காதலே-17
ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் முடிந்ததும் அனைவரும் ஓய்வுடன் இருக்கும் போது நிதிஸ் இருக்குமிடம் வந்த வித்தியா “எப்படி இருக்கீங்க சார்?” அவனும் “பைன்..”…..” யூ?” “நானும் நல்லா இருக்கேன் சார்”, உங்க வைப் எப்படி இருக்காங்க?” “அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க,” “அவங்களால பேச முடியாதாமே, அதனால தான் அவங்கள நீங்க எங்கயும் அழைச்சிட்டு போகாம இருக்கீங்களா??? ஆபீஸ்ல பேசிக்கிட்டாங்க” என்றாள்.
” எப்படி சார் இப்படி ஒரு பொண்ணு செலக்ட் பண்ணிங்க,உங்க லெவல் என்ன, அவள் எல்லாத்துக்கும் ஒரே சவுண்ட் தான் கொடுக்க முடியும்” என்றாள் நக்கலாக என்னோட லவ் அச்சப்ட் பண்ணி இருக்கலாமே இப்படி ஒருத்தியை கட்டி என்னத்தை கண்டீங்க” என அவள் பாட்டுக்கு கனியை பற்றி பேச “செட் அப் வித்தியா, கெட் அவுட் ஃப்ரம் ஹியர்” என்றான் சத்தமாக அனைவரும் அவர்களையே பார்க்க “நீங்க சத்தம் போட்டாலும் அதான் உண்மை” என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்.
அப்போதுதான் சுதர்சனிடம் இருந்து அழைப்பு வந்தது “அத்தான் சாரி டிஸ்டர்ப் பண்றதுக்கு, அக்கா ஆபீஸ்ல நிக்கா, நான் மேட்ச்க்கு வந்துட்டேன். அவளை பிக்கப் பண்ண முடியுமா? எனக் கேட்க வித்யா பேசியது, கனி சொல்லாது, சுதர்சன் அழைத்தது என எல்லாத்தையும் சேர்த்து கனியை திட்ட இதோ அவள் நிதிஸுன் பேச்சில் வேதனை கொண்டாள்.
“கனி சாரி ஒரு கோபத்துல பேசிட்டேன்” என்றான் அவளோ கையை பாதையை நோக்கி செல்வோம் என காட்ட அவனும் எதுவும் பேசாது காரைக் கிளப்பினான். வீடு நெருங்க கண்களை துடைத்தவள் காரில் இருந்து இறங்கி வீட்டில் நுழைந்தாள், வீட்டினுள் நுழையை எதிர்கொண்ட பாட்டிய கனியிடம் “ஆபீஸ்
எப்படி போச்சு?” அவளும் பெருவிரலை காட்டி “சூப்பர்” என்றாள் .அவள் பின்னே காரை பார்க் பண்ணி விட்டு நிதிஸும் வர “கீதா காஃபி கொண்டு வா” என்றார் தேவி பாட்டி வேலைக்காரப் பெண்ணிடம்.
அவளும் இரு காபி கப்புடன் வந்தவள் நிதிஸுக்கும் கனிக்கும் கொடுக்க இருவரும் காஃபியை எடுத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்தனர்.
கலங்கும் கண்களை இமை சிமிட்டி சரி செய்து கொண்டுடாள்.நிதிஸ் எப்போ கன்சல்ட் போற?”…” நாளைக்கு காலையில பாட்டி, வாரீங்களா?” இல்லப்பா நான் டிவியிலேயே “பார்த்துக்கிறேன் கிளைமேட் ஒத்து வராது”என்றார்.
“பாட்டி ப்ரஸாயிட்டு வரேன் என காஃபிக் கப்பை கொடுத்துவிட்டு தங்களது அறைக்குள் நுழைய கனியும் பாட்டியிடம் தலையாட்டி விட்டு அறையினுள் நுழைந்து கொண்டாள். அவள் கையை எட்டிப் பிடித்த நிதிஸ் “கனி” என்றான். அவனையும் அவன் கையையும் பார்த்தவள் அவனை கலங்கிய கண்ணோடு நிமிர்ந்து பார்க்க எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் கனியின் முகம் பொலிவிழந்து இருப்பதை கண்டவன் தன்னையே நொந்து கொண்டான்.
