நளபாகம்-7

4.4
(5)

அத்தியாயம் – 7

அடுத்த நாள் காலை தமையா கண் திறப்பதற்கு முன்பே அவள் வீடே அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.. அந்த சத்தம் தமையாவின் மூடிய அறையினுள்ளையே தெளிவாக கேட்க.. மையாவோ கண்களை மூடியவாறே ம்ச்ச்ச்… பேசுறவங்க அமைதியா பேச வேண்டியதுதானேஇப்படி தூங்குறவங்களை டிஸ்டர்ப் பண்ற மாதிரியா பேசுவாங்க…”என்றவளோ முகத்தை சுருக்கியவள்

ம்ம் எல்லாம் இந்த வர்ஷியால வந்துச்சுஅவ குரல் தான் காத கிழிக்கிது… வந்துட்டா போல இருக்கு காலையிலேயே விருந்துக்குஆனா இவள யாரு முன்னாடியே வர சொன்னதுலஞ்சுக்கு தானே வர சொன்னாங்க.. எதுக்கு காலையிலேயே வந்து உட்கார்ந்து என் தூக்கத்த கெடுக்குறா… இப்போ எனக்கு தூக்கம் போச்சு…” என்றவள் எழுந்து கண்களை கசக்கியவாறு பாத்ரூமிற்குள் செல்ல

அதற்குள் இவளது அறைக் கதவோ படப்படவென தட்டிக் கொண்டிருந்தாள் வர்ஷி… அதனை கண்ட தமையாவிற்கோ வந்திருப்பது யார் என்று நன்றாக விளங்கியது ஆனாலும் இவள் கதவை திறக்கவே இல்லைமிக மெதுவாக பல்லினை துலக்கியவாறு நின்று இருந்தவள்… மீண்டும் கதவு தட்டப்படவும் கடுப்பாகி போனவள்இவளுக்கு இப்ப என்னவாம் நஸ்ரியா மாதிரி வாயில ப்ரஷ வச்சுக்கிட்டு டண்டனக்கா நக்கா நக்கானு ஆடிக்கிட்டே அவ முன்னாடி போய் நிக்கனுமா…”என்று திட்டியவாறே ஒருவழியாக ப்ரஷ் செய்து முடித்தவள் அதன் பிறகு தான் பாத்ரூமினை விட்டு வெளியிலே வந்தாள்… நேராக சென்று கதவை திறக்க அங்கு வர்ஷியோ கண்கள் விரித்தவாறே கோவத்துடன் நின்றிருந்தாள்..

அவளை மேல் இருந்து கீழாக பார்த்த தமையாவோ… ம்ச் என்ன நோக்கு எதுக்கு இப்போ கதவ தட்டின்டே இருக்க அக்கா..” என்று அலட்சியமாக கேட்டவளை மேலும் எரிக்கும் பார்வை பார்த்தவளோ…

ஏண்டி அக்காவுக்கு விவாகம் ஆகி இன்னைக்கு மொத மொத வீட்டுக்கு வந்து இருக்கேன்நீ என்னனாப்டி அலட்சியமா கேள்வி கேக்குறியே…” என்று வர்ஷினி அவளை முறைத்தவாறே கேட்க

மையாவோ இது எனக்கு பழக்கப்பட்டது தான் என்பது போல ம்ச் அதுக்கா இவ்ளோ நேரம் கதவ தட்டிக்கிட்டே இருந்த…” என்று கேலியாக கேட்க

வர்ஷியோ அவளை முறைத்தவாறே அவளின் தலை முதல் கால் வரை ன்றி கவனித்தவள்அட இன்னும் நீ ஸ்தானம் கூட போலயா…” என்று கேட்டாள்..

அவளோ உனக்கு என்னமா நீ நேத்து கல்யாண பொண்ணா இருந்தஅதனால உன்ன எந்த வேலையும் வாங்கல.. ஆனா நாங்க அப்படியா உன் கல்யாணத்துக்காக ஓடி ஓடி வேலை செஞ்சோம்.. எங்களுக்கு டயர்டா இருக்காதா என்ன…”என்றவளோ தன் அறைக்குள் புகுந்துக்கொள்ள…

அவளின் அலட்சியத்தை கண்டு பல்லை கடித்துக்கொண்டவள்… சரி சரி அத விடு உன் கிட்ட கொஞ்சம் பேச தான் வந்தேன்…” என்றவள் விறு விறுவென்று தமையாவின் அறைக்கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே வர தமையாவோ அவளை மறைத்துக் கொண்டு நின்று இருந்தாள்…

