அத்தியாயம் – 6
ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள்.
நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து விழித்தாள்.
“என்ன கவிதை எல்லாம் பலமா இருக்கு?” என்று பவ்யா அவளை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டே கேட்க…
“ஹான்… அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா என்றவள் கதையை மாற்றும் பொருட்டு வா மாமா வீட்டுக்குப் போயிட்டு வரலாம்” என்று சொல்ல…
“ப்ச்… நான் வரல செம்ம தலைவலி நீ போய்ட்டு வா” என்றவள் ஆஹித்யாவின் அறையிலேயே படுத்துக் கொண்டாள்.
அவளின் கசங்கிய முகத்தைப் பார்த்தவள் “இன்னுமா வலிக்குது?” என்று கேட்டுக் கொண்டே ஷெல்பில் இருந்த தலைவலி மாத்திரையை எடுக்க…
“அக்கா நான் மாத்திரை எல்லாம் எடுத்திட்டேன்” என்றாள் சட்டென…
“அப்போ ஏன் இன்னும் சரி ஆகலை? நான் வர்றபோவே டல்லா தூங்கிட்டு இருந்த என்றவள் அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நான் உன் அக்கா பவ்யா நீ மாத்திரை போட்டு இருக்க மாட்டனு நல்லாவே தெரியும் என்றவள் இதைப் போட்டுட்டு தூங்கு” என்று மாத்திரையை நீட்ட…
“நான் தான் சொல்றேன்ல போட்டுட்டேன்னு சும்மா நொய் நொய்னு கத்தாம போவியா” என்றவள் கட்டிலில் மறுபுறம் பிரண்டு படுத்து விட…
“ஓஹோ சரிங்க மேடம்” என்றவள் தனது அலைபேசியை எடுத்து அழைத்தது என்னவோ ஜெய் ஆனந்த்திற்கு தான்.
அவனோ, ஒரே ரிங்கில் அழைப்பை ஏற்றவன் காற்றுக்கு கூட வலித்து விடுமோ என்ற ரீதியில் மென்மையாக “ஹலோ தியா” என்றான்.
வழமை போல அவனை மயக்கும் அவளின் குரல் அவனைத் தீண்ட விழிகளை மூடித் திறந்து “தியா” என்றான் மீண்டும்…
“மாமா … நான் சொல்லி முடிச்சிட்டேன்” என்றாள்.
அவனோ, தலையைக் கோதிக் கொண்டே தன் மோன நிலையை எண்ணி நொந்துக் கொண்டவன் “சாரி… சரியா கேக்கல மா என்ன சொன்ன?” என்று கேட்க…
“உங்களோட பாசமலருக்கு தலைவலியாம்… மாத்திரை போடாமல் அடம் பிடிக்கிறா என்னனு கேளுங்க மாமா” என்ற படி சட்டெனக் கட்டிலில் எழுந்தமர்ந்து தான் பேசுவதை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த பவ்யாவிடம் அலைபேசியை நீட்ட…
அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்கியவள் “மாமா பிளீஸ்” என்றாள்.
“நோ வே பவி உன்னோட அக்கா கொடுக்குற மெடிசின்ஸ் அஹ் வாங்கி போடு” என்றான்.
மாமா என்றதையும் தாண்டித் தன்னிடம் உடன் பிறந்த சகோதரன் போல நடந்து கொள்ளும் அவனைச் சிறு வயதில் இருந்தே ரொம்பவே பிடிக்கும் அவளுக்கு…
ஏனோஅவனின் கனிவான பேச்சினை மறுக்கத் தோன்றாமல் “ஓகே உங்களுக்காக” என்றவள் ஆஹித்யாவின் கைகளில் இருந்த மாத்திரையை வாங்கி விலுங்கியவள் இல்லை இல்லை விழுங்குவது போல நடித்தவள் குடிச்சிட்டேன் மாமா” என்றிட…
ஆம், தலைவலி இருந்தால் தானே மாத்திரையை விழுங்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் அவளுக்குத் தலைவலியெல்லாம் ஒன்றும் இல்லை காலையில் விபீஷனுடன் பேசியதன் விளைவால் எழுந்த உணர்வுப் போராட்டத்தில் அவளால் எதிலும் ஒன்ற முடியாத அளவுக்கு நிலை கொள்ள முடியாமல் போனது தான் நிஜம்.
