நிதர்சனக் கனவோ நீ! பகுதி 1 (Full update)

5
(7)

அத்தியாயம் – 1

“எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்….

“டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா.

அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக….

இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு வந்த பிரதாபன் அவனைப் பார்த்த பார்வையிலேயே வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தெனாவட்டாக கதைத்துக் கொண்டு இருந்தவன் மடித்துக் கட்டிய வேஷ்டியை அவிழ்த்து விட்ட படி மரியாதையின் நிமித்தம் தலை தாழ்த்தி நிற்க…

“உன்னோட அண்ணன் போல பொறுப்பா இருக்க பார் விபீஷன் உன்னோட தட்கூறி ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஊர் சுத்தாமல் என்னோட மில் மார்கெட் கணக்கை பார்க்கணும் இப்போவே கிளம்பி என்னோட வா” எனக் கடினக் குரலில் கட்டளையிட்டவர் அவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு  நகர்ந்து விட….

அவர் செல்லும் வரை யாருக்கு வந்த விருந்தோ என இவ்வளவு நேரமும் கோபத்தில் பற்களை கடித்து தன்னை சமன் செய்த படி நின்று இருந்தவன்  சித்ராவின் கையில் இருந்த ஷர்ட்டை கிட்டத்தட்ட பறித்து இருந்தான்.

“டேய் விபீ” என்றவர் மேலும் பேச எத்தனிக்கும் முன்னரே “அம்மா” என்ற கனிவான குரலில் அவரின் வார்த்தைகள் சட்டென தடைப் பட்டு விட்டன.

தலையை கோதிக் கொண்டே முகத்தில் மென் சிரிப்புடன் விழிகளில் தீட்சண்யப் பார்வை தவிழ அமைதியின் மறு உருவமாக சலிப்பாக நின்றுக் கொண்டு இருந்த விபீஷன் முன் வந்து நின்ற ஜெய் ஆனந்த் “உனக்கு பிடிச்சு இருந்தா எடுத்துக்கோ டா என்றவன் அவனின் தோளில் கையை போட்டுக் கொண்டே உனக்கு எது தேவையா இருந்தாலும் என்கிட்ட கேளுடா ஐ வில் ஹெல்ப் யூ” என்றான் மென் புன்னகையுடன்…

தன் தோளில் இருந்த ஜெய் ஆனந்த்தின் கையை சட்டென தட்டி விட்டவன் “நோ தேங்க்ஸ்” என முகத்தில் அடித்தது போலக் கூறியவன் அங்கு இருந்து விருட்டென மாடியேறி தன் அறையை நோக்கி சென்று இருந்தான்.

அவனின் உதாசீனத்தில் சட்டென முகம் வாடினாலும் தன் அன்னையின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தவன் “ என்னோட தம்பி இன்னுமே எனக்கு வளர்ந்த பிள்ளை போல தான் மா என்றவன் மேலும் பேச்சை மாற்றும் பொருட்டு என்னோட டிரஸ் எல்லாம் பேக் பண்ணி வச்சிட்டேன் என்றவன் சற்று தயங்கிய படி தியா எங்க?” என்று கேட்டு இருந்தான்.

“அவ நேரத்துக்கே காலேஜ் கிளம்பிட்டா பா என்றவர் குரல் தழுதழுக்க இன்னும் எத்தனை வருஷத்துக்கு அவனுக்கு எல்லாமே விட்டு கொடுக்க போற ஆனந்த்” என்றார் சற்று காட்டமாகவே…

“ப்ச்… அம்மா என்ன பேச்சு இது அவனும் உங்களோட பையன் தான். நான் யூ எஸ் கிளம்பி போனதும் அவனை திட்டிட்டு இருக்காதிங்கமா அவனோட இஷ்டம் போல இருக்கட்டும்” என்றான் சித்ராவின் கன்னத்தைக் கிள்ளிய படி…

“நீ இப்படியே பேசிட்டு இருடா அவனோட போக்கே சரி இல்லை. அவனோட இந்த குணத்தை மாத்த முடியாமல் ஒரு அம்மாவா தோத்து போய்ட்டேன் போல டா” என்றார் எங்கோ வெறித்துக் கொண்டே…

“ஓ மை கோட் அம்மா அவன் என்னோட தம்பி அவன் உரிமையா கேக்குறப்போ அதை நான் பண்றதுல தப்பே இல்லை என்றவன் குரல் தாழ்த்தி பிளீஸ் இனிமேல் இப்படி பேசுறதை நிறுத்துங்க ” என்றவன் அறியவில்லை அவளின் உயிரானவளைக் கூட அவன் தனதாக்கிக் கொள்வான் என…

அந்த நாள் எப்படியோ கடந்து விட அடுத்த நாள் காலையிலேயே தனது மருத்துவ படிப்பிற்காக அமெரிக்காவினை நோக்கி கிளம்பி இருந்தான் ஜெய் ஆனந்த்.

ஆம், அவனது கனவே மகப்பேறு மருத்துவனாக வர வேண்டும் என்பதே அதற்காகவென நன்றாகப் படித்தவன் நினைத்ததைப் போலவே இதோ கிளம்பியும் இருந்தான்.

ஆனால், அவனுக்கு மாறான அவனது தம்பியோ பிஎஸ்சி அக்ரிகல்ச்சரை பயின்று விட்டு வீட்டோடு பிடிவாதமாக இருந்து விட பிரதாபனோ கொதித்து விட்டார்.

அவனின் இந்த தான்தோன்றிச் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஜெய் ஆனந்த்தை முன்னிலை நிறுத்திப் பேசப் பேச அவனுக்கோ ஒருக் கட்டத்தில் சொந்த அண்ணன் மீதே கொஞ்சம் கொஞ்சமாக ஆத்திரம் பல்கிப் பெருகியது. ஜெய் ஆனந்த்திற்காக வீட்டார் செய்யும் ஒவ்வொன்றையும் மட்டும் அல்ல… அவனாக விரும்பி ஒன்றைச் செய்தாலும் கூட ஜெய் ஆனந்த் அவன் மீது வைத்திருக்கும் அன்பைப் பயன்படுத்தி அவன் மூலமாகவே பெற்றுக் கொள்வான்.

இதே தொடர்கதையாகி கொண்டே இருந்ததே தவிர இதோ இன்று ஜெய் ஆனந்த் சென்று ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் அவனின் ஜெய் ஆனந்த் மீதான ஒரு வித பழி வெறியை வளர்த்துக் கொண்டு இருந்தானே தவிர அதில் ஒரு வீதம் கூட அவனின் மீதான கட்டுக்குள் அடங்கா ஆத்திரத்தை குறைக்கவே  இல்லை என்றே கூறலாம்.

எங்கனம் குறையும் ஜெய் ஆனந்த் சென்ற பிறகும் கூட அவனை வைத்தே விபீஷனை குறைத்துப் பேசினால் அவனும் மனிதன் தானே ஆத்திரம் வராதா என்ன? அதுவே நாளடைவில் ஜெய் ஆனந்த் மீது கொலை வெறியையே வளர்த்துக் கொண்டு இருந்தது.

இதில் என்ன வித்தியாசம் என்றால் அவன் தேர்ந்தெடுத்த மருத்துவப் படிப்பை அவனும் பயில முயலவில்லை அவ்வளவு தான்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு…

காலைக் கதிரவன் செவ்வனே தன் பணியைச் செய்ய அதே நேரம் அக் கிராமத்தின் செல்வந்தக் குடும்பம் என மக்களால் பேசப்படும் பிரதாபனின் மாளிகை போன்ற வீடே ஆரவாரமாக இருந்தது என்றே சொல்லலாம்.

ஆம், இன்று பிரதாபனின் மூத்த மகன் ஜெய் ஆனந்த்  ஐந்து வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டில் தனது மருத்துவ படிப்பை முடித்துக் கொண்டு அதுவும் நிரந்தரமாக அவனின்  சொந்த ஊரிலேயே அவன் நிர்மாணித்த வைத்தியசாலையை தன் பொறுப்பில் நிர்வகிக்க வருகின்றான் என்றால் சொல்லவும் வேண்டுமா?

ஒருவனைத் தவிர அந்தக் குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தது.

ஆம், அந்த ஒருவன் வேறு யாராக இருக்க முடியும்? ஜெய் ஆனந்தின் உடன் பிறந்த  தம்பி விபீஷன் ஆக தானே இருக்க முடியும்.

இத்தனைக்கும் ஜெய் ஆனந்த் அன்பானவன், ஆளுமையானவன், எதனையும் நிதானமாக யோசித்து செயல் படுத்துபவன் அவன்.

அதனாலோ என்னவோ குடும்பத்தில் மட்டும் அல்ல அந்த அந்தக் கிராமத்து மக்களுக்கு கூட அவனை மிகவும் பிடித்துப் போனது தான் நிஜம்.

தங்கள் கிராமத்திற்காகவே வைத்தியசாலையை அவன் நிர்மாணித்து விட இனி சொல்லவா வேண்டும்? அவனின் குணத்திலும் தோற்றத்திலும் ஈர்க்கப்பட்ட மக்கள் அவனின் இச் செயலில் நெகிழ்ந்து போயினர்.

வாசலில் ஆரத்தி தட்டுடன் நின்று இருந்தார் அவனின் செல்ல அத்தை வித்யா. 

ஆம், வித்யா பிரதாபனின் அன்புத் தங்கை.

பிரதாபனின் உயிர் நண்பனான நாதன் தனது தங்கை மீது கொண்ட காதலை உணர்ந்து கொண்ட பிரதாபன் ஒரு வாரத்திலேயே  வித்யாவிற்கும் நாதனுக்கும் திருமணம் செய்து வைத்து விட… அவர்களின் வாழ்க்கையோ மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. 

திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்தே வித்யாவினதும் நாதனினதும் அன்புக்குச் சான்றாக அடுத்தடுத்த வருடங்களில் இரு பெண் குழந்தைகளை ஈன்றெடுத்தார் வித்யா. அதனைத் தொடர்ந்து மூன்று வருடத்திலேயே யார்க் கண் பட்டதோ வாகன விபத்தில் நாதனின் உயிர்ப் பிரிந்து விட துடித்துப் போன வித்யா தனக்குள் மனதளவில் இறுகி விட்டார்.

உயிர் நண்பனின் இறப்பும் தங்கையின் விதவைக் கோலமும் காண சகியாது தன்  வீட்டிலேயே தங்க வைக்க முடிவெடுத்த பிரதாபனின் முடிவை மறுத்த வித்யா அவரின் வீட்டின் பக்கத்திலேயே  சேமிப்பில் இருந்த நாதனின் பணத்தில்  புதிய வீடோன்றினை அமைத்து தன் பிள்ளைகளுடன் குடி புகுந்து வாழ்ந்தவருக்கு தன் அண்ணனின் சாயலில் இருக்கும் ஜெய் ஆனந்த் மீது கொள்ளைப் பிரியம் என்றே சொல்லலாம்.

இதோ அவனின் வருகைக்காக ஆளுக்கு முன் அதி காலையிலேயே வந்து நின்று விட்டார் வித்யா.

“வித்யா என்ன நீ மட்டும் வந்து இருக்க ஆஹித்யா பவ்யா ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வரலையா?” என்ற சித்ராவின் கேள்வியில் சலித்துக் கொண்ட வித்யா “ரெண்டு பேருமே மாமா வர்றார்னு காலேஜ் போகாமல் தூங்கிட்டு இருக்காங்க அண்ணி. அப்படியே அவ்வளவு அக்கறை இருந்தால் எழுந்து வந்து இருக்கணுமே” என்று நொடித்துக் கொண்டார் வித்யா.

“சின்ன பிள்ளைங்க அப்படி தான் விடு வித்யா” என்றவர் சத்தம் கேட்டு வாசலைப் பார்க்க…

வெள்ளை நிற ஃபெராரி காரில் இருந்து  கூலர்ஸ் உடன் ஆளை அசத்தும் கம்பீரமான அழகுடன் ஆளுமையாக இறங்கியவன் இருவரையும் நோக்கி மென் புன்னகையுடன் வந்துக் கொண்டு இருந்தான் ஜெய் ஆனந்த்.

கிராமம் என்றால் சொல்லவும் வேண்டுமா?

அக்கம் பக்கத்தில் சிலர் அவனைச் சூழ… அனைவரிடமும் முகம் சுளிக்காமல் மென் புன்னகையுடன் பார்த்து பேசி விட்டு திரும்பியவனை ஒரு சிறுப் பெண் பிள்ளை தனது தாயின் அணைப்பில் இருந்து அவனிடம் தாவ முற்பட… அச் சிறு பிள்ளையின் தாய் தான் பதறிப் போனார்.

அவரின் பதறிய தோற்றத்தைத் பார்த்து “எதுக்காக இவ்வளவு டென்ஷன்? என்று கேட்டவன் இதழ்கள் புன்னகையில் விரிய அப் பெண் பிள்ளையை ஏந்திக் கொண்டவன் சோ ஸ்வீட்” என்று கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தவன் முகத்தில் அச் சிறு பெண் முத்தம் பதித்து விட்டு அழகா இருக்கீங்க” என்று சொல்ல…

நாவினால் கன்னத்தை முட்டிப் புன்னகைத்தவன் “தேங்க்ஸ் பியூட்டி” என்றவனின் வெட்கப் புன்னகையில் அங்கு நின்று இருந்த அனைவருமே ஒரு கணம் ஈர்க்கப்பட்டு தான் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க “இந்த பார்மலிட்டி எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் ஓவர் தான்” என்று நெற்றியை நீவிக் கொண்டே சொன்னவன் எதேர்ச்சியாக மாடியைப் பார்த்தவன் அதிர்ந்தே விட்டான்.

அத்தியாயம் – 2

ஆம், மாடியில் நின்று இருந்தது வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம் விபீஷன் தான். அதுவும் தலையில் கட்டுடன் ஜெய் ஆனந்த்தை வெறித்த படி நின்று இருந்தான்.

அவனின் நிலையைக் கண்டு பதறிப் போன ஜெய் ஆனந்த் இரு இரு படிகளாக தாவி மாடி ஏறியவன் விபீஷன் அருகில் செல்லும் முன்னரே அவனது அறைக்குள் சென்று கதவினை அறைந்து சாற்றி இருந்தான்.

நல்ல வேளை இல்லையென்றால் அவன் அறைந்து சாற்றிய வேகத்தில் ஜெய் ஆனந்த்தின் முகம் அடிபட்டு இருக்கும்.

வந்ததும் வராததுமாக அதுவும் இவ்வளவு நாளாக அவன் முகத்தில் கண்டிராத உச்சகட்ட சீற்றத்தைக் கண்டு கலங்கிப் போனது என்னவோ ஜெய் ஆனந்த் தான்.

மூடிய கதவைத் தட்ட போனவன் என்ன நினைத்தானோ விழிகளை மூடித் திறந்து ஆழ்ந்த பெரு மூச்சை விட்டுக் கொண்டவன் நிதானமாக கீழே ஸ்தம்பித்து போய் நின்று இருந்த தன் அத்தையையும் அன்னையையும் ஒருங்கே பார்த்துக் கொண்டே படிகளில் கீழிறங்கி வந்தவன் “அப்பா எங்க?” என்று அவன் கேட்ட கேள்வியில் சித்ராவிற்கோ வியர்த்துக் கொட்டியது.

“ஆனந்த் போய் குளிச்சிட்டு வாப்பா அப்புறம் பேசலாம்” என்றவர் வித்யாவை இழுத்துக் கொண்டு செல்ல போகும் சமயம் “அவனோட கன்னம் வீங்கி போய் இருக்கு ஐ க்னோ கண்டிப்பா அப்பா தான் இதுக்கு காரணமா இருக்க முடியும் சோ பிளீஸ் சொல்லிடுங்க என்னாச்சு?” என்று கேட்டே விட்டான்.

வித்யாவோ “பிறகு பேசலாம் டா” என்று பேச்சை மாற்ற…

அவனோ நின்ற இடத்தை விட்டு நகராமல் அழுத்தமாக நின்றுக் கொண்டு இருக்க அவன் நிச்சயம் தெரிந்துக் கொள்ளாமல் விட மாட்டான் என புரிந்த சித்ராவோ “நேற்று அவனோட ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து நம்ம தோப்பு வீட்டுல குடிச்சிட்டு அதுவும் அவனுக்கு முதல் முறை போல டா. தள்ளாடிட்டு வந்து அந்த வழியா போன அவரோட வண்டிலேயே விழுந்து இருக்கான்” என்றவருக்கு விபீஷனை நினைத்து குரல் விம்மியது.

மேலும் தொடர்ந்தவர் “அப்போவே அவனை அறைஞ்சி வீட்டுக்கு இழுத்துட்டு வந்து ரொம்பவே திட்டினார் டா” என்றார் சேலை தலைப்பால் வாயை பொத்தி அழுத படி…

இதழ் குவித்து ஊதியவன் “என்ன திட்டினார்?” என்றான் நிதானமாக….

“வழமை போல தான் டா அவன் படிச்சிட்டு வீட்ல இருக்கான்னு கன்னாபின்னானு திட்டிட்டார்” என்றவரை கூர்ந்துப் பார்த்தவன் “என்னையும் அவனோட கம்பேர் பண்ணாறா?” என்றான்.

அவன் குரல் சாதாரணமாக இருந்தாலும் விழிகளோ சிவந்து விட்டு இருந்தன.

அதிர்ந்து போனவர் “ஆனந்த்” என்றார் சித்ரா.

அவன் எதுவும் பேசவில்லை அவனின் பார்வை அவரை துளைக்க “அவன் குடிச்சது தப்பு டா” என்றார்.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் தன் அன்னை தடுமாறி பேசிக் கொண்டு இருப்பதை வைத்தே புரிந்துக் கொண்டவன் “அவன் பண்ணது தப்பா இருக்கலாம் மா பட் அவனுக்குனு ரெஸ்பெக்ட் வெளில இருக்கணும். வீட்டுல வச்சு பேசி இருக்கலாமே என்றவன் தலையைக் கோதிக் கொண்டே முதல்ல என்னையும் அவனையும் கம்பேர் பண்ணி பேசுறதை நிறுத்துங்க இட்ஸ் ஹர்டிங் மா. அவன் என்னை வெறுப்பா பார்க்கிறான்” என குரல் உடையச் சொன்னவன் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் நேரே சென்றது என்னவோ அவனின் தந்தை பிரதாபனின் அறைக்குத் தான்.

அவன் சென்ற வேகத்தில் பதறிய சித்ரா அவன் பின்னாலேயே செல்லப் போக அவரைப் பிடித்து நிறுத்திய வித்யா “அண்ணி நம்ம ஆனந்த் பத்தி தெரியாதா உங்களுக்கு?” என்றவர் விழிகளை மூடித் திறக்க பெரு மூச்சுடன் தன்னை நிதானித்த சித்ரா அப்படியே சோஃபாவில் அமர்ந்து விட்டார்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு மகன் வந்த சந்தோஷத்தை கூட முழுதாக அனுபவிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை ஒரு பக்கம் பிரதாபனுடன் என்ன பேசப் போகின்றான் என்ற எண்ணம் மறு பக்கம் என தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவர் கதவு திறக்கப்படும் ஓசையில் சுயம் அடைந்து நிமிர்ந்து பார்த்தவருக்கு விழிகள் பெரிதாக விரிந்து கொண்டன.

ஆம், ஜெய் ஆனந்த்துடன் சிரித்து பேசிக் கொண்டே வந்த பிரதாபன் “விபீஷன்” என்று உரக்க அழைத்து இருந்தார்.

கட்டிலில் சாய்ந்து விழிகள் மூடி சிந்தனையில் ஆட்பட்டு இருந்தவன் பிரதாபனின் அழைப்பில் சட்டென எழுந்தவன் அடுத்து சில நொடிகளில் அவர் முன்னிலையில் பவ்யமாக நின்று இருந்தான் விபீஷன். 

“இனிமேல் குடிக்காத டா” என்றவர் அவனை அணைத்து விடுவித்து விட்டு அப்பாவை மன்னிச்சிடு டா” என்றவர் குரலில் பல அர்த்தங்கள் பொதிந்து இருந்ததை அவர் மட்டுமே அறிவார்.

அதிர்ந்தவன் “அப்பா” என்றான் நெகிழ்வான குரலில்…

அவனின் தலையை வருடிக் கொடுத்தவர் “போய் ரெஸ்ட் எடுடா” என்றவர் ஜெய் ஆனந்த்தை ஓர் அர்த்தப் பார்வை பார்த்து விட்டு வெளியேறி விட….

ஆம், விபீஷனின் கழுகுக் கண்களில் இருந்து தப்புமா என்ன? யாரும் அறியாமல் ஓர் விரக்திப் புன்னகையை சிந்தியவன் வலுக்கட்டாயமாக புன்னகைத்தவன் ஜெய் ஆனந்த்தைப் பார்த்து “கொஞ்சம் பேசலாமா?”  என்றான்.

அவனின் முகம் காட்டும் உணர்வுகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன் “தாராளமா பேசலாம்” என்றவன் புன்னகைக்க….

இருவரின் அருகில் வந்து நின்ற வித்யா “என் அண்ணாகிட்ட என்னடா சொன்ன விறைப்பா சுத்திட்டு இருந்தாரே இப்போ அபூர்வமா சிரிச்சிட்டு போறார்…” என்று வியப்பாக கேட்க…

அதற்கும் மென் புன்னகை சிந்தியவன் சற்றே குனிந்து வித்தியாவின் மூக்கை பிடித்து ஆட்டியவன் “அத்தை… என்று இழுவையாக சொன்னவன் வயசாகிடுச்சினா அவங்க மைண்ட் குழந்தை போல தான் சோ சொல்ற விதத்துல சொன்னேன். தட்ஸ் இட்” என்றான் தோள்களை குலுக்கி…

வாயடைத்து போய் நின்ற சித்ராவிற்கே திகைப்பு தான்.

இத்தனை வருடங்களில் சிடு சிடு என கண்டிப்பு காட்டியவர் தங்கள் முன்னால் மன்னிப்பு கேட்டது மட்டும் அல்லாமல் முப்பது வருடங்களுக்குப் பிறகு மலர்ந்து சிரித்து விட்டு செல்வதை பார்த்து அவருக்கு திகைப்பு அல்ல மயக்கம் வராமல் இருப்பதே அதிசயம் தான்.

மூக்கை தேய்த்து விட்ட படியே “என்னோட மூக்கை பிடிச்சு ஆட்டுறதை நிறுத்திட்டு சீக்கிரம் இந்த வீட்டுக்கு உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்து கொஞ்சு டா” என்றவர் நொடித்துக் கொண்டே சமையலறைக்கு செல்ல…

பொண்டாட்டி என்ற அவரின் சொல்லிக் சட்டென தன்னவளின் மலர்ந்த வதனம் மனதில் தோன்ற இதழ் கடித்து தன் எண்ண அலைகளை அடக்கிக் கொண்டே “சீக்கிரம் கொஞ்சிறேன் அதுவும் உங்க முன்னாடியே ” என்று சத்தமாக அவன் சொல்ல…

“அதையும் பார்க்கலாம் டா” என்று சமையலறைக்குள் இருந்து குரல் கொடுத்து இருந்தார் வித்யா.

அவர்களுக்குள் பேசிக் கொள்வதில் தனக்குள் தோன்றிய எரிச்சலைக் கட்டுப் படுத்திக் கொண்ட விபீஷன் “டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரூப்டாப்ல வெயிட் பண்ணு” என்றவன் தனது போனை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று இருந்தான்.

அதனைத் தொடர்ந்து தான் வாங்கி வந்தவைகளை ஒவ்வொன்றாக பிரித்து வைத்தவன் “அம்மா இது உங்களுக்கு” என்று அவருக்கு பிடித்த மயில் வண்ண புடவையை நீட்ட… “டேய் அமெரிக்கால புடவை எல்லாம் இருக்குமா என்ன?” என்று புடவையை ஆசையாக வருடிய படி வியப்பாகக் கேட்க…

“எல்லாமே இருக்கு என்றவன் இது என்னோட ஸ்வீட் அத்தைக்கு…” என்று அவருக்கு ஒரு புடவையை கொடுத்து இருந்தான். அதில் விழிகள் கலங்க அதை வாங்கிக் கொண்டவர் “தேங்க்ஸ் டா” என்று புன்னகைக்க…

“ப்ச்… என்று வித்யாவின் கன்னத்தை துடைத்து விட்டவன் ஒரு கணம் வாசலை பார்த்து விட்டு அவரைப் பார்த்தவன் இதை தியாவுக்கும் பவ்யாகும் கொடுத்துடுங்க அத்தை” என அவர் கையில் இரு பைகளை கொடுத்தவன் கழுத்தில் கையை வைத்து நெட்டி முறித்த படி “மா நான் ஒர்க் அவுட் பண்ணணும் சோ காஃபி போட்டு மேல எடுத்திட்டு வாங்க” என்றவன் மாடியேறி மேலே சென்று இருந்தான்.

அவன் சென்ற அடுத்த சில நிமிடங்களில் பவ்யாவை வேகமாக இழுத்துக் கொண்டு பிரதாபனின் வீட்டின் உள்ளே நுழைந்தவள் “மாமா… மாமா…” என்று சத்தமாக அழைத்த படி உள்ளே வர…

சோஃபாவில் அமர்ந்து போனைப் பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனோ அவளின் குரலில் சட்டென தன் பார்வையை அவளின் மீது படிய விட்டான்.

இவ்வளவு நாளும் அவன் அவளை ரசித்தது கூட இல்லை ஏன் கடமைக்கு கூட முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் கடப்பவன் பார்வையோ இன்று ஆஹித்யாவின் மீது ரசனையாகப் படிந்தது.

ஐந்தரை அடி உயரம் இருப்பாள். இரு திருத்தப்பட்ட அடர்ந்த புருவங்களுக்கு இடையில் இருந்த சிறிய செந்நிற பொட்டு அவளின் பிறை நெற்றியின் அழகை கூட்ட அப்படியே தன் பார்வையை அகற்றி அவளின் இதழ்களில் படிய விட்டவனுக்கு அச் செம்பவள இதழ்களில் குடி புக எண்ணம் தோன்ற… தன் எண்ணம் போகும் திசையைக் கண்டு அதிர்ந்தவன் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்க, சட்டென அவன் முன் வந்தவளோ “விபீ மாமா எங்க?” என்று கேட்க…

அவளின் அருகாமையில் சிதற துடித்த தன் மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டவன் “வெளில கிளம்பிட்டார்” என்றதோடு சட்டென பார்வையை திருப்பி மீண்டும் போனை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

“அச்சோ நான் கேட்டது ஜெய் மாமா” என்றிட…

அதில் பற்களைக் கடித்துக் கொண்டே தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டவன் “வாட் கம் அகைன்?” என்றான்.

அவனின் இறுகிய குரலில் திடுகிட்டவள் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே “விபீ அது அது வ..வந்து” என்று திணற… அவளின் கையை பிடித்துக் கொண்டு அருகில் நின்ற பவ்யாவோ “இவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்லையே இப்படி பயந்து சாகுறா?” என்று உள்ளே தனது தமக்கைக்கு மட்டும் அல்லாமல் விபீஷனையும் கடிந்துக் கொண்டவள் விபீஷனை முறைத்தவள் “ஏன் அக்காவை முறைக்கிறீங்க… ஜெய் மாமாவை தானே கேட்டா உங்களுக்கு தெரியலனா தெரியலைனு பதில் சொல்லுங்க. இப்படி அதட்டி பேசுற வேலை எல்லாம் வச்சிகிட்டா சீவிடுவேன்” என்றாள் சுட்டு விரல் நீட்டி…

அதிர்ந்து போன ஆஹித்யா “பவ்யா என்னடி பேச்சு இது? அவருக்கும் என்னோட வயசு தான் இப்படி பேசாத” என விபீஷன் முன்னாலேயே அவளைக் கடிய… “அக்கா ரொம்ப ஓவரா பண்றார்” என்றவளிடம் “வயசுல பெரியவங்களை இப்படி எடுத்தெறிஞ்சி பேசாத சாரி கேளு டி” என்றாள் ஆஹித்யா.

ஆஹித்யாவையே பார்த்து இருந்தவன் திரும்பி இப்போது இதழ்களுக்குள் தோன்றிய கேலிப் புன்னகையுடன் தன்னை முறைத்துக் கொண்டு நின்ற பவ்யாவிடம் “இட்ஸ் ஓகே நான் உன்னை மன்னிச்சி விடுறேன்” என்று சொல்ல…

“உங்களோட மன்னிப்பு கன்றாவி எல்லாம் எனக்கு தேவை இல்லை என்றவள் திரும்பி ஐ ஹேட் யூ” என ஆஹித்யாவைப் பார்த்து சொன்னவள் அவளின் கையை உதறித் தள்ளி விட்டு சமையல் அறைக்குள் ஓடி இருந்தாள்.

போகும் அவளின் முதுகை வெறித்த ஆஹித்யா தன் எதிரே நின்றவனிடம் “அவளுக்காக நான் சாரி கேக்குறேன் விபீஷன்” என்று சொல்ல…

பவ்யா மீது தோன்றிய ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் “இட்ஸ் ஓகே சின்ன பொண்ணு தானே” என்று சொன்னவன் மெலிதாக புன்னகைக்க…

பதிலுக்கு புன்னகைத்தவளும் “மாமா?” என்றாள் மறுபடியும்…

அவனை மாத்திரம் மாமா என்று சொல்கின்றாளே என தனக்குள் மறுபடியும் தோன்றிய சினத்தை அடக்கிக் கொண்டே முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் “ரூட்டாப்ல” என்றான்.

“தேங்க்ஸ் என்று செல்லப் போனவளை “என்னை மாமானு கூப்ட மாட்டியா?” என்று கேட்டவனை அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தவள் சட்டென சிறு வயதில் நடந்த ஓர் சம்பவம் கண் முன் விரிய, தனது வலக் கன்னத்தில் கையை வைத்து வருடிய படியே “எதுக்கு உங்ககிட்ட மறுபடி அறை வங்குறதுக்கா?” என்று சொன்னவள் அங்கு நிற்காமல் சித்ராவின் அழைப்பில் சமையல் அறையை நோக்கி சென்று இருந்தாள் பெண்ணவள்.

அவளின் பதிலில் சற்றே திகைத்தவன் பின் புரிய இதழ்கள் புன்னகையில் விரிய “ஷிட் என நெற்றியை நீவிக் கொண்டவன் அப்போ நடந்ததை இப்போ நினைவு வச்சு இருக்கா” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் இவ்வளவு நாளும் அவள் பேச வரும் போதெல்லாம் முகத்தில் அடித்தது போல பேசி விட்டு நகர்ந்ததை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டவன் சற்றே அவளின் அழகிலும் குணத்திலும் தடுமாறி தான் போனான்.

தலை வலி சற்று குறைந்து இருக்க, தன் தலையில் இருந்த கட்டை மெதுவாக அவிழ்த்தவன் முன் இருந்த மேசையில் பட்டென காஃபி கப்பை கொண்டு வந்து வைத்த பவ்யா “குடிகார ரவுடி” என்று அவனை வாய்க்குள் திட்டிக் கொண்டே போக….

அதுவோ அவன் காதில் அச்சுப் பிசகாமல் விழ, விடுவானா அவன் முகம் இறுக போகும் அவளை சொடக்கிட்டு “ஏய்” என்று அழைத்தான்.

அவளோ திரும்பியும் பாராது நடக்க… “ஆஹித்யா” என்று சத்தமாக அழைக்க…

திடுக்கிட்ட பவ்யா இப்போது அவனைத் திரும்பிப் பார்த்து முறைக்க… அவனோ கேலியாக அவளைப் பார்த்து சிரித்தவன் இரு எட்டுக்களில் அவளை நெருங்கி “திஸ் இஸ் டூ மச் பவ்யா சோ ஸ்டே இன் யுவர் லிமிட்” என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் திரும்பியும் பாராது காஃபியை எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று இருந்தான்.

அதிர்ந்து நின்று இருந்தவள் முன் காஃபியோடு வந்து நின்ற ஆஹித்யா “விபீஷன் கூப்ட போல இருந்துச்சே எங்க அவர்?” என்று வினவ…

“ஓஹோ அந்த மலைக் குரங்கு இப்போ தான் மாடி ஏறி போச்சு” என்றவள் முறைத்து விட்டு நகர… அவள் அவனை மலைக்குரங்கு என்றதில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டவள் “மலை குரங்கு காதுல விழுந்தா நீ கைமா தான்” என்று சொன்னவள் காஃபியை எடுத்துக் கொண்டு மாடியேறி  வந்தவளோ “மாமா காஃபி” எனக் கத்தியபடி வந்த ஆஹித்யாவுக்கோ அங்கு ஆர்ம்கட்  மற்றும் ஷார்ட்ஸ் உடன் டம்பல்ஸ்ஸை வைத்து உடற்பயிற்சி செய்துக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தை கண்டு விழி விரித்து பார்த்தவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்ள….

அவளின் குரல் கேட்டு பின்னால் திரும்பியவன் டம்பல்ஸ்ஸை கீழே வைத்து விட்டு  கழுத்தில் வழிந்த வியர்வையை துடைத்த படி அவனையே அதிர்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை நெருங்கி “குட் மார்னிங் தியா என மென் புன்னகையுடன் சொன்னவன் அவளின் பார்வை செல்லும் திசையைப் பார்த்து குரலை செருமியவன் வாட்?” என்றான் புருவம் உயர்த்தி…

“ஹான்… என ஒரு கணம் விழித்தவள் வழமை போல பரவால்லையே மாமா ரெண்டு வருஷத்துல மசில்ஸ் எல்லாம் செம்மயா மெயின்டென் பண்ணி இருக்கீங்க” என்றாள் ஒரு துள்ளலுடன்…. 

சத்தமாக சிரித்தவன் காஃபியை குடித்துக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தவன் “டெய்லி வொர்க்அவுட்ஸ் தான் என்றவன் காஃபியை அருந்திக் கொண்டே டிரஸ் பிடிச்சு இருக்கா? என்று கேட்டு இருந்தான்.

“என்னோட ஜெய் மாமா வாங்கிட்டு வந்தால் எனக்கு பிடிக்காதா என்ன?” என்று புருவம் உயர்த்திக் கேட்க…

“ஸ்டில் என்னோட செலெக்ஷன் பிடிக்குமா? என்று கேட்டவனிடம் “உங்களை தவிர யாராலயும் எனக்கு பெஸ்ட் ஆஹ் செலக்ட் பண்ணிட முடியாது ஜெய் என்றவள் நாக்கை லேசாக கடித்து விடுவித்தவள்   மாமா” என்றாள் அவளும் பதிலுக்கு…

அவளின் செய்கையை ரசித்து பார்த்தவன்  மென் புன்னகையுடன் “எனிவே தேங்க்ஸ் ஃபார் த மார்னிங் காஃபி என்றவன் அவளிடம் கப்பை நீட்டி இருக்க, “மாமா… ஒரு காஃபிக்காக தேங்க்ஸ் எல்லாம் ஓவர் தான்” எனச் சிணுங்கிக் கொண்டே கப்பை வாங்கிக் கொண்டவள் அவளின் அன்னை வித்யா அழைக்கும் குரல் கேட்க, “இதோ வரேன் மா” என உரக்கக் கத்தியவள் “பை மாமா பிறகு பேசலாம்” என்றவள் வேகமாக ஓடிய வேகத்தில் மாடியேறி மேலே வந்த விபீஷன்  மீதே மோதி  சமநிலையின்றி மாடிப் படிகளில் “அம்மாமாமா…” என்றுக் கத்திக் கொண்டே விழ இருந்தவளை இடையோடு தாங்கிப் பிடித்து இருந்தான் விபீஷன்.

அத்தியாயம் – 3

தான் கீழே விழப் போகின்றோம் என்ற அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடிக் கொண்டு விழ இருந்தவள் தன்னை யாரோ விழ விடாமல் தாங்கிப் பிடித்து இருப்பதை உணர்ந்துக் கொண்டவள் சட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அங்கோ, அவளைத் தான் பார்த்துக் கொண்டு  இருந்தான் விபீஷன்.

இருவரின் விழிகளும் ஒருங்கே உரசிக் கொள்ள… அவனின் ஊடுருவும் பார்வையில் சட்டென தன்னை நிதானித்து அவனது அணைப்பில் இருந்து விலகியவள் திரும்பியும் பாராது படிகளில் இறங்கி வேகமாகச் சென்று இருந்தாள்.

இதழ் குவித்து ஊதிக் கொண்டே ஷர்ட்டின் கையை மடித்து விட்டுக் கொண்டே அதிர்ந்து போய் நின்று இருந்தவன் முன் வந்து நின்று குரலை செருமினான்.

விழிகளை மூடித் திறந்த ஜெய் ஆனந்த்தோ பால்கனி கட்டில் சாய்ந்து நின்ற படி அவனைக் கேள்வியாகப் பார்க்க…

“என்கிட்ட அப்பாவை மன்னிப்பு கேட்க சொன்னது நீ தானே” என அவனது நேரடி கேள்வியில் “அவரை எதுக்காக நான் மன்னிப்பு கேட்க சொல்லனும்? அக்ச்சுவலி அப்பா மன்னிப்பு கேட்பார்னு நானே எதிர் பார்க்கல விபீஷன்” என்றான்.

“ம்ம்” என்று சொன்னவன் தன் பேச்சு முடிந்தது என்பதைப் போல திரும்பி சென்றவனிடம் “என்னோட ரூம் யூஸ் பண்ணியா?” என்ற அவனது கேள்வியில் சற்றே திகைத்தாலும் “அண்ணாவோட ரூம் தம்பி யூஸ் பண்ணக் கூடாதுனு ரூல்ஸ் இருக்கா என்ன?” என்று ஓர் வன்மப் புன்னகையுடன் இரு பொருள் பட அவன் கேட்க….

“நாட் லைக் தட் தாராளமா யூஸ் பண்ணிக்கலாம்” என்றான்.

விபீஷன் திரும்பி நின்றிருந்ததால்  அவனது முகம் காட்டும் உணர்வுகளை பின்னால் நின்று இருந்த ஜெய்  ஆனந்த்    கவனித்து இருந்தால் அவனது வன்மப் புன்னகை புரிந்து இருக்குமோ என்னவோ விதியின் செயலை யாரால் மாற்ற முடியும்? 

ஜெய் ஆனந்த்தின் பதிலில் திருப்தியாகப் புன்னகைத்தவன் “தேங்க்ஸ்” என்று திரும்பி பாராமலேயே சொன்னவன் அங்கிருந்து நகர்ந்து விட… போகும் அவனை பார்த்துக் கொண்டு இருந்தவன் இதழ்களோ “நான் என்னடா பண்ணேன் வை ஆர் யூ அவோய்டிங் மீ” என்றுக் கேட்டுக் கொண்டவன் வானத்தை வெறித்த படி நின்று இருந்தான்.

மூச்சு வாங்க கீழே ஓடி வந்த ஆஹித்யாவை பார்த்த வித்யா “ஒரு காஃபி கொடுக்க இவ்வளவு நேரமா? என்றபடி தலையில் தட்டிக் கொண்டவர் அண்ணி நாங்க கிளம்புறோம். அண்ணா வந்த பிறகு சொல்லிடுங்க” என்றவர் இருவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட…..

வானத்தை வெறித்துக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்று இருந்தவனை என்றும் ஈர்க்கும் அதே குரல் கீழே கேட்க… சட்டென குரல் வந்த திசையை பார்த்தவன்  இதழ்களோ  புன்னகையை தத்தெடுத்து இருந்தன. இங்கோ, அறையியை ஒட்டிய பால்கனியில் நின்ற விபீஷனின் கைகளில் ஜெய் ஆனந்த்தின் அறையின் லாக்கரில் இருந்து எடுத்த சில காதல் கவிதைகள் எழுதப்பட்டு இருந்த கடிதங்களை வெறித்துக் கொண்டு இருந்தவன் இதழ்களோ “தியா இஸ் மைன்” எனச் உச்சரித்த அதே கணம் அவனின் கரம் கொடுத்த அழுத்தத்தில் அவனின் கரத்தில் இருந்த அக் காகிதங்கள் கசங்கி விட்டு இருந்தன.

வீட்டிற்கு வந்த பவ்யா நேரே சென்றது என்னவோ அவளின் அறைக்குத் தான். உள்ளே நுழைந்து கதவை தாழிட்டு கொண்டவள் இதயம் ஏனோ படு வேகமாகத் துடித்துக் கொண்டு இருந்தது.

ஆம், துடிக்காதா பின்ன? இவ்வளவு நாளும் மௌனமாக ரசித்து அவன் மேல் காதல் கொண்டு இருந்தவள் மனம் அவனின் தலையில் கட்டைக் கண்டதும் இதயம் பதறியது என்னவோ உண்மை தான். அதுவும் இன்று தான் முதல் முறை அவனை எதிர்த்து பேசி இருக்கின்றாள் அதுவும் தமக்கைக்காக… 

தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.

அவனைக் கண்டாலே பயத்தில் இதயம் படபடக்க பேசத் தயங்குபவள் இன்று தான் வாயை திறந்து இருக்கின்றாள் அனைத்தையும் நினைத்து ஓர் பெரு மூச்சுடன் “சீக்கிரம் என்னோட காதலை சொல்வேன் என் ரௌடி மச்சான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் அறியவில்லை அவளின் உயிர்ப்பையே மொத்தமாக அவனால் தொலைக்கப் போகின்றாள் என…

அதனைத் தொடர்ந்து அன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையுடன் கழிய… அடுத்த நாள் காலையிலயே புதிதாகக்  நிர்மாணித்த தனது மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்று இருந்தான் ஜெய் ஆனந்த்.

அவன் மருத்துவமனைக்கு வந்த சிலமணி நேரத்திலேயே வைத்தியர்களுக்கும் தாதியர்களுக்கும் மீட்டிங் ஒன்றினை ஏற்பாடு செய்திருக்க… அவ் விசாலமான மீட்டிங் அறையினுள் ஆளை அசத்தும் கம்பீரமான தோற்றத்துடனும் மேலும் அவனது ஆளுமையும் சேர்ந்துக் கொள்ள தனது காந்தக் குரலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தான் அவன்.

மெல்லிய புன்னகையுடன் அனைவரையும் கூர்ந்து நோக்கியவன் “வெல் கம் ஆல்” என்ற அவனது ஆண்மை ததும்பும் குரலில் அனைவரின் முகத்திலும் ஒரு கணம் புன்னகை வந்து போக எழுந்து நின்றவர்களை தனது கை அசைவினாலேயே அமரச் சொல்லியவன் தனது இருக்கைக்கு நேரே செல்லாது அவர்களுடன் சென்று அமர்ந்துக் கொண்டான்.

தங்களுடன் வந்து அமர்ந்து கொண்டவனை அனைவரும் அதிர்ச்சியாகப் பார்க்க… “என்ன இப்படி பார்த்திட்டு இருக்கீங்க நானும் மனுஷன் தானே” என்று புன்னகையுடன் சொல்ல….

“சார்” என்ற சிலரின் அழைப்பில் “ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ஷாக் அஹ் குறைங்க நானும் உங்களை போல சாதாரண டாக்டர் தான் எனத் தோள்களை குலுக்கி சொன்னவன் ஃபார்ஷியலிடி வேண்டாமே”  என்றான். 

மேலும் தொடர்ந்தவன் “நிறைய பேசி உங்களை எல்லாம் தூங்க வைக்க ஐம் நாட் இன்டரெஸ்டட் என்று சொன்னவன் இது என்னோட சின்ன வயசு கனவு என ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து விட்டுக் கொண்டே சொன்னவன் சோ எந்த இடத்திலும் தப்பு நடக்காமல் பார்த்துக்க வேண்டியது நம்மளோட ரெஸ்பொன்சிபிலிடி என்றவன் தொடர்ந்து இது என்னோட ஹாஸ்பிடல் மட்டும் கிடையாது என்றவனை புரியாது பார்த்தவர்களை நோக்கி உங்களோடதும் கூட” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “எக்ஸ்கியுஸ் மீ மே ஐ கம் இன்?” என அனுமதி கேட்டு ஒருவன் நிற்க….

“கம் இன் நவீன்” என்று கூட்டத்தில் இருந்து சத்தம் வர, அங்கு பார்வையை செலுத்தியவனுக்கு அனைவரின் நடுவிலும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் மென் புன்னகை தவிழ உள்ளே வந்தவனை “திஸ் இஸ் மை ப்ரெண்ட் நவீன்” என்று அறிமுகப் படுத்தியவன் விழிகளால் அவனை அமரச் சொல்ல…

 “தேங்க்ஸ்” என்ற நவீன் அமர்ந்துக் கொண்டான்.

 அதனைத் தொடர்ந்து சாதாரணமாக உரையாட ஆரம்பித்தவன் மருத்துவமனை சட்டதிட்டங்கள் என அனைத்தையும் கூறி இருந்தான்.

