தேவதை 2

4.9
(56)

தர்ஷிணியின் வீட்டு முன்பு தேவா பைக்கை நிறுத்தி விட்டு அவளின் வீட்டினுள் சென்றுப் பார்க்க,, சோஃபாவில் அமர்ந்து தோசையை கபளீகரம் செய்துக் கொண்டிருந்தாள் அவனின் தேவதை…. கன்னத்தின் இரு பக்கமும் தோசையை அமுக்கியவள்,, தேவாவை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்… நேவி ப்ளூ ஷர்ட் நல்லாருக்கு,, நீ எப்டியும் நா சொன்ன கலர போட்ருவனு எனக்கு தெரியும் என மென்றப் படி பேச,,,
அவளது முகம் பார்க்க பஃப்ஃபி ஃபிஷ் போல் இருக்கவும் தேவா சிரிப்பை அடக்கிக்கொண்டு மொதல்ல தின்னுடி மூஞ்சில துப்பிடாத என கிண்டல் அடிக்க,,, சிவனேனு தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்…..
அப்போது தர்ஷினியின் தாய் மஞ்சுளா அடுத்த தோசையை சுட்டு எடுத்த படி அடுப்படியில் இருந்து வெளியே வந்தவர் தேவாவைப் பார்த்ததும்,, வா பா தேவா சாப்பிடுறியா? எனக் கேட்க
இல்ல அத்தை நா சாப்டு தான் வந்தேன்,,, மாமா வேலைக்கு போய்ட்டாங்களா?
ஆமாம் பா,, ஏதோ முக்கியமான வேலைனு கிளம்பிட்டார்… நீங்க காலேஜுக்கு பாத்து போங்க… என்றவர் தனது மகளைப் பார்த்து அங்க போய் கொஞ்சம் அடக்கமா நடந்துக்க என தன் மகளிடம் தட்டை வாங்கிக் கொண்டு செல்ல…
தர்ஷிணி தன் கையை மடக்கி அவன் தொடையில் வைத்து அழுத்தி எழவும்.,,, தேவா கூச்சத்துடன் போடி எரும என அவள் முதுகில் தட்டி அனுப்பிவிட்டு சிரித்துக் கொண்டான்,…
தன் பையை எடுத்துக் கொண்டு ஓடி வந்தவள்,, அவன் தோள் மீது கைவைத்து, பைக்கில் ஏறி அமர்ந்ததும்,,, தேவாவிற்கு உடம்பு ஒரு நொடி சிலிர்த்து தான் அடங்கியது……கண்ணாடியின் பிம்பத்தை அவளின் முகம் நோக்க வைத்து விட்டு தான் வண்டியை எடுத்திருந்தான்….
பைக்கில் ஏறி அமர்ந்தவள் தான்……. தேவாவிற்கு காதில் ரத்தமே வந்திருக்கும் ஏதோ ஏதோ பேச்சுக்கள் பேசியப் படி வர… தேவாவின் காதில் எதுவும் விழவில்லை….
பேசும் போது அவளின் மாதுளை நிற குட்டி உதடுகளின் அசைவும்,, முயல் குட்டி பற்களும்,, அவளின் சிவந்த குண்டு கன்னக் கதுப்புகளும்,, அவள் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்ப ஆடும் காதில் தொங்கிக் கொண்டிருக்கும் குட்டி ஜிமிக்கியும்,,, என அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான்….அதுவும் இந்த நேவி ப்ளூ ட்ரெஸில் பார்க்க மேகத்தினை கிழித்துக் கொண்டு வந்திறங்கிய தேவதை போல் அல்லவா இருந்தாள்…

அந்த  நீல நிற உடை தேவதையின் அழகு,,, அவனை கடந்தக் கால ஸ்கூல் வாழ்க்கைக்கு அழைத்து சென்றது…..
அடுத்த 4 நாட்களில் ஜெய்யிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தான்….