ம்ச் இப்போ எதுக்கு என் ரூம்குள்ள வர உன் ரூமுக்கு ஒருத்தரையாவது அலோவ் பண்றியா… கேட்டா ப்ரைவஸி கெட்டு போது அது இதுன்னு கத சொல்ற ஆனா நீ மட்டும் எல்லாரோட ரூம்க்கும் தடாலடியா புகுந்து…” என்றாள் தமையா

ம் வர்ஷி அப்படித்தான் அந்த வீட்டில் யாரையும் அவள் அறைக்குள் இதுவரை அனுமதித்ததில்லைஎதுவாக இருந்தாலும் அறையின் வாசலிலையே வைத்து பேசி அனுப்புவாள்அப்படிப்பட்டவள் இன்று தன் அறைக்கு வந்தவுடன் தமையாவிற்கு கோபம் அதிகரித்தது…

வர்ஷியோ தனக்கு வரும் கோவத்தை கட்டுப்படுத்தியவாறே அத விடுடி அவன்… அதான் உன் மாமா பையன் வந்தானே அத பத்தி ஏதாவது வீட்ல பேசிக்கிட்டாளா…” என்று கேட்க

தமையாவோ அவள் யாரைப் பற்றி கேட்கிறாள் என்று தெரிந்தும் தெரியாதது போல நீ யார பத்தி கேட்குறன்னு நேக்கு ஒன்னும் புரில…”என்று கூற

அட அதாண்டி உன் அத்தை பையன் அந்த நளன்…” என்று அவள் ஆரம்பிக்க

மையாவின் முகமோ கோபத்தில் சிவந்து போனது.. “ஏன் அவர் எனக்கு மட்டும்தான் அத்தை பையனா உனக்கு இல்லையா,.” என்று கேட்க

வர்ஷியோ இப்ப அதுவாடி முக்கியம்.. நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு அவ பத்தி ஏதாவது பேச்சி இருந்ததா வீட்ல..” என்று கேட்க

ம்கூம்அவர பத்தி பேசறதுக்கு எங்க இடம் இருக்கு…” என்று முணுமுணுப்பாக கூறிய தமையாவையின் பேச்சினை கேட்டவளோ…

ம்ம் அதுவும் சரிதான் அவப்பத்தி பேச இங்கே யாருக்கு என்ன தெரியும்..அவன் என்ன என் வசி மாதிரி பெரிய பிஸ்னஸ் மேனா என்னஎன்று கூற

மையாவிற்கோ வர்ஷியின் அலட்டல் தாங்கவே முடியவில்லை.. “ம்ச் இப்ப எதுக்கு வந்த… அத முதல சொல்லு…” என்றாள்

அதில் வர்ஷியின் முகம் சுருங்கி போயிற்று… என்னடி ஓவரா அலட்டிக்கிற..” என்றவளோ தன்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு பாக்ஸை எடுத்துக்காட்டியவள்இத பாத்தியா.. எனக்கு வசி கிப்ட்டா குடுத்தாரு இது மேக்கத்தன் அப்டின்ற கல்லால செய்யப்பட்ட பென்டன்ட் இது எங்கயுமே கிடைக்காதாம் ரொம்ப அரிய வகையாம் எனக்காக பார்த்து பிளாக் மார்க்கெட்ல இருந்து வாங்கி இருக்காரு..” என்று ர்ஷி அலட்டலாக அதனை காட்டி பெருமை பேசிக்கொள்ள

வள் கையில் கட்டியதை தெனாவட்டாக பார்த்த மையாவோ ப்ளாக் மார்க்கெட் இருந்து வாங்கி இருக்காரா?… அப்ப போலீஸ் கிட்ட மாட்டிவிடடுமா உன் ஆள..” என்று கூ

அதில் வர்ஷியின் விழிகள் பிதுங்கி போனதுஏய் தமையா அவரு உன் அத்தான் பார்த்து பேசு…” என்று மிரட்டல்விட்டாள்…

அய்யோயோ அம்மா அப்பா… எனக்கு பயந்து வருதே பெருமாளே…”என்று உடல் எல்லாம் நடுங்கியது போல காட்டியவள் நாங்க ரொம்ப பயந்துட்டோம்… போய் உன் ஆளுக்கிட்ட சொல்லிடு…” என்று கேலியாக சிரித்தவாறே வர்ஷியை முறைத்தவள்இந்த த்த எல்லாம் வேற யார்கிட்டயாவது போய் காட்டுஏன் போயி அபி மன்னிக்கிட்டையே, விபியன் அத்தான் கிட்டையோ காட்ட வேண்டியது தான… அவங்க தான் உனக்கு பயந்து நடுங்குவாங்க… ஆனா நான் உன் தங்கச்சி சிஸ்டர்… என்கிட்ட எதுக்கு வந்து சீன் போட்டுட்டு இருக்க…” என்று தடாலடியாக கேட்டாள்மையா…

