நளபாகம்-3

4.4
(9)

அத்தியாயம்-3

நாகராஜ் நளனின் தோளில் கை போட்டவாறே சிரித்து பேசிக்கொண்டிருக்க… அவனின் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தவாறே நின்றார் சித்ரா… நளனுக்கோ கொஞ்சம் தர்ம சங்கடமான சூழல் தான்… சித்ராவின் வருடல் அவனுக்கு ஒருவித சிலிர்ப்பை தர.. ஆனால் அதனை ஏற்க தான் அவனுக்கு முழுமனம் வரவில்லை…

சித்ரா சித்தி… உங்கள பத்மினி மாமி கூப்டுறா…”என்று உறவுக்கார பெண் ஒருத்தி கூப்பிட

ஹான் போறேன் வனி..”என்றவறோ,.. “கண்ணா சொல்லாம கொல்லாம எங்கையும் போகாத… மாமா பக்கத்துலையே இரு…”என்று பரிவுடன் கூற

அதில் ஹாஹா என்று சத்தமாக சிரித்த நாகராஜோ… அது சரி அவன் என்ன சின்ன பிள்ளையான்டானா தொலைஞ்சி போறதுக்கு… நீ போம்மா.. நான் அவங்கிட்ட தான் இருப்பேன்…”என்றார்..

அதில் முகம் கொள்ளா புன்னகையுடன் சித்ரா நகர… நாகராஜோ… அப்புறம்ன்ட்டா உன் பிஸினஸ்லாம் எப்டி போறது…”என்று கேட்க…

அவனோ இறும்பாக மூடி இருக்கும் இதழ்களை கடினப்பட்டு பிரித்து அவரிடம் பேசினான்… ஏனோ மற்றவர்களிடம் பேசாமல் இறுக்கத்துடன் இருப்பவனால் இவரிடமும், சித்ராவிடமும் இருக்க முடியவில்லை.. அதற்காக கலகலவென பேசவும் மாட்டான்…

நன்னா போய்ட்டு இருக்கு மாமா…”என்று பதில் சொல்லிக்கொண்டு இருந்தான்…

ஏன் சித்து உனக்கும், உன் ஆத்துக்காரருக்கும் என்ன லூசா பிடிச்சின்டு இருக்கு… இப்டி ஆத்துக்கு ஆகாதவனை எல்லாம் நல்லது கெட்டதுக்கு வர வச்சி கொஞ்சி கொளாவிட்டு இருக்கியே… இது நோக்கு சரினு படுதா…”என்று பத்மினி ஆரம்பிக்க…

அதானே சித்து நீயும் உன் ஆத்துக்காரரும் மட்டும் நம்ம ஆத்துல என்னிக்கும் வித்தியாசமா தான் இருப்பிங்களோ…”என்று நக்கலாக கேட்டார் கோகிலா…

அதான் அவா நடந்துக்குறதுலையே தெரிதேக்கா… இவா மட்டும் தான் ஆத்துக்கு ஆகாதவனோட உறவு கொண்டாட்டிட்டு இருக்காள்…”என்றாள் வைஜெயந்தி..

அவர்கள் பேசுவதை எல்லாம் அமைதியான முகத்துடன் கேட்ட சித்ராவோ… நீங்க எல்லாம் என்ன எதப்பத்தி பேசுறேள்ன்னு நேக்கு நல்லா விளங்குது… ஆனா இதுக்கு எங்கிட்ட பதில் கேட்டா நான் என்ன செய்றது மன்னிங்களா… இதுக்கெல்லாம் என் ஆத்துக்காரர் கிட்டல்லன்னோ பதில் கேக்கனும்…”என்று சித்ரா சமயோஜகமாக பேச…

நாகராஜை பற்றி பேசியதும் அதுவரை அளந்துக்கொண்டிருந்த அத்தனை பேர் வாயும் இறுக்க மூடிக்கொண்டது… பின்ன கஞ்சி போட்டது போல எப்போதும் விறைப்பாக மீசையை முறுக்கியவாறே இருக்கும் நாகராஜை கண்டு அனைவருக்கும் பயம் தாண்டவமாடும் அல்லவா…

ஆமா ஆஊன்னா இதையே சொல்லு… நம்ம ஆத்து விசேஷத்துக்கு அந்த நளனுக்கு என்ன வேலைன்னு தான் எனக்கு புரில…”என்று வைஜெயந்தி கேட்க…

அவரின் பேச்சில் சித்ராவிற்கே கொஞ்சம் கோவம் வந்தது தான்… பின்னே அவரின் அண்ணன் மகன் நளன் அவனுக்கு இல்லாத உரிமையா இங்கு… என்ன மன்னி பேசுறேள்… அவனும் இந்த ஆத்து வாரிசு தானே… அதும் முதலாவது வாரிசு… அவனுக்கு இல்லாத உரிம இங்க வேற யாருக்கு மன்னி இருக்கு…”என்று குரலை உசத்தி பேச…

என்னது இந்தாத்தோட முத வாரிசா… அப்போ ரிஷி யாரு சித்து…”என்றார் ரெளத்திரமாக பத்மினி..

