காதலே-18
இன்றுடன் ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் சென்றிருந்தது.இருவரும் தங்களது வேலைகளில் வழக்கம் போல் ஈடுப்ட்டுக் கொண்டிருந்தனர்.ஸ்ரூடியோவில் இருந்து வந்து அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றதென்னவோ ‘ஹனி வாய்ஸ்” தான் கால்கள் நடுங்க பாடல் வந்த பால்கனியை நோக்கிச் செல்ல அப் பாடல் கனியின் அலைபேசியில் இயங்கிக் கொண்டிருந்தது.
நிதிஸைக் கண்டவள் புன்னகைக்க, “இந்த வாய்ஸ்ல இந்த சாங் டிபரண்ட் பீல்ல” என்றான்.அவளோ எதுவுமே சொல்லாது அவனையே ஆழ்ந்து பார்க்க,அவள் பார்வையில் ஏதோ உணர்வு, அப் பாடலை முழுதாக கேட்டதும் தான் மீண்டும் அறைக்கு வந்தவன் குளித்து இரவுணவை உண்ண . வந்தவன் முகத்திலோ ஒரு கடுமை,நீண்ட நாள் பின் ஹனி வாய்ஸை கேட்டதில் இருந்து ஒரு தடுமாற்றம்,கல்யாணியோ என்னாச்சு என கனியிடம் நிதிஸைக் காட்டி சைகையில் கேட்க, அவளும் தெரியல என்றாள் சைகையில்.
உணவை உண்டவன். லாப்டாப்புடன் அமர்ந்து கொண்டான். வழமையாக அலுவலகம் இருந்து வந்தால், அவளுடன் பேசுவது, உணவுண்டதும் செஸ்,கேரம் என அவளுடன் விளையாடுவது என இருப்பவன் இன்று ஏதோ போல் இருக்க அவன் பேசுவான் என எதிர்பாத்தவள் அவன் எதுவும் பேசாது வேலையில் மூழ்க அவளும் தூக்கத்திற்கு சென்றாள்.அவனும் நேரம் சென்றே தூங்கினான்.
அடுத்த நாளும் மெல்லப் புலர நேரத்துக்கே எழுந்த நிதிஸ் ஸ்டூடியோவிற்குக் கிளம்ப,கனியும் அன்று நிதிஸுடன் சாஃப்ட் டெக்கிற்கு புறப்பட்டாள் புது ப்ராஜெக்ட் வந்திருப்பதால் அதன் மீட்டிங் இன்று நடைபெற இருப்பதால் அலுவலக்த்திற்கு வந்தான்.
ஸ்டூடியோவிற்க்கு வந்த நிதிஸ்கும் ஹனி வாய்ஸையே மனம் தேட, எவ்வளவு முயன்றும் தடுக்க முடியாது. கலைஞர், பாடகர்கள், பாடலை ரசிப்பதில் என்ன தவறு என்று தன்னையே தேற்றியவன், நான்கு மாதங்களின் பின் “தேனிலும் இனிது காதலே “எனும் யூடியூப் தளத்தில் நுழைந்தான்.
அவள் வீடியோ போட் மாட்டன் என்றதோடு அவனும் யூடியூப் பக்கம் வரவில்லை.ரஅவள் இறுதியாக போட்ட வீடியோவை பார்த்தவனுக்கு ஆச்சரியம் தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை
ஊட்டியில் பொட்னிகல் கார்டினில் எடுத்த அசைந்தாடும் மலர்கள் ஸ்லோ மோஷனில் எடிட் செய்யப்பட்டு அதுவும் ஹனி வாய்ஸில் “அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா…
ஏ… அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்…
காதலா… காதலா……” என பாடியது. இது எப்படி அப்ப கனிமலர் என யோசித்தவனுக்கோ தலை வெடிப்பதை போல் இருந்தது.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” உள் நுழைந்தான் கௌதம், சார் ரெக்கார்டிங் எல்லாம் ஓவர், நீங்க செக் பண்ணா? எடிட்டர்க்கு கொடுத்துடலாம் என்றான்.
” கௌதம் ஐ நீட் காஃபி ரொம்ப ஹெடேஜா இருக்கு என்றான் கௌதமும நிதிஸுக்கு காஃபியை கொடுத்தவன். நிதிஸும் அதை அருந்தியவனுககோ கனிமலர் எண்ணம் தான். ” முகேஸ்ட கொடுங்க ஐ அம் லிவிங், நாளைக்கு பார்க்கலாம்” என்றான்.
