காதலே -16
“ஹாஸ்பிடல் போலாம் ரெடியாகு” என்றான்.அவளும் சம்மதமாக தலையாட்டியவள் தயாராகி வர கல்யாணியிடம் சொல்லிக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பினர்.இதோ வைத்தியரின் முன் அமர்ந்திருந்தனர். அவளது ரிப்போர்ட்டை பார்த்தவர் மேலும் சில டெஸ்ட்களை எடுத்ததும்,இப்போ பெயின் இருக்காமா?” எனக் கேட்க,அவளும் ‘இல்லை’ எனத் தலையாட்ட “ஓகே நீங்க ஸ்பீச் தெரபிய தொடர்ந்து செய்ங்க என்றார்.
இருவரும் வைத்தியரின் அறிவுரைகளை கேட்டுக்கொண்டு அவருக்கு நன்றியை தெரிவித்து ஹாஸ்பிடலை விட்டு வெளியே வர நேரமோ ஏழு எனக் காட்டியது ராமிற்க்கு அழைப்பினை நிதிஸ் “எங்கருக்க”…..”தாரா கூட வெளியே வந்தேன் டா”…” சரி சரி” என அழைப்பினைத் துண்டித்தான் நிதிஸ் “வெளிய சாப்பிட்டு போலாம்” என அவளை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் அவன் அழைத்துச் செல்லும் இடங்களோ விஐபிகளுக்கானது தனது பிரைவேசி ரசிகர்களால் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.
ராம் தயங்கினியும் ஷாப்பிங் மாலினுள் நுழைந்தனர். இருவரும் ஒரு ஷாப்பினுள் நுழைந்துவள் “ராம் இந்த கலர் நல்லா இருக்கா?” என அவனிடம் கேட்கும் போது “தாராக்கா” எனும் சத்தத்தில் தரங்கிணி திரும்ப அங்கு சகானாவும் அவளது கணவனும் நின்றிருந்தனர். எவ்வளோ நாளாச்சு பார்த்து என்றாள் தரங்கிணி. எப்படி இருக்க ,நான் நல்லா இருக்கன் நீங்க எப்படி இருக்கீங்க?? நானும் நல்லா இருக்கன் என்றாள் சகானாவின் கணவர் மென் சிரிப்புடன் இருவரையும் நோக்க, தரங்கிணி அருகில் நின்ற ராமை கண்டவள் ” அக்கா நிதிஸ் சார் தம்பி தானே” என மெதுவா கேட்க ராமும் சிரித்தபடி நிதிஸ் சாரோட தம்பியே தான் என்றான். “கனி எப்படி இருக்கா ரொம்ப நாளாச்சு கன்வகேசன்ல பார்த்தது. ஹால் பண்ணாலும் ஆன்சர் பண்றா இல்ல” என்றாள். “அவளால பேச முடியாதே”, என்றாள் தரங்கிணி இன்னும் ஓகேவாகலையா??? ஆமாண்டா ஆக்சிடென்ட் ஆனதால அவளாள பேச முடியாம போயிட்டு இப்போ ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கா என ராம், என்றவள் ராமையும் உள்ள இழுத்துக் கொண்டாள்
“அக்கா அவளுக்கு செம வாய்ஸ் என்னோட வெட்டிங்ல கூட அவதான் பாடினா என்றாள், ஓஓஓ குரூப்ல போட்ட வீடியோவா ஆமாக்கா அதுவரை சகானாவின் கணவுருடன் தொழில் பற்றி பேசிக்கொண்டிருந்த ராமை அழைத்த தரங்கிணி “ராம் கனியை முதல் எங்கே பார்த்தனு சொன்னேனே சகானாட வெட்டிங் சாங் வீடியோ பாத்தேன் இப்போதான் ஞாபகம் வருது” என்றாள்.
சகானா கூட பேசியவர்கள் அவர்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பினர்,பின் உடைகளை எடுத்துக் கொண்டு இருவரும் ஃபுட் கோர்ட்டுக்கு வந்தனர் போனில் எதையோ தேடிய தரங்கிணி இதோ என ராமிற்கு சகனாவின் திருமணத்தில் கனி பாடிய வீடியோவை காட்ட ராமிடம் ஒரு பெருமூச்சு “இத எனக்கு
அனுப்பு” என அவன் சொல்ல அவளுக்கு அவனுக்கு அவ் வீடியோவை வாட்சாப்பில் அனுப்பினாள், இருவரும் ஆடர் செய்த உணவை உண்டதும் ஷாப்பிங் மாலில் இருந்து கிளம்பினர்.