சித்ராவோ கொஞ்சமும் அசராதவர்… நளன் பிறந்து நாலு மாசம் கழிச்சிதானே மன்னி ரிஷி பிறந்தான்… அப்போ ரிஷி எப்டி முதல் வாரிசாவான்..”என்றாள் சுள்ளென்று…

அதில் பத்மினிக்கு கோவம் எகிறியது… என்ன சொன்ன… அந்த நளன் பைய முத வாரிசா… நன்னா இருக்குடிம்மா உன் நியாயம்.. வேண்டாத மழையில மொளச்ச காளான் கணக்கா வந்தவன் தான் அந்த நளன்… அவன போய் முறையா வந்தவனாட்டம் பேசப்படாது சொல்லிட்டேன்… அதும் என் மகன் ரிஷிக்கு சமமா அவன பேச உனக்கு நாக்கு எப்டிதான் ஒத்து வருதோ…”என்று வாய் கூசாமல் பேச… அதனை கேட்ட சித்ராவிற்கு கண்கள் கலங்க கோவம் தெறித்தது…

மன்னி…”என்று சித்ரா கத்த…

இப்போ எதுக்கிடிம்மா கத்துற… அக்கா சொன்னது என்ன தப்பா… அவா உண்மையதானே சொல்றாள்… முறையாவா வந்தான் அந்த நளன் பய… ஏதோ வேண்டாத பொருள் கணக்கா தானே வந்தான் இந்த குடும்பத்துக்குள்ள….”என்று கோகிலா கூற

அதானே… ஆமா நீ என்ன அவன பெத்தவ மாதிரி துடிக்கிற… அவன பெத்தவாளே அவன எதிரிய பாக்கறவா மாதிரி பாக்குறா… அவன் பக்கம் கூட நெருங்கமாட்றாள்… நீ என்னவோ இப்டி உருகுறியே சித்து…”என்றார் நக்கலாக வைஜெயந்தி.

அனைவரும் பேசுவதை கேட்ட சித்ராவிற்கோ அழுகையில் முகம் சிவக்க… இங்க என்ன நடந்துன்டு இருக்குன்னு நான் தெரிஞ்சிக்கலாமா…”என்றவாறே வந்தார் சுபஸ்ரீ..

அவர் வந்ததும் அனைவரின் வாயும் கம் போட்டது போல ஒட்டிக்கொள்ள… சித்ராவோ தன் கலங்கிய கண்களை கூட மறைத்துக்கொண்டு நின்றார்… சுபஸ்ரீ கொஞ்சம் இல்லை இல்லை நிறையவே கடுமை நிறைந்தவர்… ஒரு கல்லூரியில் முதல்வராக இருக்கின்றார்… அந்த குடும்பத்திலையே அதிக கடுமையோடு இருப்பவர் அவர் தான்..

அது ஒன்னும்மில்ல மன்னி… சித்து கூட கொஞ்சம் பேசிட்டு இருந்தோம் அவ்ளோதான்…”என்று பத்மினி கொஞ்சி பேச

அதில் அவரை முறைத்த சுபஸ்ரீயோ… இப்போ கொஞ்சி கொளாவிட்டு இருக்க நேரமா பத்மினி…என்றார் கடுமையாக

அதில் பத்மினி முகம் வெளிறி போக… வைஜெயந்தியும், கோகிலாவும் கப்சிப் என்று ஆனார்கள்… போய் வேலைய பாத்துன்டு இருங்கோன்னு சொன்னாதான் போவீங்களோ…”என்று மறுபடி கடுமையாக கேட்க…

தோ போய்ட்டோம் மன்னி…”என்றவாறே ஓடினார்கள் மருமகள்கள் மூவரும்…

அதனை பார்த்த சித்ராவும் கலங்கிய முகத்துடன் அங்கிருந்து நகர பார்க்க… இது என் பொண்ணோட விவாகம் சித்து.. அது நோக்கு நன்னா தெரியும்ன்னு நெனைக்கிறேன்…”என்று கடுமையாக சுபா பேச