இரவு பத்து மணியாகியும் நிதி ஸ் வீட்டுக்கு வரவில்லை நிதிஸுக்கு அழைப்பெடுத்தும், குறுஞ்செய்தி அனுப்பியும் எந்தப் பதிலும் வராததால் ராமுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் கனி.
ராமோ “நான் பாத்துக்குறேன் என்ற ஒரு நிதிஸை அழைக்க முதல் ரிங்கிலி அழைப்பை ஏற்றவன் “எங்க இருக்க கெஸ்ட் கவுன்ஸ்ல அருகில் கனி நிற்பதால் ஆப்பிஸ்ல தான் இருக்கான்.
“வேலை கொஞ்சம் அதிகமாம், ஒன் ஹவர்ல வந்துருவானாம் என்றவன் காரை எடுக்க கனிக்குத்தான் தனக்கு லேட்டாகினாலும் தனக்கு மெசேஜ் அனுப்புவான் இன்று அனுப்பவில்லையே என அவள் யோசனையில் இருக்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ராம் கெஸ்ட் ஹவுஸ்க்கு.
காரை நிறுத்தியவன் உள்ளே செல்ல நிதிஸ் அன்று போல் இன்றும் இருளிலே இருந்தான்.
ஏய் என்ன ஆச்சுடா என்றபடி லைட்டை ஆன் செய்தான்.”கனி அங்க டென்ஷனா உன்ன கேட்டுட்டு இருக்கா, உனக்கு ஹால் ,மெசேஜ் பண்ணா நீ எடுக்கவே மாட்டேங்குறியே என்றான்.அவனருகில் அமர்ந்தபடி.
“ஊட்டியில் எடுத்த வீடியோ யூடியூப் ல வந்திருக்கு” என்றான் “ஓ கனிய பற்றியா ரொம்ப நாள் முன்னாடியே எனக்கும் தெரிஞ்சிருச்சு சொல்லிடாளா???” எனக் கேட்க ,எழுந்து அமர்ந்த நிதிஸோ. “உனக்கு முன்னாடியே தெரியுமா?” ” ஆம்” என்றவனையே நிதிஸ் வெறிக்க
சொன்னா கவலைப்படுவது தான் சொல்லல, அவ சொல்லிருப்பானும் நினைச்சேன் என்றான். “நான் ஏன் கவலைப்பட போறேன்” அது வந்து ஆபீஸ் முன்னாடி கனிய ஆக்சிடென்ட் பண்ணது நீதான், அதை மறைக்க, நான் எவ்வளோ பண்ணுனேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்” என்றான். நிதிஸ் புருவச்ளிப்புடன் பார்த்தவன் “ஓ மை காட்” என்றவனுக்கோ என்ற சொல்வதென்றே தெரியவில்லை.
நிதிஸோ “அப்போ அப்போ என்னால தான் அவளுக்கு வாய்ஸ் போயிடுச்சா” என… கவலை தோய்ந்த குரலில், அப்படியே தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டான். “அதான் அவக்கு ஒன்னுமில்லனு டாக்டர் சொல்லிடார் தானே….என்ற ராம்
” தரங்கிணி அனுப்பிய வீடியோவை காட்ட நிதிஸோ அதைப் பார்த்தவன் தன்னையே நொந்து கொண்டான்.
முகம் கசங்க இருளை வெறித்தபடி இருந்தவனின் அலைபேசியில் மீண்டும் அலர்ட் வந்திருந்தது அந்த வீடியோவை ஓபன் பண்ண ராமோ “தேனிலும் இனியது காதலே, உயிர் தேகம் தந்தது காதலே, நம் உயிரின் அர்த்தம் காதலே இந்த உலகம் அசைவதும் காதலே” எனும் பாடல் பொட்டானிகல் கார்டினில் எடுத்த வண்ணத்துப் பூச்சிக் கூட்டத்தோடு ஓடியது. நிதிஸுற்கோ பெருமூச்சுடன் ‘எங்கெல்லாம் தேடினன்டி கடைசியா என்கிட்டயே வந்திருக்க நானும் மடையை மாதிரி தெரியாம இருந்திருக்கன்’ என எண்ணிக் கொண்டான். “சரி வீட்டுக்கு போய் பீல் பண்ணலாம் வா” என நிதிஸை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் ராம்.
இருவரும் வீட்டிற்கு வந்து விட்டனர் நிதிஸ் அறைக்குள் நுழைய கனி தூக்கத்தில் இருந்தாள், தூங்கும் அவளையே சிறிது நேரம் பார்த்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவளருகில் துங்கிப் போனான்.
