அமெரிக்காவி ரோஹித் இராவுடன் டின்னர் சாப்பிடுவதற்காக வந்திருந்தான். சிரி, “என்ன, திடீர்னு டின்னர் எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று இரா கேட்க,
“அது வேற ஒண்ணும் இல்ல டார்லிங், என் அப்பாவோட சாப்பாட்டில இருந்து தப்பிக்கத்தான்.” என்றான்.
அதற்கு இரா, “அப்படின்னா, என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நீங்க என்னை கூட்டிட்டு வரலையா?” என்று கேட்டாள்.
“ஐயோ என் டார்லிங், உன்னைப் பாக்கணும்போல இருந்துச்சு, அதான் வரச் சொன்னேன்.”
“சரி.. சரி.. சீனியர் எப்போ இந்தியா போறீங்க?” என்று இரா கேட்க, அதற்கு ரோஹித், “ரெண்டு நாள்ல எக்ஸாம் முடிஞ்சிடும், அதுக்கப்புறம் போயிடுவேன்.” என்றான்.
இராவும் “நீங்க இந்தியா போனா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. அங்கே போயிட்டு என்னை மறந்துட மாட்டீங்களே?” என்று கேட்டாள்.
“இரா, நான் என்ன அங்க செட்டில் ஆகப் போறேன்? போயிட்டு கொஞ்ச நாளைக்கு அங்க இருந்துட்டு, நான் வந்துருவேன். அவ்வளவுதான், ஃபீல் பண்ணாத.” என்றான்.
பின்னர் இருவரும் பேசிக்கொண்டு சாப்பிட்டனர். அப்போது பார்த்து பார்வதி ரோகித்துக்கு கால் பண்ணினார்.
இராவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ரோஹித்தின் ஃபோன் சத்தமிட, அதை எடுத்துப் பார்த்தான், பார்வதியிடமிருந்து வீடியோ கால் வந்திருந்தது. “எங்க மம்மி” என்றவன் ஃபோனை எடுத்து,
“அம்மா, நீ சுமந்த பிள்ளை.. சிறகொடிந்த கிள்ளை..” என்றான். பார்வதியோ, “என்னடா, ட்ராமா பண்றியா? ஆமா, இந்த டைம்ல நீ எங்க இருக்க? பார்த்தா வீடு மாதிரி தெரியல.” என்றார்.
“ஆமாம் மம்மி நான் ஹோட்டலுக்கு இராவோட வந்திருக்கேன்.” என்றான். உடனே, “என்ன இரா அங்க இருக்காளா? என் மருமககிட்ட போனை கொடுடா..”
“வெயிட் மம்மி..” என்று ரோஹித் சொல்ல, இராவிடம் போனை நீட்டினான். அவளும் பயத்துடன், “வணக்கம் அத்தை.” என்றாள். அவரும், “வணக்கம், மா. எப்படி இருக்க? நல்லா இருக்கிறியா? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று கேட்டார்.
“ஆமா அத்தை எல்லோரும் நல்லா இருக்காங்க.” என்றாள் இரா.
“சந்தோஷம் இரா. நான் உன்கிட்ட ஒண்ணு கேட்க நினைச்சேன். நீ எப்படி இவன்கிட்ட போய் மாட்டின? உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?” என்று ரோஹித்தை கலாய்த்துவிட்டார். இராவும் சிரித்துக்கொண்டு, “என்ன செய்ய அத்தை, எனக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் போல இருக்கு.” என்றாள்.
இவர்கள் பேசுவதைக் கேட்ட ரோஹித், “என்ன, ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா?”
“ஆமா, நாங்க அப்படித்தான்,” என்று இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல, “இது சரி இல்லையே, மம்மி, ஜென்ரலா மாமியார்-மருமகள் கூட சண்டை போடுவாங்க, இது என்ன புதுசா இருக்கு?” என்றான். “அதெல்லாம் அந்த காலம், இது இப்போ இந்த காலம்.” என்றார் பார்வதி. “ஆமா ஆமா.. நாங்க சண்டை போடவே மாட்டோம்..” என்று இரா சொல்ல,
“அப்படி சொல்லு இரா.. இன்னைக்கு ஒரு பெரிய சம்பவம் நடந்துருச்சு,” என்றார் பார்வதி.
“என்ன ஆச்சு?”
