ரோஹித் கார் ரேசிங் கலந்து கொள்வான். அதனால் கார் ரோகித்தின் கையில் பறந்தது. மிக வேகமாக வந்து அந்த ஹாஸ்பிடலில் முன்பாக காரை நிறுத்தினான். டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல அவர் ஹாஸ்பிடல் வாசலில் தயாராக நின்று இருந்தார்.
கார் வந்ததும் காரில் இருந்து வேலுச்சாமியை ஸ்ட்ரக்சரில் வைத்து ஐ சி யு க்கு அழைத்துச் சென்றனர். கிருத்திஷ் அன்னத்தின் கையைப் ப்பிடித்துக் கொண்டு, “அன்னத்தை இது ஹாஸ்பிடல். தயவு செய்து கத்தி ஆர்ப்பாட்டம் போடாத அம்மு. எனக்கு உன்னோட நிலைமை புரியுது. ஆனா இங்க மாமா மாதிரி நிறைய பேஷண்ட் இருப்பாங்க. நீ நடந்து கொள்வது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கக் கூடாது சரியா?” என்றவன் கையைப் பிடித்தவள் சத்தம் வராமல் அழ ஆரம்பித்தாள்.
“ஒன்னும் இல்ல. மாமாக்கு ஒன்னும் ஆகாது சரியா வா.” என்று அவளை தோளோடு அணைத்து சமாதானம் செய்து கொண்டே ரோஹித்திடம், “இன்னிக்கு நான் ஆபீஸ் வர முடியாதுனு. எல்லா மீட்டிங்கையும் ஹென்றிக்கிட்ட கேன்சல் பண்ண சொல்லிடு.”
“சரிங்க அண்ணா” என்றான் ரோஹித்.
ஐசீயூவில் வேலுச்சாமிக்கு ட்ரீட்மென்ட் நடந்துக் கொண்டிருந்தது. வெளியே இருந்த சேரில் அமர்ந்து கிருத்திஷின் தோளில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள் அன்னம். கிருத்திஷ் எவ்வளவு சொல்லிவிட்டான். ஆனால் அவளுக்கு கண்ணீர் ஊற்றாக வந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ரோகித், “விடு அண்ணா. என்ன இருந்தாலும் அண்ணிக்கு மாமா அப்பா. அவங்களுக்கு கஷ்டமா தானே இருக்கும்.” என்று ரோஹித் சொன்ன, கொஞ்ச நேரத்தில் ஜனகனும் பார்வதியும் அங்கு வந்து சேர்ந்தனர்.
“அம்மா நீங்க இங்க இருங்க நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன்.” என்று ரோஹித் வீட்டுக்கு சென்றான். வேலுச்சாமிக்கு உள்ளே ட்ரீட்மென்ட் பார்த்த டாக்டர் வெளியே வந்ததும் வேகமாக அவரிடம் சென்றாள் அன்னம்.
“டாக்டர் சார்… டாக்டர் சார்.. எப்படியாவது எங்க அப்பாவ காப்பாத்தி குடுங்க.. எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் அப்பா மட்டும் தான் ப்ளீஸ்..” என்று அவரின் காலில் விழப்போனாள்.
“என்னம்மா பண்ற எந்திரிமா முதல்ல.. உங்க அப்பாக்கு ஒன்னுமில்லை மயங்கிட்டாரு. கிருத்திஷ் அவரோட நிலைமை கொஞ்சம் பயப்படற மாதிரித்தான் இருக்கு. நான் அன்னைக்கே சொன்னேன் தானே உடனே சர்ஜரி பண்ணி ஆகணும்னு.”
“டாக்டர் அந்த ஸ்பெஷல் டாக்டர் இப்ப அவைலபில் இருக்காங்களா?”
“தெரியல கிருத்திஷ் கொஞ்சம் இருங்க நான் கால் பண்ணி பாக்குறேன்.” என்ற டாக்டர் போனை எடுத்துக் கொண்டு ஒரு சற்று தள்ளிச் சென்றார்.
அவர் சென்றதும் அன்னம், “மாமா டாக்டர் என்று சொல்றாரு? அப்பாக்கு என்ன ஆச்சு? முன்னாடி என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள்.
அதற்கு கிருத்திஷ், “ஒன்னும் இல்ல அன்னம். ஒன்னும் இல்லடா.” என்றான்.
“இல்ல மாமா ஏதோ இருக்கு சொல்லு மாமா…. சொல்லு மாமா..” என்று அவன் காலரை பிடித்து கேட்டாள். அன்னம்.
