அவனை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேரவா எழவும், வேகமாக குளியலறைக் கதவைத் திறந்துக் கொண்டு அறைக்குள் வந்தவளை அவனில்லா வெறுமையான அறை தான் வரவேற்றது.
தன் விழிகளை சுழல விட்டவள் “மாமா” என மெலிதாக அழைக்கவும் அவன் அவளின் பின்னால் நெருங்கி நிற்கவும் சரியாக இருந்தது.
அவனின் உஷ்ண மூச்சுக் காற்றோ அவளின் கழுத்து வளைவை உரசிச் செல்லவும் சிலிர்த்த பெண்ணவளோ, “நீ…நீங்க இன்னும் போ.. போகலையா மாமா?” என்றவளிடம் “போகணுமா என்ன?” என்று கேட்டவன் அவளை விட்டு ஒரு இஞ்ச் கூட நகரவில்லை.
இத்தனைக்கும் இருவருக்கும் இடையில் நூலிழை போல மெல்லிய இடைவெளி தான். ஒருவர் அசைந்தால் கூட மேனிகள் உரசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கம்.
விழிகளை மூடித் திறந்து ஆழ்ந்த பெரு மூச்சை விட்டுக் கொண்டே அவன் புறம் முழுதாக திரும்பிய பெண்ணவளோ “அத்தை தேடுவாங்க கிளம்புங்க மாமா” என்றவள் முதன் முறையாக தடுமாறாமல் அவனின் விழிகளை ஏறிட்டாள்.
“பைன், இன்னைக்கு தான் என் கண்ண பார்த்து திக்காம பேசுற” என்றவாறே சிவந்த அவளின் இரு கன்னங்களையும் ரசனையாக பார்த்தவன் “நீ என்னை தேட மாட்ட போல” என இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே அவன் கேட்ட, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டவள் பார்வையோ தன் இடையில் பதிந்திருந்த அவனின் கரத்தில் படிந்தது.
“நீ பார்த்ததும் கையை எடுக்குற அளவுக்கு அவ்ளோ நல்லவன்லாம் இல்ல” என்றவன், ஆழ்ந்த குரலில் “ ஆன்சர் மீ, நீ என்னை தேட…” என்று அவன் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும் போதே எம்பி அவனின் இதழ்களை ஆழமாக சிறை செய்திருந்தாள் அவனின் தியா.
அவனது விழிகளோ ஒரு கணம் திகைத்து பின் அவள் தரும் முத்தத்தில் தாமாக மூடிக் கொள்ள, அவனின் சிகைக்குள் கரத்தை நுழைத்து தன்னை மறந்து அவனுக்கு முத்தமிட்டவளின் இதழணைப்பை தனதாக்கியிருந்தான் ஜெய் ஆனந்த்.
வார்த்தைகளால் சொல்லாமல் தனது செயலால் அவனுக்கு தன் தேடலை புரிய வைத்துவிடும் வேகம் அவளிடம்,
ஏதோ வேகத்தில் முத்தமிட ஆரம்பித்தவள் அவனது பதில் தாக்குதலில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிய, இப்போது நிலைக்குலைவது அவளது முறையாகிப் போனது.
இருவருக்குமான முதல் இதழணைப்பு.
என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கே பிரித்தறிய முடியவில்லை.
அவளது மேனியோ பெண்மையின் நுண் உணர்வுகளை கட்டவிழ்க்க ஆரம்பித்து விட, ஒரு கட்டத்தில் அவன் மீது துவண்டு சரிந்தே விட்டாள்.
விழிகளை மூடி அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தவன் அவள் தன்மீது விழவும் அதிர்ந்து விட்டான் அவன்.
“ஷிட்” என்று நெற்றியை நீவிக் கொண்டே அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் கட்டிலில் படுக்க வைத்து விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன் குனிந்து அவளின் கன்னத்தை மிக மிக மென்மையாக வருடி விட்டவன் “தியா” என்றழைத்தான்.
அவனையும் மீறி குரலோ கரகரத்து ஒலித்தது.
