நயமொடு காதல் : 24

4.8
(11)

காதல் : 24

அன்னம் பார்வதி சொன்ன மாதிரியே குளித்துவிட்டு வெளியே வந்தாள். அங்கே சாப்பாடு தயாராக இருக்க அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு ரோஹித், “நான் வெளில போயிட்டு வரேன்.” என்று அங்கிருந்து நகரப் போனான். 

உடனே பார்வதி, “எங்க இராவைப் பாக்க போறியா?”

“ஆமா அம்மா. நான் இன்னைக்கு வர்றதா இராக்கிட்ட சொல்லல.”

“சரி சீக்கிரம் வந்துரு.”

“சரிமா.” என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றான். 

“பாருங்களேன். இரண்டாவது இப்படி ஓடுறான்.” என்று ஜனகனிடம் சொன்னார் பார்வதி. 

“ஆமா… ஆமா… அவன் பண்ற தொல்லையை என்னால தாங்க முடியல பார்வதி.” என்று அவரும் சேர்ந்து சிரித்தார். 

“சரி, எல்லாரும் போய் தூங்குங்க. ரொம்ப தூர பயணம் உடம்புக்கு களைப்பா இருக்கும்.” என்றார் ஜனகன். 

“சரிங்க மச்சான்.” என்ற வேலுச்சாமி அவருக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்றார். 

“அன்னம் நீயும் உக்காந்து இருக்காமல், போய் கொஞ்ச நேரம் தூங்கு. அவன் வேற ரொம்ப நேரம் ஆகும்.” என்றார். 

“சரிங்க அத்தை.” என்ற அன்னமும் கிருத்திஷின் அறைக்குள் வந்தாள். அவனது அறைக்குள் அவனது சிறு வயது முதல் இப்போது வரை எடுத்த போட்டோ அனைத்தும் பிரேம் போட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. 

அதை ஒவ்வொன்றாக நின்று பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள். ‘என் மாமா எவ்வளவு அழகா இருக்காங்க. அதுவும் அந்த சின்ன பிள்ளைல எடுத்த போட்டோல ரொம்ப ரொம்ப அழகு.’ என்று ஒவ்வொரு போட்டோவுக்கும் கமெண்ட் அடித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருந்தாள். 

அப்போது அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘ஆமா நமக்கு குழந்தை பிறந்தால் மாமா மாதிரி இப்படித்தான் அழகா இருக்குமா?’ என்ற அந்த நினைப்பே அவளுக்கு வெட்கத்தை வர வைத்தது.  

கட்டில் விழுந்து படுத்தவள் களைப்பு மிகுதியால் அப்படியே தூங்கி போனாள்.  

கிருத்திஷ் வேகவேகமாக தனது மீட்டிங்கை நடத்திக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஹென்றிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘என்னது பாஸ் இவ்வளோ வேகமா இந்த மீட்டிங்கை நடத்திட்டு இருக்காரு. எதுவும் அவசர வேலையா இருக்குமோ?’ என்று யோசித்து கொண்டு அந்த மீட்டிங்கில் இருந்தான். ஒரு வழியாக மீட்டிங்கை நடத்தி முடித்ததும் கேபினுக்கு கூட போகாமல் வெளியே வந்தான் கிருத்திஷ். 

அவனைத் தொடர்ந்து வந்த ஹென்றி, “பாஸ், ஏதும் பிராப்ளமா பாஸ்?” என்று கேட்டான். 

“இல்ல நீங்க ரொம்ப அவசரமா இந்த மீட்டிங்கை முடிச்ச மாதிரி தெரியுது. அதுக்கு அப்புறம் உங்களோட கேபினுக்கு கூட போகல அப்படியே வெளியில வந்துட்டீங்க அதுதான் பாஸ் கேட்டேன்.” என்றான். 