ராம் ஏதோ யோசனையில் இருக்க,தரங்கிணி தான் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தாள் அவளை அவளது வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டிற்கு கிளம்பினான்.
‘யார்ட்ட மியூசிக் குரூப்பினு தானே கேட்டனான், அந்த சாங்க சொல்லி கேட்டு இருக்கலாம் அதனாலான் அப்படி சொல்லி இருக்க போல”, ‘ஓஓஓ சிட் ப்ரோ எப்பவோ முடிக்க வேண்டிய பிரச்சனை என தனக்குள் எண்ணியவன்’ நேரஞ்சென்றே வீட்டிற்கு வந்தான்.
அனைவரும் தூங்கி இருப்பார்கள் போலும் வீடு இருளில் மூழ்கி இருந்தது. ராமு அசதியில் தூங்கி விட்டான். அடுத்த நாள் விடுமுறை என்பதால் கனி சற்றுத் தாமதமாகவே எழுந்திருந்தாள் நிதிஸ் தூங்குமிடம் காலியாக இருந்தது. நேரத்தை பார்க்க அதுவோ ஏழு முப்பது எனக் காட்டியது காலை கடனை முடித்துக்கொண்டு குளித்து வெளியே வர நிதிஸ் வீட்டில் இருப்பதாக தெரியவில்லை. “வாடாமா அவளும் புன்னகையுடன் வர கல்யாணியும் காபி சாப்பிடுறியா என்றவர் அவளுக்கு காஃபி கப்பைக் கொடுக்க அவளும் அதனைப் பெற்று அருந்த தொடங்கினாள்
” அம்மா குட் மார்னிங், பியூட்டி குட் மார்னிங் இந்த பாட்டியுடன் தணகிக் கொண்டு அவ்விடம் வந்தவதமர்ந்தான் ராம்.
கனியும் அங்கு தான் இருந்தாள். அப்போது சகானாவை சந்தித்தது தரங்கிணி காட்டிய வீடியோ ஞாபகம் வந்தது.
“கனி “என அவளை அழைக்க அவளும் அவளை நிமிர்ந்து பார்க்க “உன் பிரெண்ட்ட நேற்று மீட் பண்ணம்” ” யாரு ?” என அவள் சைகையில் கேட்க சகனாவ தான் என்றான். தாராட சொந்தமா அவங்க அவளும் ஆம் என தலையாட்டினாள். “மண்டே சப்மிட் பண்ற வெர்க் பற்றி கொஞ்சம் தெரியனும் என அவள் ” சைய்கையில் கேட்க, “அவன புரியல” என்றான் அவனது அலைபேசியை காட்டி அவள் கேட்க அவனும் கொடுக்க அதில் டைப் செய்து காட்ட “ஓகே ஓகே பேசலாம்” என்றான்.
காஃபி கப்பை வைத்தவள் தனது அறைக்குச் சென்று லேப்டாப்பையும் தனது அலை பேசியையும் எடித்துக் கொண்டு வந்தாள்
அலைபேசியில் “ஆபீஸ் போயிட்டு வரேன்” என நிதிசிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது அவளும் புன்னகையுடன் “ஓகே” என பதில் அளித்துவிட்டு ஹாலிற்க்கு வர ராம் அங்கு தான் அவர் இருந்தான்.
கடைசியாக செய்த ப்ரொஜெக்ட் பற்றிய கேள்விகளை கேட்க “ஓகே மா எல்லாருடையதும் சேர்த்து மண்டே மீட்டிங்ல பேசுவோம்” என்றான் அவளும் சம்மதமாக தலையாட்டினாள்.
அவனோ அவளது லேப்டாப்பை கையில் வாங்கியவன் இதுவரை அவள் செய்த வேலைகளை பார்க்கத் தொடங்க, கனியோ அலைபேசியைப் பார்க்க தொடங்கினாள்.அப்போது அவள் லேப்டாப்பில் நோட்டிபிகேஷன் வரஅதை கிளிக் செய்து உள்ளே நுழைய அவளது யூடுபினுள் அது சென்றது. அனைத்தையும் ஆராய்ந்தவன் பார்வை அவளில் மெச்சுதலாகவே படிந்தது. அதில் புதிதாக பதிவேற்றிய பாடலும் இடம்பெற்றிருந்தது.
