காதலே- 19
நாட்களும் அதன் போக்கில் செல்ல, ஸ்டூடியோ, ஆஃபிஸ் என நிதிஸுன் நாட்களைக் கடத்த கனியும் ஆன்லைனில் வேலை செய்வதால் வீட்டில் தான் அவள் பெரும் பாலும், தன் காதலின்ல் கனியை திக்குமுக்காடச் செய்தான் நிதிஸ். அன்று இரவுணவின் போது என்ன ப்ரோ நாங்க எல்லாம் இப்போ கண்லயே தெரியிரமில்லப் போல,என்றான் நக்கலாக நிதிஸோ ராமைப் பார்த்து முறைக்க,நீ முறைச்சாலும் அதான் உண்மை.
“பாட்டி,”
“என்னடா”
“கொஞ்ச நாள் முன்னாடி நிதிஸ்ட சாங். ஒன்னு ஃபீமேல் வாய்ஸ்ல ரெண்டுங்கானது நீங்க கூட நிதிஸ் பாடினத விட இந்த வாய்ஸ்ல கேட்க நல்லா இருக்குன்னு சொன்னீங்க” “ஆமாண்டா, என்னா வாய்ஸ் அப்படியே புல்லரிச்சுப் போயிடும் யார்டா அந்த சிங்கர்” என தேவிப் பாட்டி கேட்டக,
கனியோ படபடப்புடன் அமர்நிருந்தாள் அவளுக்கு எதிரி இருந்த நிதிஸோ மேசைக்கு கீழால் அவள் காலை வருட ,வாய்க்குள் வைத்த உணவை மெல்லவும், முடியாது முழுங்கவும் முடியாது அவள் திருதிருவென முழிக்க கல்யாணியோ மேலும் இரண்டு இடியாப்பத்தை வைத்தவர் “சாப்பிடுமா” என்றார். அவர் வைத்த இடியாப்பத்தையும் நிதிஸையும் மாறி மாறி பார்க்க அவளின் பார்வையில் சிரிப்பு வரவே காலை எடுத்துக் கொண்டான்.
அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறு அவனை முறைத்தபடியே உணவை உண்ணத் தொடங்கினாள்.
மறுபுறம் பாட்டி கேட்டதிற்கோ “அத உங்க மூத்த பேரனுகிட்ட தான் கேட்கணும் “என்றான் ராம் பாட்டியும் நிதிஸைப் பார்க்க “உங்க பேத்தி தான் பாட்டி அந்த ஹனி வாய்ஸ்” அட சொல்லவே இல்ல கனிமா, இந்த பாட்டிக்கு ஒரு சாங் பாடி காட்டணும்” அவளோ நிதிஸைப் பார்த்தவாறு” பாட்டிமா வாய்ஸ் இன்னும் ஃபுல்லா சரியாகல” என்றாள் தயங்கி தயங்கி “ஓகே டா எல்லாம் சரியானதும் கட்டாயம் பாடணும்”…” சோர் பாட்டிமா”.
“ராம் நான் கேட்கலை டா அந்த சாங்க” என்றார் கல்யாணி ராமும், உணவு உண்டு முடித்ததும் அவளது யூடியூப் தளத்திலிருந்து முதல் “கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்” என்னும் சாங்கை ஒழிக்கச் செய்ய அவ்விடமே நிசப்தம், பாடல் முடிவடைந்ததும் பாட்டியோ “நல்ல பியூச்சர் இருக்குமா” என அவளை பாராட்ட அவளும் வெட்கத்துடன் “தேங்க்ஸ் பாட்டி “என்றாள் கல்யாணியோ அவளை அனைத்தவர் “ரொம்ப நல்லா இருக்குடா” ரியல் சாங்க விர உன்னோட இந்த வெர்ஸன் சூப்பர்” என்றார். பிரதாப்போ “சரியான ஜோடி தான் மை சன்” “காட் பிளஸ் யூ மா” என்றார்.
“தரங்கிணி வீட்ட பேசியாச்சு வாரமாதம் இருபத்தெட்டாம் தேதி பிக்ஸ் பண்ணி இருக்கு, வேலையில நிறையவே இருக்கு எல்லாம் பாக்கணும் என்றார் பிரதாப். இவன்ட் மேனேஜ்மென்ட் எல்லாம் பார்த்துப்பாங்க நம்ம தீம் மட்டும் செலக்ட் பண்ணினம்னா ஓகே என்றான் ராம் ” அவர்கள் பேச்சு ராம தரங்கிணி திருமணம் பற்றி திசை திரும்பியது.
