நயமொடு காதல் : 27

5
(11)

காதல் : 27

கிருத்திஷ் ஜனகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மீண்டும் உள்ளே வந்தான். அங்கே இருந்த இராவைப் பார்த்து, “நீ யார் கூட வந்த இரா? சின்னு உன்கூடயா வந்தா?” 

“இல்ல அண்ணா நான் என்னோட கார்ல வந்தேன்.” என்றாள். 

“சரிமா.” என்றவன் அன்னத்தின் அருகில் சென்று இருந்தான். கிருத்திஷ் வந்ததும் அதுவரை பார்வதியின் தோளில் சாய்ந்திருந்த அன்னம், அவரிடம் இருந்து பிரிந்து கிருத்திஷின் மடியில் படுத்துக்கொண்டாள். 

கிருத்திஷூம் அவளின் தலையை தமிழில் வருடிக் கொடுத்தான். 

ரோஹித் தான் கிருத்திஷின் இந்த செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ‘எப்படி இருந்த நம்ம நக்கீரர் இப்போ எப்படி இருக்கிறாரு? இப்படித்தான் காதல் வந்தா எல்லாரும் மாறிடுவாங்க போல.’ என்று நினைத்துக் கொண்டான். 

மூன்று மணி நேரங்களின் பின்னர் வேலுச்சாமிக்கு நடந்த ஆப்பரேஷன் நிறைவடைந்தது. 

டாக்டர் வெளியே வந்ததும் அனைவரும் எழுந்து அவரிடம் ஓடினார்கள். 

“டாக்டர் என்னோட அப்பாக்கு எப்படி இருக்கு? பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லதானே.”என்றாள். 

“கிருத்திஷ் எல்லாமே ஓகே தான். என்று எல்லோருடைய முகத்தையும் பார்த்த டாக்டர், “யாரும் பயப்பட வேண்டாம். ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சுது. இன்னும் ரெண்டு மணி நேரத்துல அவங்க கண்ணு முழிச்சிடுவாங்க. அதுக்கப்புறம் நார்மல் வார்ட்டுக்கு மாத்திடுவாங்க. அப்புறம் நீங்க போய் பாக்கலாம்.” என்றார். 

“ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்.” என்ற அன்னம் அந்த டாக்டரின் காலிலேயே விழுந்துவிட்டாள். 

அன்னம், “எங்க அப்பாவோட உயிரை எனக்கு திருப்பி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி டாக்டர்.”

“அம்மாடி எந்திரிமா. அதெல்லாம் ஒன்னும் இல்ல. இது எங்களோட கடமை தான்.” என்ற டாக்டர் அங்கிருந்து சென்றார். 

அன்னத்திடம் வந்த கிருத்திஷ், “அன்னம் இப்போதான் மாமாக்கு 

ஒன்னும் இல்லைனு டாக்டர் சொன்னதைக் கேட்டு சந்தோஷமா இருக்கு. வா முதல்ல சாப்பிடு.” என்றவன் தாயின் பக்கம் திரும்பி, “அம்மா உங்களையும்தான் வாங்க சாப்பிடலாம். இரா இங்கேயே இரு. டாக்டர் ஏதாவது கேட்டா எனக்கு கால் பண்ணு.” என்றவன் அன்னத்தையும் பார்வதியும் அழைத்துக் கொண்டு சென்றான். 

கேண்டீனில் இருவருக்கும் உணவு வாங்கி கொடுத்து அவர்களை நன்றாக சாப்பிட வைத்த பின்னரே மீண்டும் ஹாஸ்பிடலுக்குள் அழைத்து வந்தான் கிருத்திஷ். 

வரும்போது இராவிற்கு உணவு கொண்டு வந்தவன் உள்ளே வந்து, “இரா சாப்பிடு.” என்று அவளிடம் ஒரு பார்சலை கொடுத்தான். 

“அண்ணா எனக்கு எதுக்கு?”

“எல்லாரும் சாப்பிட்டோம் நீ மட்டும் சாப்பிடாம எப்படி? நீயும் சாப்பிடு.” என்று அவளிடம் சாப்பாட்டை கொடுத்தான். 

அவளும், “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.” என்று வாங்கி அதை சாப்பிட்டாள். 

அனைவரையும் அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் டாக்டர் சொன்ன நேரத்திற்குள்ளையே வேலுச்சாமி கண்விழ்த்து விட்டார். கண்வழித்தவர் முதலில் கேட்டது அன்னத்தைத்தான். அவர் கண்விழித்த செய்தி கேட்டு டாக்டர் ஒருமுறை வந்து அவரை செக் பண்ணினார். 

