நயமொடு காதல் : 21

4.9
(12)

காதல் : 21

கோயிலுக்கு வந்த அன்னம், கிருத்திஷின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு கோயிலை வலம் வந்தாள். பின்னர் அங்கிருந்த பிரகாரத்தில் அமர்ந்தாள். அவள் மனம் ஏனோ மிகவும் தவித்தது. 

“அப்பனே முருகா. என்னோட மனசு என்ன இப்படி தவிக்குது? யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் நடக்காம, நீ தான் காப்பாத்தணும் முருகா.” என்று முருகனிடம் ஒரு வேண்டுதலை வைத்தவள் சிறிது நேரம் பிரகாரத்தில் இருந்து விட்டு சென்றாள். 

அங்கே ரோஹித் பார்வதியின் கையால் செய்த இட்லியை இரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அன்னம் வருவதை பார்த்தவன்,”அண்ணி என்ன காலையிலேயே கோயிலுக்கு போயிட்டு வரீங்க?” என்றான்

“அது ஒண்ணும் இல்லை, மனசுக்கு ஒருமாதிரி இருந்திச்சா அதுதான் கொஞ்ச நேரம் கோயிலுக்கு போகலாம்னு தோணுச்சு போயிட்டு வந்தேன்.” 

“அப்படியா அண்ணி. சரி அம்மா நான் போயிட்டு வந்துடறேன்.” 

“ஒரு நிமிடம் கொழுந்தனாரே.” என்றவள் அவனிடம் கோயில் பிரசாதத்தை எடுத்து வந்து கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு வெளியே சென்றான். பார்வதியிடம், “அத்தை கொழுந்தனாரு காலையிலேயே கிளம்பி எங்க போறாரு?” என்று கேட்டாள். 

“அதுவா அன்னம், கிருத்திஷ் உனக்கும் அண்ணனுக்கு பாஸ்போர்ட் எடுக்க சொல்லி இருக்கான். அதற்கான வேலையை பார்க்க போயிருக்கானம்மா.”

“சரி அத்தை. நீங்க பிரசாதம் எடுத்துக்கோங்க.” என்று அவருக்கு பிரசாதத்தை கொடுத்தாள். 

ரோஹித் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்திருந்தான். அங்கிருந்த உயர் அதிகாரியை சந்தித்து அன்னத்திற்கும் வேலுச்சாமிக்கும் பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமென சொன்னான். 

அவரும் சில ஃபார்மைக் கொடுத்து அதை நிரப்பி எடுத்துக் கொண்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு வரச் சொன்னார். அவனும் சரியென்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிருத்திஷிற்கு கால் பண்ணி, “அண்ணா ஃபார்ம் வாங்கிட்டேனா. அவங்க இங்க அண்ணியையும் மாமாவையும் நாளைக்கு கூட்டிட்டு வர சொல்றாங்க. எப்படியும் மூணு நாளைக்குள்ள செஞ்சி தர்றோம்னு சொல்லி இருக்காங்க.”

“ரொம்ப நல்லது ரோஹித். கொஞ்சம் மாமாவ பாத்துக்கோ.”

“அண்ணா என்ன ஆச்சு என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க.”

“நான் உங்கிட்ட சொல்றேன். ஆனா ரோஹித் நீ யார்கிட்டேயும் இதைப் பற்றி சொல்லிடாத. மாமாக்கு ஹாட்ல ஒரு பிரச்சனை. அவரு இதுவரைக்கும் யார்கிட்டேயும் இந்தப் பிரச்சினையைப் பற்றி சொல்லவே இல்லை. நான், அங்க இருந்தப்போ அவரோட ரிப்போர்ட்டை எதேச்சையாகப் பார்த்தேன். அப்போதான் எனக்கு தெரிய வந்துச்சு. இங்க டாக்டரிடம் அந்த ரிப்போர்ட்டை காட்டினேன். டாக்டர் சொன்னாங்க சர்ஜரி பண்ணனுமாம்னு. இங்க கான்ஃபரன்ஸ் ஒண்ணு நடக்க இருக்கு. அதுக்கு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தவங்க இந்த ஹாஸ்பிடலுக்கு வராங்க. சோ ஒன் வீக்ல மாமா இங்க வந்தா அந்த டாக்டரே சர்ஜரி பண்ணிடுவாரு. அதனால தான் நான் இவ்ளோ அவசரப்படுறேன். இந்த விஷயத்தை அன்னத்துக்கிட்டேயோ அம்மாகிட்டேயோ சொல்லிடாத. அவங்க பயந்துருவாங்க.”

