல்வா வேண்டும். நண்பர்கள் இருவரும் பேசியவர்கள் நேரடியாக மேரேஜை வைப்போம் என்றனர். தேவிப் பாட்டியோ “வாணி ஜோசியர வரச் சொல்லு” எனச் சொல்ல ,வாணியும் ஜோசியருக்கு அழைத்து வரச் சொல்ல அவர் என்ன சொன்னாரோ “தர்சா ஐயாவா கூட்டி வா” என்றார்.அவனும் பைக் சாவியை எடுக்க, எழுந்த நிதிஸ் ” நான் தர்சனோட போய் கூட்டிடு வாரன் என காரில் தர்சனையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
இருவரும் காரில் ஜோசியரை அழைத்து வர புறப்பட்டனர். “தர்ஷன் என்ன பண்ற ?”…”ஐடி ஃபில்ட் ஃபர்ஸ்ட் இயர்” என்றான்.”சார் நம்பபே முடியல நான் உங்க பெரிய ஃபேன் என்றான தர்ஷன். உங்கள பார்தத்னு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லணும்” என அவன் ஜாலியாய் பேசியபடி வந்தான்.நிதிஸோ” ம்ம்” “என்னோட அக்காவும் சிங்கர் தான் சிறிது நிறுத்தியவன் ஆனா அவ பாத்ரூம் சிங்கர்” என்றான் சிரித்தபடி அவனின் பேச்சில் நிதிஸுகும் சிரிப்பு தான். ஜோசியரை ஏற்றிக்கொண்டு சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தனர்.
ஜோசியரும் வாரம் மாதம் நல்ல நாள் ஒன்னு இருக்கு அதை விட்டா இனி மூணு மாதத்திற்கு பிறகு தான் என்றார் மேலும் தொடர்ந்தவர் வாரமாதம் இருபதாம் தேதி ரெண்டு பேர்ட ராசிக்கும் நல்ல நாள். நீங்க என்ன சொல்றீங்க என தேவியம்மா மேகநாதனிடம் கேட்க அவரும் மனைவியைப் பாரத்தவர் அப்போ அப்படியே செய்திடுவோம் என்றார். அனைவரும் அதனை முழுமனதாக ஏற்றுக் கொண்டனர்.
நகத்தைக் கடித்து துப்பியபடி கனி நிற்க ஏனோ அனைத்தும் துரித கதியில் நடப்பதாகவே தோன்றியது அவளுக்கு
வாணியின் சகோதரி பேச்சை தொடங்கினார் ‘பொண்ணுக்கு என்ன எதிர்பார்க்கிங்க ?”டேய் என்னடா இது “என நண்பனிடம் தேவ் கேட்க..” பொண்ண மட்டும் தாங்க என் பேரனே எல்லாத்தையும் பார்த்துப்பான் என்றார் தேவியம்மா.ஐம்பது அறுபதுகளில் கொடிகட்டி பறந்த பாடகி. சத்தியதேவி சென்னையில் இருக்க தொழில் விடயமாக குமரி வந்த சத்தியதேவியின் கணவரும் மகனும் குமரியில் தங்கினர். இரண்டு மூன்று வருடங்கள் இங்கு தான் இருநத்னர்.அப்போது உருவாகிய நட்புத் தான் மேகநாதனுக்கும் ப்ரதாப்பும் கால ஓட்டத்தின் மாற்றத்தல் அவரவர் திசையில் பயணிக்க இதோ பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்டனர்.
தேவியம்மாவின் பேச்சில் மேகநாதனும் வாணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.”நிதிஸ் மலர் கூட பேசுறதுன்னா பேசிக்கோ நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்” என்றார் பாட்டி. பேரனை சீண்டும் பொருட்டு, கனியோ படபடப்பாய் நிதிஸை நிமிர்ந்து பார்க்க, நாங்க ஃபோன்ல பேசிக் கொள்றம் என்றான் கனியைப் பார்த்தபடி. அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினர் தேவ் குடும்பத்தினர்.
கனிக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி அது அவளின் முகத்திலும் பிரதிபலித்தது.கனியும் ஹாஸ்டலை விட்டு வீட்டிற்கு வந்து விட்டாள் வேலையும் ஆன்லைனில் செய்யத் தொடங்கி விட்டாள்.
நிதிஸும் ஹனி வாய்ஸை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக புதிய வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டு இருந்தான். நாட்களும் அதன் பாட்டில் செல்ல திருமண வேலைகளும் தடல்புடலாக நடந்தது கொண்டிருந்தது. நிதிஸும் ஸ்டூடியோவில் பெண்டிங்கில் இருந்த வேலைகளை முடித்து கொடுத்துக் கொண்டிருந்தான்.
