“இல்லை அத்தை இது போதும். நீங்க கொழுந்தனாரை கவனிங்க.” என்றாள்.
பார்வதி ரோகித்திடம், “சின்னு நீ போய் குளிச்சிட்டு வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன்.” என்றார்.
“ஓகே மம்மி. என்னோட றூம் எது?” என்று கேட்க, பார்வதி ஒரு அறையைக் காட்ட அதற்குள் சென்றான்.
வேலுச்சாமி பார்வதியிடம், “பார்வதி தம்பிக்கு நாட்டுக்கோழி எடுத்து வர்றேன். அதை சமைச்சிக் குடு.”என்றார்.
“அண்ணா இந்த இரவு நேரத்தில அவன் அப்பிடி சாப்பிட மாட்டான். நாளைக்கு மதிய சாப்பாட்டிற்கு சமைச்சிக் குடுக்கிறேன்.” என்றார்.
ரோகித் அறைக்குச் சென்றவன் போனை எடுத்து இராவிற்கு கால் பண்ணினான்.
“ஹலோ..” என்று தூக்க கலக்கத்தில் பேசினாள் இரா.
“ஹலோ இரா. சரிடா இந்த டைம்ல கால் பண்ணிட்டேன்.”
“சீனியர்..” என்றவள் எழுந்து அமர்ந்தாள்.
“சீனியர் அதெல்லாம் பரவாயில்லை. நீங்க பத்திரமா போயிட்டீங்களா? அத்தை எப்படி இருக்கிறாங்க?”
“ம்ம்ம் இப்போதான் வந்தேன் இரா. எல்லோரும் நல்லா இருக்கிறாங்க.. சரி நீ தூங்கு நாளைக்கு பேசலாம்.”
“ஓகே சீனியர் டேக் கேர். லவ் யூ..”
“லவ் யூ டா. பத்திரமா இரு.” என்றவன் போனை வைத்து விட்டு குளிக்கச் சென்றான்.
ரோகித் குளித்து விட்டு வந்ததும் பார்வதி அவனுக்கு சாப்பாடு குடுத்தார். வேலுச்சாமி ரோகித்துடன் பேசிக் கொண்டு இருக்க, அன்னம் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
………………………………………………….
ஜனகன் ஆபிஸில் இருந்து வந்து அவருக்கும் கிருத்திஷிற்கும் உணவு சமைத்துக் கொண்டிருந்தார். நேரம் போய்க்கொண்டே இருந்தது. ஆனால் இன்னும் கிருத்திஷ் வீட்டிற்கு வரவில்லை. சமையலை முடித்து விட்டு வந்து கிருத்திஷிற்கு போன் பண்ணினார். கிருத்திஷின் போன் வேலை செய்யவே இல்லை. அதனால் பதற்றமடைந்தவர், ஹென்றிக்கு அழைத்தார்.
“ஹலோ சார்.”
“ஹலோ ஹென்றி. கிருத்திஷ் எங்க? அவனோட போனும் வேலை செய்யல.”
“சார் பாஸோட போன்ல சார்ஜ் இல்ல. இப்போதான் நான் வீட்டிற்கு வந்தேன். அநேகமாக இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க வந்திடுவாங்க. டோன்ட் வொரி.” என்றான். அவன் சொன்னதைக் கேட்டதும் தான் ஜனகனுக்கு நிம்மதியாக இருந்தது.
“ஓகே ஹென்றி.” என்று போனை வைத்து விட்டு, ஹாலில் வந்து இருந்து அவரது ஆபிஸ் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும் போது கிருத்திஷின் கார் வந்தது.
உள்ளே வந்த கிருத்திஷிடம், “கிருத்திஷ் ஏன் இவ்வளவு நேரம்?” என்றார்.
“இந்தியா போனதால. நிறைய வேலை முடிக்காம இருந்திச்சு. அதை எல்லாம் முடிச்சுட்டு வந்தேறு அப்பா. அதுதான் லேட்.”
“சரி கண்ணா, நான் லேட்டாகவும் பயந்துட்டேன். போ போய் ஃப்ரெஷாகிட்டு வா சாப்பிடலாம்.”
“ஓகேபா..” என்றவன் ஃப்ரெஷாகிவிட்டு வர இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஜனகனுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு தனது அறைக்குள் சென்றான் கிருத்திஷ். அன்னத்தின் நம்பருக்கு கால் பண்ணினான். சிறிது நேரத்தில் அன்னம் போனை எடுத்தாள்.
