ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க,
இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க,
அவளா முடியாது என்று சொல்வாள்?
சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தவள் முகம் நொடியில் பிரகாசமானது.
அவளின் அமைதியில் “வேற யாரையும் லவ் பண்றியா தியா?” என்ற அவனது அடுத்த கேள்வியில் ‘இப்பவே லவ்வை சொல்லிடாத ஆஹி வழிஞ்சான்னு நினைக்க கூட சான்ஸ் இருக்கு’ என தனக்குத் தானே வலியுறுத்திக் கொண்டவள் “ச்சீ லவ்வா? ஐம் பியூர் சிங்கிள் என்றவள் நான் வீட்ல அரேஞ்ச் பண்ற மேரேஜ்கு தான் ஓகே சொல்லலாம்னு இருந்தேன். அதுவே நீங்களா இருக்கப்போ ஹேப்பி தான்” எனக் கூற,
அவளின் மனதோ ‘அய்யய்யோ! அரேஞ்ச் மேரேஜ்கா ஆசைப்பட்ட! என்னடி இப்படி உல்ட்டாவா பொய் சொல்ற?’ என கேள்வி கேட்டு காரி உமிழ்ந்தது.
“ஓகே ப்ராமிஸ்ஸா நான் ரிபோர்ட்டை ஓபன் பண்ணி பார்க்க மாட்டேன்” என்றவள் சற்று தயங்கிய படியே “சாரி இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் அண்ட் நான் எதுக்காக இந்த டெஸ்ட் எடுத்தேனு…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ பிளீஸ் இப்பவே எதுவும் சொல்லனும்னு கட்டாயம் கிடையாது தியா. டேக் யுவர் ஓவ்ன் டைம். கல்யாணத்துக்கு டைம் இருக்கு பேசி பழகலாம்” என்று சொல்ல,
அவளுக்கு அவனது நேரடி பேச்சில் முகம் சிவந்து போனது.
“ம்ம்” என்று சொன்னவளுக்கு அதற்கு மேல் அங்கு, அதுவும் அவனருகாமையில் நிற்கும் தைரியம் அற்று விட, நிலத்தைப் பார்த்துக் கொண்டே “நான் கிளம்புறேன் மாமா” என்றாள்.
“காலேஜ் லேட்டாகலையா?”
“சைன் பண்ண ஆள் இருக்கு” என்று சொல்லி விட்டு கண்களை சிமிட்டி விட்டு கதவை திறந்து கொண்டு வெளியே ஓடியவள் திகைத்து நின்றாள்.
“ஹாய் சிஸ்டர் ஐம் நவீன். ஆனந்த்’ஸ் ப்ரெண்ட்” என்று வலக் கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.
அதே அதிர்ச்சி மாறாமல் தன் வலக் கரத்தை நீட்டியவள் “ஹாய் அண்ணா” என புன்னகைத்து விட்டு கடந்தவளுக்கு ‘இப்போ தான் இவர் என்ரியா’ என முணுமுணுத்துக் கொண்டவள் காலேஜுக்கு கிளம்பியிருந்தாள்.
கேசத்தை கோதிக் கொண்டே இதழில் புன்னகையுடன் நின்றிருந்த ஜெய் ஆனந்த்தை குறுகுறுவென பார்த்த நவீன் “என்ன மச்சி….?” என்று இழுவையாக சொல்ல,
“ஹேய், இழுத்து வச்சு ஸ்டிச் பண்ணிடுவேனு சொல்ல வந்தேன் டா. சோ நீ வந்த வேலையை மட்டும் பார்க்குற ரைட்”
“அடியேனும் வாங்க. பேஷண்ட்ஸ் வெயிட்டிங்”
“வெட்டி ஆபீசர் நீ அதெல்லாம் பேச கூடாது” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னவன் அவனின் முகம் போன போக்கில் “ஓகே ஓகே முகத்தை தூக்கி வைக்காத சகிக்கல” என்று சொன்னவன் பேசி சிரித்த படி கிளினிக் அறைக்குள் நுழைந்தான்.