“இப்போ ஓகே தான். நார்மல் வார்ட்டுக்கு மாத்திடுங்க.” என்று சொல்லிவிட்டு வெளிய வந்தார். 

“நான் சொன்ன மாதிரியே உங்க மாமனாரை நல்லபடியாக உங்க கையில ஒப்படைச்சிட்டேன்.” என்றார். 

“ரொம்ப நன்றி டாக்டர்.”

“எத்தனை தடவை நன்றி சொல்லுவீங்க? எனக்கு இது என்னோட கடமை. நான் என் கடமையைத்தான் செய்தேன். உங்கள மாதிரி ஒரு குடும்பத்தை பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்பவும் இதே மாதிரி ஒற்றுமையாய் இருங்க.”என்ற டாக்டரிடம், “கண்டிப்பா டாக்டர்.” என்றான். 

இப்போது ரோகித் தனது வாயை வைத்துக் கொண்டிருக்காமல், “டாக்டர் நீங்க நிஜமாலுமே டாக்டர் தானா?”

“அதில என்ன சந்தேகம்?” என்று டாக்டர் கேட்டார். 

“இல்ல டாக்டர் பொதுவாக அந்த மெடிசன் சாப்பிடணும், எப்படி இருக்கணும், எப்படி செய்யணும்னு சொல்லுவாங்க, நீங்க என்னன்னா எங்கட குடும்பத்தை ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும்னு சொல்றீங்க?” என்றான். 

அதற்கு டாக்டர் சிரித்துக் கொண்டு, “அதில்ல தம்பி.. எப்படி இந்த காலத்துல ஒரு குடும்பத்தை பார்க்க முடியுது? ரொம்ப கஷ்டம் எனக்கு உங்களை பார்த்த உடனே சந்தோஷமா இருக்கு.. அத சொல்லணும்னு தோணுச்சு அதுதான் சொன்னேன்.. நான் டாக்டர் என்றதையும் தாண்டி நானும் சாதாரண மனுஷன் தானே.” என்றார். 

“ஐயோ டாக்டர் நான் சும்மா ஜாலிக்கு அப்படி பேசினேன் தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க.”

“அதில்லபா. நான் நீ சொன்ன எதையுமே தப்பா எடுத்துக்கல ஓகே. சரி எனக்கு கான்ஃபரன்ஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்.”

“ரொம்ப நன்றி டாக்டர்.” என்று மறுமுறை நன்றி சொல்ல, “இந்த நன்றியை விடவே மாட்டீங்க. கிருத்திஷ் உங்க மாமனாரையும் நல்லபடியாக பாத்துக்கோங்க.” என்று சொல்லி தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். 

வேலுச்சாமியை நார்மல் வார்ட்டிற்கு மாற்றிய பின்னர் முதலில் அன்னம் தான் உள்ளே சென்றாள். அவரைப் பார்த்து, “அப்பா… அப்பா…” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள் அன்னம். 

“அப்பா நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாதுப்பா. ஏன்பா உங்களுக்கு இப்படி உடம்பு சரியில்லனு என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க? நான் ஒரு தத்தி.. உங்களுக்கு என்னனு தெரியாம நான் வேற உங்களை எவ்வளவு காயப்படுத்தி இருப்பேன்.. நான் ரொம்ப மோசம் இல்லப்பா..” என்றாள். 

அதற்கு வேலுச்சாமி, “இங்க பாரு கண்ணு. என் செல்ல பொண்ணுல நீ எனக்கு கஷ்டம் கொடுப்பாயா? நீ அப்பாவுக்கு எந்த கஷ்டமும் கொடுக்கல சரியா? அதுதான் அப்பா திரும்பி வந்துட்டேன்ல்ல. இனிமே நீ அழக்கூடாது. பாரு என் அன்னம் அழுதா அசிங்கமா இருக்கா.. அப்புறம் மாப்பிள்ளை இது யாரு அசிங்கமான பொண்ணு என் பொண்டாட்டி எங்கனு என்கிட்ட கேட்க போறாரு.” என்றதும், 

“மாமா அப்படி எல்லாம் சொல்ல மாட்டார்.” என்றாள். 

இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த கிருத்திஷ், “மாமா இப்போ நல்லா இருக்கீங்களா? வலி ஏதாவது இருக்கா?”

“நல்லா இருக்கேன் மாப்பிள. கொஞ்சம் வலி இருக்கு”. “ஆபரேஷன் செஞ்சிருக்குதானே மாமா அதனால கொஞ்சம் வலி இருக்கு.”

“அதுக்கு மாத்திரை தருவாங்க அதை போட்டுக்கலாம் மாமா. அன்னம் பாத்தியா நான் உனக்கு வாக்கு குடுத்தபடி உங்க அப்பாவை நான் பழைய மாதிரி பத்திரமா உன்கிட்ட திருப்பி கொடுத்துட்டேன்.” என்றான். “மாப்ள உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை எனக்கு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.” என்றார் வேலுச்சாமி. 