“மாமா சொல்லு மாமா.. என் அப்பாக்கு ஒண்ணும் ஆகாது இல்ல. சொல்லு மாமா.” என்று அவன் நெஞ்சிலே சாய்ந்து அழுதவளை அனைத்துக் கொண்டவன், “இங்கு பாரு அம்மு. மாமாக்கு எதுவும் ஆகாது. அப்பிடி எதுவும் நடக்க நான் விடவும் மாட்டேன். மாமா கொஞ்சம் நெஞ்சு வலினு சொல்லிட்டு இருந்தாங்கல. அவருக்கு ஹார்ட்ல ஒரு பிரச்சனை. அதுக்கு இப்போ ஒரு டாக்டர் வந்து ஆபரேஷன் பண்ணி அதை சரி பண்ணிடுவாரு. சரியா நீ அழக்கூடாது. மாமாக்கு ஒன்னும் ஆகாது டா.” என்று அவளை சமாதானப்படுத்தினான்.
அப்போது பார்வதி, “கண்ணா உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?”
“அதுவந்து அம்மா நான் ஊர்ல இருக்கும்போது ஒரு நாள் மாமா நெஞ்சுவலி என்று சொன்னார். அப்பதான் அவருக்கு மாத்திரை கொடுக்கும் போது அவர் அறையில் இருந்த அந்த ரிப்போர்ட்ட பார்த்தேன். அதுக்கப்புறம் அதை நான் இங்க வரதுக்கு முன்னாடி நான் அவர்கிட்ட பேசி தெரிஞ்சுகிட்டேன். அப்பதான் சொன்னாங்க மாமாவிற்கு ஹாட்ல பிரச்சனை இருக்கிறதா சொல்லி இருக்காங்க. அங்க ஹாஸ்பிடல்ல ஆபரேஷன் பண்ணணும்னு சொல்ல மாமாவும் இல்ல ஆப்ரேஷன் பண்ணினா அவருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அன்னத்தை பார்த்துக்க யாருமே இல்லன்னு அந்த ஆப்ரேஷன் பண்றதை தள்ளி போட்டுட்டாரு.
இப்போ அவருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழ்நிலை. டாக்டர் ரிப்போர்ட்ட பார்த்துட்டு உடனே பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அதனாலதான் நான் அவ்வளவு அவசரப்பட்டு உங்களை இங்கே கூட்டிட்டு வந்தேன். ஆனா இன்னைக்கு ஹாஸ்பிடல்க்கு நான் அழைச்சிட்டு வாரத்துக்குள்ள நமக்கு இப்படி ஆயிடுச்சு.” என்றான்.
“சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்ப? இதோ இப்ப பண்ற மாதிரி தான் அழுதுட்டு இருந்திருப்ப. இங்க பாரு அன்னம், உங்க அப்பா தான் எனக்கு புரியுது. ஆனா நீ இப்படி அழுத்திட்டு இருந்தா உங்க அப்பா சரியாகி வந்துருவாரா? அதுக்கு உன்னால் என்ன பண்ண முடியுமோ அதை நீ பண்ணு.”
“நான் என்ன மாமா பண்ண முடியும்?”
“என்ன பண்ண முடியுமா உக்காந்து கடவுள் கிட்ட உங்க அப்பாவ காப்பாத்தி தர சொல்லி கேளு.. அத விட்டுட்டு இப்படி அழுதுட்டு இருந்தா எப்படி? நான் தான் சொல்லி இருக்கேன் இல்ல உங்க அப்பாக்கு எதுவும் ஆகாது என்று.” என்று பேசிப் பேசியே அவளை கொஞ்சம் தேற்றினான்.
போன் பேசிவிட்டு வந்த டாக்டர் கிருத்திஷிடம், “உங்க மாமா ரொம்ப லக்கி. அந்த டாக்டர் இன்னைக்கு ஃப்ரீயா இருக்காங்க. சோ இன்னைக்கு ஆப்ரேஷன் பண்ணிக்கலாம்னு சொன்னாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு. நான் ஆப்ரேஷன்க்கு தேவையானது எல்லாம் ரெடி பண்றேன்.”
“ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்.” என்றார் பார்வதி.
“நன்றி எல்லாம் எதுக்கு? என் கடமையைத்தான் நான் செய்றேன். சரி நான் போய் ஆபரேஷனுக்கு தேவையான வேலைகளை செய்றேன்.” என்று அங்கிருந்து சென்றார்.
அன்னம் அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டு மனதில் எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் வந்த பார்வதி, “அன்னம் காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல வாம்மா சாப்பிட்டு வரலாம்.”