அவளோ விழிகளைத் திறக்காமல் சுயநினைவின்றி கிடப்பது போல இருக்கவும், அவளின் காதருகே நெருங்கி “படுத்துறடி, ஐ காண்ட் கன்ட்ரோல். உன்னை இன்னும் கிஸ் பண்ணணும் போல தோணுதே என்னடி பண்ண?” என்று அவன் ஹஸ்கி குரலில் கேட்ட அடுத்த நொடி பட்டென விழிகளை திறந்தவள் “ஐ… ஐம் ஓகே மாமா” என்றாளே பார்க்கலாம்.
அவளை அறிந்தவனாயிற்றே! அவளின் சிறு சிறு செயல்களும் அவள் வசம் ஈர்த்து இழுத்தது.
இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே எழுந்தவன் “ இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும் என்னை பார்த்து டென்ஷன் ஆகாமல் நார்மலா பேசு அண்ட் மோரோவர் கிஸ் ரொம்ப ஸ்பைசியா இருந்துச்சு” என்று சொல்ல,
அப்போது தான், தன் இதழ்களில் காரத்தை உணர்ந்த பெண்ணவளோ அடுத்த நொடியே “ஐயோ மாமா சாரி அது..அது வந்து நான்” என்று மீண்டும் தடுமாறி திக்கி திணற ஆரம்பித்து விட, “இப்போ தானே சொன்னேன் கூல்” என கடிந்தவனின் முகத்தையே வெட்கம் பாதி தயக்கம் மீதியாக பார்த்துக் கொண்டிருந்தவளின் மெலிதான நடுக்கத்துடன் துடித்துக் கொண்டிருந்த அதரங்களை தனது விரல்களால் வருடியவன் “இன்னும் தூக்கலா காரம் சாப்ட்டு கிஸ் பண்ணிருக்கலாமே” என்றவன் புன்னகை மாறாமல் அவளை நொடியில் அணைத்து விடுவித்தவன் “ஐ காண்ட் வெயிட், சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்டி” என்றவன் சட்டென அவளின் அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
அவன் மீதெழும் உணர்வுகளை அடக்கும் வழியறியாது அவனை முத்தமிட்டது என்னவோ அவள் தான். ஆனால் அவன் பேசிவிட்டு செல்லும் தோரணையில், போகும் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் வெட்கி தலையணையில் முகம் புதைத்து கட்டிலில் புரண்டவள் “ஹையோ எனக்கு என்னவோ பண்ணுதே! கடவுளே! என்னை அலைஞ்சான் கேஸ்னு நினைச்சு இருப்பாரோ?” என்றெல்லாம் தனக்குள் தானே பேசிக் கொண்டே தன் இதழ்களை விட்டால் கழட்டி பார்த்து விடுவாள் போலும் வருடிவிட்ட படியே “காரம் மட்டும் இல்ல இனிமேல் ஸ்வீட் கிஸஸ்ஸாவே கொடுத்து கரெக்ட் பண்ணிடனும்” என்றவள் மனசாட்சியே ‘ரொம்ப ஆடாத அடக்கி வாசி’ என காரி உமிழ்ந்தது “எல்லாம் எனக்கு தெரியும் நீ மூடிட்டு இரு” என தன் மனசாட்சியை அடக்கியவள் தன்னவன் நினைவிலேயே இதழ்களில் வெட்கப் புன்னகையுடன் விழிகளை மூடி அசதியில் உறங்கிப் போனாள்.
**********************************************
அதனைத் தொடர்ந்து திருமண நாளை முன்னிட்டு நாட்களும் வேகமாக நகர, கிட்டத்தட்ட திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே வித்யாவின் குடைச்சல் தாளாத பவ்யா, கல்லூரிக்கு போகாமல் விடுப்பை எடுத்து விட்டு சோர்வாக வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சுற்றிலும் பரந்து விரிந்திருந்த வயல்வெளியில் தன் பார்வையை படியவிட்டவளுக்கு வரப்பில் ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்து விட்ட படி வேலையாட்களுக்கு கட்டளையிட்ட படி நின்றிருந்த விபீஷன் மீது தன் பார்வையை ஆழமாக படியவிட்டாள்.