“ஆமா ஹென்றி. ரொம்பவே முக்கியமான வேலை. அதை அப்புறமா சொல்றேன். சரி நாளைக்கு பாக்கலாம்.” என்றவன் ஹென்றியிடம் சொல்லிவிட்டு நேராக ஹாஸ்பிடலுக்குச் சென்றான். 

அங்கே ஏற்கனவே வேலுச்சாமி ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டரிடம் வந்தவன், “ஹலோ டாக்டர்..”

“ஹலோ கிருத்திஷ் சொல்லுங்க..”

“டாக்டர் எங்க மாமனார் இன்னைக்கு இங்க வந்துட்டாங்க. நான் எப்போ அவங்களை இங்க அழைச்சிட்டு வரட்டும்?”

“நல்ல வேலை. நீங்க உடனே கூட்டிட்டு வந்துட்டீங்க. நானும் அந்த டாக்டர் கிட்ட பேசினேன். அவரும் ஆபரேஷன் பண்ண சம்மதிச்சுட்டாரு.”

“நீங்க என்ன பண்ணுங்க அவரை நாளைக்கு இங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்க. ரெண்டு நாள்ல சர்ஜரி பண்ணிடலாம்.” என்றார். “சரிங்க டாக்டர். அப்போ நான் நாளைக்கு மாமாவைக் கூட்டிட்டு வரேன்.” என்றான். 

“ஓகே கிருத்திஷ். நீங்க ரொம்ப பயப்பட வேண்டாம். அவரை காப்பாதிடலாம் என்று தான் டாக்டர் சொல்றாங்க.”

“சரி டாக்டர் நான் வரேன். ரொம்ப நன்றி.” என்று சொன்னவன் டாக்டரிடம் சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்கு வந்தான். 

………………………………………………….

அந்த பெரிய பார்க்கில் இரா அவளது தோழிகளுடன் உட்கார்ந்து இருந்தாள். இராவின் தோழி ஒருத்திக்கு இன்று பிறந்தநாள். ஆகையால் அவளது தோழிகள் அனைவரும் சேர்ந்து பார்க்கில் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடுவதற்காக சேர்ந்து இருந்தார்கள். இதை அறிந்திருந்த ரோஹித் நேரடியா அங்கேயே வந்து விட்டான். 

ஒரு சேரில் அமர்ந்த இரா போனை எடுப்பதும் பின் அதை பார்ப்பதுமாக இருந்தாள். ரோகித்துக்கு அவளின் அந்த செயலின் காரணம் புரிந்தது. ஏனெனில் ரோகித் போனை ஆஃப் பண்ணி வைத்திருந்தான். இராவிற்கு மிகவும் பதட்டமாக இருந்தது. இராவின் அருகில் இருந்த தோழி ஒருத்தி, “என்ன இரா நீ ரொம்ப டென்ஷனா இருக்குற மாதிரி தெரியுது?”

“ஏய் உனக்கு தெரியுமாடி? சீனியர் இந்தியாக்கு போயிட்டாரு. நான் கால் பண்றேன்.. கால் பண்றேன் நேத்துல இருந்து எனக்கு லைனே கிடைக்கல. அவங்களுக்கு 

என்னாச்சோ ஏதாச்சோனு தெரியாம ரொம்ப டென்ஷனா இருக்கு.” என்றாள்.  

“ஏதாச்சும் வேலையா இருக்கும்படி. இல்லன்னா போனுக்கு எதுவும் பிரச்சனையா இருக்கும். ஏன் இதுக்கு போய் இப்பிடி டென்ஷனாகிட்டு இருக்க? கண்டிப்பா சீனியர் கூப்பிடுவாரு. நீ வா பார்ட்டியை என்ஜாய் பண்ணலாம்.”

“இல்லடி நீங்க எல்லோரும் வற்புறுத்திக் கூப்பிட்டீங்கன்னு தான் நான் வந்தேன். எனக்கு இந்த பார்ட்டி என்ஜாய் பண்ற மூடே இல்ல. நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” என்று தோழிகளிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள். 

