ஆம், மாடியில் நின்று இருந்தது வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம் விபீஷன் தான். அதுவும் தலையில் கட்டுடன் ஜெய் ஆனந்த்தை வெறித்த படி நின்று இருந்தான்.
அவனின் நிலையைக் கண்டு பதறிப் போன ஜெய் ஆனந்த் இரு இரு படிகளாக தாவி மாடி ஏறியவன் விபீஷன் அருகில் செல்லும் முன்னரே அவனது அறைக்குள் சென்று கதவினை அறைந்து சாற்றி இருந்தான்.
நல்ல வேளை இல்லையென்றால் அவன் அறைந்து சாற்றிய வேகத்தில் ஜெய் ஆனந்த்தின் முகம் அடிபட்டு இருக்கும்.
வந்ததும் வராததுமாக அதுவும் இவ்வளவு நாளாக அவன் முகத்தில் கண்டிராத உச்சகட்ட சீற்றத்தைக் கண்டு கலங்கிப் போனது என்னவோ ஜெய் ஆனந்த் தான். மூடிய கதவைத் தட்ட போனவன் என்ன நினைத்தானோ விழிகளை மூடித் திறந்து ஆழ்ந்த பெரு மூச்சை விட்டுக் கொண்டவன் நிதானமாக கீழே ஸ்தம்பித்து போய் நின்று இருந்த தன் அத்தையையும் அன்னையையும் ஒருங்கே பார்த்துக் கொண்டே படிகளில் கீழிறங்கி வந்தவன் “அப்பா எங்க?” என்று அவன் கேட்ட கேள்வியில் சித்ராவிற்கோ வியர்த்துக் கொட்டியது.
“ஆனந்த் போய் குளிச்சிட்டு வாப்பா அப்புறம் பேசலாம்” என்றவர் வித்யாவை இழுத்துக் கொண்டு செல்ல போகும் சமயம் “அவனோட கன்னம் வீங்கி போய் இருக்கு ஐ க்னோ கண்டிப்பா அப்பா தான் இதுக்கு காரணமா இருக்க முடியும் சோ பிளீஸ் சொல்லிடுங்க என்னாச்சு?” என்று கேட்டே விட்டான். வித்யாவோ “பிறகு பேசலாம் டா” என்று பேச்சை மாற்ற…
அவனோ நின்ற இடத்தை விட்டு நகராமல் அழுத்தமாக நின்றுக் கொண்டு இருக்க அவன் நிச்சயம் தெரிந்துக் கொள்ளாமல் விட மாட்டான் என புரிந்த சித்ராவோ “நேற்று அவனோட ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து நம்ம தோப்பு வீட்டுல குடிச்சிட்டு அதுவும் அவனுக்கு முதல் முறை போல டா. தள்ளாடிட்டு வந்து அந்த வழியா போன அவரோட வண்டிலேயே விழுந்து இருக்கான்” என்றவருக்கு விபீஷனை நினைத்து குரல் விம்மியது. மேலும் தொடர்ந்தவர் “அப்போவே அவனை அறைஞ்சி வீட்டுக்கு இழுத்துட்டு வந்து ரொம்பவே திட்டினார் டா” என்றார் சேலை தலைப்பால் வாயை பொத்தி அழுத படி…
இதழ் குவித்து ஊதியவன் “என்ன திட்டினார்?” என்றான் நிதானமாக….
“வழமை போல தான் டா அவன் படிச்சிட்டு வீட்ல இருக்கான்னு கன்னாபின்னானு திட்டிட்டார்” என்றவரை கூர்ந்துப் பார்த்தவன் “என்னையும் அவனோட கம்பேர் பண்ணாறா?” என்றான்.
அவன் குரல் சாதாரணமாக இருந்தாலும் விழிகளோ சிவந்து விட்டு இருந்தன. அதிர்ந்து போனவர் “ஆனந்த்” என்றார் சித்ரா. அவன் எதுவும் பேசவில்லை அவனின் பார்வை அவரை துளைக்க “அவன் குடிச்சது தப்பு டா” என்றார்.
அவன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் தன் அன்னை தடுமாறி பேசிக் கொண்டு இருப்பதை வைத்தே புரிந்துக் கொண்டவன் “அவன் பண்ணது தப்பா இருக்கலாம் மா பட் அவனுக்குனு ரெஸ்பெக்ட் வெளில இருக்கணும். வீட்டுல வச்சு பேசி இருக்கலாமே என்றவன் தலையைக் கோதிக் கொண்டே முதல்ல என்னையும் அவனையும் கம்பேர் பண்ணி பேசுறதை நிறுத்துங்க இட்ஸ் ஹர்டிங் மா. அவன் என்னை வெறுப்பா பார்க்கிறான்” என குரல் உடையச் சொன்னவன் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் நேரே சென்றது என்னவோ அவனின் தந்தை பிரதாபனின் அறைக்குத் தான்.
