“கடங்காரா கடங்காரா நீயும் மாட்டுனதும் இல்லாமே என்னையும் சேர்த்து இல்ல டா மாட்டி விட்ட… இல்லேனா இந்நேரம் நான் ஏரோநாட்டிக்கல் படிச்சின்டு வானத்துல பறந்துட்டு இல்ல இருப்பேன்..”என்று புலம்பிய விபியனோ… “நன்னா போய்ட்டு இருந்தவன நீயும் நானும் ஒன்னு… நாம வாயில மண்ணுன்னுல்லடா பேசி.. நாம நண்பேன்டா இல்லையாடா… வாடா வந்து என்னோட சேர்ந்தே இருடான்னு என்னை மயக்கி இவன் கூடவே இருக்க வச்சுட்டான்… இப்ப வந்து பேசுற பேச்ச பாருங்களேன் பெரியப்பா…” என்றான் விநாயகத்தின் மகன் விபியன்…
அதில் சிவசங்கரனும் சத்தமாக சிரித்தவறோ… “இப்போ நோக்கு என்னாச்சுன்னு இப்படி பேசின்டு இருக்க விபி.. நீங்க எல்லாம் நம்ம ஆத்து தொழில தானே சிறப்பா பாத்துன்டு இருக்கீங்க… அது நல்லபடியா கொண்டு போறது உங்க கையில தானே இருக்கு…” என்று சிவசங்கர் கூற
“சரி பெரியப்பா…அப்டி இருக்கிறச்ச எதுக்கு ரிஷிய மட்டும் விட்டீங்க பெரியப்பா…” என்றான் மூன்றாவது சகோதரரான வேதநாயகத்தின் மகன் ஈஸ்வர்…
“ம்ம் நன்னா கேளுண்ணா… அதானே அவர மட்டும் எதுக்கு விட்டுட்டீங்கோ பெரியப்பா… எங்கள எல்லாம் நேக்கா மாட்டி விட்டுட்டீங்க…” என்றாள் மகேந்திரனின் நான்காவது மகனான தர்மேந்திரனின் மகள் அபிநிதி…
இதில் இருந்து மொத்தத்தில் தப்பித்தது ரிஷி மட்டுமே… மற்ற அனைவருமே அவர்களின் குடும்ப தொழிலான அமிர்தத்தை தான் வழிநடத்துகின்றனர்.. இன்னொருவனும் தப்பித்தான் ஆனால் அவன் தப்பித்தான் என்பதை விட இந்தக் குடும்பத்திலிருந்து ஒதுக்கப்பட்டான் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்…
“அடேய்… சும்மா உளறின்டு இருக்காம போய் வேலையை பாருங்கடா… நம்மளோட வர்ஷி விவாகம் இது… இத சிறப்பா பண்ணி முடிக்கணும்… உங்களுக்கு தோன்றாத பண்ணாதேள்… எதுனாலும் சிறப்பா செய்யனும்… தெரியும்னோ…”என்று சிவசங்கரன் கூற… அனைவரும் புன்னகையுடன் தலையாட்டி கொண்டிருந்தனர்..
“ஆமா எங்க இந்த வானர கூட்டத்தோட தலைவி தமையாவ காணோம்…” என்று சிவசங்கரன் கேட்க
அனைவரும் அதற்கு கேலியாக புன்னகையை சிந்தியவர்கள் “அவ எங்க இங்க இருக்கா பெரியப்பா… நாங்களே அவள கடைசியா நேத்து நைட்டு தான் பார்த்தோம்…”என்று விபியன் கூற
“அதானே அவ என்னமோ கல்யாண பொண்ணு மாதிரின்னோ நாள் முழுக்க ரூம்ளையே அடஞ்சின்டு மேக்கப் எல்லாம் போட்டுன்டு இருக்கா… பத்தாததுக்கு ஏழு கோட்டிங்க்ல ஃபேஸ் பேக் வேற போட்டுன்டு படுத்துன்டு இருக்கா…” என்று அபிநிதி கூற
அவள் சொன்ன தோரணையில் சத்தமாக சிரித்துக் கொண்ட சிவசங்கரனோ… “பின்ன என்ன சாதாரணமா… இது அவ அக்காவோட விவாகம்ன்னோ… அதான் அவளும் கொஞ்சம் நன்னா மேக்கப் பண்ணிக்கிட்டா தானே நன்னா இருக்கும்…” என்று அவரும் புன்னகையுடன் கூற
அதில் இளவட்டங்கள் அனைவரும் கொல் என்று சிரித்துக் கொண்டனர்….