“ஓகே அண்ணா நான் பாத்துக்குறேன். யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்.”

“ஓகே ரோஹித் நீதான் கவனமா அவங்கள கூட்டிட்டு வரணும் சரியா?”

“ஓகே நான் பாத்துக்குறேன் ப்ரோ.” என்றவன் போனை வைத்தான். 

“ஹலோ சீனியர்.” என்று இராவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது இதைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே ரோஹித் இராவிற்கு கால் பண்ணினான். 

“என்ன மேடம் என்ன பண்றீங்க.?”

“சீனியர் ஊருக்கு போனதுக்கு அப்புறம் என்னை மறந்துட்டீங்க இல்ல. ஒரு மெசேஜ் பண்ணல.”

“அடிப்பாவி நைட்டு தானே நான் சேஃபா வந்துட்டேன்னு சொல்லி கால் பண்ணினேன். நீ தூக்க கலக்கத்துல பேசிட்டு இப்போ கால் பண்ணல, மெசேஜ் போடலனு என்று கேட்கிற?”

“அப்டியா சாரி சீனியர் நான் தூக்க கலக்கத்திலிருந்தேனா ஞாபகம் இல்ல.”

“நல்லா வருவடி, ஆமா நீ காலேஜ் போகல.”

“இல்ல சீனியர். இன்னைக்கு காலேஜ் போகல.”

“ஏன் காலேஜ்க்கு போகல? என்னாச்சு ஏதாவது ப்ராப்ளமா?”

“எனக்கு கொஞ்சம் ஃபீவர் சீனியர்.” “ஃபீவர் எப்படி வந்துச்சு? ஐஸ்கிரீம் சாப்பிட்டியா?”

“ஆமா சீனியர். நைட்டு நாங்க, எங்களோட பெரியம்மா வீட்டுக்கு போனோமா, அங்க அண்ணாவோட பையன் ஐஸ்கிரீம் சாப்பிட்டான். அவன்கிட்ட இருந்து நானும் கொஞ்சம் புடுங்கி சாப்பிட்டேன். திரும்பி வீட்டிற்கு வரும்போது மழையில மாட்டிட்டேனா, ரெண்டும் சேர்ந்து ஃபீவர் வந்துட்டு. 

“பாத்து பத்திரமா இருனு அத்தனை தடவ சொல்லிட்டு வந்தேன். ஆனால் நீ இப்படி ஃபீவரை இழுத்துட்டு இருக்க. உன்னை என்ன பண்றது இரா?”

“ஐயோ சீனியர் அட்வைஸ் பண்ணாதீங்க. மனுஷன்னு இருந்தா நோய் வரத்தான் வேணும். அப்போதான் அவன் மனுஷன். என்றாள். 

“நல்லா பேச பழகிட்டே இரா. நான் வெளியில இருக்கிறன். நீ ரெஸ்ட் எடு நான் அப்புறமா கூப்பிடுறேன்.” என்று ரோஹித் சொல்ல, 

“ஓகே சீனியர் டேக் கேர் பாய். மிஸ் யூ.” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். 

…………………………………………………

அன்னமும் பார்வதியும் ஹாலில் இருந்து, தலைக்கு வைப்பதற்காக பூக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் இருந்த ரோஹித் அவர்களுக்கு பூ எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தான். அப்போது ரோகித், “மம்மி என்னோட யூடியூப் சேனல மறந்துட்டேன் பாருங்க.” என்றான். 

அதற்கு பார்வதி, “அதை இங்க வேற கொண்டு வந்துட்டியா?” என்றார். 