அவன் சென்ற வேகத்தில் பதறிய சித்ரா அவன் பின்னாலேயே செல்லப் போக அவரைப் பிடித்து நிறுத்திய வித்யா “அண்ணி நம்ம ஆனந்த் பத்தி தெரியாதா உங்களுக்கு?” என்றவர் விழிகளை மூடித் திறக்க பெரு மூச்சுடன் தன்னை நிதானித்த சித்ரா அப்படியே சோஃபாவில் அமர்ந்து விட்டார்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு மகன் வந்த சந்தோஷத்தை கூட முழுதாக அனுபவிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை ஒரு பக்கம் பிரதாபனுடன் என்ன பேசப் போகின்றான் என்ற எண்ணம் மறு பக்கம் என தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவர் கதவு திறக்கப்படும் ஓசையில் சுயம் அடைந்து நிமிர்ந்து பார்த்தவருக்கு விழிகள் பெரிதாக விரிந்து கொண்டன. ஆம், ஜெய் ஆனந்த்துடன் சிரித்து பேசிக் கொண்டே வந்த பிரதாபன் “விபீஷன்” என்று உரக்க அழைத்து இருந்தார்.
கட்டிலில் சாய்ந்து விழிகள் மூடி சிந்தனையில் ஆட்பட்டு இருந்தவன் பிரதாபனின் அழைப்பில் சட்டென எழுந்தவன் அடுத்து சில நொடிகளில் அவர் முன்னிலையில் பவ்யமாக நின்று இருந்தான் விபீஷன். “இனிமேல் குடிக்காத டா” என்றவர் அவனை அணைத்து விடுவித்து விட்டு அப்பாவை மன்னிச்சிடு டா” என்றவர் குரலில் பல அர்த்தங்கள் பொதிந்து இருந்ததை அவர் மட்டுமே அறிவார். அதிர்ந்தவன் “அப்பா” என்றான் நெகிழ்வான குரலில்… அவனின் தலையை வருடிக் கொடுத்தவர் “போய் ரெஸ்ட் எடுடா” என்றவர் ஜெய் ஆனந்த்தை ஓர் அர்த்தப் பார்வை பார்த்து விட்டு வெளியேறி விட…. ஆம், விபீஷனின் கழுகுக் கண்களில் இருந்து தப்புமா என்ன? யாரும் அறியாமல் ஓர் விரக்திப் புன்னகையை சிந்தியவன் வலுக்கட்டாயமாக புன்னகைத்தவன் ஜெய் ஆனந்த்தைப் பார்த்து “கொஞ்சம் பேசலாமா?” என்றான். அவனின் முகம் காட்டும் உணர்வுகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன் “தாராளமா பேசலாம்” என்றவன் புன்னகைக்க…. இருவரின் அருகில் வந்து நின்ற வித்யா “என் அண்ணாகிட்ட என்னடா சொன்ன விறைப்பா சுத்திட்டு இருந்தாரே இப்போ அபூர்வமா சிரிச்சிட்டு போறார்…” என்று வியப்பாக கேட்க…
அதற்கும் மென் புன்னகை சிந்தியவன் சற்றே குனிந்து வித்தியாவின் மூக்கை பிடித்து ஆட்டியவன் “அத்தை… என்று இழுவையாக சொன்னவன் வயசாகிடுச்சினா அவங்க மைண்ட் குழந்தை போல தான் சோ சொல்ற விதத்துல சொன்னேன். தட்ஸ் இட்” என்றான் தோள்களை குலுக்கி…
வாயடைத்து போய் நின்ற சித்ராவிற்கே திகைப்பு தான்.
இத்தனை வருடங்களில் சிடு சிடு என கண்டிப்பு காட்டியவர் தங்கள் முன்னால் மன்னிப்பு கேட்டது மட்டும் அல்லாமல் முப்பது வருடங்களுக்குப் பிறகு மலர்ந்து சிரித்து விட்டு செல்வதை பார்த்து அவருக்கு திகைப்பு அல்ல மயக்கம் வராமல் இருப்பதே அதிசயம் தான்.
