தேவை எல்லாம் தேவதையே…

5
(23)

தேவதை 36

டேய் எவ்ளோ கீழ்தனமான ஜென்மமா இருக்க? உன்ன போய் லவ் பண்ணா பாரு டா என அவன் மேலே ஏறி அமர்ந்து தேவா குத்து விட செல்ல…

அவனை தடுத்து கீழே புரட்டி அவன் மேல் ஏறி அமர்ந்தவன், என்னையே அடிச்சிட்டல்ல, இப்போ போய் அவகிட்ட நா உன்ன லவ் பண்றது உன் பிரெண்டு தேவாவுக்கு புடிக்கல., அவனுக்கு பொறாமை அதான் என்ன அடிச்சிட்டான்னு சொல்லி என்ன பண்றேன்னு பாரு டா…..

யார்ரா யார்ரா பொறாமைல பொங்குனா? என் தேவதை டா அவ, அவளை சின்ன வயசுலேந்து எவ்ளோ லவ் பண்றேன்னு தெரியுமா? அப்டி இருந்தும் அவ உன்ன விரும்புறான்னு தெரிஞ்சும் அவ சந்தோசத்துக்காக ஒதுங்கி போனேன், என்ன போய் பொறாமை புடிச்சவனு சொல்ற… அவ கிடைக்க நீ எவ்ளோ குடுத்து வச்சிருக்கணும்னு தெரியுமா? ஆனா ச்சி நீ அவளை போய்…..தப்பா எப்படி டா மனசு வந்துச்சு…. தேவாவின் வாயில் கோபத்துடன் உண்மை வந்ததும், அப்பாடா என அவன் மேலிருந்து எழுந்த வசி…

தன் கையை உதறி கொண்டு, சட்டையை சரி செய்த படி அவனை பார்க்க…

தேவாவுக்கு இவனை அடித்து பெரிய தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் அப்போது தான் வந்தது.. இதை காரணம் காட்டி அவளை ஏமாத்தி விடுவானோ! உள்ளுக்குள் பீதியாக உடனே எழுந்து நின்றவன்

டேய் பாவம் டா அவ உன்ன உயிருக்கு உயிரா லவ் பண்றா டா..

யாரு அவ? நீ பாத்த….

இவ்ளோ சீரியஸா பேசுறேன் நக்கல் மயிறு பண்ற?

டேய் போடா அங்குட்டு காமெடி பண்ணிக்கிட்டு….

டேய் டேய்…..ப்ளீஸ் அவளை ஏமாத்திராத டா அவளால தாங்கிக்க முடியாது.. நா அடிச்சதுக்கு வேணும்னா மன்னிப்பு கேட்குறேன்.. வேணும்னா என்ன திருப்பி கூட நாலு அடி அடிச்சிக்க அவளை ஏமாத்த மட்டும் செஞ்சிராத என கண் கலங்கி நின்றவனை உற்று பார்த்த

வசி., புன்னகைத்த படி கை தட்டினான்…

ஏற்கனவே கடுப்பில் நின்றிருந்த தேவாவிற்கு அவன் செய்கை அவனை நக்கல் செய்வது போல் தோன்ற அவனை முறைத்தான்….

ஹாஹா டேய் எங்க டா இருக்கிங்க நீங்கல்லாம்? எப்டி எப்டி நீ உயிருக்கு உயிரா லவ் பண்ணுவியாம்! ஆனா அவளுக்கு யார் மேலயாச்சும் காதல் வந்தா உடனே உன் லவ்வ தியாகம் பண்ணி, தியாகியா போயிருவியா? என்ன இங்க உனக்கு தியாகி பட்டமா குடுக்க போறானுங்க!? நல்லா வந்து சேர்ந்தீங்க டா என சிரித்தவனை தேவா ஒன்றும் புரியாமல் பார்த்தான்…

என்ன டா லுக்கு விடுற? நீ அவளை லவ் பண்றனு எப்பவோ எனக்கு தெரியும்.. என்றதும் தேவா அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தான்…

ஹ்ம்ம் முதன் முதல்ல அவ என்ன பத்தி உன்கிட்ட ஏதோ பேசுறப்பவே உன் கண்ணு கலங்குனத பாத்தேன்.. அதுக்கு பிறகு ஜெய் ஒரு நாள் நம்ம கேம்பஸ்ல நின்னுகிட்டு அவகிட்ட போய் லவ்வ சொல்லு டா மறச்சி வைக்காதனு உனக்கு அட்வைஸ போட்டானே! அப்போ நா நீங்க பேசுறத காதுல வாங்கிட்டு யார்ரா அது னு எட்டி பார்த்தா நீங்க 2 பேரும் நின்னு பேசிகிட்டு இருந்திங்க..

