நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 16

4.9
(29)

அத்தியாயம் – 16

 

கன்னத்தை வருடிக் கொண்டே கோயில் பிரகாரதினுள்ளே வந்தவனிடம் “அம்மா கொடுத்து விட்டாங்க போய் குளிச்சு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று சொல்லிக் கொண்டே உடையை கொடுத்த விபீஷனிடம் “இந்த ட்ரெஸ் நல்லா தானே இருக்கு” என்றவன் ஷர்ட்டினை கழட்ட ஆரம்பிக்கவும் “என்னவோ சம்பிரதாயமாம்டா” என்றவன் “என்னடா  கன்னம் சிவந்து ரெட்டிஷ்ஷா இருக்கு?”  என அதிர்ச்சியாக கேட்டான் விபீஷன்.

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே “தெரிஞ்சிட்டு நீ என்ன பண்ண போற?” என்றவன் கேள்வியில் “ஜஸ்ட் ஜெனரல் னோலேஜ்காக தான் கேட்டேன் அதுக்கு ஏன் முறைக்கிற?” என்றான்.

“மார்னிங் ரூம் விட்டு வரவே அவ்ளோ லேட் ஆச்சு நீ என்ன பண்ண? என்றவனோ நீ ஒன்னும் தப்பா நினைக்காத ஜஸ்ட் ஜெனரல் னோலேஜ் தான்” என்றானே பார்க்கலாம்.

 

“நீயெல்லாம் ஒரு அண்ணாவா?” என சலித்துக் கொண்டவனை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “ அத நீ சொல்றியா?” என்றவன் குரலை செருமிக் கொண்டே “ஶ்ரீநவி கூப்டுறா என்னன்னு கேளு” என்க.

“அவ அழைச்சது எனக்கே கேட்கல உனக்கு மட்டும் எப்படி கேட்கும்?” என்றவன் பின்னால் திரும்பி பார்க்க,

 

“கண்ணால கூட உன்ன காட்டி  ஆக்ஷன் பண்ணலாம்” என்றவன் அவன் கையிலிருந்த உடையை வாங்கிக் கொண்டு “இதுவும் ஜெனரல் னோலேஜ் தான்” என நக்கலாக சொன்னவன் குளக்கரை நோக்கி சென்று விட,

 

ஶ்ரீநவி என்றதும் முதலில் அதிர்ந்தவன் விழிகள் சுற்றிலும் தேடியது என்னவோ பவ்யாவை தான்.

 

சுற்றிலும் விழிகளை சுழல விட்டவனுக்கு தன்னவள் தன் பார்வை வட்டத்தில் விழாது போக ‘ இவ வேற எதுக்கு அழைச்சிட்டு இருக்கானு தெரியலையே’ என இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவள் தன்னை நோக்கி வரும் வரை அப்படியே நின்றிருந்தான்.

 

அவனுக்கு அவளுடன் பேச பிடிக்கவில்லை என்றாலும் அதையும் தாண்டி தன்னிடம் ஏதோ பேச  வரும் பெண்ணை எவ்வாறு கடந்து செல்வது என்ற எண்ணம் வேறு அலைக்கழிக்க என அமைதியாக அவள் வரும் வரை காத்திருந்தான்.

 

“மாமா எனக்கு இந்த கோயிலை சுத்தி காட்ட முடியுமா?” என்று கேட்டாள்.

 

அவளின் கேள்வியில் பல்லைக் கடித்தவன் முயன்று வர வரவழைத்த பொறுமையுடன் “ஏன் வேற யார்கிட்டயும் இந்த கேள்வியை கேட்கலையா?” என்றவன் தொனியில் இருந்த பிடித்தமின்மையை புரிந்து கொண்டவளோ “பவ்யா பிசியா இருக்கேன்னு வரலணு சொல்லிட்டா அண்ட் ஆஹி அக்காவும்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “வா நானே சுத்தி காட்டுறேன்” என்ற பவ்யாவின் குரல் அவளின் பின்னால் ஒலித்தது.

 

இப்போது தான் அவனுக்கு மூச்சே வந்தது.

 

 இனிமேல் தான் பிரச்சனையே ஆரம்பிக்க போகின்றதென பாவம் அவன் அறியவில்லை…

சட்டென பின்னால் திரும்பி பார்த்தவள் “பிசினு சொன்ன ?” என்றவளிடம் “இப்போ இல்ல” என்று சொன்னவள் குரல் கடினமாக ஒலிக்க, ‘நாசமாபோச்சு’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் “பவி” என்றான்.