காற்றில் அலைந்த சிகையை கோதிக் கொண்டே நின்றிருந்தவன் தன்னை என்னவோ ஒன்று துளைப்பதை போலிருக்க, சட்டெனத் திரும்பி பின்னால் பார்த்தான்.
அவன் இப்படி சட்டென திரும்புவான் என எதிர்பாராமல் திகைத்து விழி விரித்தவள் சட்டென வயலை பார்ப்பதைப் போலவே தன் பார்வையை மாற்றாது அவள் சாதாரணம் போல இருக்க, “நல்லா சைட் அடிச்சிட்டு இப்போ ஆக்ட் பண்றா” என தன் இதழ்களுக்குள் முணுமுணுத்த படி அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு முன்னால் திரும்பிக் கொண்டவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
அவன் முன்னால் திரும்பிக் கொண்டதும் தான், இழுத்து பிடித்திருந்த மூச்சை வெளி விட்டவள் “ஜஸ்ட் மிஸ் எப்படியோ சமாளிசிட்டேன்” என தலையை உலுக்கி சமன் செய்து கொண்டவள் நெற்றியை நீவிக் கொண்டே “எப்படி இவனை சைட் அடிக்கிற லெவலுக்கு இறங்கினேன்?” என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டே எழுந்தவள் தன் முன்னால் நின்றிருந்தவனை உச்சகட்ட அதிர்ச்சியில் விழிகள் மேலும் அகல விரிய பார்த்தாள்.
மனதை உறுதியாக வைத்திருக்கும் அவளுக்கே மயக்கம் வருவதைப் போலிருந்தது அவனது நெருக்கத்தில்,
“நான் வேணும்னா உன் கேள்விக்கு விடையை க்ளியரா சொல்லவா?” என்று கேட்க,
“ஹான், என்ன கேள்வி அதெல்லாம் ஒன்னும் இல்ல” என அவசரமாக சொல்லி விட்டு எங்கே இன்னும் நின்றால் தான் மாட்டிவிடுவோமோ என்று அரண்டு போனவள் திரும்பி நடக்க முயன்றவள் கையை எட்டி பிடித்தே விட்டான்.
அவன் பார்வை தன்மீது பட்டாலே எரிந்து வீழ்பவளோ இப்போது அவனது கரம் தன் கரத்தை தீண்டியதும் அவனது இச் செயலில் கோபம் கொள்ளாது தவித்து போய் இதயம் படபடக்க நின்றிருந்தாள்.
புதிதாக, இல்லை இல்லை கடந்த ஒரு வாரமாக அவன் மேல் உண்டான சலனம், அவனின் இச் செயலில் கோபம் கொள்ள விடுமா என்ன? ஆனால் இப்போதோ அவளின் தவிப்புக்கான காரணம் வேறல்லவா!
திருமண வீடு என்பதால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்த வண்ணம் வேலையில் இருக்கும் போதே வெட்ட வெளியில் வைத்து அதுவும் அவனது தொடுகையில் அவள் மனம் தான் படபடத்து போனது.
செய்வதறியாது பின்னால் திரும்பி அவன் முகத்தையும் தன் கரத்தில் பிணைந்திருந்த அவனது கரத்திலும் பார்வையை படியவிட்டவளை விட்டு விட தான் அவனுக்கு மனதில்லை போலும் “என்னை லவ் பண்ணிடுவனு பயமா இருக்கா என்ன?” என்றவன் கேள்வியில், அவளது பழைய துடுக்குதனம் வெளிவர ‘என்கிட்டேவா கொஞ்சமா சைட் அடிச்சது தப்பா போச்சே’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் பற்கள் பளிச்சிட புன்னகைத்த படியே “நான் பயப்பட அவசியமே இருக்காது மிஸ்டர் விபீஷன் பிகாஸ் அப்படி ஒன்னு நடக்கப் போறதே இல்லையே” என விழிகளை சிமிட்ட,
சிரித்துக் கொண்டே வார்த்தைகளால் ஒருவனை உயிருடன் கொல்ல முடியுமா என்ன? அதை தான் பாவையவளும் தன்னையறியாமல் செய்து கொண்டிருந்தாள்.