“ம்ம் சரி சரி பேசிட்டு இருந்தது போரும்… போய் எல்லாரும் வேலைய பாருங்கோ பசங்களா…” என்று பத்மினி துரத்தி விட
அனைவரும் ஒரு ஒரு வேலையை பார்க்க செல்ல தயாராக… அந்நேரம் தான் அந்த மொத்த மண்டபத்தில் இருக்கும் அனைவரின் பார்வையும் அதிர்ச்சியுடன் வாசலை நோக்கி பாய… அங்கோ ஆளுமையான நடையுடனும், கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் ஒருவன்…
அவனைப் பார்த்த அடுத்த நிமிடமே சிவசங்கரனின் முகம் இருளடைய, அவர் முகத்திலோ அப்பட்டமான வெறுப்பு தெரிந்தது..அவரிடம் பேசிக் கொண்டிருந்த அந்த இளவட்டங்களின் முகமோ குழப்பத்திலும், சந்தோஷத்திலும், பயத்திலும், நடுங்கியவாறும் இருந்தது… ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு உணர்வுகள் காட்டியது..
அதுவும் அபிநிதியின் முகம் மட்டும் பல உணர்வுகளை அப்பட்டமாக காட்டிக் கொண்டிருந்தது… ஒரு பக்கம் யாரையோ காணாததை கண்டதைப் போல ஒரு மகிழ்ச்சியும், இன்னொரு பக்கம் தயக்கமும், இன்னொரு பக்கம் மிரட்சியுமே தோன்றியது…
“ம்ச் வந்துட்டான் கடங்காரன்…” என்று பத்மினி முழு வெறுப்பையும் குரலில் தேக்கி கொஞ்சம் சத்தமாகவே பேச…
அதை கேட்ட அபிநிதிக்கு அவ்வளவு கோபம் பொங்கியது… “பெரியம்மா…” என்று அபிநிதி ஏதோ கூற போக…
சட்டென்று அவள் கையை இறுக்கி பிடித்துக் கொண்டான் விபியன்… அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவளோ… “அண்ணா…” என்று அவள் இழுக்க
“ம்ச் பேசாம இரு அபி… இப்போ நம்ம இத பத்தி பேசின்டு இருந்தா அப்புறம் ஃபங்ஷன் மூட ஸ்பாயில் ஆயிடும்… இது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் நல்லது இல்ல… நோக்கு தெரியும் தானே அவங்க உடல்நில பத்தி…” என்று அவன் எடுத்துரைக்க
“எஸ் அபி கொஞ்சம் காமா இரு… நாம அப்புறம் பேசிக்கலாம்…”என்றான் ஈஸ்வர்…
அதில் அபி கப் என்று வாயை மூடி கொண்டாள்… சிவசங்கரனும் படியில் ஏறி வருபவனையே அழுத்தமாகவும், அதே நேரம் வெறுப்புடனும் பார்க்க… அவனோ அந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளையும் தன் கூறிய பார்வையால் அளந்தவாரே தான் வந்து கொண்டிருந்தான்… அவன் தான் நளவளவன்… அபிநீதியின் கூடப் பிறந்தவன்…
அதாவது மகேஸ்வரனின் நான்காவது மகனான தர்மேந்திரனின் மூத்த மகன்… மகேந்திரனின் நான்கு மகன்களில் முதலாவது சிவசங்கரன்… அவரது மனைவி பத்மினி… அவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒருவன் ரிஷிவதனன் மருத்துவன், இரண்டாவது மகிழன்… அமிர்தம் ஹோட்டலின் ஒன் ஆஃப் த டேரக்டர்…
அடுத்ததாக பிறந்தவர் தான் விநாயகம்…அவரது மனைவி கோகிலா… இவர்களின் ஒற்றை மகன்தான் விபியன்…
அடுத்தது சௌந்தர்யன்.. அவரின் மனைவி வைஜெயந்தி இவர்களுக்கு ஈஸ்வர் என்ற மகனும் கிருத்திகா என்ற மகளும் இருக்கின்றனர்… ஈஸ்வர் அமிர்தம் ஹோட்டலின் இரண்டாவது டேரக்டர்… கிருத்திகா ஃபாரினில் பிஸ்னஸ் படித்துக் கொண்டிருக்கிறாள்..