“ஹலோ மாமா…”
“ஹலோ என்ன அன்னம் போன் புடிச்சிருக்கா?”
“ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.. ஆனா இவ்வளவு விலை அதிகமான ஃபோன் எதுக்கு மாமா?”
“எனக்கு விலை எல்லாம் முக்கியமில்ல அன்னம். உனக்கு பிடிச்சிருந்தா போதும். எனக்கு எப்போ உன் கூட பேசணும்னு தோணுதோ அப்ப நான் உன் கூட பேசணும். எந்த நேரமும் அம்மாவோட போன்ல பேசிட்டு இருக்க முடியாதுல. அதுதான் ரோஹித் கிட்ட உனக்கு ஒரு போன் கொடுத்து விட்டேன்.”
“ரொம்ப நன்றி மாமா.”
“நன்றி எல்லாம் இருக்கட்டும் அப்புறம் சாப்பிட்டியா? என்ன பண்ற?”
“நான் சாப்டேன் மாமா நீங்க சாப்டீங்களா?”
“இப்பதான் ஆபீஸ்ல இருந்து வந்தேன்டா. அப்பா சமைச்சிருந்தாங்க, அதை அப்பாகூட சேர்ந்து சாப்பிட்டு ரூமுக்கு வந்ததும், உன் கூட பேசலாம்னு தோணுச்சு அதுதான் போன் பண்ணேன்.”
“நான் இப்பதான் மாமா வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்தேன். மாமா நான் எப்போ மாமா உங்க கிட்ட வருவேன்?”
“அன்னம் நேற்றுதான் அங்க இருந்து இங்க வந்தேன். அதற்குள்ள என்னை மிஸ் பண்றியா? ஒன்னும் கவலைப்படாத எனக்கு கொஞ்ச நாள்ல உன்னை நான் இங்க கூட்டிட்டு வந்துருவேன் சரியா?”
அடுத்த நாள் கிருத்திஷ் பிரபலமான வைத்தியசாலையில் டாக்டர் ஒருவருக்காக காத்துக் கொண்டிருந்தான். அவர் வந்ததும்,
“ஹலோ டாக்டர்.. ஐ அம் கிருத்திஷ்.”
“ஹலோ மிஸ்டர் கிருத்திஷ் சொல்லுங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கிறீங்க?” என்று கேட்டார்.
“ரொம்ப முக்கியமான விஷயம் டாக்டர். இந்த ரிப்போர்ட்டை கொஞ்சம் பார்க்க முடியுமா?” என்றவன் வேலுச்சாமியின் ரிப்போர்ட்டை அவரிடம் கொடுத்தான்.
அதைப் பார்த்தவர், “கிருத்திஷ் இது யாரோட ரிப்போர்ட்?”
“இது என்னோட மாமனாரோடது. அவங்களுக்கு ரொம்ப நாளா நெஞ்சு வலினு சொல்லிட்டு இருக்காங்க டாக்டர்.. அப்போ நான் அவங்க ரிப்போர்ட்டை பார்த்தேன் அதுலதான் அவங்களுக்கு ஹாட்ல ப்ராப்ளம் இருக்குறது தெரிஞ்சது. இத சர்ஜரி மூலம் குணப்படுத்த முடியுமா டாக்டர்?” என்று கேட்டான் கிருத்திஷ். “கிருத்திஷ் இது கொஞ்சம் கிரிட்டிக்கலான கேஸ். இதுக்கு நூறு வீதம் கன்பார்ம் பண்ணி சொல்ல முடியாது. ஆனால் பயப்படாதீங்க நம்ம ஹாஸ்பிடல்ல ஒரு கான்ஃபரன்ஸ் நடக்க இருக்கு. அதுக்கு அமெரிக்கால இருக்குற இதய அறுவை சிகிச்சை செய்ற பிரபல்யமான டாக்டர் ஒருத்தரு வர இருக்கிறார். அவரு மட்டும் இந்த கேச எடுத்து நடத்தினாருனா, உங்க மாமனார் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கு. நீங்க என்ன பண்ணுங்க ஒன் வீக்ல அவங்களை கூட்டிட்டு வாங்க.”என்றார்.
“ஆனா டாக்டர் அவங்க இந்தியால இருக்கிறாங்க.”
“கிருத்திஷ் ஓன் வீக்ல அவங்களை இங்க கூட்டிட்டு வர்ற வழியைப் பாருங்க. இது ஒரு நல்ல சான்ஸ். டோன்ட் மிஸ் இட்.” என்றார்.