“ரியலி சாரிமா கோவத்துல பேசிட்டேன் என்றான்.தனது கையை அவன் கையில் இருந்து உருவியவள் எட்டி அலைபேசியை எடுத்து அதில் கூகிள் ஸ்பீச்சில் “சரியாத்தான் சார் சொல்லி இருக்கீங்க என்னால பேச முடிஞ்சிருந்தா என் லைஃப் வேற போல இருந்திருக்கும், உங்க ஃபேண்ஸ்ல நானும் ஒருத்தி உஙக்ளப் புடிச்சி தாஅ கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்,இருந்தும் எவ்வளோ தயங்கினேன், இந்த ப்ராப்ளம் இடைல வந்தது சரியாகிடும்னு நம்பினன். பட் விதி வேற போல மாத்திட்டு என்றாள்விழிகளில் கண்ணீர் வழிய
உங்க கூட எங்கேயும் வந்து உங்க ப்ரஷ்டியஸ ஸ்பாயில் பண்ண மாட்டேன்” என அலைபேசி பெண் குரல் ஒலித்தது.” என்னோட தகுதியை தெரிய வச்சத்துக்கு தேங்க்ஸ் சார்” என மீண்டும் அலைபேசி வழியாக தான் பேச நினைத்ததை பேசியவள் அலைபேசியை கட்டில் வைத்துவிட்டு குளியலறையினுள் நுழைந்து கொண்டாள்.
நிதிசஸுக்கு தான் பேசியது அவளை எவ்வளவு தூரம் கவலை கொள்ள வைத்துள்ளது என புரிந்தது. அவனுக்கு மனமே ஆறவில்லை அவள் வரும் அரவம் கேட்க, நிதிஸ் பால்கனிக்கு சென்று விட்டான்,அவளை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை கனியும் பால்கனியில் நின்றவனை பார்த்தவள் கீழ இறங்கி சென்றாள்.
இரவு உணவு முடிய அறைக்குள் வந்தவளையே நிதீஸுன் பார்வை தொடர லேப்டாப்புடன் அறையில் இருந்த சோபாவில் அமர்ந்துது விட்டாள்.
” கனி” என நிதிஸ் அழைக்க நாளைக்கு கன்சர்ன்ட் போகணும் என்றான் அவளும் “வாழ்த்துக்கள் என சைகை செய்தவள் லேப்டாப் மூழ்கிப் போனாள்.
“வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்… உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்… பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்…ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்… ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்…
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…மனிதரின் மொழிகள் தேவையில்லை… இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…மனிதர்க்கு மொழியே தேவையில்லை…
என பாடலின் வரிகளைத் தொடர்ந்து “காதல் கனவுகள் தொடரும்” என அதில் பதிவிட்டு பதிவேற்றம் செய்திருந்தாள்.
ராமோ அவளின் புதிய பாடலின் லிங்கினை நிதிஸுற்கு செயார் பண்ணி இருந்தான்.
ராமிடருந்து ஆடியோ லிங்க் அனுப்பியிருப்பதைக் பார்த்தவன் , அடிக்கடி அவன் ஏதும் இப்படி அனுப்புவதால் அதனை கவனிக்காது பெருமூச்சுடன் ஃபோனை வைத்துவிட்டு தூங்கிப் போனான்.
கனியும் ஒருவித கவலையுடன் தான் தூங்கிப் போனாள் மறுநாள் காலையில் குளித்து கீழே செல்ல முற்படும்போது “கனி நைட் கன்சன்ட் மின்னொளி ஸ்டேடியம்ல இருக்கு வரியா?” என நிதிஸ் கேட்க,” இல்லை” என தலையாட்டினாள். நிதிஸ்க்கோ தான் பேசியது அதிகப்படி என்பதை உணர்த்தவன் அவள் உணர்வுக்கு மதிப்பளித்து கிளம்பி விட்டான்.
வீட்டில் தாயுடன் தந்தையுடனும் குறுஞ்செய்தி மூலம் பேசியவள் நிதிஸுன் கன்சன்ட் பற்றியும் சொன்னாள், ராமும் தரங்கிணியும் மியூசிக் கன்சட்டுக்கு அன்று இரவு கிளம்பினர்.