அவன் தான் தலைமை வைத்தியர் என்றதையும் தாண்டி   அனைவருடனும் சகஜமாகப் பழக அவனை அனைவருக்குமே பிடித்து தான் போனது.

இங்கு இப்படி இருக்க, காலையிலேயே காலேஜ் செல்ல ஆயத்தமாகி  வந்த ஆஹித்யாவின் முன் நின்று இருந்தான் விபீஷன்.

அவனை இந்நேரத்தில் சற்றும்  எதிர்ப் பார்க்காத அவளோ அதிர்ந்துப் போனவள் அவனை கேள்வியாக நோக்க… சற்றே குரலை செருமியவன் “நான் கூட்டிட்டு போகட்டுமா?” என்று நேரடியாக கேட்டே விட்டான்.

சும்மாவே  திகைத்துப் போய் நின்று இருந்தவள் இப்போதைய அவனின் கேள்வி மேலும் அதிர தான் வைத்து இருந்தது.

பின்னே அதிர்ச்சி வராமல் இருக்குமா என்ன? வழமையான அவனின் குணம் இதுவல்லவே! முகம் கொடுத்து பேசாமல் சிடு சிடு வென முகம் இறுக இருப்பவனின் இவ் அவதாரமே அவளுக்குப் புதிதாகத் தெரிந்தது.

அவனையே இமைக் கொட்டாமல் திகைத்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை நெருங்கி வந்து நின்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவளின் உயரத்திற்கு குனிந்து அவளின் முகத்தில் இதழ் குவித்து ஊத, அவனின் மூச்சுக் காற்றில் சுயம் அடைந்து சட்டென விலகி நின்று அவனை தீயாக முறைத்தவள் “விபீ திஸ் இஸ் டூ மச்” என்று சொல்ல…

“வாட்… என்ன டூ மச்?” என்றவன் பார்வை அவளின் சிவந்த இதழ்களில் படிய….

அதற்கு பதில் கூறாமல் “பை” என்றவள் திரும்பி நடக்க….

“நானே…” என்று அவள் பின்னல் வந்தவனை திரும்பிப் பார்த்து மீண்டும் முறைத்தவள் “இவ்வளவு நாளும் தனியா காலேஜ் போக தெரிஞ்ச எனக்கு இப்பவும் போக தெரியும் சோ உங்களோட வேலையை மட்டும் பார்த்தால் போதும்” என்று சொன்னவள் திரும்பி நடக்க….

 “இதுவும் என்னோட வேலை தானே ” என்று தன் பின்னால் இருந்து குரல் கொடுத்தவனை கிஞ்சித்தும் பொருட் படுத்தாமல் இதயம் படபடக்க வேகமாக நடந்து சென்று இருந்தாள் பெண்ணவள்.

போகும் அவளை வெறித்துப் பார்த்தவன் “ என்கிட்ட இருந்து உன்னால எவ்வளவு தூரம் விலகிப் போக முடியும்னு பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே திரும்பியவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

ஆம், மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய படி அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள் பவ்யா.

அவளின் தோரணையில் எரிச்சலாக இருந்தாலும் அவளிடம் பேச்சு கொடுக்க விரும்பாமல் விலக முற்பட்டவன் முன் மீண்டும் வந்து நின்றவளை எரித்து விடுபவன் போல முறைத்தவன் விலகி வேறு பக்கமாக செல்ல தொடங்கியவன் முன் உன்னை விட மாட்டேன் என்ற தோரணையில் அவள் மீண்டும் வழி மறித்து நிற்க…

அவனுக்கோ பொறுமை காற்றில் பறக்க “இடியட்” என்று சுட்டு விரல் நீட்டி சீறியவன்  விரலை  பிடித்து ஆராய்ந்தவள் “நெயில் கட் பண்ணலையா? என்று சலித்து கொண்டே மணிக்கட்டில் கட்டி இருந்த கைக் கடிகாரத்தில் மணியை பார்த்தவள் காலேஜ் போக டைம் இருக்கு சோ  கட் பண்ணி விடுறேன்” என்று தன் இஷ்டத்திற்கு அவள் சொல்ல…

முகம் இறுக பற்களைக் கடித்துக் கொண்டு நின்று இருந்தவன் வெடுக்கென தனது கையை இழுத்து எடுத்தவன் “மறுபடியும் சொல்றேன்  டோண்ட்  கிராஸ் யுவர் லிமிட் என்றவன் தலையைக் கோதிக் கொண்டே  சின்ன பொண்ணுனா அதுபோல நடந்துக்கோ” என்றவன் அவளைத் தாண்டி ஓரடி தான் எடுத்து வைத்து இருப்பான் அதற்குள் அவனின் செவிகளில் எட்டிய அவளின் வார்த்தைகளில் சினம் தெறிக்க ருத்ர மூர்த்தியாக மாறி இருந்தான்.

அத்தியாயம் – 4

விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி  உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி புள்ஸ் புள்ஸ் ஆஹ் பெத்து போடுறது?” என்றாளே பார்க்கலாம்.

அவளின் தோரணையில் மீண்டும் சினம் தலைக்கு ஏற அறைய கையை ஓங்கியே விட்டான். அவளோ அதற்கு கொஞ்சமும் அசர வில்லை அவனின் விழிகளை தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்.

அவளின் அந்த அழுத்தமான பார்வையில் ஓங்கிய கையை இறக்கியவன் “சாவடிச்சிருவேன் மைண்ட் யுவர் வேர்ட்ஸ் என்றவன் நெற்றியை நீவிக் கொண்டே இதோ பார் பவ்யா அப்படியே நான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சாலும் மறந்தும் உன்னை கட்டிக்க மாட்டேன்” என்றவன் அவளின் கலங்கிய விழிகளை திருப்தியாகப் பார்த்து புன்னகைத்து விட்டு ஷட்ர்ட்டின்  கையை மடித்து விட்டுக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்து இருந்தான்.

போகும் அவனை வெறித்துப் பார்த்தவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.

கிட்டத்தட்ட தன் அவன் மீதான காதலை மறைமுகமாக சொல்லி விட்டாள் அல்லவா! ஆனால் அவனோ வெறுப்பை அல்லவா உமிழ்ந்து விட்டுப் போகின்றான்.

சுற்றம் உணர்ந்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள் அவனைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்துக் கொண்டு “அத்தை” என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தவள் சித்ராவிற்கு சமையலில் உதவ ஆரம்பித்து விட்டாள். 

இங்கோ அறைக்குள் வந்த விபீஷனிற்கு நிலைக் கொள்ளவே முடியவில்லை.

அவளின் நேர் கொண்ட பார்வை கூட அவனுக்கு பொய் உரைப்பதாகத் தெரியவில்லை. 

அக் கிராமத்து பெண்களின் பார்வை அவன் மேல் படிந்தாலும் கண்டுக் கொள்ளாமல் செல்பவன் இன்று அதுவும் முதல் முறை அதுவும் அவன் எதிர்ப் பார்க்காத ஒருவள் அவனிடம் காதலை சொல்லி இருக்கின்றாள். ஆனால் கொஞ்சமும் அதனை அவனால் ஜீரணிக்க முடியாமல் போனது தான் நிஜம்.

 ஆம், அவன் தான் ஆஹித்யாவை அடைய வேண்டும் என்ற வெறியில் இருக்கின்றானே! அப்போது வழியே வருபவளை அவனது அறிவு சிந்திக்க மறுத்தது இல்லை இல்லை அவளின் எண்ணத்தை யோசிக்க விடாமல் தனக்கு தானே தடை போட்டுக் கொண்டான் என்றே சொல்லலாம்.

உடன் பிறந்தவன் மீதான அதீத வெறுப்பு அவனின் சித்தத்தை செயல் இழக்க வைத்து இருந்தது.

எப்போது ஜெய் ஆனந்த்தின் கடிதங்களில் ஆஹித்யாவின் பெயரைக் கண்டானோ அன்றில் இருந்து அவளை நினைக்க ஆரம்பித்தவன் ஜெய் ஆனந்த் இங்கே வந்த பிறகு அவனது நடவடிக்கைகளை வைத்து ஏதாவது திட்டம் தீட்டலாம்  என்று இருந்தவனுக்கு ஆஹித்யாவின் மனதில் யாரும் இல்லை என்று திட்ட வட்டமாக உறுதியும் செய்து இருந்தான்.

தனது டிராயரில் இருந்த ஜெய் ஆனந்த்தின் கடிதங்களை மீண்டும் எடுத்தான்.  அதிலோ, ஆஹித்யா பிறந்த திகதியில் இருந்து அவள் பருவப் பெண்ணாகும் வரை அவளை வர்ணித்து கவிதைகளால் நிரப்பி இருந்தான் அவன்.

அவள் பருவமடைந்த பின் அந்த நாளில் இருக்கும் கவிதையை பார்த்தான்.

ஆம், அது தான் அவளை நினைத்து ஜெய் ஆனந்த் எழுதிய இறுதி மடல்.

மேலே இருக்கும் திகதியை வருடிக் கொண்டே அவ் எழுத்துக்களை வெறித்தான். “உன் பெண்மைக்கு மதிப்பளிக்கின்றேன் பெண்ணே! இந்நாள் வரை ரசித்த உனை இனியும் ரசித்து எழுத மனம் இடம் கொடவில்லை பருவப் பெண்ணே!  ஆம், இதுவே என் இறுதி மடல்! உன் பெண்மையை என் கவிதை கூட தீண்டக் கூடாதென எண்ணம் உதித்ததேனோ! நான் உன்னவனாகும் வரம் வேண்டி காத்துக் கிடப்பதும் கூட காதலின் சுக அவஸ்தையடி பெண்ணே! அதுவரை என் யாக்கை முழுதும் உன் எண்ண அலைகளில் நித்தமும் ஏங்கும் என்னவளே! காலமே பதில் சொல்லும்…!” என்ற கவிதையோடு நிறைவு பெற்று இருக்க அதனை வாசித்தவனுக்கோ இதழ்களில் ஏளனப் புன்னகை தோன்றி மறைந்து இருந்தது.

சிலமணி நேரங்களாக அதனையே வெறித்துக் கொண்டு இருந்தவனுக்கு என்ன தோன்றியதோ ஒருக் குரூர புன்னகை முகத்தில் தவிழ அறையை விட்டு வெளியேறியவன் நேரே சென்றது என்னவோ பிரதாபனின் அறைக்குள் தான்.

உள்ளே வந்தவனை புருவம் சுருக்கி பார்த்த பிரதாபன் “என்ன விஷயம் விபீஷன்?” என்று அவர் கேட்க…

அவன் எதுவும் விடயம் இல்லாமல் வர மாட்டான் என அறிந்து வைத்து இருந்தவர் அவனைக் கேள்வியாக நோக்க…

குரலை செருமிக் கொண்டவன் “நான் ரைஸ் மில் அஹ் பொறுப்பா பார்க்கலாம்னு இருக்கேன்” என்று சொல்ல…

அவருக்கோ அவனின் பதிலில் தலைக் கால் புரியாத சந்தோஷம்.

எங்கே தனது இரண்டாவது மகன் நண்பர்களுடன் சேர்ந்து அவன் இஷ்டத்திற்கு வாழ்க்கையை குழப்பிக் கொள்வானோ என்று நினைத்து பயந்துக் கொண்டு இருந்தவருக்கு தற்போதைய அவனது முடிவில் திருப்தியாகப் புன்னகைத்துக் கொண்டவர் “சரி டா நாளைக்கு…” என்று ஆரம்பித்தவரை இடை மறித்தவன் “இப்போ நீங்க அங்க தானே போறீங்க சோ உங்க கூட நானும் வரேன்” என்றான்.

அவன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டதே பெரிய விடயம் என நினைத்தவர் மறுத்து பேசாமல் “வா கிளம்பலாம்” என்றவர் அவனோடு அறையை விட்டு வெளியில் வரவும் சித்ரா சமைத்து விட்டு அழைக்கவும் நேரம் சரியாக இருந்தது.

உணவைப் பரிமாறிக் கொண்டே நிமிர்ந்தவர் விழிகளிகளோ அதிர்ச்சியில் பெரிதாக விரிந்துக் கொண்டன.

பின்னே பிரதாபன் அவனை நெருங்கினாளே பத்தடி தள்ளி நிற்பவன் அவன். 

இருவரும் வருவதைப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தவரை நெருங்கிய பிரதாபன் “சித்ரா நீயும் உட்கார் சாப்டலாம்” என்று பிரதாபன் சொல்ல….

“இல்லைங்க வித்யா வரட்டும் அப்புறமா சாப்டுறேன் என்றவரைப் பார்த்து சரி அப்போ பவ்யா வந்தா தானே அவளைக் கூப்பிடு” என்றிட…

“சரிங்க என்றவர் பவ்யா” என்று சத்தமாக அழைக்க…

அடுத்த நொடியே சமையல் அறைக்குள் இருந்து வேகமாக வந்தவள் “அத்தை” என்றபடி சாப்பாட்டு மேடையில் அமர்ந்து இருந்தவனைப் பார்த்ததும் ஐயோடா என்றாகிப் போனது அவளுக்கு…

“உட்கார் சாப்பிடலாம்” என்று பிரதாபன் சொல்ல…

“மாமா அப்புறமா…” என்று இழுவையாக சொல்ல…

அவ்வளவு தான் பிரதாபன் முறைத்ததில் கிலி பரவ அவரின் எதிரேயே கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தாள் பாவை.

அவளின் புறம் இருந்த உணவுத் தட்டில் தோசையை எடுத்து வைத்த பிரதாபன் “சாப்பிடு பவ்யா. வளர்ற பொண்ணு தானே ஒழுங்கா எடுத்து போட்டு சாப்பிடு” என்று சொல்ல…

“சாப்டுறேன் மாமா” என்றவள்  மனதோ அதை அதுவும் அவன் இருக்கும் போதா சொல்ல வேண்டும் என நினைக்க அதற்கு மாறாக அவளை ஒருப் பொருட்டாகக் கூட மதிக்காமல் ஏன் தன் முன்னால் ஒருவள் அமர்ந்து இருக்கின்றாள் என்று கூட உணராமல் தோசையை எடுத்து போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்து விட்டான் விபீஷன். 

அவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு பிரதாபனை பார்த்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டவள் மனதிலோ “மாமா போல தான் பிள்ளையும் என்ன இந்த ரௌடி கொஞ்சம் ஓவரா பண்றான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே உண்ண ஆரம்பித்து விட்டாள்.

அதனைத் தொடர்ந்து வித்தியாவும் வந்து விட, அனைவரும் இருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே பிரதாபனோ “இனிமேல் ரைஸ் மில் விபீஷன் தான் பார்த்துக்க போறான்” என்று சொன்னதும் வழமை போல ஏதோ சண்டை வெடிக்க போகின்றது என நினைத்த சித்ரா சற்று தயங்கியவாறு “அவனுக்கு விருப்பம் இல்லனா விடுங்களேங்க” என்றிட…

அதற்கு பிரதாபன் பதில் கூறும் முன்னரே “எனக்கு பிடிச்சு இருக்கு நானே டீல் பண்றேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறி இருந்தான் விபீஷன்.

அதனைக் கேட்ட சித்ரா மற்றும் வித்யா உட்பட தங்கள் காதில் வீழ்ந்த அவனது வார்த்தைகளில் வியந்தார்கள் என்றால் ஒரு படி மேலாக சாப்பிட்டு முடித்து விட்டு நீர் அருந்திக் கொண்டு இருந்த பவ்யாவிற்கோ புரையே ஏறி விட்டது.  

சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனின் பார்வையில் தலையை தாழ்த்திக் கொண்டவளோ  தலையை தட்டிக் கொண்டே “சாரி சாரி” என்றவாறு அவசரமாக உள்ளே சென்று இருந்தாள்.

“எதுக்காக இவ்வளவு ஷாக் ஆகுறீங்க மா? எல்லாரும் ஆசைப் பட்ட போல தானே நானும் இப்போ சம்மதிச்சு இருக்கேன்” என்றவனோ தோள்களை குலுக்கிக் கொள்ள… 

பிரதாபனும் அவனின் பதிலில் புன்னகைத்த படி சாப்பிட்டு விட்டு எழுந்துக் கொள்ள, மேலும் தொடர்ந்த சித்ரா “இவ்வளவு நாளும் நானும் எவ்வளவோ கெஞ்சி அழுதும் போராடி பார்த்துட்டேன் படிச்சிட்டு வீட்டுல இருக்கேன்னு இருந்துட்ட அது மட்டுமா எதுக்கெடுத்தாலும் என்கிட்ட எரிஞ்சி விழுந்தியே டா” என்று ஏதோ தைரியத்தில் அவரும் பேசி விட…. “சித்ரா என்ன பேச்சு இது? பழசை விட்டுட்டு அவனை நல்லபடியா வழி அனுப்பி விடு” என்று பிரதாபன் கண்டிப்பாக சொல்ல…

“ஆமா அண்ணி” என்று வித்யாவும் சொல்ல…

“சாரி மா” என்றான் உண்மையாகவே தனது அன்னையின் முகத்தை பார்த்துக் கொண்டே…

“டேய் விடுடா என்னோட பிள்ளை தானே என்று சொன்னவர் இருந்தாலும் சொல்றேன் பயம் காட்டுற போல கத்தாத டா உன்னோட அம்மா எனக்கே உன் பக்கத்துல வர பயமா இருக்கு” என்று சொல்ல…

அவனோ உலக அதிசயமாக தன் தெற்றிப் பற்கள் தெரிய சத்தமாக சிரித்தான்.

அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த பவ்யாவின் மனதோ “இதோ சும்மாவே மயங்கி தான் இருக்க இப்போ உன்னை சிரிச்சு மயக்கிட்டான்” என்று சொல்ல “சும்மா இரு அவரோட தெத்து பல்லுக்கு தான் நானே அடிமை” என்று மனதோடு வாதிட்டு கொண்டு இருந்தவள் பார்வையோ சிரித்துப் பேசிக் கொண்டு இருந்த விபீஷன் மீது இருந்து ஒரு இம்மியும் கூட நகரவில்லை.

இங்கோ, மருத்துவமனையில் நவீனோடு சாப்பிட்டு கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தோ “நானே எக்ஸ்பெக்ட் பண்ணல அதுவும் உன்னோட ரெஸ்யூம் பார்க்குற வரையும்… சடன் ஆஹ் இங்க அதுவும் கிராமத்துக்கு வந்து இருக்க?” என்றான்  வியப்பு மேலிட…

“சிட்டிலே இருந்து போர் டா அதான் உன்கூடவே ஜாயின் பண்ணிக்க வந்துட்டேன்” என்று நவீன் சொல்ல…

“வெல்… அப்போ என்னோட வீட்டுலயே வந்து தங்கிக்கோ” என்க….

“அடிங்க… நான் வீடெல்லாம் பார்த்து பிக்ஸ் பண்ணிட்டேன் என்றவன் அடிக்கடி எங்க அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்லி செம்ம டாச்சர். அதுல இருந்து விடுதலை வேணும். அதுக்காகவே வந்து சேர்ந்ததுட்டேன் சோ என்னை தயவு செஞ்சு காப்பாத்து டா” என்றான் காலில் விழாத குறையாக…..

அவனின் நிலையை பார்த்து சத்தமாக சிரித்தவன் “மேரேஜ் பண்ணிக்க சொன்னால் பண்ணிக்கோ டா அதுக்கு ஏன் பயப்படுற?” என்று  கேட்க…

“நீ சிரிப்ப அதான் உனக்கு தியா இருக்காளே என்றவன் தொடர்ந்து அரேஞ்ச் மேரேஜ் எல்லாம் எனக்கு செட் ஆகாது ஜெய்” என்றான்.

இதழ் குவித்து ஊதியவன் “ஓகே என்னை நம்பி வந்து இருக்க காப்பாத்தி தொலைக்கிறேன்  என்றவன் சின்ன கரெக்ஷன்” என்று அவன் சொல்ல… “என்னடா?” என்றான் நவீன்.

“இன்னுமே நான் என்னோட லவ் சொல்லல நவீன் ஐ பீல் பியர் ஆப் ஹேர் ஆன்ஸ்சர் என்றவன் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டே ஒருவேளை என்னைப் பிடிக்கலனு  சொன்னால் என்னால அதை தாங்கிக்க முடியாது டா” என்றான் குரல் நடுங்க….

அவனின் கலங்கிய தோற்றம் மனதை வறுத்த “உன்ன பிடிக்காமல் போகுமா என்ன அதுவும் சின்ன வயசுல இருந்து அவளை உனக்கு பிடிக்கும் ஷி இஸ் லக்கி டூ ஹேவ் யூ என்றவன் சீக்கிரமா சொல்லிட்டு மேரேஜ் பண்ணிக்கோ என்றவன் அதோடு நிறுத்தாமல் உன்னோட அருமை தம்பிக்கு தெரிஞ்சா விட மாட்டான்” என்று சொல்ல…

அவன் இறுதியாக சொன்ன வார்த்தைகளில் விழிகள் இரண்டும் சிவக்க “நவீவீன்…” என்று கர்ஜித்தவன் அவனின் ஷர்ட்டின் காலரைப் இறுகப் பற்றி இருந்தான்.

அத்தியாயம் – 5

தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

 

சட்டென தனது பிடியைத் தளர்த்தியவன் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டே “ஃபார் ஷோர் தியா விஷயத்துல அப்படி நடந்துக்க மாட்டான்” என்றான் உறுதியாக…

 

“தென் ஓகே பட் யூ ஹாவ் டூ கன்பெஸ் சூன்” என்றான் நவீன்.

 

“சீக்கிரம் சொல்லிடுவேன்” என்றவன் அறியவில்லை அவனின் நம்பிக்கைக்குரிய  உடன் பிறந்தவன் இன்றே அவனின் தியா மனதில் நீங்கா இடம் பெற்று விடுவான் என…

அவன் கரங்களால் கசங்கிய அவனது ஷர்ட்டினை சரி செய்து விட்டவன் நெற்றியை நீவிக் கொண்டே சாரி டா” என்றிட…

தனது தோளில் இருந்த அவனது கையைத் தட்டி விட்ட நவீனோ “நாட் அக்செப்டட்” என்றான்.

 ஒரு பெரு மூச்சுடன் “சரக்கு வேணுமா?” என்றான் வெளிப்படையாக…

கேன்டீனில் வைத்து அதுவும் சத்தமாக அவன் இப்படி வெளிப்படையாக கேட்டதில் அதிர்ந்துப் போனவன் எட்டி அவனது வாயை பொத்தியவன் “என்னடா தர லோக்கலா பேசுற?”என்று கேட்க…

 

“சோ வாட் அதுக்காக தானே இப்போ சீன் கிரியேட் பண்ற?”

“தெரியிதுல அப்போ ஏன் சத்தமா பேசி மானத்தை வாங்குற? என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பட் இந்த முறை உன்னை குடிக்க வைக்காமல் விட மாட்டேன்” என்றான்.

 

அதற்கு மென் புன்னகை சிந்தியவனோ “இன் யுவர் ட்ரம்ஸ் என்று விட்டு  பாதி தூரம் சென்றவன் திரும்பி, ஆல்கஹால் ட்ரிங்க் பண்ணாத மோர் ஓவர் நீயும் டாக்டர் தான் உனக்கு நான் சொல்லி தெரியணும்னு  அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்” என்றான்.

 

“நாலு வருஷமா இதையே கேட்டு கேட்டு என் காதே அடைச்சு போச்சு டா ஸ்டில் ஐ அம் ட்ரையிங் டு ஸ்டாப் பட் முடியல” என்றான் தோள்களை குலுக்கி…

“யூ கேன் நவீன்” என்றவன் தனது பிரத்தியேக அறையை நோக்கிச் சென்று இருந்தான்.

 

அன்று மதியமே காலேஜில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த ஆஹித்யாவிற்கோ காலையில் விபீஷன் நடந்துக் கொண்டதைப் பற்றியே எண்ணம் சுழன்றுக் கொண்டு இருக்க, அவளால் அன்று மதிய உணவைக் கூட உண்ண முடியாத நிலை தான்.

துறு துறுவென காலேஜில் இருந்து வீட்டுக்கு வந்தாலே அடுத்த நிமிடம் சிட்டாக பறந்து பிரதாபனின் மிலிற்கு சென்று அப்படியே மாந்தோப்பு முதல் ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வருபவளுக்கு இன்றோ ஏனோ மனம் அநியாயத்திற்கு பதைபதைதுக் கொண்டு இருந்தது.

 

மனம் எதிலும் லயிக்கவில்லை.

தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவள் மௌனமாக வந்து கட்டிலில் படுத்து விழிகளை மூடியவளுக்கு “உனக்கு நான் பண்ணாமல் வேற யார் பண்றது?” என்று விபீஷன் காலையில் அவளிடம் கேட்ட கேள்வி கண் முன் விரிய திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.

 

“ஐயோ போயும் போயும் அந்த சிடு மூஞ்சியா ஞாபகம் வரணும்? என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவள் இது சரி பட்டு வராது இப்படியே இருந்தால் கண்டதும் நினைவு வந்து தொலைக்கும்” என தனது எண்ணப் போக்கிற்கு கடிவாளமிட்டவள் வழமைப் போல பிரதாபனின் ரைஸ் மில்லிற்கு கிளம்பி இருந்தாள்.

 

யாரின் எண்ணம் வரக் கூடாது என கடிவாளம் இட்டாளோ அங்கும் அவனே அவளின் இரத்த அழுத்தத்தை எகிற வைக்க  காத்துக் கொண்டு இருக்கின்றான் என பாவம் அப் பேதை அறியவில்லை.

 

அறையை விட்டு வெளியே வந்தவள் சோபாபில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பவ்யாவின் அருகில் வந்தவள் அவளை எழுப்ப முயன்ற கணம் “அவளை எழுப்பாத டி இப்போ தன் தலைவலின்னு தூங்குறா என்ற வித்யா இதை போய் உன்னோட மாமாவுக்கு கொடுத்துட்டு வா” என்றவர் உணவு அடங்கிய பையை அவளின் கையில் திணிக்க…

 

“என்னமா இது வழமையை விட செம்ம பாரமா இருக்கு மாமா அவ்வளவு சாப்பிட மாட்டாரே” என்று அவள் கேட்க…

“ஹான்… சொல்ல மறந்துட்டேன் வி…” என்று சொல்ல வந்தவரை அப்போது எனப் பார்த்து வீட்டின் உள் நுழைந்த சித்ரா அவரை அழைக்க, அதில் அவளிடம் சொல்ல வந்த விடயத்தை மறந்து சித்ராவிடம் பேச ஆரம்பித்து விட… அவளோ “என்ன வி ஆஹ்? என்று யோசித்தவள் சட்டென அவனின் பெயர் நினைவுக்கு வர அதிர்ந்தவள் தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவள் என்ன சொல்ல வந்தாங்கனு தெரியலையே… என்று புலம்பியவள் எதுவா இருந்தால் என்ன? இங்க இருந்து அவன் கண்ணுல மாட்டுறதுக்கு அங்க போய் மாமாவுக்கு ஹெல்ப் பண்ணி கொடுப்போம்” என்று மனதில் சொல்லிக் கொண்டவள் “அம்மா அப்போ நான் கிளம்புறேன் பை அத்தை என்று சித்ராவின் கன்னம் கிள்ளி விட்டு பவ்யா எழுந்ததும் சொல்லிடுங்க” என்று விட்டு ரைஸ் மில்லிற்கு கிளம்பி இருந்தாள்.

 

அங்கோ, அவன் இவ்வளவு நாளும் பிரதாபன் கண்ணிற்கு தெரியாமல் நடந்த சிறிய அளவிலான பிழைகளைக் கூட கண்டு பிடித்து வேலையாட்களை சரமாரியாக திட்டி விட்டு கடு கடுவென இருக்க, அங்கு வேலைப் பார்ப்பவர்களோ அவனின் கடுமையில் திடுக்கிட்டவர்கள் ஒரு நொடி கூட வீண் செய்யாமல் தீவிரமாக வேலைப் பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.

 

இத்தனைக்கும் பிரதாபன் இவ்வளவு நாளும் அங்கு வேலைப் பார்ப்பவர்களை கடிந்து பேசியது கூட இல்லை என்பதே உண்மை.

 

சுழல் இருக்கையில் அமர்ந்து மடிக் கணனியில் கணக்கை சரி பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனின் தோற்றத்திற்கும் அவனின் கடுமைக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இருக்கவில்லை. அவனோ, ஆளை அசரடிக்கும் தோற்றத்தில் தான் இருந்தான். கிட்டத்தட்ட தூரத்தில் இருந்து பார்த்தால் ஜெய் ஆனந்த்தின் சாயலும் அவனிடம் இருக்க அங்கு வேலை செய்துக் கொண்டு இருந்த ஒரு பெண்ணோ “ஆனந்த் அண்ணாவுக்கும் இவருக்கும் ஏணி வச்சாலும் எட்டாது போலவே அக்கா வந்துல இருந்து கால்ல சுடு தண்ணிய ஊத்துன போல இருக்கார் எனக்கு இங்க வேலை பார்க்கவே பிடிக்கல” என்று தரையைக் கூட்டிக் கொண்டு தனக்கு எதிரே நின்று இருந்த பெண்ணிடம் கதைத்துக் கொண்டே நிமிர்ந்தவள் அதிர்ந்தே விட்டாள்.

 

“கம் அகைன்?” என்றான் அவளை உறுத்து விழித்த படி…

 

“சார்” என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கிய படி…

“ஜஸ்ட் கெட் அவுட் உனக்கு இனி இங்க வேலை இல்லை” என்றான் சற்றும் இரக்கம் இல்லாமல்…

சட்டென அவளின் விழிகளை கலங்கிப் போக அவளின் பக்கத்தில் இருந்த பெண்ணோ “ஐயா, அவ ரொம்ப கஷ்டப்பட்ட பொண்ணு ” என்றிட…

 

சட்டென தனது பார்வையை அப் பெண்ணிடம் திருப்ப, அவ் உக்கிர விழிகளை கண்டு பயந்தவள் அங்கிருந்து நகர்ந்து விட… வியர்க்க விறுவிறுக்க நின்று இருந்தவள் முகத்தின் முன் சொடக்கிட்டு அழைத்தவன் “கிளம்பு” என்றான்.

 

“இல்லை சார்” என்று ஏதோ பேச வந்தவளிடம் “ உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கல சோ நீ இங்க இருக்குறதுல எந்த யூஸ் உம் இல்லை” என்றான் நிதானமாக…

 

அவளால் என்ன சொல்லி விட முடியும்? அவளின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அல்லவா!

 

“அ… அது சும்மா பேசிட்டு இருந்தேன்” என்றாள் திணறிய படி….

 “டோண்ட் வேஸ்ட் மை டைம் இப்பவே கிளம்பிடு இல்லனா நானே உன் கழுத்தை பிடிச்சு வெளில தள்ள வேண்டியதா இருக்கும்” என்றான் கோபமாக…

 

அவனுக்கு அவள் இங்கு வேலை செய்ய பிடிக்க வில்லை என்று சொன்னதை  விட அவனை ஜெய் ஆனந்தோடு ஒப்பிட்டு பேசியது தான் அவனால் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை அதானலோ என்னவோ சும்மாவே வெறியில் சுற்றிக் கொண்டு இருப்பவனுக்கு மீண்டும் அவளின் வார்த்தைகள் தூபம் போட வெகுண்டு விட்டான்.

 

அவனின் வார்த்தைகளில் கண்கள் கலங்க “போறேன் சார்” என்றவள் திரும்பி நடக்க மீண்டும் அவளை சொடகிட்டு அழைத்தவன் பின்னால் திரும்பி அவனை பார்த்தவளிடம் “ஜெய் பத்தி பேசிட்டு இருந்த சோ உனக்கும் அவனுக்கும் என்ன கனெக்ஷன்?” என்றானே பார்க்கலாம்.

 

இவ்வளவு நேரம் தான் பேசியது பிழை எனப் பொறுத்து போனவள் இப்போது அவனின் இந்தப் பேச்சில் மேனி கூசிப் போக,  எப்படியும் வேலை போய்விட்டது எனத் தெரிந்து போக அவனின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தவள் ஒரு முடிவோடு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அங்கு யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டவள் அவனை நெருங்கி வந்தவள் “சார் ஒட்டு கேட்டீங்க போல” என்றாள் நக்கலாக…

 

“ஏய்…” என சுட்டு விரல் நீட்டி கர்ஜித்தவனிடம் “முழுசா கேட்டு இருப்பீங்க தானே ஏன் மூளை மழுங்கி போச்சா என்ன? அவர் அதான் உங்க அண்ணாவை நானும் அண்ணான்னு சொன்னேன்ல  என்றவள் இப்பவும் சொல்றேன் அவரோட கால் தூசிக்கு கூட உங்களுக்கு தகுதி இல்லை” என்றவள் அவனின் அனல் கக்கும் விழிகளை பார்த்து ஏளனமாக சிரித்தவள் திரும்பி சென்று இருந்தாள்.

 

போகும் அவளை கொல்ல வேண்டும் போல வெறியே எழுந்தது. “என்கிட்ட பேசுற அளவுக்கு என்ன தைரியம் அவளுக்கு?” என்று நினைத்தவன் அறியவில்லை ஜெய் ஆனந்த் கொடுத்த தைரியமும் தன்னம்பிக்கையும் தான் என…

 

ஏதோ தைரியத்தில் பேசி விட்டு வந்து விட்டாள் ஆனால் வேலை போய் விட்டதே! இனி எங்கே வேலை தேடுவது என யோசனையில் எங்கோ வெறித்துக் கொண்டு நடந்து வந்தவள் ஆஹித்யாவின் மேலேயே முட்டி விழப் போக அவளை விழ விடாமல் பிடித்து கொண்டவளோ “கவனமாக போங்க மா என்றவள் அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்து ஏதோ சரி இல்லை என உணர்ந்துக் கொண்டவள் என்னாச்சு மா?” என்றாள்.

 

அவளை நன்றாக திட்ட வேண்டும் என்று வெளியில் வந்தவன் ஆஹித்யாவோடு அவள் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு போனவன் வேகமாக அவர்களை நோக்கி விரைந்து வந்தவன் “என்னமா தலைவலினு லீவ் கேட்டுட்டு வந்துட்டீங்க வெயிட் உங்களுக்கு வெய்கல் அரேஞ்ச் பண்றேன் நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு நெக்ஸ்ட் வீக் வாங்க” என்றவன் புன்னகைக்க அவனின் பேச்சில் மயக்கம் வராதது ஒன்று தான் குறை. அவளுக்கோ, பதில் ஏதும் பேச நா எழவில்லை  அவனையே அதிர்ந்து பார்த்தவளை “சிஸ்டர்” என்றான் சொடக்கிட்டு…

 

“ஹா… சார்” என்க… அவளின் அருகில் அவன் இங்கே இருப்பான் என்று எதிர்ப் பார்க்காமல் வந்தவள் உறைந்த சிலை போல நிற்க “வாட் அ சர்ப்ரைஸ் உள்ள வா ஆஹித்யா” என்றான்.

 

அவனின் இந்த கண நேர மாற்றத்திற்கு இவள் தான் காரணம் என ஊகித்த பெண்ணவளோ “லீவ் கேன்சல் பண்ணிடுங்க சார் இப்போ எனக்கு தலைவலி கம்மி ஆனபோல இருக்கு” என்றவள் அவனின் அதிர்ந்த தோற்றத்தை திருப்தியாகப் பார்த்து புன்னகைத்தவள் அதே மாறாப் புன்னகையுடன் ஆஹித்யாவை பார்த்தும் புன்னகைத்து விட்டு மீண்டும் உள்ளே சென்று இருந்தாள் அப் பெண்.

 

“நீங்க இங்க பண்றீங்க?” என்று ஆஹித்யா கேட்க…

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை பார்த்தவன் “லைஃப் லாங் உன்னை வச்சுக்க நான் சும்மா வீட்டுல இருந்தால் எப்படிங்க மேடம்” என்று அவன் சொல்ல… அவனின் பேச்சில் திகைத்து போனவள் தான் கொண்டு வந்த உணவுப் பையை கீழே நழுவ விட சட்டென சுதாரித்து கீழே விழாமல் பிடித்தவன் “என்ன என்னை பட்னி போடுறதா ஐடியா போல” என்றவன் பையை அவளின் முகத்தின் முன் ஆட்ட…

 

“ஐயோ! அப்படி இல்…இல்லை” என்று திணறியவளின் விழிகளை பார்த்தவன் அவளின் விழிகளில் என்ன கண்டானோ அவனின் இதழ்களோ தானாகவே  “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கி திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்ற கவிதையை கூறி இருக்க… அவ் இடத்தில் எந்த பெண் நின்று இருந்தாலும் அவனின் தோற்றத்திலும் அவனின் காதல் சொட்டும் பேச்சிக்களிலும் மயங்கித் தான் போவார்கள்.

 

ஆஹித்யா ஒன்றும் அதற்கு விதிவிலக்கு இல்லையே!

 

ஆம், அவனின் அந்த ஒற்றைக் கவியில் தன்னை மறந்து அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

அவளின் பார்வையில் தலையைக் கோதிக் கொண்டே “பிடிச்சு இருக்கா?” என்று கேட்டான்.

“உங்களுக்கு இவ்வளவு அழகா கவிதைக் கூட சொல்லத்  தெரியுமா? என்று கேட்டு அவனை மேலும் தடுமாற வைத்து இருந்தாள் பெண்ணவள்.

ஆம், தடுமாற்றம் தான். பின்னே அது அவனின் சொந்தக் கவிதையா என்ன அவனின் உடன் பிறந்த அண்ணன் அவனவளுக்காக எழுதிய கவிதையல்லாவா அது.

 

“விபீ” என்றாள் பெண்ணவள்.

 

தனக்குள் தோன்றிய எரிச்சலை கட்டுப் படுத்திக் கொண்டவன் “வாட்?” என்றான்.

 

“ரொம்பவே பிடிச்சு இருக்கு” என்றாள் “என்ன பிடிச்சு இருக்கு?” என்று அவன் திருப்பிக் கேட்க…

  “உங்க கவிதை” என்றவள் சொல்லி விட்டு வெட்கத்தில் முகம் சிவக்க ஓடி இருந்தாள்.

அது வரை தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு நின்று இருந்தவன் “சோ உனக்கு என்னை பிடிக்கல பட் அவனோட கவிதை பிடிச்சு இருக்கு” என்று போகும் அவளின் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டே வன்மமாக சொல்லிக் கொண்டவன் முகமோ சினத்தில்  சிவந்து விட்டு இருந்தது.

அத்தியாயம் – 6

 

ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை

புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள்.

 

நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து விழித்தாள்.

 

“என்ன கவிதை எல்லாம் பலமா இருக்கு?” என்று பவ்யா அவளை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே கேட்க…

 

“ஹான்… அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா என்றவள் கதையை மாற்றும் பொருட்டு வா மாமா வீட்டுக்குப் போயிட்டு வரலாம்” என்று சொல்ல…

 

“ப்ச்… நான் வரல செம்ம தலைவலி நீ போய்ட்டு வா” என்றவள்

ஆஹித்யாவின் அறையிலேயே படுத்துக் கொண்டாள்.

 

அவளின் கசங்கிய முகத்தைப் பார்த்தவள் “இன்னுமா வலிக்குது?” என்று கேட்டுக் கொண்டே ஷெல்பில் இருந்த தலைவலி மாத்திரையை எடுக்க…

 

 “அக்கா நான் மாத்திரை எல்லாம் எடுத்திட்டேன்” என்றாள் சட்டென…

 

“அப்போ ஏன் இன்னும் சரி ஆகலை? நான் வர்றபோவே டல்லா தூங்கிட்டு இருந்த என்றவள் அவளைக் கூர்ந்து

பார்த்துக் கொண்டே நான் உன் அக்கா பவ்யா நீ மாத்திரை போட்டு இருக்க மாட்டனு நல்லாவே தெரியும் என்றவள் இதைப் போட்டுட்டு தூங்கு” என்று மாத்திரையை நீட்ட…

 

“நான் தான் சொல்றேன்ல போட்டுட்டேன்னு சும்மா நொய் நொய்னு கத்தாம போவியா” என்றவள் கட்டிலில் மறுபுறம் புரண்டு படுத்து விட…

 

“ஓஹோ சரிங்க மேடம்” என்றவள் தனது அலைபேசியை எடுத்து அழைத்தது என்னவோ ஜெய் ஆனந்த்திற்கு தான்.

 

அவனோ, ஒரே ரிங்கில் அழைப்பை ஏற்றவன் காற்றுக்கு கூட வலித்து விடுமோ என்ற ரீதியில் மென்மையாக “ஹலோ தியா” என்றான்.

 

வழமை போல அவனை மயக்கும் அவளின் குரல் அவனைத் தீண்ட விழிகளை மூடித் திறந்து “தியா” என்றான்

மீண்டும்…

 

“மாமா … நான் சொல்லி முடிச்சிட்டேன்” என்றாள்.

 

அவனோ, தலையைக் கோதிக் கொண்டே தன் மோன நிலையை எண்ணி நொந்துக் கொண்டவன் “சாரி… சரியா கேக்கல மா என்ன சொன்ன?” என்று கேட்க…

 

“உங்களோட பாசமலருக்கு தலைவலியாம்… மாத்திரை போடாமல் அடம் பிடிக்கிறா என்னனு கேளுங்க மாமா” என்ற படி சட்டென கட்டிலில் எழுந்தமர்ந்து தான் பேசுவதை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த பவ்யாவிடம் அலைபேசியை நீட்ட…

 

அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்கியவள் “மாமா பிளீஸ்” என்றாள்.

 

“நோ வே பவி உன்னோட அக்கா கொடுக்குற மெடிசின்ஸ் அஹ் வாங்கி போடு” என்றான்.

 

மாமா என்றதையும் தாண்டித் தன்னிடம் உடன் பிறந்த சகோதரன் போல நடந்து கொள்ளும் அவனை

சிறு வயதில் இருந்தே ரொம்பவே பிடிக்கும் அவளுக்கு… 

 

ஏனோஅவனின் கனிவான பேச்சினை மறுக்கத் தோன்றாமல் “ஓகே உங்களுக்காக” என்றவள் ஆஹித்யாவின் கைகளில் இருந்த மாத்திரையை வாங்கி விழுங்கியவள் இல்லை

இல்லை விழுங்குவது போல நடித்தவள் குடிச்சிட்டேன் மாமா” என்றிட…

 

ஆம், தலைவலி இருந்தால் தானே மாத்திரையை விழுங்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் அவளுக்குத் தலைவலியெல்லாம் ஒன்றும் இல்லை காலையில் விபீஷனுடன் பேசியதன் விளைவால் எழுந்த

உணர்வுப் போராட்டத்தில் அவளால் எதிலும் ஒன்ற முடியாத அளவுக்கு நிலை கொள்ள முடியாமல் போனது தான் நிஜம்.

 

“ஹும்… தட்ஸ் குட்” என்றதும் “வெயிட் மாமா அக்கா கூட பேசுங்க” என்றவள் அருகில் அமர்ந்து இருந்தவளிடம் அலைபேசியை நீட்ட, அதனை வாங்கி காதில் வைத்தவள் “தேங்க்ஸ் மாமா அவளோட செண்டிமண்டல் பாயிண்ட் நீங்க தானே அதான். வொர்க் டைம் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று அவள் கேட்க…

 

மறு முனையில் இருந்த ஜெய் ஆனந்த்தோ “ஒன் த வே டு ஹோம்” என்றான் மென் புன்னகையுடன்…

 

“வாவ்… நானும் வீட்டுக்கு வர்லாம்னு இருந்தேன்” என்றவள்

பேசிக் கொண்டே பிரதாபனின் வீட்டினுள் நுழைய, அங்கோ

ஹாலிலேயே அமர்ந்து இருந்தான் விபீஷன்.

 

அவனைக் கண்டதும் தடுமாறி விட்டாள் அவள்.

 

ஆனால், அவனுக்கோ கொஞ்சமும் தடுமாற்றம் இருக்கவில்லை.

 

அவளையே தான் பார்த்துக் கொண்டு இருக்க, அவனைப் பார்த்து விட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டே “மாமா நான்

வந்துட்டேன்” என்று மெல்லிய குரலில் சொன்னவள் அழைப்பைத் துண்டித்து விட்டு வந்தமர்ந்த  அதே

சமயம் அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வேகமாக உள்ளே நுழைந்த ஜெய் ஆனந்த் கண்டது என்னவோ விபீஷனின் பார்வை அவளையே துளைத்துக் கொண்டு இருப்பதைத் தான்.

 

ஒரு ஆணின் பார்வை அவனுக்கா தெரியாது?

 

காலையிலேயே நவீன் பேசிய பேச்சுகள்  வேறு

நினைவுக்கு வர, தனது சிந்தனை செல்லும் திசையைக் கண்டு அதிர்ந்தவன் சட்டெனத் தன்னை நிதானித்துக் கொண்டவனுக்கு இதயத்தில் ஊசியால் குத்தும் உணர்வு தான்.