அடுத்த நாளும் மெல்லப்புலர நிதிஸுன் பார்வை அடிக்கடி தன்னில் படிவதாய் இருந்தாள் கனி மறு மறுநிமிடம் அது பொய்யோ எனும் வகையில் அவன் பார்வை இருந்தது அவன் பார்வையில் என்ன உள்ளது என புரியவே இல்லை.
நிதிஸுக்கும் முதல் புரியாத பல விடயங்கள் இப்போது புரிவதாய் நூறு வீதம் தேன் குரல் அவள் தான் என தெரிந்து கொண்டான்.
அன்று கட்டில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். நிதிஸ் பால்கனியில் நின்று இருந்தான் அவன் பார்வை அவளிலேயே,
அவள் முன் வந்தமர்ந்தவன் “கனி லேப்டாப் கொஞ்சம் வேணும் மெயில் பாத்துட்டு தாரேன் “என்றான். அவளும் கொடுக்க அதனை பார்த்தவனின் சிந்தையில் ராம் சொல்லியதே ஓடியது .சிறிது நேரத்தில் கொடுத்தும் விட்டான
” பாத்துட்டீங்களா?” நிதிஸோ ” ஓ எஸ் தேங்க்ஸ்” என்றவன் மறு நிமிடம் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தவன். “இப்போ, பேசினியா?” அவ்ளோ ‘இல்லை’ எனத் தலையாட்டினாள் நிதிஸோ யோசனையுடன் இங்கிருந்து அகன்றான்.
இப்படி சில நாட்கள் சென்றிருக்கும் தனக்கு குரல் வந்ததை சொல்லாது கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டினாள் கனி நிதிஸும் இப்போது அவளையும் அவளையும், செயற்பாட்டையும் ரசிக்கத் தொடங்கினான்.
கனி மலர் “ஹனி ப்ளூம்” இரண்டு ஒற்றுமையையும் இன்று தான் அவனுக்கு புரிந்தது அன்று நிதிஸுன் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவள் அழைப்பு வர பாடல் நின்றது அலைபேசி காதில் வைக்க அதே பாடல் மீண்டும் கேட்டது,
அலைபேசியை திருப்பித் திருப்பி பார்த்தபடி கதவின் புறம் திரும்ப இது நிதிஸ் தான் மீதிப் பாடலை பாடிக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்தபடியே முழுப்பாட்டையும் பாடி முடித்தவன் “பிடிச்சிருக்கா?” என கேட்க அவளும் “ஆம்” என்று தலையாட்டினாள் அவனும் கண்சிமிட்டி சிரித்துக்கொண்டான் அவளின் ஆசைகளில் அதுவும் ஒன்று தனக்காக பாட வேண்டும் என்று அவள் யூடியூப்பில் சொல்லி இருந்தாள்.
நிதிஸ் கன்சென்ட் ஒன்றிற்கு சென்று மூன்று நாட்கள் முடிந்து விட்டது. அவனும் மகிழ்ச்சியான காதல் பாடல்களை தனது ரசிகர்களுக்கு விருந்தளித்தான் அவனது மகிழ்ச்சி அவன் ரசிகர்களையும் தொற்றிக் கொண்டது
கனியோடு அலைபேசியில் மெசேஜுல் பேசிக் கொள்வான். “சாப்டியா?, எப்படி இருக்க?, குட் நைட்” என்பதோடு முடியும்.
நான்காம் நாள் காலையில் வீடு திரும்பிய நிதிஸ் அறைக்குள் நுழைய குளியலறையில் இருந்து பாடல் தான் அவனை வரவேற்றது குளியலறை ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் கொண்டு வந்த பேக்கை அலமாரியில் வைத்தவன் உடை கூட மாற்றாது கட்டிலில் விழுந்தான்.
குளியலறையில் இருந்து மார்பில் டவ லை சுற்றி வெளியே வந்த கனியும்” தீய தீயே வா தீயே எனும் பாடலை பாடிய வண்ணம் கண்ணாடி முன் ஒன்று தலையை துவட்ட அவள் சத்தத்தில் கண் விழித்த நிதிஸோ அவள் ஆடை இல்லாத தோள்கள் தான் அவனுக்கு காட்சியளித்தது.