கல்யாணி, தேவிப் பாட்டி பிரதாப், கனி தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்தனர். நிகழ்வும் ஆரம்பமாகியது அறிவிப்பாளரும் நிகழ்ச்சி ஆரம்பித்து வைத்தார். பல பாடகர்கள் பாடி செல்ல “இதோ நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பாடகன் நிதிஸ் சரண் என அழைக்க நிதிஷ் மேடை ஏறியதுதான் தாமதம் கரகோஷம் வானைப் பிளந்தது.
மைக்கை கையில் பிடித்தவன் “ஹலோ மை டியர் கேர்ள்ஸ், அண்ட் பாய்ஸ் என்றதும் அவனது ரசிகர்களும் ஆரவாரித்து உற்சாகமூட்டினர். நேர்த்தியாக ஜெல் வைத்து வாரிய தலை வெள்ளை நிற உடையில் தனது தோற்றத்தின் மேல் அத்தனை அக்கறை கொண்டிருப்பான் போலும் பார்த்து பார்த்து தயாராகி இருந்தான்.
” பாடல் வரியின் ஒரு பகுதி: “மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமை போல நாங்காக கனவை நீ மடிடு மயில்தோகை போல விரல் உன்னை வருடும்” எனும் பாடலை அவன் குரலில் கேட்க அது கல் மனதையும் கரைத்து விடும் அவ்வளவு இனிமையாக இருநத்து பாடல் முடிவடைய மீண்டும் விசில்ச் சத்தம்.
“என்ஜாய்” என்றவன் மேடையை விட்டு கீழ் இறங்கிக் கொண்டான்.
அப்பாடலை தேன் குரலில் முன்பு கேட்டது ஞாபகம் அடுக்கில் அவனும் காறில் ஏற அவனது ரசிகர் கூட்டம் காரை சுற்றிக் கொண்டனர். பாதுகாவலர்களும் காரைச் சுற்றிய ரசிகர்களை நெருங்க வக்ஷ விடாது நின்றனர்.
ராம் தான் காரை ஓட்டினான் நிதிஸ் சரனோ தனது ரசிகர்களையே தான் வெறித்தபடி இருந்தான். இந்த ஜனத்திரளினுள் தேன்குரலும் இருக்கும் அல்லவா காரும் மெல்ல முன்னேற “?”நிதிஸ் ஆர் யூ?” “ம்ம் ஹனி வாய்ஸ் ஞாபகம்” என்றான்.
ராமிற்கோ சொல்லவும் முடியாத நிலை ‘கனிமலர் சரியாகட்டும்’ என்று அவனும் நினைத்திருந்தான். “தரங்கிணி எங்க அவ பிரெண்ட்ஸ் கூட இருக்கா “என்றான்.” ம்ம்” என்றவன் அதன் பின் எதுவும் பேசவில்லை வீட்டிற்கு வரத்தான் கனியின் ஞாபகம் ஹாலில் அனைவரும் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்படியே இரு நாள் சென்று இருக்கும் அன்று இரவு உணவின் போது “வெர்க் கொஞ்சம் குறைஞ்சிருக்கு சோ ஹனிமூன் போலாம்னு ரெண்டு பேரும் டிசைட் பண்ணிருக்கோம்” என்றான் நிதிஸ்.
ராம் யோசனையை நிதிஸைப் பார்க்க,, கனியோஅதிர்ச்சியா நிதிஸை நோக்க இவ்வளவு நாள் ஏதோ சோகமாய் கவலையில் இருந்த அவளின் முகமோ இன்று அதிர்ச்சியை காட்ட வந்த சிரிப்பை அடக்கிய நிதிஸ் “போய்ட்டு வாங்க நாங்க பாத்துக்குறோம்” என்றார் பிரதாப் .எந்த இடம் போக என்ன கல்யாணி கேட்க “ஊட்டி சைட் தான்மா பிளான் நாளைக்கு மார்னிங் கிளம்புவோம் என்றான் தம்பியிடம் “என்னடா லீவு தருவ தானே” கனியோ நிதிஸை முறைக்க, அதெல்லாம் “ஓகே ஓகே” என்றான் ராம் சிரித்த படி
கனி டிரஸ் எல்லாம் ரெடி பண்ணனும் என்ன அவளை அழைத்துச் செல்ல அவ்ளோ அவன் பின்னே அறையினுள் நுழைந்தவள் நான் வரல என்றாள் சைகையில், “ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்குப்பா ஒரே வெர்க் பிசி அதான் போலாம்னு என்றான் இப்படி சொல்பவனிடம் என்ன சொல்வது “ஓகே” என தலையசைத்தாள் இரு மனதாக.