அனைத்தையும் பார்த்தவன் ஒரு உயிர் மூச்சுடன் லேப்டாப்பை ஆப் செய்து ‘கனி மண்டே பாப்போம்” என்றான் அவளும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அறையினுள நுழைந்தாள். கனியும் ஸ்பீச் தெரபிக்கு சென்று கொண்டு தான் உள்ளாள். ..
அன்று சற்று தாமதமாகவே வீட்டிற்க்கு வந்தான் நிதிஸ் அவனுக்காக காத்திருந்த கனியை கண்டவன் தூங்கி இருக்கலாமே என டவலை எடுத்துக்கொண்டு குளியலறை நுழைந்தவன் சிறிது நேரத்தில் குளித்து இரவு உடையில் வர “சாப்பாடு” என அவள் எடுத்து வைக்கச் செல்ல, அவன் முகமோ அப்பட்டமாக சோர்வைக் காட்டியது.
அவளோ சைகையில் கேட்க, “ஓகே” என்றான் அதில் அவன் குரல் எல்லாம் மாறியிருக்க, இதோடயா ஒரக்ஷரெக்கார்டிங் முடிச்சிங்க என அதிர்ந்து சைகையில் கேட்க அவனும் எதுவும் சொல்லவில்லை அவன் இமைகள் கூட தடித்து சிவந்திருப்பதை பார்த்தவள் சந்தேகமாக அவனை நிறுத்தி அவனுடைய நெற்றியில் கைவைத்து பார்த்தாள் அவனை உச்சி முதல் பாதம் வரை ஸ்கேன் செய்து கொண்டே இருக்க “ஐ அம் ஓகே” என நெற்றியில் இருந்த அவள் கையை விலக்கியவன்.
” கொஞ்சம் சோகமான லவ் ஃபெயிலியர் சாங் ரெக்கார்ட் பண்ணும் அதுக்கு தான் எமோஷன்ஸ் எல்லாம் வாய்ஸ்ல வர வைக்கணும் அதான் இப்படிப்படி இருக்கு” என்றான்.
‘அவள் லவ் ஃபெயிலியர் சாங்கா? அப்போ அவர்ட லவ்வர்ட ஞாபகம் வந்திருக்கும் போல அதான் டிஸ்டர்பா இருக்கார் போல என தனக்குள் எண்ணினாள்.”நான் சாப்பிட்டன் நீ சாப்டியா,? அவளும் “ஆமென” தலையாட்ட “தூங்கினா ஓகே ஆயிடும் என்றவன்” மஞ்சத்தில் சரிந்து கொண்டான்.
அவனுக்கு அப் பாடலை ரெக்கார்ட் செய்யும் போது ஹனிவாய்ஸுன் ஞாபகம் எழாமல் இல்லை. அடுத்த நாள் நிதிஸோடா தனது வீட்டிற்கு வந்தவள்…அன்று அங்கு தங்கி அடுத்த நாள் தான் புகுந்த வீட்டிற்குச் சென்றனர்.
மறுநாள் நேரத்துக்கு தயாராகி நின்றவளைப் பார்த்த நிதிஸ் புருவம் சுருக்க “ஆபீஸ் போகணும் மீட்டிங்” என்றாள் சைகையில், “ஓகே வா ட்ராப் பண்றன்” என அவளையும் அழைத்துச் சென்றவன் அலுவலகத்தில் அவளை இறக்கிவிட்டு சென்றான்.
ஆன்லைனில் வீட்டில் இருந்து வேலை செய்பவள் மீட்டிங்கின் போ,அல்லது முக்கியமாக செல்ல வேண்டிய ஏற்படின் மாத்திரம் ஆபீஸ் செல்வாள் அன்றும் அப்படித்தான் அலுவலகத்திற்கு வந்தவள் மோனிகாவுடன் இணைந்து கொண்டாள் மீட்டிங் முடிவடைந்ததும் வீட்டிற்கு போவோம் ம் என எண்ணும்போது நிதிஸுடமிருந்து குறுஞ்செய்தி “கனி ரெண்டு நாள் லீவுக்கு அப்ளை பண்ணி” என்று “எதுக்கு” என அவளும் பதில் அனுப்ப அவனிடமிருந்து பதில் இல்லை..