“உன் அண்ணன் இன்னைக்கு என்ன பண்ணினான் தெரியுமா? நாங்க குலதெய்வம் கோயிலுக்கு போனோமா, அப்போ பரிகாரம் செய்யணும்னு ஜோசியர் சொல்லிட்டாரு. நூத்தி எட்டு குடம் தண்ணிய குளத்துல இருந்து எடுத்து வந்து, அன்னம் அம்மனுக்கு ஊத்திட்டு இருந்தா. கொஞ்ச நேரத்துல அவள் டயர்ட் ஆகவும், உங்க அண்ணன்…” என்றவர் நடந்ததை சொல்ல, இந்தப் பக்கம் இருந்த ரோகித்,
“என்ன அம்மா சொல்றீங்க, நம்மளோட நக்கீரரா அப்படி பண்ணினாரு?”
“ஆமா, ரோஹித், நேர்ல பார்த்த என்னாலேயே நம்ப முடியல. அது மட்டும் இல்ல, அவன் பொண்டாட்டி நடக்க முடியாமல் இருக்க, இவன் அவளை தூக்கிட்டு போய் அந்த பரிகாரத்தை முடிச்சான்னா பாத்துக்கோ..”
“நீங்க சொல்றது நிஜமா?” என்ற ரோகித் இராவிடம், “இரா என்னோட கையை கொஞ்சம் கிள்ளு. இது கனவா நனவானே தெரியல..” என்றதும் இராவும் அவனின் கையில் நன்றாக கிள்ளி விட்டாள்.
“அம்மா… அடிப்பாவி, எங்க டைம் கிடைக்கும்னு இருக்கியா? இப்படி வலிக்கிற அளவுக்கு கிள்ளியிருக்க..” என்றவன்,
தாயிடம், “மம்மி, நிஜமாவே நம்ம அண்ணன் தான் இதெல்லாம் பண்ணினானா? ஆமா அங்கே வந்ததும் ஏதும் பேய் பிடிச்சிருச்சோ?” என்று கேட்டான் ரோஹித்.
அதற்கு பார்வதி, “நானும் கூட அப்படித்தான் நினைச்சேன். ரொம்ப மாறிட்டான். அன்னம் தான் அவன் கூட பயந்து பயந்து பேசுறா. ஆனால் அதெல்லாம் போகப் போக சரி ஆயிடும்..” என்றார்.
“சரிம்மா இப்ப குலதெய்வம் கோயில் வேண்டுதல் முடிச்சாச்சா இல்லையா? நீங்க எப்ப வரிங்க?” என்று கேட்டார். “ஆமா வேண்டுதல் எல்லாம் சிறப்பா முடிஞ்சிடுச்சு சின்னு. ஆனால் இங்கிருந்து வர்றதுன்னா, தனியா வர முடியாது. அன்னத்தையும் அண்ணாவையும் அழைச்சிட்டுதான் வரணும். ரெண்டு பேருக்கும் பாஸ்போர்ட் எடுக்கணும், நிறைய வேலை இருக்கு. எப்படியும் வர கொஞ்ச நாள் ஆகும்.” என்றார்.
“மம்மி, உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். கொஞ்ச நாள், என்ன, ரொம்ப நாள் வேணும்னாலும் இருக்கலாம். நீங்க அங்க இருக்கும்போது தான் நான் வர முடியும். ப்ளீஸ், மம்மி, நான் வரும் வரைக்குமாவது அங்கேயே இருங்க. ரெண்டு நாள்ல எக்ஸாம் முடிஞ்சிடும், அதுக்கப்புறம் அடுத்த ஸ்டெப் இந்தியாவுலதான்.” என்றான்.
“சரி சின்னு பார்த்து பத்திரமா இராவை வீட்டில விட்டுட்டு நீயும் நேரத்திற்கு வீட்டிற்கு போ.. என்று பார்வதி சொல்ல, “ஓகே அம்மா.” என்றான்.
“இரா, நான் அமெரிக்கா வந்ததும் உங்க வீட்ல வந்து பேசுறேன் சரியா?” என்று கேட்டார். அதற்கு இரா, “அதாவது அத்தை, எங்க வீட்லயும் எங்க லவ் தெரியும். அவங்களுக்கும் ஓகே தான். நீங்க இங்க வந்ததுக்கு அப்புறம், உங்க வீட்டுக்கு அவங்க வரேன்னு சொல்லி இருக்காங்க.” என்றாள்.