அடுத்து பிறந்தவர் தான் தர்மேந்திரன் அவரின் மனைவி ஜான்வி.. இவர்களின் மகன் தான் நளவளவன்… அவனுக்கு அடுத்தது பிறந்தது அபிநிதி… இவளும் இப்போது தான் பிஸ்னஸ் படிப்பை முடித்தவள் அமிர்தத்திலே சேர்ந்து தொழிலை கற்றுக்கொண்டிருக்கிறாள்…
இதுபோக இன்னும் இரண்டு மகள்கள் வேறு இருந்தார் இருக்கின்றனர்… முதலாவது மகள் முதல் மகனான சிவசங்கரனுக்கு அடுத்தது பிறந்தவர்… பெயர் சுபஸ்ரீ அவரின் கணவர் குணவாளன்… அமிர்தத்தை போல பெரிய மசாலா பேக்டரி வைத்து நடத்துக்கின்றார்…அவர்களின் மூத்த மகள்தான் வர்ஷினி.. மாடலிங் படித்து முடித்தவள் ஒரு பெரிய கம்பெனியில் மாடலிங்கை சிறப்பாக செய்துக்கொண்டிருக்க… அந்த கம்பெனியின் சிஇஓவின் மகனான வம்சி க்ருஷ்ணாவை காதலித்து இப்போது திருமணம் முடிக்க போகிறாள்… அவளுக்கு தான் இன்று திருமணம்…
அவளுக்கு அடுத்தது பிறந்தவள் தான் தமையா… நம் கதையின் நாயகி இப்போது தான் கேட்டரிங் ஃபைனல் இயர் படிக்கின்றாள்…
மகேஸ்வரனின் இரண்டாவது மகள் சித்ரா அனைவருக்கும் கடைசியாக பிறந்தவர்… அவளின் கணவர் நாகராஜ் ஐஜியாக இருக்கின்றார்…அவர்களுக்கு ஒற்றை மகன்தான் பெயர் அஸ்வின்… இப்போதுதான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறான்.
“இவனா… இவன் ஏன்ப்பா இங்க வந்தான்… அவன பாக்குறச்ச எனக்கு ஆங்காரமா வருது..”என்று ரிஷி கத்த…
அவனை முறைத்து பார்த்தனர் மற்ற இளவட்டங்கள் அனைவரும்… அந்த குழுவிலையே அவன் மட்டும் தான் என்றும் இணையமாட்டான்.. தனிமை பேர்விழி.. பார்க்க அம்மாஞ்சி போல தான் இருப்பான் ஆனால் செய்வது ஒவ்வொன்றும் வினையம் பிடித்ததாக தான் செய்வான்… ஆனால் அது யாருக்கும் தெரியாது…
ஆனால் அவனுடனே வளர்ந்தவர்கள் அவர்களுக்கு தெரியாதா என்ன… “டேய் மகி.. உன் நொண்ணாவ வாய மூடின்டு இருக்க சொல்லுடா… இல்லன்னு வையி வாய ஒடச்சிடுவேன்…”என்று விபியன் கூற
அவனை ஏற இறங்க பார்த்த மகியோ… “நானெல்லாம் சொல்ல முடியாது… வேணுன்டா நீ அவன் வாயையே ஒடச்சிக்கோ…”என்றான் சட்டென்று…
அதில் அந்த நிலையிலும் அவர்களுக்கு சிரிப்பு வெடிக்க பார்க்க… சிரமப்பட்டு அடக்கிக்கொண்டனர் மற்றவர்கள்…
“அண்ணா… அவர் உங்க அண்ணாண்ணா,…”என்று அபி எடுத்துக்கொடுக்க…
“நொண்ணா தான் நானு இல்லன்னா சொன்னேன்…”என்ற மகியின் கண்களோ மண்டபத்தின் உள்ளே கம்பீரமாக வரும் நளனையே ஆதூரமாக வருடியது…
அதனை மற்றவர்களும் உணர்ந்துக்கொண்டனர்… அவர்களும் நளனை அப்படிதானே பார்த்துக்கொண்டிருந்தனர்… நளனோ நேராக மண்டபத்திற்குள் வந்தவன் இருந்ததிலையே கடைசி சேரில் உட்கார்ந்துக்கொண்டவன் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க… அவனை மூன்று ஜோடி கண்கள் வெறுப்பாக பார்த்தது..