தமையா…”என்று அதட்டிய வர்ஷியோ நான் உனக்கு அக்கா உன்னை விட ஏழு வருஷம் பெரியவ கொஞ்சம் மரியாதையா பேசு…” என்றாள்

அதனைக் கேட்ட தமையாவோ அவளை ஆழ்ந்த பார்த்தவள்… ம்ம்ம் அதெல்லாம் கிடைக்காது கிடைக்காது…” என்றவள் சீக்கிரம் கிளம்பு நான் குளிச்சிட்டு காலேஜ்க்கு ரெடி ஆகணும்எனக்கு இன்னைக்கு காலேஜ்…என்றவள் வேகவேகமாக தன்னுடைய டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைய பார்க்க…

ஏன் இன்னிக்கி நான் வரேன்னு தெரியும்ல… அப்புறம் என்ன லீவு போட்டுற வேண்டியதானே… எப்டியும் அங்க போய் எக் பாயில் பண்றது எப்படின்னு தான் கத்துன்டு வர போற…என்று தமையாவை நக்கலாக பார்த்து கேட்க…

அவளை மேலிருந்து கீழாக முறைத்து பார்த்தவளோ… ஆல்ரெடி உன் கல்யாணத்துக்கு போட்ட லீவே தேவை இல்லாத லீவுனு தான் நான் நினைக்கிறேன்இதுல உனக்கு மறு வீட்டுக்கு வேற நா லீவ் போடனுமோ அதெல்லாம் முடியாது…என்றவள் வேகமாக பாத்ரூமிற்குள் நுழைந்துக்கொள்ள…

வர்ஷியோ அவளின் பேச்சில் மொத்தமாக கறுவிய வாறே நின்றவள்… ஆனாலும் ரொம்ப பண்றடி நீ…” என்ற வர்ஷியோ கோவமாக வெளியேறிவிட்டாள்…

அவளும் ஒன்றும் லேச பட்டவள் இல்லை அவளை பற்றி முழுதாக தெரிந்துதான் தமையா அவளை விரட்டி அடிக்கிறாள் இந்த திருமணத்திற்காக அவள் வீட்டில் எவ்வளவு ஆடி இருப்பாள் என்று தமையாவிற்கு நன்றாகவே தெரியும்… இந்த திருமணத்தை நடத்தி வைப்பதற்குள் வர்ஷி போட்ட ஆட்டத்தினால் அவர்களின் வீட்டில் அனைவரும் வாயை இறுக்க மூடிக்கொண்டு அவளை நல்ல வாழ்வை நினைத்தவாறே அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர்..

அப்போது கூட தமையா தன்னுடைய ஒத்துக்கொள்ளாத தாத்தாவிடம்… இவளுக்கு அந்த வம்சி இளிச்சவாய தவிர வேற யாரும் கிடைக்க மாட்டாங்க தாத்தாசீக்கிரம் அவ பிடிச்சு தள்ளி விட்டுருங்க..” என்று பயம் காட்டியவாறே கூற

அதனை கேட்டு அவளின் தாத்தாவிற்கு தமையா கூறியது சரியாகத் தான்பட்டது… ஏனென்றால் வர்ஷியின் குணம் அப்படிப்பட்டது தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அதை எப்படியாவது தனக்கு சொந்தமாக்கி தான் மறுவேலையே பார்ப்பாள்.அப்படிப்பட்ட சுயநலமான ஆள் வர்ஷி.எனவே தான் அவளை அவளுக்கு பிடித்தவனுடனே திருமணம் செய்து வைத்து அனுப்பி விட்டனர்

மையாவோ வேக வேகமாக குளித்து வந்தவள்ஒரு ஆகாய நிற சேட்டும் அதற்கு மேட்சிங்காக வெள்ளை நிற ஜீனும் எடுத்து போட்டவள் தலையை தூக்கி போனிட்டைல் போட்டுக்கொண்டவள், நெத்தியில் ஒரு பொட்டை வைத்துக் கொண்டு வேகமாக கிளம்பி மாடியில் இருந்து கீழே வந்தாள்…