மூக்கை தேய்த்து விட்ட படியே “என்னோட மூக்கை பிடிச்சு ஆட்டுறதை நிறுத்திட்டு சீக்கிரம் இந்த வீட்டுக்கு உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வந்து கொஞ்சு டா” என்றவர் நொடித்துக் கொண்டே சமையலறைக்கு செல்ல…
பொண்டாட்டி என்ற அவரின் சொல்லிக் சட்டென தன்னவளின் மலர்ந்த வதனம் மனதில் தோன்ற இதழ் கடித்து தன் எண்ண அலைகளை அடக்கிக் கொண்டே “சீக்கிரம் கொஞ்சிறேன் அதுவும் உங்க முன்னாடியே ” என்று சத்தமாக அவன் சொல்ல…
“அதையும் பார்க்கலாம் டா” என்று சமையலறைக்குள் இருந்து குரல் கொடுத்து இருந்தார் வித்யா.
அவர்களுக்குள் பேசிக் கொள்வதில் தனக்குள் தோன்றிய எரிச்சலைக் கட்டுப் படுத்திக் கொண்ட விபீஷன் “டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரூப்டாப்ல வெயிட் பண்ணு” என்றவன் தனது போனை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று இருந்தான்.
அதனைத் தொடர்ந்து தான் வாங்கி வந்தவைகளை ஒவ்வொன்றாக பிரித்து வைத்தவன் “அம்மா இது உங்களுக்கு” என்று அவருக்கு பிடித்த மயில் வண்ண புடவையை நீட்ட… “டேய் அமெரிக்கால புடவை எல்லாம் இருக்குமா என்ன?” என்று புடவையை ஆசையாக வருடிய படி வியப்பாகக் கேட்க…
“எல்லாமே இருக்கு என்றவன் இது என்னோட ஸ்வீட் அத்தைக்கு…” என்று அவருக்கு ஒரு புடவையை கொடுத்து இருந்தான். அதில் விழிகள் கலங்க அதை வாங்கிக் கொண்டவர் “தேங்க்ஸ் டா” என்று புன்னகைக்க… “ப்ச்… என்று வித்யாவின் கன்னத்தை துடைத்து விட்டவன் ஒரு கணம் வாசலை பார்த்து விட்டு அவரைப் பார்த்தவன் இதை தியாவுக்கும் பவ்யாகும் கொடுத்துடுங்க அத்தை” என அவர் கையில் இரு பைகளை கொடுத்தவன் கழுத்தில் கையை வைத்து நெட்டி முறித்த படி “மா நான் ஒர்க் அவுட் பண்ணணும் சோ காஃபி போட்டு மேல எடுத்திட்டு வாங்க” என்றவன் மாடியேறி மேலே சென்று இருந்தான்.
அவன் சென்ற அடுத்த சில நிமிடங்களில் பவ்யாவை வேகமாக இழுத்துக் கொண்டு பிரதாபனின் வீட்டின் உள்ளே நுழைந்தவள் “மாமா… மாமா…” என்று சத்தமாக அழைத்த படி உள்ளே வர…
சோஃபாவில் அமர்ந்து போனைப் பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனோ அவளின் குரலில் சட்டென தன் பார்வையை அவளின் மீது படிய விட்டான்.
இவ்வளவு நாளும் அவன் அவளை ரசித்தது கூட இல்லை ஏன் கடமைக்கு கூட முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் கடப்பவன் பார்வையோ இன்று ஆஹித்யாவின் மீது ரசனையாகப் படிந்தது.
ஐந்தரை அடி உயரம் இருப்பாள். இரு திருத்தப்பட்ட அடர்ந்த புருவங்களுக்கு இடையில் இருந்த சிறிய செந்நிற பொட்டு அவளின் பிறை நெற்றியின் அழகை கூட்ட அப்படியே தன் பார்வையை அகற்றி அவளின் இதழ்களில் படிய விட்டவனுக்கு அச் செம்பவள இதழ்களில் குடி புக எண்ணம் தோன்ற… தன் எண்ணம் போகும் திசையைக் கண்டு அதிர்ந்தவன் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்க, சட்டென அவன் முன் வந்தவளோ “விபீ மாமா எங்க?” என்று கேட்க…
அவளின் அருகாமையில் சிதற துடித்த தன் மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டவன் “வெளில கிளம்பிட்டார்” என்றதோடு சட்டென பார்வையை திருப்பி மீண்டும் போனை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
“அச்சோ நான் கேட்டது ஜெய் மாமா” என்றிட…
அதில் பற்களைக் கடித்துக் கொண்டே தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டவன் “வாட் கம் அகைன்?” என்றான். அவனின் இறுகிய குரலில் திடுகிட்டவள் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே “விபீ அது அது வ..வந்து” என்று திணற… அவளின் கையை பிடித்துக் கொண்டு அருகில் நின்ற பவ்யாவோ “இவனுக்கு அவ்ளோ சீன்லாம் இல்லையே இப்படி பயந்து சாகுறா?” என்று உள்ளே தனது தமக்கைக்கு மட்டும் அல்லாமல் விபீஷனையும் கடிந்துக் கொண்டவள் விபீஷனை முறைத்தவள் “ஏன் அக்காவை முறைக்கிறீங்க… ஜெய் மாமாவை தானே கேட்டா உங்களுக்கு தெரியலனா தெரியலைனு பதில் சொல்லுங்க. இப்படி அதட்டி பேசுற வேலை எல்லாம் வச்சிகிட்டா சீவிடுவேன்” என்றாள் சுட்டு விரல் நீட்டி…
அதிர்ந்து போன ஆஹித்யா “பவ்யா என்னடி பேச்சு இது? அவருக்கும் என்னோட வயசு தான் இப்படி பேசாத” என விபீஷன் முன்னாலேயே அவளைக் கடிய… “அக்கா ரொம்ப ஓவரா பண்றார்” என்றவளிடம் “வயசுல பெரியவங்களை இப்படி எடுத்தெறிஞ்சி பேசாத சாரி கேளு டி” என்றாள் ஆஹித்யா.