 

“நோப் அவன் அப்படி நடந்துக்க மாட்டான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் தன் வலித்த மார்பை நீவி விட்ட படி “வெல்கம் தியா” என்றான்.

 

அவ்வாளுமையான குரலில் சலிப்பாக வாசலைப் பார்த்தவன் சட்டென எழுந்துக் கொள்ள, நேரே வந்தவன் எழுந்து நின்றிருந்தவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தான்.

 

ஆம், அவனை இறுக அணைத்து விடுவித்தவன் “அம் ரியலி ஹேப்பி டூ ஹியர் டா. அப்புறம் டுடே வொர்க் ஈசியா?” என்று கேட்டு இருந்தான்.

 

ஆஹித்யா அங்கு இருப்பதனால் என்னவோ எடுத்தெறிந்து பேசாமல் வரவழைத்த புன்னகையுடன் “நாட் பேட்

என்றவன் ஹவ் அபவுட் யூ?” எனப் பதிலுக்குக் கேட்க…

 

“உன்ன போல எனக்கும் நாட் பேட் தான். பிரோம் நெக்ஸ்ட் வீக் நைட் ஷிப்ட் இருக்கும் என்றவன் திரும்பி இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்த தியாவிடம் திரும்பி வா வெளில போய்ட்டு வர்லாம்” என்றான்.

 

அதற்கு அவள் பதில் சொல்லும் முன்னரே முந்திக் கொண்ட விபீஷனோ “நானும் வரேன்” என்றான் எவ்வித உறுத்தலுமின்றி…

 

“ஹலோ ஹலோ ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? நான் வரேன்னு சொல்லவே இல்லையே” என்று சொல்ல…

 

“சோ வர மாட்ட?” என்று அவன் கேட்க…

 

“வர்லனா எதுக்கு கம்பல் பண்ற?” என்றான் விபீஷன்.

 

அதற்கு ஜெய் ஆனந்த் பதில் கூறும் முன்னரே “உங்க ரெண்டு பேர்க்கும் வேலை வச்சு இருக்கேன் என்று ஒரு மார்க்கமாக சொன்னவள் ஃபாலோ மீ” என்று விட்டு இருவரையும் தாண்டி முன்னே செல்ல…

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே ஜெய் ஆனந்த் ஷர்ட்டினை

முட்டி வரை மடித்த படி அவளைப் பின் தொடர, “இவன்

எதுக்கு?” எனப் பற்களைக் கடித்த படி தனக்குள் சொல்லிக் கொண்ட விபீஷனும் ஆராய்ச்சியாக அவளைப் பின் தொடர்ந்து சென்று இருந்தான்.

 

தன் அருகில் வந்து நின்ற ஜெய் ஆனந்திடம் “மாமா எனக்கு

அது வேணும்” என்றாள்.

 

“எதுடி?” என்று சுற்றிலும் பார்த்தவனின் கன்னத்தைத் திருப்பி அவள் காட்டிய இடத்தைக் கண்டவனுக்கு

விழிகள் கீழே தெறித்து விடுவது போல விரிந்துக் கொண்டன.

 

“ஆர் யூ சீரியஸ்?” என்றவன் அதே அதிர்ச்சி மாறாமல் அவளை பார்த்துக் கேட்க…

 

“மாமா உங்களால முடியாதா அப்போ?” என்றவள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டே அவன் அருகில் நின்று இருந்த விபீஷனிடம் “விபீ அப்போ நீங்களாச்சும்…” என்று கண்களைச் சுருக்கி அவள் கெஞ்சிய தோரணையில் அவனுக்கு அதை அக் கணமே அவளுக்கு செய்து கொடுத்து விட வேண்டும் என்ற வேட்கை வேகமாக எழுந்தது.

 

“ஷோர்” என்றவன் வேஷ்டியை மடித்துக் காட்டிக் கொண்டு முன்னேற, “விபீஷன் ஐ வில் மேனேஜ்” என்றான் ஜெய் ஆனந்த் அழுத்தமாக….

 

“இல்லை நானே” என்றவனை “இப்படியே நீ போனால் நாங்க மட்டும் இல்லை நீயும் மேல போய் சேர்ந்துடுவ டா. வா போய் காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணிட்டு வர்லாம்” என்றவன் அவனைத் தோடு அணைத்துக் கொள்ள,

ஆஹித்யாவின் பார்வையோ விபீஷனின் மீது அழுத்தமாகப் படிந்தது.

 

ஒரு சில நிமிடங்களிலேயே உடையை மாற்றி விட்டு வந்த இருவரையும் பார்த்துத் திகைத்து

விழித்தாள் அவள்.

 

“மாமா… என்ன இது ட்ரெஸ்?” என்று சத்தமாக சிரித்துக் கொண்டு கேட்க…

 

“ஹேய்… என்ன நினைச்சிட்டு இருக்க தியா? என்றவன் அவளின் முகம் போகும் போக்கில் சத்தமாகச் சிரித்த ஜெய் ஆனந்த்தோ இது ஒன்னும் மாம்பழம் இல்லை ஈஸியா பிடுங்கிட்டு வர்றதுக்கு இட்ஸ் பீஹைவ் தியா. இட்ஸ் வெரி டேன்ஞ்ஜரஸ் என்றவன் நீ உள்ள போ” என்றவன்

திரும்பிப் பார்ப்பதற்குள் லாவகமாக மரத்தில் ஏறி இருந்தான் விபீஷன்.

 

“விபீஷன்ன்ன்… கெயார்ஃபுல்டா” என்று ஜெய் ஆனந்த் உரக்க கத்தும் போதே அவனோடு சேர்ந்து ஆஹித்யாவும் “விபீபீபீ…” என்று சத்தமாகக் கத்த, சட்டெனப் பக்கவாட்டாகத் திரும்பி அவளை ஒரு பார்வைப் பார்த்தவனோ சற்றும் தாமதிக்காமல் அவனும் கண நேரத்தில் விபீஷன் ஏறிய மரத்திற்கு எதிராக உள்ள அடுத்த மரத்தில் ஏறியிருந்தான்.

அத்தியாயம் – 7

வேகமாக மேல் ஏறியவன் “தியா உள்ள போ” என்ற அழுத்தமான குரலில் “மாமா பிளீஸ் நான் வேணும்னா அதோ அந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்க்கட்டுமா?” என்று கேட்க…

 

அவளை நன்றாக முறைத்த ஜெய் ஆனந்த் “என்ன விளையாடுறியா தியா? என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவ்வளவு நேரமும் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனோ “அப்போ நீ நில்லு பட் கடைசி வரையும் நீ கேட்டதை கொடுக்க முடியாது” என்றவன் புருவத்தை ஏற்றி இறக்க…

 

அவன் அப்படி சொன்னதும் அங்கு நின்று பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை கை விட்டவள் “ஹும்… உள்ள போறேன்” என்றவள் பழிப்பு காட்டி விட்டு செல்ல…

 

போகும் அவளை பார்த்துக் கொண்டே தன்னை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தைப் பார்த்து கர்வமாகப் புன்னகைத்தவன் கை வைத்தது என்னவோ தேன் கூட்டில் தான்.

 

அதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் இருவரும் தேன் அடையுடன் வீட்டினுள் நுழைய ஹாலில் இருந்து வாயிற் கதவையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் மின்ன இருவரையும் நெருங்க, “ஹே கிட்ட வராத வெயிட் வெயிட் “ என்ற ஜெய் ஆனந்த்தின் குரல் எல்லாம் அவள் காதில் விழவே இல்லை.

 

அவன் கைகளில் இருந்த தேன் அடையை நாவினால் சப்பு கொட்டிய படி வாங்க முயன்றவளிடம் “க்ளீன் பண்ணிட்டு தரேன் டி” என்று சொல்ல…

 

“ஐயோ மாமா அது வரையும் எனக்கு பொறுமை இல்லை என்று வாங்க முயன்றவளிடன் அவன் பின்னோடு வந்த விபீஷனோ “நான் க்ளீன் பண்ணிட்டேன் வேணுமா?” என்று அவன் கேட்க….

 

“நீங்க சரியான ரூல்ஸ் ராமானுஜம் போல நடந்துக்கிறீங்க மாமா” என்று ஜெய் ஆனந்த்தை திட்டி விட்டு அவனைத் தாண்டி பின்னால் நின்ற விபீஷனை நெருங்கி இருந்தாள் பெண்ணவள்.

 

அவள் தன்னிடம் கதைக்கும் போது தான் அதிகப்படியாக நடந்துக் கொள்கின்றோமோ என்ற எண்ணம் தோன்ற சட்டென பின்னால் திரும்பி பார்த்தவன் இதயம் வேகமாக துடித்தது.

 

வேறு என்னவாக இருக்கும் அவள் விரலால் தேனை எடுத்துச் சப்பு கொட்டி சுவைத்த படி விழிகள் மூடி நிற்க, அவளின் இதழ்களில் தேங்கி நின்ற தேனை கண நேரத்தில் தன் விரல்களால் ஒற்றி எடுத்த விபீஷன் தன் இதழ்களில் வைத்து சுவைத்து இருந்தான்.

 

சட்டென அதிர்ந்து விழிகளை திறந்தவள் சும்மாவே அவனின் அதிரடியில் ஒருவித ஊசலான மனநிலையில்  இருக்க, இப்போதைய அவனின் செயல் அவளின் முகத்தை சிவக்க வைத்து இருந்தது.

 

அவளைப் பொறுத்த வரையில் முதல் ஆணின் ஸ்பரிசம் அல்லவா?

 

இக் காட்சியை வெறித்த படி இமை சிமிட்டாமல் மூச்சு விடக் கூட மறந்து பிரம்மை பிடித்தவன் போல நின்று இருந்தான் ஜெய் ஆனந்த்.

 

அவளோ அங்கு நிற்க முடியாமல் மாடியேறி மேலே ஓடி விட, ஹாலில்  எஞ்சி நின்றது என்னவோ ஜெய்யும் விபீஷனும் தான்.

 

விபீஷனோ, குரலை செருமிக் கொண்டே சன்னமாக விசில் அடித்த படி ஜெய் ஆனந்த்தை  கடந்து செல்ல முற்பட… “விபீஷன்” என்ற ஜெய் ஆனந்தின் அழைப்பில் சட்டென அவன் நடையோ நிற்க…

 

உடன் பிறந்தவன் மீதான அதீத நம்பிக்கை ஒரு புறம் இருக்க, தான் உயிருக்கு மேலாக விரும்பும் பெண்ணிடம் அவன் நடந்துக் கொண்ட விதம் என்பன கண்ணால் கண்ட  பின்னும் எப்படி அவனிடம் கேட்பது? என்று எல்லாம் எண்ணம் வளம் வர, தலையை உலுக்கி சமன் செய்தவன் அவன் புறம் திரும்பாமலேயே “நத்திங்” என்றவன் வந்த வழியே வெளியேறி இருந்தான்.

 

அவன் எதைக் கேட்க வேண்டும் என்று நினைத்தானோ அதை இப்போதே கேட்டு இருந்தால் அவனின் பதிலை வைத்து ஏதேனும் கணித்து இருப்பானோ என்னவோ விதியின் செயலை எங்கனம் மாற்ற முடியும்?

 

அன்று இரவும் அமைதியாக உணவை உண்டுக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்தின் முகத்தை பார்த்த பிரதாபன் “என்னப்பா ஹாஸ்பிடல்ல எந்த பிரச்சனையும் இல்லை தானே?” என்று கேட்க…

சோர்வாக முகத்தை வைத்து இருந்தவன் அவரின் கேள்வியில் சட்டென தன்னை நிதானித்துக் கொண்டவன் “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா… நெக்ஸ்ட் வீக் நைட் டியூட்டி சோ அதான் திங்க் பண்ணிட்டு இருந்தேன்” என்றான்.

 

அவனுக்கு நேர் எதிரே சாப்பிட்டுக் கொண்டு இருந்த விபீஷனின் இதழ்களில் யாரும் அறியா ஒரு வன்மப் புன்னகை தோன்றி மறைந்து இருந்தது.

 

“சரிப்பா   உடம்பை பார்த்துக்கோ…” என்றவர் குரலை செருமிய படி சித்ராவை பார்க்க, அவரோ கண்களால் சைகை செய்த படி சாப்பிட்டு எழ போன ஜெய் ஆனந்த்தை “டேய் கொஞ்சம் இரு பேசணும்” என்றார்.

 

அவரை புருவம் உயர்த்தி பார்த்தவன் “ம்ம்… சொல்லுங்க” என்றவாறு மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.

 

“அது வந்துப்பா… உனக்கும் முப்பது வயசாகுது” என்று இழுவையாக சித்ரா சொல்ல…

“சோ வாட்?” என்றான்.

 

“மதியம் உன்னோட ஜாதகம் எடுத்திட்டு நம்ம குடும்ப ஜோசியரை  பார்க்க போயிருந்தேன்” என்றார் மேலும் பேச்சை இழுத்த படி…

 

தன் அன்னை என்ன பேச வருகிறார் என ஊகித்த விபீஷனுக்கோ உடல் இறுகிப் போக அப்படியே அங்கு நடக்க போவதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

 

“அம்மா பிளீஸ்… எதுவா இருந்தாலும் நேரா சொல்லுங்க நான் என்ன சொல்லிற போறேன்?” என்றான் இதழ்களில் தேங்கிய புன்னகையுடன்… “உனக்கு எண்ணி மூணு மாசத்துகுள்ள கல்யாணம் ஆகணுமாம் டா. அதான் உனக்கு பிடிச்ச பொண்ணு யாரும் இருந்தால் அதையே பேசி முடிச்சிடலாம் ஆனந்த்” என்றார் பிரதாபனை கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே…

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே விழிகளை மூடித் திறந்தவன் “பொண்ணு இருக்கா பட் நாளைக்கு அவகிட்ட பேசிட்டு சொல்றேன். எனக்கு அவளோட பிடித்தம் ரொம்ப முக்கியம்” என்று பேச்சை முடித்து இருந்தான்.

 

அவனின் பதிலில் முகம் சடுதியில் மலர அதற்கு எதிர் மாறாக அவனின் உடன் பிறந்தவனுக்கோ உள்ளே தகித்துக் கொண்டு இருந்தது.

 

“அப்படியே விபீஷனுக்கும் பொண்ணு பார்த்து பேசி முடிச்சிடலாம். அப்போ ரெண்டு பேருக்கும் ஒரே மேடைல கல்யாணத்தை வச்சுடலாம்” என்றார் பிரதாபன் “ஆமாங்க” என ஆமோதித்த சித்ராவின் பார்வை எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்த விபீஷனில் படிய, அவருக்கோ அவனின் இறுகிய தோற்றத்தில் கிலி பிடித்தது.

 

“விபீஷன்” என்று சித்ரா அழைக்க….

 

பிரதாபன் அருகில் இருப்பதால் சட்டென சிரித்த போல முகத்தை வைத்துக் கொண்டவன் “என்ன மா” என்றான்.

 

இப்போது “உனக்கு இஷ்டம் தானே?” என்ற கேள்வி வந்தது என்னவோ பிரதாபனிடம் இருந்து தான்.

 

“எனக்கு ஓகே பா…” என்றவன் பார்வை ஜெய் ஆனந்த்தின் மீது படிந்து மீண்டது.

 

இங்கு இப்படி இருக்க, கட்டிலில் அமர்ந்து முட்டியில் முகம் புதைத்து இருந்த ஆஹித்யாவிற்கோ என்னவென்றே தெரியாத உணர்வு.

 

எத்தனையோ பேர் காதலை கூறி இருந்தாலும் தன்னை இவ்வளவு காலமாக நிமிர்ந்தும் பார்க்காத ஒருவன் திடீரென தன்னிடம் நெருக்கம் காட்டும் போது அவனிடம் மட்டும் எப்படி பேச்சற்று நின்றேன் என்ற எண்ணம் அவளுள் நொடிக்கு நொடி அதிகரித்தது.

ஒருவேளை அவனை காதலிக்கின்றேனா? என்ற கேள்வி தோன்றிய மறு நொடி அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

 

எப்படி அவன் மேல் காதல் வரும் ? அதுவும் ஓரிரு நாட்கள் பேசிய ஒருவனிடம்? “ஐயோ!” என்று சொல்லிக் கொண்டே தலையைப் பற்றிக் கொண்டவள் மெதுவாக சுவரில் சாய்ந்து ஆழ்ந்து சிந்தித்த படி உறகிப்போனவள் தன் இதழ்களை யாரோ வருவது போல இருக்க உறங்கியவாறே இதழை புறங் கையால் துடைத்தவள் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு போக மீண்டும் அதே வருடல் சற்று அழுத்தமாவதை உணர்ந்தவள் சட்டென எழுந்து அமர்ந்தாள்.

 

விழிகள் இரண்டும் விரிய தலையில் அடித்துக் கொண்டவள் “ஹையோ கனவுலயுமா? விட மாட்டான் போலயே” என்று சொல்லிக் கொண்டவள் வலக் கரமோ உயர்ந்து தனது இதழை வருடிக் கொண்டவள் எண்ணம் தானாக விபீஷனின்  வருடலை ஞாபகப் படுத்த அவளது கன்னங்களோ குப்பென  சிவந்த அதே கணம் தொலை தூர நிலவை வெறித்துக் கொண்டு பால்கனியில் நின்று இருந்தான் ஜெய் ஆனந்த்.

 

விபீஷனின் செயலிற்கு அவளின் எதிர் வினை வெட்கம் அல்லவா? மீண்டும் மீண்டும் அதே காட்சி தன் கண் முன் விரிய அவனது விழிகளில் இருந்து தானாக கண்ணீர் வழிந்தது.

 

இதயம் தாளம் தப்பி துடித்தது. தன்னால் தாழ முடியாத ஒன்று நடக்கப் போகிறதோ என்று மனம் வெதும்ப தன்னை நிலைப்படுத்த முயன்று தோற்றவன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கொண்டவன் இதழ்களோ “தியா இஸ் மைன்” என்று சொல்லிக் கொண்டன.

அதே சமயம் அறைக்குள் வந்த பிரதாபனோ, உடையை மடித்துக் கொண்டு இருந்த சித்ராவை பார்த்தவர் “சித்து“ என்றார்.

தனிமையில் இருக்கும் போது அவர் அழைக்கும் சித்து என்ற அழைப்பு அவரின் முகத்தை சிவக்க வைக்க, “என்னங்க?” என்றார் குழைவாக…

 

கட்டிலில் அமர்ந்துக் கொண்டவர் “என்னோட மனசுல ஒன்னு தோணுது மா” என்றார்.

 

“என்னவா இருந்தாலும் சொல்லுங்க”

 

“எதுக்காக பொண்ணை வெளில தேடணும் நம்ம ஆஹித்யாவையே   விபீஷனுக்கு பேசி முடிச்சிடலாமா?” என்றவர் சித்ராவின் முகத்தை எதிர்ப் பார்ப்புடன் பார்க்க…

 

“அட ஆமல்ல… நான் இந்த கோணத்துல  யோசிக்கவே இல்லைங்க”

 

“ஆமா சித்து, சாப்பிடுறப்ப தான் இத பத்தி நான் யோசிச்சேன்.   இதை பத்தி நாளைக்கு  வித்யாகிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு ஆஹித்யாகிட்டயும் பேசிடலாம்” என்றார் பூறிப்புடன்…

 

“ஏங்க விபிஷன் ஒத்துப்பானா?”

“அவன் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டானே அப்புறம் என்ன? யாரா இருந்தாலும் அவன் கட்டிப்பான்” என்றவர் நிம்மதியாக படுத்துக் கொள்ள… ஏனோ சித்ராவிற்கு தான் மனதுக்கு ஏதோ தவறாகப் பட, ஒருவித பதைப்பதைபுடனேயே அவர் அருகில் படுத்துக் கொண்டார்.

 

ஒழுங்காகக் கூடி பேசி இருந்தால் ஜெய் ஆனந்தின் மனதில் இருப்பவள் யார் என தெரிந்து இருக்குமோ என்னவோ? இவர்கள் ஒன்று நினைத்திருக்க,  விதியோ நடக்கப் போவதை எண்ணி சிரித்துக் கொண்டது.

அத்தியாயம் – 8

அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும்  இனிதே விடிந்தது.

அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது.

ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை  பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள…

 “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட் நீங்களே வந்துட்டீங்க” என்றதும் “அது சரி என்னவோ நீ லவ் பண்றனு கேள்வி பட்டேனே” என்று வித்யா கேட்க…

 

அவரை மென் புன்னகையுடன் பார்த்தவன் “நானே இன்னும்  அந்த பொண்ணுகிட்ட எதுவும் பேசல சோ பேசிட்டு கூடிய சீக்கிரமா குட் நியூஸ் சொல்றேன்” என்றான்.

 

மகனின் முகத்தில் தெரிந்த பூரிப்பு பிரதாபனின் அகத்தை நிறைக்க, மனதார அவனது காதல் நிறைவேற வேண்டும் என்று தனது குலதெய்வத்திடம் வேண்டுதல் ஒன்றையும் வைத்துக் கொண்டவர் “அப்போ இன்னைக்கி பேசிடுவியா?” என்று கேட்டார் பிரதாபன்.

 

“ஷோர் பா… ஈவ்னிங் பேசிட்டு சொல்றேன்” என்றவன் மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான்.

 

காதலை சொல்லும் வாய்ப்பே அவனுக்கு கிடைக்க போவதில்லை என பாவம் அவன் அறிந்திருக்க வில்லை.

 

“ஜெய்யை என் மருமகனா வரணும்னு ரொம்பவே ஆசை பட்டு இருந்தேன் அண்ணா ஆனால் அவனுக்கு ஒரு பொண்ணை பிடிச்சு இருக்குனு சொல்றப்போ என்னால அவன்கிட்ட என்னோட விருப்பத்தை திணிக்க விருப்பம் இல்ல என்றவர் ஒரு பெரு மூச்சுடன்  விபீஷனுக்கு என்னோட பொண்ணை கட்டிக்க சம்மதம் சொல்வானா?” என்று இத்தோடு ஐந்தாவது தடவையாக கேட்கும் அவரிடம் “அவன் மில்லுக்கு கிளம்பிட்டான் வித்யா. அவன் வந்ததும் நீயே வேணும்னா  அவன்கிட்ட பேசிக்கோ” என்றவர் வெளியே செல்ல…. அதனைத் தொடர்ந்து சித்ராவுடன்  சேர்ந்து அருகில் உள்ள கோயிலுக்கு கிளம்பி இருந்தார்.

 

மில்லிற்கு வந்தவனுக்கோ கொஞ்சமும் இருப்பு கொள்ளவே முடியவில்லை.

 

ஜெய் ஆனந்த் அவனின் காதலை சொல்லி விடுவானோ? என்ற எண்ணம் அவனை நிலைகுலைய வைத்தது.

 

எதிலும் லயிக்க முடியவில்லை.

“ஷிட்…” என்று சொல்லிக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்தவன் அலைபேசியை எடுத்துக் கொண்டே வெளியில் கிளம்ப, அப்போது எனப் பார்த்து உள்ளே வந்த பிரதாபன் “விபீஷன் எங்கடா போற?” என்ற கேள்வி அவனை தடுக்க, சற்று குரலை செருமிக் கொண்டே “தலை வலிக்கிற போல இருக்கு பா வீட்டுக்கு கிளம்புறேன்” என்று சொன்னவன் நேராக சென்றது என்னவோ ஆஹித்யாவின் கல்லூரிக்கு தான்.

 

அங்கே சென்றவன் அவள் வெளியில் வரும் வரை நுழைவாயிலுக்கு அருகில் போடப்பட்டு இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

 

அவனின் தோற்றம் பார்ப்போரை சட்டென கவர்ந்து இழுத்துவிடும். அதற்கு ஏற்றாற் போல அவன் அமர்ந்து இருந்த தோரணைக் கூட அவனைக் கடந்து சென்ற பெண்கள் ஒரு கணம் நின்று பார்த்து விட்டே சென்று இருந்தனர்.

 

ஆனால், அங்கு அமர்ந்து இருந்தவனுக்கோ பலவித யோசனைகள் வலம் வந்த வண்ணம் இருக்க, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தான் அவனது சிந்தையோ வேகமாக கணக்கிட்டு கொண்டு இருந்தது.

 

யோசித்துக் கொண்டு இருந்தவன் சட்டென தன் அருகில் யாரோ வந்தமருவது போல இருக்க பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவன் திகைத்து விழித்தான்.

 

“என்ன மாம்ஸ் செம்ம ஷாக் ஆகிட்டீங்க போல” என்று ஒற்றைக் கண் அடித்து கேட்டது வேறு யாராக இருக்க முடியும் சாட்சாத் பவ்யாவே தான்.

 

ஆஹித்யாவுக்கும் பவ்யாவிற்கும் ஒரு வயது வித்தியாசம் என்பதாலோ என்னவோ அடுத்தடுத்த வருடங்களிலேயே இதுவரைக்கும் ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தும் இருந்தது.

 

சலிப்பாக நெற்றியை நீவிக் கொண்டே தன் பார்வையை  திருப்பிக் கொண்டவன் “இதோ பார் நானே செம்ம டென்ஷன்ல இருக்கேன் சோ வெறி ஏத்தாமல் கிளம்பு” என்றான்.

 

யாரும்  அவனைப் பார்த்தால் சாதாரணமாக பேசிக் கொண்டு இருப்பதைப் போல தான் தோன்றும்  ஆனால் அவனின் பேச்சிலேயே அனல் தெறித்துக் கொண்டு இருந்ததை அருகில் இருந்தவளைத் தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையே…

 

“ஷப்பா… முடியல என அவன் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவள் இதோ பாருங்க மாம்ஸ் தெரிஞ்சோ தெரியாமல் இன்னைக்கு காலேஜ் வந்து என்னோட கண்ணுல பட்டது ஒரு பக்கம் இருக்கட்டும் அதெப்படி உங்களை அப்படியே விழுங்குற போல வெறிக்க வெறிக்க பார்த்திட்டு போறாளுங்க. நீங்களும் பேசாம இருக்கீங்க” என்றாள் இறுகிய குரலில்…

 

கோபத்தில் பற்களைக் கடித்தவன் “ஷட் அப் பவ்யா” என்றவன் சட்டென எழுந்து கொள்ள… அவளோ அவனின் இறுகிய குரலில் திடுக்கிட்டவள் எழுந்து நின்றவன் கையை எட்டிப் பிடித்து இருந்தாள்.

 

அவ்வளவு தான். சும்மாவே அழுத்தத்தில் அமர்ந்து இருந்தவன் இப்போது இவளின் கொடைச்சலில் பொறுமை இழந்தவன் அவளின் கன்னத்தில் இழுத்து அறைந்து இருந்தான்.

 

நல்லவேளை யாரும் இக் காட்சியை பார்க்கவில்லை.

 

விண்விண்ணென்று வலித்த கன்னத்தை பிடித்துக் கொண்டவள் கலங்கிய விழிகளுடன் அவனை உறுத்து விழித்தாள்.

 

“நானும் பார்த்துட்டே இருக்கேன் ஓவரா என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்திட்டு இருக்க. இதுவே லாஸ்ட் ஆஹ் இருக்கட்டும்” என சுட்டு விரல் நீட்டி எச்சரிக்க, அவளோ தொண்டை வரை பேச வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவள் அவன் முன் வெடித்து அழுது விடுவோமோ என அஞ்சி திரும்பியும் பாராமல் சென்று இருந்தாள்.

போகும் அவளை வெறித்தவனுக்கு சட்டென கை நீட்டி அறைந்தது ஏதோ போல் இருக்க “ஷிட்” என்ற படி நிலத்தை காலால் ஓங்கி உதைத்தவன் தன் பின்னால் கேட்ட குரலில் சுயம் அடைந்து திரும்ப, அங்கு நின்று இருந்தது என்னவோ ஆஹித்யா தான்.

 

அவளை அறைந்த விடயத்தை அதற்குள் ஆஹித்யாவிடம் கூறி இருப்பாளோ என்ற எண்ணத்தில் அவன் கேள்வியாக அவளைப் பார்த்து இருக்க, அவளோ சாதாரணமாக “என்… என்னை பார்க்கணும்ன்னு வர சொன்னீங்களாமே” என திக்கித் திணறி அவள் கேட்க….

 

சற்று ஆசுவாசமடைந்தவன் “எஸ் பேபி” என்றானே  பார்க்கலாம்.

 

அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

 

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டவள் மனதிலோ “எதே பேபியா?….ஒவ்வொரு நாளும் டிசைன் டிசைன் ஆஹ் பேசுறானே”  எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவள் விழித்துக் கொண்டு நிற்க….

 

அவனோ, அவளின் முகத்தின் முன் சொடக்கிட்டவன் “என்னடி அப்படியே நிக்கிற கிளம்பு” என்று சொல்ல…

 

“என்ன கிளம்பனுமா? எங்க?” என்றாள் அதிர்ச்சியாக…

 

“என்கூட வா சொல்றேன்” என்றான்.

“அப்படி எல்லாம் என்னால வர முடியாது” என்றாள் பதற்றமாக…

“வை பேபி?”

 

“இப்போ இன்டர்வல் சோ அதுனால தான் பேசிட்டு நிக்கிறேன் இன்னும் டென் மினிட்ஸ்ல கிளாஸ்ல இருக்கணும்” என்றாள்.

 

“சோ இதுதான் ப்ராப்ளமா?”

“எஸ்… என்று இழுவையாக சொன்னவள் பட் இருந்தாலும் நான் வரல”

 

“பிளீஸ் பேபி உன்கூட நான் பேசணும்” என்று சொல்ல…

“எதுக்காக புதுசா பேபின்னு எல்லாம் கூப்பிடுறீங்க  என்று கேட்டவள் குரலை செருமிய படி வீட்டுக்கு போனதும் பேசிக்கலாம்” என்று சொல்ல…

“ஏன் நான் எதுக்காக சொல்றேன்னு உனக்கு புரியலையா இல்ல புரியாத போல நடிக்கிறியா? என்று கேட்டவன் அவளின் திகைத்த தோற்றத்தைப் பார்த்து விட்டு ப்ச்…ரொம்பவே முக்கியமான விஷயம் பேசணும் பேபி பிளீஸ் காப்ரேட் மீ” என்று சொல்ல…

 

முக்கியமான விடயம் என்றதும் மனது பிசைய, “ம்ம்… வெயிட் பண்ணுங்க பெர்மிஷன் கேட்டுட்டு வரேன்” என்று அவனிடம் சொன்னவள் நேரே  அதிபரின் அறையை நோக்கி விரைந்து இருந்தாள்.

 

நொடியில் தனக்குள் தோன்றிய திட்டத்தை செயல்படுத்த துணிந்து இருந்தான் விபீஷன்.

 

அவனால் ஒன்றை மட்டும் தெள்ளத் தெளிவாக ஊகிக்க முடிந்தது.

 

தன்னால் அவள் தடுமாறுகின்றாள் என்று உணர்ந்து கொண்டவனுக்கு இதழ்கடையோர மெல்லிய கர்வப் புன்னகையும் தோன்றி மறைந்தது.

 

ஒரு பெண்ணை காதலால் உணர வைக்காமல் அவளின் உணர்வுகளில் விளையாடுவது எத்தகைய பாதக செயல் என அவனின் சிந்தை சிந்திக்க மறுத்து இருக்க, எங்கனம் உணர்வான்?

அடுத்த சில நிமிடங்களில் அனுமதி கேட்டு விட்டு வந்தவளின் கையை பற்றியவன் அவளை அழைத்துச் சென்றது என்னவோ அடுத்த தெருவில் உள்ள விநாயகர் கோயிலிற்கு தான்.

 

அவளுக்கோ இப்போதே உதறல் எடுக்க ஆரம்பித்து இருந்தது.

கோயில் சன்னதியில் விழிகளை மூடி கை கூப்பி வணங்கிக் கொண்டு நின்று இருந்தவனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவள் “விபீஷன்” என்று அழைத்து இருந்தாள்.

விழிகளைத் திறந்து பக்கவாட்டாக நிற்கும் அவளை பார்த்தவன் புருவம் உயர்த்தி என்ன என்ற ரீதியில் கேள்வியாக நோக்க, “என்ன விஷயம்? யாருக்காவது…” என்று பேச எத்தனித்தவளின் செவியில் சற்றே குனிந்து “ஐ லவ் யூ பேபி” என்றவன்  தன் காதலை சொன்ன அதே கணம், அதை அவள் முழுதாக கிரகிக்கும் முன்னரே அவளின் சங்கு கழுத்தில் தாலிக்கயிற்றை அணிவித்து மூன்று முடிச்சிட்டிருந்தான்.

 

அதே சமயம் அவசரமாக  அவர்களை நோக்கி சுவாமி சன்னதிக்கு வந்த ஜெய் ஆனந்த்தோ விபீஷன் செய்த செயலில் உறைந்து நின்று விட்டான்.

இதயமோ வெடித்து விடுவது போல படு பயங்கரமாகத் துடித்தது.

 உடன் பிறந்தவனின் செயல் சத்தமில்லாமல் அவனின் இதயத்தை சுக்குநூறாக நொறுக்கி இருந்தது.

உயிருக்கும் மேலாக காதலிக்கும் பெண்ணின் திருமணத்தை கண் முன்னே காண்பது எவ்வளவு பெரிய நரக வேதனை என அக்கணம் உணர்ந்தான்.

 

யார் சொன்னது ஆண்கள் அழக் கூடாதென?

 

ஆம், அழுதான் அந்த ஆறடி ஆண்மகன்.

 

நிலைக் கொள்ள முடியாமல் அருகில் இருந்த நிலை சுவரில் சரிந்து விழிகளை மூடிக் கொண்டவன் கன்னத்தில் கண்ணீரோ நில்லாமல் வழிந்தது.

 

 

சட்டென அருகில் கேட்ட “அண்ணா” என்ற  விபீஷனின் குரலில் வியப்பின் உச்சிக்கே சென்றவன் சட்டென விழிகளைத் திறந்தான்.

அத்தியாயம் – 9

சட்டென அருகில் கேட்ட “அண்ணா” என்ற  விபீஷனின் குரலில் வியப்பின் உச்சிக்கே சென்றவன் சட்டென விழிகளைத் திறந்தான்.

இருபத்தி எட்டு வருடங்களுக்கு பிறகு “அண்ணா” என்ற வார்த்தை அதுவும் அவனிடம் இருந்து, இதழ்கடையோர விரக்தி புன்னகையுடன் அவனை வெறித்தவனுக்கு அவனின் அருகில் மஞ்சள் கயிற்றுடன் வந்து நின்றவளை பார்த்தவன் மொத்தமாக உயிரோடு மரித்து இருந்தான்.

இனி அவளை பார்வையால் கூட வருட முடியாத தன் நிலையை எண்ண எண்ண உச்ச கட்ட அழுத்தம் அவனுள்.

இதயமோ எம்பிக் குதித்து வெளியில் வந்து விடுமோ என்ற வகையில் படு வேகமாக துடிக்க ஆரம்பிக்க, அழுத்தம் தாழாமல் வாய் விட்டு கத்த வேண்டும் போல தோன்றியது.

விழிகளை அழுந்த மூடிக் கொண்டவன் ‘பளார்’ என அறையும் சத்தத்தில் மீண்டும் தன் நினைவுக்கு வந்தவனாய் விழிகளை திறந்தவன் கண்டது விபீஷனை ஆஹித்யா அறையும் காட்சி தான்.

தான் செய்ய வேண்டிய ஒன்றை அவள் செய்கிறாள்.

ஆனால், அவனால் சந்தோஷப்படத் தான் முடியவில்லை.

தனக்கு உரிமை இல்லாதவள் என அவனது புத்திக்கு உரைத்து இருந்ததோ என்னவோ “தியா” என்று கூப்பிட்டு இதமாக அழைத்து பழகியவன் இன்று முதன் முறையாக “ஆஹித்யா” என்றான்.

 

அவளை கூப்பிடும் போதே அவனின் குரலும் உடைந்து விட்டு இருந்தது.

அவளோ, “மாமா என்னோட சம்மதம் இல்லாமல் என்றவள் மேலும் பேச முடியாமல் கதறி அழ ஆரம்பித்து விட, அதைக் கேட்டுக் கொண்டு இருந்த விபீஷனுக்கோ உடல் இறுகிப் போனது.

ஜெய் ஆனந்த்தின் முன்னால் தன்னை அறைந்து விட்டாள் என்ற கோபம் அவனுள் எழுந்த வேகத்தில் அவளை அறைய கை ஓங்க எத்தனித்தவனின் கையை  இறுக பிடித்துக் கொண்ட ஜெய் ஆனந்த் “உனக்கு அவளை பிடிச்சு இருந்தால் வீட்டுல இதைப்பத்தி பேசி இருக்கலாம்” என்று சொல்ல, அவனைப் பார்த்து கர்வமாக புன்னகைத்துக் கொண்டவன் திரும்பித் தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை நோக்கியவன் “ஓஹோ ஹலோ மேடம் இங்க கொஞ்சம் பாருங்க உங்க மனசுல கொஞ்சம் கூட நான் இல்லனு சொல்லுங்க பார்ப்போம்” என்ற அவனின் கேள்வியில் திகைத்து விழித்தாள்.

அவன் கேட்பதும் சரி தானே!

அவளை அவன் வர்ணித்து கவிதை சொன்னதில் இருந்து அவனை நினையாமல் இல்லையே அவள்.

காதலா இல்லை ஈர்ப்பா என்று கூட உறுதியாக அவளுக்கே விடை தெரியாத கேள்வியாக இருக்கும் போது அவனோ, அவளது உணர்வுகளை வைத்தல்லவா விளையாடிக் கொண்டு இருக்கின்றான்.

 

அவளின் மௌனம் ஜெய் ஆனந்த்தின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.

 

அப்படியென்றால் அவனை மனதில் வைத்து இருக்கின்றாள் என்று தானே அர்த்தம்.

 

இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டவன் “ரெண்டு பேரும் கிளம்புங்க” என்றான்.

“அண்ணா வெயிட். எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றவன் மௌனமாக நின்ற இருந்த ஆஹித்யாவை இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டவன் அவளோடு இணைந்து ஜெய் ஆனந்த்தின் கால்களில் விழ, அவனுக்கோ உடல் இறுகிப் போனது.

அவனும் மனிதன் தானே!

உடன் பிறந்தவனே துரோகம் செய்து விட்டான். தன் ஒரு தலை காதல் தெரியாத அவள் என்ன தான் செய்வாள்? அவனின் கைகளோ தானாக உயர்ந்து அவர்களை ஆசிர்வதித்து இருந்தன.

அதனைத் தொடர்ந்து இருவரும் எழுந்த சமயம் அவனோ, “கிளம்பலாம்” என்றவன் முன்னே செல்ல…

தன் கைகளை இறுக பற்றிக் கொண்ட விபீஷனை முறைத்து பார்த்தவள் அவனது பிடியில் இருந்து தன் கையை உறுவ முயன்றாள்.

ஆம், முயற்சி மாத்திரமே செய்ய முடிந்தது ஆனால் அவனின் பிடியில் இருந்து அவளால் கையை அசைக்கக் கூட முடியவில்லை.

அவனோடு இழுபட்டு வந்தவளை கோயிலின் வெளியில் நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த், தன்னருகே வந்த விபீஷனிடம் “நீ உன்னோட ஜீப்ல கிளம்பு. நான் ஹாஸ்பிடல் போறேன்” என்றவனுக்கு அதற்கு மேல் அவர்களோடு நின்று இருந்தால் தனது உணர்வுகள் வெடித்து விடுமோ என்ற அச்சம் அவனை ஆட்கொண்டது.

“வாட்…ஹாஸ்பிடலா? நீங்க வந்தால் தான் வீட்டுல ஹேன்டில் பண்லாம் அண்ணா” என்றானே பார்க்கலாம்.

 

அவன் தன்னை உரிமையாக கூப்பிட மாட்டானா என ஏங்கி இருக்கின்றான் ஆனால் இப்போதோ வார்த்தைக்கு வார்த்தை அவன் ‘அண்ணா’ என்று கூப்பிடும் போது எதையாவது அடித்து நொறுக்க வேண்டும் என்பதை போல வெறியே எழுந்தது.

எரிச்சல் மேலிட “இவ்வளவு தூரம் அதுவும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்க தெரிஞ்ச உனக்கு வீட்டுல எப்படி ஹேன்டில் பண்ணனும்னு தெரியாதா என்ன?” என்று நேரடியாக கேட்டே விட்டான்.

அவளுக்கோ அதிர்ச்சி.

“மாமா அப்போ உங்களுக்கு  தெரியாதா?” என்று விழிகள் விரிய கேட்டவளிடம் இறுகிய குரலில் “நோ” என்றான்.

 

விபீஷனுக்கோ, அவனின் பேச்சில் தெறித்த நக்கலில் கோபம் தான் வந்து இருக்க வேண்டும் ஆனால் அவனின் உணர்ச்சியற்ற முகத்தைப் பார்த்து என்ன நினைத்தானோ “இட்ஸ் ஓகே நானே பார்த்துக்கிறேன்” என்றவன் ஆஹித்யாவை அழுத்தமாக பார்த்தான். அவளோ இவன் செய்த செயலில் தன் அன்னையின் எதிர்வினையை நினைத்து கண்கள் கலங்க நின்று இருந்தாள்.

அவளின் கலங்கிய தோற்றத்தை அவளை உண்மையாக காதலித்தவன் பொறுத்துக் கொண்டு நிற்பானா என்ன? “வெல், நானும் வரேன்” என்றவன் தனது காரில் ஏறிக் கொள்ள, விபீஷனோ அவனின் ஜீப்பில் ஏறிக் கொண்டான்.

ஜீப்பின் உள்ளே இருந்துக் கொண்டே “உள்ள வந்து ஏற போறியா இல்லையா?” என்ற விபீஷனின் அழுத்தமான குரலில் திடுக்கிட்டவள் அமைதியாக ஏறிக் கொண்ட அடுத்த நொடி ஜெய் ஆனந்த் கிளம்பும் முன்னரே தனது ஜீப்பை வேகமாக கிளம்பி இருந்தான்.

போகும் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன் கையினை ஓங்கி ஸ்டியரிங்கில் குத்தினான்.

உடல் இறுகிப் போக மேனி எங்கும் தீப்பற்றி எரிவது போல ஓர் உணர்வு.

கத்த வேண்டும். நன்றாக வாய் விட்டு கதற வேண்டும் என்று இருந்தது.

அடக்கிக் கொண்டான் தன் உணர்வுகளை… அதன் பயனால் அவனின் கைகளில் காரோ சீறிப் பாய்ந்தது.

கண்மன் தெரியாத வேகம்.

ஏதேனும் விபத்து நடந்து இப்போதே இறந்து போனாலும் அவனுக்கு சந்தோஷம் தான் என்ற ரீதியில் எக்சிலரேட்டரை அழுத்தினான்.

சும்மாவே வேகம் மிதமிஞ்சியதாக இருக்க, இப்போதோ மேலும் தன் வேகத்தை அதிகரித்தவன் மனக் கண்ணில் அவளின் கலங்கிய தோற்றம் வந்து போக சடுதியில் காரின் வேகத்தை குறைத்தவன் அவளுக்காக வீட்டினை நோக்கி காரை செலுத்தி இருந்தான்.

 

கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் போக வேண்டியவனோ பதினைந்து நிமிடங்களில் வீட்டை அடைந்து இருந்தான்.

 

அவசரமாக உள்ளே வந்தவன் கண்டது என்னவோ விபீஷனை பிரதாபன் அறைய கை ஓங்க எத்தனிக்க, அவனோ அவரின் கையை தடுத்து பிடிக்கும் காட்சி தான்.

 

அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

“டேய் விபீ அப்பா கையை விடுடா” என அவனை உலுக்கினார் சித்ரா.

“இப்போ நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு எல்லாரும் ஒப்பாரி வச்சுட்டு இருக்கீங்க. எனக்கு அவளை பிடிச்சு இருந்தது சோ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றான் அப்போதும் திமிராக…

“எங்ககிட்ட சொல்லி இருந்தால் நாங்களே கல்யாணம் பண்ணி வச்சி இருப்போமே டா. இன்னைக்கு காலைல கூட உனக்கும் அவளுக்கும்…” என்று சித்ரா  சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இடிந்து போய் அமர்ந்து விட்டார் பிரதாபன்.

 

ஒருநாளும் அவன் தன்னிடம் எதிர்த்து பேசியதே இல்லையே!

 

பிரதாபன் அருகில் வந்த ஜெய் ஆனந்த்தோ, “அப்பா பிளீஸ் இனிமேல் நடக்க வேண்டியதை பார்க்கலாம்” என்று சொல்ல…

“வந்துட்டான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட விபீஷன் அழுதுக் கொண்டு இருந்த ஆஹித்யாவை வெறித்தான்.

 

“டேய் ஊர்ல என்னடா பேசுவாங்க? அண்ணன் இருக்கும் போதே தம்பி கல்யாணம் பண்ணிகிட்டான்னு தப்பா பேசுவாங்க டா” என்று கதறி அழுதார் சித்ரா.