டேய் ப்ளீஸ் டா வா டா. என்னால அவள பாக்காம இருக்க முடியல டா… கெஞ்சிக் கொண்டிருந்தான்…

 

ஏன்டா பாக்காம இருக்க முடியல…!? இன்னும் ஒரு வாரத்துல ஸ்கூல் வந்திருவா அப்ப பாத்துக்க என ஜெய் அவனை சீண்டிப் பார்க்க…..
அழும் நிலைக்கே சென்றான் தேவா…. எனக்கு அவள பாக்கணும் டா… நீ என் நண்பன் உங்கிட்ட தான டா ஹெல்ப் கேட்க முடியும்….

 

தோடா! அன்னைக்கு என்ன ரோட்ல தள்ளி விட்டுட்டு போன… அப்ப எங்க போச்சி இந்த நட்பு? போடா சும்மா அங்குட்டு…. நா படிக்கப் போறேன்,, என புக்கை விரிக்கவும்,,,,,
அதற்கு மேல் தேவா ஆத்திரம் அடங்காமல் ஜெய் கையில் இருந்த புக்கை தூக்கி வீசி இருந்தான்…. இப்ப மரியாதையா வரப் போறியா? இல்லயா? என மிரட்ட…
சரி டா வரேன்,,, ஆனா நீ அவள லவ் பண்றியா? அத மட்டும் உண்மைய சொல்லு என்றதும்….( 9த் படிக்குற பசங்க பேசுற பேச்சாடா இது!? படிக்குறத தவிர மத்த எல்லா வேலையும் நல்லா வரும் ஈஈஈஈ)

டேய் சத்தியமா சொல்ல தெர்ல டா.. இது லவ்வா? இல்ல என்ன உணர்வுனு சத்தியமா தெர்ல டா… இதுக்கு பிறகு இதப் பத்திக் கேட்காத…. ப்ளீஸ் என கெஞ்சவும்…. ஜெய் பெரு மூச்சுடன் அமைதியானான்…..

இருவரும் மாலை 6 மணிக்கு டிப் டாப்பாக கிளம்பி சென்றனர்,,, எதுக்காம்? தர்ஷிணியின் மஞ்சள் நீராட்டும் விழாவிற்கு தான்….

 

தர்ஷிணியின் தாய் மஞ்சுளாவும்,, தகப்பன் மாதவனும்…. தனக்கு அவள் ஒரே பெண் என்பதால் மஞ்சள் நீராட்டு விழாவை சொந்தம் அக்கம் பக்கம் என அனைவரையும் அழைத்து சிறப்பாக செய்தனர்.. தர்ஷினியின் அத்தை முறை,,மாமன் முறை என அனைவரும் வந்திருக்க கூட்டம் களை கட்டியது….
தெரு முனை வரை சென்றவர்கள் வீட்டின் வாசலில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்தே மிரண்டு அடுத்து ஒரடி கூட முன்னேறாமல் அப்படியே நின்று விட்டனர்,..

பயத்திலும், கூச்சத்திலும் திரும்பி செல்வதற்காக நின்ற ஜெய்யின் முழங்கையை இறுக்க பிடித்த தேவா,,, மரியாதையா வந்துரு,,,இல்லனா உன்ன கொன்றுவேன் என கூட்டத்தை பார்த்தப் படியே அவனை மிரட்ட….

டேய் வேணும்னா என்ன கொன்னுக்க டா…அங்க மட்டும் கூப்பிடாத….  எவ்ளோ கூட்டம் பாத்தியா? இந்த மாதிரி ஃபங்கஷனுக்கலாம் நாம போக கூடாது டா,… இதுலாம் லேடீஸ் தான் போவாங்க… பசங்க போக மாட்டாங்க…..
டேய் வாசல்ல பாரு எத்தன பசங்க நிக்குறாங்கனு… நீ வா என தர தர வென இழுத்து செல்ல,,, ஜெய் அவன் இழுத்த இழுப்பிற்கு பின்னால் சென்றுக் கொண்டிருந்தான்…..
    தர்ஷினியின் வீட்டு வாசலை அடைந்த தும்,, திரு திருவென இருவரும் விழித்துக் கொண்டு நிற்க,,, யாரும் அவர்களை கண்டுக் கொள்வதாய் இல்லை,,, இது தான் சரியான சமயம் என இருவரும் உள்ளே செல்ல ஒரு கரம் பிடித்து ஜெய்யை இழுத்தது,,