“கனி நாளைக்கு டிரஸ் எடுக்க போலாம்” என்ற தாயின் பேச்சில் நிதிஸ் பெண் பார்த்து போனதிலிருந்து பேசவில்லை அதற்கிடையே மேகநாதன் ஸ்பெஷலிஸ்டிடம் கனியை அழைத்துச் சென்று மருந்தும் எடுத்துக் கொண்டனர்.மருத்துவரும் அவரும் ஒரு வகை ஆயிலை தொண்டையில் பூசுவதற்கு கொடுத்தார் தொண்டையில் ஏற்பட்ட வலி முற்றும் முழுதாக குறைந்தது ஸ்பீச் திரவி செய்து பார்க்கலாம் என முடிவெடுத்திருந்தனர்.
சூரியனும் தன் பொற்பாதங்களை பரப்பி பூமி அனைத்துக் கொண்டது அக் காலைப் பொழுதில் கனியும் எழுந்து குளித்து பர்பிள் வெள்ளை சேர்ந்த சுடிதார் அணிந்து தயாராகினால் மேகநாதனும் வாணியுடன் சென்னையில் பிரபலமான ஷாப்பிங் மாலிற்குச் சென்றனர்.
அழகிய தங்க நிற சேலையும் அதே நேரத்திற்கு பொருத்தமாக நிதிஸுக்கு குர்தாகும் தங்களுக்கும் தங்களது சில உறவினர்களுக்கு உடைகளை எடுத்தனர்.” கண்ணா, என்னம்மா கனியோடு பேசினியா?” ரெஸ் எடுக்க சென்னைக்கு வாரனு வாணி சொன்னா என கல்யாணி கேட்க, என்னத்தை சொல்வான் நிதிஸ் ராமிடம் இருந்து கனியின் அலைபேசி இலக்கத்தை வேண்டியதோடு சரி அவளோடு பேசவில்லை.
“ஆமாம்மா பேசினேன்” என்ன அப்போதைக்கு சமாளித்துக் கொண்டான். தனதறைக்கு வந்தவன். கனியின் அலைபேசிக்கு குருஞ் செய்தி அனுப்பினான்.
“ஹாய் ஹனி ஐ நிதிஸ் என அனுப்பினான். ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவள் . அலைபேசி சத்தத்தில் அலைபேசியை எடுத்துப் பார்க்க நிதிஸுடம் இருந்து குறுஞ்செய்தி அதை எதிர்பாரதவள். மகிழ்ச்சியில் மறு நொடியே “ஹாய்”என அவளும் பதில் அனுப்பினாள் அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை விடலைப் பையன் போல் தன்னை நினைத்தே சிரித்தவன். ” ஹவ் ஆர் யூ” என அடுத்த மெசேஜ் அவளும்.”ஐம் குட்”
” நீங்க?”
“ம்ம்” டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா?”
“தாங்கள் எடுத்து ஆடைகளின் போட்டோவை அனுப்பினார் “குட் செலக்சன் என அவனிடம் இருந்து பதில் வந்தது.
“இப்போ எங்க”
“ஷாபிங் மால்ல தான்”
“அப்போ வீட்ட வாங்க” ஈன அவன் அனுப்ப அவனின் இயல்பான பேச்சு பிடித்துப் போகவே…”இல்ல அப்புறம் வாறம்,இனி வீட்ட போகத் தான்”.
என்னால நினைச்ச இடத்துக்கு உடனே வர முடியாது. ஹாட்ஸ் அரேஞ்ச் பண்ணித் தான் வரனும் சாரி” என்றான்.
அவளோ” இட்ஸ் ஓகே” என பதிலனுப்ப “ஓகே பாய், டேக் கேர், என அவனும் பதிலனுப்பினான்.
தன்னை நினைத்தே ஆச்சரியமாக உணர்ந்தவன்.ஃபோனுடன் சிரித்தபடி வரும் மகனைக் கணட் தேவ்வோ ” மை சன் என்ன பேஸ் பிரைட்டா இருக்கு,இப்போ தான் கல்யாணக் கலையே வந்திருக்கு என சீண்ட ” ஓஓஓ டாட என்றவன் கார் கீயை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
கனியும் ஷாப்பிங் மாலில் இருந்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு தாய், தந்தையுடன் திரும்பினாள்.