“ஹும்… தட்ஸ் குட்” என்றதும் “வெயிட் மாமா அக்காகிட்ட பேசுங்க” என்றவள் அருகில் அமர்ந்து இருந்தவளிடம் அலைபேசியை நீட்ட, அதனை வாங்கி காதில் வைத்தவள் “தேங்க்ஸ் மாமா அவளோட செண்டிமண்டல் பாயிண்ட் நீங்க தானே அதான். வொர்க் டைம் டிட்ர்ப் பண்ணிட்டேனா?” என்று அவள் கேட்க…
“ஒன் த வேய் டு ஹோம்” என்றான் மென் புன்னகையுடன்…
“வாவ்… நானும் வீட்டுக்கு வர்லாம்னு இருந்தேன்” என்றவள் பேசிக் கொண்டே பிரதபனின் வீட்டினுள் நுழைய அங்கோ ஹாலிலேயே அமர்ந்து இருந்தான் விபீஷன்.
அவனைக் கண்டதும் தடுமாறி விட்டாள் அவள்.
ஆனால், அவனுக்கோ கொஞ்சமும் தடுமாற்றம் இருக்கவில்லை.
அவளையே தான் பார்த்துக் கொண்டு இருக்க, அவனைப் பார்த்து விட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டே “மாமா நான் வந்துட்டேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவள் வந்தமர அதே சமயம் கண நேரத்தில் அவளைப் பார்க்க வேண்டும் என்று வேகமாக உள்ளே வந்த ஜெய் ஆனந்த் கண்டது என்னவோ விபீஷனின் பார்வை அவளையே துளைத்துக் கொண்டு இருப்பதைத் தான்.
ஒரு ஆணின் பார்வை அவனுக்கா தெரியாது?
காலையிலேயே நவீனின் பேச்சு வேறு நினைவுக்கு வர, சட்டெனத் தன்னை நிதனித்துக் கொண்டவனுக்கு இதயத்தில் ஊசியால் குத்தும் உணர்வு தான்.
“நோ ஜெய்… அவன் அப்படி நடந்துக்க மாட்டான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் வலித்த மார்பை நீவி விட்ட படி “வெல்கம் தியா” என்றான்.
அவ்வாளுமையான குரலில் சலிப்பாக வாசலைப் பார்த்தவன் சட்டென எழுந்துக் கொள்ள… நேரே வந்தவன் எழுந்து நின்றிருந்தவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தான்.
ஆம், அவனை இறுக அணைத்து விடுவித்தவன் “அம் ரியலி ஹேப்பி டூ ஹியர் டா. அப்புறம் டுடே வொர்க் ஈசியா? என்றான்.
ஆஹித்யா அங்கு இருப்பதனால் என்னவோ எடுத்தெறிந்து பேசாமல் வரவழைத்த புன்னகையுடன் “நாட் பேட் என்றவன் ஹவ் அபவுட் யூ?” எனப் பதிலுக்குக் கேட்க…
“உன்ன போல எனக்கும் நாட் பேட் தான். பிரோம் நெக்ஸ்ட் வீக் நைட் ஷிப்ட் இருக்கும் என்றவன் திரும்பி இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்த தியாவிடம் திரும்பி வா வெளில போய்ட்டு வர்லாம்” என்றான்.
அதற்கு அவள் பதில் சொல்லும் முன்னரே முந்திக் கொண்ட விபீஷனோ “நானும் வரேன்” என்றான் எவ்வித உறுத்தலுமின்றி…
“ஹலோ ஹலோ ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? நான் வரேன்னு சொல்லவே இல்லையே” என்று சொல்ல…
“சோ வர மாட்ட?” என்று அவன் கேட்க…
“வர்லனா எதுக்கு கம்பல் பண்ற?” என்றான் விபீஷன்.