அதில் பட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தார் சித்து… சுபாவோ அவரை முறைத்தவாறே… அவன இங்க கூப்டது நீயும் உன் ஆத்துக்காரரும் செஞ்ச தப்பு… ஆனா அத இப்போ மாத்த முடியாது… ஆனா நாம எல்லாம் நிம்மதியா, சந்தோஷமா இந்த விவாகத்த நடத்தனும்னா அவன் ஒதுங்கி இருந்தா தான் முடியும்..”என்றவர்…. “எனக்கு அவன் முக்கியமா இல்ல என் பொண்ணு விவாகம் முக்கியமான்னு பாத்தா என் பொண்ணு விவாகம் தான் முக்கியம்ன்னு அடிச்சி சொல்லுவேன்… அதுனால கொஞ்சம் உன் அழுகாச்சி முகத்த தூக்கி போட்டுட்டு வந்தவாள கவனி…”என்றவறோ சித்துவை கண்களால் முறைத்தவாறே நகர்… சித்துவிற்கோ கொஞ்சம் மனம் வேதனையாகி போனது…

கடவுளே இந்த சின்ன பிள்ள மேல உனக்கு என்ன தான் கோவமோ… அவன சின்ன வயசுல இருந்து சுழட்டி அடிக்கிறியே… இது நியாயமா…”என்றவறோ தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்…

மணமேடையில் அய்யர் உட்கார்ந்து மந்திரங்களை படித்துக்கொண்டிருக்க… மாப்பிள்ளையையும் வரவழைக்கப்பட்டு காசியாத்திரையை நல்லபடியாக முடித்து வைக்கப்பட்டது… வர்ஷிக்கு தம்பி முறையான அஸ்வினை வைத்து தான் காசியாத்திரை முடிக்கப்பட்டது.. அடுத்து மணப்பெண்ணை அழைத்துவர சொல்லஅழகு பதுமையாக வரவழைக்கப்பட்டாள் வர்ஷி….

அழகாக மயக்கும் புன்னகையுடன் மணமேடைக்கு அழைத்துவரப்பட… மணமகனோ அவள் அழகில் சொக்கி போனான்… இருவரும் கண்களால் காதல் பாசை பேசிக்கொள்ள… இதனை தூரத்தில் இருந்து கண்ட நளனின் உடலோ இறுகியது… நாகராஜ் அப்போதே யாரோ உறவினரை கண்டு பேச சென்றுவிட… கடுப்பாகவும், எரிச்சலாகவும் உட்கார்ந்துருந்தவனை கண்டுக்கொள்ளவோ அங்கு யாரும் இல்லை… அவனும் அதனை எதிர்ப்பார்க்கவில்லை… ஏனோதானோ என்று உட்கார்ந்திருந்தவனின் உருவம் மணமேடையில் உட்கார்ந்திருந்த வர்ஷியின் பார்வையில் விழ… அதுவரை அழகாக புன்னகைத்தவாறே உட்கார்ந்திருந்தவளின் முகத்திலோ அவ்வளவு வெறுப்பு…

இவனா… இவன யாரு இங்க கூப்ட்டா…”என்று அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க…

டார்லிங் ஆர் யூ ஓகே.. என்னாச்சி உன் ஃப்ளஸிங்க் பேஸுக்கு… என்ன பாத்ததும் லோட்டஸ் மாதிரி விரிஞ்சிருந்ததே.. இப்போ என்னனா இப்டி சுருங்கி போய் இருக்கு…என்று காதல் நயாகரா வழிய வம்சி கேட்க…

அதுவரை வெறுப்பில் இருந்த அவளின் முகமோ இப்போது வெட்கத்தை பூசிக்கொள்ள… நத்திங் வம்ஸ்… அன்வான்டட் கெஸ்ட் ஒருத்தர பாத்துட்டேன்.. அதான் கொஞ்சம் இரிடேட் ஆகிட்டேட்..”என்று குழைவான குரலில் கூற…

வாட்… என்ன பேபி இது டுடே நம்மளோட ஸ்பெஷல் டே… இன்னிக்கி போய் கண்டதையும் நினைச்சி, பாத்து இரிட்டெட்னு சொல்ற… ம்ச் எல்லாத்தையும் மறந்துட்டு ஜெஸ்ட் ஃபோக்கஸ் ஆன் அவர் வன்டர்ஃபுல் டே…”என்றான் மயக்க குரலில்…

அதில் அவளோ வெட்க புன்னகையுடன் தலையாட்டியவளின் கண்களோ அப்போதும் விடாமல் நளனை பார்க்க… அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை… அதில் கடுப்பாகி போனவள் என்னவோ வர்ஷி தான்… கண்களாளையே தன் பெரியத்தை பத்மினியை அருகில் அழைக்க… அவரோ அவளிடம் குனிந்தவர்…