ஜெய் ஆனந்த்தோ “அம்மா பிளீஸ் ஸ்டாப் இட் பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க அதுக்காக ஒவ்வொருதர்கிட்ட போய் நாம பேச முடியாது. இப்போ இந்த நொடி நிச்சயம் இல்லாதது சோ இருக்குற வரையும் நாம நமக்காக வாழணும்” என்றதும் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்டு விடும் என்பதை போல நிசப்தமாக இருந்தது.

பிரதாபனோ “உன்னோட கல்யாணமும் பண்ணிடலாம் ஆனந்த். அந்த பொண்ணுகிட்ட பேசிட்டியா?” என்று அவர் கேட்க…

அவனோ மனதளவில் அணுவணுவாக துடித்துக் கொண்டல்லவா இருந்தான்.

பிரதாபன் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என அவன் ஊகித்து விட்டான்.

தனது திருமணத்தை வைத்து இவர்களது வாழ்க்கையை ஏன் பிரிக்க வேண்டும்? என்று யோசித்தவன் பார்வை தன்னை நக்கலாக புன்னகைத்த படி பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனை பார்த்துக் கொண்டே “அவளுக்கு கல்யாணம் ஆகிறிச்சுபா அது தெரியாமல் நான் தான் முட்டாள் போல இருந்திருக்கேன்” என்று சொல்ல…

“ஆனந்த் என்ன சொல்றபா?” எனக் கேட்டார் திகைப்பாக…

உணர்வுகளை அடக்கிக் கொண்டவன் “எஸ்… அவளுக்கு கல்யாணம் ஆச்சு” என்றவன் பார்வை ஒரு நொடிக்கும் குறைவாக ஆஹித்யாவை தழுவி மீண்டது.

“சரிப்பா வேற பொண்ணு…” என்று சித்ரா இழுக்க… “அம்மா பிளீஸ் எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க ஐடியா இல்லை சோ பிளீஸ்” என்றதும் சேலை தலைப்பால் வாயை பொத்தியபடி அழ ஆரம்பித்து விட்டார்.

 

உணர்வுகள் வெடித்து கத்தி விடுவோமோ என்ற அச்சத்தில் பிராதாபனின் கையை பிடித்து இருந்தவனின் பிடி இறுக, அவனின் கரத்தின் நடுக்கம் பிரதாபனை உறைய வைக்க “சித்ராரா” என்றார் கர்ஜனையாக…

 

அவரின் அழுகையோ சட்டென நின்றது.

“வித்யா அவளை உள்ள கூட்டிட்டு போ” என்றவர் திரும்பி ஆஹித்யாவை பார்த்து “உனக்கு இவனோட என்று விபீஷனை சுட்டிக் காட்டியவர் வாழ சம்மதமா இல்லைனா…” என்பதற்குள் அவளே விபீஷனின் துளைத்தெடுக்கும் பார்வையில் சம்மதம் மாமா” என்றாள்.

அத்தியாயம் – 10

அவள் சம்மதம் என்று சொன்னதும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஜெய் ஆனந்த்தோ “அப்பா நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்” என்றவன் எதிலோ இருந்து தப்பித்து செல்வது போல நேரே மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான்.

ஒரு பெரு மூச்சை விட்டுக்  கொண்ட பிரதாபனும்“நீ உள்ள போ மா” என்றதும் அவளோ விட்டால் போதுமென உள்ளே சென்று விட இப்போது ஹாலில் தனியாக எஞ்சி நின்று இருந்தது என்னவோ விபீஷன் தான்.

அவனை ஆழ்ந்து பார்த்து விட்டு திரும்ப எத்தனித்த பிரதாபனிடம் “சாரிபா” என்றான்.

“எதுக்காக?” என்று கேட்டார் அவன் புறம் திரும்பாமலேயே…

“சொல்லாமல் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு தான்” என்றான் சர்வ சாதாரணமாக…

அப்போதும் அவன் செய்த தவறை அவன் உணர்ந்துக் கொண்டதாகவும் தெரியவில்லையே!

அவனின் பேச்சின் தொணியில் திரும்பி அவனைப் பார்த்தவர் “உனக்கு பார்த்த பொண்ணு ஆஹித்யா தான்” என்கவும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவன் “வாட்?” என்று கேட்க… “காலைல அதை பத்தி தான் பேசிட்டு இருந்தோம் ஆனால் நீ அவசரப்பட்டுட்டடா. உன்னோட அண்ணன் கல்யாணம் பண்ணிக்க முதல் நீ இப்படி பண்ணுவனு கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல விபீஷன்” என்றவர் தளர்ந்த நடையுடன் செல்ல…

 

சிறிது நேரம் அப்படியே யோசித்த படி நின்று இருந்தவன் மனதிலோ “அவன் காதலிச்சது அவதான்னு தெரிஞ்சி இருந்தால் அவளை அவனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருப்பீங்க. அப்போ அவன் ஆசைப்பட்டது அவனுக்கு கிடைச்சு இருக்கும் தானே? அதேநேரம் எனக்கும் அவளை பிடிச்சு இருந்தால் நிச்சயம் ஒத்துத்து இருந்திருக்க மாட்டீங்க தானேபா” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே போகும் பிரதாபனின் முதுகை வெறித்தான்.

 

இங்கோ நேராக மருத்துவமனைக்கு வந்த ஜெய் ஆனந்த், தனது கேபினில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தான்.

 

அவன் எப்படி வந்து சேர்ந்தான் என்று கேட்டால் அவனுக்கே தெரியாது.

 

உடலின் அனைத்து செல்களும் இறந்து விட்டது போல கிட்டத்தட்ட ஒரு ஜடம் போல அமர்ந்திருந்தான்.

தன்னை முயன்று சமன்படுத்திக் கொண்டு அலைபேசியை எடுத்து நவீனுக்கு அழைத்தவன் “ஆப்பரேஷன் தியேட்டரை ரெடி பண்ணியாச்சா?” என்று கேட்டான்.

 

அவனின் குரலில் தெரிந்த ஏதோ ஒன்று மறுபுறம் இருந்த நவீனுக்கே ஏதோ சரியில்லையெனப் பட, “ஆனந்த், ஆர் யூ ஓகே?” என்று கேட்டு இருந்தான்.

அதற்கு பதிலளிக்காமலேயே அலைபேசியை துண்டித்தவன் ஸ்டெதெஸ்காப்பை கழுத்தில் மாட்டிக் கொண்டு சத்திர சிகிச்சை அறையை நோக்கி விரைந்து இருந்தான்.

 

அறைக்குள் நுழைந்தவன் முகக் கவசத்தை  அணிந்துக் கொண்டே சத்திர சிகிச்சையை மேற்கொள்ள ஆயத்தமாகி இருக்க, அவன் வந்தது தெரிந்தும் சத்திர சிகிச்சை அறைக்குள் வந்த நவீனோ, அவனின் நடுங்கிக் கொண்டிருக்கும் கரங்களைப் பார்த்து அதிர்ந்துப் போனான்.

 

“ஆனந்த்” என்றுக் கூப்பிட்டுக் கொண்டு அவன் அருகில் நெருங்கியவனை சட்டென ஏறிட்டுப் பார்த்தான்.

“டேய் யுவர் ஹேண்ட்ஸ் ஆர் ஷிவரிங் டா. என்னாச்சு உனக்கு?” என்று கேட்டான்.

அப்போது தான் கத்தியை பிடித்து இருக்கும் தனது கரங்களின் நடுக்கதையே அவன் உணர்ந்தான்.

என்ன ஆயிற்று எனக்கு?

அவனுக்கு விரும்பிய தொழில் ஆனால் அவனால் அதைக் கூட செய்ய முடியாத அளவுக்கு அவள் என்னை பாதிக்கின்றாளா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனுக்கே  அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

ஆம், அதற்கு விடையளிக்கும் விதமாகத் தான் அவனின் கரங்கள் மட்டும் அல்ல இதயம் உட்பட செயலிந்ததை போலத் தான் உணர்ந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

தான் கேட்டதிற்கு பதில் ஒன்றும் கூறாமல் கரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனை உலுக்கிய நவீன் “ஸ்பீக் அவுட் ஆனந்த்” என்றான்.

 

“எனக்கு இப்போ சிசேரியன் பண்ண முடியாது நவீன். கேன் யூ பிளீஸ் மேனேஜ்?”

அவன் இப்படி சொல்பவன் அல்லவே! அதிர்ந்து விட்டான் அவன்.

“வை என்னாச்சு டா?” என்று மேலும் மேலும் கேள்விக் கேட்டுக் கொண்டு இருந்தவனை எரிச்சலாக பார்த்தவன் “வீ ஹேவ் நோ டைம் சோ பிளீஸ் நவீன் கேரி ஒன்” என்க….

“ஓஹ் கோட் இதுக்கெல்லாம் எதுக்கு பிளீஸ் சொல்ற? ஐ வில் மேனேஜ்டா நீ கிளம்பு” என்றதும் “உன்னோட ஹவுஸ் கீயை தா” எனக் கேட்டவனிடன் அடுத்த கணமே சாவியை பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டியவன் “டேக் கேர்” என்றான்.

 

விரக்தியாக சிரித்தவன் அவனுக்கு பதில் எதுவும் கூறாமலேயே நவீனின் வீட்டை நோக்கி கிளம்பி இருந்தான்.

 

போகும் அவனை ஒரு பெரு மூச்சுடன் பார்த்தவன் தனது மேலங்கியை போட்டுக்கொண்டு சத்திர சிகிச்சையை மேற்கொள்ள ஆரம்பித்தான்.

 

தன்னை அறைந்து விட்டானே என்ற கோபத்தில் காலேஜில் இருந்து நேராக வீட்டிற்கு வந்திருந்தாள் பவ்யா.

பூட்டி இருந்த கதவை பார்த்து விட்டு தலையில் கை வைத்தவள் “ஐயோ இப்போ அவன் வீட்டுக்கு போகணுமா?” என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டே பிரதாபனின் வீட்டிற்குள் நுழைய, அங்கோ மாயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

“என்னடா இது? ஒரு ஈ காக்காவைக் கூட காணுமே” என்று சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்த படி வந்தவள் ஓர் உருவத்தின் மீது மோதி நின்றாள்.

“ ‘ஸ்ஸ்’ என்று நெற்றியை தேய்த்துக் கொண்டே நமக்கு தெரியாமல் நடு வீட்டுல எவன்டா தூணை வச்சது” என்றபடி நிமிர்ந்து பார்த்தவள் எதிரே தன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டே நின்றிந்தவனை பார்த்து உள்ளே திடுக்கிட்டவள் மனதில் சற்று முன் அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் எங்கே போனதென்றே அவளுக்குத் தெரியாது.

“பரவால்லயே மாமா பாடி செம்ம ஸ்ட்ராங் ஆஹ் இருக்கே” என்றவள் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க, அவளின் தோரணையிலும் பேச்சிலும் கோபத்தின் உச்சிக்கே சென்றவன் “உன்னோட அக்கா புருஷனை சைட் அடிக்கிறது தப்பில்லையா பவ்யா?” என்று கேட்டானே பார்க்கலாம்.

பற்கள் தெரிய சிரித்துக் கொண்டு இருந்தவள் இதழ்களோ நொடிப் பொழுதில் சுருங்க “என்… என்ன கேக்கல என்ன சொன்னிங்க?” என்று வார்த்தைகள் தந்தியடிக்க கேட்டாள்.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளின் கலங்கிய விழிகளை பார்த்தவன் என்ன நினைத்தானோ “உள்ள போ உனக்கே தெரியும்” என்றவன் திரும்பியும் பாராமல் வெளியில் சென்று இருந்தான்.

 

இதயத்தில் மெல்லிய வலி ஊடுருவுவதை போல உணர்ந்தவள் நகர மறுத்த தன் பாதங்களை நகர்த்தி தனது அன்னையின் பேச்சு சத்தம் கேட்ட அறையினை நோக்கி சென்றாள் பேதை பெண்.

கிட்டத்தட்ட ஜெய் ஆனந்த்தின் நிலையைப் போல தானே அவளுக்கும்…

 

இங்கோ, நவீனின் வீட்டுக்கு வந்தவன் முதலில் சென்றது என்னவோ அவனின் அறைக்குத் தான்.

 

அவனுக்கு சற்று நேரம் அமைதி தேவை பட்டது.

எங்கே தவறினோம்? என்ற எண்ணம் அவனுள்.

 

விழிகளை அழுந்த மூடிக் கொண்டு சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்.

 

மனமோ நிலை இல்லாமல் தவித்தது.

 

தாமதிக்காமல் அவளிடம் தன் காதலை  சொல்லி இருக்க வேண்டுமோ என்ற எண்ணம் இப்போது தோன்றியது.

 

இப்போது தோன்றி என்ன பயன்?

 

நெஞ்சம் விம்மியது.

 

அழுத்தம் தாழாமல் “ஆஆஆஹ்ஹ்ஹ்” என்று கத்தியவன் தன் கரத்தை ஓங்கி முன்னால் இருந்த கண்ணாடி மேசையில் குத்தி இருந்தான்.

 

அவனது இதயத்தை போல அதுவும் சில்லு சில்லாக நொறுங்கியது.

 

அவனது கரத்தில் இருந்து உதிரம் நில்லாமல் வழிந்தது. ஆனால் அதையெல்லாம் அவன் உணரும் நிலையிலேயே இல்லையே!

 

அவனும் உணர்வுகள் கொண்ட ஆண்மகன் தானே!

 

மென்மையானவன் தான். பொறுமையானவன் தான்.

 

ஆனால் இன்றோ அவனது சிந்தை இன்னொருவனின் அதுவும் தன் உடன் பிறந்தவனின் சரிபாதியாகி விட்டவளை தான் நினைப்பது மாபெரும் குற்றம் அல்லவா!

 

தலையை பிடித்துக் கொண்டு எழுந்தவன் விழிகள் செல்ஃபில் இருந்த மதுபான போத்தலில் படிந்தது.

 

தளர்ந்த நடையுடன் சென்றவன் அவ் உயர் ரக மதுபான போத்தலை தன் கரங்கள் நடுங்க எடுத்தான்.

 

அவனின் மூளையோ மீண்டும் மீண்டும் அவளை நினையாதே என்ற கட்டளையை பிறப்பிக்க, மாறாக அவனது மனம் லயித்தது என்னவோ அவளின் நினைவுகளில் தான்.

 

முடிவெடுத்து விட்டான். அடுத்த நொடியே எதனையும் யோசிக்காமல் மதுபானத்தை தன் வாயில் சரித்திருந்தான்.

 

அக் கணம் அவனின் கொள்கைகளை மறந்தான்.

 

குடிக்க வேண்டாம் என்று சொன்னவன் தான் இன்று தன்னை ஆட்கொள்ளும் அவளின் நினைவுகளில் இருந்து தப்பிக்க தற்காலிகமாக மதுவை நாடி இருந்தான்.

 

முழு போத்தலையும் காலி செய்தவன் தள்ளாடிய படி வந்து ஒரு கட்டத்தில் பிடிமானம் இல்லாமல் நிலை தடுமாறி நிலத்தில் விழுந்து விட்டான்.

விழுந்தவனுக்கோ வலி என்ற உணர்வு  கூட மரத்து விட்டது போலும்.

விழிகளை அழுந்த மூடிக் கொண்டான்.

 

அந்தோ பரிதாபம். மீண்டும் அவளின் மதி முகம் அவனின் சிந்தையை ஆட்கொள்ள தன் கன்னத்தை தானே ஓங்கி அறைந்தவன் “ஆனந்த் ஸ்டெடி. தியா உன்னோட தம்பி பொண்டாட்டி” என்று மீண்டும் மீண்டும் நா குழற சொல்லிக் கொண்டே தன் கன்னத்தை மாறி மாறி அறைந்த படி இருந்தவனை அறைக் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த நவீன் பார்த்து அதிர்ந்தே விட்டான்.

அனைத்து உணர்வுகளையும் மறக்க மதுவை நாடிய ஒரு ஆண்மகனே துவண்டு போய் இருக்கும் போது பவ்யாவின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்ன?

விடயத்தை கேள்விப்பட்டவள் மொத்தமாக துவண்டு போனாள்.

அத்தியாயம் – 11

ஆஹித்தியாவின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை வெறித்தவள் அவளின் வாடிய வதனத்தை வெறித்தாள்.

ஏனோ இதற்கு காரணமான அவன் மேல் ஆத்திரம் தலைக்கு ஏறியது.

அழுகை தொண்டையை அடைக்க, “நான் வீட்டுக்கு கிளம்புறேன் மா என்றவள் திரும்பி அக்கா நீயும் வர்றியா?” என்று கேட்டாள்.

“நீ போ… நான் அப்புறமா வரேன்” என்றவள் சுவரோடு சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டாள்.

திரும்பி நடந்தாள்.

அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்பவே இருந்தன.

வெளியில் வந்தவள் சுற்றும் முற்றும் தன் விழிகளை சுழல விட்டாள்.

 

அவனோ, ஜீப்பில் தான் அமர்ந்து இருந்தான்.

 

அவனை நோக்கி வேகமாக சென்றவள் இதழ்கள் நடுங்க “மாமா” என்றழைத்தாள்.

சீட்டில் சாய்ந்து விழிகளை மூடி அமர்ந்து இருந்தவன் அவளின் அழைப்பில் சட்டென விழிகளைத் திறந்து அவளைக் கேள்வியாக நோக்க, அவளோ “என் அக்காவை லவ் பண்றீங்களா?” என நேரடியாக கேட்டு விட்டாள்.

 

அவளது கேள்வியில் சற்றே திகைத்தாலும் “லவ் பண்ணாமலா கல்யாணம் பண்ணிட்டு வந்து இருக்கேன்?” என்று அவளிடமே திருப்பிக் கேட்டு இருந்தான்.

அவளுக்கோ சுருக்கென்ற வலி இதயத்தில் பரவியது.

 “அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லாமல்…”என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “பிடிக்க வச்சிடுவேன்” என்றான்.

 “நீங்க பண்றது  தப்பு மாமா” என்றவள் குரல் ஈனமாக ஒலித்தது.

“எது தப்பு  சரின்னு எனக்கு தெரியும் அதை நீ சொல்ல தேவையில்லை” என்று முகத்தில் அடித்தது போல பதிலளித்தான்.

தூங்குகின்றேன் என்ற பேர்வழியில் தூங்குவதைப் போல நடிப்பவர்களிடம்  பேசி என்ன பயன்?

குரல் அடைக்க “அக்காவை நல்லா பார்த்துக்கோங்க மாமா என்றவள் மனதை அடைக்கும் துக்கம் தாழாமல் நான் கேக்குறது தப்பு தான் மாமா ஆனால் கேட்காம இருக்க முடியல ரொம்பவே வலிக்குது மாமா என்றவள் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே நான் உங்க மனசை கொஞ்சம் கூட பாதிக்கலையா?” என்று கேட்டே விட்டாள்.

அதற்கு அவன் என்ன சொல்வான்? அவனின் முழு நேர சிந்தனையே ஜெய் ஆனந்த்தை கஷ்டபடுத்த வேண்டும் என்பதே! அதில் எங்கனம் அவளைப் பற்றி யோசிப்பான்?

இருக்கும் தலைவலியில் இவள் வேறு என்ற எரிச்சலில் “என்னோட பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்கு தெரியும் என்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்து சொன்னவன் அண்ட் மோரோவர் உன்னை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. எனக்கு உன்னை பார்க்க கூட இஷ்டம் இல்லை ஏதோ ஆஹித்யாவோட தங்கச்சின்னு பார்க்குறேன் இல்லைனா நீ பேசுற பேச்சுக்கு சாவடிச்சு இருப்பேன்” என்று கர்ஜித்தான்.

அவன் விட்ட வார்த்தைகள் அவளின் ஆழ் மனதில் ஆறாத ரணமாக பதிந்துப் போனது.

காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் கூடத் தெரியாதவனிடம் பேசிக் கொண்டு இருக்கின்றோம் என அப் பேதைக்கு அப்போது புரியவில்லை.

அவன் முன் வெடித்து அழுது விடுவோமோ என அச்சம் கொண்டவள் வாயை இறுக மூடிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடி இருந்தாள்.

போகும் அவளை சலிப்பாக பார்த்தவன் “ஷிட்… இவ வேற” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் விழிகளை அழுந்த மூடிக் கொண்டான்.

 

உணர்வுகளை அடக்கும் வழி அறியாமல் அறைக்குள் வந்தவள் வெடித்து அழுதாள்.

 

அவன் செய்த செயலை விட அவன் பேசும் வார்த்தைகள் தான் அவளை வதைத்தன.

உயிரை வதைக்கும் இந்த கொடிய வலியைத் தாங்கிக் கொள்வதை விட தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளலாமா? என்று நொடியில் தோன்றிய எண்ணத்தை அடியோடு அழித்தவள் சுருண்டு கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

வலியை மறக்க மதுவை நாடும் ஆண்களின் மத்தியில் சாதாரண பெண் அவளும் என்ன தான் செய்வாள்?

 

இங்கோ, ஜெய் ஆனந்தின் நிலைமையோ படு மோசமாக போயிருந்தது.

முழு போதையில் அதுவும் தன்னைத் தானே அடித்துக் கொண்டு நிலத்தில் வீழ்ந்து கிடந்தவனை சமாளித்து எழுப்பி காயபட்ட கரத்திற்கு மருந்திட்டு முடிப்பதற்குள் நவீனுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.

 

அவனைக் கைத் தாங்கலாக கூட்டிச் சென்று கட்டிலில் படுக்க வைத்தவன் இழுத்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டே அவனின் குழறலான பேச்சை செவிமடுக்க ஆரம்பித்தான்.

அவனோ, “தி… தியாயா என்று சொல்லிக் கொண்டே இட்ஸ் ஹர்டிங் டி ” என்று அந்த போதையிலும் தன் இடது மார்பை சுட்டிக் காட்டியவன் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“ஆனந்த்…. ஆனந்த்” என்றழைத்து அவனை உலுக்கினான்.

ஆனால், அதனை எல்லாம் உணரும் நிலையையே அவன் கடந்து விட்டு இருந்தான்.

மீண்டும் தன்னைத் தானே காயப்படுத்தும் நோக்கில் அறைந்து கொள்ள ஆரம்பித்தவனின் கரங்களை கட்டிலோடு சேர்த்து அழுத்தி பிடித்தவன்   “டேய்… குடிக்கவே மாட்டியே டா என்னாச்சு டா? எனக்கு நீ பேசுறது ஒண்ணுமே புரியல ப்ளீஸ் ஏதாச்சும் புரியிற போல சொல்லுடா” என்றான்.

 

“தியா…விபீ…ஷன்” என்று நா குழற சொல்லிக் கொண்டே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான்.

“வாட்?” என கேட்ட படி அவனின் கன்னத்தை தட்டி அவனை சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தான்.

 

ஆம், அவனால் முயற்சி மாத்திரமே செய்ய முடிந்தது.

அதற்குள் போதை தலைக்கு ஏற முழு மயக்க நிலைக்கே சென்று இருந்தான்.

“ஓஹ் மை கோட்” என்று சொல்லிக் கொண்டே அவனின் நாடித் துடிப்பை ஆராய்ந்தவன் அவசமாகச் சென்று  ஃப்ரிட்ஜ்ஜில் இருந்த  எலுமிச்சப் பழச் சாற்றினை எடுத்து வந்து அவனுக்கு புகட்டி இருந்தான்.

 

கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாக என்னென்னவோ செய்து அவனோடு போராடியவன் அவனை சுய நினைவுக்கு வர வைக்கவே, இரவு 6.30 மணியைக் கடந்து இருந்தது.

 

நெற்றியை அழுத்தி விட்டபடி எழுந்தவனுக்கு தலையை சம்மட்டியால் அடித்தது போல வலித்தது.

 எழுந்து அமர்ந்து இருந்தவனை வெறித்த படி  சுவற்றில் சாய்ந்து மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிய படி பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் நவீன்.

 

மதியத்தில் இருந்து அவன் பட்ட பாடு அவனுக்குத் தானே தெரியும்.

தன் மேல் அடித்த மதுவின் நெடியில் “ஷிட்…” என்று சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்.

 

“என்னோட வீடு தான்” என்ற குரலில் அப்போது தான் தலையை உயர்த்திப் பார்த்தான்.

 

கேசம் கலைந்து போட்டிருந்த ஷர்ட்டும் கசங்கி புயலின் அடிபட்டவன் போல நின்றிருந்த நவீனின் கோலத்தைப் பார்த்து திகைத்தவன் “நீ எப்போ வந்த என்றவன் ஞாபகம் வந்தவனாய் சிசேரியன் பண்ணியாச்சா?” என்று கேட்டான்.

“வாவ்… சூப்பர்…கேட்ப டா. நல்லா கேட்ப ஏன் நான் சாகலைன்னு கேளு?” என்றவனிடம் “சாரி என்றவன் சட்டென கோபம் தலைக்கு ஏற என்ன கருமத்தை வாங்கி வச்சு இருக்க?” என்று சீறினான்.

“அஹான்… சாருக்கு அந்த கருமத்தை குடிக்கிறப்போ மட்டும் ஜிவ்வுன்னு இருந்துச்சு போல” என்றான் நக்கலாக…

ஷர்ட்டினை கழற்றிக் கொண்டே “ஓகே லீவ் தட் . நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு” என்றவன் கழுத்தில் நெட்டி முறித்துக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தான்.

“சிசேரியன் எல்லாம் சக்சஸ் தான் பட் ஏன் திடீர்னு குடிகாரன் ஆயிட்ட?” என்று கேட்க….

சுயம் அடைந்து எழுந்தவனுக்கு அவளின் நினைவுகள் வராமல் இல்லையே!

மீண்டும் மதுவை நாடி விடுவோமோ என்ற அச்சத்தில் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டவன் “நவ் ஷி இஸ் மேரிட்” என்றான்.

 

முதலில் இருந்து ‘தியா…தியா’ என்று தானே புலம்பி கொண்டு இருந்தான். ஆக அவளுக்கு திருமணம் ஆனதால் தான் குடித்தானா? அப்படியென்றால் அவள் யாரை திருமணம் செய்து இருக்கக் கூடும்? என்ற கேள்வி எழ, அதற்குள் அவனின் சிந்தையே ஜெய் ஆனந்த் போதையிலேயே ‘விபீஷன்’ என்று நா குழற சொன்னதும் நினைவுக்கு வர அதிர்ந்து தான் போனான்.

 

அதே அதிர்ச்சி மாறாமல், நீ காதலை கூறி விட்டாயா?என தன்னை மீறி அவனிடம் கேட்க வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டவன்  “எப்போ கல்யாணம் ஆச்சு?” என்று கேட்டு இருந்தான் .

அவனின் கேள்வியில் குளியலறைக்குள் செல்லப் போனவன்  திரும்பி “இப்போ நான் ரெப்ரஷ் ஆகட்டுமா வேணாமா?” என்று கேட்டவன் குரலில் என்ன இருந்தது என்று அவனாலேயே கணிக்க முடியவில்லை.

 ஒரு சில நிமிடங்களில் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவன் “சாரி நவீன் என்னால உனக்கு” என்றவனை இடை மறித்தவன் “உனக்கு அங்கள் நிறைய கால் பண்ணிருக்கார்” என்றதும் “ஓஹ் ஷிட் என்றவன் அலைபேசியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகளை பார்த்தவன் உன்னோட ஒயிட் ஷர்ட் இருந்தால் தா” என்றான்.

“நீ அங்க போயே தான் ஆகணுமா?”

“எஸ்… ஆஃப் கோர்ஸ்”

“எதுக்காக அங்க போய் மறுபடியும் நீ கஷ்டப்படுறதுக்கா சோ நைட் டியூட்டின்னு சொல்லிடு” என்றவனை   பார்த்து  விரக்தியாக சிரித்தவன் “எவ்வளவு நாளைக்கு நான் ஓடி ஒளியிறது?” என்று கேட்டானே பார்க்கலாம்.

 

இப்படி ஒரு  கேள்வி அவன் கேட்பான் என சற்றும் அவன் எதிர்ப் பார்க்கவில்லை.

“யூ ஸ்டில் நாட் ஸ்டேபல் சோ இங்கேயே ஸ்டே பண்ணிக்கோ” என்றவனிடம் “பிளீஸ் நவீன் ஐ ஹேவ் டூ மூவ் ஒன் இதெல்லாம் நான் இங்க இருந்தா போல எல்லாம் மாறிட போறது இல்லடா” என்றவன் தொடர்ந்து சென்று நவீனின் ஷர்ட்டைப் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பி இருந்தான்.

 

அவன் வீட்டை அடைந்த போது நேரம் எட்டைக் கடந்திருக்க, வாசலில் கார் வந்து நின்றதும் சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்த சித்ரா “என்னடா ஃபோன் கூட எடுக்காமல்…” என்று குரல் தழுதழுக்க பேசியவரை இடை மறித்தவன் “கிரிடிகல் ஆபரேஷன் மா அதான் கால் ரிசீவ் பண்ண முடியல” என்று முதன் முறை பொய் உரைத்து இருந்தான்.

“அதுக்காக இப்படியா பண்றது எப்படியாச்சும் சொல்லி இருக்கலாம்ல… நீ பேசலைனதும் துடிச்சு போய்ட்டேன் டா” என்றார் நெஞ்சம் பதைபதைக்க…

 

“ஏன் அவளுக்கு கல்யாணம் ஆனது தாங்க முடியாமல் செத்துட்டேன்னு நினைச்சீங்களா மா?” என்று கேட்டவனை அதிர்ந்து போய் பார்த்தார் சித்ரா.

 

அவரின் திகைத்த தோற்றத்தில் தான் கூறிய பதிலை உணர்ந்து தன்னைத் தானே நொந்துக் கொண்டவன் “எனக்கு டைம் வேணும்மா. சீக்கிரம் எல்லாமே மறந்திட்டு கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று அவரை சமாதானம் செய்தவன் திரும்பி தன்னையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த பிரதாபன் அருகில் சென்று அமர்ந்தவன் “சாரிபா” என்றான்.

 அதில் எத்தனையோ அர்த்தங்கள் பொதிந்து இருந்ததை அவன் மட்டுமே அறிவான்.

ஆதூரமாக அவனின் தலையை வருடி விட்டவர் “போய் ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்” என்று சொல்ல ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டவன் எழுந்து நேரே தனது அறையை நோக்கி விரைந்து இருந்தான்.

 

அறைக்குள் நுழைந்தவனுக்கு தான் அன்னையிடம் பேசிய வார்த்தைகள் அவனுக்கே அதிக படி என்று தோன்றியது.

கண்ணாடியினால் வெட்டப்பட்டு தோலைக் கிழித்த காயங்கள் மருந்தின் வீரியத்தால் காய்ந்து இருந்த கரத்தையே மீண்டும் ஓங்கி சுவற்றில் குத்தி இருந்தான்.

மீண்டும் தன்னை ஆழி சுழலுக்குள் இழுக்கும் அவளின் நினைவுகள் தானே இதற்கு காரணம் என்ற ஆற்றாமையில் “டேமிட்” என்று சொல்லிக் கொண்டவன் பார்வை ஓரிடத்தில் நிலைக் குத்தி நின்றது.

அத்தியாயம் – 12

 

சுவற்றில் கையை ஓங்கி குத்தியவன் பார்வையோ ஓரிடத்தில் குத்திட்டு நின்றது.

வேறு எங்கே ? லாக்கரில் தான்.

நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளுக்காக அவன் எழுதி வைத்த கவிதைகள் யாவும் சேமித்து வைத்திருக்கும் லாக்கரின் அருகில் சென்றவனுக்கு இதற்கு மேல் தன்னிடம் அப் பொக்கிஷங்களை எல்லாம் வைத்திருப்பது தவறு என்ற எண்ணம் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் புரிய வைத்து இருந்தது.

கரங்கள் நடுங்க லாக்கரை திறந்துவனுக்கு விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டன.

 

அதற்குள் அவன் எழுதி வைத்திருந்த கவிதைகள் முதல் கொண்டு ஓவியங்கள் உட்பட அனைத்தும் அற்று வெற்றிடமாக இருந்த இடத்தைப் பார்த்து சிலையாக உறைந்து நின்று இருந்தான்.

 

அங்கு எப்படி இருக்கும்?

அவற்றைத் தான் அவனின் உடன்  பிறந்தவன் எடுத்து விட்டானே!

 

இங்கே தானே வைத்தோம் வந்ததிலிருந்து நான் வெளியில் எடுத்து பார்க்கக் கூட இல்லையே! என்று யோசித்தவனுக்கு மேலும் எதனையும் யோசிக்க முடியாமல் மூளையே மரத்து விட்டது போலிருந்தது.

 

அப்படியே சரிந்து நிலத்தில் அமர்ந்தவனுக்கு  இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்க, தன் உடலின் நிலமை மோசமாவதை உணர்ந்தவன் இழுத்து பெரு மூச்சை விட்டுக் கொண்டே தன்னை நிலைப் படுத்திக் கொண்டவன் விழிகளை மூடி நடந்தவற்றை அசைப் போட ஆரம்பித்து இருந்தான்.

நீண்ட நேரத்தின் பின் விழிகளை திறந்தவன் உடலோ தானாக இறுகி விறைத்தது.

“ஏன் டா இப்படி பண்ண?” என்று சொல்லிக் கொண்டவன் இதழ்களில் விரக்தி புன்னகை.

 அப்படியே விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவன் சித்ராவின் குரலில் தான் சுயம் அடைந்தான்.

“ஆனந்த் கீழ வா சாப்பிடலாம்” என்றவர் அறைக் கதவை தட்டினார்.

இப்போதைய மனநிலையில் பசி என்ற உணர்வையே மறந்திருந்தான் அவன்.

பொருந்த சொல்ல வேண்டுமென்றால் சாப்பிடும் மனநிலையில் அவன் இல்லை எனலாம்.

மீண்டும் “ஆனந்த்” என்று  வேகமாக கதவை தட்டினார்.

தனது சிந்தனையில் இருந்து மீண்டவன் “வரேன்” என சத்தமாக சொன்னவன் வேகமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்தவன் முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவினான். 

சற்று நேரத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்தவனின் முகம் எப்போதும் போல புன்னகையைத் தத்தெடுத்து இருந்தது. 

முடிவெடுத்து விட்டான். 

வீட்டில் இருக்கும் வரை புன்னகை எனும் முகமூடியை அணிந்து கொள்ள சித்தம் கொண்டான்.

“இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தடா?” என்று கேட்ட சித்ராவிடம் “கொஞ்சமா தூங்கிட்டேன் மா. எதுக்காக இவ்வளவு டென்ஷன்? அம் ஆல்ரைட்” என்று சித்ராவின் கன்னம் கிள்ளியவன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அவனை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருந்த பிரதாபன் எழுந்து அவனுக்கு பரிமாற ஆரம்பிக்க, “அப்பா பிளீஸ் இதெல்லாம் ஏன் பண்றீங்க? நான் ஓகே ஆகிட்டேன் பா முதல்ல நீங்க உட்காருங்க” என்றவன் அருகில் நின்ற தன் அன்னையையும் அமர வைத்து அவருக்கு அருகில் அமர வைத்து உணவைப் பரிமாறியவன், எதிரே தானும் அமர்ந்துக் கொண்டான். 

அமைதியாக உணவை உண்டு கொண்டு இருந்தவன் பார்வை தன் அருகில் வந்தமர்ந்த விபீஷன் மீது படிந்து மீள, குரலை செருமிக் கொண்டவன் “அப்பா கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான்.

“சொல்லுப்பா” என்றார்.

“நமக்கு வேண்டப்பட்ட கொஞ்ச பேருக்கு இன்வைட் பண்ணி ரெண்டு பேருக்கும் சிம்பிளா கோவில்ல கல்யாணம் பண்ணி வச்சிடலமா?” என்று கேட்டானே பார்க்கலாம்.

சாப்பிட்டுக் கொண்டு இருந்த விபீஷனுக்கு அவனின் இந்த முடிவு உச்சகட்ட அதிர்ச்சியை கொடுத்தது. 

“என்னடா சொல்ற?” என்று சித்ரா கேட்க…

“அப்போ கல்யாணம் பண்ண ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்க போறீங்களா?” என்று இறுகிய குரலில் கேட்டான்.

“இல்லப்பா கொஞ்சநாள் போகட்டுமே” என்றவரிடம் “என்னம்மா பேசுறீங்க பாத்தீங்க தானே அத்தை எவ்ளோ கஷ்டப்படுறாங்கனு. மாமா இருந்திருந்தால் சும்மா விட்டு இருப்பாரா? ஆஹித்யாவோட வாழ்க்கைக்கு நாம தான் பொறுப்பு” என்றான் உறுதியான குரலில்…

“சரிப்பா நீ சொல்றது போல கல்யாணம் பண்ணி வச்சிடலாம் ஆனால் நீ என்னப்பா பண்ண போற?” என்ற பிரதாபன் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க…

“அப்பா நான் ஆல்ரெடி சொன்னது தான் என்று ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டவன் நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிறேன் பட் எனக்கு டைம் வேணும் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என்றவன் தொடர்ந்து நாளைக்கு அத்தை கிட்ட பேசிடுங்க” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கொண்டவன் பார்வை விபீஷனில் அழுத்தமாகப் படிந்தது.

அவனின் பார்வையில் எரிச்சல் அடைந்தவன் இவன் என்ன என்னுடைய வாழ்க்கையில் முடிவெடுப்பது? என்ற எண்ணம் தோன்ற, “நான் தான் தாலி கட்டிட்டேன்ல அப்புறம் எதுக்கு மறுபடி கல்யாணம்?” என்று விபிஷன் கேட்க, பிரதாபனுக்கோ இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் தான் பறந்தது 

 

சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர் தட்டை தூக்கித் தூர ஏறிந்தார்.

 

அனைவரும் அதிர்ந்து விட்டனர். 

 

ஒருபோதும் அவர் இப்படி நடந்து கொண்டதில்லையே! 

 

“நீ பண்ணது தப்பும் இல்லாம இப்போ என்ன திமிரா பேசிட்டு இருக்க?” என்றவர் அவரை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்ற விபீஷனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார். 

 

கன்னத்தில் கையை வைத்துக் கொண்டே “அப்பா” என்றவன் குரல் ஈனமாக ஒலித்தது.

 

ஆத்திரம் தலைக்கு ஏற, மேலும் அவனின் அடுத்த கன்னத்தில் ஓங்கி அறையப் போனவர் கையை பற்றிப் பிடித்துக் கொண்ட ஜெய் ஆனந்த்தோ, “அப்பா பிளீஸ்” என்க, சித்ராவோ அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்.

 

“அடிங்கப்பா ஏன் நிறுத்திட்டீங்க?” என்றவன் சிலை போல அதே இடத்தில் அசையாமல் நின்றான்.

 

நிலமை மோசமாகிக் கொண்டு போவதை உணர்ந்த ஜெய் ஆனந்த் “விபீஷன் உள்ள போ” என்றான் இறுகிய குரலில்…

 

அவன் பேச்சை கேட்கும் ஆளா அவன்? 

 

நீ யார் எனக்கு கட்டளை இடுவது? என்ற தோரணையில் உடல் இறுக அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான் விபீஷன்.

 

“கொஞ்சமாச்சும் பண்ணது தப்புனு உணராமல் திமிரா பேசிட்டு இருக்கான் இவனை நான் அப்பவே அடிச்சு கொன்னு இருக்கணும் என்று ஆத்திரத்தில் பேசிக் கொண்டே அவனை நெருங்க எத்தனித்த பிரதாபனை பிடித்துக் கொண்ட ஜெய் ஆனந்த் “அவனுக்கு பிடிச்சு இருந்தது அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அப்பா இனி அடுத்து என்ன பண்றதுன்னு பார்க்கலாம்” என்றவனிடம் “அவன் யோசிச்சான உன்னோட வாழ்க்கையை பத்தி” என்று பதிலுக்கு பிரதாபன் சீற, இதயத்தில் வலி ஊடுருவ அதிர்ச்சியாக தன் தந்தையை பார்த்தான்.

 

“கூட பிறந்த அண்ணன் இருக்குறப்போ தம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பாங்க” என்று தந்தையாக கவலை தோய்ந்த குரலில் சொல்ல…

 

ஒரு கணம் ஒரே ஒரு கணம் தான் தியாவை காதலிப்பது தெரிந்து விட்டதோ என்று அச்சம் கொண்டவனுக்கு அவர் இப்படி சொல்லவும் தான் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த மூச்சை வெளியிட்டான்.

 

அவரின் கேள்விக்கு அவன் பதில் கூறும் முன்னரே விபீஷனோ, “சோ இப்பவும்  உங்களுக்கு அவன் தான் முக்கியம்ல?” என்று கிட்டத்தட்ட அந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜித்து இருந்தான்.

 

“விபீஷன் என்று கத்திய சித்ரா என்னடா பேசுற நாங்க எப்போ உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு பார்த்தோம்?” என்றவரிடம்

“எப்ப பார்க்கல?” என்ற மறு கேள்வி அவனிடம் இருந்து காரமாக வந்தது.

 

“அம்மா கொஞ்சம் பொறுமையா இருங்க” என்ற ஜெய் ஆனந்த் “உனக்கு என்ன ப்ராப்ளம்?” என்று நேரடியாக கேட்டு இருந்தான்.

 

“நீ தான் என்னோட ப்ராப்ளம்” என்ற அவனின் பதிலில் அனல் தெறித்தது.

 

ஆக அவன் என்னைப் பிடிக்காததன் காரணமாகத் தான் இவ்வளவும் செய்து இருக்கின்றானா?

 

‘பைத்தியக்காரன்’ என்று நினைத்துக் கொண்டவன் உணர்வுகள் மொத்தமாக தொலைந்து போக முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாமல் “சோ நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்று கேட்டான்.

 

“செத்துடு” என்ற அமிலம் தோய்ந்த வார்த்தையை  விபீஷன் உதிர்க்க, இப்போது அவனின் மறு கன்னத்தில் சித்ராவின் கரமோ இடி போல இறங்கியது.

 

“தப்பு பண்ணிட்டேன் டா நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட, பொறுமை இழந்து போன ஜெய் ஆனந்த்தோ “வில் யூ ப்ளீஸ் ஷட் அப்” என்று கத்தி இருந்தான்.

 

அவனும் எவ்வளவு அழுத்தத்தைத் தான் தாங்குவான்?

 

உயிருக்கு நிகராக காதலித்தவளின் திருமணம்.

 

தம்பியின் துரோகம்.

 

அவனின் வெறுப்பு.

 

எந்த ஒரு அண்ணனும் கேட்க தகாத வார்த்தை அல்லவா?

 

எவ்வளவு வெறுப்பு என் மேல் இருந்தால் மடிந்து விடு என்று என்னைக் கூறி இருப்பான்? என்று நினைத்தவனுக்கு கசந்த புன்னகையுடன் சேர்ந்து விழிகள் இரண்டும் சிவந்து விட்டு இருந்தன.

 

“சோ நான் சாகணும் ரைட்?” என்றவனிடம் வாங்கிய அறையில் இதழ் வெடித்து வழிந்த உதிரத்தை ஒற்றிய படி விஷமாகப் புன்னகைத்தவன் “நோ நீட் நீ அவ்வளவு சீக்கிரம் சாக கூடாது சோ இப்போதைக்கு நீ இந்த வீட்டை விட்டு போகணும்” என்றானே பார்க்கலாம்.

 

அவனின் வன்மப் பேச்சில் திகைத்து போனது என்னவோ பிரதாபனும் சித்ராவும் தான்.

 

ஆனால் ஜெய் ஆனந்த்திற்கோ அவனின் வார்த்தைகளில் கொஞ்சம் கூட அதிர்ச்சி ஏற்பட வில்லை.

 

இதை அவன் எதிர்ப் பார்த்தது தான்.

 

“சோ நான் வீட்டை விட்டு போனால் உனக்கு சந்தோஷம் தானே?”  

 

அடுத்த கணமே “ஒப்கோர்ஸ்” என்ற அழுத்தம் திருத்தமான பதில் அவனிடமிருந்து வந்தது.

 

மகன் என்ற பெயரில் ஒரு அரக்கனிடம் தானா அன்பை செலுத்தி வளர்ந்தோம் என்ற எண்ணம் பிராதாபனின் மனதை தாக்க, நெஞ்சம் விம்ம “தப்பு பண்ணது நீ. அவன் எதுக்கு வீட்டை விட்டு போகணும்?” என்ற கேள்வி அவரிடம் இருந்து வர, இருக்கையை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தவன் மேசையில் இருந்த டிஸுவினால் இதழில் இருந்து நில்லாமல் வழிந்த உதிரத்தைத் துடைத்துக் கொண்டே   “நான் எந்த தப்பும் பண்ணல என்றவன் உங்க எல்லாருக்கும் அவன் தானே முக்கியம் சோ என்னை ஒரு மனுஷனா கூட மதிக்கிறது கிடையாது என்று ஆக்ரோஷமாக கத்தியவன் சற்றே தணிந்த குரலில் மோரோவர் எனக்கு அவனை பிடிக்கல” என்க.