ஆஹித்யாவையே பார்த்து இருந்தவன் திரும்பி இப்போது இதழ்களுக்குள் தோன்றிய கேலிப் புன்னகையுடன் தன்னை முறைத்துக் கொண்டு நின்ற பவ்யாவிடம் “இட்ஸ் ஓகே நான் உன்னை மன்னிச்சி விடுறேன்” என்று சொல்ல… “உங்களோட மன்னிப்பு கன்றாவி எல்லாம் எனக்கு தேவை இல்லை என்றவள் திரும்பி ஐ ஹேட் யூ” என ஆஹித்யாவைப் பார்த்து சொன்னவள் அவளின் கையை உதறித் தள்ளி விட்டு சமையல் அறைக்குள் ஓடி இருந்தாள். போகும் அவளின் முதுகை வெறித்த ஆஹித்யா தன் எதிரே நின்றவனிடம் “அவளுக்காக நான் சாரி கேக்குறேன் விபீஷன்” என்று சொல்ல…
பவ்யா மீது தோன்றிய ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் “இட்ஸ் ஓகே சின்ன பொண்ணு தானே” என்று சொன்னவன் மெலிதாக புன்னகைக்க… பதிலுக்கு புன்னகைத்தவளும் “மாமா?” என்றாள் மறுபடியும்… அவனை மாத்திரம் மாமா என்று சொல்கின்றாளே என தனக்குள் மறுபடியும் தோன்றிய சினத்தை அடக்கிக் கொண்டே முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் “ரூட்டாப்ல” என்றான்.
“தேங்க்ஸ் என்று செல்லப் போனவளை “என்னை மாமானு கூப்ட மாட்டியா?” என்று கேட்டவனை அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தவள் சட்டென சிறு வயதில் நடந்த ஓர் சம்பவம் கண் முன் விரிய, தனது வலக் கன்னத்தில் கையை வைத்து வருடிய படியே “எதுக்கு உங்ககிட்ட மறுபடி அறை வங்குறதுக்கா?” என்று சொன்னவள் அங்கு நிற்காமல் சித்ராவின் அழைப்பில் சமையல் அறையை நோக்கி சென்று இருந்தாள் பெண்ணவள்.
அவளின் பதிலில் சற்றே திகைத்தவன் பின் புரிய இதழ்கள் புன்னகையில் விரிய “ஷிட் என நெற்றியை நீவிக் கொண்டவன் அப்போ நடந்ததை இப்போ நினைவு வச்சு இருக்கா” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவன் இவ்வளவு நாளும் அவள் பேச வரும் போதெல்லாம் முகத்தில் அடித்தது போல பேசி விட்டு நகர்ந்ததை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டவன் சற்றே அவளின் அழகிலும் குணத்திலும் தடுமாறி தான் போனான். தலை வலி சற்று குறைந்து இருக்க, தன் தலையில் இருந்த கட்டை மெதுவாக அவிழ்த்தவன் முன் இருந்த மேசையில் பட்டென காஃபி கப்பை கொண்டு வந்து வைத்த பவ்யா “குடிகார ரவுடி” என்று அவனை வாய்க்குள் திட்டிக் கொண்டே போக…. அதுவோ அவன் காதில் அச்சுப் பிசகாமல் விழ, விடுவானா அவன் முகம் இறுக போகும் அவளை சொடக்கிட்டு “ஏய்” என்று அழைத்தான்.