என்ன வர்ஷி…”என்றார்

எதுக்குத்த அந்த நளன் வந்துருக்கான்…”என்று கடுப்பாக கேட்க

ம்ச் அத ஏன் கேக்குற… உன் சித்தி இருக்காங்களே அவங்க தான் அவன வரவச்சிருக்காள்…”என்று கடுப்பாக கூற

அய்யோ இந்த சித்து சித்திக்கு இது தேவையா…”என்று வர்ஷி கடுப்படிக்க…

ம்ச் நாங்களும் அதான்ட்டிம்மா கேட்டோம்.. ஆனா அவ வாய திறக்கல தெரியுமோ… ம்ச் உன் அம்மாவேற நடுவுல வந்துட்டா… இல்லன்னு வையி கொஞ்சம் சித்துவ பிளிஞ்சிருப்போம்…”என்று கூற…

வர்ஷிக்கு கோவம் பெருகியது… ம்ச் கடுப்பாகுது எனக்கு…”என்று அவள் கூற…

ம்ச் ஒன்னும் செய்ய முடியாது அமைதியா இரு…”என்ற பத்மினியோ எழுந்துக்கொண்டார்…

இங்கு நளனோ வெகுநேரம் அமைதியாக உட்கார்ந்து பார்த்தவனுக்கு அதற்கு மேல் முடியாமல் அவன் போன் அடித்துக்கொண்டே இருக்க… ம்ச்…என்று அலுத்தவாறே எழுந்தவன் அங்கு கேட்ட மேள தாள ஒலியில் பேச முடியாமல் எழுந்து நடக்க ஆரம்பிக்க… வாசல் பக்கம் போக முடியாத அளவிற்கு நாகராஜ் அங்கு தான் நின்றிருந்தார்…

அவர் கண்டிப்பாக போன் பேச கூட தன்னை வாசல் பக்கம் அனுமதிக்கமாட்டார் என்று அவனுக்கு நன்றாக தெரியும்… எங்கே தான் இதனை சாக்காக வைத்து இங்கிருந்து சென்றுவிடுவானோ என்று அவருக்கு தோன்றும்… அதனால் தான்… எனவே நளன் அமைதியாக மண்டபத்தை சுற்றி பார்க்க… மாடியின் மீது மக்கள் குறைவாக இருக்க… சரி அங்க போய் பேசலாம்,..”என்று நினைத்தவாறே மேலே ஏறியவன்.. தன்னுடைய போனில் வரும் அழைப்பை ஏற்று காதில் வைத்தவாறே மாடிக்கு ஏறினான்…

எஸ் நளவளவன் ஸ்பீக்கிங்….”என்று பேசியவாறே நடக்க… அவன் தொழில் சம்பந்தமாகவே போன் வந்திருந்ததுசிறிது நேரத்திலையே பேச்சி ஸ்வாரஸ்யமாக போக… அப்படியே பேசிக்கொண்டே இருந்தான்… அப்படியே அந்த வராண்டாவை கடந்து அறைகள் இருக்கும் இடத்திற்கு செல்ல… கிட்டதட்ட இருவதுக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தது…

எதையும் கண்டுக்கொள்ளாமல் அவன் பாட்டிற்கு பேசியவாறே நடக்க… அப்போது அவன் நடந்து வந்த இடத்திற்கு மிக அருகில் இருக்கும் அறையின் கதவு வேகமாக திறக்க… அதில் இருந்து புயல் போல பாய்ந்த புயல் ஒன்று நளனின் கல் போன்ற மார்பில் வேகமாக மோத…. அந்த புயல் மோதிய வேகத்தில் நளன் தன் கையில் இருந்த போனை தவறவிட… போனிற்கு பதிலாக அந்த புயல் அணிந்திருந்த மஞ்சள் நிற லெகங்காவின் வழியே தெரிந்த வெண்ணையில் குழைத்தெடுத்த இடை அவன் கைகளுக்கு கிடைக்க…

புயலின் மோதலை எதிர்ப்பார்க்காதவனோ மோதிய வேகத்திற்கு பின்னால் சரியாமல் சமாளித்தவாறே இடப்பக்கம் சரிய… சுவரில் மோதி நின்றவனின் மார்பில் அந்த புயலின் பெண்மை மோத… அதன் தாக்கம் தாங்காதவனோ அந்த சிறு புயலின் இடையை கிள்ளி எடுத்திருந்தான்…

(நீயடி….)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!