********************************
அன்றைய நாள் இரவில் ஏனோ மனம் லேசாக, ஆஹித்யாவுக்கோ நிம்மதியான உறக்கம் அவளைத் தழுவியது.
அதனைத் தொடர்ந்து நாட்களும் வேகமாக நகர ஆரம்பித்த தருணம் அது.
வீட்டில் பேசி வைத்தது போல பெண் பார்ப்பதற்காக நன் நாள் மற்றும் நல்ல நேரம் என அனைத்தையும் பார்த்து புரோகிதரிடம் குறித்து எடுத்துக் கொண்டு வந்த சித்ராவும் வித்யாவும் தாங்கள் பெற்று வைத்தவர்களை கிழப்பவே ஒருவழியாகி இருந்தனர்.
இதில், எதிர் மாறாக அதீத நாட்டத்துடன் நாட்களை எதிர்பார்த்து காத்திருந்தது என்னவோ விபீஷனும் ஆஹித்யாவும் மாத்திரமே!
அன்றைய நாளும் அழகாக விடியல் தர, காலையிலேயே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு முதலில் ஆயத்தமானது என்னவோ விபீஷன் தான்.
அன்றைய நாள் ஜெய் ஆனந்த் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பதால் சற்று தாமதமாகவே எழுந்தான்.
ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று வேஷ்டியின் நுனியை ஒற்றை கரத்தால் பிடித்து கொண்டு மறு கரத்தால் கேசத்தை கோதியபடி நின்று தன் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனை பார்த்துக் கொண்டே மெலிதாக புன்னகைத்த படியே எழுந்தமந்தான் ஜெய் ஆனந்த்.
குரலை செருமிக் கொண்டே கழுத்தில் கரம் வைத்து நெட்டி முறித்தவன் “இன்னும் டைம் இருக்கே இப்பவே ஏன்டா?” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்டான்.
அவனும் தன் உடன் பிறந்தவனை கவனியாமல் அல்லவே!
பவ்யா செல்லும் இடம் முழுதும் அவனது காதலான பார்வையும் அவள் மீது அவன் கொண்ட நேசத்தை இந்த ஒரு வாரத்தில் உணர்ந்து கொண்டான்.
என்னவோ, தானும் இப்படி விழுந்து விழுந்து காதலிக்க வேண்டும் என்ற உணர்வு ஆழிப்பேரலையாய் எழுந்தது அவனுள்,
அந்நொடி முதல் அவனும் தன்னவளை கண்டும் காணாமல் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான் ஆண்மகன்.
“இட்ஸ் அ பீல் டா. லைஃப்ல ஒரு முறை தான் மேரேஜ். பிபோர் மேரேஜ் இப்படி எல்லா இருந்தேன்னு என் பேபிஸ்கு பாடம் எடுக்கணும்ல” என்று இதழ் பிரித்து புன்னகைத்தான் விபீஷன்.
“நான் உன் அண்ணன்டா. கொஞ்சம் ஃபீலிங்ஸ் கன்ட்ரோல் பண்ணு ஓவரா ப்ளோ ஆகுது” என்று நக்கலாக சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தான்.
“போடா, உனக்கெல்லாம் சொன்னா புரியாது லவ்வை பீல் பண்ணி பாரு புரியும்” என்று அறைக்குள் இருந்து கத்த, “அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கு எப்படி உறிக்கணும்னு தெரியும். ஃபர்ஸ்ட் உன் ரூட்டை க்ளியர் பண்ணு” என்று குளியலறைக்குள் இருந்து குரல் கொடுத்தான் ஜெய் ஆனந்த்.
“எப்பவாவது என்கிட்ட ஹெல்ப் கேட்ப தானே அப்போ வச்சிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே ஹேங்கரிலிருந்த ஷர்ட்டை எடுத்து அணிந்தவன் கையை முட்டி வரை மடித்தான்.
முப்பது வயதே ஆனாலும் அவனது திண்ணிய உடற் கட்டமைப்பு அவ் ஆறடி ஆண்மகனை அழகனாக காட்டியது.