அப்படியே இரவுணவை முடித்துக் கொண்டு அவரவர் தமதறைக்கு திரும்பினர். கனியை தன் மடியில் அமர்த்தியவன் “ரெண்டு நாள்ல கன்சென்டோனுக்கு போகணும்” என்றான். அவளோ “போயிட்டு வாங்க” என்றாள். கனடால அதும் ஒன் வீக் என்றான். “அவளோ நாளா” என்றாள் சோர்வான குரலில், தனியா போறனு யார் சொன்னது நீயும் நானும் போறோம் என்றான்.
அவளோ மகிழ்ச்சியில் அவனை அனைத்துக் கொண்டாள். “ஒரு நாள் கூட உன்னப் பிரிச்சி என்னால இருக்க முடியாது பேபி” என்றான் நெகிழ்வாக, அவன் காதலையும் ரசிக்கத் தொடங்கினாள் கனி.
அவனும் அவளிடையே அழுத்த அது ஒரு சுகமான இம்சையாக இருந்தது அப்படியே அவளை திருப்பி அவள் இதழ்களைக் கௌவாக் கொண்டான் அவளும் அவன் முத்தத்தில் மூழ்கியவளுக்கோ அவன் தொடுகை,அனை முத்தம் உடல் சில்லிட்டுப் போனது. ,அவளை தன்னில் இருந்து பிரித்தவன் மென் சிரிப்புடன் அவன் முத்தமிட்டு இதழ்களை வருட, “என்னடி ஒரு முத்தத்துக்கே மொத்தமா சிவந்துட்டு இவ்வளவு சாஃப்ட்டா இருக்க,” அப்ப மத்ததுக்கு எல்லாம் என்றவனின் இதழை வெட்கத்தால் தன் கையினால் மூட அவளது உள்ளங்கையிலேயே மீண்டும் முத்தமிட்டான் அவளோ அவன் மடியில் இருந்து எழுந்தவள் வெட்கத்தால சிவந்த முகத்தைக் காட்டாது திரும்பிக் கொண்டாள்.
“ரெடியாகு பேபி “என்றான்” எங்க போக என”அவள் கேட்க அவனோ எதுவும் சொல்லாது அலைபேசியுடன் பால்கனிக்கு சென்று விட்டான்.” எங்க போகனு சொன்னாதான் என்னவாம் ” சிணுங்கி கொண்டே அவளும் தயாராகினாள். இருவரும் வந்து சேர்ந்ததென்னவோ அந்த உயர்தர ஹோட்டலுக்கு தான் அவள் கையைப் பிடித்த படி தான் அவளை அழைத்துச் சென்றான்.
கடற்கரையையண்டியதான அக்ஹோட்டலில் இருவரையும் கைகாட்டி அழைத்தான் ராம். அவர்களும் வந்தமர்ந்தனர் நால்வரும் கதைத்து பேசிய படியே உணவை உண்டு முடித்தனர்.”என்ன கனிமா வேற வீடியோஸ் அப்லோட் பண்ணலையா?’ என தரங்கிணி கேட்க “இல்ல “என்றாள்.” ஆமா” ஆமா அதுக்கு எங்க அவங்களுக்கு நேரம் என்றான் ராம் நக்கலாக
நால்வரும் தங்களது காரிலேயே அங்கிருந்து புறப்பட்டனர் நிதிஸோ கனியை அவளது வீட்டிற்கு அழைத்து வர அதில் இன்பமாய் அதிந்தவள் அவன் கன்னத்தில் எட்டி முத்தமிட்டாள் காரில் இருந்து இறங்கி கொண்ட இருவரும் புன்னகையுடன் வீட்டுக்குள நுழைந்தனர்.
மகிழ்ச்சியுடன் வரும் மகளை மருமகனையும் இந்த நேரத்தில் எதிர்பாராத வேணியும் மேகநாதனும் வரவேற்பறு உபசரித்தனர்.வேணி உணவு தயார் செய்ய ” இல்ல இப்ப தான் சாப்பிட்டு வந்தம் என்றான். நிதிஸோ கை மறைவில் கொட்டாவியை வெளியிட “மலர் மாப்பிள்ளை ரூமுக்கு அழைச்சிட்டு போ” என வாணி சொல்ல நிதிஸும் காருக்கு சென்றவன் ஒரு பையுடன் அவளது அறைக்குள் நுழைய அவளோ கட்டிலிற்கு புதிய விரிப்பினை மாற்றிக் கொண்டிருந்தாள் அறையை சுழல விட்டவனுக்கோ அவனது அறையில் பாதி கூட அவ் அறை இருக்காது ஆனாலும் அவ்வறை அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.