நீங்க தர்ஷினியோட நின்ன பசங்கனு உங்கள பாத்ததுமே தெரிஞ்சிகிட்டேன்.. அந்த பொண்ணு யாரா இருக்கும்னு தெரிஞ்சிக்க தான் ஆர்வமா இருந்தேன்… அது தர்ஷினினு போக போக தான் தெரிஞ்சிது….

எப்படினு தெரியுமா? ஒவ்வொரு தடவையும் அவ என்கிட்ட நெருங்க நெருங்க உன் வேதனைய உன் கண்ணீரும், உன் முக மாற்றமும் எனக்கு காட்டி குடுக்கும்…

அது மட்டும் இல்லை சார், அன்னைக்கு நீங்க தியேட்டருக்கு வந்த விஷயமும் தெரியும்.. நீ தான் ஷில்பானால பாத்ரூம்ல பூட்டி கிடந்தவள காப்பாதுனங்குற விஷயமும் எனக்கு தெரியும்…. இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் அன்னைக்கு உன் வீட்டுக்கு வந்தப்ப உன் டைரிய படிக்குற வாய்ப்பு எனக்கு கெடச்சுது… தப்பு தான் உன் அனுமதி இல்லாம படிச்சிட்டேன்…

ஆனா அந்த டைரிய படிச்ச பிறகு தான் நீ அவ மேல சின்ன வயசிலேந்து எவ்ளோ அன்பு வச்சிருக்கணும் எனக்கு தெரிஞ்சிது., உன் லவ்வ பாத்து நா மிரண்டு போயிட்டேன் என்றதும் தேவா அசையாமல் உறைந்து போய் நின்றவன் தான், அவன் பேசுவதை மட்டுமே கேட்டு கொண்டிருந்தான்….

அப்புறம் இன்னோரு முக்கியமான விஷயம், அது என்னனா! அவ என்ன உண்மையாவே லவ் பண்ணல என்றதும் தேவா கண்கள் விரிய அவனை பார்க்க..

ஹ்ம்ம் எஸ் அன்னைக்கு என்கிட்ட வந்து அவ ப்ரபோஸ் பண்ணப்ப கடமைக்கு சொன்னது நல்லாவே தெரிஞ்சிது… என்ன ரீசன்னா ஒன்னு உங்க மேல உள்ள கோவம் , அப்புறம் ஷில்பாவ பழி வாங்கணும் ….அவளுக்கு என் மேல கிரஷ் இருந்தது என்னமோ உண்மை தான், ஆனா ஷில்பா அவள என்கூட சேர்த்து வச்சி பேசுன கோவமும் தான் என்மேல இல்லாத காதல சொல்ல தோணிற்கு….

தேவா இவ்வளவு நேரம் இல்லமால் அவன் சொன்னதை கேட்டு கசந்த புன்னகை ஒன்றை சிந்தினான்… சீனியர் நல்லாருக்கு சீனியர் நல்லா சப்ப கட்டு கட்டுறீங்க… உங்களுக்குள்ள லவ் இல்லாமலா அன்னைக்கு ரெண்டு பேரும் முத்தம் குடுத்துகிட்டீங்க!?

முத்தமா!? என்னடா உளறுற எப்ப நடந்துச்சு? உண்மையாகவே வசிக்கு ஒன்றும் விளங்கவில்லை….

தேவாவிற்கு தெரியும் வசி ஒரு ஜெனியூன் பர்சன் அவன் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அதனால் அதற்கு மேல் அதை பற்றி கேட்கவில்லை… ஒரு வேளை தான் தவறாக புரிந்து கொண்டோம் என்பதை சரியாக உணர்ந்து கொண்டான்…

என்ன சீனியர் என்ன சொல்லிட்டு நீங்க இப்ப உங்க லவ்வ தியாகம் பண்றீங்களா?