இதே பழைய விபீஷனாக இருந்தால் அவளது பேச்சில் காயப்பட்டு இருப்பான் ஆனால் இப்போதோ நொடியும் விடாது தன் நினைப்பும் பார்வையும் அவளைச் சுற்றி சுழலும் போது தன்மீதான அவளது பார்வையை உணர்ந்து கொள்ள மாட்டானா என்ன?
தன் பேச்சில் அவன் முகம் போகும் போக்கை காண ஆவலாய் இருந்தவளுக்கு நினைத்ததிற்கு மாறாக அவன் முகத்தில் மிளிர்ந்த புன்னகையில் குழம்பி போனது என்னவோ அவள் தான்.
இருவரின் மோன நிலையை கலைக்கவென்றே “மாமா… விபீ மாமா…” என சத்தமாக அழைத்த படி ஒரு பெண் ஓடி வருவதை பார்த்து சட்டென தன் கரத்தை அவனது பிடியிலிருந்து உருவி எடுத்தவள் பார்வை, அவனை நோக்கி வேகமாக ஓடிவந்த அப் பெண்ணின் மீது தான் ஆராய்ச்சியாக படிந்தது.
தன் முன் மூச்சிறைக்க வந்து நின்றவளை யாரென்று அவன் சுதாரிக்கும் முன்னரே அவனை அணைத்திருந்தாள் அப் பெண்.
நொடிப்பொழுதில் நடந்து விட்ட செயலில் திகைத்தவன் கடினப்பட்டு அவளை தன்னிலிருந்து பிரித்து விலக்கி நிறுத்தியவன் “யார்மா நீ?” என்று பொறுமையாக கேட்டான்.
அப்போது தான் அவனருகில் தூக்கிவாரிப்போட ஓடிவந்த அப்பெண்ணின் அன்னை “விபீ, என் பொண்ணு தெரியாம பண்ணிட்டா மன்னிச்சிடுடா” என்க,
அப் பெண்மணியை கூர்ந்து பார்த்தவன் “ஓஹ் கோட் அத்தை, சாரி ரொம்ப நாள் ஆச்சு சோ அடையாளம் தெரியல சாரி என்றவன் பார்வை இப்போது கனிவாக மாறி அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டே தன்னேதிரே நின்றிருந்தவளை நோக்கி “ஹேய் லிட்டில் பிரின்சஸ் அதுக்குள்ள ஆளே மாறிட்ட” என சகஜமாக பேச,
“நான் ஒன்னும் லிட்டில் இல்ல நான் இப்போ பெரிய பொண்ணு அதுவும் உங்களுக்கு இன்னுமே நான் முறை பொண்ணு தான்” என்று வாயாட,
“நானும் இல்லன்னு சொல்லவே இல்லையே”என்றபடி இதழ் பிரித்து சிரித்தான்.
ஆரம்பத்திலிருந்து என்ன தான் நடக்கின்றது? என அவதானிக்க நினைத்தவள் பிடிவாதமாய், போய்விடு என்று சொன்ன மனதை அடக்கி விட்டு வலுக்கட்டாயமாக நின்றிருந்தாள்.
அதுவும் அவனை உரிமையாக அழைத்துக் கொண்டே ஓடி வந்து யாரோ ஒரு பெண் அணைத்ததுமே அவளது உடல் முழுவதும் தீப்பற்றி எரிவது போல எரிந்து விறைப்பது போலிருந்தது.
தன்னைக் கண்டு கொள்ளாது இன்னொரு பெண்ணிடம் அவன் உரையாடுவது, இவ்வளவு நேரமும் வராத கோபம் இப்போதோ தாறுமாறாக வந்தது.
