தேவதை 8
சேராமல் போனாலும் என் தீராத காதல் நீ.. உன்னை என்னால் மறக்கவும் முடியாது, விலக்கவும் முடியாது காலம் முழுக்க உன்னை காதலித்தே வாழ்ந்து விடுவேன்… அது போதும் கண்மணி எனக்கு.
என வானத்தில் தெரியும் நிலவு மகளை பார்த்தவாறு, தன்னவளின் நினைப்பில் கரைந்துக் கொண்டு இருந்தான் தேவா….
போன் அடிக்கும் சத்தத்தில் எடுத்து பார்க்க ஜெய் தான் கால் செய்திருந்தான்.. ஹலோ சொல்லு டா என்ன பண்ற? என தேவா கேட்க.
சும்மா தான் டா மச்சான் கால் பண்ணேன்.. என்ன பண்ற சாப்டியா?
ஹ்ம்ம் மாடியில படுத்திருக்கேன் டா.. நாளைக்கு காலேஜ் நமக்கு லீவ் தான,, வீட்டுக்கு வா டா மனசு சரி இல்லை… கொஞ்ச நேரம் பேசிட்டு இங்கயே தூங்கு.. நாளைக்கு வீட்டுக்கு போகலாம் என்றதும்..
உடனே ஜெய்யும் சரி டா வரேன் இரு என போனை கட் செய்யப் பார்க்க…
டேய் மச்சான் என மீண்டும் அழைத்தான் தேவா…
என்னடா சொல்லு…
சாரி டா.. இன்னைக்கு உன்கிட்ட அப்டி நடந்துகிட்டதுக்கு..
ஹ்ம்ம் பரவாயில்ல விடுடா .. வீட்டுக்கு வரேன் என போனை கட் செய்திருந்தான் ஜெய்…
எப்போய் நா தேவா வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வரேன்.. நீங்களும் அம்மாவும் பாத்துக்கிடுங்க.. என சொல்ல
ஏலேய் செத்த மூதி இன்னேரம் எதுக்கு போற? அவங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா? என சாடினார் அவனது அப்பா மைக்கேல்..
அவனுக்கு உடம்புக்கு முடியலையாம், அவன் தான் கூப்பிட்டான் போயிட்டு வரேன் என தனது பைக்கை ஸ்டார்ட் செய்யவும்,,
ஹ்ம்ம் இந்த காலத்து பசங்க என்ன பண்றானுங்க? எங்க போறானுங்க? ஒன்னும் விளங்கல… ஏலேய் ஏதும் பொட்ட புள்ளய இழுத்துகிட்டு வந்திராத எனக் கத்தினார்…
அப்போது ஜெய்யின் தாய் சரசு வாசலுக்கு வந்தவர்,, யோவ் என்னையா நீ ரொம்ப நல்லவன் மாதிரி பேசுற.! நா ஸ்கூல் படிக்கிறப்பவே நீ என் பின்னால சுத்தி என் மனச மாத்தி புட்ட.. என் படிப்பும் போய் நீ தான் வேணும்னு ஊர விட்டு ஓடி வந்து உன்ன கல்யாணம் பண்ணி ,,ஒரு புள்ளய பெத்துக்கிட்டு வாழ்ந்துட்டு கெடக்கேன் என சலித்துக்கொள்ள…
அப்போது சரசு அருகே சென்ற மைக்கில் திரும்பி ஜெய்யை பார்க்க அவன் இன்னும் அங்கு தான் நின்றிருந்தான்…
ஏலே ஓடு உன் சினேகிதன் கூப்டான்ல.. இன்னும் இங்க நின்னுகிட்டு என்ன பாத்துகிட்டு இருக்க? ஓடு என விரட்டி அடிக்க,, சரிதான் என சிரித்த ஜெய் அங்கிருந்து வண்டியை எடுத்திருந்தான்….
ஏம்புள்ள அவன் கிட்ட போய் இதெல்லாம் எதுக்கு பினாத்திகிட்டு கெடக்க.. ஏன் நா உன்ன ஒழுங்கா பாத்துக்கலையா? என சரசுவின் முந்தானையை பிடிக்க…
யோவ் விடுயா! புள்ள காலேஜ் போற அளவு வளர்ந்து கெடக்குறான் நியாபகம் இருக்கா? விவஸ்த்தை கெட்ட மனுஷா என வீட்டுக்குள் செல்லவும்,, அவள் பின்னால் நாய்க்குட்டி போல் ஓடினார் மைக்கேல்….