இப்படியாக அனைவரும் ஒவ்வொருவராக வந்து வேலுச்சாமியிடம் அவரது நிலைமையை விசாரித்தனர். இரண்டு நாட்களின் பின் வேலுச்சாமியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

வேலுச்சாமிக்கு ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார் பார்வதி, அன்னம் அவருக்கு உரிய வேறு மாத்திரைகளையும் கொடுத்து உணவையும் கொடுத்து தூங்க வைத்துவிட்டு தனது அறைக்குள் வந்தாள். 

அங்கே கிருத்திஷ் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். எதுவும் பேசாமல் உள்ளே வந்தாள். தனது அருகில் இருப்பாள் என கிருத்திஷ் நினைக்க, அவளோ அங்கிருந்த பால்கனியில் சென்று நின்று கொண்டாள். 

குளிர் காற்று உடலை தழுவி சென்றது. இருள் படர்ந்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். அப்போது இரு கரங்கள் அவள் இடையை இறுக்கியது. 

அவனது கரத்தைப் பார்த்த அன்னத்திற்க்கு விளங்கி விட்டது. அது தன் மாமா இன்றி வேறு யாராக இருக்க முடியும்? என்றவள், 

அப்படியே திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள். 

“என்ன என் பொண்டாட்டி இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்கா?”

“ஆமா மனசு முழுக்க பாரமா இருக்கு மாமா.”

“என்னது மனசு பாரமா இருக்கா? நான் இருக்கும்போது ஏன் பொண்டாட்டி எதுக்கு பாரத்தை சுமக்கணும்? உன் பாரத்தை எல்லாம் தாங்கிக்க தான் நான் இருக்கேனல்ல. என் தங்கத்துக்கு என்னாச்சுடா? என்கிட்ட சொல்லு.”

“மாமா..” என்று அவனிடம் இருந்து விலகியவள், இரண்டு கைகளையும் கூப்பி அவனை வணங்கி சட்டென்று அவன் காலில் விழுந்தாள். 

“ஏய் என்னடி பண்ற எந்திரிடி.” என்றான். 

“மாமா நன்றி என்ற ஒரு வார்த்தை போதுமா மாமா. என்னோட அப்பாஙைற திருப்பி கொடுத்து இருக்கீங்க. நீங்க மட்டும் இல்லனா என் அப்பாக்கு என்ன வேணும்னாலும் நடந்து இருக்கலாம். அதை நினைக்கும் போதெல்லாம் என் மனசு பதறுது.”

“டேய் அதுதான் நான் வந்துட்டேன்ல.”

என்றவன் அன்னத்தின் தோளைப் பிடித்து எழுப்பி விட்டான். 

“எதுக்குப்பா நீ சும்மா கால்லற எப்ப பாரு விழுந்துட்டே இருக்கிற? இங்க பாரு நீ யாருக்காகவும் எதுக்காகவும் யாரோட காலிலையும் விழக்கூடாது.”

“சரிங்க மாமா.”

“நடந்ததெல்லாம் மறந்திடு அதான். மாமாக்கு இப்போ ஒன்னும் இல்லைல. அவங்க நல்லா இருக்காங்க. அவங்க நம்ம கூடவே தான் இருக்க போறாங்க. அதை நினைச்சு சந்தோஷப்படு.”

“சரிங்க மாமா.”

“ஏன் அன்னம் நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?”

“கேளுங்க மாமா.”

“இல்ல நீ, எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் என் அப்பாதான். அவரை எப்படியாவது காப்பாத்துங்கனு நீ அடிக்கடி சொல்லிட்டு இருந்த. ஏன் அன்னம் உனக்காக நான் இல்லையா? இல்ல உன் மனசுல நான் இல்லையா?”

“ஐயோ மாமா என்ன வார்த்தை எல்லாம் சொல்றீங்க. நான் உங்களை மனசார ஏத்துக்கிட்டேன் மாமா..”

“அப்புறம் ஏன் அன்னம் யாரும் இல்லை யாரும் இல்லை என்ற வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது?”

“மாமா அது அறியாம பதட்டத்தில் இதெல்லாம் சொல்லிட்டேன். மன்னிச்சிடுங்க மாமா. அது உங்களை இவ்வளவு காயப்படுத்தனும்னு எனக்கு தெரியாது. என் அப்பாக்கு அப்புறம் எனக்கு எல்லாமே நீங்க தானே மாமா.”