 

“வெல்… நான் வீட்டை விட்டுப் போறேன்” என்று ஜெய் ஆனந்த் சொன்னது தான் தாமதம் அழுகையில் விசும்பிக் கொண்டிருந்த சித்ராவோ, “இப்படி பிரிஞ்சு போறதுக்கு தானா உங்க ரெண்டு பேரையும் இவ்வளவு தூரம் வளர்த்தெடுத்தேன்?” என்று வயிற்றில் அடித்துக் கொண்டு மீண்டும் அழ ஆரம்பிக்க, வேகமாக அவரின் அருகில் சென்று அவரை இறுக அணைத்துக் கொண்ட ஜெய் ஆனந்த், “ப்ளீஸ்மா என்னால அழ வேண்டாம்” என்று  மன்றாடும் குரலில் சொல்ல அவனின் நடுங்கிய குரலும் அவனின் இதயத் துடிப்பின் வேகத்தையும் உணர்ந்து கொண்டவர் அழுகையோ தானாக நின்று இருந்தது.

அத்தியாயம் – 13

ஆயிற்று ஜெய் ஆனந்த் சொன்னது போல அவன் வீட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கடந்திருந்தன.

அவன் வீட்டை விட்டு கிளம்ப முதல் காரணமே அவனது மனநிலை யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான்.

அவன் இல்லாத வீட்டில் விபீஷன் தான் நினைத்தது நடந்து விட்டது என்ற திருப்தியில் சந்தோஷமாக இருக்க, அவன் சொல்லி இருக்கா விட்டாலும் தனிமையை நாடி அவனே வீட்டை விட்டு வெளியேறி இருப்பான் என்று பாவம் அவன் அறியவில்லை.

உணவுத் தட்டை கொண்டு வந்து சித்ராவின் அருகில் வைத்தவர் “அண்ணி சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொண்டே அவரின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட, “என் பையனை பார்க்கணும்” என்று சொன்னவரை பாவமாகப் பார்த்த வித்யா “அவன் இப்ப ஹாஸ்பிடல் கிளம்பி இருப்பான் அண்ணி” என்றார்.

“வா ஹாஸ்பிடல் போகலாம்”  என்றவரை அதிர்ந்து பார்த்த வித்யா “அண்ணி…” என்று எதையோ கூற வரும் முன்னரே “நீ போய் கூப்பிட்டா மறுபடி அவன் வந்துடுவானா? என்ற பெரு மூச்சுடன் அறைக்குள் வந்த பிரதாபன் பிடிவாதம் பிடிக்காமல் சாப்பிடு விபீஷன் மேரேஜ் முடியட்டும் அதுக்கு பிறகு கூட்டிட்டு வந்துடலாம்” என்றவர் அவரை சமாதானம் செய்ய….

“விபீஷன்” என்று கூற வந்தவரை இடை மறித்தவர் “அவனை பத்தி நினைச்சு எதுக்காக டென்ஷன் ஆகுற? நம்ம பையனை கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு. அதை நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்னவர் அறியவில்லை ஜெய் ஆனந்த் ஒரு போதும் திரும்பி வரப் போவதில்லை என…

பிரதாபன் கூறிய வார்த்தைகளில் அகம் மகிழ்ந்து போனவர் சாப்பிட ஆரம்பித்தார்.

அவரை சிறு புன்னகையுடன் பார்த்தவர் “வித்யா நீ என்ன சொல்ற?” என்று பிரதாபன் கேட்ட கேள்வியில் எதுவும் புரியாமல் விழித்தவர் “அண்ணா என்னது புரியல” என்று கேட்க…

“நடந்த பிரச்சனை என்னனு உனக்கு தெரியும் என்றவர் குரலை செருமிக் கொண்டே இவன் பண்ணி வச்ச வேலை இந்நேரம் ஊர்குள்ள பரவி இருக்கும் அதுக்காக மட்டும் சொல்லலை. அதே கோயில்லயே வேண்டப்பட்டவங்களுக்கு சொல்லி கல்யாணத்தை மறுபடி நடத்தி வச்சிடலாம்” என்று சொல்ல…

“அண்ணா விபீ…” என்றிழுத்தவரிடம் “வித்யா, நான் அவன் கிட்ட பேசுறேன்” என்று உறுதியான குரல் வந்தது என்னவோ சித்ராவிடம் இருந்து தான்.

 “ஹும் பேசு நான் பேசுனா அவன் பேசுற பேச்சுக்கு இழுத்து அறைய தான் தோணும் என்று சொன்ன பிரதாபன் மதியம் பேசிட்டு சொல்லு சித்ரா அடுத்து ஆக வேண்டிய வேலையை பார்க்கணும்” என்றவர் தளர்ந்த நடையுடன் சென்றார்.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே தனது வீட்டிற்கு வந்த வித்யா, உணவைக் கூட சாப்பிடாமல் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்து இருக்க, கோபமாக அவள் அருகில் வந்தவர் ஓங்கி தலையில் கொட்டினார்.

சும்மாவே கண்ணீர் இதோ வழிந்து விடும் போல அமர்ந்து இருந்தவள் அவர் தலையில் கொட்டவும் அருவி போல கன்னத்தில் வழிய ஆரம்பித்து விட, வித்யாவோ பதறிவிட்டார்.

பின்னே, சாதாரணமாக அவர் கொட்டியதற்காகவா இந்த அழுகை?

அதுவும் எத்தனையோ முறை அவளை கொட்டி இருக்கின்றார் அப்போது எல்லாம் அழாதவளா இப்போது அழுகிறாள்?

“பவ்யா?” என்றழைத்த படி அவளின் அருகில் அமர்ந்தார் வித்யா.

அவளின் விழிகளில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்ததேயன்றி வித்யாவின் பேச்சுக்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தவளை பார்த்து உள்ளூர அச்சம் துளிர்க்க, தன் நடுங்கும் கரங்களால் பவ்யாவின் தோளைத் தொட்டு உழுக்கினார்.

“அம்மா” என்ற கேவலோடு வித்யாவை இறுக அணைத்துக் கொண்டு சொல்லோனா வேதனையில் வெடித்து அழுதாள் பெண்ணவள்.

உள்ளம் பதை பதைக்க “ஏன் டி அழுற சொல்லு டா தங்கம்?” என்று அவளின் கன்னத்தை தாங்கி பிடித்து கேட்க…

அப்போது தான், தான் செய்துக் கொண்டு இருக்கும் வேலையே அவளுக்கு உரைத்தது.

என்னவென்று சொல்வது?

அக்காவின் கணவனை காதலிக்கின்றேன் என்றா சொல்ல முடியும்? அதுவும் தன்னைப் பிடிக்காமல் காரி உமிழும் அவனை பற்றி என்னவென்று சொல்வாள்?

வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! என்னுடைய வலி என்னோடே போகட்டும். என் தமக்கை சந்தோஷமாக வாழ வேண்டும்? அதற்கு தான் ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது என்று எண்ணியவள் அப்படியே பேச்சை மாற்றி இருந்தாள்.

 இறுதி பரீட்சையிக்கு தான் ஒழுங்காக படிக்காமல் சென்று எழுதி விட்டு வந்ததாக கூறி அவள் அழ, என்னவோ ஏதோ என்று பயந்துப் போன வித்யா அவள் இப்படி சொல்லவும் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

அவரின் சிரிப்பை உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்தவள் அமைதியாக இருக்க, வித்யாவோ “இதோ பார்டி இதெல்லாம் ஒரு விஷயமா? பாஸ் ஆகலனா மறுபடி எழுத கூட முடியும் அதுக்காக எதுக்கு உடம்பை வருத்திட்டு இருக்க?” என்றவர் உணவை பிசைந்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்து விட்டார்.

“பாஸ் ஆகிட்டா சென்னைல ஜாப் ஆப்லை பண்ணலாம்னு இருக்கேன் மா”

“என்ன சென்னையா? என அதிர்ந்து போய் கேட்டவர் அவளின் வாடிய முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ முதல்ல நீ பாஸ் ஆகு அதுக்கு பிறகு பார்த்துக்கலாம்” என்று அத்தோடு அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்து இருந்தார்.

 

இங்கு இப்படி இருக்க, மருத்துவமனைக்குச் சென்ற ஜெய் ஆனந்த்திற்கோ அவனது கவனம் எதிலும் லயிக்கவில்லை.

கடந்து போனதை நினையாதே மனமே என்று தனக்குள் உருப் போட்டுக் கொண்டு வேலையில் கவனத்தை செலுத்தத் தொடங்கியவனுக்கு மனதை அழுத்தும் நினைவுகளை நினையாமல் இருக்க முடியவில்லை.

சொல்லாத காதலின் தாக்கம் இப்போது தன் காதலை அவளிடம் கூறி இருக்கலாமோ என்ற எண்ணத்தை அவனுள் விதைத்து இருந்தது. தான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவே அவனுக்குத் தோன்றியது.

அதனாலோ என்னவோ அவனது சிந்தை, செயல் முழுதும் ஓரிடத்தில் நிலையாக இருக்க மறுத்தது.

அவனின் நிலையை அருகில் இருந்து பார்த்துத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துக் கொண்ட நவீன் “பிளீஸ் ஜஸ்ட் 1 வீக் டைம் எடுத்துக்கோ ஆனந்த்” என்று சொல்ல என்ன நினைத்தானோ “என் மென்டல் ஹெல்த் ஸ்டேபிள் ஆக சைக்கார்ட்டிஸ்ட்டை கன்சல் பண்லாம்னு இருக்கேன்” என்று கூறி நவீனின் அதிர்ச்சியை மேலும் கூட்டி இருந்தான் அவன்.

“ஆர் யூ க்ரேஸி? என்று கேட்டவன் டேய் நீ ஸ்டேபலா தான் இருக்க அண்ட் இப்போ கூட ஒன்னும் கேட்டு போகல உன் தியாகிட்ட போய் உன் காதலை சொல்லிடு” என்றவனை அனல் பார்வை பார்த்தவன் “அவ என் தம்பி பொண்டாட்டி நவீன்” என்றான் அழுத்தமாக…

“ தம்பி பொண்டாட்டியா இருந்தால் அப்போ எதுக்காக ஃபீல் பண்ணிட்டு இருக்க?” என்று அவன் கேட்கவும் அவனை அடிபட்ட பார்வை பார்த்தான்.

அவன் கேட்பதும் சரி தானே!

இறுகிய அவன் முகத்தை பார்த்தவன் “நான் தப்பா கேட்கல ஆனந்த். எனக்கு உன்ன பத்தி தெரியும் அண்ட் நீ எதுக்காக பீல் பண்றனு கூட தெரியும் முடிஞ்சு போனதை நினைச்சு எதுக்காக உன்னை வருத்திக்கிற ? என்று கேட்டவன் இழுத்துப் பெரு மூச்சை விட்டுக் கொண்டே ஹியர் லுக் ஆனந்த் இப்போ ஒன்னு மட்டும் சொல்றேன் நீ ஒரு டாக்டர்ங்குறதை மறந்துடாத” என்ற ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகக் கூறியவன் தனது கேபினை நோக்கி சென்றிருந்தான்.

அவனின் இறுதி வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருப்பதை உணர்ந்து கொண்டவன் அக் கணம் முதல்  தன் உணர்வுகளுக்கு கடிவாளமிட்டுக் கொண்டான்.

உடன் பிறந்தவனின் மனைவி அவள்.

இனி அவளை நினைத்துக் கொண்டு நான் இருந்தால் அவ் உறவுக்கு மரியாதை ஏது?

வலித்தது .

உயிரை உடலில் இருந்து உருவி எடுத்தாற் போல வலித்தது.

முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு சத்திர சிகிச்சை அறைக்குள் நுழைந்திருந்தான்.

முகத்தில் தெளிவுடன் உள்ளே வந்தவனை மெச்சுதலாக பார்த்த நவீனின் கையில் இருந்த அனஸ்தீசியா ஏற்றப்பட்ட இஞ்செக்சனை வாங்கியவன் விழிகளை மூடி  சுவற்றைப் பார்த்த படி படுத்து இருந்த கர்ப்பிணியின் முதுகுத் தண்டில் செலுத்தினான்.

மூளை தெளிவாக சிந்திக்க தொடங்கியதால் என்னவோ இம்முறை அவனின் கரங்கள் நடுங்காமல் இருக்க, அதனைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே அப் பெண்ணிற்கு அவனே சத்திர சிகிச்சையை மேற்கொள்ள ஆரம்பித்து இருந்தான்.

******************************

ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் உழன்றுக் கொண்டு இருக்க, காலையிலேயே கழுத்தில் மஞ்சள் கயிற்றுடன் கல்லூரிக்கு வந்தவள் தன் பின்னால் பேசும் பேச்சுக்களில் அறுவறுத்துப் போனாள்.

தன் மனநிலை முற்றாக உணரும் முன்னரே ஒரு திருமணம்.

 

அதற்குள் வீட்டில் வேறு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்.

 இதில் தாலியை கட்டியவன் கூட அதன் பிறகு கண்ணாலே எரித்து விடுவது போல பார்க்க, அவனிடம் கூட என்ன பேசுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்று இருந்தது என்னவோ ஆஹித்யா தான்.

 

தாலி கட்டி விட்டான் என்று அவனை சட்டென மனம் ஏற்க மறுத்தது.

அவனை காதலிக்கின்றாயா என்று கேட்டால் கூட அவளுக்கு விடை தெரியாது பிறகு எங்கனம் அவனை கணவனாக ஏற்பது?

அவனை முற்றாக ஏற்றுக்கொள்ளும் வரை தனக்கான நேரத்தை தரும்படி அவனிடம் கேட்க வேண்டும் என்ற தெளிவாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே முகம் தெளிந்து கல்லூரிக்கு கிளம்பி வந்து இருந்தாள்.

 

ஆனால், இங்கோ தன் திருமணம் பற்றி பின்னால் கிசுகிசுப்பாக பேச, அனைத்தையும் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சென்று விடலாமா? என்று நினைத்தவளுக்கு தன் அன்னையின் முகம் மின்னி மறைய சட்டென அந்த எண்ணத்தை கை விட்டவள் அவளுக்கு நடக்கவிருக்கும் அசம்பாவிதம் தெரியாமலேயே வீட்டை நோக்கி விரைவாகக் கிளம்பி இருந்தாள்.

அத்தியாயம் – 14

களைப்பாக வீட்டுக்கு வந்தவள் இப்போதைக்கு எதனையும் சிந்திக்க திறன் அற்று அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

படுத்த மறு நொடியே தூக்கம் விழிகளை தாக்க,  மெதுவாக விழிகளை மூடியவள் விபீஷனின் உரத்த குரலில் தூக்கி வாரிப் போட எழுந்து அமர்ந்தாள்.

“நிம்மதியா தூங்க கூட முடியிறது இல்ல” என்று சலித்தவாறே விழிகளை கசக்கிக் கொண்டே கட்டிலில் இருந்து எழுந்தவள் “என்னால அவன் சொல்றதுக்காக எல்லாம் மறுபடி கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றவன் வார்த்தைகள் இப்போது தெளிவாக அவள் காதுகளில் விழ, “இவனை” என்று பற்களை கடித்த படி வெளியில் வந்தவள் பிரதாபனின் வீட்டுக்குச் சென்றாள்.

நுழைவாயிலின் உள்ளே நுழையும் போதே, “தியா மா இங்க வாமா உன் புருஷன் கிட்ட என்னனு கேளு” என்று சித்ரா சொல்ல…

‘ போச்சுடா… என்னை பார்த்தாலே எரிக்கிற மாதிரி பாக்குறான் இவன்கிட்ட என்னத்தை பேசுறது என்று விரல் நகத்தை பற்களால் கடித்த படி இவன் என் புருஷன்னு யாராச்சும் சொன்னால் தான் புத்திக்கு உரைக்குது’ என்று மனதில் பேசிக் கொண்டே அவர்களை நெருங்கியவள் அவனை ஏறிட்டு கூட பார்க்க பயந்து போனவளாய் “அத்தை” என்றாள்.

“உனக்கு கோயில்ல வச்சு தாலி கட்டுறான் ஆனால் எல்லாருக்கும் சொல்லி மறுபடி கல்யாணம் பண்ணிக்க சொன்னால் முடியாதுனு சொல்றான்” என்று சித்ரா சொல்ல…

எனக்கு இந்த திருமணமே பிடிக்கவில்லை என்று வாய் விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு…

விழிகள் ஜெய் ஆனந்த்தை தேடியது.

 ‘ ஐயோ மாமாவை தான் சண்டை போட்டு விரட்டி விட்டானே! இப்போ யார் என்னை காப்பாத்த போறதோ?’ என்று மனதில் புலம்பிக் கொண்டே சித்ராவின் அருகில் செய்வது அறியாது கைகளை பிசைந்த படி நின்று இருந்த தன் அன்னையை வெறித்தாள்.

வித்யாவோ பேசு என்பதைப் போல கண்களால் சைகை செய்ய, தன்னையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த விபீஷனிடம் திரும்பி விபீஷன் என்று அவன் பெயரை கூற வந்த நாவை அடக்கியவள் “மாமா, மறுபடி” என்று கூற வந்தவளை சலிப்பாக பார்த்தவன் “முடியாது. வேற பேசணுமா இருந்தால் மட்டும் பேசு” என்றான் அழுத்தமாக…

 

“கோவில்ல பதிவு பண்ணனும் விபீ என்றார்” சித்ரா

“அதை நானே பண்ணிட்டேன்” என்றான் சட்டென…

“நாங்க சொல்றதை கேட்க மாட்டேன்னு ஏன் டா பிடிவாதம் பிடிக்கிற? கஷ்டமா இருக்கு டா” என்றவரை “நீங்களா சொன்னால் கேட்க நான் தயாரா இருக்கேன் ஆனால் இந்த ஐடியாவை கொடுத்தது உங்க மூத்த மகன் ஆச்சே” என்று சொல்ல…

 

என்ன சொல்கின்றான் இவன்? ஜெய் ஆனந்த் சொன்ன ஒரே காரணத்திற்காக தான் தன் பிடியில் நிற்கின்றானா?

அவனின் விதண்டாவாதத்தில் கையை நீட்டி விடுவோமோ என்று அச்சம் கொண்ட சித்ரா “அவன் சொன்னதுக்காக இல்லை உனக்கும் ஆஹித்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்கனவே முடிவு பண்ணி தான் வச்சு இருந்தோம். அதுக்குள்ள நீ அவசரப்படுவனு நான் கனவா கண்டேன்?” என்றவரை “அவன் சொல்ற வரை என் கல்யாணத்தை மறுபடி நடத்தலாம்ன்னு உங்களுக்கு தோணலை தானே மா” என்றவனை என்ன செய்வது என்று அவருக்கே தெரியவில்லை.

 

இவன் புரிந்து பேசுகின்றானா இல்லை புரியாமல் பேசுகின்றானா?

“சொல்றதை கொஞ்சமாச்சும் கேளுடா எனக் விழிகள் சிவந்து போய் நின்று இருந்த ஆஹித்யாவை காட்டி நம்ம வீட்டு பொண்ணு டா நாளைக்கு இவளை தப்பா யாரும் பேசிட கூடாது அது மட்டும் இல்ல பவ்யா நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போற பொண்ணு அதுனால…” என்று கூற வந்தவரிடம் “மத்தவங்களுக்காக எனக்கு யோசிக்க முடியாது” என்றான் குரல் உயர்த்தி…

“அப்போ இந்த வீட்டை விட்டு வெளிய போ” என்ற அழுத்தம் திருத்தமான குரல் வந்தது என்னவோ நுழைவாயிலில் நின்ற படி இவர்களின் உரையாடல்களை பார்த்துக் கொண்டு நின்று இருந்த பிரதாபனிடம் இருந்து தான்.

“என்னங்க” என்றார் சித்ரா.

“சொல்றதை கேட்க முடியலனா எதுக்காக இவன் இந்த வீட்டுல இருக்கணும்?” என்று சொல்ல…

அவ்வளவு தான்.

“அஹான்… உங்க மூத்த பையனை நான் வெளில போக சொன்னதும் இப்போ  என்னை வெளிய அனுப்புறீங்க” என்று கசப்பாகப் புன்னகைத்தான்.

 

“நான் சொல்றதை கேட்டால் நீ இங்க இருக்கலாம்” என்றவரைப் பார்த்தவன் “அதான் சொல்றேனே நீங்களா சொல்றதை நான் கேட்க தயாரா இருக்கேன் அவன் சொல்லி அதை நீங்க என்னை பண்ண சொல்றதை நான் செத்தாலும் பண்ண தயாரா இல்லை” என்றான்.

 

ஆஹித்யாவுக்கோ, இவன் என்ன பைத்தியமா? என்று தான் தோன்றியது.

பிரதாபனுக்கோ, அவனின் பேச்சில் அடித்து கொன்று விடும் ஆத்திரம் எழுந்தது.

அடக்கிக் கொண்டவர்.

“என் கண்ணு முன்னால ஒரு நிமிஷம் கூட நிட்காத இந்த வீட்டை விட்டு கிளம்பு. உன்னால இங்க யாருமே சந்தோஷமா இல்லை. அப்படி எங்க சந்தோஷத்தை கெடுத்திட்டு தான் நீ இங்க இருக்கணும்னா சொல்லு நானே இந்த வீட்டை விட்டு போக தயாரா இருக்கேன்” என்று சொன்ன பிரதாபன் வீட்டின் உள்ளே சென்று விட, போகும் அவரை வெறித்துப் பார்த்தவன் வேகமாக உள்ளே சென்று தன் உடைகளை அடுக்க ஆரம்பித்தான்.

இருவரின் பேச்சிலும் தொனியிலும் அரண்டு போய் நின்றது என்னவோ வீட்டினர் தான்.

அவனுள் கட்டுக்கடகா ஆத்திரம்.

அனைத்தும் திரும்பியது என்னவோ ஜெய் ஆனந்த் மீது தான்.

அண்ணன் வாழ்வை கெடுக்க நினைத்தவனுக்கு இப்போது அனைத்தும் தலைகீழாக மாறி போனது.

அவன் இல்லாமல் தான் மட்டும் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து இருந்தவனுக்கு, அவன் போன பின்பு அனைவரின் முகத்திலும் இருந்த உயிர்ப்பு அற்று போக, அப்படியென்றால்  நான் இவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லையா? என்ற எண்ணம் அவனின் சிந்தையை ஆட்கொண்டது.

அந்த கோபத்தில் இருந்தவனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஜெய் ஆனந்த் ஆரம்பித்த திருமணம் பற்றிய பேச்சை  இப்போது அனைவரும் பேச கோபத்தின் உச்சிக்கே சென்று இருந்தான்.

உடைகளை அடுக்கி எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவன் ஹாலில் அமர்ந்து இருந்த பிரதாபனை அழுத்தமாகப் பார்த்து விட்டு வெளியேறியவனின் கையை பற்றிய சித்ரா “ இவளையும் கையோட கூட்டிட்டு போ” என்று அழுது வீங்கிய முகத்துடன் கையில் உடைப் பையுடன் நின்று இருந்த ஆஹித்யாவை காட்ட…

ஜெய் ஆனந்த்தை பழி வாங்க வேண்டும். அவனைக் கஷ்டப் படுத்த வேண்டும் என்றல்லவா அவளை திருமணம் செய்தான்.

அவள் மேல் காதல் என்றே ஒன்று இல்லாமல் எப்படி தன்னுடன் அழைத்து செல்ல முடியும்? அதுவும் அவன் திருமணம் செய்து கூட்டிக் கொண்டு வந்த அன்றே எப்படியும் தன்னையும் அவளையும் பிரித்து வைக்கத் தான் போகின்றார்கள் என்று ஊகித்து காய் நகர்த்தியவனுக்கு இப்போது அவளை உடன் அழைத்து செல் என்றால்? ஒரு கணம் திகைத்து விழித்தான்.

அவன் பதில் எதுவும் கூறாமல் இருக்கவும் “நீ சொல்றதை கேட்க போறது இல்ல. பரவால்ல ஆனால் இவளோட வாழ்க்கையை கெடுத்துடாத” என்றவரின் கலங்கிய தோற்றம் அவனை அசைத்து பார்த்தது.

எங்கே அவன் கூட்டிச் சென்று விடுவானோ என்று அச்சம் கொண்டவள் இல்லாத கடவுள்களை எல்லாம் இழுத்து வணங்க ஆரம்பித்தவள் வைத்த வேண்டுதல் கடவுளுக்கே கேட்கவில்லை போலும் “வா கிளம்பலாம்” என்ற அவனின் வார்த்தைகள் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல தன் காதுகளில் ஒலித்தது.

‘ஹையோ இவனோடா இனி என் வாழ்க்கை’ என்று நினைத்து பதறிப் போனவள்  திரும்பி தனது அன்னையை முறைத்தாள்.

எங்கே தனது மகளின் வாழ்வு கெட்டு விடுமோ என்று பயந்து போனவர் அவனோடு அவளை அனுப்பும் முடிவை எடுத்து இருக்க, அதனை மறுத்து பேச முயன்றவளை ஒருவாறு பேசி சமாதானம் செய்தவர் இப்போதைய அவளின் மருண்ட பார்வையில் துணுக்குற்றவர் விபீஷன் அருகில் வந்து “ என் பொண்ணை கவனமா பார்த்துக்கோ விபீ” என்றார்.

அதற்கு “ம்ம்” என்றானே தவிர வேறேதும் அவன் பேச முயலவில்லை என்பதை விட எதுவும் கூற விரும்பவில்லை என்பது தான் நிஜம்.

தனது பைக்கில் ஏறிக் கொண்டே கடைசியாக வீட்டைப் பார்த்தவன் பார்வை சித்ராவின் மீது ஏக்கமாக படிய, அவனின் பார்வையில் உடைந்து சத்தமாக அழ ஆரம்பித்தவரை  “சித்ரா உள்ள வா” என்ற பிரதாபனின் குரல் ஒலிக்க, சேலை தலைப்பால் வாயை மூடி  அழுகையை அடக்கிக் கொண்டு உள்ளே ஓடி இருந்தார்.

 

தான் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது தன் தந்தைக்கு வலிக்கவில்லையா?

விரக்தி புன்னகை தோன்ற, மனதில் ஏதோ ஒன்றை இழந்த உணர்வு.

அவனை வெளியே போ என்று சொல்லி விட்டார் தான். என்ன இருந்தாலும் அவனும் மகன் தானே வெளியில் உணர்ச்சிகளை காட்டாமல் இருந்தவர் அவன் வெளியில் சென்றதும் அவரின் கன்னங்களை கண்ணீர் நனைத்ததை அவன் அறிய வாய்ப்பில்லையே!

“ஏறு” என்றவன் ஆஹித்யாவை பார்க்க…

உடலும் உள்ளமும் ஒருசேர பதற, அவன் பின்னே ஏறி அமர்ந்தவள் இனிமேல் தான் தன் விதியே மொத்தமாக தடம் புரள போகின்றது என்று அறியாமலேயே தன் அன்னையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு அவனோடு கிளம்பி இருந்தாள்.

அத்தியாயம் – 15

பைக்கில் அவன் பின்னால் அமர்ந்திருந்தவளுக்கோ, இன்னுமே நிலை கொள்ள முடியவில்லை.

எந்த நம்பிக்கையில் என்னை இவனோடு அனுப்பி வைத்தனர்?

முழு நேரமும் விறைப்பாக சுற்றும் இவன் தான் என்னிடம் சிரித்து பேசி கவிதை உரைத்தானா? என்று எண்ணும் போதே தலையோ விண் விண்ணென்று வலிக்க ஆரம்பித்து விட்டது.

இவன் என் கணவன் என்று நித்தமும் மனதில் பதிய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் சிந்தித்து கொண்டவள் அறியவில்லை அவளால் மறக்க முடியாத அளவுக்கு அவள் மனதில் ஆழமாக பதியப் போகின்றான் என…

நெற்றியை அழுத்தி விட்ட படி அமைதியாக வந்தவள் அவனது குரலில் தான் சுயத்திற்கு வந்திருந்தாள்.

சுற்றிலும் விழிகளை சுழல விட்டாள்.

அழகாகவும் செழிப்பாகவும் வளர்ந்து இருந்த சோளக் காடு.

அதற்கு நடுவில் ஓர் அழகான மரத்தாலான வீடு.

அவள் இருந்த மனநிலையில் அந்த சூழல் சற்றே இதத்தை அளிப்பது போல இருந்தது.

வீட்டின் அழகைப் பார்த்துக் கொண்டே “யாரோட வீடு?” என்று தன்னையே அறியாமல் அந்த கேள்வியை அவனிடம் கேட்டு இருந்தாள்.

அவளின் கேள்வியில் முன்னே சென்றவன் நடை தடைப் பட, சட்டென “என் வீடு தான்” என்றான்.

அவனது வீடா? இது எப்படி சாத்தியம்? என்று அவள் மனதில் கேட்டுக் கொண்டது அவளின் விழிகளில் தெரிந்த வியப்பில் புரிந்துக் கொண்டவனாய் “ பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் படிச்சு இருக்கேன் அதாச்சும் தெரியுமா?” என்று கேட்க, அவளோ ‘ஆத்தி இவன் படிப்ஸ் ஆஹ் அப்புறம் எதுக்கு சைக்கோ போல நடந்துக்குறான்’ என்று நினைத்துக் கொண்டே அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.

இதழ் குவித்து ஊதிக் கொண்டே “படிக்கும் போதே எனக்கு ஸ்காலர்ஷிப்ல கிடைச்ச பணத்தை எடுத்து எனக்கு பிடிச்ச போல வீடு கட்டிகிட்டேன்” என்றான்.

அவன் அமைதியாக தனக்கு பதில் கூறுவதை தான் இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவள் “அத்தை மாமாவுக்கு தெரியுமா?” என்று அவள் கேட்க…

அந்த இதமான சூழலில் அவன் மனம் சமன் பட்டதால் என்னவோ அமைதியாக பேசிக் கொண்டு இருந்தவன் இப்போது அவள் கேட்ட கேள்வியில் அனைத்தும் ஞாபகம் வந்தவனாய் முறைத்து விட்டு உள்ளே செல்ல…

அவனின் முறைப்பிலேயே அவர்களுக்கு சொல்லாமலா இருந்திருப்பான் என்ற எண்ணம் தோன்ற ‘ஹையோ வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறிடுச்சு. அடக்கிவாசி ஆஹி’ என்று மனதில் புலம்பிக் கொண்டே அமைதியாக அவன் பின்னால் உள்ளே சென்று இருந்தாள்.

மரத்தால் வேயப்பட்ட அழகான இருதட்டு வீடு.

கீழே இரண்டு அறையும் மேலே பால்கனியுடன் கூடிய ஒரு அறையும் இருந்தது.

“மேல என் ரூம். சோ நீ கீழ இருக்க இந்த ரூம்ல எதாச்சும் ஒன்னை யூஸ் பண்ணிக்கோ” என்ற விபீஷனின் குரலில் “ம்ம்” என்ற படி கீழே இருக்கும் ஒரு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அவனோடு வாழ்க்கையை ஆரம்பிக்க தனக்கு இன்னும் சிறிது காலம் வேண்டும் என்று அவனிடம் எப்படி கேட்பது என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு வந்தவள் அவனே வேறொரு அறையில் தங்க சொல்லவும் முகம் மலர்ந்து விகர்சித்தது.

முதல் முறை அவனை பற்றிய நல்லெண்ணம் மனதில் முலையிட்டது.

அறையின் உள்ளே வந்தவள் அங்கு எங்கும் நிறைந்து இருந்த பிரம்மாண்டத்தைப் பார்த்து சிலையாக நின்றாள்.

‘பரவால்ல ரசனை கூட இருக்கு’ என்று சொல்லிக் கொண்டே தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள குளியலறையைத் தேடினாள்.

“ஐயோ!” என்று சொல்லிக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தவள் பார்த்தது என்னவோ, போன வேகத்தில் மாடிப் படிகளில் இறங்கி வந்த விபீஷனைத் தான்.

தன்னையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை பார்த்தவன் “என்ன வேணும்?” என்று கேட்டான்.

“குளிக்கணும்” என்றாள் வேறெங்கோ பார்த்துக் கொண்டே…

“என் கூட வா” என்றவன் வெளியில் செல்ல…

அவனை பின் தொடர்ந்து சென்றவள் அவன் கை காட்டிய திசையை பார்த்தவளுக்கு விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்துக் கொண்டன.

“இங்க யாரும் வர மாட்டாங்க சோ நீ அங்க குளிக்கலாம் என்றவன் நான் சமைக்க ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டே பைக்கில் ஏறி கிளம்பி இருந்தான்.

போகும் அவனை பெரு மூச்சுடன் பார்த்தவள் தன் அறைக்குச் சென்று உடைகளை எடுத்துக் கொண்டு நேரே கிணத்தடிக்கு வந்தாள்.

கிணற்றின் அருகே இருந்த திட்டில் உடையை வைத்து விட்டு மயான அமைதியாக இருந்த கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தாள்.

ஆழமான கிணறு போலும்.

பார்க்கவே தலை சுற்றியது.

“அவனை போலவே பயங்கரமா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே பயத்தில் பின்னோக்கி வந்தவள் மீண்டும் எட்டி பார்த்தாள்.

“வேற வழியே இல்ல. உன் விதி இங்க தான் போல” என்று சொல்லிக் கொண்டே நீரும் சற்று குறைவாக அடி ஆழத்தில் இருக்க, சற்று சிரமப்பட்டு நீரை அள்ளி எடுத்து அருகில் உள்ள தொட்டியில் நிறைத்தவள் சுற்றும் முற்றும் பார்த்தவள் குளிக்க ஏதுவாக ஓர் உடையை அணிந்துக் கொண்டு அவன் வரும் முன்னரே வேகமாக குளிக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் குளித்து விட்டு ஆடைகளை மாற்றிக் கொண்டே வீட்டின் உள் வந்தவளுக்கு பசியில் வயிறு கிள்ள, “வில்லங்கம் போய் ஒன் ஹவர் ஆச்சு. இன்னும் காணலையே” என்று சொல்லிக் கொண்டே ஹாலோடு ஒட்டிய சமையலறைக்குள் சென்று பார்த்தாள்.

அதுவோ துடைத்து வைத்தது போல சுத்தமாக இருக்க, “ஒரு ஃப்ரிட்ஜ் கூடவா இல்லை. சுத்தம்…” என்று சலித்த படி சமையலறை கட்டின் கீழே குனிந்து பார்த்தவளுக்கோ தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

“ஆத்தி… இவ்வளவு பாட்டில்ஸ் வச்சு இருக்கானே! சரியான குடி காரன்” என்று திட்டியவள் எழுந்து வந்து மணியைப் பார்த்தாள்.

மணியோ மாலை ஐந்தைக் கடந்து இருக்க, ‘இவன் வர்றதுகுள்ள பசில செத்துடுவேன் போல’ என்று எண்ணிக் கொண்டே வெளியில் வந்தவள் எதாவது கிடைக்குமா என்று பார்த்த மாத்திரத்திலேயே “ஆஹா.. இவ்வளவு சோளத்தை வச்சிட்டு நான் என்ன கிடைக்குமோனு யோசிச்சி இருக்கேன்” என்று தலையில் தட்டிக் கொண்டவள் அக் காட்டிற்குள் இறங்கி  சோளக்கருதுகளை சேகரித்தவள் சற்று நேரத்திலேயே அதனை சுத்தப் படுத்தி விட்டு தண்ணீரில் போட்டு ஸ்டவ்வில் வைத்து விட்டு அலைபேசியை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

நீண்ட நேரம் அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கோ, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது ஏதோ போலிருக்க, நுழைவாயிலை பார்த்தாள் இன்னும் அவன் வந்தபாடு தான் இல்லை.

ஒரு பெரு மூச்சுடன் திரும்பி மீண்டும் சமையலறைக்குள் செல்லப் போனவள் நடையோ தடை பட, அவளின் துள்ளல் மனதோ ‘மாடில அப்படி என்ன தான் இருக்குன்னு போய் பார்த்திட்டு வா’ என்று சொல்ல…

தன் மனம் கூறிய விடயத்தில் அரண்டு போனவள் “சாத்தான் வந்துடுச்சுனா?” என்று அவளே தனக்கு தானே கேட்டுக் கொள்ள, ‘வந்தா பார்த்துக்கலாம் போ… போய் என்ன தான் இருக்குனு பாரு’ என அவள் மனம் வாதிட “ஓகே ஓகே போறேன்” என்று சொன்னவள் வேகமாக சமையலறைக்குள் சென்று ஸ்டவ்வை ஆப் செய்து விட்டு அவனது அறையை நோக்கி மேலேறி சென்று இருந்தாள்.

அங்கு சென்றதால் அவளின் உயிர்ப்பே மொத்தமாக தொலையப் போகின்றது எனத் தெரிந்து இருந்தால் சென்றிருக்க மாட்டாளோ என்னவோ!

விதியின் சதியை யாரால் மாற்ற முடியும்?

அவனது அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவளுக்கு ஏதோ ஆடம்பர அறைக்குள் வந்ததைப் போல தான் இருந்தது.

அறையெங்கினும் நேர்த்தியாக இருந்தது.

அவன் இல்லாத போது யார் இந்த வீட்டை பராமரிப்பது என்ற கேள்வி அவளுள்…

அறையின் மூலையில் அடுக்கடுக்காக புத்தகங்களை அடுக்கி வைத்து இருந்தான்.

அதன் அருகில் சென்று ஒவ்வொன்றையும் திறந்து வாசித்தாள்.

மனமோ சற்று அமைதியடைந்ததைப் போல இருந்தது.

“அழகா இருக்கே ஹேன்ட் ரைட்டிங்” என்று சொல்லிக் கொண்டே புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்து விட்டு அருகில் இருந்த அறையை புருவம் சுருக்கி பார்த்தவள் அதைத் திறந்து பார்த்தாள்.

அதனைத் திறந்து பார்த்தவளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

வேறு என்னவாக இருக்கும்? குளியலறையைப் பார்த்து தான்.

ஆக, இவன் அறையில் குளியலறையை வைத்துக் கொண்டு தான் என்னைக் கீழே குளிக்க சொல்லியிருக்கிறானா?

என்ன மனிதன் இவன்?

அவனின் அறை நேர்த்தியும் வந்தவுடன் அவளை தனி அறையில் தங்கிவிட சொன்னது எல்லாம் வைத்து அவனைப் பற்றி ஓர் நல்லெண்ணத்தை உருவாக்கி இருந்தவளுக்கு இப்போது அனைத்தும் சுக்குநூறாக போனது.

வீட்டிற்குள் குளியலறையை வைத்துக் கொண்டு என்னை வெளியில் குளிக்க வைத்து இருக்கின்றானே என்று நினைக்கும் போதே ஆத்திரமாக வந்தது.

பல்லைக் கடித்து தன்னை சமன் செய்தவள்  கோபமாக அறையை விட்டு வெளியேறும் கணம், முழு போதையில் தள்ளாடிய படி அறைக்கு வந்தவனுக்கு அவளைக் கண்டதும் கோபம் ஏறியது.

“ஹே… உ.. உ.. உன்ன யார்டி என் ரூம்குள்ள வர சொன்னது?” என்று நா குழர சொன்னவன் கண நேரத்தில் அவளைப் பக்கவாட்டு சுவற்றில் சரித்து கழுத்தை பற்றியே விட்டான்.

அவளுக்கோ அச்சத்தில் உடலோ நடுங்க ஆரம்பித்து விட, நெஞ்சம் பதற “வலிக்குது விபீ… என்… என்னை விடுங்க” என்றவள் அவன் பிடியை தளர்த்த போராடினாள்.

அவனா விடுவான்? அவனோ முழு போதையில் “தப்பு பண்ணிட்ட ஆ…ஹித்யா” என்றான்.

“சாரி இனிமேல் வர மாட்டேன். பிளீஸ் என்னை விடுங்க விபீஷன்” என்றாள் மூச்சு திணற…

சட்டென அவனது அறைக்குள் இருந்து அவளது அலைபேசி சிணுங்க, அவளின் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன் தனது அலைபேசியோ என போதையில் சுற்றம் உணராமல் தன் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து ஆராய்ந்தான்.

அவனின் கவனம் தன்னிடம் இல்லையென்று உணர்ந்தவள் நொடியும் தாமதிக்காமல் இருமிக் கொண்டே அவனது அறைக்குள் ஓடியவள் புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த மேசையில் மேலிருந்த தனது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

ஜெய் ஆனந்த் தான் அழைத்துக் கொண்டு இருந்தான்.

“மாமா” என்று இதழ்கள் உச்சரிக்க விம்மி வெடித்து அழுதுக் கொண்டே வெளியில் ஓட முயன்றவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் “யார் டி ஃபோ… ஃபோன்ல?” என்றான் குழரலாக…

அவளுக்கோ அவன் கையை பிடித்ததும் மொத்தமாக நெஞ்சில் நீர் வற்றியே போனது.

“அம்.. அம்மா தான் நான் பேசிட்டு வரேன்” என்றவள் மறு கையில் இருந்த அலைபேசியை மறைக்க முயல….

“முடியாது. இப்…இப்போ இங்க வச்சு பேசிட்டு போ” என்றானே பார்க்கலாம்.

அவனோ முழு போதையில் ..

அவளோ மெல்லிய பெண்ணவள்.

அவனின் பலத்தின் முன் அவளால் போராட முடியாது என்ற நிதர்சனம் தெள்ளத் தெளிவாக புரிந்துப் போக,  ‘மாமா… மறுபடி எடுத்துறாதீங்க’ என்று மனதுக்குள் பேசிக் கொண்டே கரங்கள் நடுங்க “கால் கட் ஆகிருச்சு இப்போ நானே அம்மாகிட்ட எடுத்து பேசுறேன்” என்றவள் வேகமாக தன் அன்னைக்கு எண்களை அழுத்திக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் ஜெய் ஆனந்த்திடம் இருந்து அழைப்பு வந்து விட, எதிரே நின்றவனின் வெறித்த பார்வையில் உடலில் வியர்வை ஆறாக வழிந்தது.

“அம்மாவே மறுபடி எடுத்துட்டாங்க” என குரல் நடுங்க சொன்னவளின் அலைபேசியின் திரையை எட்டி பார்த்தவன் ‘ஜெய் மாமா’ என்று அந்த போதையில் தெளிவாக வாசித்தான்.

ஜெய் ஆனந்த் என்றால் சும்மாவே சலங்கை கட்டி விட்டது போல ஆடுவான்.

இப்போது அவனே அவளுக்கு எடுத்து இருக்க, அவளின் கால்களோ நகர மறுத்து நடுங்க ஆரம்பித்து விட்டன.

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் திகைத்து போய் நிற்க, அவளின் அலைப்பேசியை பறித்து தரையில் விசிறி அடித்தான்.

அத்தியாயம் – 16

அழைப்பை எடுத்துக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தின் அலைபேசியில் அழைப்பு துண்டிக்கப்பட்டதன் அடையாளமாக ‘கீக்’ என்ற ஒலியின் சத்தம் தொடர்ச்சியாக கேட்டது.

என்னவோ இதயம் படு வேகமாக துடித்தது.

அவளுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விட்டதோ என்ற எண்ணம் அவனை  ஆட்கொள்ள, மீண்டும் அவளுக்கு அழைப்பை எடுத்தவனுக்கு அலைபேசியோ அணைத்து வைக்கப் பட்டு இருக்கின்றது என தானியக்கியின் குரல் ஒலிக்க, அவனது முகமோ வெளிறிப் போனது.

 

முகத்தில் குழப்பத்துடன் வெளியில் கிளம்ப தயாரானவனை  தடுத்து நிறுத்திய நவீன் “இப்போ எங்க போற?” என்று அவன் கேட்க…

“என்னவோ தியாவுக்கு எதுவும் நடக்க போற போல பீல் ஆகுது டா” என்றவனை புருவங்கள் உயர பார்த்தவன் “வீட்ல தானே இருப்பா. அப்புறம் என்ன ஆக போகுது?”

“ஐ ஜஸ்ட் வான்ட் டு கோ” என்றபடி முன்னேறி நடந்தவனை “உன்னை வீட்டை விட்டு அனுப்பி இருக்கான் உன் தம்பி. அவன் பொண்டாட்டிய நீ என்னனு சொல்லி பார்க்க போற? என்ற நவீனின் கேள்வியில் நிதர்சனம் நெற்றிப் பொட்டில் அறைந்த போல அப்போது தான் உரைத்தது.

உண்மை தானே! என்னவென்று சொல்வான்?

விழிகளை மூடித் திறந்தவன் நடைத் தடைப் பட, செய்வது அறியாது தோய்ந்துப் போய் இருக்கையில் அமர்ந்தான்.