அதே நேரத்தில் அவளது கையை பிடித்தான் ரோஹித். தனது கையைப் பிடித்தவனை திரும்பிப் பார்க்க, அங்கே ரோஹித் நின்று கொண்டிருப்பது இராவுக்கு தெரிந்தது. 

“சீனியர்.” என்றவள் அவளது நெஞ்சில் சாய்ந்து அழுதாள். 

“இரா ஏய் என்னாச்சு?” என்றான். 

“ரொம்ப பயந்துட்டேன் சீனியர். நேற்று நைட் இருந்து கால் பண்றேன் போன் வேலை செய்யவே இல்லை. உங்களுக்கு என்னாச்சுனு தெரியாம ரொம்ப பயந்துட்டேன். ஆமா, என்ன திடீர்னு வந்துட்டீங்க? வர்றேன்னு ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவே இல்ல.”

“அதுவா அண்ணியோட அப்பாக்கு ஹாட்ல ஒரு பிரச்சனை அதுக்கு சர்ஜரி பண்ணியே ஆகணும். இங்க ஒன் வீக் உள்ள ஒரு டாக்டர் வர்றதா சொல்லி இருந்தாங்க. சோ அதனால அண்ணன் உடனே அவங்களோட பாஸ்போர்ட் வேலை முடிச்சதும் உடனே கூட்டிட்டு வர சொல்லிட்டான்.”

“நான் உடனே வேலை எல்லாம் முடிச்சு அவங்கள கூட்டிட்டு வந்துட்டேன்.”

“அச்சச்சோ அன்னத்தோட அப்பாவுக்கு ரொம்ப முடியலையா சீனியர்?”

“என்னன்னு தெரியல. ஆனா உடனே சர்ஜரி பண்ணியாகணும்னு சொல்லி இருக்காங்க.”

“சரி சீனியர். அப்பாவை பாத்துக்கோங்க. நானும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறன். அவங்களுக்கு எதுவுமே ஆகாது. நல்லபடியா ஆப்ரேஷன் முடிஞ்சி வீட்டுக்கு வரணும்னு.”

“தாங்க்ஸ் இரா. உனக்கு தெரியாதுடா எங்க அண்ணியைப் பற்றி. அவங்க ரொம்ப ரொம்ப இன்னசென்ட். அவங்க, அவங்க அப்பா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்கன்னு தெரியுமா? நானே அவங்களைப் பார்த்து நிறைய வியந்து இருக்கேன். அவங்க அப்பாவுக்கு ஏதாச்சும் தப்பா நடந்தா, அதை அவங்களால தாங்கிக்கவே முடியாது.”

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாதுங்க. அதுதான் நாம எல்லாம் இருக்கோம்ல. எப்போ ஆப்ரேஷன்னு மட்டும் பார்த்துட்டு சொல்லுங்க. நான் வந்து அன்னம் கூட இருக்கிறேன்.”

“ஆமா இரா, நீ அங்க இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும். டேட்டை நான் பாத்துட்டு சொல்றேன். ஆமா நீ என்ன பெர்த்டே பார்ட்டி முடியுறதுக்கு முன்னாடியே கிளம்பிட்டே?”

“நீங்க போன் பண்ணலையா, எனக்கு ரொம்ப டென்ஷனா இருந்துச்சு. பார்ட்டியை என்ஜாய் பண்ற மைண்ட் செட்டே இல்லையா? அதுதான் போலாம்னு வந்தேன்.”

“சரி அதுதான் இப்போ நான் வந்திட்டேன்ல. வா பார்ட்டியை என்ஜாய் பண்ணிட்டு போகலாம். நான் உன்னை வீட்டில பத்திரமா விட்டுட்டு போறேன்.”

“ஓகே.” என்றவள் மீண்டும் ரோஹித்துடன் வந்து அந்த பெர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டாள். 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!