   முடிஞ்சிது.. மானம் போச்சி என வாய் விட்டே புலம்பிக் கொண்டு திரும்பிப் பார்க்க,,, கலாவதி தான் புன்னகையுடன் நின்றிருந்தார்….

 

மா நீ எங்க மா இங்க? என விழி விரித்து தேவா தனது தாயிடம் அசடு வழிய….
ஒஹ் நா வந்த து சார்க்கு தெரியாது பாரு.. நா கேட்க வேண்டியத நீ கேக்குற… ஆமா எதுக்கு டா ரெண்டு பேரும் இங்க வந்திங்க? என முறைத்தப் படி கேட்கவும்

சாப்பிட… சட்டென ஜெய் உரைக்கவும்,,, தேவா ஜெய்யை திரும்பி பார்த்தான்…. என்ன டா பாக்குற? நீ தான இங்க வெரைட்டியா சமைச்சிருப்பாங்க சாப்பிடலானு சொன்ன,,, அதான வந்தோம் என மூட்டை மூட்டையாய் புழுக
தேவாவும் ஆம் என்பது போல் தலையாட்டினான்….

அவர்கள் கூற்றில் சிரித்த தேவாவின் தாய் கலாவதி சரி சரி உள்ள போங்க,,, சடங்கு சுத்தி முடிச்சப் பிறகு  தான் சாப்பாடு என சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்க்க சென்றதும்,…. ஜெய்யும், தேவாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்,,.
அவனை நீண்ட நேரம் காக்க விடமால் அறையில் இருந்து வெளியே வந்தாள் அவனது தேவதை,,,, அரக்கு நிற ,தாவணிப் பாவாடையில் அம்சமாய்,,, மார்கழிப் பனி விழுந்த புது பூவைப் போல் அவளின் பால்வடியும் முகம் அழகாய் மின்னியது,… கன்னத்தில் சந்தனம் பூச புன்னகை முகத்துடன் அமர்ந்திருந்தாள்….
தேவா அவளைப் பார்த்து இமைக்க மறந்து நின்றிருக்க,,, இது வரை தான் பார்க்காத தர்ஷினியாய் புதிதாய் தெரிந்தாள்,,,,

என்ன அழகா இருக்கா! என மனதிற்குள் நினைத்து மெய் மறந்து,,அவளை தன் கருவிழிக்குள் நிரப்பிக் கொண்டு அசையாமல் நின்றிருந்தான்….
அப்போது அவளின் முறைப் பையன் ஒருவன் வந்து அவளுக்கு மாலையிட்டு, கழுத்தி செயின் போட.. வயதான பெண்மணி ஒருவர்,, பாத்துக்கடி ராசாத்தி,, இப்பவே உன் முறை மாமன் உனக்கு தங்கத்துல செயின்,, மோதிரம் போட்டு அழகு பாக்குறான்.,, மாமன் சீர் குமிஞ்சி கெடக்கு,,, இத விட என்ன வேணும்,,,!? படிச்சு முடிச்சதும் இவனுக்கே கல்யாணம் பேசி முடிங்க என்றதும் அங்கிருக்கும் கூட்டமே சிரிக்க,,, ஒருவனுக்கு மட்டும் பற்றிக் கொண்டு வந்தது…