சுவர்களுக்கு மெல்லிய ப்ர்பிள் வர்ணம் பூச்சுகள் பூசப்பட்டு அதே நேரத்தில் கேர்ட்டுன்கள் போடப்பட்டிருந்தது சுவரோடு இணைந்த அலுமாரி ,ந ஜன்னலோடு ஒரு ஸ்டடி டேபிளும் அதில் சில பல பொம்மைகள் ஒருபுறம் வரிசையாக அடுக்கப்பட்டு பர்பிள் நிற ஆர்டிபிசியல் லாவண்டர் மலர்கள் மேசையில் வைக்கப்பட்டு இருந்தது. “ஓ செம்மையா இருக்கு என்றவன் தான் கொண்டு வந்த பையை அலமாரியை திறந்து வைக்க அதைத் திறந்தவனுக்கோ அதிர்ச்சி அலமாரி உட்சுவர் முழுக்க அவனது படங்கள் ஒட்டப்பட்டு இருந்தது அவனும் சிரிப்புடன் அவளை நோக்க, அவளோ சிந்தனை இல்லாத தலையணைகளுக்கு மாற்று உறைகளைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
” கனி என்ன இது?’ என அவன் கேட்க அவன் புறம் திரும்பியவளோ ” அச்சச்சோ இதை மறந்துட்டேனே” “அது வந்து என அவளுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை “என்ன அவ்வளவு பிடிக்குமாடி” அவளும் தலை குனிந்த படி “ஆம் “என தலையாட்ட அவளை பேச விடாது இழுத்து அனைத்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
ஏன் வீட்டவாரனு சொல்லல” எனற்வளின் மூகக்ல தன் மூக்கால் உரசியவன் ” எல்லாம் சப்ரைஸ் தான்” என்றான். மறுநாள் தாய் தந்தை மற்றும் தம்பியிடன் நாளைக்கு கனடா செல்வதாக சொல்லிக் கிளம்பினர்.
அலுவலகத்திற்கு வந்த கனி விடுமுறைக்கு விண்ணப்பிக்க ராமிடமிருந்து காரணம் கேட்டு பதில் வந்ததை பார்த்தவள் ” “ஐயோ”இவர… ” பர்சனல் ரீசன் சார் “என பதில் அனுப்ப அவனும் லீவு அக்செப்ட் செய்திருந்தான்.
தனது வேலைகளை முடித்துக் கொண்டு மோனிகாவுடன் வெளியேறினாள் கனி மோனிகா அவளது கணவன் வரவும் கனியிடமிருந்து விடை பெற்றாள். நிதிஸுக்கு அழைக்க “பேபி கொஞ்சம் லேட் ஆகும் தர்ஷன் கூட போறியா?” என்றான் ‘அன்று தர்ஷன் நிதிஸுடம் சொல்லியதற்கு திட்டியவனா இவன்’ என எண்ணியவள் “சரி” என்றாள்.
“தர்ஷா எங்க இருக்க, “ஹாஸ்டலுக்கு போகத்தான்கா”, “ஓகே ஆபீஸ்ல இருக்கேன் பிக்கப் பண்ணிக்கிறியா?” என கேட்க “ஓகே” என்ற தர்ஷன் சிறிது நேரத்தில் அவளை ஏற்றிக்கொண்டு வீட்டில் விட்டான்
” தர்ஷா உள்ள வா” என அழைக்க நேரமாச்சுடி வார்டன் ப்ராப்ளம் பண்ணுவார் நான் பிறகு வாரேன்” என கிளம்பினான்.
அறையினுள் நுழைந்து குளித்து கீழே வர கல்யாணியும் தேவிப்பாட்டியும் சீரியலில் மூழ்கியிருந்தனர். பிரதாபோ “அந்த நியூஸ்ஸ கொஞ்சம் போடுங்களேன் அம்மா”..” சும்மா இருடா அடுத்து என்னன்னு பக்கு பக்குன்னு இருக்கு” என்றார் தேவியம்மா.கனியும் அவ்விடம் வர கனியை பார்த்த பிரதாப் “இவங்களோட சேராதமா உன்னையும் சீரியல் பார்க்க வச்சு பழுதாக்கிடுவாங்க” என்றார்.