 

அவனது அழைப்பில் அவனை தீயாக முறைத்தவள் விழிகள் கலங்கி சிவந்திருக்க, ‘கன்பார்ம்’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் “சுத்தி பார்த்திட்டு வா பேசலாம்” என்றவன் வார்த்தகளை கூட காதில் வாங்கிக் கொள்ளாது ஶ்ரீநவியின் கரத்தை பற்றி பிடித்திழுத்த படி “வா போகலாம்” என்க,

 

“கை வலிக்குது பவ்யா” என ஶ்ரீநவி முனக, “ஏன் இவ்ளோ வல்கரா பிஹேவ் பண்ற பவி” என்ற விபீஷனின்  சீறலில் “வாரே வா இவளுக்கு வலிச்சா உங்களுக்கு வலிக்குதோ?” என்று கேட்டாளே பார்க்கலாம்.

 

அவனுக்கோ எங்கயாவது சென்று முட்டிக் கொள்ளலாமா என்று தான் தோன்றியது.

 

அவளும் உணர்ந்தாள் தானே அவள் மீது நான் எவ்வளவு காதலை வைத்திருக்கிறேன் என்று தெரிந்திருந்தும் இப்படி ஒரு கேள்வி கேட்கின்றாளே என்ற ஆத்திரம் தலைக்கு ஏறியது.

“சாரி நான் தெரியாம கேட்டுட்டேன் ரியலி சாரி பவ்யா” என்று சொன்ன    ஶ்ரீநவி பாவ்யாவின் கரத்திற்குள் அகப்பட்டிருந்த தனது கரத்தை உருவி எடுத்துக் கொண்டே நகர, “வந்த வேலை சிறப்பா முடிஞ்சிடுச்சுல” என்றாள் குத்தலாக, அவளோ, அதற்கு மேலும் அங்கு நிற்க திராணியற்று சென்று விட, இவ்வளவு நேரம் தன் பொறுமையை கட்டுப்படுத்தி  வைத்திருந்தவன் அவளை  உறுத்து விழித்தான்.

 

அவள் மட்டும் அவனுக்கு சளைத்தவளா என்ன?

அதே மாறா பார்வையை அவள் விழிகளில் தொக்கி நின்றது.

“என்னை சந்தேகப்படுறியா?” என்றான் உணர்ச்சியற்ற குரலில்,

 

 

அவனின் கேள்விக்கு பதில் கூறாது அவளோ “ நான் சொன்னேன் தானே அவ கூட பேச வேணாம்னு பட் நீங்க?” என்று சொல்லி க் கொண்டிருக்கும் போதே

 

“ஜஸ்ட் ஷாட் அப்”என குரலை உயர்த்தி அடக்கப்பட்ட சினத்துடன் சீறியவன் அவளின் நடுங்கிய தோற்றத்தை கண்டு ஒரு கணம் சுதாரித்தவன் கேசத்தை கோதிக் கொண்டே “வெல், இப்போ இங்க என்ன நடந்துச்சுனு இவ்ளோ கோபப்படற?” என்று கேட்டான் நிதானமாக,

“என் பேச்சுக்கு உங்ககிட்ட எந்த வேல்யூவும் இல்லனு இப்போ புரிஞ்சிகிட்டேன்” என்று சொன்னவளை “அவளா வந்து  கதைச்சா எப்படி அவாய்ட் பண்ண சொல்ற?”

“ஐ டோண்ட் க்னோ, பட் நீங்க அவாய்ட் பண்ணி இருக்கணும். ஒரு வார்த்தை கூட பேசி இருக்க கூடாது” என்று சொல்ல,

 

இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை பார்த்தவன் “ ஃபோர் ஷோர், அவ கூட நான் போயிருக்க மாட்டேன் அண்ட் நெஸ்ட்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “விபீஷன்” என்ற  சித்ராவின் குரல் கேட்க, “ப்ச்ச, வா பேசிட்டே போலாம்” என்றவன் அவளின் கையை அவன் பற்றி பிடிக்கவும், அவளோ அவனின் கரத்தை உதறி விட்டு ஓரடி பின்னால் விலகி நிற்கவும் சரியாக இருந்தது.

அவளின் செய்கையில் அவனுக்கோ உச்சகட்டமாக சினம் துளிர்த்தது.