கல் போல் இறுகி நின்றிருந்தவளை அவனது அழைப்பு தான் நிகழ் உலகிற்கு கொண்டு வந்தது.
“ஹே பவி மறந்துட்டியா ஷி இஸ் ஶ்ரீ நவி” என்றான்.
அவன் அப் பெயரைக் கூறியதும் தான் என்னவோ பொறித்தட்டுவது
போலிருக்க, “வாட்? நவி நீயா? என்னடி இவ்ளோ வளர்ந்திருக்க இவ்ளோ வருஷம் கழிச்சு என் கல்யாணத்துக்கு தான் வர தோணிச்சா?” என்றாள் கோபமாக,
“எங்கம்மா வர்றது? அவருக்கும் வேலை ஒரு பக்கம் இவளுக்கும் படிப்புன்னு அதுக்கே ஓட சரியாயிடுச்சு” என பெரு மூச்சை விட்டுக்கொண்ட ஶ்ரீநவியின் அன்னையோ “வந்ததும் உள்ள போகாமல் பேசிட்டு இருக்கேன் என தலையில் தட்டிக் கொண்டவரோ நீங்க பேசிட்டு இருங்க. நான் உள்ள போறேன்” என்றவாறு வீட்டை நோக்கி அவர் நடக்க,
தன் அன்னை சென்றதை உறுதிப் படுத்துக் கொண்டே பவ்யாவை
பார்த்து முறைத்த ஶ்ரீ நவியோ, “சின்ன வயசுல நாம போட்ட அக்ரிமெண்ட் மறந்து போச்சு போல” என சம்மந்தமே இல்லாமல் வாயை திறந்தாள் அவள்.
“அக்ரிமெண்டா? என விழிகள் இடுங்க யோசித்தவள் இதழ்களை
பிதுக்கி சத்தியமா ஞாபகம் வர்லமா என்றவளோ ஓகே ஓகே அதை விடு, வா உள்ள போலாம்” என்று சொல்லிக் கொண்டே அவள் கையை பிடிக்கப் போன பவ்யாவின் கையை கோபமாக தட்டி விட்டாள் ஶ்ரீநவி.
அவளின் செயலில் பவ்யாவுக்கு முகம் கருத்தது என்றால், என்னவோ
சரியில்லையென்று உணர்ந்தவன் இதற்கு மேல் இங்கு நிற்பது சரிவராது என்று பட, குரலை செருமிய விபீஷனோ ” நீங்க பேசிட்டு இருங்க லஞ்ச் சாப்பிட்டு ஈவினிங் பார்க்கலாம்” என பொதுவாக சொன்னவனோ, பவ்யாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன் செல்ல
முற்பட்ட போதே “மாமா போக வேணாம் நீங்களும் வெயிட் பண்ணுங்க. இப்பவே பேசிடலாம்” என ஶ்ரீநவியிடமிருந்து குரல் வந்தது.
வந்ததிலிருந்து இவளின் போக்கே சரியில்லையே! அப்படி இவள்
என்ன தான் பேச போகின்றாள்? அதுவும் அவனையும் வைத்துக் கொண்டு என்று மனதில் நினைக்கும் போதே இதயமோ தொண்டைக்குழிக்குள் வந்து துடிப்பதைப் போலிருந்தது.
இதற்கு முன் இப்படியான உணர்வையெல்லாம் அவள் உணர்ந்ததே இல்லை.
என்னவோ புதிதாக படபடத்தது.
நெற்றி முதல் உள்ளங்கால் வரை வியர்த்து விறுவிறுக்க
நின்றவளை பார்த்த ஶ்ரீ நவி “நாம டென்த்ந் படிக்கிறப்போ ஒரு பெட் வச்சிகிட்டோம் அது ஞாபகம் இருக்கா பவ்யா?” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்,
‘ப்ச்ச, இவ வேற இவளையே மறந்துட்டேன் இதுல பெட்டு வேற’ என மனதில் சொல்லிக் கொண்டவள் “சாரி ஞாபகம் இல்ல” என்றாள்.