கல்யாணியோ “அதான் அறையில அவ்ளோ பெரிய டிவி இதுக்கு தானே அங்க போய் பாருங்க” என்றார். கனிக்கு அவர்களின் உரையாடல் சுவாரசியமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் சீரியல் முடிய அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு மாமியின், மருமகளும் திட்டியபடி இரவு உணவை ஆயத்தம் செய்தனர்.
இது வழமையாக நடப்பது தான் அவர்களின் சீரியல் பற்றிய விமர்சனம் கேட்பதற்கு சுவாரசியமாகவே இருக்கும்.
“நிதிஸ் எங்கமா,? வர லேட் ஆகுமாம் அத்த “சரி சரி” வா நேரத்திக்கு சாப்பிடு” என்றவர் ஏங்க சாப்பிட வாங்க” என குரல் கொடுக்க, பிரதாப்பும் அங்கு வந்தார்.
“எத்தனை மணிக்குமா ப்பிளைட்”… “காலையில ஏழு மணிக்கு மாமா” “ஓகே மா” என்றார் ஸ்ரூடியோவில் வேலை அதிகமானதால் லேட்டாகவே வந்தான் நிதிஸ்.
கல்யாணி ,பிரதாப் தேவி பாட்டி தூங்க சென்றிருக்க ராம் வெளியில் சென்றூருந்தான்.
கனி லேப்டாப்பில் புது ஆப்பிக்கான கோடிங்கை செய்து கொண்டிருந்தாள் அறையினுள் வந்த நிதிஸ் “தூங்கலையா பேபி “எனக் கேட்டவன் டவலுன் குளியலறை நுழைந்து கொண்டான்.
குளித்து வெளியே வர கனி பாலுடன் நின்று இருந்தாள் நிதிஸ் தான் வர லேட்டாகும் என்பதால் தனக்காக காத்திருக்காமல் உணவு உண்ணும் படி மெசேஜ் அனுப்பி இருந்தான்.
பாலை அருந்திய படி” பேக்கிங் எல்லாம் ரெடியா பேபி” அவளும் “ஆம் “என சொல்ல “ரொம்ப டயர்டா இருக்கு வா தூங்கலாம் என்றவன் அவளை அணைத்தபடியே தூக்கிப் போனான்.
இதோ இருவரும் விமானத்தில் பிசினஸ் கிளாஸில் இருந்தனர் நிதிஸோடு இன்னும் சில பாடகர்களும் கலைஞர்களும் பயணித்தனர் கனடாவின் விமான நிலையத்தில் தரையிறங்கியவர்கள், டோராண்டோவின் ரிச்சர்ட் ஹோட்டலில் தான் அனைவரும் தங்கிக் கொண்டனர். நாளை கன்சென்ட் என்பதால் அனைவரையும் ஓய்வெடுக்கும்படி கூறிய நிதிஸ்
கனியை அழைத்துக் கொண்டு தாங்கள் புக் செய்த அறையினுள அநுழைந்தான். அனைத்தையும் பார்வையிட்டபடி வந்தால் கனியும் அனைத்தையும் பார்வையிட்டபடி வ்ந்தாள். நிதிஸும் அவள் கேட்பதற்கு பொறுமையாகவே பதிலளித்து வந்தான்.
கன்சன்டிற்கு வித்தியாவும் வந்திருந்தாள் அவள் பார்வை விமானநிலையத்தில் இருந்து அடிக்கடி நிதிஸ் மேல படிந்தது மீண்டது ,அதே வேளை கனியை நக்கலாகவே அவள் பார்த்திருந்தாள். நிதிஸூம் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அவரவர்க்கு புக் செய்திருந்த அறைக்குள் செல்ல நிதிஸும் உணவை அறைக்கு வரலழைத்தவன் தன்னை முற்றிலும் ஓய்வுக்கு உட்படுத்திக் கொண்டான்.
வித்தியாவோடு மற்றொரு பாடகாகியான கௌசல்யாவும் தங்கி இருந்தாள் “நிதிஸ் சாரோட வைஃப் ரொம்ப அழகு இல்ல” என்னை கனியைப் பற்றி கௌசல்யா வித்யாவிடம் பேசஃ “அழகா இருந்து என்ன பிரயோஜனம் குரல்வேனுமே அவளால பேசவே முடியாது என்றாள். கௌசல்யா “உண்மையாவா?’..” ஆமா” அவர்தான் கல்யாணத்துக்கு ஓகேன்னா இவளுக்கு எங்க போச்சு புத்தி எனக் கனிக்கு திட்டியபடி இருந்தாள்.