“இல்ல அத்த எனக்கு எதுவும் வேணாம் பசிக்கல.” என்றாள். “காப்பியாவது வாங்கிட்டு வரவா டீ குடிக்கிறியா?” என்று கேட்டார்.
அவள் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதுக்கு மேல் பார்வதியும் அவளை வற்புறுத்தவில்லை.
வீட்டுக்கு வந்த ரோஹித் குளித்துவிட்டு மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வந்து கொண்டிருக்கும்போது இராவுக்கு அழைத்தான்.
“ஹலோ சீனியர்…”
“இரா..” என்றான்.
“என்ன ஆச்சு சீனியர் உங்க வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்கு.”
“வாட் ஹாஸ்பிடல்லையா? என்ன சீனியர் இது? முன்னாடியே சொல்றதில்ல? எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க நான் வந்துடறேன்.”
“நீ எதுக்கு இரா? நீ இரு நான் அங்க பாத்துக்குறேன்.”
“ஐயோ சீனியர் சும்மா விளையாடாதீங்க. சந்தோசத்துல மட்டும் கூட இருக்கிறது இல்ல லவ். துக்கத்திலேயே கூட இருக்கணும். நீங்க எதுவும் பேச வேண்டாம். நான் வரேன் ஹாஸ்பிடல் எதுனு மட்டும் சொல்லுங்க.” என்றாள்.
அவன் ஹாஸ்பிடலின் பெயரை சொன்னது, “சரி சீனியர் சீக்கிரமா வந்துடுறேன்.” என்று போனை வைத்துவிட்டு அவள் வீட்டிலுள்ளோரிடம் சொல்லிவிட்டு கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வந்தாள். ரோஹித் வந்து ஐந்து நிமிடங்களின் பின்னரே இரா அங்கு வந்த சேர்ந்தாள். உள்ளே வேலுச்சாமிக்கு ஆப்ரேஷன் நடந்து கொண்டிருந்தது.
அங்க வந்த இரா பார்வதியின் அருகில் இருந்து, “அத்தை.” என்றாள்.
“வா இரா. பாரு உன்னை எப்படியான நேரத்துல பாக்கணும் நினைச்சேன். ஆனா இப்படியான ஒரு நேரத்துல உள்ள சந்திக்கணும்னு ஆயிடுச்சே.”
“அது பரவால்ல அத்தை. துன்பத்தில் தான் கூட இருக்கணும். அதான் சீனியர் விஷயத்தை சொன்னதும் உடனே ஓடி வந்துட்டேன்.” என்றவள் அன்னத்மிடம் சென்று, “அன்னம் அழாதீங்க. உங்க அப்பாக்கு எதுவும் ஆகாது. நான் வர்ற வழியில கோயிலுக்கு போய் உங்க அப்பா பேரு அர்ச்சனை பண்ணிட்டு தான் வந்தேன். நீங்க கவலைப்படாதீங்க அவருக்கு எதுவும் ஆகாது.” என்று பிரசாதத்தை எடுத்து அன்னத்தின் நெற்றியில் வைத்தாள்.
அவளை பார்த்த அன்னம், “ரொம்ப நன்றிங்க.” என்றாள்.
அத்தையிடம், “அத்தை இவங்க?”
“இது வேற யாரும் இல்லம்மா. நம்ம ரோஹித்தோட வருங்கால பொண்டாட்டி.”
“எனது கொழுந்தனாருக்கு இவங்களை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டீங்களா அத்தை?”
“அதை ஏன் கேக்குற அன்னம்? நாங்க முடிவு பண்ணல. அவங்க லவ் பண்ணாங்க சரி நமக்கு எதுக்குன்னு சேர்த்து வச்சுட்டோம்.” என்றார். இராவும், “அத்தை சாப்பிட்டீங்களா?”
“இல்லம்மா இன்னும் சாப்பிடல. அண்ணனுக்கு இப்படி ஆப்ரேஷன் நடக்கும் போது எப்படி மா சாப்பிட முடியும்? உங்க மாமாவும் சாப்பிடல கிருத்திஷ் தான் டேப்லெட் போடணும் வாங்கப்பா சாப்பிடனு சொல்லி கேண்டீனுக்கு அழைச்சிட்டு போனான்.”
“அன்னம் நீங்களும் வாங்க ஒரு டீயாவது குடிக்கலாம்.”
“இல்லைங்க எனக்கு வேணாம். எனக்கு எங்க அப்பா நல்லபடியா திரும்பி வந்தா போதும்.” என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.