இருவரின் உரையாடல்களையும் கேட்ட படி இதழ் குவித்து ஊதிக் கொண்டே பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான் விபீஷன்.
“வெல் நானே ஞாபக படுத்துறேன். நாம ரெண்டு பேர்ல யார் பைனல் எக்ஸாம்ல
அதிகமா ஸ்கோர் பண்றது? அது தான் பெட். அதுல வின் பண்ணது நான் தான் சோ அதுக்காக நான் கேக்கிறதை பண்றேன்னு சொல்லியிருந்த” என்றவள் நிறுத்தி விபீஷனை ஒரு பார்வை
பார்த்து விட்டு இப்போது பவ்யாவை பார்த்தவள் “என் விருப்பதை
அப்போவே உன்கிட்ட சொன்னேன் நீயும் ஓகே சொல்லிட்ட பட் இப்போ நீ என்னை ஏமாத்திட்ட” என்றவள் அதற்குமேல் பேச முடியாது பேச்சை நிறுத்த,
என்னவோ விடயம் பெரிதாக இருக்குமோ என்று தீவிரமாக கேட்டுக்
கொண்டு இருந்தவனுக்கு ஶ்ரீ நவி கூறிக் கொண்டிருப்பதை கேட்டதும் இதழ் பிரித்து சத்தமாக சிரித்தே விட்டான்.
இருவரும் ஒருங்கே திரும்பி அவனை முறைக்க “என்னை ஏன்
முறைக்கிறீங்க ஓஹ் மை கோட் கண்டிநியூ” என்றான் இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே,
அவன் சிரித்தும் ‘அச்சோ மானமே போகுது’ என தனக்குள் சொல்லிக் கொண்டவள் அவசரமாக “விபீஷன், நீங்க போகலாம் நாங்க பெர்சனலா பேசுறோம்” என்றாள் பவ்யா.
“நோ பவ்யா, மாமா இருக்கட்டும் அவரை வச்சு தான் பெட்டே சோ அவர் எனக்கு இல்லனா எப்படி?” என ஶ்ரீ நவி தன் மனதில் உள்ளதை உடைத்து சொல்லி விட,
இதைக் கேட்ட பவ்யாவுக்கு நெஞ்சே அடைத்து விட்டது.
அறியா வயதில் தான் செய்து வைத்ததை எண்ணி தன்னைத் தானே மானசீகமாக நொந்து கொண்டாள்.
அதுவும் இப்படி ஒன்று நடந்ததாக கூட அவளுக்கு நினைவில்லாத போது இவள் வேறு என சலிப்பாக இருந்தது.
இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றவனோ இப்போது, “வாட்? எனக்கு புரியல” என்றவன் பார்வை கூர்மை பெற்றது.
அவனது தோற்றத்தை கண்டு பவ்யாவுக்கோ உள்ளே நடுங்கினாலும்
தான் நன்றாகவே சொதப்பி வைத்து விட்டோம் என்று தெள்ளத் தெளிவாக புரிய “நவி வாயேன் நாம உள்ள போய் சாப்பிட்டு பேசலாம்” என்று அழைத்துக் கொண்டு செல்ல பார்த்தாள் பவ்யா.
“நோ வெயிட் பண்ணு பவ்யா. நீ என்ன தான் சொல்லிருக்கனு தெரிஞ்சுக்கலாம்” என்று சொல்ல,
‘பவி’ என்ற அவனது அழைப்பு ‘பவ்யா’வாக மாறியிருந்தது.
அதுவே அவளின் மனதை உடைக்கப் போதுமானதாக இருக்க, பதைபதைப்பாக நின்றிருந்தவள் செவியில் வந்து வீழ்ந்தன அந்த வார்த்தைகள்.