 

அடக்கிக் கொண்டான்.

ஒன்றும் பேசாது இறுகிப் போய் அவன் நின்றிருக்க, அவளோ எதுவும் பேசாது முறைத்துக் கொண்டே திரும்பி நடந்தாள்.

போகும் அவளை வெறித்தவன் என்ன நினைத்தானோ, சட்டென ஓர் எண்ணம் துளிர்க்க குளக்கட்டினை நோக்கி வேகமாக  நடக்கத் தொடங்கினான்.

 

அங்கோ, குளித்து விட்டு வேஷ்டியை கட்டிக் கொண்டு வெற்று மார்புடன் நின்றிருந்தான் ஜெய் ஆனந்த்.

 

“அண்ணா” என்றான் குரலை செருமிக் கொண்டே,

 

“என்ன பண்ணும்?” என்றான் நேரடியாகவே,

“அம்மா என்ன கூட்டங்க. என்னன்னு தெரியல சோ கொஞ்சம் போய் என்னன்னு பாரு” என்க,

 

“நான் ஏன் போகணும் நீயே போகலாமே” என்க,

 

அவனது வெறித்த பார்வையில் என்ன கண்டானோ? “ஓகே நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு” என்று விட, அதற்கு மேலும் ஒரு நொடியும்  தாமதிக்காமல் பவ்யா நடந்து சென்ற திசையை நோக்கி விரைந்திருந்தான்.

 

அவள் தன்மேல் தேவையில்லாமல் கோபப்படுகின்றாள் என தெரிந்தது. ஆனாலும் அவளின் அநாவசிய உதாசீனத்தால் என்னவோ கட்டுக்கடங்கா கோபம் வந்தது.  

இப்போதோ,  அவள் தன்னை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு சென்ற அந்த தோரணை அவனின் மனதை உறுத்த,                                                                                  இதயமோ படு வேகமாக துடிக்க  ஆரம்பித்திருந்தது.

அவள் சென்ற திசையில் சென்றவன் கோயிலுக்கும் வெளியில் வந்தும் விட்டான் ஆனால் அவளை தான் காணவில்லை.

 

அலைபேசியை எடுத்து அவளுக்கு தொடர்ந்து அழைத்தான்.

 

அவளுக்கு அதீத கோபம் வரும் என்று தெரியும் இதை வைத்தே என்னை வெறுத்து விடுவாளோ என்ற ஐயம் நெஞ்சை கவ்வ, விடாது மீண்டும் மீண்டும் அழைப்பை எடுத்தான்.

 

அந்த பக்கம் அழைப்பு போனதே தவிர அவள் தான் எடுத்த பாடு இல்லை.

வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு வந்து மீண்டும் அழைப்பை எடுத்தான்.

 

பலன் பூச்சியம் தான். மீண்டும் மீண்டும் அழைத்து விடாது முயற்சித்தான். அவளோ எடுக்காது போக, வேகமாக நுழைவாயிலை நோக்கி சென்றவன் வீதியின் இரு மருங்கிலும் பார்த்தான்.

 

அவளொருத்தி அங்கே இருப்பதாக தென் படாது போக, அப்படியே ஓய்ந்து போன தோற்றத்தில் விழிகள் கலங்க நின்றவன் தோற்றம் அந்த இறைவனையே அசைத்திருக்க வேண்டும் போலும்,

 

வீதியில் பூக்கடை வைத்திருந்த பெண்மணியோ “உன் பொஞ்சாதி  கோயிலோட தோட்டத்து பக்கம் இந்த வழியா போனாப்பா. அவளையா தேடுற?” என அவர் கேட்ட கேள்விக்கு கூட பதில் கூறாது பக்கவாட்டிலிருந்த மதிலில் பாய்ந்து ஏறி மறு பக்கம் குதித்திருந்தான்.

 

பதற்றத்துடன் வேகமாக பாய்ந்தேறி குதித்தவன் கண்டது என்னவோ முகத்தில் மென் புன்னகை தவிழ காற்றில் அசைந்தாடிய  கூந்தலை அள்ளி கொண்டை போட்டுக் கொண்டு, புடவையை இடையில் சொருகி விட்ட படி மரத்தில் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவளைத் தான்.

 

“அதை ஏன் வெறிச்சு பார்த்திட்டு இருக்கா?” என இதழ்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே அவளை நோக்கி மெல்ல நடந்தான்.