‘அதுக்காக எல்லார் முன்னாடியும் இப்படி தானா சொல்லனும் வேற ஏதும் ரீசன் சொல்லிருக்கலாம்’.என்ன நினைப்பாங்க என அவளால அமனதிவ் மட்டுமே புலம்ப முடிந்தது
அடுத்த நாள் காலையில் தாய்க்கும் தந்தைக்கும் தான் ஊட்டி செல்வதை தெரிவித்தவள் நிதிஸுடன் பயணமானாள்.
டிரைவரை தவிர்த்த நிதிஸ் காரை ஒட்டி வந்தான்.தேன்குரலை தவிர்த்து கனியுடன் நேரம் செலவிட்டால் மனம் மாறும் என்று எண்ணியே இப்ப பயணத்தை தொடங்கினான்.
நீண்ட பயணத்தில் கனியும் வெளியே பார்த்துக் கொண்டு வந்தவள் ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டாள் நிதிஸும் காரை ஓட்டியவன் இடையில் ஒரு ஹோட்டலில் உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்
ஒரு வழியாக ஊட்டியை அடைந்த்தும். தங்கள் புக் செய்த ஹோட்டலில் வந்தனர். கனி என அவளை எழுப்ப, எழுந்தவள் சிற்றிமுற்றிப் பார்க்க “இறங்கலாம்” என்றான்.
அவளை ஒரு கையிலும் அவர்களது பேக்கை மரறுகையிலும் பிடித்தபடி ஹோட்டலில் நுழைந்தான் தாங்கள் ஏற்கனவே புக் செய்திருப்பதால் ரிசப்ஷனில் சாவியை வாங்கிக் கொண்டு அறைக்கு வந்தனர்.பயணக் களைப்பினால் ரூமிற்கே உணவை வரவழைத்தவன் அலுப்புத் தீர குளித்துக் கொண்டு இடையில் டவலுடன் வர அவன் வந்த கோலத்தைக் கண்ட கனியோ தலையைக் குனிந்தபடி குளியல் அறையில் நுழைந்து கொண்டாள்.
அவள் தலையை குனிந்து செல்வதை ஒரு மார்க்கமாய் பார்த்தவனோ எதுவுமே பேசவில்லை குளியலறை நுழைந்தவள் ஐயோ ஐயோ என தலையை தட்டியவள், அவன் அழைத்த பின் தாஅ அவளும் குளித்து வர உணவு வந்தது. சற்று நேரம் இருவரும் ஓய்வெடுத்தவர்கள் வெளியே சுற்றக் கிளம்பினர்.
அவளும் நீள ஸ்கேட் ப்ளவுஸ் கழுத்தை சுற்றி ஸ்கார்ப்பு அணிந்து தயாராகி வர அவனும் தயாராகியிருந்தான் அவளிடம் மாஸ் ஒன்றைக் கொடுத்தவன் தானும் ஒன்றை அணிந்து கொண்டான் இருவரும் ஊர் சுற்றத் தொடங்கினர்
கனியும் நிதிஸ் மேலான கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை காதல் கொண்ட மனம் அல்லவா அடுத்த நாள் காலையில் அறையில் தலைவாரிக் கொண்டவளை அழைத்த நிதிஸ் அவளும் கண்ணாடியூடு அவனை பார்க்க “பொட்டானிக்கல் கார்டின் போலாம்” என்றான் அவளும் “சரி” என தலையாட்டினாள்.
ஃப்ளோரல் டிசைனினாலான ப்ராக்கை அணிந்து தயாராகினாள் நிதிஸும் நீல நிற ஜீன்ஸ் வெள்ளை நிற ஷர்ட் என தயாராகினான் இருவரும் பொட்டானிக்கல் கார்டின் நோ க்கிச் சென்றனர்.
கார்டினை அடைந்ததும் அப்பிரதேசத்தில் குளிர் சற்று அதிகமாக இருந்தது.கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்தபடி அவள் வர, நிதிஸ் புன்னகையுடனேயே வந்தான். பல வண்ண மலர்கள் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்தது. கனியும் மலர்களோடு மலர்களாக புகைப்படம் எடுக்க அவளின் மகிழ்ச்சி நிதிஸையும் தொற்றிக் கொண்டது அவள் கைகளுடன் கைகள் கோர்த்தபடி கார்டினை சுற்றி வந்தான். இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான பிணைப்பு ஒன்று உருவாகியது அது நட்பையும் தாண்டிய நிலை.