“உங்கள கல்யாணம் பண்ணிக்கிற சிட்டுவேஷன் வந்தால் கல்யாணத்தை நிறுத்தி உங்கள என்கூட சேர்த்து வைக்கிறேன்னு சொன்னா”
என்று ஶ்ரீ நவி சொன்னது தான் தாமதம் “வாட் த ஃப* என்று சொன்னவன் ஹவ் டேர் யூ பவ்யா இப்படி தான் யார் கேட்டாலும் என்னை கொடுத்துவிடுயா?” என உச்சகட்ட ஆத்திரத்தில் சீறியவன் ஆழ்ந்த ஒரு பெரு மூச்சுடன் “உனக்கு தான் என்னை அப்போல இருந்து இதோ
இப்போ வரை பிடிக்கலைல பட் நான் தான் பைத்தியகாரன் போல. ‘ஷிட்’ ” என்று முஷ்டியை மடக்கி கரத்தை பக்கவாட்டு சுவற்றில் ஓங்கி குத்தினான்.
அவனது விழிகளோ அடக்க முடியாத ஆத்திரத்தில் ரத்தமென சிவந்திருக்க, முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.
அங்கு நின்றிருந்த இரு பெண்களுக்கும் தூக்கிவாரிப் போட, ஶ்ரீநவியோ “மாமா” என்றிட, அதற்கும் ஒரு படி மேலாக பவ்யா அவனை நெருங்கி அவன் கையை பற்றவும் சட்டென திரும்பி இருவரையும் தீயாக முறைத்தவன் பவ்யாவை நோக்கி “என் வாழ்க்கை மொத்தமும் உனக்கு மட்டும் தான் பவ்யா. இதை நல்லா உன் மைண்ட்ல ஏத்திக்கோ அண்ட் மோரோவர் எனக்கு பிடிக்காத எதையும் நீ செஞ்சு, உன்ன அதிகமா வெறுக்க வச்சிடாதடி. நீ தாங்க மாட்ட” என்றுவிட்டு விறுவிறுவென ஆத்திரமாக செல்லும் அவனையும் பவ்யாவையும் உறுத்து விழித்தவளோ பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டே வீட்டினுள்ளே ஓடியிருந்தாள் ஸ்ரீநவி.
அழுது கொண்டே போகும் அவளை ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தலையோ விண் விண்ணென்று வலிக்க ஆரம்பித்து விட, தலையைப் பற்றிக் கொண்டே தொப்பென அமர்ந்து கொண்ட பவ்யாவுக்கோ தன் மனநிலையை நினைத்து அதிர்ச்சியாக இருந்தது.
தன்னிடம் மென்மையாக நடந்து கொள்பவனின் கடினம் அவளைக் கொல்லாமல் கொன்றது.
என்ன வார்த்தை சொல்லி விட்டான் அவன்?
அவனது காதல் எந்த அளவிற்கு ஆழமானதோ? அதே அளவிற்கு அல்லவா வெறுப்பாக கடினமான வார்த்தைகளை துப்பிவிட்டு போகின்றான். நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது.
ஏதோ கடமைக்காக அவனை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்தவளுக்கு கடந்த ஒரு வாரமாக அவன் மீது புதிதாக தோன்றிய என்னவோ ஓர் உணர்வு, ஆழிப்பேரலையாக பிரவாகம் கொண்டது.
தன்னை வெறுத்து விட்டானோ? என இனம்புரியாத பயம் நெஞ்சத்தை கவ்வ, விளைவு அவளின் விழிகளிலிருந்து கண்ணீரோ அருவியாக வழிந்துக் கொண்டிருந்தது .
இக்கணமே தன் மனநிலையை அறிந்து கொண்ட பெண்ணவளின் இதழ்களோ, “எஸ் அம் இன் லவ் வித் யூ விபீஷன்” என்று சொல்லிக் கொண்டே கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளோ “கண்டிப்பா நீங்க வெறுக்குற போல நடந்துக்க மாட்டேன் விபீஷன். சீக்கிரமே என் காதலை உணர வைக்கிறேன்” என சொல்லிக் கொண்டவளோ தெளிவான ஒரு மனநிலையுடன் எழுந்து கொண்டாள்.
அதேநேரம், அறைக்குள் வந்த விபீஷனின் விழிகள் இரண்டும் கோபத்தில் சிவந்திருந்தன.