 

அவளை நெருங்க நெருங்க அவள் தனியாக பேசிக் கொண்டிருந்தது கூட அவன் காதில் தெள்ளத்தெளிவாக கேட்க, ‘ஒருத்தன் வர்றது கூட தெரியாம தனியா  பேசிட்டு இருக்கா?’ என்ற யோசனையுடன் அவளுக்கு பின்னே போய் சத்தம் எழுப்பாது மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி நின்றிருந்தான்.

 

“எந்த புண்ணியவான் பண்ண வேலையோ தெரியல. டெய்லி இங்க வந்துட வேண்டியது தான்” என்று சொல்லிக் கொண்டே அதில் ஏறி அமரப் போனவளை பார்த்தவனுக்கோ தூக்கி வாரி போட்டது.

 

அவன் அவளை எச்சரிக்கும் முன்னரே, மரத்தில் அறை குறையாக தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் ஆர்வக் கோளாறில் பாய்ந்து ஏறி அமர்ந்த பவ்யா, சகதி மண்டிக் கிடந்த சேற்று நிலத்தில் சடார் என ஊஞ்சலோடு சேர்ந்து வீழ்ந்த மறுநொடி “அம்மாமாஹ்ஹ்” என்ற அழறலோடு இடையை பற்றிக் கொண்டே ஏழ முயன்றவள் மீண்டும் சேற்றில் வழுக்கி தரையில் விழ, அவளுக்கோ அழுகை வரும் போல இருந்தது.

 

அப்போது தான், தன் முன் நின்றிருந்த உருவத்தை பார்த்தாள்.

அங்கே நின்றிருந்த  தன்னவனைக்  கண்டதும் அவளுக்கோ பேரதிர்ச்சி.

அவன் முன் இப்படியாகி விட்டதேயென  அவமானமாக இருக்க, வாய் விட்டு கத்த வேண்டும் போல இருந்தது.

 

குனிந்து தன்னை பார்த்தாள்.

மேனி முழுதும் சேற்றில் குளித்திருந்தது.

 

அவளின் நிலையை பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் ‘சிரிச்சிடாத விபீஷன் கொல காண்டுல இருக்கா’ என தன்னை தானே எச்சரித்துக் கொண்டவன் வலியில் முகம் சுருங்க இடையை பிடித்துக் கொண்டு எழ முயன்றவளிடம் “வெயிட் பேபி நான்  ஹெல்ப் பண்றேன்” என்றான்.

 

“நோ, கிட்ட வராதீங்க. உங்க ஹெல்ப் எனக்கு தேவையில்ல” என்றாள் இதழ்கள் துடிக்க,

“ஹேய் எழுந்து வந்து சண்டை போட்டுக்கோடி. பிளீஸ், லெட் மீ ஹெல்ப்” என்றான் சற்றே குரல் தாழ்த்தி,

 

“வேணாம் கிட்ட வந்தா கத்துவேன்” என்றாள் சீற்றத்துடன்,

 

“ஐ டோண்ட் மைண்ட்” என்றவன் மெதுவாக கால் வைத்து அவளை நெருங்க, “என் பேச்ச கேட்கவே மாட்டீங்கல” என்று குரல் தழுதழுக்க சொன்னவள் இதழ் பிதுக்கி ‘ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்’ என்று ஹை டெசிபலில் வேண்டுமென்றே சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டாள்.

 

அவள் கத்தவும் அரண்டு போனவன் “கத்தாதடி” என்று சொல்லிக் கொண்டே அவளின் வாயை பொத்தி பிடிக்க முயன்றவன் சேற்றில் வழுக்கி அவள் மீதே சரிந்திருந்தான்.

 

இருவருமே சற்றும் இதனை எதிர் பார்க்கவில்லை.

 

“பொறுக்கி” என்று சீறியவள் தரையிலிருந்த சேற்றை அள்ளி அவன் முகத்தில் பூசி விட, அவனுக்கோ அவள் தன்னை பொறுக்கி என்றதும் உடல் இறுக அவளின் இரு சிவந்த கன்னங்களையும் தாங்கி தன் முகத்தில் அவள் பூசிய சேற்றை அவளின் முகத்திற்கே இடம் பெயர்த்திருந்தான்.

 

விளைவு, அவளின் இதழ்கள் கூட அவன் வசமானது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

1 thought on “நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 16”

Leave a Reply to babuvana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!