உடனே கிருத்திஷ் ரோகித்திற்கு கால் பண்ணினான். பயண களைப்பினால் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ரோகித் போனை எடுத்து, “சொல்லுங்க ப்ரோ, என்னாச்சு இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க?”
“ரோஹித் நான் சொல்றதை ரொம்ப கவனமா கேட்டுக்கோ. நீ பாஸ்போர்ட் ஆபீஸ்க்கு போயிட்டு அங்க அன்னத்துக்கும் மாமாவுக்கும் பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய வேலையே உடனே ஸ்டார்ட் பண்ணு.”
“ஓகே ப்ரோ”
“உங்க பாரு ரோஹித், பாஸ்போர்ட் வேலையை எவ்வளவு சீக்கிரமா முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக முடிச்சிட்டு அவங்கள இங்கே கூட்டிட்டு வர்றதுக்கான வேலையை ஸ்டார்ட் பண்ணு.”
“ஓகே ப்ரோ நான் அதை பாத்திட்டு சொல்றேன். ஆமா எதுக்கு இவ்வளவு பதட்டம் இருக்கீங்க? உங்க வாய்ஸ்ல இப்படி ஒரு பதட்டத்தை நான் பார்த்ததே இல்லை. ஏதாவது ப்ராப்ளமா ப்ரோ?” என்று கேட்டான்.
“ப்ராப்ளம் தான் ரோஹித். அத நான் இங்க வந்ததுக்கப்புறம் சொல்றேன் நீ முதல்ல பாஸ்போர்டிற்கான வேலையை ஆரம்பி சரியா?” என்றவன், ஃபோனை வைத்து விட்டான்.
ரோஹிதுடன் பேசி முடித்துவிட்டு தலையில் கை வைத்த படி அமர்ந்திருந்தாள் கிருத்திஷ். அவனைப் பார்த்த டாக்டர், “கவலைப்படாதீங்க கிருத்திஷ். எல்லாம் நல்லபடியா நடக்கும். நீங்க அவங்க இங்க வந்ததும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வாங்க நார்மல் செக்கப் எல்லாம் பண்ண வேண்டி இருக்கும். நான் டாக்டர்கிட்ட பேசிக்கொள்கிறேன்.”
“ஓகே டாக்டர் தேங்க்யூ சோ மச்.” என்றவன் அங்கிருந்து வெளியே வந்து காரில் இருந்தான்.
அவனுக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அன்னத்திற்கு இருக்கும் ஒரே உறவு அவளின் தந்தை தான். அன்னம் அவளின் அப்பா மீது வைத்திருக்கும் பாசம் அளவு கடந்தது என்று அவனுக்குத் தெரியும்.
அவர் இல்லாத இடத்தை அன்னம் ஏற்றுக்கொள்ள மாட்டாள். எப்படியாவது மாமாவை காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டு காரின் உள்ளே சீட்டில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தான்.
“அம்மா, அண்ணா காலையிலேயே கால் பண்ணினான். சீக்கிரமா அண்ணிக்கும் மாமாக்கும் பாஸ்போர்ட் எடுத்து அமெரிக்கா கூட்டிட்டு வர சொல்றான் அம்மா. அவன் வாய்ஸ்ஸே சரியில்ல. ஏதோ பதட்டமாக இருக்கிற மாதிரி தெரியுது.” என்றான்.
“என்ன சொல்ற ரோஹித் எதுவும் பிரச்சனையா?”
“தெரியல அம்மா. அண்ணா அங்க வந்ததுக்கப்புறம் சொல்றேன்னு சொன்னாரு. அண்ணியையும் மாமாவையும் எவ்வளவு சீக்கிரமா கூட்டிட்டு வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கூட்டிட்டு வான்னு சொன்னாங்க. நான் இங்க பாஸ்போர்ட் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.”
“சரி சின்னு. நீ குளிச்சிட்டு வா நான் சாப்பாடு செஞ்சிட்டேன் சாப்பிட்டு போயிட்டு வா.”
“ஆமாம் எங்கம்மா அண்ணியை காணவே இல்லை.”
“அண்ணியா? அவ கோயிலுக்குப் போய் இருக்காப்பா. மாமா சந்தைக்கு போயிருக்கார்.”
“சரிமா நான் குளிச்சிட்டு வந்துடறேன்.” என்றவன் குளிக்கச் சென்றான். பார்வதிக்கோ கிருத்திஷ் எதற்காக இவ்வளவு அவசரப்படுகின்றார். ‘என்ன பிரச்சனையா இருக்கும்?’ என்று நினைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.