அங்கு நின்றால் ,எழும் அவளை காயப்படுத்தி வார்த்தைகளை விட்டு விடுவோமோ என்று அஞ்சியவன் விழிகளோ இப்போது தன்னையும் மீறி அவளிடம் தற்போது கடினமாக பேசிவிட்டு வந்ததற்காக கலங்கி மேலும் சிவந்தன.
மென்மையானவன் ஆயிற்றே!
“வலிக்குதுடி” என்று சொல்லிக் கொண்டவனின் குரலோ நடுக்கத்துடன் ஒலிக்க, அவனது வலக் கரமோ உயர்ந்து இடது மார்பை நீவிக் கொண்டது.
அவனது வெறுப்பான வார்த்தைகளில் தான் தன்னவள் அவன் மீது கொண்ட காதலை உணர்ந்து கொண்டாள் என அவன் அறிய நேர்ந்தால் என்ன ஆகுமோ?
அதனைத் தொடர்ந்து அன்றிரவே எதிர்பாராத விதமாக பவ்யாவிடம் மன்னிப்பை யாசித்திருந்தாள் ஶ்ரீநவி.
அவள் மன்னிப்பை யாசித்திருந்தாலுமே பெண்ணவளின் விழிகள் தேடிக் கொண்டிருந்தது என்னவோ விபீஷனை தான்.
குரலை செருமிக் கொண்டவளோ “ என்ன சீக்கிரமாவே சாரி எல்லாம் கேக்குற எதுவும் பிளான் பண்றியா என்ன?” என்று கேட்டவளை சிறு புன்னகையுடன் பார்த்தவள் “ மாமாவோட சந்தோஷம் உன்கிட்ட இருக்குனா இட்ஸ் ஹேப்பி ஃபார் மீ பவ்யா” என்று சொன்னவளோ “ ஹாங், ஒன்மோர்திங் நீ நினைக்கிற போல வில்லிலாம் நானில்ல. எனக்குள்ள வலி இருக்கு இல்லனு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன் பட் கம்பல் பண்ணி வர்றது லவ் கிடையாதே. நீ ஆழமா அவர் மனசுல இருக்க. நீ மட்டும் தான். என அழுத்தம் திருத்தமாக சொன்னவள் சட்டென மெலிதாக புன்னகைத்துக் கொண்டே அதை புரிஞ்சிக்கிட்டேன் தட்ஸ்ஆல்” என சொல்லி விட்டு தன் அறைக்குள் புகுந்திருந்தாள்.
அவளின் வார்த்தைகளில் இதழ்களோ தாராளமாக விரிய, மனம் கொள்ள சந்தோஷத்துடன் மீண்டும் தன்னவனைத் தான் விழிகள் தேடின.
மனமோ இதமாக இருந்தது.
தன்னவனைக் காண விழிகள் பரிதவிக்க, மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.
ஆனால், அவளின் எண்ணங்கங்களை திருடிக் கொண்டவனோ பால்கனியில் நின்று தொலைதூர நிலவை வெறித்த படி திண்ணிய அவனின் வெற்று மேனியைத் குளிர்காற்று தழுவ அப்படியே அசையாது நின்றிருந்தான்.
அவனுக்கோ, மனது என்னவோ வெறுமையாகத் தான் இருந்தது.
“ நீ என்னை பார்க்குறப்போ என்னால உன்ன பீல் பண்ண முடியுது பட் அடுத்த நொடியே உன்னோட பார்வை பொய்யோனு பீல் பண்ண வைக்கிறடி” என பித்தன் போல தொலைதூர நிலவைப் பார்த்து பிதற்றிக் கொண்டிருந்தான்.
ஆம், அவள் மீது அவன் கொண்ட தீராக் காதல் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் பலவீனமாக்கிக் கொண்டிருந்தது.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.9 / 5. Vote count: 12
No votes so far! Be the first to rate this post.
Post Views:889
1 thought on “நிதர்சனக் கனவோ நீ! Part 2 : Episode 10”
Super sis