இருவரும் ரோஜா மலர்கள் மலர்ந்திருக்கும் பக்கம் செல்ல கனியும் அதன் அழகில் பிரமித்துத் தான் போனாள் பலவகை பல் நிறத்தில் ரோஜாக்கள் கொள்ளை அழகுடன் அவை பணியில் நனைந்து இருப்பதால் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது பலவர்ண வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து திரிந்தன. அனைத்தையும் ரகசியமாக தனது அலைபேசியில் பதித்துக் கொண்டாள்.
சில மணி நேரம் அங்கு கழித்தவர்கள் மகிழ்ச்சியுடன் காருக்கு திரும்பும் போது தான் அது நடந்தது வேகமாக தங்களை தாண்டிச் சென்ற காரோ லாரி ஒன்றில் மோத கண்ணெதிரே விபத்தை கண்ட கனியோ பயத்தில் அடிவயிற்றில் இருந்து ஒருவித வித்தியாசமான ஒலியில் கத்தியவள் அப்படியே வீதியில் மயங்கி சரிய நிதிஸும்,ஆட்கள் கூடும் முன் விழுந்தவளை கைகளில் ஏந்தி காரின் பின் சீட்டில் படுக்க வைத்தவன் சுற்றி வந்து காரை எடுத்துக் கொண்டு வைத்தியசாலை விரைந்த்தான்.
வைத்தியசாலையில் அட்மிட் செய்தவன் டாக்டரின் வருகைக்காக காத்திருக்க அவனை அடையாளம் கண்ட சிலர் “சிங்கர் நிதீஸ் சார்” என அவனிடம் விரைந்து ஆட்டோகிராப், போட்டோ எடுக்க முடியல அவனுக்கு கோபம் தான் வந்தது தான் செலிபிரிட்டியாய் இருப்பதை அக்கனம் வெறுதான்.
“ப்ளீஸ்” என்றான் அதில் ஒரு இளைஞனோ “என்னாச்சு சார்” என ம அவன் முன் வர அவன் நர்ஸ் உடையில் இருப்பதை கண்டவனோ “வைஃப் உள்ள” என்றான். அவனின் பதட்டம் அங்குள்ளவர்களுக்கு மனைவி மீதான அவனது நேசத்தை சொல்வதாய் அமைய “ஒன்னும் இல்ல நீங்க உட்காருங்க சார்” என மற்றவர்களை பேசி அனுப்பியவன், அவர்களும் தங்களுக்கு பிடித்த பாடகருக்கு இடையூறு என்று விலகிக் கொண்டனர். அவ்விளைஞன் அங்கு வேலை செய்பவன் என்பதால் கனியை அட்மிட் செய்த அறையினுள் நுழைந்தவன் சிறிது நேரத்தில் வெளியே வந்தான்.
“ஒன்னும் இல்ல மேடத்துக்கு” என்றான் அவன் சொல்லியது “ராமனிடம் அனுமான் கண்டேன் சீதை” என்பது போலவே இருந்தது .அதன்பின் தான் டாக்டர் வெளியே வர “அவங்ளுக்கு ஒன்னும் இல்ல அதிர்ச்சியில் மயங்கி இருக்காங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க, சேலன் போட்டு இருக்கேன் கண் முழிச்சதும் அழிச்சிட்டு போலாம் ஜங் மேன், டோன்ட் ஒரி ‘என அவன் தோளில் தட்டி வெளியேறினார்.
சிறிது நேரத்தில் கனியும் கண் விழிக்க அவள் முன் அவள் கைகளைப் பற்றிய படி தான் அமர்ந்திருந்தான் நிதிஸ்.
அவனையே அவள் பார்க்க, எப்படி இருக்கு என அவன் கேட்க அவளும் ‘கண்மூடித் திறந்தாள்’. ஹாஸ்பிடல் ஃபார்மாலிட்டிசை முடித்துக் கொண்டு தனக்கு உதவிய இளைஞனுக்கும் நன்றி சொல்லியபடி இருவரும் ஹோட்டலுக்கு புறப்பட்டனர்.