சகானாவிற்கு அழைத்தவள் எங்க இருக்க,அவளும் பதிலனுப்ப “மீட் பண்ணலாம் டி” என்றாள் கனி அவளும் அருகில் இருந்த காபி ஷாப்பிற்க்கு வருவதாக கூற கனியும் அங்கு சென்றாள்.சகானாவோ எதுவுமே பேசாது அவளை முறைக்க “சாரிப்பா “என்றாள் கனியும் அனைத்தையும் கூகிள் ஸ்பீச் மூலம் டைப் செய்து சகானாவுடன் பேசினாள் தோழியை நினைத்து கவலை கொண்டது அவள் மனது
” ஹேய் நிதிஸ் சார் லவ் பண்ணத சொல்லிட்டியா?” கனியும் “இல்லை” என தலையாட்ட ஏண்டி “ஆயிரம் ரசிகர்கள் நானும் ஒரு ஆள் என்றாள் அலைபேசியில டைப் செய்து காட்டினாள் சிரித்தபடி, காபியும் வர இருவரும் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர். “தர்ஷா ஃப்ரீயா இல்ல, “என்னடி” …”வீட்டை போகத்தான் ஆபீஸ் வந்தேன்…..” “மேட்சுக்கு வந்தன் இன்னும் முடியலடி” என்றான். அவனுடன் குறுஞ்செய்தியில் பேசியபடி பஸ் ஸ்டாண்டுக்கு வர சிறிது நேரத்தில் அவள் முன் வந்து நின்றது நிதிஸுன் கார் அவனும் முன் கதவை திறந்து விட அவளும் காரில் ஏறிய அமர காரும் புறப்பட்டது.
” வீட்ட போறேன்னா கால் பண்ணிருக்கலாமே தானே, தர்ஷன் கால் பண்றான், என்ன நினைச்சிட்டு இருக்க பேச முடியாட்டியும் மெசேஜ் ஆவது பண்ணி இருக்கலாம் “என அவளுக்கு திட்ட
நிதிஸ் இப்படி திட்டுவான் என எதிர்பாக்காதவளுக்கோ கண்கள் கூட கலங்கிப் போனது “என்ன சொன்னாலும் கேக்குறல்லனு இருக்கியா?” நான் உன்ன ஹெயார் பண்ணுறலனு தானே நினைப்பாங்க எல்லாரும்” “எல்லாம் இந்தப் பாட்டியச் சொல்லனும்”, ஆம் அவர்தானே முதலில் கனியை தெரிவு செய்தவர், “எப்படி உன் கூட கம்யூனிகேட் பண்ற என்நேரமும் போஃனோட திரியலாமா?, நாலு இடத்துக்கு போனாலும், பேசாம இருக்கப் போற, எப்படி உன்னை அழைச்சிட்டு போற” என அவளுக்கு சற்று கோபமாகவே பேசி விட்டான் நிதிஸ். அவளோ தர்சனிடம் வீட்டிற்கு செல்லக் கேட்க,தர்சனும் தன்னால் வரமுடியாது என்பதால். நிதிஸுற்கு அழைத்து சொல்லியிருந்தான். தனக்கு அழைத்து வர சொல்லியிருக்கலாம் அதானே எனும் கோபம் அவனுக்கு தர்சன் மற்றும் அவளது குடும்பத்தார் என்ன நினைப்பார்கள் தான் கனியை கவனிப்பதில்லை என்றல்லவா? என அனைத்துக் கோபமும் அவளில் திரும்பியது. அவளோ அலுவலகத்தில் இல்லை , பஸ் ஸ்டாண்டில் நிற்க அந்த கோபத்தில் அவளிடம் சற்று அதிகமாகவே பேசி விட்டான்.
தனது லேப்டாப் பேக்கினை நெஞ்சோடு அனைத்துப் படித்தவளின் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. அழும் அவளிடம் இருந்து ஒரு கேவல் சத்தம் வரவே தன்னிலையடைந்தவன் , “சிட்” என தன் தலையில் தட்டியவன் அவள் புறம் திரும்ப அவளோ நிதிஸ் புறம் திரும்பவேயில்லை உதடுகள் துடிக்க, அழுபவளை எப்படி தேற்றுவது என்றே புரியவில்லை அவனுக்கு.