அவனின் தோளில் கையை வைத்த நவீன் “ கூல் டா. வீட்ல தான் இருப்பா என்று சொன்னவன் நினைவு வந்தவனாய் வேணும்னா தியாவோட சிஸ் பவ்யாவுக்கு கால் ட்ரை பண்ணி பாரு” என்க…

“வேண்டாம் டா. ஐ ஹேவ் டு மூவ் ஒன். நான் இந்த பீல்ல இருந்து வெளில வரணும் சோ டுடே நைட் டியூட்டி பார்க்குறேன்”

 இத்தனைக்கும் வீட்டில் நடந்தவைகளை  அறியாதவன், ஒருவேளை தெரிந்து இருந்தால் அவளைக் காப்பாற்றி இருப்பானோ என்னவோ?

இன்னும் குழப்பம் தெளியா அவனின் முகத்தை பார்த்தவன் “அம் ரியலி சாரி டா. நான் உன்ன ஹர்ட் பண்ண அப்படி சொல்லல. மறுபடி நீ போனால் விபீஷன் என்ன வேணாலும் பேசுவான்” என்றவனிடம் “எனக்கு புரியுது நவீன்” என்றவன் இருக்கையை விட்டெழுந்து தனது கேபினுக்குள் நுழைந்துக் கொண்டான்.

அவனின் ஆழ் மனதின் எண்ணம் சரி என்பதைப் போல இங்கோ நிலமை தலைக் கீழாக மாறிக் கொண்டு இருந்தது.

முதல் முதல் தன் அன்னை அவளுக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த அலைபேசி.

இப்போது அதுவே இல்லை என்று நினைக்கும் போது இயலாமையுடன் கூடிய ஆத்திரம் தான் வந்தது.

தனது சிதறிக் கிடந்த அலைபேசியை வெறித்துக் கொண்டே “எதுக்காக என் போனை உடைச்சீங்க?” என்று நிதானமாகக்  கேட்டாள்.

“நீ எதுக்காக பொய் சொன்ன?” என்று அவன் பதிலுக்கு கேட்க…

“எப்ப பாரு மாமாவை ஏதோ விரோதிய பார்க்குற போல நடத்துறீங்க. அப்போ உங்களை போல மிருகத்துகிட்ட எதுக்காக நான் உண்மையை சொல்லணும்?

“ஓஹோ”  என்றவன் பார்வை அவள் மார்பில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றில் படிந்து மீள, ஏதோ கூற வந்தவன் நிற்க முடியாமல் தள்ளாடிய படி அவள் மீதே சரிய, அவனது மொத்த உடலும் தன் மீது சரியவும் பதறிப் போனவள் அவனைப் பிடித்து தள்ளி விட முயன்றாள்.

ஆம், முயற்சி மாத்திரமே செய்ய முடிந்தது ஆனால் திடகாத்திரமான அவனின் உடலை கொஞ்சமும் அவளால் அசைக்க முடியாது போனது மட்டும் அல்லாமல் அவன் மேலடித்த மதுவின் நெடியில் குமட்டிக் கொண்டு வர “ச்ச்சீசீ அருவருப்பா இருக்கு” என்ற படி அவனை விலக்கி நிறுத்த முயன்று தோற்றுப் போனவள் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்.

அவன் போதையில் இருந்தாலும் அவனது ஐம்புலன்களும் விழித்துக் கொண்டல்லவா இருந்தன.

அவளின் அருவருப்பு என்ற வார்த்தை காதில் ஒலிக்க, “இதே ஜெய் ஆனந்த் குடிச்சிட்டு உன்மேல விழுந்தா கட்டி பிடிச்சிட்டு இருந்துருப்பல” என்றான்.

அவனின் நாராசம் மிகுந்த பேச்சு  எரிச்சலை கொடுக்க, “ஜெய் மாமா குடிக்க மாட்டார். ஹி இஸ் அ பியோர் சோல்” என்றாள் கர்வமாக…

அவ் வார்த்தைகளை சொல்லும் போதே அவளின் உடல் மொழியும் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றை அவள் உணர்ந்தாளோ இல்லையோ அவளை பார்த்துக் கொண்டு நின்று இருந்தவனுக்கு சட்டென புரிந்து போக ஆத்திரமோ தலைக்கு ஏறியது.

“அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற… ஒரு…ஒருவேளை அவன் கூட படுத்….” என்றவனின் வார்த்தைகள் முடிக்கும் முன்னரே அவனை ஓங்கி அறைந்து இருந்தாள் பெண்ணவள்.

இதனை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை அவன்.

“என்ன அறையிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா?” என்றவன் அவளின் இடையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தான்.

அவனது கை தன் இடையில் தவழ்வதை உணர்ந்து பரிதவித்து போனவள் அவனிடம் இருந்து திமிறி விலகப் போராட, “உன்ன சும்மா விட்டு வச்சா தானே. நானும் சின்ன பொண்ணுன்னு பார்த்தால் ஓவரா தான் போற” என்று சொல்லிக் கொண்டே வலுக்கட்டாயமாக அவளின் கன்னங்களை அழுத்தமாக தாங்கிப் பிடித்தான்.

அவளுக்கோ, விழிகளில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்தது கன்னத்தை நனைத்தது.

அவளது கன்னங்களை தாங்கி கொண்டவனின் மனமோ, தான் மாபெரும் தவறு செய்வதாக உறுத்தியது.

என்ன தான் இருந்தாலும் தன் அண்ணன் காதலிக்கும் பெண்.

அவள் அவனைக் காதலிக்கா விட்டாலும் மனதளவில் அவளின் எண்ணங்களில் வாழும் ஜெய் ஆனந்தின் முகமோ சட்டென நினைவில் வந்து போனது.

அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

அவளின் இதழ்களில் முத்தம் பதிக்க கன்னங்களை பற்றி இருந்தவன் கரங்கள் நடுங்கின.

விழிகளை மூடித் திறந்து அவளிடம் இருந்து விலகப் போக, அவனது மனநிலை அறியாத பெண்ணவளோ எங்கே தன்னை ஆட்கொண்டு விடுவானோ என அஞ்சியவளாய் “எ..என..எனக்கு டைம் வேணும் விபீஷன்”  என்று தட்டுத் தடுமாறி அவள் வார்த்தைகளைக் கோர்த்து சொல்ல…

“என் கண் முன்னால நிற்காத போடி” என்று கர்ஜித்தான்.

அவன் உதிர்த்த வார்த்தைகள் தன் செவிகளில் தேன் போல பாய, விட்டால் போதுமென விலகியவளின் துப்பட்டா கதவின் இடுக்கில் மாட்டியதன் விளைவாக கழண்டு கீழே விழ…

பதறிப் போய் திரும்பியவள் அவனை அறைய கை ஓங்கியே விட்டாள்.

ஆனால், இம்முறை அவளை அறைய விடாமல் அவளின் கையைப் பற்றி பிடித்துக் கொண்டவன் அவளின் கன்னத்தை திருப்பி கதவின் இடுக்கில் சிக்கி இருந்த அவளது துப்பட்டாவை பார்க்கச் செய்தான்.

 விழிகள் விரிய குற்ற உணர்ச்சியில் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவனின் பார்வையோ அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றில் படிந்திருக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “சாரி” என்ற அடுத்த கணம் அவளது   இதழ்களை வன்மையாக சிறை செய்து இருந்தான்.

தவறு என்று விலகி சென்றவன் தான் கட்டிய தாலி அவளின் கழுத்தில் உறவாடிக் கொண்டு இருக்கும் போது நான் எதற்காக அதுவும் அவனுக்காக பார்க்க வேண்டும்? என்று சிந்தித்தவன் போதையில் மொத்தமாக தன் நிதானத்தை இழந்து இருந்தான்.

அவனது மார்பில் தன் கையை வைத்து முடிந்தமட்டில் அவனை விலக்க போராடி தோற்றவள் விழிகளில் கண்ணீர் வழிய, அதைக் கூட பொருட்படுத்தாமல் மூச்சு முட்டும் அளவுக்கு வன்மையாகவும் அழுத்தமாகவும் இதழை பாரபட்சம் இன்றி சுவைக்க, அவள் தான் உயிருடன் மரித்து இருந்தாள்.

தன் மனநிலை அறிந்தே இவ்வாறு நடந்து கொள்பவன் மேல் வெறுப்பு மேலோங்கியது.

அடக்கிக் கொண்டாள்.

அவளின் இதழ்களில் ஆழ்ந்து போனவன் முதன் முறை ஒரு பெண்ணின் இதழின் மென்மையை அறிந்து சித்தம் திணறிப் போனான்.

ஒரு கட்டத்தில் அவளின் உடையில் கரத்தை வைத்ததும் உடலில் நடுக்கம் பரவ,  அவனது கரத்தை முன்னேற விடாமல் பற்றிப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தடுத்ததும்  அவளின் இதழை விடுவித்து விட்டு  அவள் விழிகளைப் பார்த்தான்.

விழிகள் சிவந்து, கண்ணீர் வழிய தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள் இதழ்களில் வழிந்த உதிரத்தை துடைத்து விட்டவன் “என்னடி அப்படி பார்க்குற? நான் உன் புருஷன் தானே” என்று கேட்டவனை பார்த்து “இதோட நிறுத்துங்க பிளீஸ் என்னால முடியாது” என்று காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.

“சாரி, எனக்கு இப்போ நீ வேணும்” என்றானே பார்க்கலாம்.

தன் கரங்கள் இரண்டையும் கூப்பி “இப்போ வேண்டாம் விபீஷன்” என்றாள் மன்றாடும் குரலில்…

அவன் கேட்கும் மனநிலையில் இல்லை.

அவளை நெருங்கினான்.

அவளோ, பயத்தில் பின்னோக்கி நகர்ந்தாள்.

“வேண்… வேண்டாம் விபீ..” என்றாள் குரல் உடைய…

“சோ சேட்…” என்றவன் அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொள்ள திமிறியவளை கணக்கில் கொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்து கதவை காலால் உதைத்து சாற்றினான்.

இயலாமையில் விம்மி வெடித்து அழுதவள் மானசீகமாக கடவுளை வணங்கினாள்.

உள்ளே வந்த வேகத்தில் அவளுடன் கட்டிலில் சரிந்தவன்  பார்வை மொத்தமும் மஞ்சள் கயிற்றில் படிந்து பின் அவளின் முகத்தில் படிந்தது.

அவளுக்கோ அவனின் நெருக்கம் கசந்து போனது.

கணவனாகத் தெரிய வேண்டியவன் கயவன் போல தெரிந்தான்.

தன் ஒட்டு மொத்த பலத்தை திரட்டி எழ போனவளை, எழ விடாமல் பற்றிப் பிடித்தவன் “என்ன நான் தொட்டா பிடிக்கலையா? இல்ல உன் ஜெய் மாமாமாமா….” வந்து தொடனுமா?” என்று அவன் கேட்கும் போதே உடல் கூசிப் போனவள் அவனிடம் போராடுவதை நிறுத்திக் கொண்டாள் பெண்ணவள்.

 

தன் போராட்டமும் கெஞ்சல்களும் அவனிடம் எடுபட போவதில்லை என தெள்ளத் தெளிவாகப் புரிந்துப் போக, இனியும் போராடி அவன் பேசும் முறைக் கேடான வார்த்தைகளை கேட்பதை விட இந்த கொடூரனிடம் தன் கற்பை இழப்பதே மேல் என்று எண்ணிக் கொண்டவள் அவனின் தொடுகையில் மரக்கட்டை போல கிடந்தாள்.

தன் விதியை எண்ணி  கண்ணீர் வடித்தவள் அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் அருவருத்துப் போனாள்.

அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே அவளுள் மொத்தமாக சரணடைந்தவன் உயிர் போகும் வலியில் விலகத் துடித்தவளின் இதழ்களை தன் இதழ்களால் முற்றுகையிட்டவன்   ஆட்கொண்டுவிட்டே விலகி படுத்தான்.

அவனின் வன்மை மென்மையான பெண்மையை கசக்கியிருந்தது.

இத்தனைக்கும் மனைவியாக இருந்தாலுமே அவளின் சம்மதம் இன்றி  நெருங்கக் கூடாது என்பதை அவனின் சிந்தை மொத்தமாக மறக்கடித்து இருந்தது.

அத்தியாயம் – 17

விடியற்காலையில் விழிப்புத் தட்ட திறக்க மறுத்த விழிகளை கடினப் பட்டு திறந்தாள்.

இரவிரவாக அழுததன் பயனாக முகமோ வீங்கி சிவந்திருந்தது.

பக்கவாட்டாகத் திரும்பி பார்த்தாள்.

மல்லாக்கப் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தான் அவன்.

பிடிக்காத தாம்பத்யம். அதுவும் இன்னும் மனதளவில் கணவனாக ஏற்காத ஒருவனிடம் தன் கற்பை இழந்து விட்டாள்.

இதழ்கடையோர விரக்தி புன்னகை அவளிடம்…

சத்தம் எழுப்பாது போர்வையை விலக்கி தன்னைக் குனிந்து பார்த்தாள்.

அவனது பற்தடங்களும் அழுத்தமான பிடியும் மெல்லிய மேனியவளை  தோலில் ஆங்காங்கே கன்றிச் சிவந்த காயங்கள் உண்டாக்கி இருந்தன.

விம்மி வெடித்து அழ வேண்டும் போலிருந்தது.

அடக்கிக் கொண்டாள்.

மெதுவாக எழுந்து கீழே கிடந்த தன் உடையை எடுத்து மேனியில் சுற்றிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து இருந்தாள்.

 

ஷவரை திறந்து விட்டவள் மேனியில் நீர்த் திவழைகள் பட்டுத் தெறிக்க, அவளுக்கோ மேனியில் அவனால் உண்டான காயங்கள் எரிய ஆரம்பித்தது விட, பல்லைக் கடித்து தொண்டை வரை வந்த அழுகையை கட்டுப் படுத்திக் கொண்ட பெண்ணவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வெளியில் வந்தாள்.

இன்னும் அவன் எழவில்லை என்று தெரிந்தது.

மெதுவாகப் படிகளில் கீழிறங்கி தனது அறைக்குச் சென்றவள் கதவைத் தாழிட்டு விட்டு அதில் சாய்ந்து நின்றவள் அழுத்தம் தாழாது வெடித்து அழுதாள்.

 தன் கற்பு போய் விட்டதென இன்னமும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

அதுவும் அவன் பேசிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்தவளுக்கு அவனைக் கொல்லும் ஆத்திரம் எழுந்தது.

இங்கிருந்து சென்று விடு என்று மனம் சொல்ல, தனது அன்னையின் முகம் மனக் கண்ணில் தோன்ற, தன் நிலையை அரவே வெறுத்தவள் மெதுவாக நகர்ந்து ஓர் உடையை எடுத்து அணிந்தவள் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

இங்கோ, தூக்கத்தில் இருந்து விழித்தவனுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக நேற்று நடந்தவைகள் யாவும் நினைவுக்கு வர, தூக்கி வாரிப் போட எழுந்து அமர்ந்தவன் சட்டென அருகில் பார்த்தான்.

அவள் இல்லை ஆனால் அவனால் கசங்கிய அவளின் பெண்மையின் சுவடுகள் போர்வையில் இருக்க, குற்ற உணர்வில் தன் தலையை பிடித்துக் கொண்டு எழுந்து உடையை போட்டுக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான்.

வீடே நிசப்தமாக இருந்தது.

நேரே ஹாலுக்கு வந்தவன் அவளின் அறையின் முன் நின்றுக் கொண்டு கதவை தட்ட கையை ஓங்கிய கணம், என்ன நினைத்தானோ அப்படியே திரும்பி வந்தவன் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டான்.

போதையில் என்ன செய்து தொலைத்து இருக்கின்றேன்?

நினைக்கவே தன் மீதே கட்டுக்குள் அடங்காத ஆத்திரம் பெருகியது.

தலை வேறு விண்விண்ணென்று  வலியைக் கொடுத்தது.

முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு சற்று நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவன் அலைபேசி ஒலிக்கும் சத்தத்தில் சுயம் அடைந்து அதனை எடுத்துப் பார்த்தவனுக்கு குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது.

வேறு வழி இல்லை பேசி தான் ஆக வேண்டும் என்ற முடிவுடன் அழைப்பை ஏற்றவன் “ஹலோ” என்ற அடுத்த நொடி “டேய் என்னடா பண்ற ஆஹித்யாவோட ஃபோன் வேலை செய்யுது இல்லை அவகிட்ட கொஞ்சம் கொடு உன் அத்தை பேசணுமாம்” என்று சொன்னதும், தான் அவளின் அலைபேசியை தான் உடைத்து நொறுக்கியது மனக்கண் முன் தோன்றியது.

சற்றே தடுமாறிப் போனவன் “அவ குளிக்கிறா மா வந்ததும் போனை கொடுக்கிறேன்” என்று சொல்ல…

“சரிப்பா, என்றவர் சாப்பிட்டியா? “ எனக் குரல் தழுதழுக்க, தன் அன்னை கேட்டதும் தான் அவனுக்கே நிதர்சனம் உரைத்தது.  நேற்றில் இருந்து அவள் ஒன்றும் சாப்பிடவே இல்லை அல்லவா!

அது அறியாமல் நான் வேறு! என்று நினைத்தவனுக்கு வார்த்தைகள் வர மறுத்தன.

“ம்ம் என்று ஒற்றை பதிலில் சொன்னவன் அவ வந்த பிறகு கால் பண்றேன் மா” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன் நேரே சமையலறைக்குள் நுழைந்தான்.

அங்கோ, அவள் நேற்று அவித்த சோளம் இருக்க… அதைப் பார்த்து புருவம் சுருக்கியவன் செல்ஃபில் நூடுல்ஸ் பெக் இருக்கின்றதா என்று பார்த்தான்.

அவ்விடமோ காலியாக இருந்தது.

நெற்றியை தேய்த்துக் கொண்டே வந்தனுக்கு அவளிடம் நடந்துக் கொண்டதை நினைத்து இன்னுமே அழுத்தமாக இருக்க, அலைபேசியை எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு முன் நின்று கொண்டு எதனையும் யோசிக்காமல் கதவில் தட்டினான்.

கட்டிலில் படுத்து அழுகையில் கரைந்து கொண்டு இருந்தவள் அவன் கதவினை தட்டவும் அரண்டு போனாள் பெண்ணவள்.

 மீண்டும் தன்னை ஆட்கொண்டு விடுவானோ என்ற அச்சம் அவளைத் தொற்றிக் கொண்டது.

மேனி நடுங்க கட்டிலின் ஓரத்தில் வெடவெடத்து போய் ஒடுங்கிக் கொண்டு இருந்தவள் வாயே திறக்கவில்லை.

மூச்சு விட கூட பயமாக இருந்தது அவளுக்கு…

அறைக்கு வெளியே கதவைத் தட்டிக் கொண்டு நின்று இருந்தவனுக்கு பொறுமை போக, “ஆஹித்யா, கதவை திற” என்று சொன்னான்.

அவளுக்கோ நெஞ்சே அடைத்து விட்டது.

அவள் எதுவும் செய்து கொண்டு இருப்பாளோ என்று ஒரு கணம் பதறி போனவன் அவளின் அழுகை சத்தத்தில் அவனே அறியாமல் ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.

விழிகளை மூடித் திறந்து “அத்தை பேசணும்னு சொல்றாங்க சோ போனை சோபால வைக்கிறேன் எடுத்து பேசு” என்றவன் தான் இருந்தால் வெளியில் வர மாட்டாள் என அவளது நிலையை உணர்ந்து தன் அறையை நோக்கி சென்றிருந்தான்.

தன் அன்னை என்றதும் வேகமாக எழுந்துச் சென்று கதவின் தாழில் கையை வைத்து ஒரு கணம் தயங்கியவள் ‘அவன் இருக்கக் கூடாது’ மனதில் நினைத்துக் கொண்டு தாழிட்ட கதவை மெதுவாகத் திறந்தாள்.

ஹாலில் அவன் இருக்கவில்லை.

இழுத்து பெரு மூச்சை விட்டுக் கொண்டே சோபாவை நெருங்கியவள் தன் நடுங்கும் கரங்களால் அவனது அலைபேசியை எடுத்தாள்.

இருக்கும் மனநிலையில் அன்னையுடன் ஒழுங்காக பேசி விடுவோமா என்ற எண்ணம் கூட எழுந்து விட்டது.

சேயை தேடி ஓடும் பிள்ளை போல சென்று மடியில் படுத்து கதறி அழ வேண்டும் போலிருந்தது ஆனால் அடக்கிக் கொண்டாள். நடுங்கும் கரங்களால் அவனது அலைபேசியை எடுத்தவள் தன் அன்னையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.

ஒவ்வொரு அழைப்பிற்கும் இதயமோ படு வேகமாக துடிக்க, இடப் புற மார்பை நீவி விட்ட படி தொப்பென சோஃபாவில் அமர்ந்தவள் மறுபுறம் கேட்ட அன்னையின் குரலில் மொத்தமாக நொறுங்கி விட்டாள்.

அவள் படும்பாட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்த விபீஷனுக்கோ அத்துமீறி நடந்துக் கொண்ட தன்னை நினைத்தே மேலும் மேலும் ஆத்திரமாக வந்தது.

மேலும் அங்கே நிற்க முடியாமல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான்.

நீண்ட நேர அமைதியின் பின் அன்னையின் பதைபதைப்பான குரலில் சுயம் அடைந்தவள் “மா சாரி, உங்களுக்கு கால் பண்ணிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ண போய்ட்டேன்” என்று வாய்க் கூசாமல் பொய் உரைத்தாள்.

அவள் தெளிவான குரலைக் கேட்ட பின்பே அமைதியான வித்யா “விபீ ஒழுங்காக பார்த்துக்குறான் தானே மா” என்று கேட்க…

தொண்டையை அடைத்த அழுகையை வாயை பொத்தி அடக்கிக் கொண்டு எச்சிலைக்  கூட்டி விழுங்கியவள் “ஹூம், சந்தோஷமா இருக்கேன் மா. அவர் நல்லா பார்த்துக்குறார் என்க…

“அதுவே போதும் மா. நீ போனை எடுக்கலைனதும் பதறி போய்ட்டேன் டி. உன் குரலை கேட்ட பிறகு தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு“ என்றார் வித்யா.

எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு சென்று விடலாமா என்று நினைக்கும் போதே அவளின் மனமோ ‘ வேண்டாம் ஆஹித்யா போகாதே. உன்னால் யாரும் மன வேதனை அடையக் கூடாது ‘ என்று நினைத்துக் கொண்டவள் “மா என் ஃபோன் உடைஞ்சு போச்சு சோ நானே காலேஜ் போய்ட்டு வந்து அவரோட ஃபோன்ல பேசுறேன்” என்று சற்று நேரம் கதைத்தவள் போனை துண்டித்து விட்டு மேசையில் வைத்தவள் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.

அதனைத் தொடர்ந்து தன்னைத் திடப் படுத்திக் கொண்டு காலேஜிற்கு செல்ல கிளம்பியவள் வெளியில் வரும் போது அவளின் கையைப் பற்றி தடுத்து நிறுத்தி இருந்தான் விபீஷன்.

அவன் தன் கையைப் பற்றவும் சற்றே அமைதி அடைந்திருந்தவள் மேலும் பதறிப் போனவளாய் மேனி நடுங்க ஆரம்பித்து விட, அவளின் நடுக்கத்தை உணர்ந்து பட்டென அவளின் கையை விடுவித்தவன் “சாப்பிட்டு காலேஜ் போ” என்றவன் அவளின் முன் உணவு பார்சல் ஒன்றை நீட்டினான்.

அவள் சாப்பிடும் மனநிலையிலா இருக்கின்றாள்?

பசி என்ற உணர்வே மரத்து விட்டது போலும், அவனை வெறித்துப் பார்த்தவள் எதையும் கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க, சும்மாவே குற்ற உணர்வில் தவித்துக் கொண்டு இருக்கின்றான்.

இப்போது இவள் வேறு முறுக்கிக் கொண்டு செல்ல, “சாப்பிட்டு போ” என்றான் குரல் உயர்த்தி…

பல்லைக் கடித்தவள் திரும்பி அவனின் கையில் இருந்த உணவு பார்சலை பிடுங்கி எடுத்தவள் விறு விறுவென கிளம்பி இருந்தாள்.

போகும் அவளை பார்த்துக் கொண்டு நின்று இருந்தவனுக்கு, அவள் வழமை போல கல்லூரிக்கு செல்வதைப் பார்த்து வியந்து போனான்.

நேற்றிலிருந்து அவள் துடித்த துடிப்புகள் யாவும் நினைவுக்கு வர மருகி தவித்தான்.

தான் செய்தது மாபெரும் தவறு என்று தோன்றியது.

அவள் வந்ததும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால், அவள் பட்ட வேதனை அவனின் மன்னித்து விடு என்ற வார்த்தைகளில் இல்லாமல் போய்விடுமா என்ன?

உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒட்ட வைப்பது அர்த்தமற்ற செயலல்லவா!

அதுபோல சுக்குநூறாக உடைந்த அவளின் மனதின் ரணம் அவ்வளவு சீக்கிரம் ஆறி விடுமா என்ன?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவளிருக்கும் நிலையில் வீட்டில் இருக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.

மனதை வேறெங்காவது செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் காலேஜிற்கு வந்திருந்தாள்.

அன்று எனப் பார்த்து நேரமோ மின்னல் வேகத்தில் நகர்வதைப் போலிருந்தது.

உறங்க வேண்டும் போல கெஞ்சிய தன் விழிகளை சிமிட்டி தூக்கத்தை விரட்டியவள் முயன்று பாடத்தில் கவனம் செலுத்த, சற்று நேரத்தில் இடைவெளி நேரமும் வந்து சேர்ந்தது.

வீட்டில் இருக்கும் போது வராத பசி இப்போது வந்தது.

கல்லூரிக்கு வந்த பின் மனமோ சற்றே சமன் பட்டிருக்க, கைகளை கழுவி விட்டு அவன் கொடுத்த உணவு பொட்டலத்தை திறந்து இரண்டு வாய் தான் வைத்து இருப்பாள் அதற்குள் அவளின் வகுப்பு ஆசிரியர் அவளை அழைக்க, தன்மேல் படிந்த அவரின் பார்வையில் புருவம் சுருக்கி பார்த்தவள் அவரை நெருங்கி “மேம்” என்றாள்.

அவளின் தோளில் கையை வைத்து அவர் சொன்ன விடயத்தை கிரகிக்க முடியாமல் தலையோ தட்டாமாலை சுற்றியது.

மூளை மழுங்கி செயலிழந்து விட்டதைப் போல உணர்ந்தவள் இதயத்தின் வேகம் அதிகரிக்க, அடுத்த கணமே மயங்கி சரிந்து இருந்தாள் பெண்ணவள்.

அத்தியாயம் – 18

மயக்கம் தெளிந்து அவள் எழும் போது காதில் கேட்ட அழு குரலில் தான், தான் மயங்கி சரியும் முன் கிரகித்த விடயத்தை நினைவு கூர்ந்தாள்.

உடல் விறைக்க எழுந்து அமர்ந்தவளை கட்டிப் பிடித்து அழுதார் சித்ரா.

“நான் தப்பு பண்ணிட்டேன் மா அவனை போகாமல் தடுத்து இருக்கணும் நான் பாவி…நான் பாவிவிவி….” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ, அவளோ சலனமற்ற முகத்துடன் தன் முன் வைக்கப்பட்டு இருந்த விபீஷனின் சடலத்தை வெறித்தாள்.

வாகன விபத்தில் இறந்து விட்டானாம்.

கேள்வி பட்ட விடயத்தை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்து, இதோ இப்போது தெளிந்து அமர்ந்தும் கூட நடப்பவற்றை நம்ப முடியாது அல்லவா இருக்கின்றாள்.

கணவனென்ற உறவை உணரும் முதலே கொண்டவனின் மரணம்.

ஒரு நாளில் அவள் எவ்வளவு துன்பங்களைத் தான் தாங்குவாள்.

நேற்று வலுக்கட்டாயமாகத் தன்னை ஆட்கொண்டவனின்  சுவடு கூட தன் மேனியில் அழியாத நிலையில் பதிந்து இருக்க, தன் வாழ்க்கை இப்படி ஒரே நாளில் தடம்புறளும் என்று நினைத்து கூட பார்க்கவில்லையே!

சமீபமாக தன் வாழ்வில் நிகழும் விடயங்களை அசை போட்ட படி இருந்தவள் மனதில்  மேலும் அழுத்தம் கூடிப் போனது.

 யாரையும் ஏறிட்டு பார்க்க தோன்றவில்லை.

தனிமை வேண்டும் போல இருந்தது.

சத்தம் போட்டு கத்த வேண்டும் போல இருந்தது.

 மெதுவாக எழுந்து முகம் வீங்கிய நிலையில் நின்று இருந்தாள் ஆஹித்யா.

 

உயிர் இருந்தும் அவளின் உணர்வுகள் முற்றிலும் தொலைந்து போயிருந்தன.

 

சுவரில் சரிந்து விழிகளை மூடிக் கொண்டவள் இதழ்களோ கீழ் நோக்கி வளைந்தன.

அடக்க முயல்கிறாள் ஆனால் முடியவில்லை.

அழுதாள்.

அடக்க முடியாமல் விம்மி வெடித்து அழுதாள்.

அடக்கிக் கொண்டு இருப்பதை விட அழுது விடுவது மேல் அல்லவா!

 

அவளை யாரும் தடுக்க வில்லை.

தடுக்கவும் தோன்றவில்லை.

தன் கணவன் இறந்து விட்டான் என்று அழுகின்றாளா? இல்லை தன்னிலையை நினைத்து அழுகின்றாளா? என்பது அவளுக்கே வெளிச்சம்.

அவளை பார்த்துக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்த ஜெய் ஆனந்த்தோ அவளின் இந்த நிலையைக் கண்டு மொத்தமாக உயிரோடு மரித்து இருந்தான்.

ஒரு புறம் உடன் பிறந்தவனின் இறப்புச் செய்தி அவனை நிலைகுலைய வைத்து இருந்தது.

நம்ப முடியாத அதிர்ச்சி. இன்னுமே அவனாலும் ஜீரணிக்க முடியாத நிலை தான்.

உயிருக்கு நிகராக காதலித்த பெண்ணை கூட அவனுக்காக விட்டுக் கொடுத்தவன் தான். இப்போது அவனின் இழப்பும், அவளின் நிலையும் ஒருங்கே சேர்த்து மனதை அழுத்தி பிசைந்தது.

 

விழிகள் இரண்டும் சிவக்க, விபீஷனின் உடலை வெறித்தவன் பார்வை கதறி அழுது கொண்டிருந்த ஆஹித்யாவின் மேல் படிந்தது.

இன்னுமே அவளை முழுதாக மறக்க முடியாது தவித்து கொண்டல்லவா இருக்கின்றான்.

அவள் நன்றாக வாழ வேண்டும் என்று தானே நினைத்து தன்னை தனிமை படுத்திக் கொண்டான்.

ஆனால், இன்றோ நிலமை தலைகீழாக மாறியல்லவா போனது.

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவன் விபீஷனின் உடலை வருடினான்.

எத்தனையோ வருடங்களுக்கு பிறகு அவனின் ஸ்பரிசத்தை தொட்டு உணர்கின்றான்.

அவனை அணைக்க வேண்டும். சாதாரண அண்ணன் தம்பி போல வாழ வேண்டும் என்றெல்லாம் எண்ணி இருந்தவன் நினைத்துக் கூட பார்க்கவில்லையே அவனை இந்நிலையில் தொட்டு உணர்வான் என்று…

தொண்டையை அடைத்த அழுகையை அடக்கியதன் பயனாக தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தான்.

அவன் நேசித்த பெண்ணவள்.

அவள் மடிந்து அமர்ந்து அழுவதை அவனால் கொஞ்சமும் காண சகிக்க வில்லை.

 

“தியா அழாதடி… வலிக்குது “ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே தன் இடது மார்பை நீவி விட்ட படி தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவள் அருகே நெருங்கி இருந்தான்.

பக்கத்தில் இருந்த வயதான மூதாட்டியோ “அந்த பொண்ணுக்கு ஆக வேண்டிய சடங்கை பார்ப்போம். அவளை அழைச்சுட்டு போய்ட்டு சேலை கட்டி, பூவும் பொட்டோட அழைச்சுட்டு வாங்க” என்றதும் வித்யாவோ கேவி அழுது விட்டார்.

தன் மகளின் வாழ்வு இப்படியாகும் என்று இன்னும் ஜீரணிக்க முடியாமல் மார்பில் அடித்துக் கொண்டு ஒரு புறம் அவர் அழ, பிரதாபனோ உணர்வுகள் மரித்த நிலையில் விபீஷனின் உடலை வெறித்த படி அமர்ந்து இருந்தார்.

 

தன் அருகில் ஒருவன் நிற்கின்றான் என்று கூட உணராத நிலையில் வெறி பிடித்தவள் போல அழுதுக் கொண்டு இருந்தவளின் கதறல் அவனின் உயிர் வரை தாக்கியது என்றால் அங்கு இருப்பவர்களை சொல்லவா வேண்டும் அவர்களையும் அவளின் கதறல் உழுக்கியது.

அதில் அடுத்து நடைபெறவிருக்கும் சடங்கில் அவன்  உடலோ மொத்தமாக விறைத்துப் போனது.

தன்னால் அவளை விதவை கோலத்தில் காண முடியுமா ? என்ற கேள்வி எழுந்தது அவனுள்…

 அவன் மனமோ, ஒரு காலமும் முடியாது என்று கட்டியம் கூறியது.

 

கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டிய படி அவளையே வெறித்துக் கொண்டு நிலையில் சாய்ந்து நின்று இருந்தவன் என்ன நினைத்தானோ மானசீகமாக தன் உடன் பிறந்த தம்பியை நினைத்து விழிகளை மூடி ஆழ்ந்த பெரு மூச்சை விட்டுக் கொண்டவன் ‘சாரி டா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே விழிகளைத் திறந்து எப்போதோ அவளுக்கென அவன் வாங்கிய பொன் தாலியை தனது பாக்கெட்டில் இருந்து எடுத்தவன் கண நேரத்தில் குனிந்து சுயம் மறந்து அழுதுக் கொண்டு இருந்தவளின் சங்கு கழுத்தில் கட்டி தனது சரிபாதியாக்கி இருந்தான்.

 

தன் கழுத்தில் வந்து வீழ்ந்த இரண்டாவது தாலியை கண்டு அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தே விட்டாள்.

என்ன நடந்துக் கொண்டு இருக்கின்றது?

அங்கு வந்திருந்த அனைவரும் அவன் செயலில் ஸ்தம்பித்து போயினர்.

“ஆனந்த்” என்ற சித்ராவின் குரல் தழுதழுத்தது  ஒலித்தது.

 விபீஷன் அணிவித்து இருந்த தாலியை அவள் சுதாரிக்கும் முன்னரே கழுத்தோடு கழற்றி எடுத்தவன் “அவ இப்போ என் பொண்டாட்டி சோ யாரும் சடங்கு அது இதுனு கிட்ட நெருங்குனீங்கனா தொலைச்சுடுவேன்” என்று எச்சரித்தவன் பிரதாபனின் காலில் அருகே சென்று அமர்ந்து கொண்டவன் அவரின் கைகளைப் பிடித்து ”அப்பா, என்…என்னை மன்னிச்சுடுங்க” என்றவன் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

கண நேரத்தில் நடந்து விட்ட சம்பவம் அனைவரின் அழுகை சத்தத்தையும் நிறுத்தி இருக்க, பிரதாபனின் அமைதியில் துடித்துப் போனவன் எழுந்து அனைவரையும் நோக்கி “நான் இப்போ இந்த இடத்தில வச்சு தாலி கட்டினது தப்பு தான் ஆனால்…” என்று சொல்ல வந்தவனின் கையினை அழுத்தி பற்றிய பிரதாபன் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்பதைப் போல தலை அசைத்தார்.

இத்தனைக்கும் உணர்வுகள் நிறைந்த அப் பேதைப் பெண்ணின் சம்மதம் கேளாமல் அதுவும் அவளை அறியாமலேயே இரண்டாவது திருமணமும் நிகழ்ந்து இருக்க, அவளது மனம் எப்படி இருக்கும் என்று இறந்து போனவன் உயிருடன் இருக்கும் போதும் அறியவில்லை. இப்போது அவளை ஊனுருக காதலித்து கரம் பிடித்தவனும் அறியவில்லை.

மனதளவில் மொத்தமாக உடைந்து இருந்தாள் அவள்.

கதறி ஆர்ப்பாட்டம் செய்யும் ரகம் அவள் அல்லவே!

தனது நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கத் தான் முடிந்தது.

அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்த அவளின் உடன் பிறந்த தங்கை பவ்யாவுக்கோ, அவளின் முகம் பிரதிபலிக்கும் வேதனையை  உணர்ந்து கொண்டவளாய் அவளைத் தன் தோளோடு அணைத்து இருந்தாள்.

அந்த நேரத்திற்கு அவ் அணைப்பு தேவைப்பட்டதோ என்னவோ, தனது விதியை எண்ணி துவண்டு போனவள் உடல் குலுங்கியது. மீண்டும் பீறிட்டு வர துடித்த அழுகையை அடக்கிக் கொண்டவள் உணர்வுகள் மொத்தமாக மரித்து போயிருந்தது.

அவளின் முதுகை வருடிக் கொடுத்தாள் பவ்யா.

தன் உணர்வுகளை அடக்கி பழகிக் கொண்டவள் தன் தமக்கைக்காக கண்ணீர் வடித்தாள்.

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று இருந்த சித்ரா “ஏன் டா இப்படி பண்ண, அவ உன் தம்பி பொண்டாட்டிடா” என்று அவனின் ஷர்ட்டினை பற்றி உலுக்கினார் சித்ரா.

“ஸ்டாப் இட் மா, நவ் ஷி இஸ் மிஸஸ் ஜெய் ஆனந்த்” என்றான் அழுத்தம் திருத்தமாக….

அழுகையில் கரைந்து கொண்டிருந்த பெண்ணின் மேனியோ அவனின் குரலில் தூக்கிப் போட்டது.

“உன் தம்பி இறந்த கவலை இல்லாமல் எப்படி டா உன்னால இந்த காரியத்தை பண்ண முடிஞ்சது?”

“சோ என்னை இவ்வளவு தானா புரிஞ்சி வச்சு இருக்கீங்க மா? என்று விரக்தியாக இதழ் வளைத்து சிரித்தவன் வலிக்குது மா. ரொம்பவே வலிக்குது என்றவன் நடுங்கிக் கொண்டிருந்த தன் கரங்களை உயர்த்தி காட்டியவன் அவன் பிறந்தப்போ இந்த கையால தான் அவனை…” என்றவன் குரல் மேலும் பேச முடியாமல் அடைத்தது.

 

அங்கு குழுமி இருந்தவர்கள் கூட தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்து விட, சபையில் பெரியவர் ஒருவரோ “நடந்தது நடந்து போச்சு. உங்க பிரச்சனையை அப்புறம் பேசி தீர்த்துக்கோங்க என்றவர் தொடர்ந்து சிதைஞ்சி போன உடம்பு, ரொம்ப நேரம் வச்சு இருக்காமல் எடுத்துடுங்கப்பா சீக்கிரம்” என்று சொல்ல அப்படியே மடிந்து அமர்ந்து விட்டான் ஜெய் ஆனந்த்.

அத்தியாயம் – 19

வானமும் இருள ஆரம்பித்து மாலை ஐந்து மணியைக் கடந்திருந்தது.

ஒரு குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு வீடே நிசப்தமாக இருந்தது.

விபீஷனின் உடலை எடுத்த கணம், மயங்கி சரிந்த சித்ராவை வித்யாவின் பாதுகாப்பில் விட்டு, விட்டு ஓர் அண்ணனாகத் தன் கடமைகளை  செய்ய சென்று இருந்தான் ஜெய் ஆனந்த்.

ஆளுக்கு ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.

முடியை அள்ளிக் கட்டிக் கொண்டு எழுந்த வித்யா, ஆஹித்யாவின் தலையை வருடிக் கொடுத்த படி வீட்டின் நிலையில் சரிந்து விழிகளை மூடி அமர்ந்திருந்த பவ்யாவை பார்த்தார்.

அவள் விழிகளில் இருந்தும் கண்ணீர்  வழிந்துக் கொண்டிருக்க, “பவ்யா” என்றழைத்து அவளின் ஆழ்ந்த சிந்தனையை கலைத்து இருந்தார்.

“மா…” என்றபடி விழிகளை திறந்தவள் குரல் என்ன முயன்றும் மறைக்க முடியாது தழுதழுத்தே ஒலித்தது.

அவளை யோசனையாகப் பார்த்த வித்யா, “எழுந்து பக்கெட் ல தண்ணி எடுத்திட்டு வா, வீட்டை கழுவி போடலாம் மா” என்றவர் குரலும் சோர்ந்து ஒலிக்க, “இதோ வரேன் மா” என்று அசந்து தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த தமக்கையை எழுப்ப மனமில்லாது அவளின் தலையை மிருதுவாக பிடித்துக் கொண்டு மெதுவாக எழும் போதே, அவளும் விழிகளை திறந்துக் கொண்டாள்.

“சாரி அக்கா, அம்மா கூப்டுறாங்க” என்று சொல்ல…

முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டே “ஹே… எதுக்காக இதுக்கெல்லாம் சாரி கேட்குற? என்றபடி  எழுந்தவள்  எதுக்காக கூப்டாங்க” என்று கேட்டாள்.

“வீட்டை சுத்தம் பண்ண” என்றவள் குளியல் அறையை நோக்கி செல்ல, அவளைப் பின் தொடர்ந்து சென்ற ஆஹித்யாவும் அதனைத் தொடர்ந்து வீட்டினை சுத்தப் படுத்த ஆரம்பித்து விட்டாள்.

அவளால் தொடர்ந்து வேலை செய்ய சுத்தமாக முடியவே இல்லை.

காலையிலிருந்து சாப்பிடவே இல்லை என்றாலும் அவளின் உடல் வலித்தது என்னவோ  நேற்றைய நாள் அவன் ஆட்கொண்டதால் அல்லவா!

வெளியில் சொல்லவா முடியும்?

கொண்டவன் இறந்ததை நம்ப முடியாமல் தன் நிலையை நினைத்து அழுது கரைந்தவள் உணரும் முன்னரே அவளின் நம்பிக்கைக்குரிய மாமா கரத்தால் தாலியை வாங்கி இருந்தாள்.

மனமெல்லாம் ரணமாக வலித்தது.

இதில் மாமாவின் வாழ்க்கை வேறு என்னால் கெடவே கூடாது என்ற வைராக்கியம் அவளுள் வேகமாக எழுந்தது.

வரட்டும் பேசிக் கொள்ளலாம் என்று ஓர் திடமான முடிவை எடுத்துக் கொண்டவளுக்கு அதற்கு பின்னர் தான் ஆழ்ந்த உறக்கத்தை தழுவி இருந்தாள்.

 

வீட்டை துடைத்துக் கொண்டே  நிமிர்ந்து விழிகளை சுழல விட்டவள் “அத்தை எழுந்துட்டாங்களா?” என்று கேட்டாள் பவ்யாவிடம்…

“இல்லைகா… மாமா செக் பண்ணி இஞ்ஜெக்ஷன் போட்டுட்டு போனார். அவங்களை எழுப்ப வேண்டாம்னு சொன்னார்” என்றதும் “ம்ம்” என்று சொல்லிக் கொண்டவள் தன் உடல் வலியை பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டு வீட்டினை சுத்தம் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

 

உடல் வலியை விட மனதில் வலி கொடூரமாக தாக்கியது.

 

சரியாக வீட்டினை சுத்தப் படுத்தி அனைத்தையும் ஒழுங்கு படுத்தி முடிக்கும் போது இரவு ஏழு மணியாகி இருந்தது.

அப்போது தான் மார்பில் வெண்ணிற துண்டுடன் ஜெய் ஆனந்த்தை தொடர்ந்து பிரதாபனும் உள்ளே நுழைந்து இருந்தார்.

இருவரின் முகங்களும் அழுததன் பயனாக வீங்கி சிவந்து இருந்தன.

ஆஹித்யாவுக்கோ அசௌகரியமாக இருந்தது.

மனம் வேறு பதைபதைத்துக் கொண்டிருந்தது .

 ஜெய் ஆனந்த்துடன் பேச வேண்டும் என்று தோன்றியது.

யாரும் எதுவும் நினைத்து விடுவார்களோ என்று அச்சம் கொண்டாள்.

என்ன வாழ்க்கை இது?

வாழ்வே வெறுத்து விட்டது அவளுக்கு…

தனியாக வாழ வேண்டும் அதுவும் தன்னுடைய வாழ்க்கையில் ஜெய்  ஆனந்த்தை இணைக்க கொஞ்சமும் விரும்பவில்லை அவள். அமைதியாகச் சென்று வித்யாவின் அருகில் நின்று கொண்டாள்.