“எனக்கு புரியுது டி ஆனா நானும் உனக்காக இருக்கிறேன்னு நீ ஒரு தடவை கூட உணரவில்லையா? என்று தான் எனக்கு கவலை. இல்ல நான் எங்கேயாவது உன்னை அப்படி உணர வைக்க தவறிட்டேனா நான்?”

“ஐயோ இல்ல மாமா இல்லவே இல்லை.. உங்க மேல எந்த தவறும் இல்லை. நான்தான் அப்பா ஞாபகத்திலேயே இருந்துட்டேன் மாமா.. இனிமே இப்படி நடக்காது மாமா.” என்றாள் அன்னம். 

“அன்னம்.” என்ற கிருத்திஷ் அவளின் முகத்தை தனது இரு கைகளினால் ஏந்தினான். 

“ஐ லவ் யூ அன்னம். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று அவளது அழகிய கண்களிலே தொலைந்து போனான். 

“அன்னம் என்னை உனக்கு புடிச்சிருக்கா?”

“மாமா, எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். நீங்க இல்லனா எனக்கு வாழ்க்கை இல்ல மாமா.. நீங்க இருக்கும் வரைக்கும் நானும் இருப்பேன்.. நீங்க இல்லாத உலகத்துல நிச்சயமா நான் இருக்க மாட்டேன் மாமா..”

“ஏய் இன்னும் வாழவே ஆரம்பிக்கல அதுக்குள்ள ஏன் செத்துப் போறதைப் பத்தி பேசுற? நம்ம சந்தோஷமா வாழனும். எனக்கு உன்ன மாதிரியே அன்னம் குட்டி வேணும்.”

“இல்ல மாமா இல்லை, எனக்கு உங்கள மாதிரி குட்டி மாமா தான் வேணும்.”

“இல்ல இல்ல குட்டி மாமா இல்ல குட்டி அன்னம்…”

“இல்ல குட்டி மாமா..”

“இல்ல குட்டி மாமா.”

“சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஒரு அன்னம் குட்டியும் ஒரு மாமா குட்டியும் ஓகேவா?”

“சரி , நமக்கு நிறைய வேலை இருக்கு அன்னம். அந்த வேலை எல்லாம் இப்பவே ஆரம்பிச்சதான் சீக்கிரமா அவங்க வருவாங்க. என்ன அன்னம் வேலையை ஆரம்பிக்கலாமா?”

“அதுக்கு என்ன மாமா ஆரம்பிச்சிடலாம்.” என்று விழி சிமிட்டினாள். அப்போதுதான் அன்னதிக்கு தான் சொன்னது விளங்க, “ஐயோ மாமா.” என்று அவள், அவன் நெஞ்சிலே அடைக்கலமானாள். 

அன்னத்தைக் தூக்கிக் கொண்டவன் பால்கனியிலிருந்து கட்டில் வரை தூக்கிச் சென்று அவளை கட்டில் விட்டவன், அவளை இறுக அணைத்துக் கொண்டு, “அன்னம் உனக்கு ஓகேவா? உனக்கு சம்மதம் இல்லாட்டி நான் விலகிடுவேன்.”

“ஐயோ மாமா இதெல்லாம் என்கிட்ட கேட்டு இருப்பாங்களா?” என்று அவனிடம் கேட்க, 

கட்டிலில் இருந்து எட்டி விளக்கையும் அணைத்து, அன்னத்தையும் அணைத்துக் கொண்டான். அங்கே இனிய இல்லறம் ஆரம்பமானது. 

அடுத்த நாள் நீண்ட நேரத்தின் பின்னர் இருவரும் வெளியே வந்தார்கள். காலையிலேயே குளித்து தலையில் துண்டுடன் இருக்கும் அன்னத்தை பார்த்ததும் பார்வதிக்கு விஷயம் விளங்கியது. 

“என் செல்லம் என் வயித்துல பாலை வாத்தடிற.” என்றவர் அவளை பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற சொன்னார். 

கிருத்திஷ் வேலை வேலை என்று ஓடாமல் இப்போது வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டு அதிக நேரத்தை இவர்களுக்ககாகறசெலவிட்டான். வேலுச்சாமி இப்போது மிகவும் நன்றாகவே இருந்தார். 

அன்னத்திற்கும் கிருத்திஷிற்கும் இடையிலான அழகிய காதல் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. 

இவர்களைப் போல ரோகித் இராவின் அடாவடியான காதலும் தொடர்ந்து. அவர்களின் செயல்களைப் பார்த்த பெரியவர்கள் நல்ல நாள் பார்த்து ரோஹித்திற்கும் இராவுக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். இரண்டு ஜோடிகளும் அந்த வீட்டில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர். 

***** முடிவுற்றது*****

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நயமொடு காதல் : 27”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!