தேவா கடுப்பில் தர்ஷிணியின் முகம் பார்த்தப் படி நின்றிருக்க,,, தர்ஷிணிக்கு தேவாவும் ஜெய்யும் வந்தது தெரியவில்லை….தலையை தொங்கப் போட்டப் படி தான் அமர்ந்திருந்தாள்,.
அப்போது ,,,ஜெய் தேவாவின் காதில் டேய் பாத்தது போதும்,, வா டா போவோம்,,, இதுக்கு மேல இங்க நிக்க கூச்சமா இருக்கு டா… பந்தி வேற போட்டுட்டாங்க,,, சீக்கிரம வா டா என வழுக் கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றிருந்தான்.. தேவாவின் கண்களும், மனமும் அவளை விட்டு அகல மனமின்றி சென்றது,,,,
சாப்பிட சென்ற ஜெய்யை சாப்பாடு வேணாம் வா போவோம் என அழைத்து செல்ல,, ஜெய்யின் பார்வை முழுதும் அங்கு தட்டு முழுக்க இருக்கும் ஜாங்கிரியின் மேல் தான்…..
டேய் உனக்கு என்ன பைத்தியமா டா? சாப்பிட விடாம இழுத்துட்டு வந்துட்ட,,, எவ்ளோ ஸ்வீட்ஸ் தெரியுமா இருக்கு…ச்சீ போடா என உண்மையான கோவத்தில் ஜெய் கத்தவும்….

 

நீ சொன்னது உண்மை தான் டா என்றான் தேவா….
என்ன உண்மை? என்பது போல் கடுப்பில் நின்ற ஜெய்யிடம்….

இதுக்கு பேரு தான் லவ்வாடா? என தேவா கேட்க ஜெய் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்துக் கொண்டான்.….
டேய் சத்தியமா அவ வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிட்டா என்னால ஏத்துக்க முடியாது டா,,, இப்ப பாரு ஒரு கிழவி தர்ஷிணிய அவ முறை பையனோட சேர்த்து வச்சி பேசுனதையே என்னால தாங்கிக்க முடியல….கடுப்பா இருந்துச்சி டா…. கண்டிப்பா இது லவ் தான் போல டா,… என புலம்பி தள்ளினான்….
அப்ப போய் சொல்லு உன் லவ்வ… படிக்குற வயசுல லவ்வானு எல்லாரும் சேர்ந்து உன்ன கும்மாங்க் குத்து குத்துவாங்க…. அவ்வளவு ஏன் நம்ம தர்ஷிணியே உன் கூட பேசுறத நிறுத்துறது கன்ஃபார்ம் என ஜெய் சொன்னதும்.…, தேவாவிற்கு வயிற்றில் பய உருளை உருண்டது……
வேணாம் என்னோட கெட்ட புத்தியால என் நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ப இழக்க விரும்பல… இதுக்கு பேரு லவ் இல்ல….சும்மா அஃப்ஃபெக்ஷன் தான் போல… எதையும் சொல்லி அவ என்ன விட்டு போய்ர கூடாது,.. இந்த ஜென்மத்துல அவ ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் போதும்….. மூளை சொல்ல மனம் ஏற்கவில்லை…
இரவு முழுக்க உறக்கம் இல்லை, இன்றுப் பார்த்த தர்ஷிணியின் அழகு முகமும், சிரிப்பும் அவன் கண் முன் வந்து செல்ல…. சிறுவனுக்கு என்ன செய்வதென புரியவில்லை…, புரண்டு புரண்டு படுத்திருந்தான்….

தொடரும்.,…

ஹாய் டியர்ஸ்  நிறைய பேர் படிக்கிறீங்க… பட் ஸ்டார் குடுக்க மாட்டுறீங்க…. ப்ளீஸ்  உங்க ஸ்டார்ஸ் தான் என்னை மேலும் ஊக்கப்படுத்தும்….. இந்த கதை  பிடித்திருந்தால்,, எனக்கு ஸ்டார் குடுக்க மறக்காதீங்க…  நன்றி 🙏🙏🙏

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 56

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தேவதை 2”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!