“ஆமா மம்மி, ஒரு நிமிடம் வெயிட் பண்ணுங்க.” என்றவன் அவன் போனை எடுத்து, “ஹலோ காய்ஸ், நான் இப்ப இருக்கிறது இந்தியாவில. ஆமாங்க எங்க அம்மா அப்பாவோட பொறந்த இடமே இந்தியா தான். இங்கதான் நான் வந்திருக்கிறன். என்னோட மம்மியும் அண்ணியும் சேர்ந்து, அவங்க தலைக்கு வைக்க பூக்கட்டிக் கொண்டு இருக்கிறாங்க. இப்போ நம்ம பார்க்க போறது பூ எப்படி கட்டுவது என்று.” என்று பேசியவன் பார்வதியிடம்,

“மம்மி சொல்லுங்க எப்படி பூ கட்டணும்னு.” என்றான். 

“அட நீ வேற போடா அந்தப் பக்கம்.” என்றார். 

“அண்ணி நீங்களாவது சொல்லுங்க. இந்த மம்மி எப்போவுமே இப்படித்தான். என்னோட சேர்ந்து எதுவும் பண்ணவே மாட்டாங்க. நீங்க சொல்லுங்க பூ கட்டுவது எப்படின்னு?” என்றான். 

அதற்கு பார்வதி, “அன்னம் எதுவும் பேசாத. இவன் இப்படித்தான் எடுத்து வீடியோ போட்டு விடுவான். இவனுக்கு இதான் வேலையே.” என்றாள் 

“ஐயோ கொஞ்ச நேரம் மம்மி. அண்ணியை விடுங்க.” என்றான். “ப்ளீஸ் அண்ணி.. ப்ளீஸ் அண்ணி..” என்று கெஞ்சினான். 

“உங்க அண்ணனுக்கு தெரிஞ்சு, மாமா என்னை திட்டினாங்கனா நான் என்ன பண்றது?”

“ஐயோ அண்ணி, அண்ணா, இதுவரைக்கும் என்னோட சேனல்லல ஒரு வீடியோக்கு கூட லைக் போட்டதே இல்லை. அவன் இருக்கிற பிஸியில இதெல்லாம் பார்க்கவே மாட்டான். அதனால கவலைப்படாதீங்க அண்ணி. ப்ளீஸ் அண்ணி சொல்லுங்க. ஒரே ஒரு வீடியோ தானே.” என்றான். 

“சரி” என்ற அன்னம், பூ கட்டுவது எப்படி என்று மிகவும் சின்சியராகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதை வீடியோ எடுத்த ரோஹித், அந்த வீடியோவை சேனலில் போட்டு விட, கொஞ்ச நேரத்திலேயே பெரிய அளவில் பார்க்க ஆரம்பித்தார்கள். “வாவ், அண்ணி இங்க பாருங்க. எத்தனை பேர் இந்த வீடியோவைப் பார்த்திருக்காங்க தெரியுமா? என்னோட வீடியோஸ்ல இவ்வளவு அதிகமான வியூஸ் போன ஃபர்ஸ்ட் வீடியோ இதுதான்! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணி!” 

கிருத்திஷ் ஆஃபீஸில் இருந்து அன்றைய வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். பின்னர், பிரேக்கில் சாப்பிட்டுவிட்டு, கால் எடுப்பதற்காக எடுத்த போனில், ரோஹித்தின் சேனலில் இருந்து நோட்டிஃபிகேஷன் வந்திருந்தது. ‘அங்கே போயும் இவன் அவனோட வேலையைக் காட்டிட்டினா? என்ன வீடியோ எடுத்து வச்சிருக்கான்னு தெரியலையே.” என்றவன், அதை ஓபன் செய்து பார்க்க, அவன் மனைவி தெரிந்தாள். 

தலையில் கை வைத்து, ‘அன்னம் எப்பிடி வீடியோல? என்ன வீடியோ எடுத்திருக்கிறான்?’ என்றவன், முழுவதையும் பார்க்க, பூ கட்டுவது எப்படி என்று மிகவும் சின்சியராக ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு படியாக விளக்கியிருந்த வீடியோவைப் பார்த்தான். அன்னம் ரொம்ப அழகாக கண்களை உருட்டிக்கொண்டு, கைகளால் ஆக்ஷன் போட்டு பேசும் வீடியோவை இரசித்தான். அந்த வீடியோவில் இருந்த அன்னத்தை தனது விழிகளால் களவாடினான் அந்தக் கள்வன். 