அவள் நின்ற கோலத்தைக் கண்டவன் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க “அழகான வார்த்தை நீ என்றால்முற்றுப் புள்ளி வெட்கம், மெதுவாக உன்னை வர்ணித்தால், மொழியே சொர்கி நிற்கும்,அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்,இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்,அட மேல் உதட்டைக் கீழ் உதட்டை,ஈரம் செய்யும் நேரம்உயிர் மேலிருந்து கீழ் இறங்கி, என்னென்னவோ ஆகும்,இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும், இடையில் உள்ள மோகம்,முத்த தேனில் மூழ்க முன்நேரம் தீயே தீயே” மீதி பாடலை பாடியவளுக்கோ ஏதோ வித்தியாசம் தோன்ற கட்டில் பார்த்தவர்களுக்கு மூச்சேன் நின்று விட்டது. நிதிஸ் அவளை விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வழமையாக உடையை உடை மாற்றும் அறையில் மாற்றுபவள் இன்று நிதிஸ் இல்லாததால இரவு தான் வருவான் என எண்ணியவள் குளிதத்தும் அப்படியே வந்து விட்டாள்.
தான் நின்ற கோலம் புத்திக்குறைக்க மீண்டும் குளியலறை நூல் நுழைய முயன்றவளை நுழைய விடாது பாய்ந்து அவள் முன் மறைத்தபடி நின்றவன் அவள் கையைப் பிடித்து அருகில் இருந்த சுவரில் சாய்த்தவன் “வாய்ஸ் ஓகே ஆயிடுச்சா “எனக் கேட்க,” பேச முடியுது என்றாள் தலையை குனிந்தபடி “பேச மட்டுமில்ல, பாடவும் நல்லா முடியுது என்றான் ஒரு மார்க்கமாக, ஒற்றைக் கையால். அவள் முகத்தை நிறுத்தியவன் அவள் இதழ்ளைப் பார்த்தபடி இதழ்களில ஆழ்ந்து முத்தமிட அவன் முத்தத்தில் திகைத்தவள், பின் அவன் முத்தத்தில மூழ்கவாரம்பிக்க அவளை மூச்சுக்காக விட, அவள் மார்பில் இருந்து நவழும் டவலை அவள் விழிகளைப் பார்த்த வாரே அவளது மார்புடன் கட்டியவன் “டிரஸ் சேஞ்ச் பண்ணிடுவா பேசணும்” என்றான்.
இதழ் மட்டுமல்ல உடல் கூட அவன் முத்தத்தால் சிவந்து விட்டது ஆடை மாற்றும் அறைக்குள் சென்றவளால் நிலை கொள்ளவே முடியவில்லை.அவன் முத்தமிட்ட இதழ்கள் குறுகுறுக்க அதனை வருடியவளுக்கோ வெட்கம் தான் மேலிட்டது.
ஒரு நீளமான ஃபிராக்கை அணிந்து வெளியே வர குளியலறையில் சத்தம் கேட்டது குளியலறை கதவை ஒரு கணம் பார்த்தவள் கீழ் இறங்கிச் செல்ல தேவி பாட்டியோ “நிதிஸ் எங்கமா” எனக் கேட்க, “அவளோ குளிக்கார் பாட்டி என்றாள். அவள் சைகையில் சொல்வாள் என்ற பாட்டிக்கோ இன்ப அதிர்ச்சி ” கல்யாணி இங்க வா” என்ன அவர் சத்தமாய் அழைக்க கல்யாணியின் வர “என்னக் கொஞ்சம் கிள்ளு” என்றார்,அவரும் கிள்ள அவுச் என கையைத் தேய்த்த பாட்டியோ பாட்டியோ, “உண்மையா இப்ப பேசுனியா?” “ஆமா பாட்டி” என்றாள் புன்னகையுடன். தேவிப் பாட்டிக்கும் கல்யாணிக்கும் அளவில்லாத சந்தோசம்.
” உங்க வீட்ட சொல்லிட்டியா?” இல்ல இனிமேதான் பாட்டி என்றாள் “முதல்ல அவங்களுக்கு சொல்லு ரொம்ப சந்தோஷப்படுவாங்க”என்றார்.
அவளும் தாய்க்கு அழைக்க “ஏங்க மலர் ஹால் பண்றா?, மெசேஜ் தானே பண்ணுவா” என்றபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தவரோ மறுபுறம் “ஹலோ அம்மா, “எனும் கனியின் குரலில் சற்று வித்தியாசம் இருந்தாலும் கனியுடைய குரல் தான் என அடையாளம் காணக்கூடியதாகவே இருந்தது “மலர் எப்பமா சரி ஆச்சு” இப்போதம்மா என்றாள்,” ஓகே மா ஈவினிங் வாறோம் என்றவர் அழைப்பை துண்டித்தார்.