அவளோ திரும்பியும் பாராது நடக்க… “ஆஹித்யா” என்று சத்தமாக அழைக்க…
திடுக்கிட்ட பவ்யா இப்போது அவனைத் திரும்பிப் பார்த்து முறைக்க… அவனோ கேலியாக அவளைப் பார்த்து சிரித்தவன் இரு எட்டுக்களில் அவளை நெருங்கி “திஸ் இஸ் டூ மச் பவ்யா சோ ஸ்டே இன் யுவர் லிமிட்” என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் திரும்பியும் பாராது காஃபியை எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று இருந்தான்.
அதிர்ந்து நின்று இருந்தவள் முன் காஃபியோடு வந்து நின்ற ஆஹித்யா “விபீஷன் கூப்ட போல இருந்துச்சே எங்க அவர்?” என்று வினவ…
“ஓஹோ அந்த மலைக் குரங்கு இப்போ தான் மாடி ஏறி போச்சு” என்றவள் முறைத்து விட்டு நகர… அவள் அவனை மலைக்குரங்கு என்றதில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டவள் “மலை குரங்கு காதுல விழுந்தா நீ கைமா தான்” என்று சொன்னவள் காஃபியை எடுத்துக் கொண்டு மாடியேறி வந்தவளோ “மாமா காஃபி” எனக் கத்தியபடி வந்த ஆஹித்யாவுக்கோ அங்கு ஆர்ம்கட் மற்றும் ஷார்ட்ஸ் உடன் டம்பல்ஸ்ஸை வைத்து உடற்பயிற்சி செய்துக் கொண்டு இருந்த ஜெய் ஆனந்த்தை கண்டு விழி விரித்து பார்த்தவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்ள….
அவளின் குரல் கேட்டு பின்னால் திரும்பியவன் டம்பல்ஸ்ஸை கீழே வைத்து விட்டு கழுத்தில் வழிந்த வியர்வையை துடைத்த படி அவனையே அதிர்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை நெருங்கி “குட் மார்னிங் தியா என மென் புன்னகையுடன் சொன்னவன் அவளின் பார்வை செல்லும் திசையைப் பார்த்து குரலை செருமியவன் வாட்?” என்றான் புருவம் உயர்த்தி…
“ஹான்… என ஒரு கணம் விழித்தவள் வழமை போல பரவால்லையே மாமா ரெண்டு வருஷத்துல மசில்ஸ் எல்லாம் செம்மயா மெயின்டென் பண்ணி இருக்கீங்க” என்றாள் ஒரு துள்ளலுடன்….
சத்தமாக சிரித்தவன் காஃபியை குடித்துக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தவன் “டெய்லி வொர்க்அவுட்ஸ் தான் என்றவன் காஃபியை அருந்திக் கொண்டே டிரஸ் பிடிச்சு இருக்கா? என்று கேட்டு இருந்தான்.
“என்னோட ஜெய் மாமா வாங்கிட்டு வந்தால் எனக்கு பிடிக்காதா என்ன?” என்று புருவம் உயர்த்திக் கேட்க…
“ஸ்டில் என்னோட செலெக்ஷன் பிடிக்குமா? என்று கேட்டவனிடம் “உங்களை தவிர யாராலயும் எனக்கு பெஸ்ட் ஆஹ் செலக்ட் பண்ணிட முடியாது ஜெய் என்றவள் நாக்கை லேசாக கடித்து விடுவித்தவள் மாமா” என்றாள் அவளும் பதிலுக்கு…
அவளின் செய்கையை ரசித்து பார்த்தவன் மென் புன்னகையுடன் “எனிவே தேங்க்ஸ் ஃபார் த மார்னிங் காஃபி என்றவன் அவளிடம் கப்பை நீட்டி இருக்க, “மாமா… ஒரு காஃபிக்காக தேங்க்ஸ் எல்லாம் ஓவர் தான்” எனச் சிணுங்கிக் கொண்டே கப்பை வாங்கிக் கொண்டவள் அவளின் அன்னை வித்யா அழைக்கும் குரல் கேட்க, “இதோ வரேன் மா” என உரக்கக் கத்தியவள் “பை மாமா பிறகு பேசலாம்” என்றவள் வேகமாக ஓடிய வேகத்தில் மாடியேறி மேலே வந்த விபீஷன் மீதே மோதி சமநிலையின்றி மாடிப் படிகளில் “அம்மாமாமா…” என்றுக் கத்திக் கொண்டே விழ இருந்தவளை இடையோடு தாங்கிப் பிடித்து இருந்தான் விபீஷன்.