அந்த வீட்டின் ஹாலில் மகேஸ்வரனும் வம்சியும் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருக்கதமையாவோ தன் தாத்தனிடம் நெருங்கி… ஹாய் தாத்து ஆர் யூ ஓகே நவ்… இப்போ எப்படி இருக்க…” என்று கேட்டவாறே அவர் கன்னத்தில் முத்தமிடஇது வழக்கமாக நடக்கும் ஒரு வாடிக்கை என்பதால் அவரும் புன்னகையுடனே திரும்பி அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்… அதனை முகம் கொள்ளா புன்னகையுடன் வாங்கிக் கொண்டவளோ மழலையாக கிளுக்கி சிரித்தாள்…

ஐ ம் ஓகேடா பட்டு… தாத்தா ஸ்ட்ராங்க் பாய் இல்லையா… என் தங்கக்கட்டிக்கி விவாகம் பண்ணாம இந்த தாத்தா எங்கையும் போய்டமாட்டேன் அத நன்னா நியாபகம் வச்சிக்கோ…”என்றார்

அவர் விவாகம் என்றதும் தமையாவின் கண்களுக்கு அவளின் மாமாஜி கண்முன்னே வந்து செல்ல.. அவளின் கன்னமோ சிவந்து போனது.. “மை மாமாஜி.. ஆணழகனாக்கும்..”என்று மனதில் அவனை கொஞ்சிக்கொண்டவள்… தன் தாத்தனை பார்த்து இன்னும் இதழ் விரிக்க..

ஏண்டாமா எங்க கிளம்பி வந்துன்டு இருக்க..” என்று மகேஸ்வரன் கேட்க

தாத்து டுடே எனக்கு காலேஜ்… இவ்ளோ நாள் நான் லீவ் போட்டுட்டேன் இல்ல சோ நிறைய க்ளாஸஸ் மிஸ் ஆகிடுச்சுஇந்த வருஷம் ஃபுல்லா இன்டர்ன்ஷிப் வேறையா சோ எனக்கு காலேஜ்ல ஒரு முக்கியமான வேலை இருக்குசலீம் கூட வரேன்னு சொல்லி இருக்கான்…” என்று கூறினாள்…

சலீமிற்கும், அவளுக்குமான நட்பு அந்த வீட்டில் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்… அதும் அவர்கள் ஒன்னும் ஜாதி, மதத்திற்கு எதிரிகளும் அல்லவே…

ஓஓஓ சலீம் பாய் வரானா…”என்றவறோ… ம்ம் அப்போ இன்னைக்கு வீட்ல இல்லையாடாமா.. உன்னோட அக்காவும், த்தானும் வந்து இருக்காங்களே…” என்று எதிரில் உட்கார்ந்திருக்கும் ம்சியை காட்டவம்சியோ இவளை பார்த்து தன் அனைத்து பல்லையும் காட்டி சிரித்தான்…

அட அது எப்படி தெரியாம இருக்கும் தாத்தா அதான் அத்தான் குளோசப் ஆட்ல வந்த மாதிரி எல்லா பல்லையும் கட்டி சிரிச்சிட்டு இருக்காருஅவர தெரியாம போகுமா?…” என்றவளோ…. அவளும் அவனை போல இளித்தவாறே என்ன த்தான்ன்னுமா நீங்க உயிரோட இருக்கீங்க…” என்று ஆச்சரியமாக கேட்க

மையா…” என்று அதட்டினார் அவளது அப்பா குணா…

ஆனால் இதனைக் கேட்ட வம்சியோ கெக்க பிக்கவென்று சிரித்தவன் எனக்கு நீ கேட்கிறது புரிஞ்சிருச்சுஆனா உங்க அப்பாக்கு தான் என்னன்னு புரியல…” என்றவன் திரும்பி குணாவை பார்த்து ங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிட்டு போனேன் இல்லையா அதனால தான் இன்னும் உயிரோட இருக்கீங்களா என்னன்னு கேட்கிறா…” என்றவன்… குணாவை பார்க்க… அவரோ தமையாவை தான் முறைத்துக்கொண்டிருந்தார்…

அட விடுங்கோ மாமா அவ சின்ன பொண்ணு ஏதோ விளையாட்டுக்கு பேசுறா…” என்று கூறியவாறே அவளைப் பார்த்து சிரிக்க…

குணாவோ தமையா இது மாதிரி எல்லாம் கேட்கக்கூடாதுஇன்னைக்கு தான் கல்யாணம் ஆகி அவங்களுக்கு இரண்டாவது நாள் இன்னைக்கு போய் இப்படி அபசகுனமா கேக்குறியே…” என்று அவர் மிரட்ட