இரண்டு ஜோடி கண்களுக்கு சொந்தமானவர்களோ வேறு யாரும் இல்லை நளனின் அன்னை, தந்தையான தர்மேந்திரனும், ஜான்வியும் தான்… தன் அக்காவின் மகள் திருமணத்தில் ஒன்றும் வேலை செய்யாமல் தன் தூக்க முடியாத தொப்பையை வைத்துக்கொண்டு அந்த மண்டபத்தின் எதிர்திசையில் போடப்பட்டிருந்த சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தர்மேந்திரன்… அவருக்கு அருகிலேயே கழுத்து முழுவதும் தன்னிடம் இருந்த மொத்த நகைகளையும் அள்ளி போட்டவாறே உட்கார்ந்திருந்தார் ஜான்வி… அவர்களின் இருவரின் முகமுமே நளனை கண்டு சந்தோஷமோ, பாசத்தையோ பொழியவில்லை.. அதற்கு பதில் அப்பட்டமான வெறுப்பு தான் அவர்களின் கண்களில் வழிந்தது…
“ம்ச் உங்க அப்பாவுக்கு என்ன புத்தி இல்லாம போச்சா… இந்த ராசி இல்லாதவன என்னத்துக்கு இப்போ கல்யாணத்துக்கு கூப்டுறாரு… என் மானமே போக போது…”என்று ஜான்வி தான் பத்து மாதம் சுமந்து பெத்த மகனை பார்த்து வாய் கூசாமல் பேச…
“யாரு இவனா வந்துருக்கானா…“என்று நக்கலாக கேட்ட ஜான்வியோ… “இவனாவது அப்டி வரதாவது.. உங்க அப்பா இல்லனா வேற யாராச்சும் இவன போய் கூப்ட்டுருக்கனும்.. இல்லனா இவனாவது இங்க வந்துருக்கறாவது..”என்று ஜான்வி சரியாக கூற…
தர்மேந்திரனோ தன்னுடைய போனை நோண்டியவாறே… “நேக்கு ஒன்னும் தெரில…”என்றார் விட்டெத்தியாக.,
அவரின் விட்டெத்தியான பேச்சில் வழக்கம் போல சீற்றம் கொண்ட ஜான்வியோ… “ஒன்னும் தெரிஞ்சிக்காதீங்க.. ஒன்னும் புரோஜனம் இல்லாத மனுஷனாவே இருங்க… கடைசியா அப்டியே உங்க அப்பா எல்லா சொத்தையும் தூக்கி உங்க அண்ணனுங்களுக்கும், உங்க அக்கா, தங்கச்சுக்கும் மட்டும் தர போறாரு.. நாம கடைசியா நக்கிட்டு போ போறோம்..”என்று வழக்கமாக பாடும் பாட்டை பாட…
அதில் தர்மேந்திரன் அசால்ட்டாக தன் ஒற்றை விரலால் காதை குடைந்தவாறே இருந்தவர்… “அத பிறகு பாக்கலாம்…”என்றவாறே போனில் கேன்டி க்ரஸ் விளையாட… ஜான்விக்கோ வெறுத்தே போனது… “அய்யோ அய்யோ… இந்தாள போய் காதலிச்சி கல்யாணம் பண்ணேன் பாரு.. என்ன செருப்பாள அடிச்சிக்கனும்… இவர கட்டிக்கிட்டதுனால அசிங்கமும், அவமானமும் தான் மிச்சம்.. வேற ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் இல்ல…”என்று தலையில் அடித்துக்கொள்ள…
“இப்டி பேசி பேசியே தான் உன் கழுத்துல ஃபுல்லா நகையா போட்டுட்டு உட்கார்ந்துருக்க… அதும் கொஞ்சம் கூட இடம் விடாம…”என்றார் தர்மேந்திரன் நக்கலாக
“அட அட அட… என்ன நக்கலு.. அப்டியே நீங்க சம்பாறிச்சி வாங்கி போட்டிட்டீங்க பாருங்க… இத ஒன்னு ஒன்னும் வாங்க நான் என்ன கஷ்டப்பட்டிருப்பேனு யோசிங்க… உங்க அம்மாவையும், உங்க அப்பாவையும் காக்கா புடிச்சி வாங்குனது… ஒன்னும் ஒன்னும் வாங்கும்போது உங்க அப்பா ஒரு ச்சீ பார்வ பாப்பாரு பாருங்க… அப்டியே அவர தலையில கல்ல போடலாம்னு தோணும்…”என்று வெறுப்பாக கூற…
“ஆனா அப்பையும் உனக்கு அவங்ககிட்ட எதுவும் கேட்க வேணாம்ன்னு மட்டும் தோணாது இல்ல…”என்று ஜான்வியை வாறிவிட… அது ஜான்விக்கு கடுப்பை கிளப்பியது… “இதுக்கு ஒன்னும் குறச்சல் இல்ல… எப்டிலாம் வாழ்ந்துருக்க வேண்டியவ தெரியுமா நானு… என்ன போய் உங்க குடும்பத்துல நாய் மாதிரி நடத்துறீங்க… எல்லாத்துக்கும் காரணம்…”என்று ஜான்வி வெறுப்பு உமிழும் பார்வையுடன் நளனை பார்க்க…. ஜான்வியை தொடர்ந்து தர்மேந்திரனும் நளனை வெறுப்புடன் பார்த்தார்.