சற்று நேரத்திலேயே குளித்து விட்டு இடையில் டவலுடன் அறைக்குள் வந்த ஜெய் ஆனந்த் “இப்ப கூட டார்க் க்ரீன் ஷர்ட் தானா வேர் பண்ணுவ? வேற ஷர்ட் போடுடா”
அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்த விபீஷனோ “வொய் நாட் பட், சார் ஒயிட் ஷர்ட்டை ரிமூவ் பண்ணிட்டு வேற கலர் ஷர்ட் போட்டா என்னவாம்” என்றான் புருவம் உயர்த்தி,
இதழ் குவித்து ஊதிக் கொண்ட ஜெய் ஆனந்த்தோ “நோ மென்ஷன். நீ இப்படியே கிளம்பு” என்று அறைக் கதவின் புறம் காட்டினான்.
இதழ் பிரித்து சத்தமாக சிரித்தவனோ “சீக்கிரம் ரெடியாகிட்டு வா” என அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
வெண்ணிற ஷர்ட்டின் பட்டன்களை ஒவ்வொன்றாக போட்டவன் என்ன நினைத்தானோ மேலிரு பட்டனைகளை போடாமல் விட்டவன் கேசத்தை கோதிக் கொண்டே ஹேங்கரிலிருந்த நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டில் கரத்தை வைத்தவன் ‘ப்ச்’ என சலித்து விட்டு விபீஷன் எடுத்து வைத்து விட்டு போன வெண்ணிற வேஷ்டியை அணிந்துக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து, மணிக்கட்டில் வாட்ச்சை கட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி வந்தவனை பார்த்த விபீஷன் சத்தமாக சிரித்து விட, அவனை கடுமையாக முறைத்த ஜெய் ஆனந்த், “என்னடா?” என கடுப்பாக கேட்டவன் தன்னைக் குனிந்து ஆராய்ந்தான்.
“பின்ன, நாம என்ன அரசியல் மீட்டப்கா போறோம்? புல் ஒயிட் அண்ட் ஒயிட்டா வந்திருக்க” என்றதும் நெற்றியை நீவிக் கொண்டே “என்ன? கலாய்க்குறியா?” என்று கேட்டான்.
“இட்ஸ் ஓகே” என சொல்லி விட்டு அவன் தோளில் கரத்தை போட்டு அலைபேசியில் செல்ஃபி எடுத்தான் ஜெய் ஆனந்த்.
“என்ன அண்ணிக்கு சென்ட் பண்ணவா?” என்று கேட்டான்.
“ச்சே இல்லையே, நீ கலர்புல்லா பக்கத்துல இருக்கல சோ ஒயிட் அண்ட் ஒயிட் வித் க்ரீன் காம்பினேஷன் பார்த்தேன்” என்றான் இதழ் கடித்து சிரித்த படி,
“எனக்கென்னவோ அண்ணிக்கு ஃபோட்டோ சென்ட் பண்ண போறனு தோணுது” என்று சொல்ல,
“தியா’கு சென்ட் பண்ண நான் ஏன் உன்கூட செல்ஃபி எடுக்க போறேன்?” என புருவம் உயர்த்த,
“சோ?” என விபீஷன் கேட்க,
“வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க போறேன்” என்று சொல்லிக் கொண்டே அப் புகைப்படத்தை சொன்னது போலவே புலனத்தில் பதிவேற்றியிருந்தான்.
இங்கோ, தயாராகி விட்டு அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த பவ்யா, ஜெய் ஆனந்த் புலனத்தில் பதிவிட்டிருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தவள் பார்வை விபீஷனில் தான் நிலைத்தது.
பின்னே அதிராமல் இருப்பாளா?
அவன் அடர் பச்சை நிற ஷர்ட் அணிந்திருக்க, அவளோ அதே நிறத்தில் கல் வேலைப்பாடுங்கள் செய்த புடவையை கட்டி அல்லவா இருந்தாள்.