அய்யோ விடுங்க மாமா அவ ஏதோ சும்மா விளையாட்டுக்கு கேட்டுட்டா அதுக்கு போய் இப்படி பேசுறீங்க…” என்ற வம்சியோ நான் பத்திரமா இருக்கேன் தமையா…நம்பலனா இதோ பாறேன்…” என்று எழுந்து நின்று தன்னை சுற்றி காட்டியவன்…. “ஒருவேள உங்க அக்காவுக்கு தான் அடி பலம்னு நினைக்கிறேன்…”அவளை பார்த்து கண் சிமிட்டியவாறே அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூற

அதில் தமையாவின் முகமோ அழகாக சிரிப்பில் விரிந்ததுஓ கத அப்படி போகுதா…” ஏற்றவளோ எஞ்சாய் என்சாமி..”என்று வம்சியை நோக்கி ஹைஃபை கொடுத்தவாறே டைனிங் அறைக்குள் நுழைந்துவிட்டாள்…

ங்கோ பெண்கள் கூட்டணி அனைத்தும் வர்ஷியை நடுவில் வைத்துக்கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்சுபஸ்ரீ மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் உட்கார்ந்து இருக்கநேராக அவருக்கு எதிரில் போய் உட்கார்ந்த தமையாவோ ம்மா இட்லி வைக்கிறியா இன்னிக்கு எனக்கு காலேஜ்நான் சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பனும்… என் நண்பேன்டா வெயிட்டீஸ் பண்ணுவான்…” என்று கூற அவளை குறுகுறுவென்று பார்த்தவாரே இட்லியை எடுத்து தட்டில் வைத்தார்…

என் தமையா உன் அக்கா வீட்டுக்கு வந்துருக்கா… இன்னிக்கி நீ காலேஜ் போய்தான் ஆகனுமா…” என்று பத்மினி கேட்க…

ஏன் எனக்கா கல்யாணம் ஆகிருக்கு காலேஜ் போகாம மாச கணக்கா டேரா போட… வர்ஷிக்கு தானே கல்யாணம் ஆகிருக்கு… அப்போ நான் போனா என்ன தப்பு பெரியத்த..”என்றாள் இட்லியை சாப்பிட்டுக்கொண்டே…

இல்ல இன்னைக்கு மறு வீட்டுக்கு மாப்பிள்ளை வந்திருக்காரு அதனாலதான் கேட்டோம்….” என்று கோகிலாவும் நடுவில் வர

வந்தா என்ன கோகிலா அவளுக்கு படிப்பு தானே முக்கியம்அத தானே முக்கியமா பாக்கனும்…”என்று சுபஸ்ரீ ஆரம்பிக்க

உடனே சுபஸ்ரீயின் ன்னிமார்களோ முகத்தை குனிந்துக் கொண்டனர்.. எப்போதும் சுபஸ்ரீ இப்படி தான் கொஞ்சம் கடுமையாக தான் பேசுவார்…

அம்மு நீ பாட்டுக்கு சீக்கிரம் சாப்பிட்டு காலேஜ் கிளம்பு..” என்று சுபஸ்ரீ அதட்டியவாறு அவளுக்கு இட்லியை வைக்கஅனைத்தையும் முடித்தவள் வேகமாக எழுந்து…

ம்மா மத்தியானம் கூட நான் கேண்டின்ல சாப்டுப்பேன்…” என்றவாறு தன்னுடைய கல்லூரி பேக்கை எடுத்துக்கொண்டு வேக வேகமாக வாயிலை நோக்கி செல்ல…

ரிஷியோ அவளை நக்கலாக பார்த்தவன்… ம்ம் சமைக்கப் போறதுக்கு என்னமா ஸ்டைலிசா போறா பாரு…” என்றவாறே வாசலில் நின்று தன்னுடைய புல்லட்டை துடைத்தவாறே கூற

அவளுக்கோ அவன் கேலியை கண்டு கோவம் சுறுசுறுவென்று வர… ஓட்ட வண்டிய தொடைக்கிறவங்க எல்லாம் இந்த பேச்சு பேச தான் செய்வாங்க…. தமை நீ பாட்டுக்கு கிளம்பு…” என்று நக்கலாக சத்தமாக பேசியவளை கண்டு ரிஷிகோ கோவம் பத்தி கொண்டு வந்தது…

ஏய் யார பாத்துடி ஓட்ட வண்டி வச்சிருக்கேன்னு சொன்ன…” என்று அவன் வம்புக்கு இழுக்க

தோ பாரு மாமா… நேக்கு உன்கிட்ட சண்டை போட டைம் இல்ல மாமாபாய் நான் போயிட்டு வரேன்…” என்றாளோ தன்னுடைய வெஷ்பாவை எடுத்துக்கொண்டு பறந்து விட்டாள்… ரிஷியோ போகும் அவளையே முறைத்தவாறே நின்றிருந்தான்…

(நீயடி….)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!