நளனோ கைகளை இறுக்க கட்டிக்கொண்டு எங்கோ வெறித்தவாறே இருக்க… “கண்ணா…”என்ற குரல் கேட்க… அவன் உடல் ஒரு நிமிடம் விறைத்து பின் இளகி போனது… அவன் நிமிர்ந்து பார்க்க.. அங்கோ சித்ரா நின்றிருந்தார். அதும் கலங்கிய கண்களுடனும், இதழில் ஒட்டாத புன்னகையுடனும்…
“கண்ணா… எப்டிப்பா இருக்க..”என்று அவர் பரிவுடன் கேட்க…
நளனோ தலையை மட்டும் ஆட்டி வைத்தான்… அவனின் தலையாட்டலில் அவர் கண்களும் இன்னும் கலங்கி போக… “பேசமாட்டியா கண்ணா…”என்றார் அவர்…
அவரின் மெல்லிய இதமான குரலை கேட்டவனின் இறுகிய முகம் கொஞ்சம் இளக பார்க்க… “பேசாம எங்க போய்ட போறான் சித்து…“என்றவாறே கம்பீரமான நடையுடன் அங்கு வந்தார் நாகராஜ்.
அவரை பார்த்தவனின் முகம் இளக்கத்தை மறந்து இறுக… அவரை முறைத்து பார்த்தவனோ… “நான் இங்க அவசியமா மாமா…”என்றான் கணீர் குரலில்…
அதில் நாகராஜ் சத்தமாக சிரிக்க… அந்த சிரிப்பில் இருந்த கம்பீரம் சித்ராவை வழக்கம் போல வசியம் செய்தது.. “பின்னே முக்கியம் இல்லாம என்னடா… நோக்கு என்ன நெனப்பு ஓடுதுன்னு நேக்கு நன்னா தெரிது.. இது உன் குடும்பம்டா நளா…”என்று நாகராஜ் ஆரம்பிக்க…
அதில் கண்களை இறுக்க மூடிக்கொண்ட நளனோ… “நான் கிளம்பறேன் மாமா…”என்று எழ முயல…
அதில் சித்ரா பதறியவர்… “ஏன்னா… அவன போக வேணாம்ன்னு சொல்லுங்கோளேன்…”என்றார் பதட்டமாக
“அட நீ சும்மா இரும்மா சித்து… அவன் கிளம்ப முடியாது…”என்ற நாகராஜோ எழ முயன்றவனின் தோளை பிடித்து அழுத்த… நளனோ அப்படியே சேரில் உட்கார்ந்துவிட்டான்… அவனுக்கு இருக்கும் கல் போன்ற உடற்கட்டில் அவரின் அழுத்தத்திற்கெல்லாம் அசருபவன் இல்லை தான் அவன்… அவரின் விருப்பத்திற்கு மதித்தே தன் உணர்வுகளை அடக்கி அமைதியாக உட்கார்ந்துக்கொண்டான்…
பின்னே அவன் இந்த வேண்டாத திருமணத்திற்கு வந்ததற்கு காரணமே இவர்கள் இருவரும் தானே… “நேக்கு இதெல்லாம் தேவையா மாமா… நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துன்டு அமைதியா ரெசார்ட்ல இருந்துருப்பேன்… என்ன ஏதேதோ பேசி இழுத்துட்டு வந்துட்டீங்க,..”என்றான் முயன்று கடுப்பை முகத்தில் கொண்டு வந்து…
அதில் புன்னகைத்தவறோ… “என்னடா யாருனா எதாவது சொல்லுவான்னு பயமா…”என்றார் நக்கலாக…
பின்னே பயம் என்ற ஒன்றே அறியாதவனிடம் போய் பயமா என்று கேட்டால் நக்கலாக தானே கேட்க முடியும்… அவனோ ஒற்றை புருவத்தை தூக்கி அவரை முறைக்க… “அடேய் நானு ஐஜிடா என்னையே முறைக்கிற நீ..”என்று சிரிப்புடன் கேட்க…
அதில் அவனின் இறுக்கமான இதழ்களும் சிரிக்க தான் முயல்கிறது… ஆனால் சிரிக்க முடியவில்லையே… அவ்வளவு இறுகி போய் கிடக்கின்றது அவன் மனம்… அவனையும் சிரிக்க வைக்க ஒருவள் வருவாளா……