பார்வதி, “பாருடா, இந்த காலத்து பசங்க ரொம்ப பாஸ்டா தான் இருக்கீங்க.” என்று சிரித்தார். இருவரும் பேசிவிட்டு ஃபோனை வைத்தார்கள்.
போனை வைத்து விட்டு வந்த பார்வதி, அனைவரையும் சாப்பிட அழைத்தார். வேலுச்சாமியை அந்த வீட்டில் இருக்காமல் இங்கே வந்து இருக்கும்படி கிருத்திஷ் வரும்போது கேட்டுக்கொண்டதால், அவரும், “சரி” என்று சம்மதித்தார். அவர்கள் நால்வரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டனர். எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும், சமையலறையில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தார் பார்வதி.
அவர் அருகில் வந்த அன்னம், “நீங்க போங்க அத்தை, நான் இந்த வேலையை முடிச்சுட்டு போறேன்.” என்றாள். அதற்கு அவரும், “இல்லம்மா, உனக்கு தான் கால் கை ரொம்ப வலிக்கும் நீ போய் தூங்கு. நான் தனியாவே முடிச்சிடுவேன். நீ போய் தூங்கு.” என்றார்.
“இல்ல, பரவால்ல அத்தை விடுங்க, நான் பண்றேன்.” என்று அன்னம் சொல்ல, அவரும், “இல்லம்மா, நீ போய் தூங்கு. ரொம்ப டயர்டா இருப்ப. போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. நாளைக்கு இந்த வேலையை பார்த்துக்கொள்ளலாம்.” என்று கிருத்திஷுக்கு கொடுப்பதற்காக பாலையும் கொடுத்து அனுப்பிவைத்தார்.
அதை எடுத்துக்கொண்டு வந்த அன்னம் கிருத்திஷிடம் கொடுக்க, அவன் அதை வாங்கி குடித்துவிட்டு, “நீ தூங்கு எனக்கு வேலை இருக்கு.” என்றான்.
‘இந்த மாமாவுக்கு வேற வேலையே கிடையாதா? எப்ப பாரு அந்த லேப்டாப்பை வச்சுக்கிட்டு வேலை செஞ்சுட்டு இருக்காரு.’ என்று மனதுக்குள் நினைத்தவள், எதுவும் பேசாமல் படுத்துவிட்டாள். கிருத்திஷ் லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவனது டி-ஷர்ட்டை அன்னம் பிடிப்பதை உணர்ந்தான். இதழ்களில் புன்னகை தோன்ற, ‘இவ என்னை வேலை பார்க்க விட மாட்டா போலயே.’ என்று திரும்பிப் பார்க்க, அன்னம் அவனது டி-ஷர்ட்டை பிடித்து, அவன் இடுப்பின் அருகில் தலையை வைத்து படுத்திருந்தாள்.
கிருத்திஷ் வேலையை முடித்துவிட்டு, லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு , அவள் அருகில் வந்து படுத்தான். அவளது மூச்சுக்காற்று அவன் முகத்தில் பட்டது. நேற்று போலவே, அவளது மச்சம் அவனைக் கவர்ந்தது. ‘எத்தனையோ பொண்ணுங்களை நான் பார்த்திருக்கேன், ஆனா ஏன் உன்னை பார்க்க மட்டும் நான் இப்படி ரசிக்கிறேன்னு எனக்கு தெரியல. நீ என்னை ஏதோ பண்ற அன்னம்.’ என்றான் கோபமான குரலில்,. ‘கிருத்திஷ் உன்னை யாராலயும் அசைக்க முடியாது. பி கான்ஃபிடன்ட். இன்னைக்கும் நேத்து மாதிரி எதுவும் பண்ணிடாத. அவ விருப்பம் இல்லாம இப்படி பண்றது தப்பு.’ என்று சொன்னவன், சிறிது நேரத்திலேயே அவளது இதழுடன் மெல்லிய ஒரு இதழ் தீண்டல் கொடுத்தான். அன்னத்தின் இதழைத் தீண்டும் ஒவ்வொரு நொடியும், ‘ரொம்ப போதை ஏத்துறடி நீ.’ என்றவாறு அவளிடமிருந்து விலகி, அவளை அணைத்துக்கொண்டு தூங்கினான்.