அதற்கு ஜெய் ஆனந்த் பதில் கூறும் முன்னரே “உங்க ரெண்டு பேர்க்கும் வேலை வச்சு இருக்கேன் என்று ஒரு மார்க்கமாகச் சொன்னவள் ஃபாலோ மீ” என்று விட்டு இருவரையும் தாண்டி முன்னே செல்ல…
இதழ் குவித்து ஊதிக் கொண்டே ஷர்ட்டினை முட்டி வரை மடித்த படி அவளைப் பின் தொடர, “இவன் எதுக்கு?” எனப் பற்களைக் கடித்த படி தனக்குள் சொல்லிக் கொண்ட விபீஷனும் ஆராய்ச்சியாக அவளைப் பார்த்த படி நின்று இருக்க…
அவளோ, “மாமா எனக்கு அது வேணும்” என்றாள்.
“எதுடி?” என்று சுற்றிலும் பார்த்தவனின் கன்னத்தைத் திருப்பி அவள் காட்டிய இடத்தைக் கண்டவனுக்கு விழிகள் கீழே தெறித்து விடுவது போல விரிந்துக் கொண்டன.
“மாமா உங்களால முடியாதா அப்போ?” என்றவள்சோகமாக முகத்தை வைத்துக் கொண்டே அவன் அருகில் நின்று இருந்த விபீஷனிடம் “விபீ அப்போ நீங்களாச்சும்” என்று கண்களைச் சுருக்கி அவள் கெஞ்சிய தோரணையில் அவனுக்கு அதை அக்கணமே அவளுக்குச் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற வேட்கை வேகமாக எழுந்தது.
“ஷோர்” என்றவன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முன்னேற, “விபீஷன் ஐ வில் மேனேஜ்” என்றான் ஜெய் ஆனந்த் அழுத்தமாக….
“இல்லை நானே…” என்றவனை “இப்படியே நீ போனால் நாங்க மட்டும் இல்லை நீயும் மேல போய் சேர்ந்துடுவ டா. வா போய் காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணிட்டு வர்லாம்” என்றவன் அவனைத் தோளோடு அணைத்துக் கொள்ள….
ஆஹித்யாவின் பார்வையோ விபீஷனின் மீது அழுத்தமாகப் படிந்தது.
ஒரு சில நிமிடங்களிலேயே உடையை மாற்றி விட்டு வந்த இருவரையும் பார்த்துத் திகைத்து விழித்தாள் அவள்.
“மாமா… என்ன இது ட்ரெஸ்?” என்று அதிர்ச்சியாகக் கேட்க…
“ஹே என்ன நினைச்சிட்டு இருக்க தியா? என்றவன் அவளின் முகம் போகும் போக்கில் சத்தமாகச் சிரித்த ஜெய் ஆனந்த்தோ இது ஒன்னும் மாம்பழம் இல்லை ஈஸியா பிடுங்கிட்டு வர்றதுக்கு இட்ஸ் பீஹைவ் தியா. இட்ஸ் வெரி டேன்ஞ்ஜரஸ் என்றவன் நீ உள்ள போ என்றவன் திரும்பிப் பார்ப்பதற்குள் லாவகமாக மரத்தில் ஏறி இருந்தான் விபீஷன்.
“விபீஷன்ன்ன் கெயார்ஃபுல்…” என்று ஜெய் ஆனந்த் உரக்க கத்தும் போதே அவனோடு சேர்ந்து ஆஹித்யாவும் “விபீபீபீ…” என்று சத்தமாகக் கத்த,
சட்டெனப் பக்கவாட்டாகத் திரும்பி அவளை ஓர் பார்வைப் பர்த்தவனோ சற்றும் தாமதிக்காமல் அவனும் கண நேரத்தில் விபீஷன் ஏறிய மரத்திற்கு எதிராக உள்ள அடுத்த மரத்தில் ஏறியிருந்தான்.