‘அன்னம், இந்த சிரிப்பு உன் முகத்தில் எப்போதுமே இருக்கணும். அதுக்கு நான் எந்த எல்லைக்கும் போவேன்.’ என்றவனுக்கு, அவளுடன் பேசவேண்டும் என்று தோன்ற, அவளுக்கு கால் பண்ணினான். அப்போது அன்னம் ரோகித்துடன், பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தாள். “அண்ணி, போன் அடிக்குது. நான் நினைக்கிறேன், என் அண்ணாதான் கூப்பிடுறான் போல.”

“என்னது மாமாவா? அச்சச்சோ! வீடியோ எதையாவது பார்த்துட்டாரோ தெரியலையே. என்னைத் திட்டப் போறாரு போல இருக்கு.” என்றாள். “நீ எதுக்கு பயப்படுற? அதெல்லாம் ஒண்ணும் இல்ல, உன்னைத் திட்ட மாட்டான். நீ போய் பேசிட்டு வா!” என்று பார்வதி சொன்னார். 

அவள் போனை எடுத்துப் பார்க்க, “ஆமா, உங்க அண்ணன் தான் கூப்பிடுறார்.” என்றவள் தனது போனை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து சென்றாள். “ஹலோ, சொல்லுங்க மாமா!” என்றாள். “ஹலோ அன்னம், வீடியோ காலில் வா.” என்று கட் பண்ணி, வீடியோ கால் எடுத்தான். 

வீடியோ காலை ஆன் செய்து, “சொல்லுங்க மாமா, சாப்பிட்டீங்களா? என்ன பண்றீங்க?” என்றாள். “சாப்பிட்டேன், சாப்பிட்டேன். ஆமா, அங்கே நீ என்ன பண்ணிட்டு இருக்க? “நான் என்ன மாமா பண்ணேன்”

“பச்சைப் பிள்ளை மாதிரி முகத்தை வச்சிட்டு கேட்டா, நான் நம்பிடுவேனா? அவன் வேலை இல்லாமல் யூடியூப்ல வீடியோ எடுத்து அனுப்புறான். நீ எதுக்கு அன்னம் அவன்கூட சேர்ந்து இந்த வேலையைப் பார்க்குறே?” என்றான்

“ஐயோ மாமா, இல்ல கொழுந்தனாருதான் சொன்னாங்க, பூ கட்டுறது எப்படின்னு சொல்லிக் குடுக்க சொல்லி. அதுதான் சொன்னேன், மாமா. அது தப்பா? நான் அப்போவே சொன்னேன் மாமா, உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு. ஆனா, அவர் தான், ‘அண்ணன் எதுவும் சொல்ல மாட்டான், நீங்க சொல்லுங்க அண்ணினு சொன்னாங்க. என்னை மன்னிச்சிடுங்க மாமா. இனிமே சத்தியமா உங்களுக்குத் தெரியாம எதுவும் பண்ண மாட்டேன்.” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உனக்கு யூடியூப்க்கு அப்படி பேசப் பிடிச்சிருந்தா, நீ பேசு. நான் எதுவுமே சொல்ல மாட்டேன் சரியா?” என்றான். “இல்ல, மாமா, அவங்க ரொம்ப கேட்டாங்கனுதான் நான் அதை சொன்னேன். மத்தபடி எனக்கு அதுல விருப்பம் இல்லை மாமா.” 

“அப்படி இல்லை அன்னம். இதெல்லாம் நீ தெரிஞ்சுக்கத்தான் வேணும். அது ஒண்ணும் தப்பு இல்லை. நீ பயப்படாதே, நான் எதுவும் சொல்ல மாட்டேன்,” என்றான்.

“மாமா, நீங்க ஆஃபீஸ்ல இருக்கீங்களா?” 

“ஆமாண்டா, ஆஃபீஸ்ல தான் இருக்கேன். இப்போ ப்ரேக் டைம். சாப்பிட்டுட்டு, உன்கூட வீடியோ பார்த்து பேசணும் போல இருந்துச்சு. அதான் கூப்பிட்டேன்.” என்றான். 

“மாமா, உங்க ஆஃபீஸை கொஞ்சம் வீடியோல காட்டுங்க, நான் பாக்குறேன்.” 