பாடசாலைக்கு செல்ல தயாராகிய கணவனிடம் “ஏங்கே மலர் தான் பேசினா, குரல் சரியாயிடுச்சு என்றார் மனம் கொள்ள புன்னகையுடன். அப்படியே மகனிற்கும் அழைத்து மகிழ்சியை பகிர்ந்து கொண்டார் வாணி
குளித்துவிட்டு வெளியே வந்த நிதிஸ் கனியை காணாது கீழே வர அவளை சுற்றி கல்யாணி, பாட்டி, பிரதாப், ராம் என வேலை செய்பவர்கள் என அனைவரும் இருந்தனர் நிதிஸோ அவளை முறைத்தபடி உணவு மேசையில் அமர அவனைக் கண்டதுமே அவன் முத்தமிட்ட ஞாபகம் வர அவனைப் பார்க்காது மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
நிதிஸ் எவ்வளவு முயன்றும் அவளை தனியே சந்திக்க முடியவில்லை “பிரதாப் டாக்டருக்கு அழைத்து வீட்டுக்கு வரவைத்து கறிய செக் செய்து அவளுக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என தெளிவு படுத்திக் கொண்டனர்.
ராமோ “கங்கராட்ஸ் ப்ரோ” என அவன் தோளில் தட்டி விட்டு அலுவலகம் கிளம்பி விட்டான். அன்று மாலை வேளையில் கனியின் பெற்றோர் வந்து பார்த்துச் சென்றனர் .
பகல் பொழுது வீட்டினருடன் கழித்தவள் இரவு உணவின் பின் தயங்கி தயங்கி அறையினுள் நுழைய அவள் குரல் தான அவளை வரவேற்றது.
நிதிஸ் பாடிய “சந்திப்போமா,இருவரும் சந்திப்போமா ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்,ஒரு முறை சந்திப்போமா” எனும் பாடலை சத்தமாக ஒலிக்க விட்டிருந்தான். வாங்க மிஸ்ஸிஸ் கனிமலர் நிதீஸ்சரன். என்றவன் பால்கனிப் பக்கம் இருந்து ” தேனிலும் இனியது காதலே” உங்களோட சேனல் தானே எனக் கேட்க,அவளுக்கோ படபடப்புடன் அவனை நோக்க, அவனும் பால்கனியில் இருந்து அவளை அழுத்தமாகப் பார்த்தபடி அறைக்குள் வந்தான்.
அவனோ ஒவ்வொரு அடியாக வைத்து அவளை நெருங்க ,அவளோ ஒரு வித பயத்தில் கைவிரல்களை கோர்த்துப் பிரித்தபடி தலை குனிந்து நின்றாள்.
அவள் நாடியை நிமிர்த்தியவன் ” உன்ன எங்கல்லாம் தேடின்டி, என்ன ரொம்ப சுத்தல்ல விட்டுட்ட என்றவன் மறு நொடி அவளை இழுத்து காற்றுப் புகாதளவிற்கு அனைத்துக் கொண்டான்.
அவளோ புரிந்தும் புரியாமலும் அவன் அனைப்பில் இருந்தாள் தன்னில் இருந்து அவளைப் பிரித்தவன் அவளை சோஃபாவில் அமர வைத்தவன் தானும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவள் கைகளை தனது கையினுள் வைத்தவன் .
“ஹனி ப்ளூம்” என்றான் அவளோ அவனை அதிர்ச்சியாய் நோக்க “கனிமலர் அலையன்ஸ் ஹனி ப்ளூம்” ரொம்ப தான் யோசிச்சு நேம் வச்சிருக்க, இப்படி யோசிக்காவிட்டன் என்றவன். அவளோ தலையை குனியமுற்பட அவள் தலையை நிமிர்த்தியவன் அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவன் “உன்னோட ஃபர்ஸ்ட் சாங் வைரலானதும் அதுல இருந்து உன்ன ப்லோ பண்ண தொடங்கினேன். உன் காதலை சொன்ன, என் காதலை கேட்காமலே போயிட்ட ஒரு வாய்ப்பு கூட தராம விட்டடுடியேடி
” உன் எவளோ கண்டுபிடிக்க ட்ரை பண்ணன் முடியல, ராம் கிட்ட லோகேஷன் கண்டுபிடிக்க சொன்ன், லொகேஷன மாத்திடே இருந்திருக்க,விபீஎன் யூஸ் பண்றதா ராம் சொன்னான் படிச்ச மொத்த வித்தையையும் இதுல இறக்கிட போல என்றான்.