மைக்கேலும், சரசுவும் சிறு வயதிலேயே காதலித்து ஊருக்கு பயந்து ஓடி வந்தவர்கள்,, மைக்கேல் படகு ஓட்டி மீன் பிடித்து வந்து அதை விற்று தான் பிழைப்பை நடத்துகிறார்…கடன் இல்லாத சாதாரண வாழக்கையை நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்,, இது வரை தனது தாய் தந்தை சண்டையிட்டு கூட அவன் பார்த்தது இல்லை… அந்த அளவிற்கு மைக்கேல் உயிராக தனது மனைவியை பார்த்துக்கொள்கிறார்…
ஜெய் வண்டியில் சென்றுக் கொண்டிருந்தவன் தனது போன் அடிக்கும் சத்தத்தில்,, பாக்கேட்டில் இருந்து போனை எடுத்துப் பார்க்க புது நம்பராக இருந்தது…
யோசனையுடன் காதில் வைத்தவன்,, ஹலோ யாரு எனக் கேட்க எதிர் முனையில் அமைதி…
ஹலோ இருக்கீங்களா? கேட்குதா? என சிறிது சத்தமாக கேட்க அப்போதும் எதிர் முனையில் அமைதி.. நெட் ஒர்க் கிடைக்கல போல என போனை அணைத்து வைத்து பாக்கேட்டில் பத்திரப்படுத்திக் கொண்டவன் ஒரு வழியாக தேவாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்,
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு,, வாசல் வழியாக இருக்கும் படிக்கட்டில் ஏறி மாடிக்கு செல்ல அங்கு மல்லாக்க படுத்து, நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டு இருந்த தேவாவின் அருகில் சென்று படுத்துக் கொண்டான் ஜெய்….
வந்துட்டியா டா? ஏண்டா இவ்ளோ லேட்டு? என சோர்வாக கேட்டான் தேவா…
அட எங்கப்பன சமாளிச்சுட்டு…. என ஏதோ சொல்ல வருவதற்குள், மீண்டும் போன் ஒலிக்க,, அதே புது நம்பர்.. யாருடா இது? என எழுந்து அமர்ந்தவன்,, ஒரு நிமிஷம் இருடா என ஜெய் காதில் வைத்து.. ஹலோ யாருங்க அது? கால் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க? என கேட்க
எதிர் முனையில் அமைதி…
இங்க பாருங்க.. யாருனு சொல்லுங்க. இந்த விளையாட்டு லாம் வேணாம் என்றதும்,, கண்களை சுருக்கி தேவா அவனை என்ன என்பது போல் பார்த்தான்…
இரு டா என கையை காட்டி போனை லவுட் ஸ்பீக்கர் போட்டு வைக்க,, தேவா படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தான்…
இப்ப நீ யாருனு சொல்லலைனா நா உன் நம்பர பிளாக்ல போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்.. என்றதும்
இல்ல இல்ல வேணாம் ப்ளீஸ் பிளாக்ல போட்டுறாதீங்க, என சட்டென இனிமையான பெண் குரல் கேட்க இருவருக்குமே அதிர்ச்சி… ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..
ஹலோ இருக்கீங்களா? என மீண்டும் அந்த பெண்ணின் குரல் ஒலிக்க..
யாரு நீங்க? எதுக்கு கால் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க? என் நம்பர் எப்படி தெரியும்?
அ அ அது நம்ம கிளாஸ் அட்டென்டன்ஸ் ரெஜிஸ்டர்ல இருந்து எடுத்தேன்.. கோச்சிக்காதீங்க.. என மெலிதான குரலில் சொல்லவும்..
தேவா புன்னகைத்தவன்,, ஜெய்யின் தோளில் தட்டிக் கொடுத்து,, மெதுவாக நீ நடத்து மச்சான் என கிண்டல் அடித்தவாறு படுத்துக் கொண்டான்…
அட ஏண்டா நீ வேற? என கிசு கிசுத்து விட்டு.. ஏம்மா எதும் பிராங்க காலா? எந்த ஏரியா பைய நீ? குரல் மாத்தி பேசுற? என உண்மையான சந்தேகத்துடன் கேட்கவும்..
ச்ச இல்லங்க.. நானும் நீங்களும் ஒரே கிளாஸ் தான்.. தினமும் உங்கள பார்ப்பேன்.. நீங்க தான் என்ன கண்டுக்க மாட்டீங்க.. என்றாள் அந்த பெண்
ரைட்டு நீ என்ன ஓட்டணும்னு முடிவு பண்ணிட்ட, பண்ணிக்க என்றதும்
சத்தியமா இல்லங்க.. நா பொண்ணு தான் என்றாள் எதிர் முனையில்..
ஓஹ் சரி எதுக்கு மா என் நம்பர எடுத்த? அப்டி எதுடா செல்லம் உன்ன மயக்கிச்சி? என் முத்து போன்ற பற்களா! இல்ல சில்லறை போன்ற சிரிப்பா! என தேவாவை பார்க்க, அவனும் சிரித்தான்..
இ இ இல்ல நீங்க பிரெண்ட்ஷிப்புக்கு குடுக்குற மரியாதை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, அதான் என்றதும் ஜெய் விழி விரித்து தேவாவை பார்க்க…
அவன் உதடு பிதுக்கி கட்டை விரலால் தம்ப்ஸ் அப் காட்டினான்..