என்ன தான் யாரையும் மதிக்காமல் நடந்தாலும் அவனின் இழப்பு வித்யா உட்பட அனைவரையும் உலுக்கி போட்டிருந்தது.

அழாமல் கல் போல வீட்டு வந்து, நேரே தனது அறைக்குள் அடைந்து கொண்டவர் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.

பிரதாபன் அழும் சத்தம் கேட்டதும் பதறிப் போய் உள்ளே போகப் போன வித்யாவை தடுத்து நிறுத்திய ஜெய் ஆனந்த் “நான் பார்த்துக்கிறேன் அத்தை நீங்க அம்மா பக்கத்துல இருங்க” என்றவன் பார்வை ஆஹித்தியாவில் படிந்து மீண்டது.

“சரிப்பா…” என்றவர் கண்ணீரைத் துடைத்த படி சித்ராவின் அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அறையை வெளியில் இருந்தே திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன் கண்டது என்னவோ, தூக்க மாத்திரைகளை அள்ளி வாயில் போடச் சென்ற பிரதாபனைத் தான்.

தூக்கி வாரிப் போட வேகமாக அவரை நெருங்கியவன் அவரின் கரத்தில் இருந்த தூக்க மாத்திரைகளை தட்டி விட்டு அவரை இழுத்து அணைத்து இருந்தான்.

மிக மிக இறுகிய அணைப்பு அது.

அதிலேயே அவனது தவிப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது.

அவனது இதயம் படு வேகமாகத் துடிக்க, அவ் ஓசை கூட அந் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வெளியில் கேட்டது.

“அப்பா, என்றவன் குரல் உடைய, நீங்களும் அவன போல போய்ட்டா நான் என்ன பண்ணுவேன் பா” என்றவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து பிரதாபனின் வெற்று தோளை நனைத்தது.

“அவனை நான் வீட்டை விட்டு அனுப்பி இருக்க கூடாது டா. பெரிய தப்பு பண்ணிட்டேன். பொறுப்பு வரும்னு அவனை அனுப்பி அவன் உயிர் போக நானே காரணமா ஆகிட்டேன்” என்று கதறி அழுதவரை “ இட்ஸ் அன் ஆக்சிடென்ட் தான் அழாதிங்பா” என்றான் தேற்றும் வழி அறியாது.

அவனுக்கும் தானே வலித்தது உடன் பிறந்தவன் அல்லவா!

தன் வலியை விழுங்கிக் கொண்டவன் தன் தந்தையை வெறித்தான்.

“தாங்க முடியல டா. அவனுக்கு இப்போ சாகுற வயாசா” என்று கேட்டுக் கொண்டே உச்சகட்ட அழுத்தத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார்.

அவனும் மனிதன் தானே எத்தனை வலிகளைத் தான் தங்குவான்.

அவரின் நாடித் துடிப்பை ஆராந்தவன் “பா பீ ரிலாக்ஸ் என்று இடது மார்பை நீவி விட்ட படி சாய்வாக படுக்க வைத்தவன் அவசரமாக டிராயரைத் திறந்து அஸ்பிரின் மாத்திரையை எடுத்து லேசாக திறந்து இருந்த வாயை திறந்து இந்த டெப்லெட்டை எனக்காக குடிங்க பா பிளீஸ்” என்றான் கெஞ்சலாக…

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவருக்கு விபீஷன் போலவே தெரிந்தான் ஜெய் ஆனந்த்.

கிட்டத்தட்ட அவனும் விபீஷனின் சாயலில் தானே இருப்பான்  ஆழ்ந்து பார்த்தாலே அன்றி சட்டென பார்த்தால் தெரிந்து விடாது அவனில் கொஞ்சமே கொஞ்சமாக தெரியும் விபீஷனின் தோற்றம்.

அவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர் போல வாயை அகலத் திறக்க, மாத்திரையை அவரின் வாய்க்குள் போட்டு தண்ணீரை பருகச் செய்தான்.

மாத்திரையை போட்ட சில வினாடிகளில் வழமைக்குத் திரும்பிய அவர் மனம் மீண்டும் அமைதியை கிழிக்கும் விதமாக இளைய மகனின் இறப்பினை நினைவில் தூண்ட, இதழ்களோ கீழ்நோக்கி வளைந்தன.

 

“பாஹ், அழ வேண்டாம் பிளீஸ்” என்று சொன்னவன் அவரின் கரங்களைப் பற்றி தன் கன்னங்களில் வைத்து அழுத்திப் பிடிக்கச் செய்தான்.

 

அவனின் துடிப்பை உணர்ந்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு அவனின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே “அழ மாட்டேன் டா” என்றவர் அவனின் சிகையைக் கோதி விட்ட படி “நீ காதலிச்ச பொண்ணை இவ்வளவு சீக்கிரமா கட்டிப்பன்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல ஆனந்த்”  என்றதும் அவனுக்கோ மேனியில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதைப் போலிருந்தது.

திகைத்து விழித்தவன் “பாஹ், உங்களுக்கு எப்படி?” என்று  முழுதாக வார்த்தைகளை கோர்க்க முடியாது தவித்தவன்  குரல் நலிந்தே ஒலித்தது.

“ விபீஷன் கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னப்போ நீ, நீயா இல்லடா. அதுவும் நீ காதலிச்ச பொண்ணுக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு சொல்றப்போ உன் கவனம் மொத்தமும் ஆஹித்யா மேல தான் இருந்துச்சு” என்றவர் விழிகளை அழுந்த மூடி திறந்து நீயும் என் மகன்டா உன்னை எனக்கு உணர முடியாதா என்ன?” என்று கேட்டு விட,

அவனுக்கோ பேச முடியாமல் மொத்தமாக குரல் அடைந்துக் கொண்டது.

இதழ்கள் துடித்தன.

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டான்.

“சித்ரா உன்ன இன்னொரு கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னப்போ நீ என் கையை பிடிச்சு இருந்த பிடில நடுக்கத்தை என்னால உணர முடிஞ்சது டா” என்றவர் நிமிர்ந்து அமர்ந்து தவிப்பாக தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்தவனை அருகில் அழைத்தார்.

அவனும் பிரதாபனை அணைத்த போல படுத்துக் கொள்ள, அவனின் சிகையை கோதி விட்ட படியே “ஆஹித்யாவுக்கு அவன் கூட வாழ விருப்பமான்னு அவளோட விருப்பத்தை உனக்காக தான் கேட்டேன் ஆனால்…” என்று சொல்ல வந்தவரை இடை மறித்த போல “பாஹ்… நான், ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்னு தானே வீட்டை விட்டு வெளில போனேன்” பட் என்றவன் விபீஷனின் இறப்பை நினைத்து உடல் விறைத்தது.

“தெரியும் டா” என்ற ஒற்றை பதிலில் அடக்க முடியாமல் மொத்தமாக அடக்கிவைத்த உணர்வுகள் யாவும்   கட்டவிழ்ந்தன.

ஆம், அழுதான். தன் உணர்வுகளை அடக்கி வைத்து இருந்தவன் தன் தந்தை முன்னிலையில் தாழ முடியாமல் அழுதான்.

வலிகளைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு இறைவன் யாரையும் படைக்கவில்லையே! என்றாவது ஒருநாள் உச்சகட்ட அழுத்தம் மனதை அழுத்தும் போது அனைத்தும் பீறிட்டு கொண்டு அழுகையாக வெடிக்குமல்லவா!

பிரதாபனோ, விடாமல் அவனின் சிகையை அழுந்தக் கோதிக் கொண்டிருந்தவர் ‘அழ வேண்டாம்’ என்று ஒரு வார்த்தைக் கூட கூற வில்லை.

அவராவது  வெடித்து அழுதார். அவன் யாரிடம் அழுவான்? தன் உணர்வுகளை அடக்கி வைத்து மற்றவர்களின் நலனை சிந்திக்கும் தன் மகனின் குணம்   நன்றாக அறிந்தவராயிற்றே!

“இட்ஸ் டூ ஹர்ட்டிங் பாஹ்” என்றவன் குரல் கமறியது.

“நீ என்ன பண்ணுவ டா? அவனோட விதி அவ்வளவு தான்டா” என்றவர் தொண்டை அடைத்தது.

“பாஹ்… என் காதல் என்னோடே போகட்டும். யாருக்கும், அதுவும் தியாவுக்கு கூட தெரிய வேண்டாம். கடைசி வரையும் அவளுக்கு அரணா இருப்பேன்” என்றவன் குரல் உறுதியாக ஒலித்தது.

வலியோடு புன்னகைத்தவர் “என்னை தாண்டி இந்த விஷயம் வெளில போகாது என்றவர் தொடர்ந்து ஆஹித்யா அழுதப்போ, அவளோட வாழ்க்கையை நினைச்சு ரொம்பவே வருத்தமா இருந்துச்சு ஆனந்த் ஆனால் இப்போ அவளோட விஷயத்துல உன்னால எல்லாம் சரியாக்கிட முடியும்னு தோணுது” என்க…

“கண்டிப்பா” என்றவன் விழிகளை மூடிய கணம் “மாமா…மாமா” என்று பவ்யாவின் கதவு தட்டும் ஓசை பலமாக கேட்டது.

அவசரமாக எழுந்தவன் திரும்பி பதற்றமாக எழுந்த பிரதாபனைப் பிடித்து அமர வைத்தவன் “நான் பார்துப்பேன் பா. பிளீஸ் ஸ்ரெயின் பண்ணிக்காமல் ரெஸ்ட் எடுங்க” என்றவன் வெளியில் செல்லும் போது மறக்காமல் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டே கிளம்பி இருந்தான்.

அத்தியாயம் – 20

அவசரமாக அறையை விட்டு வெளியில் வந்தவனுக்கோ, மருந்தின் வீரியம் குறைந்ததன் பயனாக வெடித்து அழுது கொண்டு இருக்கும் சித்ராவின் கதறலில் துடித்து போனவனாய் அந்த அறைக்குள் நுழைந்து தன் அன்னையை இறுக அணைத்துக் கொண்டான்.

அவளோ தேமித் தேமி அழ ஆரம்பிக்க, “மா, அழ வேண்டாம் பிளீஸ் மா” என்று அவரின் முதுகை நீவி விட, வீட்டில் நடப்பவற்றை பார்த்துக் கொண்டு நின்று இருந்த ஆஹித்யாவுக்கோ இன்னுமே அழுத்தம் ஏற, கத்தி அழுது விடுவோமோ என்று பயந்து போனவள் வாயை அழுந்த மூடிக் கொண்டு வெளியில் சென்று இருந்தாள்.

“விபீஷன்ன்ன்…” என்று கதறி அழுதுக் கொண்டு மீண்டும் மயங்கி அவனின் தோளில் சரிந்தவரை “அம்மாமாஹ்” என்ற படி அவரின் தோள்களைப் பற்றி விலக்கிப் பார்த்தவன் அவர் மீண்டும் மயங்கி தான் விட்டார் என்று உறுதிப் படுத்திக் கொண்டவன் மெதுவாக கட்டிலில் சரித்து படுக்க வைத்து விட்டு, விழிகள் கலங்க அன்னையின் தலையை மிருதுவாக வருடினான்.

அவரின் நாடித் துடிப்பை பரிசோதித்து விட்டுத் திரும்பி வித்யாவை பார்த்து “அத்தை கொஞ்சம் வாட்டர் பாய்ல் பண்ணி எடுத்திட்டு வாங்க பிளீஸ்” என்று சொல்ல.

“இதோ சீக்கிரம் கொண்டு வரேன்ப்பா” என்றவர் சமையலறைக்குள் சென்ற வேகத்தில் ஏற்கனவே சூடு செய்து இருந்த நீரை எடுத்து வந்து கொடுக்க, அருகில் இருந்த துண்டினால் நீரைத் தொட்டு அவரின் முகத்தை ஒற்றி எடுத்தவன் அவரின் ஆடையை லேசாக தளர்த்தி விட்டு எழுந்து ஜன்னல்களைத் திறந்து விட்டவன் “எழுந்ததும் சொல்லுங்க அத்தை” என்றவன் விட்டத்தை வெறித்துக் கொண்டு அருகிலுள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்த பவ்யாவை ஆராய்ச்சியாகப் பார்த்தவன் “பவிமா” என்றழைத்தான் மென்மையாக…

அவளிடத்தில் அசைவே இல்லை.

“பவி என்று குனிந்து அவளின் கையை தொட்டவன் அதிர்ந்து விழித்து தன்னை பார்த்தவளை போய் சாப்பிடு மா” என்று சொல்ல…

“ம்ம், சரி.. மாமா” என்றவள் மறுத்து எதுவும் பேசவும் இல்லை.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எங்கே அதிகம் பேசினால் தன் உணர்வுகள் வெடித்து அழுது விடுவோமோ என்று தனக்குள் தானே முடங்கிக் கொண்டாள் அந்தப் பேதைப் பெண்.

ஒரு பெரு மூச்சுடன் வேகமாக அந்த அறையை விட்டு வெளியில் வந்தவன் விழிகள் ஆஹித்யாவை தேடின.

 

ஹாலில் அவள் இல்லை என்றதும் நுழைவாயிலை எட்டிப் பார்த்தான். அங்கும் அவள் இல்லை என்றதும் சட்டென ஓர் எண்ணம் துளிர்க்க, வேக வேகமாக மாடிப் படிகளில் ஏறிச் சென்று விபீஷனின் அறையைத் திறந்து பார்த்தான்.

 

அங்கும் அவளைக் காணவில்லை.

புருவங்கள் சுருங்க, மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் மேலேறி சென்று அங்கே பார்த்தவனுக்கு தான் தேடி வந்தவளின் தரிசனம் கிடைக்க, அவளின் பின் நின்று கொண்டே “சாரி, தியா” என்றான்.

அந் நிசப்தத்தை கிழிக்கும் விதமாக சட்டென கேட்ட ஜெய் ஆனந்த்தின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் விழிகள் இரண்டும் வீங்கி சிவந்திருந்தன.

அவளின் விழிகளில் ஆயிரம் கேள்விகள் தேங்கி நின்றன.

 

ஏதேதோ பேச வேண்டும் என்று இருந்தவளுக்கு வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டன.

அவளின் வெறித்த பார்வையில் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவன் “ஐ க்னோ இப்படியொரு சிட்டுவேஷன்ல…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ஏன் மாமா இப்படி பண்ணீங்க? யாருக்கும் என் சம்மதம் கேட்கணும்ன்னு தோணலைல? எல்லாரும் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறீங்க. என்னை பத்தி என்ன பின்னாடி பேசுவாங்கனு தெரியுமா?” என்றவள் குரல் ஆற்றாமையுடன் ஒலித்தது.

அதிர்ந்து விட்டான் அவன்.

இந்த கோணத்தில் அவன் யோசிக்கவில்லை அல்லவா!

அப்போதைக்கு அவள் கஷ்டப்படுவதை தன்னால் காண சகியாது அவன் செய்த செயல், இப்போது அவள் கூறும் போதே இக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தவனுக்கு உரைக்க ஆரம்பித்து இருந்தது.

“என்னவென்று சொல்லவான்?”

“என்னை மீறி உன்ன யாரும் எதுவும் பேச மாட்டாங்க” என உறுதியாக சொன்னவனின் முகத்தின் முன் கை நீட்டித் தடுத்தவள் “என் வாழ்க்கை அத்தியாயம் விபீஷனோட முடிஞ்சி போச்சு மாமா. என்று சொன்னவள் கன்னங்களில் உருண்டோடிய கண்ணீரைத் வேகமாகத் துடைத்துக் கொண்டே உங்களுக்குனு தனி வாழ்க்கை இருக்கு சோ இந்த விதவைக்கு வாழ்க்கை…. “ என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “வில் யூ பிளீஸ் ஸ்டாப் இட் தியா” என்று அந்த இடமே அதிரும் வண்ணம் சீறினான்.

அவள் முன் குரல் உயர்த்தி கடிந்து பேசுவான் என்று அவனே எதிர்ப் பார்க்கவில்லை.

 

அதை விட தன்னைத் தானே விதவை என்று அவள் சொன்னது உயிரோடு இருக்கும் போதே இதயத்தை உருவி எடுப்பதைப் போல ரணமாக வலித்தது அவனுக்கு…

“உண்மையை தானே மாமா சொல்றேன் பிளீஸ் உங்க வாழ்க்கையை பார்த்துக்கோங்க. அது தான் உங்களுக்கும் நல்லது சுத்தி இருக்கவங்களுக்கும் நல்லது” என்றவளை வெறித்தவன் பார்வை தான் கட்டிய தாலியை பார்த்துக் கொண்டே “நான் இன்னும் செத்து போகல தியா” என்றான் உணர்ச்சியற்ற குரலில்…

“மாமா…” என்று அதிர்ந்து ஒலித்தது அவளது குரல்.

 

 “நான் உனக்கு தாலி கட்டினேன்னு இப்போ ஊர் ஃபுல்லா பரவி இருக்கும் அதுமட்டுமில்ல என்றவன் அவளை உறுத்து விழித்த படி என் வாழ்க்கை இது தான் தியா சோ யார் சொன்னாலும் நான் என் முடிவை மாத்திக்க போறது இல்லை. சாகுற வரை வாழ்க்கை முழுக்க உனக்கு ஒரு அரணா இருப்பேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக…

எண்ணமாறியான வார்த்தைகள் இவை.

அவளின் மனமோ விபீஷனையும் ஜெய் ஆனந்த்தையும் ஒப்பிட்டு பார்க்க தவறவில்லை.

இதழ்களில் விரக்தி புன்னகை தோன்றி மறைந்தது.

அதுமட்டுமா? என்னவோ அவனின் பேச்சில் கண்மன் தெரியாத ஆத்திரம் வேறு எழுந்து தொலைத்தது.

பல்லைக் கடித்துக் கொண்டு “உங்க தம்பி போல என் சம்மதம் உங்களுக்கு தேவைப்படலயா மாமா?” என்று கேட்டே விட்டாள்.

“நீ சம்மதிக்க மாட்டனு தெரிஞ்சு தான் பண்ணேன்” என்றான் பதிலுக்கு…

“தம்பியை போல அண்ணன்” என்று சொல்லிக் கொண்டவளுக்கு அவ் வார்த்தையே அபத்தமாகத் தான் தோன்றியது.

இருந்தும் தன் வாழ்க்கையில் ஜெய் ஆனந்த் வேண்டவே வேண்டாம் என்று முடிவு எடுத்து வைத்திருந்தவளுக்கு ஏதாவது பேசியாவது அவனை தன் வாழ்வில் இருந்து அகற்ற நினைத்தாள் பெண்ணவள்.

விரக்தியாக சிரித்துக் கொண்டவன் “நான் உன் சம்மதம் கேட்காமல் பண்ணது தப்பு தியா அதுக்காக அம் ரியலி சாரி பட் என் வாழ்க்கை, அது இனி நீ மட்டும் தான்” என்று சொல்லிவிட்டு திரும்பியவனிடம் “நான் கன்னிப் பொண்ணு இல்ல மாமா” என்றாள்.

அதை சொல்லும் போதே அவளின் குரல் அடைத்தது.

இப்படி சொன்னாலாவது தன்னை விட்டு விடுவான் என்ற எண்ணம் அந்த பேதைக்கு… ஆனால் அவள் அறிவாளா? அவளின் மணி வயிற்றில் தன் உடன் பிறந்தவனின் உயிர் நீரில் ஜனிக்கப் போகும் குழந்தையை கூட தன் குழந்தைப் போல பார்த்துக் கொள்ளவும் அவன் தயார் என…

அவளிடமிருந்து இப்படி ஒரு பதில் வருமென எதிர் பாராதவன் உடல் ஒரு கணம்  ஒரே ஒரு கணம் இறுகியது.

பேசிப் பேசி ஒருவரை உயிருடன் வதைக்க முடியுமா? ஆம், அதைத் தான் வார்த்தை எனும் சாட்டையால் அவனை விலாசிக் கொண்டிருந்தாள்.

 

உடலில் நடுக்கம் பரவ. கை முஷ்டியை மடக்கி தன்னைத் தானே சமன் செய்த படி திரும்பி அவளைப் பார்த்தவன் “உடல் தேவை மட்டும் வாழ்க்கை இல்லை தியா.  நாம கடக்க வேண்டியது நிறையவே இருக்கு. எப்பவும் போல நீ என்கூட பேசுற போல பேசலாம் அதை தவிற வேற எதுவும் இப்போதைக்கு நமக்குள்ள இல்லைன்னு சொல்றதை விட காலம் எல்லாத்தையும் மாத்தும்ன்னு நினைக்கிறேன் என்றவன் இழுத்து பெரு மூச்சை விட்டுக் கொண்டவன் எதையும் நினைச்சிட்டு உன்னை நீயே குழப்பிக்காமல் போய் தூங்கு” என்றவன் திரும்பி விறு விறுவென சென்று இருந்தான்.

 

அவளும் போராடி பார்த்து விட்டாள் அரவே கேட்க மாட்டேன் என்கின்றானே!

 சலிப்பாக இருந்தது.

அவனின் விழிகளில் தெரிந்த உறுதித் தன்மை அவளுக்கு தான் அழுத்தத்தை மேலும் கூட்டியது.

குனிந்து தன் கழுத்தில் தவழ்ந்துக் கொண்டிருந்த தாலியை பார்த்தாள்.

கழட்டி எரிந்து விட வேண்டும் என்று தோன்றியது.

ஆனால், மாமா என்ன செய்வார்? அவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால்?

கத்தியின் கூர் முனையின் முன் நிற்பது போன்ற நிலையாகிப் போனது.

“விபீ… நீங்க உயிரோட இருந்து இருக்கலாமே!” என்றவள் விழிகள் மீண்டும் கண்ணீரை உதிர்க்க ஆரம்பித்து இருந்தது.

அத்தியாயம் – 21

அன்றைய இரவு எப்படி கடந்தது என்று கேட்டால் அனைவருக்கும் அது தூங்கா இரவு தான்.

விபீஷன் என்ற ஒருவனே உலகில் இல்லை என்று நினைக்கும் போதே ஜீரணித்துக் கொள்ள முடியாத வலியாக இருந்தது வீட்டினருக்கு…

அதி காலையிலேயே எழுந்த ஜெய் ஆனந்த் முதலில் சென்று தன் அன்னையை பார்த்தான்.

இன்னும் உறக்கத்தில் இருக்கின்றார் என்று தெரிந்தது.

 

ஒரு பெரு மூச்சுடன் தன் தந்தையின் அறையை நோக்கி அடிகளை எடுத்து வைக்கும் போதே, அறையைத் திறந்து கொண்டு வெளியில் வந்திருந்தார் பிரதாபன்.

இருவரின் விழிகளிலும் சொல்லோனா வேதனை.

அடக்கிக் கொண்டனர்.

“உன் அம்மா எழுந்துட்டாளா?” என்று கேட்ட பிரதாபனிடம் “தூங்குறாங்க பா. என்றவன் வெளியில் கிளம்ப…

“ஆனந்த் வீட்ல இருப்பா” என்றார் தவிப்பாக,

“புரோகிதருக்கு பணம் கொடுக்கணும் பா” என்றான்.

“ஹும், சீக்கிரம் போய்ட்டு வந்துடுபா ” என்க…

“சரிப்பா” என்றவன் கிளம்பிச் சென்று விட,

அதனைத் தொடர்ந்து சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்த ஆஹித்யாவை அமர வைத்த பவ்யா வலுக்கட்டாயமாக அவளின் சோர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே காலை உணவினை பிசைந்து ஊட்டி விட்டாள்.

இருவரையும் ஆழ்ந்து பார்த்து விட்டு அவர்களைக் கடந்து சித்ராவின் அறைக்குள் நுழைந்து இருந்தார் பிரதாபன்.

மெதுவாக விழிகளை மலர்த்தி விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சித்ராவின் அருகில் அமர்ந்தவர் அவரின் விழிகளில் இருந்து நில்லாமல் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டார்.

சட்டென திரும்பி பிரதாபனை பார்த்த சித்ராவிற்கோ அழுகை தொண்டையை அடைக்க, இதழ்கள் கீழ்நோக்கி வளைந்தன.

அவரின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவர் விழிகள் கலங்க “சித்து அழாதமா” என்றார் குரல் தழுதழுக்க…

சித்து என்ற அவரின் அழைப்பில் நொறுங்கி போனவர் “நம்..நம்ம பையன் விபீ” என்று கேவி அழ ஆரம்பித்து விட, “சித்ரா” என்றார் அழுத்தமாக…

அவரின் குரலில் விசும்பிக் கொண்டு அவரை ஏறிட, அவரின் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அழ வேண்டாம் என்பதைப் போல தலை அசைத்தவர் மீண்டும் அவரின் முகத்தை அழுந்த துடைத்து விட்ட பிரதாபன் “நம்ம பையன் விபீ ஞாபகம் வந்தால் ஜெய் ஆனந்த்தை ஒரு தடவை பார்” என்றதோடு அவரை மெதுவாக பிடித்தெழுந்து அமர உதவி செய்தார்.

என்னவோ, அவரின் வார்த்தைகளில் சட்டென சித்ராவின் அழுகை நின்று போனது.

இருவரின் மௌனமும் மொழியாக, ஒருவருக்கொருவர் உறுதுணையாகி வலியைக் கடக்க முயன்றனர்.

அனைத்து வேலைகளையும் தனி ஒருவனாக நின்று செய்தவன் அன்று வீடு வந்து சேரும் போதே மாலையைக் கடந்து இருந்தது.

வீட்டினுள் நுழையும் போதே மயான அமைதியாகத் தான் இருந்தது.

இதற்கிடையில் தியாவிடம் சாதாரணமாக பேசிக் கொண்டாலும் அவளை சங்கடப் படுத்தும் விதமாக யாரும் நடந்துக் கொள்ளவும் இல்லை.

அவளும் யாருடனும்  ஒழுங்காகப் பேசவும் இல்லை.

 

கேள்விக்கு, பதில் அவ்வளவு தான்.

துறு துறுவென துள்ளித் திரிபவள் இப்போதெல்லாம் எண்ணி எண்ணித் தான் பேசினாள்.

 

தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு நேரே வந்தவன் சித்ராவின் அருகில்  வந்தமர்ந்துக் கொண்டான். அத்தோடு நில்லாமல் அவரின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ள,

எங்கோ வெறித்த படி அமர்ந்து இருந்தவர் மகன் தன் மடியில் வந்து படுத்ததும் சட்டென அவனை பார்த்தார்.

“மன்னிச்சிடு டா” என்றார் குரல் நடுங்க…

“அம்மா பழசு எதையும் பேச வேண்டாம் பிளீஸ்” என்றவன் விழிகளை அழுந்த மூடிக் கொண்டான்.

அவனுக்கும் சற்று நேர அமைதி தேவைப் பட்டது.

 

கடந்த சில நாட்களாக தூக்கம் என்பதே அவனுக்கு தொலை தூரமாகிப் போனதாலோ என்னவோ அன்னையின் மடி தந்த அரவணைப்பில்  படுத்ததும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தான் ஜெய் ஆனந்த்.

அழுந்த விழிகளை மூடிக் கொண்டவனை பார்த்துக் கொண்டிருந்தவரின் இதழ்கள் லேசாக விரிய, “விபீ” என்றார்.

சோகம் இழையோடிய முகத்தில் மெல்லிய மலர்ச்சி.

அவரின் கரமோ மெதுவாக உயர்ந்து அவனின் சிகையை கோதிக் கொடுத்தது.

இருவரையும் பார்த்துக் கொண்டு நின்று இருந்த பிரதாபனுக்கோ தான் என்ன மாதிரியாக உணர்கின்றோம் என்று தெரியாமலேயே விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னங்களை நனைத்தது.

 

***************************************

 

இப்படியே நாட்கள் நகர்ந்து ஒரு வாரத்தைக் கடந்து இருக்க, அவனின் இழப்பை விட்டு மீள முடியவில்லை என்றாலும் ஜெய் ஆனந்த் பேசி பேசியே அனைவரையும் ஒரு நிலைக்கு கொண்டு வந்திருந்தான்.

வைத்தியன் ஆயிற்றே!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணமாகத் தன்னை உணர்த்தி இருந்தான்.

ஆனால், அவனவளுக்கு மாத்திரம் தனிமை கொடுத்து விலகி நின்றான்.

என்ன தான் அவளை தன் சரிபாதியாக்கி இருந்தாலும் இருவரும் பிரிந்தே தான் இருந்தனர்.

 

ஜெய் ஆனந்த் முன்னிலையில் நடமாடாமல் அவனை முற்றிலும் தவிர்த்து இருந்தாள் அவள்.

 

நாட்கள் நகரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு இருக்க, வித்யா உட்பட யாரும் இது பற்றி பேசிக் கொள்ளவுமில்லை என்பதால், அதுவே அவளுக்கு சாதகமாக அமைந்தது.

அவள் ஒரு கணக்கு போட்டு இருக்க, நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் இறைவன் எதற்கு?

அன்று விடுமுறை நாள். இந்நிலையில் குளியலறையில் அழுகை பீறிட்டு வர, சுவரில் சாய்ந்து நின்று இருந்தாள் பெண்ணவள்.

ஆம், விபீஷனின் உயிர் நீரில் உருவான கரு அவளின் கருப்பையில் வளர்ந்துக் கொண்டிருந்தது.

இப்படியொரு அத்தியாயத்தை அவள் எதிர்ப் பார்க்கவும் இல்லை. ஏன்? இப்படி ஒன்று நடக்க வாய்ப்பு இருக்கும் என்று ஒரு சதவீதம் கூட நினைத்துப் பார்க்கவும் இல்லையே!

என்னவென்று சொல்வாள்?

இருக்கும் மனநிலையில் அவளால் எதனையும் தெளிவாக யோசிக்க முடியவும் இல்லை.

இன்னும் படித்து முடிக்காத நிலையில் வயிற்றில் குழந்தை என்று நினைக்கும் போதே மனம் பிசைந்தது.

அந்நிலையிலும் கூட விபீஷனின் எண்ணம் வந்து மனதை அழுத்தியது.

தன்னால் தன் குழந்தையை அழிக்கும் அளவுக்கு அவளின் மனமும் இடம் கொடவில்லை.

நிச்சயம் இதனை மறைக்க முடியாது.

கரு வளர வளர வயிறும் பெரிதாகி காட்டி கொடுத்து விடும் அல்லவா?

 

தன் அன்னை என்ன நினைத்துக் கொள்வார்? யாரிடம் சொல்வதென்ற தடுமாற்றம்.

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தாள்.

வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்தது.

தடதடக்கும் இதயத்துடன் வெளியில் அவள் வந்த சமயம், அதே நேரமெனப் பார்த்து அவளின் வீட்டிற்குள் ஜெய் ஆனந்த் நுழையவும் சரியாக இருக்க, தடுமாறி பின்னால் சரிய இருந்தவளின் கையினை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் “பார்த்து வர மாட்டியா தியா?” என்று கடிந்து கொண்டான்.

முதல் முறை அவளது ஸ்பரிசம் அவனைப் பித்தம் கொள்ள வைத்திருந்தது.

சட்டென விலகி நின்றவளை ஆழ்ந்து நோக்கியவன் “அழுதியா? என்று கேட்டான்.

அவன் கேட்டதும் மீண்டும் விழிகளில் நீர் தேங்க, அவனை ஏறிட்டுப் பார்த்தவள் ஏதோ ஓர் உந்துதலில் “அம் ப்ரக்னன்ட்” என்று குரல் தழுதழுக்க கூறியிருக்க, அவனிடம் அந்த தடுமாற்றம் எல்லாம் இல்லை போலும் “கங்கிராட்ஸ்” என்றான் முகம் விகர்சிக்க, அவளோ அதிர்ச்சியாக அவனைப் பார்த்தவள் “என் வயிற்றில அவரோட குழந்தை. கழுத்துல உங்களோட தாலி என்று சொல்லும் போதே அவளின் தொண்டை அடைக்க, என்னை ஊர்ல தப்பா பேசுவாங்க மாமா பிளீஸ் என்று கைகூப்பியவள் தாலியை தூக்கிக் காட்டி   டிவோர்ஸ் பண்ணிக்கலாம்” என்றாளே பார்க்கலாம்.

அவள் என்னதான் பேசுகிறாள் என்று தன் பொறுமையை இழுத்துப் பிடித்து கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு பொறுமை இழந்து போனது.

நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் அவன் பட்ட பாடு அவனுக்குத் தானே தெரியும்.

மீண்டும் அவளை தொலைக்கும் எண்ணம் எல்லாம் அவனிடம் கொஞ்சமும் இல்லை.

 

நாட்கள் நகர்ந்தால் ஒருநிலையாகி விடுவாள். அவளுக்கும் நேரம் தேவை என பேசாமல் அமைதியாக இருந்தவன் மீண்டும் அவள் பழைய பல்லவியை பாடத் தொடங்க, கோபத்தில் நரம்புகள் புடைத்துக் கிளம்பின.

தன்னை முயன்று சமன் படுத்திக் கொண்டவன் அவளின் கேள்விக்கு பதில் கூற விரும்பாது “என் குழந்தையை ஸ்கேன் பண்ணி பார்க்கணும்னு ஆசைப் படுறேன் சோ சீக்கிரம் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்றவன் அவளைத் தாண்டி வீட்டிற்குள் நுழைந்து இருந்தான்.

அவனின் ‘என் குழந்தை’ என்ற விளிப்பில் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

தலையோ விண்விண்ணென்று வலித்தது.

“மாமா, இது சரிபட்டு வராது தயவு செஞ்சு அப்படி மட்டும் சொல்லாதீங்க. என்னை என்ன நினைப்….?” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளைக் கண நேரத்தில் நெருங்கி கழுத்தில் இருந்த தாலியை விழிகளால் சுட்டிக் காட்டியவன் “நான் உயிரோட இருக்க வரையும் உன் வாய்ல இருந்து டிவோர்ஸ்ங்குற வார்த்தை வரக் கூடாது என்றவன் தொடர்ந்து இது என் குழந்தை தான் அதை உன் மைண்ட்ல நல்லா பதிய வச்சுக்கோ. மறுபடியும் சொல்றேன் நீ நினைக்கிற போல ஊர்ல யாரும் உன்ன பத்தி பேச போறது கிடையாது அப்படி தப்பா பேசினால் நடக்கிறதே வேற என இறுகிய குரலில் சொன்னவன் என்ன நினைத்தானோ சட்டென புன்னகையில் இதழ் விரிய, “சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா. வெயிட் பண்றேன்” என்றவன் அதே மாறாப் புன்னகையுடன் திரும்பி நடந்தான்.

போகும் அவனை இமை சிமிட்டாமல் பார்த்தவள் கால்கள் அவளின் அறையை நோக்கி நகர்ந்தன.

அடுத்த சில மணித்தியாலத்தில் ஆயத்தமாகி வெளியில் வந்தவள் கண்டது என்னவோ மலர்ந்து சிரித்த முகத்துடன் அவளை வந்தணைத்துக் கொண்ட சித்ராவைத் தான்.

அவளோ புரியாமல் விழிக்க, அவரின் வயிற்றை மிருதுவாக வருடியவாறு “என் பையன் விபீ” என்று சொல்லிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

அதற்குக் மாமா கூறி விட்டாரா?

சங்கடமாக உணர்ந்தாள்.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவராக அவளை வந்து பார்த்து ஒரு வழி பண்ணி விட, அவளுக்கு தான் தடுமாற்றமாக இருந்தது.

 

பாரிய இழப்பை ஈடு கட்டும் விதமாக எதிர் பாராத திருப்பமாக இருந்தது.

விபீஷனின் குழந்தை என்றதும் ஏதோ அவனே ஜனித்து விட்டது போலொரு எண்ணம்.

அவளை விடாது ஆசையாக அருகில் இருந்த சித்ராவை பார்த்த பிரதாபன்  “போதும் சித்ரா அவளை விடு” என்க.

அதற்கு அவரிடமிருந்து ஒரு முறைப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

கதவின் நிலையில் சாய்ந்து நின்ற படி தன் அன்னையின் கையணைவில் நின்றிருந்த ஆஹித்யாவின் முக உணர்வுகளைத் தான் அவதானித்துக் கொண்டு நின்று இருந்தான் ஜெய் ஆனந்த்.

அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுள்.

அவனவள் அல்லவா!

தன் குழந்தையாகவே நினைத்து விட்டான் போலும்.

வீட்டினரின் மகிழ்ச்சியின் இடையில் செல்லவும் மனம் ஒப்பவில்லை.

இதற்கிடையில் வாசலில் நின்று இருந்த ஜெய் ஆனந்த்திடம் “ஆனந்த் என்ன வெளில நிற்கிற? உள்ள வா” என்றழைத்தார் வித்யா.

“ம்ம்” என்றபடி உள்ளே வந்தவன் பார்வை மொத்தமும் அவளில் மட்டுமே இருந்தது.

தன்னை யாரோ உற்று நோக்குவது போலிருக்க, பார்வையை திருப்பி பார்த்தவள் ஜெய் ஆனந்த்தின் ஆழ்ந்த பார்வையில் விழி விரித்தவள் மனதிலோ சட்டென ஓர் கேள்வி உதித்தது.

அத்தியாயம் – 22

அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே “ஹாஸ்பிடல் போகலாமா?” என்று கேட்டு இருந்தான்.

அனைவரின் முன்னிலையிலும் சட்டென கேட்டு விட, அவளுக்கோ தர்மசங்கடமாகிப் போனது.

“ஆஹித்யா, என்ன முழிச்சிட்டு இருக்க கிளம்பி போமா” என்று சித்ரா சொல்லவும் தான் “ம்ம்” என்று சொல்லிக் கொண்டவள் முன்னே செல்ல, “இதை சாப்பிட்டு போடி”  எனக் கத்திக் கொண்டே சமையலறைக்குள் இருந்து வேகமாக ஓடி வந்த வித்யா, அவளின் வாயில் இனிப்பைத் திணிக்க, அவள்  தான்  இவர்கள் செய்யும் கூத்தில் திணறி விட்டாள்.

கடினப்பட்டு விழுங்கியவள் ஒரு தலை அசைப்புடன் வெளியேறினாள்.

 அவளைப் பின் தொடர்ந்து சென்ற ஜெய் ஆனந்த், “தியா” என்றழைத்தான்.

என்ன என்ற ரீதியில் அவள் திரும்பிப் பார்த்தாள்.

இதழ் குவித்து ஊதிக் கொண்டே நெற்றியை நீவிக் கொண்டவன் “பீல் ப்ரீ, எதுக்காக இவ்வளவு தடுமாற்றம்?” என்று கேட்டான்.

வெளியில் சொல்ல முடியாத அவளின் மனப் போராட்டம்  அவளுக்கல்லவா தெரியும்?

“எப்படி மாமா?  இன்னும் நான் மெண்டலி ரொம்ப டவுனா இருக்கேன்” என்றாள் வெளிப்படையாக…

ஒருவேளை விபீஷன் இறந்ததில் இருந்து இன்னும் தன்னை மீட்டுக் கொள்ள முடியாமல் திணறுகின்றாளா ? என்று எண்ணிக் கொண்டவன் மனம் துனுக்குற்றது.

“எதுக்கும் பீல் பண்ண தேவை இல்லை தியா, ஐ க்னோ அவனோட இழப்பு பெருசு தான். அதையே நினைச்சிட்டு இருந்தா மட்டும் திரும்ப அவன் வந்துட போறானா என்ன? என்றவன் விழிகளை அழுந்த மூடித் திறந்து இப்போ இந்த நொடி உனக்கானது சோ உன்னை சுத்தி உனக்காக நம்ம பேமிலி அண்ட் இப்போ கூடவே நம்ம… என்றவனை வலியோடு ஏறிட்டு பார்க்க, அவளுக்கு என் குழந்தை என்று தான் விளிப்பது பிடிக்கவில்லை என்று உணர்ந்து கொண்டவன் மாற்றி உன் குழந்தையும் வந்தாச்சு என்று சொன்னவன் வெயிட் பண்ணு தியா கார்ல போகலாம்” என்றவன் திரும்பி நடக்கும் போது, அவனது புன்னகை முகம் சட்டென சோகத்தை அப்பிக் கொண்டது.

இதழ் கடித்து உணர்வுகளை அடக்கிக் கொண்டான்.

தான் இன்னும் அவளை பாதிக்கவில்லையா? என்று மனம் கேள்வியை எழுப்ப, அவனது மூளையோ, அவள் உன்னை காதலிக்க வேண்டும் என்றா எதிர்ப்பார்த்து அவளை திருமணம் செய்தாய்? என கேள்வியை எழுப்ப, சட்டென தன்னை நிலைப் படுத்திக் கொண்டு காரைக் கிளப்பிக் கொண்டு வந்து அவளின் முன் நிறுத்த, அவளும் ஏறிக் கொண்டாள்.

இருவரின் இடையே பலத்த மௌனம் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தது.

குரலை செருமிக் கொண்டவள் “வீட்ல என்னனு சொன்னிங்க?” என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவள் கேட்க, “வாட்? என்ன சொன்னேன்?”

அவளோ, தன் வயிற்றை பற்றிக் காட்ட, மென் புன்னகையுடன் “ஷி இஸ் ப்ரக்னன்ட் அப்படின்னு சொன்னேன் இதுல என்ன இருக்கு?” என்றவனை சங்கடமாக பார்த்தவள் “அவ்ளோ தானா? வீட்டுல என்னனு ரியாக்ட் பண்ணாங்க?” என்று கேட்க…

“நீயே பார்த்த தானே அப்புறம் என்ன கேள்வி?”

“ஹான், அது இல்ல..  நீங்க சொன்னப்போ” என்று கேட்டவளின் குரலில் இருந்த தவிப்பை தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டவன் “முதல்ல ஷாக் ஆனாங்க பிறகு ஹேப்பியா பீல் பண்ணாங்க” என்றதும் “ம்ம்” என்று சொல்லிக் கொண்டவள் வேறேதும் பேசாமல் அமைதியாக வர, மேலும் அவளை பேசி குழப்பத்திற்கு உட்படுத்தாமல் தனது மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான்.

சற்று நேரத்திலேயே வந்தடைந்தவன் வேகமாக கதவைத் திறந்துக் கொண்டு இறங்கினான்.

அவளுக்காக அவன் கதவை திறக்க வருவதற்குள், அவளே சட்டென இறங்கிக் கொண்டாள்.

 

அன்னையோடு மருத்துவமனையை நிர்மாணிக்கும் போது வந்தவளுக்கு அதன் பின் சென்று பார்ப்பதற்கு நேரம் கிடைக்காது போக இப்போது முழுதாக கட்டப்பட்டு உயர்ந்து நிற்கும் மருத்துவமனையைப் பார்த்து பிரமித்து போனாள்.

அவளின் விழிகளில் தெரிந்த வியப்பு, அவனின் இதழ்களில் மென் புன்னகையை வரவழைத்து இருந்தது.

“தியா, வா உள்ள போகலாம்” என்று கரத்தை நீட்ட, அவளோ அவனையும் கரத்தையும் மாறி மாறி பார்த்தவள் என்ன செய்வது என்று தடுமாற, சட்டென கரத்தை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவன் முன்னேறி செல்ல, அவளும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெய் ஆனந்த்தின் முகத்தில் தெரிந்த பூரிப்பு அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்க, அவனைப் பின் தொடர்ந்து வருபவளின் மேல் தான் படிந்தது.

அனைவரையும் ஒரு தலை அசைப்புடன் கடந்தவன் அவளைக் கூட்டிச் சென்றது என்னவோ ஸ்கேன் செய்யும் அறைக்கு தான்.

 அறையோ வெறுமையாக இருக்க,  “மாமா,டாக்டர் எங்க?” என்று கேட்டவளிடம் “என்ன பார்த்தா டாக்டர் போல தெரியலையா?” என்று கேட்டுக் கொண்டே கிளவுஸ்ஸை அணிந்துக் கொண்டு அவளை நெருங்கியவனிடம்  “என்ன? நீ… நீங்களா ஸ்கேன் பண்ண போறீங்க?” எனத் திணறினாள் அவள்.

“இந்த ஹாஸ்பிடல்ல நானும் என் ப்ரெண்ட் நவீனும் தான்மா கைனோ டாக்டர்ஸ். அவன் லீவ்ல இருக்கான். என்றவன் மாஸ்க்கை அணிந்துக் கொண்டே அந்த பெட் ல படு” என்க.

மறுத்து பேச முடியுமா என்ன?

தன் வயிற்றை காட்ட வேண்டுமா? ஹையோ எப்படி? என்று  எண்ணங்கள் அணிவகுக்க, அவளின் மனமோ ‘ ஓவரா திங்க் பண்ணாம போடி’ என்று கட்டளையிட, தவிப்புடன் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டவள் தான் அணிந்து இருந்த டாப்பை மேலே உயர்த்தி விட்டு, இறுக விழிகளை மூடிக் கொண்டாள்.

சாதாரணமாக வேறொரு வைத்தியர் என்றால் இவ்வாறு தயக்கம் வந்திருக்காதோ என்னவோ! அவ் இடத்தில் ஜெய் ஆனந்த் என்றதும் சட்டென ஒரு தயக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாத நிலை தான் அவளுக்கு….