பாட்டியும்,அம்மாவும் கல்யாணம் பண்ண சொல்லிட்டே இருந்தாங்க அப்புறம் நானும் ஒத்துக்கிட்டேன் அதுக்கு பிறகு கடட்இகிறவளுக்கு உண்மையா இருக்கணும் உன் யூடியூப் சேனல பாக்குறதே விட்டன்.
இனி வீடியோ போட மாட்டேன்னு சொன்ன அதுல ரொம்பவே உடைஞ்சிட்டேன் டிப்ரஷன்ல திரிஞ்சன். ராம் பாத்துக்கிட்டான் அப்போதான் ஒரு நாள் குடிச்சிட்டு ஆக்சிடென்ட் பண்ணிட்டேன். அதுவும் உன்னத்தான் என்றானீ பெருமூச்சுடன். “ஆக்சிடென்ட் பணண்து நீங்களா?” என அவள் அதிய்ச்சியாய் கேட்க,” ” ஆமா என்றான். அவன் “இப்போ உனக்கு ஓகே ஆயிட்டு இல்லனா இந்த குற்றவேணர்ச்சியிலேயே இருந்திருப்பேன்.
இப்பதான் நிம்மதியா இருக்கு என்றவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
இந்தக் காதல் எவ்வளவு விசித்திரமானது, நிதிஸையே அவள் பார்க்க “என்ன பேபி” எனக் கேட்க அவளோ “இல்லை” என தலையாட்டினாள்.
நேரமும் செல்லவே “வா தூங்கலாம்” என்றவன் அவளை அணைத்தபடி தான் தூங்கினான். அவளுக்கு தான் சுகமான இம்சையாகிப் போனது.
அடுத்த நாள் என்றும் இல்லாத அழகாகவே காலைப் பொழுது புலர்ந்தது கனிக்கு மெல்ல கண்விழிக்க நிதிஸுன் கையனைவில் தான் இருந்தாள்.கூச்சத்துடன் அவன் கையை விலக்கியவள் மெல்ல எழுந்து குளியலறை நுழைந்து கொண்டாள்.கண்விழித்த நிதிஸ் அவளைக் காணாது எழுந்து அமர,கனியும் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள் ” குட் மார்னிங் பேபி” அவளும் குட் மார்னிங் என்றாள் புன்னகையுடன் ” காஃபி எடுத்து வாரன்” என்றவள் கீழிறங்ஙிச் செல்ல ….அவளின் முகத்தைப் பார்த்த பாட்டியோ ” முகத்துல தௌசன் வல்ப் எரிது, எப்போ நல்ல செய்தி சொல்ல போற” என்றார் அவளோ வெட்கத்துடன் சமையலறை நுழைந்தவள் இரு காஃபிகளை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
நிதிஸுடம் ஒரு காஃபியை கொடுத்தவள் தானும் ஒன்றை காபி எடுத்துக்கொண்டு பால்கனிப் பக்கம் சென்றாள்.
அவளையே பார்த்தபடி அவனும் பால்கனிக்குச் சென்றவன் “என்ன ஒண்ணுமே சொல்லாம இருக்க” என்றான் அவளும் அவனையே பார்க்க, ” ஏன் வீடியோஸ் போட மாட்டேன்னு சொன்ன” வீட்டு வெட்டிங் அரேஞ்ச் பண்ணிருந்தாங்க கதிர்னு ஒருத்தன் ,என்னோடது ஒன் சைட் லவ் எப்படி வீட்ட சொல்லறது எதுவுமே சொல்லல ரொம்ப கவலைல இருந்தன்.
அதான் வீடியோஸ் போட மாட்டேனு சொன்னேன் என அனைத்தையும் சொன்னாள்.தன்னைப் போல் தான் அவளும் என்பதை புரிந்து கொண்டான்.
“ஓகே எல்லாம் முடிஞ்சிட்டு…” எனக்கும் இப்ப நீயும் கிடைச்சுட்ட, ரொம்ப நாள் காத்திருக்க முடியாது எல்லாத்துக்கும் தயாரிக்க” என்றான்.அவளோ அதிர்ச்சியாய் அவனை நோக்கஅவனும் கண்சிமிட்டியபடி அவள் கன்னத்தை தட்டிக்க கொண்டு அங்கிருந்து அகன்றான்.