டேய் சத்தியமா இல்லடா… நா அந்த அளவுக்கு நல்லவன் கிடையாது, எனக்கு அவளை புடிக்கும் அவ்ளோ தான், உன்னையும், ஜெய்யயும் எவ்ளோ பிடிக்குமோ அப்டி தான்… அவ தான் லவ்ன்னு தப்பா நெனச்சிட்டு சுத்திகிட்டு இருந்தா… அவ எப்ப என்கூட ஊர் சுத்த வந்தாலும் எப்போ பாரு உங்க நியாபகம் தான் அப்செட்டா தான் இருப்பா, சோ எப்பவும் அவ லைஃப்க்கு நீ மட்டும் போதும் என்றதும் தேவா அவனை தான் பார்த்தான்…

சாரி நீங்க ஐ மீன் உங்க பிரெண்ட்ஷிப் போதும் அத தான் சொல்ல வந்தேன் என மழுப்பி விட்டான்…

சரி சீனியர் அவ வேற ஒருத்தனை நெனச்சிட்டு இருக்கானு சொன்னீங்களே அது யாரு?

ஹ்ம்ம் தெர்லயே நீங்க தான் கண்டு பிடிக்கணும்.. பட் அவ மனசுல நா இல்லை டா அது மட்டும் உண்மை.. அத அவளே என்கிட்ட சொல்லிட்டா என துக்கம் தொண்டை அடைக்க கூறினான்…

நீங்க பொய் சொல்றீங்க சீனியர்.. அவ மேல உங்களுக்கும் விருப்பம் இருக்குனு எனக்கு தெரியும்….

மே பி… பட் அவளுக்கு என் மேல இல்லையே.. அத அவ கூட பழகுன 2 நாளுல தெரிஞ்சிட்டு தென் அந்த விஷயத்தை அவ வாயால வரவைக்க தான், அன்னிக்கு ப்ரோக்ராம் நடக்கும் போது அவளை வெளில அழைச்சிட்டு போய் முத்தம் குடுக்க ட்ரை பண்ணேன்… பட் அவ தடுத்துட்டா அப்போவே அந்த நிமிஷமே அவ மனசுல உள்ளத என்கிட்ட கொட்டிட்டா… என் மனசுல நீங்க இல்ல சீனியர், நா ஏதோ ஒரு குழப்பத்துல உங்கள லவ் பண்றேன்னு சொல்லிட்டேன் சாரி சீனியர் னு…

இதுக்கு மேல உன் விருப்பம் டா நா சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நா இன்னும் ஆறு மாசத்துல என் படிப்பு முடிஞ்சி எங்கப்பா கூடவே லண்டன் போய் செட்டில் ஆக போறேன்., எனக்குன்னு அங்க ஒரு ட்ரீம் ஜாப் இருக்கு.. இதுல இந்த லவ், மேரேஜ் அதுலலாம் என் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல டா… சரி இதெல்லாம் விடு இது உனக்கான ஆப்பர்ச்சூனிட்டி உன் காதல நீ எப்ப சொல்ல போற? இனிமேலாச்சும் சொல்லு டா, மனசுல பூட்டி வச்சிக்காத என்ன ஓகே வா…

ஹ்ம்ம் சீனியர்… ஆனா எனக்கு என்னமோ உங்கள நெனச்சா தான் கவலையா இருக்கு உண்மையாகவே வசியை நினைத்து வருத்தப்பட்டான்…நிறைய முறை தர்ஷி மீதான காதலை வசியினிடத்தில் கண்கூட பார்த்திருக்கிறான் அவனை ஏமாற்ற முடியுமா?

அவன் தோளில் கை போட்ட வசி, டேய் மச்சான் என் லைஃப்ல உங்கள என்னைக்குமே மறக்க மாட்டேன் டா, எப்பவுமே உங்களோட வெல் விஷர் நான்.. ஓகே டா டைம் ஆகிருச்சு நா கிளம்புறேன் நீ தூங்கு என்றவன் ஆல் தி பெஸ்ட் என கை கொடுக்க, தேவாவும் பதிலுக்கு சங்கடத்துடன் கை கொடுத்தான்… இன்னும் 3 டேஸ்ல எனக்கு பர்த்டே நீ தர்ஷி, ஸ்ருதி, ஜெய் எல்லாம் என் வீட்டுக்கு வரணும்.. என்றவன் ஒற்றை விரலால் புருவத்தை நீவினான்

அப்போ நா தர்ஷிய பத்தி தப்பா பேசுனதுக்கு…..

நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் சீனியர் எனக்கு எல்லாம் புரிஞ்சுடுச்சு….

ஹ்ம்ம் அழகாய் புன்னகைத்து, நா வரேன் பை என்றவன் அங்கிருந்து வெளியேறி தன் காரில் ஏறி செல்ல, செல்லும் அவனையே மனவலியுடன் வெறித்து பார்த்து கொண்டிருந்தான் தேவா…

காரில் செல்லும் வசி உதட்டில் புன்னகை பூக்க… தர்ஷியை பற்றிய எண்ணங்களை மனதில் ஓட விட்டு, பிளூடூத்தில் பாடலை ஓட விட… மனம் ரணமாய் கண்களில் கண்ணீருடன் அவள் நினைப்பில் ஆழ்ந்திருந்தான்..

 

உன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே…

மௌனம் கொல்வது கஷ்டம்…

நாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்…

 

சொற்கள் என்பதில் மிஞ்சும் மொத்தமும்…

மௌனம் என்பதில் உள்ளது உள்ளது…

மௌன மிஞ்சினால் பேசி விடுவதே நல்லது…

 

சூரியனை போலே என் முன்பு வந்தாய்…

பனி துளி போலே பணிந்துவிட்டேனே…

 

உயிரே இதயம்……

உனக்கே உனக்கே…

 

ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…

ஆயுள் ரேகை நீள செய்கிறதே…

 

காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…

செல்லமாக மிரட்டி செல்கிறதே…

உயிரே இதயம்……..

உனக்கே உனக்கே……..

தர்ஷி என இமை மூடி உச்சரித்தவன்….

என்னவளே!

ஒரே ஒரு முறை

நான் கடக்க வேண்டிய நாட்களை

வாழ்ந்து பார்…..

உன் தொலைவுகளின் வலியும்

உன் குரல் கேட்காத தருணங்களும்

உன் முகம் பார்க்கா நிமிடங்களும்

கடக்க

எத்தனை கடுமையானதென உனக்கு புரியும்……

அவள் மீது தவறில்லை….

எனக்கு இல்லை என்று தெரிந்தும் காதலித்தேன் அவளை…..

சேர்ந்து வாழ…..

எழுதப்பாடாத வீதியில் கூட

எழுதப்பட்ட சில நிமிடங்கள் தான்

நீயும் நானும் சேர்ந்து பயணித்த நொடிகள்…..

தொலைதூரம் சென்றாலும்

போதும், தொலைக்க விரும்பவில்லை…..

உன் நினைவுகளை…….

சூழ்நிலைகேற்ப சிலரின் மனம் கல்லாய் மாறி விடத்தான் செய்கிறது… அது நேசித்த உள்ளமாய் இருந்தாலும் கூட……

தேவாவிற்கு ஒரு வேளை அவள் தன்னை தான் காதலிக்கிறாளோ என்ற சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது… சிறிது நாட்களாக அவள் பார்க்கும் பார்வையும், பேசும் பேச்சுக்களும், ஆமாம் என்று சொல்ல…

வேணாம் டா திரும்ப திரும்ப தப்பு பண்ற..எதிர்ப்பார்த்து ஏமாந்ததுலாம் போதும்… கொஞ்சமாச்சும் திருந்து என மூளை அறிவுறுத்த….

ஏண்டி வண்டு, உன் முன் கோவத்தால பாரு எல்லாருக்கும் எவ்ளோ சங்கடம்னு, ஜெய், நா, ஸ்ருதி அப்புறம் வசி… எல்லாருக்கும் ரொம்ப கஷ்டத்த குடுத்துட்ட, தப்பு டி உனக்கு நல்ல பாடம் சொல்லி குடுக்கணும்… இல்லனா கஷ்டம் என்றவன் அவள் எண்ணங்களில் துயில் கொள்ள நினைக்க முடியவில்லை…..வசியின் மீதான கவலை அவனை தூங்கவிடவில்லை…..

தொடரும்……

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!