ஏமா நீ என்ன சொல்ற? காலேஜ் வந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள என்ன தெரியும் என்ன பத்தி.. தேவா இந்த தர்ஷி எதும் என்ன பிராங்க் பண்றான்னு நெனைக்குறேன் டா.. என திரும்பி தேவாவிடம் சொல்லியவன்,
எங்க பக்கத்துல இருக்காளா? கொஞ்சம் போன குடு என பிதற்றினான்…
அதெல்லாம் இல்ல.. நீங்க எதுக்கு என்ன நம்ப மாட்டுறீங்க..எனக்கு புரியல என்றவளிடம்
அப்ப சரி நாளைக்கு காலேஜ் லீவ் தான, மறுநாள் வந்து நீ என்ன பாரு, அப்ப நம்புறேன் இப்ப போன வை என இணைப்பை துண்டிக்கவும்,,
தேவா அவனிடம் பைத்தியமா டா நீ? எதுக்கு கட் பண்ண? பேச வேண்டிதான என கடுப்படித்தான்..
நீ வேற டா இது உண்மையா பொய்யானு தெர்ல.., இதுல பேச வேற செய்யணுமா? எனக்கு என்னமோ இந்த வண்டு மேல தான் டவுட்டா இருக்கு.. அவளுக்கு ஒரு போன போடு, என்றதும் தேவா ஹ்ம்ம் என்றவன் தனது செல் போனை எடுத்து தர்ஷிக்கு கால் செய்துப் பார்க்க, அது வெயிட்டிங்கில் சென்றது…
என்னடா மணி 10 ஆகுது, இன்னேரத்துல இவ யார்கிட்ட பேசுறா? என்றதும் தேவாவிற்கு மனம் லேசாக சலனமானது..
ஹான் இப்ப புரிஞ்சி போச்சு டா, எனக்கு கால் பண்ணின பொண்ணு தான் அவளுக்கு கால் பண்ணி என்ன பிராங்க் பண்ண விஷயத்தை சொல்லிட்டு இருக்கணும்.. இவள என்றவன் தேவா சொல்ல சொல்ல கேட்காமல் மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைத்த படியே இருந்தான்…
கால் வெயிட்டிங்கில் சென்றதே தவிர,, அவள் காலை எடுப்பதாய் தெரியவில்லை..
என்ன வச்சி தான் டா ரெண்டு பேரும் கிண்டல் அடிச்சிட்டு இருக்காளுங்க போல,, உண்மை நமக்கு தெரிஞ்சிட்டுனு அவளும் கெஸ் பண்ணிருப்பா,, அதான் போன எடுக்க மாட்டேன்றா,, திரும்ப அடிக்கட்டும் இருக்கு அவளுக்கு என 5 முறை அழைக்க அவள் எடுப்பதாய் இல்லை, வேறு ஒருவருடன் தான் பேசிக்கொண்டிருந்தாள்..
தேவாவிற்கு தான் பயம் வர ஆரம்பித்து இருந்தது… ஒரு நாள் கூட நைட் அவள் தேவாவிடம் பேசாமல் உறங்கியது இல்லை,, சில நேரம் அவளின் பேச்சு சத்தம் தாலாட்டுவதை போல் இருக்க தேவா அப்படியே செல் போனை காதில் வைத்து உறங்கியும் போவான்..
பல முறை அவர்கள் குடும்பத்தோடு ஆன்மீக பயணம், அல்லது சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்றாலும் கூட யாருடைய போனும் வாங்கி ஒரு முறையாவது பேசி விடுவாள்,, ஆனால்
இன்று தான் முதல் முறை அவனிடம் பேசாமல் இருக்கிறாள், அது மட்டும் அல்ல, அவன் காலையும் எடுக்காமல் இருக்க அவனுக்கு சந்தேகம் வலுத்தது…
ஜெய் அவன் முக போன போக்கை வைத்து என்னடா ஆச்சு? என்றான்
ஹ்ம்ம் என பெருமூச்சி விட்ட தேவா, டேய் அவ வசிகிட்ட தான் டா பேசிகிட்டு இருக்கா என்றதும் ஜெய்யிக்கு அதிர்ச்சி
எ எ என்னடா போன் பேசுற அளவுக்கு வந்துட்டாங்களா? என திக்கித் திணறி கேட்கவும்
ஹ்ம்ம் டா நம்பர் ஷேர் பண்ணேனு சொன்னா. அநேகமா அவன்ட தான் பேசிகிட்டு இருப்பா…
ஜெய் அவன் அருகில் படுத்து, அவனும் வானத்தை நோக்கியவன் உனக்கு வலிக்கலயா? டா என்றதும்
தேவா மெலிதான புன்னகையை சிந்தியவன், இனி வருத்தப்பட்டு ஒன்னும் ஆக போறது இல்ல.. மச்சான் தூங்கு என அவன் கண் மூடினான்…
ஜெய் தேவாவின் முகத்தை வெறித்து பார்த்தப் படியே உள்ளுக்குள், தனது நண்பனின் நிலையை எண்ணி வருந்தினான்..
சின்ன வயசில் இருந்தே பழகியவனுக்கு தெரியாதா? தேவாவின் காதலின் ஆழம் பற்றி.. ஜெய் உணர்ந்தது போல் அவனின் தேவதையும் உணர்வாளா? பார்ப்போம்….
தொடரும்….
ப்ளீஸ் ப்ளீஸ் டியரஸ் ஸ்டார்ஸ் குடுத்து சப்போர்ட் பண்ணுங்க 🙏🙏🙏🙏