இதற்கிடையில் அவளின் மணி வயிற்றில் எப்போது ஜெல்லை பூசினான் என்று அவளுக்கே தெரியாது.

இறுக விழிகளை மூடி இருந்தவளிடம் “ஹே… தியா லுக் அட் த ஸ்கிரீன்” என்றான்.

அவனின் குரலில் சட்டென விழிகளை திறந்தவள் திரையில் தன் பார்வையை நிலைக்க விட்டாள்.

 அவளின் கருப்பையில் சிறிதாக ஒரு புள்ளி போலிருந்தது குழந்தை.

அதைக் கண்ட நொடியே அவள் மேனியோ சிலிர்த்து அடங்கியது.

உணர்ச்சிப்பெருக்கில் சட்டென திரும்பி ஜெய் ஆனந்த்தை பார்த்தாள்.

அவனது பார்வை மொத்தமும் திரையில் இருக்க, இதழ்களோ புன்னகையில் விரிந்து இருந்தன.

அது மட்டுமா என்ன? அவனது விழிகளில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

மாமாவை வெறுக்கும் உடன் பிறந்தவன் மீது இவ்வளவு அன்பா? அதுவும் அவனது குழந்தை என்றதும் இத்தனை மகிழ்ச்சி ஒருவனால் பட முடியுமா? என பிரமிப்பாக இருந்தது.

“இட்ஸ் மை பேபி” என்றவன் வார்த்தையில் என்ன தோன்றியதோ, அவனை இமைக்காது பார்த்திருந்தவளோ “ம்ம் உங்களோட குழந்தை தான்” என்றிருந்தாள் பெண்ணவள்.

விழிகள் இரண்டும் பெரிதாக விரிய, தன் செவிகளில் வந்து வீழ்ந்த வார்த்தைகளில் நம்ப முடியாது “வாட் க.. கம் அகைன்?” என்றான்.

“எஸ், மாமா உங்களோட குழந்தை தான்” என்றவள் விழிகளில் இருந்தும் கண்ணீர்.

அவளை அள்ளி அணைத்து கொள்ள வேண்டும் என்று கரங்கள் இரண்டும் பரபரத்தன.

சட்டென நிதானித்து தன்னை அடக்கிக் கொண்டான்.

“தேங்க்ஸ் தியா” என்றவன் அவளின் உடையை சரி செய்து விட்டு எழுந்துவிட்டான்.

நெகிழ்ச்சியில் இன்னும் சிறிது நேரம் இருந்தால் கூட அவளை அணைத்து விடுவோமோ என்று அச்சம் கொண்டவன் மேசையில் வைத்திருந்த நீரை எடுத்து அருந்தினான்.

கட்டிலை விட்டு எழுந்தவள் மனம் தன் கருவைக் கண்ட தருணத்திலிருந்து உவகைக் கொண்டது.

சற்று முன் வரை தான் இருந்த மனநிலை என்ன? இப்போது தான் இருக்கும் மனநிலை என்ன? என்று யோசித்தாள்.

அனைத்திற்கும் காரணமணவனோ அவள் முன் நின்று இருந்தான்.

உடன் பிறந்தவன் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் மாமாவை இனிமேல் காயப்படுத்துவது போல நடந்து கொள்ள கூடாது என தெளிவாக ஓர் உறுதியான  முடிவை எடுத்து இருந்தாள்.

யோசனையாக நின்று இருந்தவள் முன் வந்து நின்றவன் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை அவளின் கையை பிடித்து வைத்தான்.

ஆசையாக படத்தைப் பார்த்து அதை வருடியவள் “ரொம்ப தேங்க்ஸ் மாமா. என் குழந்தையை பார்த்ததும் என்னவோ மனசு லேசானது போல இருக்கு என்றவள் மீண்டும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்க…

“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் அப்படி சொல்லி என்னை விலக்கி நிறுத்த முடியாது அம் ஆல்சோ டாட் டூ மை பேபி”

“சரி சரி நீங்க தான் போதுமா?” என்றவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

“இதுவே போதும் என்று ஆழ்ந்த குரலில் சொன்னவன்  குரலை செருமிக் கொண்டே நீ மெண்டலி ஸ்ட்ரெஸ்ஸாகி இருக்க சோ உனக்காக சைக்கார்டிஸ்ட்  பிரிபர் பண்லாம்ன்னு நினைச்சேன் பட் யூ ஆர் பேர்பெக்ட்லி ஆல்ரைட். உனக்கு கொன்சல்டிரேஷன் தேவைப் படாது” என்றிட…

“ஓஹோ, என்னை பைத்தியகாரி ரேஞ்சுக்கு பீல் பண்ண வைச்சிட்டேனா? என்று கோபமா கேட்டாள் பாவை.

“நாட் லைக் தட், ட்ரஸ்ட் மீ தியா” என்று அவசரமாக சொல்ல… “டென்ஷன் ஆகாதீங்க மாமா” என்றவள் நீண்ட நாட்களுக்கு பிறகு இதழ் பிரித்து சத்தமாக சிரித்தாள்.

“நான் என்… என்றவள் திருத்தி நம்ம குழந்தையை பார்க்குற வரை வாழ்க்கையே வெறுத்து போன போல தான் இருந்தேன் பட் ஏனோ ஒரு மாற்றம் குழந்தையை பார்த்ததுமே எனக்குள்ள” என்றாள் .

இது போதுமே அவனுக்கு.

அவளும் குழந்தையும் போதுமே அவனின் ஆயுள் முழுதும்.

இப்போதே இறந்து போ என்றாலும் சந்தோஷமாக சாகக் கூட அவன் தயார் தான். ஆனால் தன்னவள் மற்றும் தன் குழந்தைக்காக வாழ வேண்டும் என்ற வெறி அதிகரித்தது.

இருவரும் பேசிக் கொண்டே காரில் ஏறி புறபட்டிருக்க,  வீட்டிலோ அவர்களை இணைக்க வேண்டும் என்ற திட்டத்தை போட்டு வைத்திருந்தனர்.

அத்தியாயம் – 23

இருவரும் இணைந்து வீட்டிற்குள் நுழையும் போதே அனைவரும் ஹாலில் தான் அமர்ந்து இருந்தனர்.

கடந்த நாட்களாக ஆஹித்யாவின் முகத்தில் இல்லாத பூரிப்பு இப்போது இருந்தது.

அவளோ, வித்யாவிற்கும் சித்ராவிற்கும் இடையில் அமர்ந்துக் கொண்டு தன் கரத்திலேயே பத்திரப் படுத்தி வைத்திருந்த ஸ்கேன் செய்த குழந்தையின் புகைப் படத்தை காட்ட, அதை முதலில் அதை வாங்கிப் பார்த்தது என்னவோ சித்ரா தான்.

“மா பவ்யா எங்க?” என்று கேட்டாள் ஆஹித்யா.

“ஏதோ எக்ஸாமாம் டி வீட்டுல படிச்சிட்டு இருக்கா” என்று சொன்ன வித்யாவும் சித்ராவுடன் இணைந்து கொள்ள, “சீக்கிரம் தாங்க அவகிட்ட காட்டணும்” என்க.

“பொறுமையா இரேன்டி” என்ற வித்யா அவளை வைய, இதழ்களை சுளித்து விட்டு எழுந்து கொண்டாள்.

மூவரையும் பார்த்துக் கொண்டு இருந்த பிரதாபன் அருகில் அமர்ந்திருந்த ஜெய் ஆனந்த்தின் கரத்தை இறுக பற்றிக் கொண்டே “மருமகளை நம்ம வீட்டுக்கு நிரந்தரமா வர சொல்லணும்பா உனக்கு சம்மதம் தானே ” என்று விட,

சட்டென அவரைத் திரும்பி பார்த்தவன் புருவம் மேலேறி இறங்க “ம்ம், கண்டிப்பா… வாழ்க்கை முழுக்க இப்படியே தூரத்துல இருந்து பார்த்திட்டு இருக்கதா இருந்தாலும் கூட எனக்கு ஓகே தான். ஆனால் அவள் சம்மத்திச்சா மட்டும் தான் அப்பா என்றவன் விழிகளை அழுந்த மூடித் திறந்து மறுபடி அவ சம்மதம் இல்லாமல் எதையும் பண்ண இஷ்டம் இல்லை பா” என்று சொல்லி இருந்தான் ஜெய் ஆனந்த்.

“இப்போவே கேட்டுடலாம் டா” என்று சொல்ல …

அவனிடம் சட்டென ஒரு தடுமாற்றம்.

ஆம், அவள் சம்மதம் சொல்வாளா என்ற தடுமாற்றம் தான் அது.

“நான் ரூம்க்கு போறேன். முடிவு பண்ணிட்டு சொல்லுங்க” என்றவன் எதில் இருந்தோ தப்பித்து விடுவது போல எழ முயல, அவனின் கரத்தைப் பற்றி பிடித்து எழ விடாமல் தடுத்தவர் “எவ்வளவு நாளைக்கு ஓட போற ஆனந்த்? உன் காதலுக்காக நீ தான் போராடனும். எதுவும் யாருக்குமே நினைச்சதும் கிடைச்சிடாது. உனக்கு புறியும்ன்னு நினைக்கிறேன்” என்றவர் திரும்பி ‘ஆஹித்யா’ என்று சத்தமாக அழைத்து இருந்தார்.

அவர் அழைத்ததும் இருவருடனும் பேசிக் கொண்டு நின்றிருந்தவள் “வரேன் மாமா” என்று சொல்லிக் கொண்டே பிரதாபனின் மறுபுறம் வந்தமர்ந்துக் கொண்டவள் “சொல்லுங்க மாமா” என்றாள் பணிவாக…

குரலை செருமிக் கொண்டே அவளின் தலையை வருடியவர் “காலம் முழுக்க என் பையன் ஜெய் ஆனந்த் கூட இந்த வீட்டுல வாழ சம்மதமா?” என்று கேட்டு விட, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

விழிகள் விரிய, மறுபுறம் இருந்த ஜெய் ஆனந்த்தை பார்த்தாள்.

உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அவனோ இதழ்களை பிதுக்கிக் கொள்ள, “அவன் உன் சம்மதம் இல்லாமல் மறுபடி உன்ன கஷ்டப்படுத்த விரும்பலனு சொல்லிட்டான் மா” என்றிட.

இது அனைத்தும் கேட்டும் கேட்காத போல அமர்ந்திந்தனர் வித்யாவும் சித்ராவும்.

 

விதவையான எனக்கு தாலி கட்டி விட்டான். உடன் பிறந்தவன் குழந்தையை தன் குழந்தை போல எண்ணுகிறான். இப்போது அவளின் மனநிலையை கருத்தில் கொண்டு  சம்மதம் வேண்டி நிற்கின்றான்.

உண்மையில் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

 இப்படியே விட்டால் கூட இருந்து விடுவாள் தான்.

ஆனால், இம்முறை அவளோ நிதானமாக சிந்தித்தாள்.

“மாமா எனக்கு டைம் கொஞ்சம் தர்றீங்களா அப்புறம் சொல்றேன்” என்று சொல்ல…

வித்யாவோ “என்னடி பதில் இது?” என்று கடிய, நெற்றியை அழுத்தி விட்ட படி “அத்தை, எனக்கு அவளோட சம்மதம் வேணும் சோ யோசிச்சு சொல்லட்டும்” என்று சொல்லியே விட்டான்.

“ஜெய் மாமா இப்பவே நான் உங்ககிட்ட பேசணும்” என்றாள் சட்டென.

பின்னே, இப்படியே விட்டால் நாளை ஊரில் பலவாறு பேசுவார்கள் என்றால் வீட்டில் முதன் முதலாக பிறக்கப் போகும் வாரிசின் நிலை என்னவாகும்? என்றெல்லாம் எண்ணி அவர்கள் பேசி முடிவெடுத்து இருக்க இப்போது இவள் வேறு பேச வேண்டும் என்கின்றாளே! என்ற தவிப்பு வித்யாவிடம்…

அவனோ, இதழ் குவித்து ஊதிக் கொண்டே எழுந்தவன் “ரூப்டாப்க்கு வா பேசலாம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்று விட, இருவரையும் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ வீட்டினர் தான்.

அதனைத் தொடர்ந்து அவளும் மேலேறி சென்று குரலை செரும, அன்று முதல் நாள் வீட்டிற்கு வந்த அன்று அவளின் தோற்றம் நினைவுக்கு வந்தது.

இதே போல தானே கையில் காஃபியுடன் தன்னைக் காண வந்திருந்தாள்.

அவளை ஆழ்ந்து பார்த்து அனைத்தையும் நினைத்து ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டவன் “சொல்லு என்ன பேசணும்?” என்று கேட்டான்.

“நான் பேசுறது உங்களுக்கு ஹர்ட் ஆகலாம் பட் கேட்டே ஆகனும்னு தோணுது” என்றாள்.

அவனோ இதழ் பிரித்து புன்னகைத்தவன் “நான் ஹர்ட் ஆக கூடாதுன்னு தானே அவேர்னஸ் கொடுத்திட்டு கேட்க போற சோ எனக்கு அதுவே சந்தோஷம் தான்” என்றவன் அவளை கேள்வியாக நோக்க, அவன் கூறியதும் தான் அதனையே அவள் கவனித்தாள்.

ஆக, அவள் மனம் கூட அவனின் மனம் காயப்பட கூடாது என்று விரும்பியது போலும்.

“என் சம்மதம் இல்லாமல் தான் தாலி கட்டி இருக்கீங்க பட் இப்போ மட்டும் என் சம்மதம் கேட்க காரணம் என்னவோ?” என்று கேட்டு இருந்தாள்.

அக் கேள்வியை அவன் எதிர்ப் பார்த்து இருந்தான் போலும், “மறுபடி உன் சம்மதம் கேட்காமல் எதும் பண்ண கூடாதுன்னு தோணிச்சு தட்ஸ் ஆல்” என்று தோள்களை குலுக்க,

“ஓஹோ, சரி தான் என்றவள் தொடர்ந்து எதுக்காக அன்னைக்கு எனக்கு தாலி கட்டுனீங்க?” என்ற அடுத்த கேள்வி அவளிடமிருந்து வர, ஒரு கணம் என்ன பதில் சொல்வது என்றே திணறி விட்டான்.

இப்போது போய் காதல் தான் காரணம். அதுவும் நீ அழுது துடிப்பதையும் உன்னை விதவை கோலத்தில் பார்க்க முடியாது என்று அவளிடம் பிதற்றவா முடியும்?

சட்டென சமாளிக்கும் விதமாக “அதை தான் அப்போவே நான் சொன்னேனே தியா” என்று சொல்ல..

அவள் இருந்த அழுத்தத்தில் அதையெல்லாம் கிரகிக்கும் மனநிலையிலா இருந்தாள்?

“ஞாபகம் இல்லையே” என்றாள் இதழ்களை பிதுக்கி…

“இப்போ எதுக்காக பழசை பேசிட்டு இருக்க? என்றவன் எனக்கு உன் சம்மதம் வேணும் அவ்வளவு தான். வாழ்க்கை முழுக்க உனக்கு ஒரு நல்ல நண்பனா நம்ம பேபிக்கு ஒரு நல்ல அப்பாவா இருப்பேன் ஐ ப்ரோமிஸ் யூ என்றவன் நிறுத்தி எப்பயாவது என்று குரலை செருமிக் கொண்டவன் என்மேல எப்பவாவது காதல் வந்தால் சொல்லலாம் தப்பில்ல. டைம் இஸ் சேஞ்ச் எவ்ரிதிங்” என்க…

 அவனது பேச்சில் அவள் தான் வாயடைத்து நின்று இருந்தாள்.

கடைசியாக அவன் கூறியதை ஒழுங்காக கிரகித்து இருந்தாலே இப்போதே அவனின் அவள் மீதான காதல் புரிந்து இருக்குமோ என்னவோ!

மொத்தமாக அவனின் கரை காணாத காதலை புரிந்துகொள்ளும் நொடி அவளின் நிலை?

காற்றில் அசந்த தன் அடர்ந்த கேசத்தை கோதிக் கொண்டே ஆழ்ந்து பார்த்தவன் “ஓகேவா?” என்று கேட்டான்.

அவளால் மறுத்து பேச காரணம் வேறேது?

நண்பனாக இருப்பேன் என்று சொல்லி விட்டான் இப்போதைக்கு அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது என்றாலும் அதையும் தாண்டி முன்பிருந்தே அவன் மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கையும் மரியாதையும் அவளை அடுத்த கணமே சம்மதம் சொல்ல வைத்து இருந்தது.

தலையை குனிந்து நிலத்தை பார்த்துக் கொண்டே “ஓகே” என்றவள் என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

சட்டென அவளால் இவ் உணர்வுக்கு பெயர் கொடுத்திட முடியவில்லை.

அவள் பட்ட ரணம் பெரிதல்லவா!

வேகமாக கீழிறங்கி வந்தவளைத் தான் மொத்த குடும்பமும் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

தலையை தாழ்த்திய படியே “சம்மதம் “ என்று சொல்ல அதன் பின்னர் சொல்லவும் வேண்டுமா?

வலிகள் இருந்தாலும் தற்சமையத்திற்கு அவளின் சம்மதம் ஆறுதலை அளித்து இருந்தது.

துயரத்தின் சுமையோடு நாட்கள் வாரங்களாக உருண்டோடின.

ஜெய் ஆனந்த்திற்கும் அவளுக்கும் இடையே மெல்லிய நட்பு என்ற பந்தம் இழையோடிக் கொண்டு இருந்தது.

இடைப்பட்ட நாட்களில் அவளின் நலன் கருதி அவனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வேண்டிய சிகிச்சைகளை செய்து கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவளின் கூட்டிற்குள் இருந்து வெளி வர ஆரம்பித்து இருந்தாள் அவள்.

அதனாலோ என்னவோ உரிமையாக எது வேண்டும் என்றாலும் ஜெய் ஆனந்த்திடம் கேட்கும் அளவுக்கு முன்னேற்றம் தோன்றியிருந்தது.

அதோ இதோ என அந்த மாதத்தின் முப்பதாம் நாளும் வந்திருக்க, அன்று மோட்ச திதியை செய்து கொண்டு இருக்கும் போதே தன் இளைய மகன் இவ்வுலகில் இல்லை என்ற நிதர்சனம் உரைக்க, கதறி தீர்த்து விட்டார் சித்ரா.

அத்தியாயம் – 24

இரண்டு மாதங்களுக்கு பிறகு….

மூன்று மாதக் கருவுடன் கொஞ்சமாக மேடிட்ட வயிற்றைப் பிடித்துக் கொண்டே மெதுவாக தன்னை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்த தன்னவளை தான் இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஜெய் ஆனந்த்.

 

அவளோ அவனைக் கண்டு புன்னகைக்க, பதிலுக்குப் புன்னகைத்தவனோ “உன்ன யார்டி இவ்வளவு தூரம் வர சொன்னது டோண்ட்  ஸ்ரெயின்” என கடிந்து கொண்டே அவள் அவனை நெருங்கும் முன்னரே அவளை தனது தோளோடு அணைத்த படி குளக்கட்டின் அருகில் இருந்த கட்டில் அமர வைத்தான்.

 

அவளோ “எனக்கும் மீன் பிடிக்க ஆசையா இருக்கே மாமா நான் என்ன பண்ணட்டும்? என்றவள்  முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள, “வாட் நீயா?” என்று அதிர்ந்து கேட்டவனிடம் “பிளீளீஸ் ஜெய் மாமா பிளீஸ்” என்று விழிகளைச் சுருக்கி கெஞ்சியவள் அவனின் பதிலை எதிர்ப் பார்த்திருக்க…

அவள் அவனை பிரத்தியேகமாக அழைக்கும் அவனது பெயரை கூப்பிட்டு விட, இனி சொல்லவா வேண்டும் அவனது மூளையோ வேண்டாம் என்றிட, அதற்கு மாறாக அவனது மனதோ அவளுக்கு அனுமதி அளிக்க கட்டளையிட்டது.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை பார்த்தவன் “பட் ஒன் கண்டிஷன்” என்றான்.

 

அவளோ, ஆர்வத்தில் “என்ன மாமா” என்றிட…

 

“வெயிட் ” என்றவன் அவளை மெதுவாகப் பிடித்து எழ வைத்தவன் திரும்பி குளக்கட்டின் அருகே இருந்த தூண்டிலை எட்டி எடுத்தவனிடம் “கண்டிஷன் என்னனு சொல்லலையே” என்று அவள் மீண்டும் கேட்க…

 

அவளுக்கு பதில் கூறாமல்  கண நேரத்தில் அவளின் பின்னோடு அவளை உரச நின்று இருந்தான்.

அவனின் மூச்சுக் காற்று அவளின் பின்னங் கழுத்தை வருட, அவளுக்கோ அவன் மேல் ஏற்கனவே தோன்றி இருந்த உணர்வுப் பிரவாகம் இப்போது தாறுமாறாக எழ, சிலிர்த்துப் போன பாவையின் இதழ்களோ “ஜெ…ஜெய்” என்று அவனின் பெயரை காற்றிற்கும் கேட்காமல் உச்சரித்து இருந்தன.

ஆம், காதல் என்றால் இது தான் என்று அவனின் அரவணைப்பில் அன்பிலும் நெகிழ்ந்து போயிருந்தவளுக்கு அவன் மேல் பிடித்தம் ஏற்பட்டது.

அதுவும் இந்த மூன்று மாதங்களில் அவன் மீது காதல் வருமென்று நினைத்தும் பார்க்கவில்லையே!

ஆனால், அவனிடம் கூறவில்லை. அதில் என்னவோ ஓர் தயக்கம்.

நண்பனாக தள்ளியிருந்து அனைத்தும் பார்த்து பார்த்து செய்பவனிடம் காதல் என்று கூறினால்? தன்னை என்ன நினைப்பான்? என்ற உணர்வு ஒரு பக்கம் இருந்தாலும் தான் மாமாவுக்கு ஏற்ற துணை அல்ல என்று சில நேரம் மனதை பிசையும் எண்ணங்கள் அவளை அலைக்கழித்தன.

அவனின் செயல்களிலும் கூட அவனின் தூய்மையான அன்பை உணர்ந்துக் கொண்டவளுக்கு அதற்கு பின் இருக்கும் காதலை அறியாது போனாள் பெண்ணவள்.

இதோ இப்போதும் அவளையும் மீறி ஜெய் என்று காற்றுக்கும் கேட்காத குரலில் அழைத்து இருக்க, அவளின் அழைப்பில் அவன் தான் வியந்து போனான்.

அவளின் கரத்திற்கு தூண்டிலை இடம் மாற்றியவன் அவளின் கரத்தின் மேல் கரத்தை வைத்து தூண்டிலை நீரினுள் போட, அவளுக்கோ அவனின் ஸ்பரிசம் சுகவதையாகியது.

“மா…மாமா… போதும் நீங்களே…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தூண்டிலில் மீன் சிக்கிக் கொள்ள, “வெயிட், அப்படியே ஸ்லோ தூக்கி எடு” என்றவன் கவனம் முழுதும் தூண்டிலில் இருக்க, அவளுக்கோ எப்போதுடா அவனின் கைவளைவிற்குலிருந்து விடுபடுவோம் என்றே தோன்றியது.

ஒரு சில வினாடிகளில் மேலே தூண்டிலை உயர்த்திக் காட்ட, அவளோ “இவ்வளோ பெருசா இருக்கே பட் தூக்கும் போது வெய்ட்டா இல்லையே” என்றவள் மெதுவாக விலகிக் கொண்டாள்.

அவளை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்தவன் “சரி தான் வெய்ட்டாவே இல்ல என்றவன் இதழ்களுக்குள் சிரித்த படி ஏற்கனவே பிடித்து சேகரித்து வைத்திருந்த மீன்கள் அடங்கிய பக்கெட்டினை ஒற்றை கரத்தில் தூக்கிக் கொண்டவன் போகலாமா?” என்று கேட்க…

மென் புன்னகையுடன் “போகலாமே என்றவள் என்னவோ கண்டிஷன்னு சொன்ன போல நினைவு” என்றாள் கிண்டலாக…

‘ சரியான டியூப்லைட்’ என்று மனதில் சொல்லிக் கொண்டவன் இதழ் குவித்து ஊதிக் கொண்டே நானும் சேர்ந்து உன்கூட…” என்றதும் “ஹான்… ஓகே ஓகே புரிஞ்சுது” என்று அவசரமாக சொன்னவள் பக்கவாட்டாகத் திரும்பி வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டாள்.

பாவம், அவளின் இதே புன்னகை சற்று நேரத்தில் முற்றிலும் தொலையப் போகின்றதென அவள் அறிந்திருக்கவில்லை.

இருவரும் ஒன்றாக வீடு வந்து சேர, பிரதாபனோ “ஆனந்த் கொஞ்சம் இந்த கணக்கை சரி பார்த்து சொல்லுடா. ரொம்ப நேரமா எங்கயோ பிழைக்கிற போல இருக்கு” என்று சொல்ல…

“கொடுங்க பார்க்கலாம்” என்றவன் அங்கேயே நின்று பார்க்க ஆரம்பித்து விட, “மாமா, அப்போ நான் ரூம்கு போறேன்” என்று விட்டு மாடியேறி சென்றவளை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு பிரதாபன் கொடுத்த கணக்கை சரி பார்க்க ஆரம்பித்து விட்டான்.

மாடியேறி வந்தவள் அறைக்குள் நுழைய போகும் சமயம், பக்கத்து அறைக் கதவு லேசாக திறந்து இருப்பதைப் பார்த்தாள்.

“ஹையோ! க்ளீன் பண்ணா எப்பவும் அத்தை ரூம் அஹ் பூட்ட மறந்துடுறாங்க” என்று முணுமுணுத்துக் கொண்டே கதவை சாற்ற எத்தனிக்கும் போது, அவளின் பார்வையோ மேசையின் கீழ் வீழ்ந்து கிடந்த புத்தகத்தில் படிய அதை எடுத்து வைக்கலாம் என்று விபீஷனின் அறைக்குள் நுழைந்தாள் பாவையவள்.

 

தன் விதியின் பயணமே இங்கிருந்து தான்  ஆரம்பிக்கப் போகின்றது என்று அறியாமலேயே கீழே வீழ்ந்து கிடந்த புத்தகத்தின் அருகே நெருங்கி இருந்தாள்.

தன் மேடிட்ட வயிற்றைப் பிடித்துக் கொண்டே மெதுவாகக் குனிந்து புத்தகத்தை எடுத்தாள்.

பார்த்த மாத்திரத்திலேயே அவளின் இதழ்களோ புன்னகையில் விரிந்துக் கொண்டன.

ஆம், புத்தகத்தின் முன் அட்டையில் ஜெய் ஆனந்த் என்ற பெயர் மின்னிக் கொண்டிருந்தன.

“மாமாவோட புக் ஏன் வில்லங்கம் பிடிச்சவன் ரூம்குள்ள இருக்கு?” என்று கறுவிக் கொண்டே அதை திறந்து முதல் பக்கத்தை பார்த்தவளுக்கோ இதயம் படு வேகமாகத் துடித்தது.

முதல் வரியே ஜெய் ஆனந்தின் கையெழுத்துடன் “டு மை லவ்” என்றிருந்தது.

இதயத்தில் மெல்லிய வலி ஊடுருவியது.

அவன் காதலித்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டதென்று அப்போது கூறினானே அவளுக்காக எழுதிய புத்தகமா இது? என்ற எண்ணம் மனதை பிசைய, உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது.

மேனியில் வியர்வை ஊற்றெடுக்க, மனதை கல்லாக்கிக் கொண்டு தன் நடுங்கும் கரத்தால் அடுத்த பக்கத்தை  திறந்தாள்.

“பூந்தென்றல் காற்றாக என் கைகளில் தவழ்ந்த போது, என் காதலை உணர மறுத்தது தான் விதியின் செயலோ?” என்ற கவிதை முற்று பெற்று இருக்க, அவளின் புருவங்கள் இடுங்கின.

 

அப்படியென்றால்  என்ன சொல்ல வருகின்றான்?

அப் பெண், பிறக்கும் போதே கையில் ஏந்தி இருக்கின்றானா?

அவளுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை.

சட்டென அடுத்த பக்கத்தை பிரட்டினாள்.

“நின் முதல் பாத சுவட்டில் வீழ்ந்த என் இதயம் நிந்தன் சிறுபுன்னகையில் எனை மொத்தமாக கொள்ளையிட்டதேனோ?” என்று இருக்க, அவளுக்கோ விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்துக் கொண்டன.

அவள் முதன் முதலாக நடக்கும் போது அருகிலா இருந்தான்? என்ற அடுத்த கேள்வி அவளை குழப்பியது.

கிஞ்சித்தும் அவளின் குழப்ப மனநிலை அவளையே அவ் இடத்தில் வைத்துப் பார்க்க தவிர்த்து இருந்தது.

அடுத்தடுத்த பக்கங்களை பிரட்டினாள்.

ஒவ்வொரு கவிதையிலும் அப் பெண்ணின் வளர்ச்சியை அவன் ரசித்த போலவே உணர்வுப்பூர்வமாக  கவிதைகளை வடித்து இருந்தான்.

சில பக்கங்களில் சில வார்த்தைகள் தெரியாத வண்ணம் பேனையினால் அழுத்தி கிறுக்கப்பட்டு இருந்தன.

ஒருவேளை அது அப் பெண்ணின் பெயராக இருக்கக் கூடுமோ?

அப்படியென்றால் எதற்காக கிறுக்கப்பட்டு இருக்கின்றது?

என்னவோ அம் முகமறியா பெண்ணின் மீது பொறாமை கட்டுக்குள் அடங்காமல் பெருகியது.

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டாள்.

அழுத்தம். மனமெல்லாம் ரணமாக அழுத்தம் கொல்லாமல் கொன்றது.

தாழ முடியாத வலியில் துடித்தவளுக்கு எப்படி சாதாரணமான கவிதையைக் கூட தாங்க முடியாத அளவுக்கு அவன் மேல் காதல் கொண்டு விட்டேன்?

சிறு கீற்று புன்னகை அவள் இதழ்களில் வந்த வேகத்தில் மறைந்தது.

கன்னங்களில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டவள் பார்வையோ, அப் பக்கத்தில் இருந்த கவிதையில் நிலைக் குத்தி நின்றது.

அக் கவிதையை வருடினாள்.

இது அன்று தன்னிடம் விபீஷன் உரைத்த கவிதை அல்லவா?

“நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கி திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என சொல்லிக் கொண்டவள் இதழ்கள் நடுங்கின.

அண்ணனின் கவிதையை திருடி இவன் என்னிடம் சொல்லக் காரணம் என்ன? என்ற கேள்வி மூலையில் குடைய, தனக்கு பதில் எங்கேனும் கிடைத்து விடாதா? என்ற ஆற்றாமையுடன் வெறிப் பிடித்தவள் போல பக்கங்களை திருப்பிக் கொண்டு போனவள் அவளின் பூப்புனித நீராட்டு விழா அன்று எடுத்த புகைப்படத்தில் நிலைக் குத்தி நின்றது.

அவ்வளவு தான். அவ்வளவே தான் அவள் மொத்தமாக உடைந்துப் போனாள்.

என்ன? அப்படியென்றால்? அப் பெண் நானா? என்று அதிர்ச்சியாக அப் படத்தின் கீழிருந்த கவிதை வாசித்தவள் அவனின் கண்ணியத்தை நினைத்து சிலிர்த்தாள்.

ஒருவனால் இந்த அளவுக்கு காதலிக்க முடியுமா?

வலியில் துடித்தவளின் உள்ளம் மேலும் வலிக்க ஆரம்பித்து இருக்க, சுவரில் சரிந்து விம்மிய படி நிலத்தில் மடிந்து அமர்ந்தாள்.

அவள் இருக்கும் நிலை முற்றிலும் மறந்தாள்.

எண்ணம் முழுதும் ஜெய் ஆனந்த் மட்டுமே வியாபித்து இருந்தான்.

ஆரம்பத்தில் இருந்து நடந்தவற்றை விழிகளை மூடி ஆழ்ந்து சிந்திக்கலானாள்.

எண்ணங்களின் போக்கில் விபீஷன் அவளை சரிபாதியாக்கிக் கொண்ட நாளில் தேங்கி நிற்க, முயன்று தன்னவனின் முகத்தை நினைவடுக்கில் கொண்டு வர முயன்றாள்.

கலங்கிய அவனின் தோற்றம் மனக் கண்ணில் தோன்ற அதனைத் தொடர்ந்து நடந்தவைகளை எண்ணி விறைத்து போனவளுக்கு நான் தான் விபீஷனுக்கு கிடைத்த பகடைக் காயா?என்ற கேள்வி வலுக்க, என்னை இந்த அளவு நேசித்தவனுக்கு நான் அவனவள் இல்லை என்றதும் என்ன பாடு பட்டு இருப்பான்?

சற்று முன்னர் வேறொரு பெண்ணை அவன் உருகி உருகி காதலித்திருக்கின்றான் என்ற கண நேர எண்ணமே உயிர்வதையை அவளுக்கு கொடுத்திருக்க, நேரில் தன்னை விபீஷனோடு பார்த்தவன், எவ்வாறு இத் துன்பத்தை தாங்கி இருப்பான்  என்று சிந்தித்தவளுக்கு அழுகையோ வெடித்துக் கிளம்பியது.

அழுதாள். விடாமல் தலையில் அடித்துக் கொண்டு அழுதவள் இதழ்களோ “முட்டாள் முட்டாள் ஒருத்தன் எந்த நோக்கதுல பழகுறான்னு கூட தெரியலையா முட்டாள்” என்று சொல்லிக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு அழுதவள் உடல் தூக்கிப் போட, பித்து பிடித்தவள் போல வேகமாக கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தாள்.

ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது.

மேனி முழுதும் வியர்வையில் குளித்து இருந்தது.

விண்விண்ணென்று வலித்த தலையை பிடித்துக் கொண்டு விழிகளை சுழல விட்டாள்.

‘இது என் வீடு அல்லவா? நான் எப்படி இங்கே?’ என்று குழப்பத்துடன் தன் உடலில் தெரிந்த மாற்றம், அவளின் விழிகளை அதிர்ச்சியில் விரிய வைத்தது.

சட்டென தன்னைக் குனிந்துப் பார்த்தாள்.

அவளது மேடிட்ட வயிறு எங்கே? அப்படியென்றால் என் குழந்தை எங்கே?

ஹையோ! நிலத்தில் வீழ்ந்து கதறி அழுதேனே! என் குழந்தைக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ? என்ற எண்ணம் ஆட்கொள்ள, எங்கு இருந்து தான் அவ்வளவு சக்தி வந்ததோ கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கியவள் அறையின் கதவை திறக்க எத்தனித்த கணம், அவளின் பார்வை வட்டத்தில் சுவரில் மாட்டி இருந்த நாட்காட்டி தென்பட்டது.

நெஞ்சே அடைத்து விட்டது அவளுக்கு…

நான்கு மாதங்களுக்கு முன்பு அதாவது ஜெய் ஆனந்த் ஐந்து வருடங்களின் பின்னர் ஊரிற்கு வந்த மாதத்தில் இருந்தது அந் நாட்காட்டி.

பைத்தியம் பிடிப்பது போலிருந்தது.

என்ன ஆயிற்று எனக்கு?

ஒவ்வொரு மாதம் முடியும் போதே அம் மாதத்தை கிழித்து விட்டு மாற்றி விடுவேனே! இது எப்படி சாத்தியம்? என்ற குழம்பிய மனதுடன் இன்னுமே நடுக்கம் குறையாத தனது கரங்களால் கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டே தனது துப்பட்டாவை தோலில் போட்டு சரி பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளின் உடையின் நிறத்தைக் கண்டவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

அன்றும் இதே உடையை போட்டுக் கொண்டு தானே மாமாவைக் காண வந்திருந்தாள். ஐயோ! என்ன தான் நடக்கின்றது? என்ற எண்ணம் பதைபதைக்க செய்ய, மீண்டும் தன்னைக் குனிந்து பார்த்தாள்.

வேறு உடை அணிந்து இருந்தாள்.

கடைசியாக அழும் போது கூட இவ்வுடையில் நான் இருக்கவில்லையே!

ஜெய் ஆனந்த் வருவதற்கு முதல் நாள் தான் போட்டு இருந்த உடையாக இருக்குமோ? என்ற கேள்வி பிறக்க யோசிக்க யோசிக்க தலை தான் வலித்தது.

ஆழமாக பதிந்து இருந்ததை தவிர்த்து ஒரு சிலவற்றை அவளால் சிந்திக்க முடியவில்லை. தலை வெடித்து விடுவது போல விறைத்தது.

இது சரி பட்டு வராது. என்ற முடிவை எடுத்துக் கொண்டவளாய் பவ்யாவின் அருகில் வேகமாக நெருங்கினாள்.

விழிகளை தேய்த்து விட்ட படி “எங்கடி கிளம்புற?” என்று கேட்டாள்.

அவளை மேலிருந்து கீழாக பார்த்து விட்டு முகத்தை சுளித்தவள் பதிலேதும் கூறாமலேயே கோபமாக  நுழைவாயிலை நோக்கி சென்றாள்.

சட்டென ஓடிச் சென்று அவள் முன் போக விடாமல் இடைமறித்த படி நின்றாள் ஆஹித்யா.

“ப்ச்… என்ன இப்போ?” என்றாள் சீற்றமாக… அவளின் கோபத்தில் புரியாமல் தடுமாறியவள் “எதுக்காக கோபமா பேசுற?” என்று கேட்டாள்.

 

“அஹான்… நல்லா புரியாத போல பேசுவீங்களே” என்றதும் அவளுக்கோ அவளின் விபீஷன் மீதான காதல் நினைவுக்கு வர, அதனாலோ என்னவோ என்று நினைத்தவள் “சா… சாரி டி நான்… என.. எனக்கு தெரியாது மா” என்றவள் வார்த்தைகள் திணற, ஒருங்கே விழிகளும் கலங்கி சிவந்தன.

“டிராமா பண்ணாத ஆஹி. அக்கான்னு பார்க்குறேன் இல்லனா என்று பல்லைக் கடித்தவள் அவளை விலக்கி நிறுத்தி விட்டு வந்துட்டா நடிச்சிட்டு என் ஐஸ் கிரீமை திருடிட்டு, கதையை பாரேன், சாரி சொன்னா நாங்க மறந்துடனுமா?” என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்துக் கொண்டு வெளியில் சென்றவள் தனது காலணிகளை போட, அவளின் பேச்சில் திகைப்பூண்டை மிதித்தது போல விழிகள் இரண்டும் தெரித்து விரிய “எதே ஐஸ் கிரீமா?” என்று கேட்டவளுக்கு அவன் வருவதற்கு முதல் நாள் பவ்யாவின் ஐஸ் கிரீமை தெரியாமல் எடுத்து உண்டது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.

அது மட்டுமா என்ன? சற்று முன் மன்னிப்பு  கேட்டாளே! அதுவும் என்னவென்று கேட்டு வைத்தேன்?என்று மூலையில் மின்னல் வெட்டியது.

ஆம், பவ்யாவின் விபீஷன் மீதான காதல் தனக்கு எப்படி தெரியும்? எப்படி சட்டென அவ் விடயம் எனக்குள் தோன்றியது?

சட்டென ஓடிச் சென்று அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.

பித்து பிடிப்பதை போல் இருந்தது.

கதைத்துக் கொண்டிருந்தவள் சட்டென அறைக்குள் ஓடி செல்லவும் அவளை புரியாது பார்த்தவள் “என்னாச்சு அப்நார்மல் ஆஹ் பிஹேவ் பண்றா?” என்று சொல்லிக் கொண்டவள் பிரதாபனின் வீட்டை நோக்கிச் சென்று விட்டாள்.

இங்கோ, அறையில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவளுக்கு தான் ஏதும் டைம் டிராவல் செய்து வந்து விட்டோமா இல்லையென்றால் நான் கண்டது எல்லாம் கனவா? என்றெல்லாம் தோன்றி அவளைக் குழப்பியது.

காலங்கள் கடந்து பயணித்து இருந்தாலும் கூட அதே உடையோடு அல்லவா வந்திருக்க வேண்டும் ஆனால் நான் வேறு உடையில் அல்லவா இருக்கின்றேன்!

அப்படியென்றால் இது கனவா?

கனவென்றாலும் இவ்வளவு நீளமான கனவு ஒருவருக்கு வருமா என்ன?

ஆம், கனவு தான்.

அதிர்ந்து போனாள்.

அதே கணம் மனதில் மெல்லிய உவகை இழையோடியது.

அவளின் பார்வையோ தன் தலையணையில் படிய, அதுவோ தொப்பலாக நனைந்து இருந்தது.

மீண்டும் அவளின் கரங்கள் அவளின் வயிற்றை தடவிப் பார்த்துக் கொண்ட அதே சமயம் மாமாவின் வீட்டில் வண்டி நிறுத்தும் சத்தம் கேட்டது.

சற்றும் தாமதிக்காமல் அறையை விட்டு வெளியில் ஓடி வந்தவள் காலில் பாதணிகளைக் கூட அணியாமல் வெளியில்  ஓடி வந்தவளுக்கு, அங்கு நின்றிருந்த வெண்ணிற ஃபெராரி காரை வெறித்தவளுக்கு இதயமோ தாளம் தப்பித் துடித்தது.

தன் நடுங்கும் கால்களை நகர்த்தி வீட்டினை நோக்கி நடந்தாள்.

அவளின் உடல், பொருள், ஆவி மொத்தமும் ஜெய் ஆனந்த் மட்டுமே நிறைந்து இருந்தான்.

காட்டாற்றுவெள்ளம் போல அவன் மீது காதல் பெருகியது.

உவகை பொங்க, ஓர் ஆர்வத்துடன் வீட்டினுள் நுழைந்தவள் மேனியோ சில்லிட்டது.

நடையோ ஒரு கணம் சட்டென தடைப்பட, அவளது பார்வையோ தனக்கு நேர் எதிரே சோஃபாவில் அமர்ந்து இருந்தவனில் தான் குத்திட்டு நின்றது.

அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தும் தெள்ளத் தெளிவாக புரிந்து போனது.

மூச்சு வாங்க வந்தவள் அவனில் இருந்து பார்வையை அகற்றாமல் உள்ளே நுழைந்தாள்.

அலைபேசியில் இருந்த அவனின் பார்வையோ, யாரோ தன்னை உற்று நோக்குவது போலிருக்க நிமிர்ந்து பார்த்தவன் எவ்வித சலனமும் இன்றி மென் புன்னகை சிந்தினான்.

ஆனால், பதிலுக்கு அவளால் தான் புன்னகைக்க முடியவில்லை.

ஆத்திரமாக வந்தது.

தன்னை நோக்கி வருபவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன் சட்டென எழுந்து நின்றான். 

அவனின் முன் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் வந்து நின்றவளோ “சோ அடுத்து என்ன பிளான் வச்சு இருக்கீங்க மிஸ்டர் விபீஷன்” என்றவள் விரக்தியாக புன்னகைத்தாள்.

அவள் என்ன கூறுகின்றாள் என்று புரியாமல் விழித்தவன் “வாட்? என்ன சொல்றீங்க? எனக்கு புரியல” என்றான்.

அவள் என்ன கூறுகின்றாள் என்று உண்மையாகவே ஒன்றுமே அவனுக்கு புரியவே இல்லை.

 

“நைஸ் ஜோக் மிஸ்டர் என்றவள் விழிகளை சுழல விட்டபடி ஜெய் மாமா எங்க மாடில இருப்பாரே” என அனைத்தும் அறிந்தவள் போல நக்கலாக கேட்டவள் பார்வையோ அவனின் தோற்றத்தில் தான் படிந்தது.

செய்வதையும் செய்து விட்டு நெற்றியில் மகா நல்லவன் போல பட்டையாக திருநீறு வேறு பூசி வைத்திருக்கின்றான். இவனுக்கு, இது ஒன்று தான் குறை என்று மனதில் கறுவியும் கொண்டாள்.

இதழ் குவித்து ஊதிக் கொண்டே  “உங்க பின்னாடி பாருங்க” என்றான்.

அவனை துளைத்தெடுக்கும்  கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தவள் விழிகள் தெறித்து கீழே விழுந்து விடுவது போல விரிந்துக் கொண்டன.

என் பின் நிற்கின்றானா? அடி வயிற்றில் காதல் பந்து உருண்டோடியது.

உள்ளே தோன்றிய உணர்வுகளை விபரிக்க முடியாத நிலை அவளுக்கு…

தன் மீது அதே காதல் அவனுக்கு இருக்குமா? இல்லையென்றால் அவனின் காதலில் திழைத்த பொழுதுகள் யாவும் என் கனவு மட்டும் தானா? என்ற எண்ணமே மனதை ஆட்டம் காண வைத்தது.

மேனியில் குளிர் பரவ, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு அவனை நோக்கி மெதுவாக பின்னால் திரும்பினாள் பெண்ணவள்.

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!