ஆஹித்யாவோ, அவளின் அதிர்ந்த பார்வையை பார்த்துக் கொண்டே காதில் ஜிமிக்கியை மாட்டிக் கொண்டு அவளை நெருங்கி அலைபேசியை பார்த்தாள்.
முதலில் அவள் பார்வை பதிந்தது தன்னவன் மீது தான்.
அவனைத் தவிர வேறு ஏதேனும் தெரிந்தால் அதிசயம் தான் போலும்,
ஆண்மையின் மொத்த இலக்கணமாக திரையில் புன்னகையுடன் நின்றிருந்த ஜெய் ஆனந்த்தை வஞ்சனை இன்றி ரசித்து பார்த்தாள்.
இவ்வளவு விரைவாக தன்னவனுடன் அதுவும் தான் விரும்பியவனை கரம் பிடிக்க பல தடைகளை தாண்ட தான் வேண்டுமோ? என்று நினைத்து புலம்பியவளுக்கு தானாக அவன் கிடைத்தும் விட்டான்.
திருமணம் நெருங்க நெருங்க ஏனோ அவளை வெட்கம் எனும் அலையா விருந்தாளி நாடிக் கொள்ள, அவன் எதிரே வந்தால் கூட குனிந்த தலை நிமிராமல் அமைதியாக சென்றவள் இன்று அவனை நேருக்கு நேர் பார்த்து பேச போகின்றோம் என்ற படபடப்புடன் சேர்ந்து வெட்கம் வேறு பிடுங்கித் தின்றது.
அதன் விளைவால் அவனை திரையில் கண்ட பெண்ணவளுக்கோ, காது மடல்கள் சிவந்து போயின.
இதழில் தவழ்ந்த புன்னகையுடன் “பவ்யா வாடி அம்மாவுக்கு எல்லாம் எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணலாம்” என்றழைத்தவள் அப்போது தான் அவளை பார்த்தாள்.
அவளின் விழிகள் திரையில் ஜெய் ஆனந்த்தின் பக்கத்தில் அவனுக்கே சவால் விடும் வகையில் ஆண்மையின் மறுவுருவமாக நின்றுக் கொண்டிருந்த விபீஷனில் படிந்திருப்பத்தை பார்த்து அவளுக்கு அபாய சங்கு ஒலித்தது.
‘ ஆத்தி, என்னத்தை வச்சு வம்பு பண்ண போறாளோ தெரியலயே’ என அரண்டவள் அவளின் தோள்களை தொட்டு உலுக்கி “போனை வச்சிட்டு வா ஹெல்ப் பண்லாம்” என்று சொல்ல,
“நான் சாரி சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” என்றாள் குரல் கம்ம,
அதிர்ந்து போன ஆஹித்யா “நாம ரெண்டு பேருக்கும் அத்தை வீட்ல எடுத்து கொடுத்த சாரி சோ சேஞ்ச் பண்ண கூடாது” என்றாள் அழுத்தமாக,
அதை கேட்ட பவ்யாவுக்கோ கோபம் தாறுமாறாக ஏறியது.
‘ எல்லாம் அவன் வேல தான்’ என்று மனதில் கறுவிக் கொண்டவள் “ சரி தான் நடக்காத கல்யாணத்துக்கு நான் ஏன் சும்மா சேஞ்ச் பண்ண” என்று சொல்லிக் கொண்டே முன்னேறி நடந்தவளிடம் “வாட்? என்ன உளருற?”
“ஹே கூல் மேன். உனக்கும் ஜெய் மாமாவுக்கும் மேரேஜ் நடக்கும் பட் எனக்கும் அந்த நல்லவருக்கும் ‘ப்ச்…’ ”என்று இதழ்களை பிதுக்க, எதிரே நின்றவளுக்கோ இவள் என்ன செய்து வைக்கப் போகிறாள் என்று இப்போதே குளிர் பரவ ஆரம்பித்து விட்டது.
அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட படி அறைக்குள் நுழைந்த வித்யா வில்லத்தனமாக பேசிக் கொண்டிருக்கும் தனது மகள் பவ்யாவின் கையை பிடித்து இழுத்து தன் புறம் திருப்பியவர் “என்மேல சத்தியம். நீ விபீஷனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்” என சொன்னவர் சிலை போல நின்றவளின் வலக் கரத்தை உயர்த்தி தன் தலையில் வைத்திருந்தார்.
“அம்மா” என்றவள் விழிகள் கலங்கி போக,
“அவனை நீ ஏன் இந்த பாடு படுத்திட்டு இருக்க பவ்யா ? உன்ன நேசிச்சதை தவற வேற எண்ண தப்பு பண்ணான்?” என சீற்றமாக வெளி வந்தன வித்யாவின் குத்தீட்டியான கேள்விகள்.
விடையறியா கேள்விக்கு அவள் எப்படி பதில் சொல்வாள்?
ஏனோ அவனைக் கண்டாலே கோபம் கோபமாக வந்து தொலைக்கின்றது. ஆனால் அவன் மீது தனிப்பட்ட வெறுப்போ, பழி வெறியோ எதுவும் கிடையாது.
அவனைக் கண்டாலே தனக்குள் தோன்றும் கோபம் ஏன்? என தெரியாமல் அவள் தவிக்கும் போது, வித்யாவின் கேள்விகளுக்கு என்ன தான் பதில் கூற முடியும்?
இதே தொடர்ந்தால் இருவரின் வாழ்க்கையும் வீணாக போய்விடும் என்றல்லவா தனது திருமணத்தை நடக்க விடாமல் செய்யலாம் என யோசித்திருந்தாள்.
விதியோ அவளை பார்த்து சிரித்து கொண்டது.
அமைதியாக நின்றவள் ஒரு பெரு மூச்சுடன் “நிறுத்த மாட்டேன். அவரை கட்டிக்கிறேன் என்றவள் தன் அன்னையின் விழிகளை பார்த்து பட் எனக்கு என்னை மாத்திக்க டைம் வேணும் மா. அதுக்குள்ள ஊர்ல அப்படி பேசுறாங்க இப்படி பேசுறாங்கனு குழந்தை விஷயமா என்கிட்ட பேச கூடாது” என சட்டென கூறி விட்டாள்.
தன் தங்கையா இப்படி பேசுகின்றாள்? என அவளை பார்த்துக் கொண்டிருந்த ஆஹித்யா “ ஓகே ரிலக்ஸ்” என திரும்பி தன் அன்னையின் “அம்மா நீங்க போங்க நாங்க வரோம்” என்று சொல்ல,
இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறியிருந்தார் வித்யா.
இன்னும் முகத்தில் தெளியா குழப்பத்தோடு கலங்கி போய் நின்றிருந்த பவ்யாவின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவள் “ லைஃப் ல அனுபவிக்க இன்னும் நிறையவே இருக்கு பவ்யா. நாளைக்கு என்ன நடக்கும்னு நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது. சோ இப்போ இந்த நொடி நமக்கானது என்ஜாய் பண்ணு. விபீஷன் கூட மனசு விட்டு பேசு. டைம் கேளு. காலம் எல்லாத்தையும் நிச்சயமா மாத்தும் சோ நாளைக்கு என்னனு நினைச்சு பீல் பண்ணாத நம்ம நிம்மதி போய்டும். வாழ்க்கை வாழ்வதற்கே” என்று அவளின் இதழ்களை தன் இரு விரல்களால் விரித்து விட்டவள் “ சிரி அப்போ தான் கொஞ்சமாச்சும் சைட் அடிக்கிற போல இருப்ப”என்றவள் கேலியில் சட்டென சிரித்தவள் “என்னவோ கொஞ்சம் டென்ஷன் குறைஞ்ச போல இருக்கு ஆஹி. தேங்க்ஸ்” என்று அவளின் கன்னத்தில் குனிந்து முத்தமிட்டு இறுகி அணைத்துக் கொண்டாள்.
Super jeeshu sis 💞