“அதுக்கு என்ன, தாராளமா பார்க்கலாம்.” என்றவன், தன் கேபினில் இருந்து வெளியே வந்து ஆஃபீஸைக் காட்டினார். “மாமா, ஆபிஸ் ரொம்ப அழகா இருக்கு. எவ்வளவு பெருசா இருக்கு உங்க ஆஃபீஸ்!” என்று சிறு பிள்ளை போல் கண்களை விரித்துக் கொண்டு சொன்னாள். 

“அடியே, கண்ணை அப்பிடி உருட்டாதடி!” என்றான் கிருத்தீஷ்.

“மாமா, என்ன மாமா?”

“நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமாடி?” 

“கேளுங்க மாமா” 

“நான் அங்கே வந்த பிறகு என்னோட இப்படி பேசுவியா, இல்ல பயந்து பயந்து பேசுவியா அன்னம்?”

“தெரியலையே மாமா.” 

“அப்படி இங்க வந்த பிறகு பயந்து பயந்து பேசுவேன்னா, நீ அங்கேயே இரு. போன்ல எவ்வளவு தைரியமா பேசுற, அதனால போன்லயே பேசு.” “இல்ல, மாமா, நான் தைரியமா பேசுவேன். உங்களோடவே இருக்கேன் மாமா!” 

“ஹலோ, இந்த மூணு நாள் தான் உன்கூட இருந்திருப்பேன். உனக்கு எப்படி இன்னும் என்மேல இவ்வளவு நம்பிக்கை?” 

“தெரியலை, மாமா. இந்த மஞ்சள் கயிற்றின் மகிமையாகவும் இருக்கலாம். தாலி கட்டிய பிறகு, இவர்தான் என் வாழ்க்கை. உங்களோட இருக்கும்போது ரொம்ப பாசமா, பாதுகாப்பா, மனசுக்கு தைரியமா இருக்கு, மாமா!” என்றாள்.

கிருத்திஷிற்கு அவள் சொன்னதைக் கேட்டதும் கர்வம் வந்தது. கர்வம் வராமல் எப்படி? எந்த ஆண்மகனுக்குதான் அவள் சொன்ன இந்த வார்த்தைகள் கசக்கும்? அவள் தன் மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதை இதைவிட எப்படிச் சொல்ல முடியும்? “அன்னம் எனக்கு இப்பவே உன்னை இறுக்கி அணைச்சுக்கணும் போல இருக்கு.” 

“ஐயோ மாமா, ஆபிஸ்ல இருந்திட்டு என்ன பேசுறீங்க?” என்றவள் முகம் சிவந்தது. 

“நீ வெட்கப்படும்போது அழகா இருக்கே, தெரியுமா? வெட்கப்படும்போது உன் கன்னம் ரெண்டும் ஆப்பிள் போல சிவந்து, என்னை இரசிச்சு பாத்துட்டு இருக்கிற அந்த கோழிகுண்டு கண்ணு.. அப்புறம் என்னை ரொம்ப சோதிக்கிற உன் உதட்டுக்கு கீழே இருக்கிற அழகான மச்சான் போ… நீ என்னை ரொம்ப கொல்றடி. என்னால முடியல.” 

“மாமா, ஆஃபீஸ்ல இருந்து என்ன பேச்சு மாமா? யாராவது வந்திட போறாங்க.”

“ஆபிஸ்ல இருந்து பேசினா என்ன? என்னோட பொண்டாட்டிக்கிட்ட நான் பேசுவேன், யாரு என்னை கேப்பாங்க?”

இந்தப் பக்கம் இருந்த அன்னம் எதுவுமே பேசவில்லை, அமைதியாக இருந்தாள்.“அன்னம், என்னாச்சு? அமைதியா இருக்கிற? ஏதாவது பேசுடி.”

“நீங்க பேசுறதைக் கேட்டு எனக்கு பேச்சே வருது இல்லை மாமா.” 

“சரி, சரி, உன்னை இதுக்கு மேலே தொல்லை பண்ணலை. சரி, நான் நைட்டு கூப்பிடுறேன்.” என்றவன் போனை வைத்தான். 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!